28 – அர்ஜுன நந்தன்
மாலை நேரம் யாத்ரா @ பூவழகி தன் அறையில் எந்த ஆடை அணிவதென ஜானைக் கேட்டு இம்சித்துக் கொண்டு இருந்தாள்.
“சொல்லு ஜான் இந்த டிரஸ் நல்லா இருக்கா?”, பூவழகி.
“ஏதோ ஒன்னு போடு பூவழகி. என்னைக் கேக்காத”, ஜான்.
“அப்ப உனக்கு இந்த டிரஸ் பிடிக்கல அப்படிதானே. எனக்கு வேற டிரஸ் வாங்கிட்டு வா உனக்கு பிடிச்சமாதிரி “, எனக் கூறிக்கொண்டே பூவழகி அவன் முன் வந்து நின்றாள்.
“நான் இதுக்கு மேல எங்கயும் போகமாட்டேன். காலைல இருந்து 20 டிரஸ் வாங்கிட்டு வந்துட்டேன். இதுக்கு மேல வேற டிசைன் வேணும்னா டிசைனர்கிட்ட சொல்லி தான் செய்யனும்”, ஜான் கடுப்பாக பதிலுரைத்தான்.
“நல்ல ஐடியா ஜான். இத ஏன் நீ முன்னயே சொல்லல?”, அவனிடம் கோபித்துக் கொண்டு கேட்டாள்.
“ஐயோ….. உன்னை வச்சிட்டு நான் படற அவஸ்தை இருக்கு பாரு”, தலையில் அடித்துக் கொண்டான் ஜான்.
“ரொம்ப அவஸ்தையா இருந்தா பாத்ரூம் அந்த பக்கம் இருக்கு ஜான் போயிட்டு வா”, சிரிக்காமல் பதில் கூறினாள்.
“உன்னை எல்லாம்….. போயும் போயும் உன்ன கடத்திட்டு வந்தேன் பாரு. எல்லாம் என் நேரம்”, ஜான்.
“நானா உன்ன கடத்த சொன்னேன்? இந்த பழிய நீ என் மேல போட முடியாது ஜான். அந்த ஆர்யன் மேல போடு”, பூவழகி.
“கொஞ்சமாது உனக்கு பயம் இருக்கா? இப்படி அழிசாட்டியம் பண்ணிட்டு இருக்க. அந்த வைபவ் கிட்ட போய் பணம் கேட்டா என் இரத்தத்தை குடிச்சிடுவான். என்னால எங்கயும் போக முடியாது”, ஜான்.
“எங்க போக முடியாது ஜான்?”, எனக் கேட்டபடி ஆர்யனும் வைபவும் உள்ளே வந்தனர்.
“குட் ஈவினிங் பாஸ்”, ஜான் எழுந்து நின்று கூறினான்.
“என்ன இது இப்படி டிரஸ் எல்லா இடத்துலையும் கெடக்குது?”, வைபவ்.
“மேடம் டின்னர்க்கு எத போட்றதுன்னு கேட்டுட்டு இருந்தாங்க சார்”, ஜான்.
“செலக்ட் பண்ணியாச்சா?”,ஆர்யன் ஆவலுடன் கேட்டான்.
“இல்ல சார். வேற கேக்கறாங்க அதான் நான் போக முடியாதுன்னு சொல்லிட்டு இருந்தேன்”, ஜான்.
“என்னது இன்னுமா?”, வைபவ் அதிர்ச்சியும் ஆத்திரமும் கலந்தபடிக் கேட்டான்.
“ஏன் இவ்ளோ ரியாக்ட் பண்ற வைபவ்?”,ஆர்யன்.
“பாஸ் காலைல இருந்து மோர் தென் ஒன் லேக் டிரஸ் பர்சேஸ் பண்ணி இருக்காங்க பில் வந்து இருக்கு”, வைபவ் பூவழகியை முறைத்தபடிக் கூறினான்.
“ஏன் பியூட்டி உனக்கு எதுவுமே பிடிக்கலியா?” , ஆர்யன் பூவழகியிடம் வினவினான்.
“நல்லா இருக்கு பட் நாட் சாடிஸ்பைடு ஆர்யன். இப்ப தான் ஜான் ஒரு ஐடியா குடுத்தான் டிசைனர்ஸ் கிட்ட ஆர்டர் குடுத்து செய்யலாம்ன்னு, பட் அது பாஸிபுல் இல்ல தானு”, பூவழகி சிறுக் குழந்தையைப் போல முகத்தை வைத்துக் கொண்டுக் கூறினாள்.
அந்த முகத்தில் மீண்டும் தன்னைத் துளைத்தான் ஆர்யன்.
ஆர்யன் கைதட்டியதும் ஒருவன் கையில் கவருடன் உள்ளே வந்தான்.
“இந்தா பியூட்டி. இது நல்லா இருக்கா பாரு?”, ஆர்யன் பூவழகியிடம் அந்தக் கவரை கொடுத்துவிட்டுக் கேட்டான்.
“என்ன இது?”, பூவழகி.
“பிரிச்சி பாரு”, ஆர்யன்.
உள்ளே வெள்ளை மற்றும் பர்புல் நிறங்கள் கலந்த ஒரு உடை இருந்தது. பர்புல் நிற பகுதியில் வெள்ளை கற்களும் வெள்ளை பகுதியில் பர்புல் கற்களும் பதிக்கபட்டு ஒரு பக்கமாக எம்பிராய்டரி செய்யப்பட்ட ஒரு லாங் கவுன் இருந்தது.
“வாவ்…. வெரி நைஸ் ஆர்யன். பாக்க சிம்பிளா சூப்பரா இருக்கு”, பூவழகி உண்மையானக் குதூகலத்துடன் கூறினாள்.
அவளின் குதூகலத்தில் லயித்த ஆர்யன், “இது உனக்கு தான். இன்னிக்கு டின்னர்ல போட்டுட்டு வா. அப்பாவும் வந்துட்டாரு சீக்கிரமே அவரோட உன்ன மீட் பண்றேன்”.
“ஓ…. தேக்யூ மிஸ்டர் ஆர்யன். உங்க அப்பாவ பாக்க நானும் ஆவலா இருக்கேன்”, மர்மமாகப் புன்னகைத்தபடிக் கூறினாள் பூவழகி.
“மீட் யூ அட் 7.30 . பாய் பியூட்டி”, ஆர்யன் சொல்லிவிட்டுக் கிளம்பினான்.
ஜான் வெளியே சென்று அனுப்பிவிட்டு வந்தான்.
“என்ன பிளான் பூவழகி?”, ஜான்.
“ஒரு நிமிஷம் இரு”, என கூறியவள் ஆர்யன் கொடுத்த உடையை ஆராந்தாள்.
எம்பிராய்டரி செய்யப்பட்ட பகுதியில் சிறிய கேமரா மற்றும் மைக் இருந்தது. அதை உடையாமல் எடுத்தவள் அதை தன்னிடம் இருந்த லேப்டாப்பில் கனெக்ட் செய்து அந்த கருவியை தன் அறையில் இருந்த வைபை ரௌடர் மூலமாக தஞ்சைக்கு காட்சிகள் பரிமாற்றும்படி வழி செய்தாள். அந்த மைக் மட்டும் சிறிது நேரம் வேலை செய்யாது இருக்கும்படி செய்துவிட்டு ஜானை அழைத்தாள்.
“இங்க பாரு ஜான் இந்த ரிமோட் உன் கைல இருக்கட்டும். நான் சொல்றப்ப இந்த பட்டனை அழுத்து”, பூவழகி.
“என்ன இது?”, ஜான்.
“ஆர்யனுக்கு நம்ம மேல சந்தேகம் வந்துரிச்சி ஜான் அதான் நம்மல பக் வச்சி கண்காணிக்க ஏற்பாடு பண்ணிட்டான். அத நான் ஹேக் பண்ணி நமக்கும் பயன்படற வகைல இப்ப மாத்திட்டேன்”, பூவழகி.
“என்ன சொல்ற அப்ப நாம எப்படி தப்பிக்க போறோம்?”, ஜான்.
“அதான் நமக்கு மேல ஒருத்தன் ஹீரோன்னு சொல்லிகிட்டு இருக்கானே அவன் தான் அத பண்ணணும்”, பூவழகி.
“அர்ஜுன் சாரா?”, ஜான்.
“அந்த மோர் தான். பாப்போம் என்ன பண்றானு”, யோசனையுடன் கூறினாள் பூவழகி.
“அவர் கிட்ட பேசினியா ?”,ஜான்.
“இல்ல ஜான் அவன் என்ன பண்றான்னு பாக்கலாம் விடு. பட் நீ என்கூட வர ரெடியா இருக்கணும் புரியுதா”, பூவழகி.
“சரி. வேற என்ன வேணும் உனக்கு?”, ஜான்.
“எனக்கு சில கத்தி துப்பாக்கி எல்லாம் தேவைபடுது. இப்போதிக்கு 5 போல்டபுள் ஸ்விஸ் க்னைப் வேணும் சார்ப்பா இருக்கணும்”, பூவழகி.
“இத பாரு இப்படி இருந்தா போதுமா?”, ஜான் தன் காலில் வைத்து இருந்த கத்தியை காட்டினான்.
“வாவ்… சூப்பர் ஜான். இதே மாதிரி எனக்கும் 4 பிளஸ் போல்டபுள் கத்தி உன் கூட வராணுங்கல அந்த தடியனுங்ககிட்டயே மறச்சி வச்சிடு நாம் தேவைபடறப்ப எடுத்துக்கலாம்”, பூவழகி.
“ம்ம்…. சரி துப்பாக்கி?”, ஜான்.
“அதுக்கு என் சிவி டார்லிங் இருக்கான், இங்க இருந்து போனதுக்கப்பறம் பாத்துக்கலாம்”, பூவழகி.
“பூவழகி… எதுவும் தப்பா நடந்தா உயிர் இருக்காது . நியாபகம் வச்சிக்க. நீ குழந்தை மாதிரி இவ்வளவு குஷியா இருக்க”, ஜான்.
“ஹாஹா… உண்மைதான் ஜான். நான் குஷியா தான் இருக்கேன். இந்த மாதிரி ஆக்சன் சீக்குவன்ஸ் லாம் அடிக்கடி வராது. சோ வரப்ப நல்லா என்ஜாய் பண்ணிக்கணும்”, பூவழகி.
“ம்ம்….”, ஜான்.
“சரி நான் போய் ரெடியாக ஆரம்பிக்கறேன் நீயும் ரெடியாகு”,, பூவழகி கூறிவிட்டுக் குளிக்கச் சென்றாள்.
இவர்கள் இந்த பக்கம் தயாராகிக் கொண்டு இருக்க அர்ஜுன் இன்னொருபக்கம் தயாராகிக் கொண்டிருந்தான்.
“ஹலோ செந்தில் ரீச் ஆகிடீங்களா?”, அர்ஜுன்.
“யா அர்ஜுன். கதிர் என்ன ஹோட்டலுக்கு பின்னாடி டிராப் பண்ணிட்டாரு”, செந்தில்.
“உங்க கூட இன்னொருத்தரும் இப்ப ஜாயின் பண்ணிக்குவாருன்னு நந்து சொன்னான். வந்துட்டாரா?”, அர்ஜுன்.
“யாரு ?”, செந்தில்.
“யாத்ரா பிரண்ட்னு சொன்னான். சிரஞ்ஜீவ்” அர்ஜுன்.
“சிவியா…. அவன் எப்ப இங்க வந்தான்? சரி அர்ஜுன். எப்ப வருவான்?”, செந்தில்.
“ஆல்ரெடி விஜயவாடா வந்துட்டாரு. எப்ப உங்ககிட்ட வருவாருன்னு தெரியல”, அர்ஜுன்.
“சரி அவன் வந்துடுவான். யாத்ரா பெருசா தான் பிளான் பண்றா போல. நீங்க எந்த டைம்ல அங்க இருந்து தப்பிச்சி வருவீங்க?”, செந்தில்.
“ஆர்யன் 7.30க்கு வரச்சொல்லி இருக்கான். அங்க போயிட்டு நான் உங்களுக்கு மெஸேஜ் அனுப்பறேன்”, அர்ஜுன்.
“ஓகே அர்ஜுன் ஜாக்கிரதை”, செந்தில்.
“ஓகே பாய் செந்தில்”, அர்ஜுன்.
செந்தில் போனை வைத்து விட்டு திரும்பவும் சிரஞ்ஜீவ் செந்தில் இருந்த வேனிற்குள் ஏறினான்.
“டேய் தடிமாடு எப்படி டா இருக்க?”, செந்தில்.
“நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க சீனியர்?”,சிரஞ்ஜீவ் அவனைக் கட்டியணைத்து வினவினான்.
“விட்றா என்ன ஜுஸ் பிழியாத. எப்படி இங்க வந்த?”, செந்தில்.
“நம்ம பரிதி தான் வரசொன்னா”, சிரஞ்ஜீவ் தான் வந்தது பரிதியை சந்தித்து அனைவரும் பேசியது யாத்ரா போனில் மாறனைக் கிழித்தது வரை ஒப்பித்து முடித்தான்.
“இவ்ளோ நடந்து இருக்கா நான் அங்க இல்லாம போய்டேனே”, செந்தில் அங்கலாய்த்தான்.
“சரி இப்ப இங்க என்ன பிளான்?”, சிரஞ்ஜீவ்.
“அர்ஜுன் யாத்ராவ கூட்டிட்டு வரேன்னு அங்க இருக்கான். டின்னர்க்கு போயிட்டு எப்படியும் தப்பிச்சி வரேன்னு சொல்லி இருக்கான். இந்த யாத்ரா என்ன பண்றான்னு தெரியல ஒரு போன்கால் கூட இல்ல”, செந்தில்.
“அவள பாத்தீங்க தானே”, சிரஞ்ஜீவ்.
“பாத்தேன் பாத்தேன். எங்க இருந்தாலும் வாயும் குறையறது இல்ல திமிரும் குறையறது இல்ல”, செந்தில்.
“இதுநமக்கு தெரிஞ்சது தானே சீனியர் விடுங்க”, சிரஞ்ஜீவ்.
அந்த சமயம் ஒரு மெஸேஜ் வந்தது சிரஞ்ஜீவ் போனிற்கு.
ஒரு சிக்னல் ஜாமர் கொண்டு வரச்சொல்லி, “ஒரு ஐபி சிக்னல் மட்டும் வேலை செய்வது போல ரெடி செய்து கொடு ” ,என யாத்ரா அனுப்பி இருந்தாள்.
சிரஞ்ஜீவ் சிரித்துக் கொண்டே செந்திலிடம் காட்டிவிட்டு அவள் சொன்னதை போல ரெடி செய்ய ஆரம்பித்தான்.
அதை கதிரிடம் கொடுத்தனுப்பலாம் என முடிவு செய்தவர்கள், அவனை அழைத்து யாத்ரா கூறும் சமயம் அதை இயக்குமாறுக் கூறிக் கொடுத்துவிட்டனர்.
அந்த விஷயத்தை அர்ஜுனிடமும் கூறினர். அதைக் கேட்டவன் மனதில்,”சரியான கேடி தான். விளையாட்டா எல்லாத்தையும் செய்யறா. ம்ம்ம்.. இவள எப்படி சமாளிக்க போறேனோ தெரியல “, என நினைத்துப் பெருமூச்செரிந்தான்.
(தம்பி அது கொஞ்சம் இல்ல இல்ல ரொம்பவே கஷ்டம் தான்)
அவர்கள் எதிபார்த்து இருந்த நேரமும் நெருங்கியது. அர்ஜுன் முதலில் தன்னறையில் இருந்து தேவையானதை எடுத்துக் கொண்டு அறையை பூட்டிவிட்டு டின்னர் நடக்கும் இடத்திற்கு வந்தான்.
ஆர்யனும் தயாராகி தன் தந்தைக்காக காத்திருந்தவன் அவர் அவனை முன்னே போகச் சொல்ல அவனும் மேலே வந்தான்.
அர்ஜுனும் ஆர்யனும் அருகருகே இருந்த லிப்டில் இருந்து வெளியே வந்து பரஸ்பரம் கைக் குலுக்கிக் கொண்டனர்.
அவர்கள் அங்கிருந்து நகரும் சமயம் யாத்ரா ஜானுடன் அவ்விடம் வந்தாள்.
அந்த டின்னர் செட்டப் அரை வெளிச்சம் அவளின் உடை என அனைத்தும் அவளை ராணி போலக் காட்டியது.
மிதமான அலங்காரத்திலும் அவள் அணிந்திருந்த உடை மற்றும் நகை, “நாங்கள் இல்லாவிட்டாலும் அவள் பேரழகி”, என்பதையும் அனைத்தையும் மிஞ்சும் கம்பீரம் அழகை ஓரங்கட்டியது என்றே எண்ண வைத்தது. அப்படி ஒரு பார்வை நடை அவளுக்கு இருந்தது.
இருவரும் அவளைக் கண்டு மலைத்து நிற்க அவள் ஜானின் காதைக் கடித்தாள்.
“அவனுங்க என்ன ஒன்னா நிக்கறானுங்க? ஹீரோ கெத்தும் இல்ல வில்லன் கெத்தும் இல்ல. சரி எப்படியோ போகட்டும் பர்ஸ்ட் சாப்பாடு அப்பறம் தான் சண்டை போடணும் அந்த ஹீரோ கிட்ட சொல்லிடு”, பூவழகி.
“இப்ப கூட உனக்கு சாப்பாடு தானா? ஏன் இப்படி பண்ற? கிடைக்கற கேப்ல தப்பிச்சி போகாம சாப்பிட்டு தான் போவேன்னு சொல்ற உனக்கே நியாயமா இருக்கா?”, ஜான் புலம்பினான்.
“சண்டை போட தெம்பு வேணாம்? அவனுக்கு சொல்லிடு. நான் என்ன என்ன ஐட்டம் இருக்குன்னு பாத்துட்டு வரேன்”, எனக் கூறி பஃவ்வெட் இருக்கும் இடத்திற்குச் சென்றாள் பூவழகி.
தலையில் அடித்துக் கொண்ட ஜான் ஆர்யன் அருகில் வந்து விஸ் செய்துவிட்டு அர்ஜுனைப் பார்த்தான்.
“என்ன ஜான் உங்க மேடம் ஏதோ சொல்லிட்டே போனாங்க?”, ஆர்யன் வினவினான்.
“என்ன என்ன ஐட்டம் இருக்குன்னு பாத்துட்டு வர போறாங்க பாஸ். எப்ப சாப்பிடலாம்ன்னு கேட்டாங்க”, அர்ஜுனைப் பார்த்துக் கொண்டே கூறினான்.
“ஏன் அவங்க சாப்பிடலியா மத்தியம்?”, ஆர்யன் அவளிற்கு பசிக்கிறதோ என நினைத்து கேட்டான்.
“அது எல்லாம் சாப்பிட்டாங்க. இப்ப டின்னர்ன்னு சொல்லிட்டு பேசிட்டே சாப்பிட லேட் ஆகிட்டா என்ன செய்யறதுன்னு கேக்க சொன்னாங்க பாஸ்”, தலையைக் குனிந்தபடிக் கூறினான்.
அர்ஜுன் அவன் கூறியதைப் புரிந்துக் கொண்டுச் சிரித்தான்.
அதைக் கண்ட ஆர்யன் தன்னுள் எழுந்த சிரிப்பை அடக்கியபடி ,”அப்பா வந்ததும் பர்ஸ்ட் சாப்பிட்டுட்டு அப்பறம் பேசலாம்ன்னு உங்க மேடம்கிட்ட சொல்லிடுங்க”.
“மிஸ்டர் ஆர்யன். உங்க கிட்ட ஒன்னு கேக்கலாமா?”, பூவழகி கேட்டுக் கொண்டே அங்கே வந்து நின்றாள்.
“சொல்லு பியூட்டி”, ஆர்யன் புன்னகைத்தபடிக் கேட்டான்.
அவனின் பியூட்டி என்ற அழைப்பு அர்ஜுனுக்கு கோபத்தை வரவழைத்தது. முகத்தில் வித்தியாசம் காட்டாது அவளை பார்த்தபடி நின்றான்.
“இங்க இருக்கற ஐட்டம்ஸ் குக் பண்ணவங்கள இங்க கூப்பிட முடியாமா? நான் கொஞ்சம் டீடைல்ஸ் கேக்கணும்”, பூவழகி அர்ஜுனைப் பார்த்துவிட்டுக் கேட்டாள்.
“கண்டிப்பா வரசொல்றேன்”, ஆர்யன் வைபவை அழைத்துக் கூறிவிட்டு மீண்டும் பூவழகி பக்கம் திரும்பினான்.
“இந்த செட் நீ கேட்டமாதிரி இருக்கா பியூட்டி?”, ஆர்யன்.
“நாட் பேட் ஆர்யன். பட் நல்ல வர்க்கர்ஸ் போல சின்ன சின்ன விஷயத்தகூட டீடைல்டா குடுத்து இருக்காங்க”, பூவழகி ஒரு திமிர் பார்வையுடன் பதில் கூறினாள்.
குக் செய்தவர்கள் கூட்டத்தில் கதிரும் வந்தான். அதைக் கண்ட அர்ஜுன் பூவழகிக்கு கண் காட்ட அவளும் பார்த்துக் கொண்டாள்.
இதை கவனித்த ஜான் கதிர் இங்கு வேலை செய்பவன் போல இல்லையே என யோசித்தான்.
“ஆர்யன் இந்த செட்ல நாம ஒரு போட்டோ எடுத்துக்கலாமா?”, பூவழகி.
“கண்டிப்பா பியூட்டி”, ஆர்யன்.
“இவரும் நிக்கலாமா? உங்க பிரண்ட் ஆ இவர்?”, அர்ஜுனைக் கைக்காட்டி கேட்டாள்.
ஆர்யன் அவனை பார்த்துவிட்டு, “நிக்கலாம் தப்பில்ல ஆனா என் பிரண்ட் இல்ல” ,எனக் கூறினான்.
“ஓகே… ஜான் ஒரு போட்டோ எடு”, அங்கிருந்த அவன்ஜர்ஸ் ஹீரோ ஹீரோயின் இருந்த படத்திற்கு அருகில் நின்று எடுத்தனர்.
“வா ஜான் நாம செல்பீ ஈடுக்கலாம்”, பூவழகி ஜானை அழைத்துக் கொண்டு வேறு பக்கம் சென்றாள்.
“என்ன ஆர்யன் இந்த பொண்ண தானு கடத்தி வச்சி இருக்க? இவ்வளவு பிரியா இருக்கு? அப்படி என்ன விஷயம் இருக்கு இந்த பொண்ணு கிட்ட?”, அர்ஜுன்.
“அது உனக்கு தேவை இல்லாத விஷயம் அர்ஜுன். எதையும் கிளறாம இருந்தா இங்க இருந்து நீ உயிரோட போவ”, ஆர்யன் சிரித்துக் கொண்டே எச்சரித்தான்.
அந்த சமயம் உள்ளே வந்தார் சித்தேஷ்யோகி மல்ஹோத்ரா. ஐந்தரை அடி உயரம் ,கோதுமை நிறம், கண்களில் கூலர்ஸ் ,வெள்ளை கோர்ட் சூட் சகிதம் 6 பேர் சூழ உள்ளே வந்தார்.
அவரைக் கண்ட யாத்ரா, “அவன் மைதா மாவு (ஆர்யன்) ,இவன் கோதுமை மாவு(யோகி), பட் கோர்ட் சூட் தான் இவனுங்க யூனிபார்ம் போல”, ஜான் காதைக் கடித்தாள்.
“கம்முன்னு இரு பூவழகி”, ஜான்.
“அது கஷ்டம் ஜான். வா போய் சாப்பிடலாம்”, பூவழகி ஜானை அழைத்தாள்.
“அவர் வந்துட்டாரு இப்ப என்ன நடக்கும்ன்னு தெரியல. எனக்கு பீபி ஏறுது. உனக்கு சோறு தான் முக்கியமா?”, ஜான் வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான்.
ஆர்யன் பூவழகியை அருகில் அழைத்து வரும்படி ஜானிற்குச் சைகைச் செய்தான்.
அவனுடன் சென்ற யாத்ரா யோகியை நேருக்கு நேர் பார்த்தபடி நின்றாள்.
“இவ தான் நீ சொன்ன பொண்ணா?”, ஆர்யனைப் பார்த்துக் கேட்டார் யோகி.
“ஆமாம் டேட்”, ஆர்யன்.
“சரி சாப்பிட்டுகிட்டே பேசலாமே மிஸ்டர் ஆர்யன் டேட்”, பூவழகி குறுக்கே பேசினாள்.
“வைபவ் சொன்னதும் நிஜம் தான் போல. வாங்க சாப்பிடலாம் “, எனச் சிரித்துக் கொண்டே பேசியவர் சாப்பிட அமர்ந்தார்.
அவரை தொடர்ந்து ஆர்யன் அர்ஜுன் பூவழகி உடன் ஜானையும் அமர வைத்தாள்.
ஜான் சற்று தள்ள அமர்வதாகக் கூறிச் சென்றான்.
சாப்பிட ஆரம்பித்ததும் பூவழகி அனைத்தையும் மறந்து சாப்பிடத் தொடங்கினாள். அங்கிருந்த அத்தனை ஐட்டங்களையும் உள்ளே இறக்கினாள். எதையும் விட்டு வைக்க வில்லை மிச்சமும் வைக்கவில்லை.
அவள் சாப்பிடுவதைக் கண்ட யோகி ஒரு கணம் திகைத்து தான் பார்த்தார் அவளை. அர்ஜுனும் ஆர்யனும் அவள் சாப்பிடுவதைப் பார்த்து என்ன சொல்வதென்றே தெரியாமல் அமர்ந்து இருந்தனர்.
சாப்பிட்டு முடித்தவுடன் பூவழகி கதிரை அழைத்து எதை எப்படி சமைக்க வேண்டும் என விசாரித்துக் கொண்டு இருந்தாள்.
அர்ஜுனிடன் தன் பார்வையை திருப்பிய யோகி ,”நீங்க அர்ஜுன் தானே? தி கிரேட் நரேன் திவாகரனோட டீம்”.
“ஆமா. ஆனா நான் இப்ப லீவ்ல இருக்கேன்”, அர்ஜுன்.
“அப்படியா? லீவ்ல வரப்ப கூட கைல துப்பாக்கியோட வரணுமா என்ன?”, யோகி கண் காட்ட அவனிடம் இருந்த துப்பாக்கி பறிக்கப்பட்டது.
“என்ன செய்ய மிஸ்டர் யோகி உங்கள போல பல நல்ல மனுசங்க மேல கை வைக்கறோம் யாரையும் நம்ப முடியறது இல்லை”, அர்ஜுன்.
“உங்க கூட லீவ் என்ஜாய் பண்ண இன்னொருத்தரும் வந்து இருக்காரு. ரெண்டு பேரும் சேர்ந்து போலாம்ன்னு நினைக்கிறேன் . நீங்க என்ன சொல்றீங்க அர்ஜுன்?”, யோகி.
“அந்த ஆள பாத்துட்டு நான் முடிவு பண்ணலாம்ன்னு இருக்கேன் மிஸ்டர் யோகி”, அர்ஜுன்.
“அவன கூட்டிட்டு வாங்க”, யோகி குரல் கொடுத்தார்.
4 பேர் அவனை இழுத்துக் கொண்டு வந்தனர் உடல் முழுக்க காயங்கள் ரத்தம் வடிந்து காய்ந்து இருந்தது.
அவனைப் பார்த்த அர்ஜுன் சற்றே திகைத்து தான் போனான். அவன் எப்படி இவன் கைகளில் என மனதில் பல எண்ண ஓட்டங்கள்.