39 – அர்ஜுன நந்தன்
“செழியன் முகில ஏன் கடத்தினாங்க? இன்னேரம் கொண்ணு போட்டு இருக்கலாம். நம்மல வார்ன் பண்றமாதிரி. ஆனா அவனுங்க ஒன்னும் பண்ணாம கம்முனு இருக்கானுங்க”, யாத்ரா அர்ஜூனிடம் கேட்டாள்.
“எதாவது விஷயம் இருக்கும் யாத்ரா. அவனோட உடம்புல போட்ட டிராக்கிங் சிப் வேலை செய்யுது தானே?”, அர்ஜுன்.
“அட …. இத எப்படி மறந்தேன்? அர்ஜுன் வண்டிய திருப்புங்க தஞ்சைக்கு. அங்க இருந்து நிலவரம் தெரிஞ்சிகிட்டு அட்டாக் பண்ணலாம்”, யாத்ரா.
“ஏன் என்னாச்சி?”‘ அர்ஜுன்.
“நீங்க வண்டிய திருப்புங்க சொல்றேன்”, யாத்ரா.
“அங்க முகில் மாட்டிகிட்டான் டி”, அர்ஜுன்.
“அங்க போய் இப்ப என்ன பண்ண போறீங்க? சண்டை போட்டு அவனயும் அந்த நரேனயும் காப்பாத்தி இப்ப என்ன ஆக போகுது? முதல்ல நிலைமைய தெரிஞ்சிகிட்டு ஆக்சன் எடுக்கலாம்”, யாத்ரா.
“சரி”, என அர்ஜுன் பைக்கை திருப்பி வீட்டிற்கு வந்துச் சேர்ந்தனர்.
அங்கே செந்தில் அவர்களை பார்த்துவிட்டு, “நீங்க கும்பகோணம் போகலயா?”.
“இல்லை சீனியர் கொஞ்சம் மேப் போடணும். வாங்க. அந்த பாலாஜி என்ன பண்றான்?”, யாத்ரா கூறிக்கொண்டே கம்ப்யூட்டர் அறைக்குச் சென்றாள்.
“பாலாஜி நான் சந்திரகேசவன் ஜூவல்லரி சிசி போட்ட சிஸ்டம் பாத்தீங்களா?”, யாத்ரா.
“எஸ் மேடம். அங்க சந்தேகம் படறமாதிரி எதுவும் நடக்கல”, பாலாஜி.
“முகில் இங்க இருந்து கிளம்பினதுல இருந்து போடுங்க”, யாத்ரா.
“இதோ மேடம்”, எனக் காட்சிகளை ஓடவிட்டான் பாலாஜி.
“இங்க நிறுத்து, சீனியர் இது கருப்பசாமி கூட இருக்கறவன் தானே?”,யாத்ரா.
“ஆமா யாத்ரா. இவன் அவன் கூடல்ல இருக்கணும். இரு கதிர்க்கு கால் பண்றேன்”, செந்தில் .
“சொல்லுங்க செந்தில்”, கதிர்.
“கதிர் கருப்பசாமி கூடவா இருக்கீங்க?”, செந்தில்.
“இல்ல ஆனா என் கண் பார்வைல தான் கருப்பசாமி இருக்கான்”, கதிர்.
“அவன் கூட எத்தனை பேர் இருக்காங்க?”, செந்தில்.
“4 பேர் இருந்தாங்க நேத்து இருந்து மூனு பேர் தான் இருக்கானுங்க. என்னாச்சி செந்தில்?”, கதிர்.
“முகில கடத்திட்டாங்க. நரேன் சாரும் முகில் கூட இருக்கறமாதிரி அனுப்பிட்டோம். நீங்க குடுத்த இன்பர்மேசன் படி பாத்தா கருப்பசாமி கூட இருக்கறவன் யோகி கேங் போல”, செந்தில்.
“அப்படியா…. இங்க ஒரு பெரிய கப்பல் வரப்போறதா தகவல் வந்தது. கருப்பசாமி குப்பத்துல ஆளுங்கள கேட்டதுக்கு இவன் முடியாதுன்னு சொல்லிட்டான். அதுக்கப்பறம் தான் இங்கிருந்தவன் கிளம்பினான். ஏதோ தப்பா தெரியுது செந்தில். குப்பத்து ஜனங்க சேபானு பாக்க சொல்லுங்க நந்து சார் கிட்ட”, கதிர்.
“சரி கதிர். எதாவுதுன்னா உடனே சொல்லுங்க”, எனக் கூறி செந்தில் வைத்தான்.
“நந்து எங்க?”, அர்ஜுன்.
“நரேன் சார் தூக்கினதும் சொன்னாரு. அதுக்கப்பறம் இன்னும் கான்டாக்ட் பண்ணல அர்ஜுன்”, செந்தில்.
“சரி அவன் அங்க தான் போய் இருப்பான். டிஐஜி கிட்ட சொல்லி மப்டில அந்த குப்பம்ல இருந்து 2 கீமீ சுற்றளவு ஏரியாவ போலீஸ வாச்ட் பண்ண சொல்லுங்க”, அர்ஜுன்.
“சரி அர்ஜுன். பரிதி கிட்ட சொல்லிடறேன்”, செந்தில்.
“என்ன யோசிக்கற யாத்ரா?”, அர்ஜுன்.
“வரவேண்டிய தகவல் இன்னும் வரல”, என யாத்ரா கூறினாள்.
“என்ன தகவல்?”,அர்ஜுன்.
அந்த சமயம் செந்தில் ஓடி வந்து, “யாத்ரா அந்த ஆர்யனும் ஜாக்சனும் தப்பிச்சிட்டாங்களாம் ஜான் சொன்னான்”.
அதைக் கேட்டதும் மர்மப்புன்னகைப் புரிந்தாள் யாத்ரா.
“ஏய்….ஏன் சிரிக்கற? இது உன் பிளானா?”, என செந்தில் கேட்டான்.
“நான் பண்ணல ஆனா எதிர்பார்த்தேன். அந்த சந்தனபாண்டியன் குவாரில வச்ச டிவைஸ் நம்பர் சொல்லுங்க”, என ஒரு சிஸ்டம் முன்பு அமர்ந்தாள் யாத்ரா.
“ஏதோ பண்ணிட்டா இவ. ************* இது தான்”, செந்தில்.
“நான் எதுவும் பண்ணல சீனியர். அவனுங்க தான் பண்ணிட்டு இருக்காங்க”, என அந்த குவாரியில் இருக்கும் சிசி கேமரா மூலம் காட்சிகள் இங்கே தெரிந்தது.
“வாவ்….. சூப்பர் டார்லிங்… இதுக்கு தான் என் யாத்ரா வேணும்கிறது.. உம்மா…..”, என அர்ஜுன் அவளைக் கட்டிபிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்தான்.
“அங்க பாருங்க”, என செந்தில் அர்ஜுன் தலையை திருப்பி மானிட்டரைக் காட்டினான்.
அங்கே பெண்களையும் குழந்தைகளையும் தூக்கி ஒரு வண்டியில் ஏற்றிக்கொண்டு இருந்தனர். அதைக் கண்ட நால்வரின் கண்களிலும் சிவப்பு ஏறியது.
“சீனியர் சென்னைல இருந்து நீங்க வந்த வண்டி எங்க?”, யாத்ரா.
“பின்னாடி நிக்குது”, செந்தில்.
“பத்து நிமிஷம் தான் டைம் ரெடி ஆகி வெபன்ஸ் காஸ்ட்யூம் போட்டுட்டு வாங்க. பரிதி கிட்ட சொல்லிடுங்க. இன்னிக்கு அவனுங்க யாரும் உயிரோட இருக்கக்கூடாது”, எனக் கூறி தன்னறை நோக்கிச் சென்றாள்.
இவர்கள் தயாராகிக் கொண்டிருந்த சமயம் அங்கே சேரலாதன் , யோகி மற்றும் சந்தனபாண்டியன் மூவரும் அந்த கோவிலில் இருக்கும் பொக்கிஷத்தை எடுத்துக் கொண்டு பெண்களையும் அழைத்து கொண்டு கடல் வழியாக தப்பிக்க ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர்.
முகிலை அவர்கள் கடத்த முக்கிய காரணம் அக்கோவிலில் சந்தனபாண்டியன் சுரங்கத்தை உடைக்க வெடி வைத்தது தெரிந்து தடுத்ததால் தான். கோவிலில் திருப்பணி நடக்கிறது என போலியான அறிவிப்பு வைத்து விட்டு இரண்டு நாட்களாக மதியத்திற்கு மேல் கோவிலைச் சாற்றிவிட்டு பொக்கிஷ சுரங்கத்தைத் திறக்க முயன்றனர்.
நடுவில் ஒரு பாறை பாதையை அடைத்து கொண்டு இருந்தது. அதை வெடி வைத்து தகர்த்து விடலாம் என யோசித்தவர்கள் அதை செயல்படுத்த செல்லும் போது தான் முகில் அவர்கள் கையில் சிக்கினான்.
பின்னர் வெடி வைத்தால் கோவில் சிதைந்து விடும் யாரும் வெளியே வரமுடியாது என்று சேரலாதன் கூறியபின் அந்த முயற்சியை கைவிட்டனர்.
இறந்து போன ஆராய்ச்சிகாரனின் டைரியை யோகியின் கையாள் ஒருவன் அலசும் போது தான் அந்த பாறையை நகர்த்தும் யுக்தி சலீமிற்கு தெரியும் என்பதை அதில் குறிப்பிட்டு இருந்தான். அதனால் அவனைத் தேடி ஆட்களை அனுப்பினான் யோகி.
இந்த விஷயத்தை தன்னை பின் தொடர்ந்தவனை அடித்து உதைத்து யாத்ராவும் அர்ஜூனும் அறிந்தனர்.
கதிரிடம் இருந்து வந்த தகவல் சற்று சிந்திக்க வைத்தது. இன்னும் மூன்று நாட்களுக்குள் ஒரு பெரிய கப்பல் அந்த குப்பத்தின் அருகில் வரப்போவதாகவும், படகுகள் அதிக அளவில் தேவைபடும் என்றும் கருப்பசாமிக்கு தகவல் வந்து இருக்கிறது என்பது தான்.
ஆக இருப்பதை சுருட்டிக் கொண்டு ஓடத் தயாராகி விட்டான் யோகி. பெண்களை மட்டும் கடத்திச் செல்லலாம் என்று நினைத்தவனுக்கு பொக்கிஷமும் கிடைக்க வழி இருக்கிறது என்றதும் பேராசை எழுந்தது.
நரேனும் முகிலும் அருகருகில் கைகள் கட்டப்பட்டுக் கிடந்தனர்.
“ஏன்டா முகில்…. அதுங்க ரெண்டும் நம்மல வந்து காப்பாத்தும்னு நம்பறியா நீ?”, நரேன்.
“வாருவாங்க சார்”, முகில்.
“இல்ல அந்த ராங்கிக்கு என்னை கண்டாலே ஆவாது. அதான் எப்படியோ போன்னு என்னையும் பிளான் பண்ணி கொல்ல அனுப்பிட்டு நம்மல கொன்னப்பறம் வருவாளோ?”, நரேன்.
“சார் கம்முன்னு இருங்க சார். அவனுங்க காதுல விழுந்தா மறுபடியும் வாயில பிளாஸ்டர் போட்ருவானுங்க”, முகில் அறைவாயிலைப் பார்த்தவாறுக் கூறினான்.
“இங்கிருந்து உயிரோட போவோமான்னு தெர்லன்னு கேட்டா பிளாஸ்டர் போட்ருவாங்கன்னா கவலை படற நீ?”, நரேன்.
“உங்கள எல்லாம் யார் சார் ஹெட்ஆ போட்டது? இப்படி பேசறீங்க?”, முகில் கடுப்பாக கேட்டான்.
“ஏன்டா ஒரு டவுட் கேட்டது தப்பா ? உடனே ஹெட் பொசிஷன்ல யார் போட்டான்னு கேக்கற”, நரேன்.
“அவங்க எதாவது பிளான் பண்ணிட்டு வர வரைக்கும் நீங்க கம்முன்னு இருந்தா உயிரோட இருக்க வாய்ப்பு இருக்கு இல்லைன்னா கஷ்டம் தான்”,முகில்.
“என்ன நரேன் உன் டீம் ஆளு என்ன சொல்றான்?”, என்றபடி ஆர்யன் அங்கு வந்தமர்ந்தான்.
ஆர்யனை கண்டவர்கள் அதிர்ச்சியில் பேச்சற்று அமர்ந்து இருந்தனர்.
அவர்கள் அமைதியாக தன்னை அதிர்ந்துப் பார்ப்பதை உணர்ந்தவன், “ஜாக்சன் சோடா கொண்டு வா”.
“இந்தா சார்”, என ஜாக்சன் இரண்டு சோடாவை நீட்டினான்.
முதலில் சுதாரித்த முகில் நரேனை தன் தோளால் இடித்தான்.
“நீங்க எப்படி தப்பிச்சிங்க?”, நரேன்.
“கிளைமாக்ஸ் பைட்ல நான் இல்லைன்னா ஆடியன்ஸ் பீல் ஆவாங்கல்ல அதான் வந்துட்டேன்”, என ஆர்யன் கண்ணடித்துச் சிரித்தபடிக் கூறினான்.
“என்ன நக்கலா?”, நரேன்.
“ஆமா நரேன். நானும் நீயும் இதுவரை பேசிக்கிட்டதே இல்லைல?! உன்னப்பத்தி எல்லாமே தெரியும் ஆனா அன்னிக்கு விஜயவாடால தான் உன்னை முதல்ல பாத்தேன். சும்மா சொல்லக்கூடாது சி.பி.ஐ ஸ்பெஷல் விங் ஹெட் ன்னு உன் தோற்றம் சொல்லுது. உன் டீம் பண்ற எல்லா கொளறுபடியையும் அரசாங்கத்து கிட்ட சமாளிச்சி இன்னிக்கி வரை டிபார்மெண்ட்ல இருக்கறதுக்கே உனக்கு அவார்ட் குடுக்கணும்”, ஆர்யன்.
“அவார்ட் கவர்மெண்ட் குடுக்கறப்ப குடுக்கட்டும். உனக்கு அதப்பத்தி கவலை வேணாம்”, நரேன் முகத்தைச் சற்றுக் கடுமையாக வைத்துக் கொண்டு கூறினான்.
“ஆமாமா … எனக்கு என்ன கவலை? கவர்மெண்ட் குடுக்கற அவார்ட் வாங்க நீ உயிரோட இருக்கமாட்டன்னு நீ தான் கவலை படணும்”, ஆர்யன் நக்கலாக பதிலுரைத்தான்.
“ஹாஹாஹா…. அவ்ளோ நம்பிக்கையா உனக்கு நான் உயிரோட இங்கிருந்து போகமாட்டேன்னு”, நரேனும் நக்கலானக் குரலில் கேட்டான்.
“இன்னா சார் இவன பேசவிட்டு வேடிக்கை பாத்துன்னு இருக்கீற. ஒரே போடு மேலே போயிடுவான்”,ஜாக்சன்.
“எச்ச நாயே…. யாரு ஒரே போடுல போவா? கைய அவுத்து விட்டு மோதி பாருடா தெரியும்”, முகில் சீறினான்.
“என்னாடா ஓவரா கூவிக்கின்னு இருக்கீற? சார் சொன்னாருன்னு இன்னும் உங்கள உசுரோட வுட்டு வச்சிக்கீறேன் இல்லைன்னா உங்க ஆளுங்க அத்தனை பேரும் இன்னேரம் பொணமா கிடப்பானுங்க”, ஜாக்சன்.
“ஹாஹஹா…. அவங்க பொணம் ஆகறது இருக்கட்டும், இப்படி நினைக்கிறதுக்கே உன் உயிர் உன் உடம்புல இருக்காதுடா வெண்ண”, நரேன்.
“ஹாஹாஹா… பாரு சார் காமெடி பண்ணிட்டு இருக்கான் இவன். இன்னும் கொஞ்ச நேரத்துல உங்க கழுத்த அறுத்து போட்டுட்டு நாங்க இந்த நாட்ட விட்டே போகப்போறோம். அவங்க வரப்ப உங்க பொணத்த தான் பாப்பானுங்க”, ஜாக்சன் சொல்லிவிட்டு விடாமல் சிரித்தான்.
அவன் அப்படி கூறியதும் முகிலும் நரேனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“என்னா டா அல்லு உடுதா…..? இதுக்கு தான் ஓவரா எகிறக்கூடாதுன்னு சொல்றது. கொஞ்ச நேரத்துல சாவப்போறீங்கோ அதனால இந்தாங்க வவுறார சாப்டு சாவுங்க. கவலை படாதீங்க விஷம்லா கலக்கல”, என ஜாக்சன் அவர்களுக்கு பிரியாணி பொட்டலத்தை வைத்துவிட்டு அவர்களின் கைகட்டை அவிழ்த்து விட்டான்.
“நீ போய் தண்ணி கொண்டு வா ஜாக்சன்”, என ஆர்யன் அவனை அனுப்பி வைத்தான்.
“என்ன பாக்கறீங்க ரெண்டு பேரும். பாக்கறேன் அந்த அர்ஜூனும் யாத்ராவும் என்ன பண்ணப்போறாங்கன்னு. முடிஞ்சா நாலு மணிநேரத்துல வந்து உங்களயும் பொண்ணுங்களயும் காப்பாத்த சொல்லுங்க”, எனக் கூறி ஆர்யன் வெளியேறினான்.
ஒரு மணிநேரம் கழித்து நரேனும் முகிலனும் கைகளும் கண்களும் கட்டப்பட்டு வெளியே அழைத்துச் சென்றனர்.
முக்கால் மணி நேர பயணத்திற்கு பின் ஒரு இடத்தில் இறங்கி நடந்தனர் அனைவரும். (யார் யாருன்னு பாக்கலாம் வாங்க சகோஸ்).
முன்னாடி இரண்டு பக்கமும் பாடிகார்ட்ஸ் சகிதம் துப்பாக்கியோட யோகி நடந்து போறார். பின்னாடியே சேரலாதனும், ஆர்யன், ஜாக்சன் மற்றும் சில அடியாட்கள் கூட நம்ம நரேனையும் முகிலையும் இழுத்துட்டு போறாங்க. அவங்களும் தட்டுத்தடுமாறி நடந்துட்டு இருக்காங்க.
அவங்க நடந்த கொஞ்ச தூரத்துல சந்தனபாண்டியன் கடத்திவச்ச பொண்ணுங்களோட நின்னுட்டு இருக்கான்.
இவன பாத்ததும் யோகி, “என்ன பாண்டியன் இத்தனை பொண்ணுங்க தான் கிடைச்சாங்களா? இன்னும் நாப்பது பேர கடத்தி இருக்கலாம்ல?”.
“இல்ல சார் இதுக்கே அந்த டி.ஐ.ஜியும் பரிதியும் வெறிகொண்டு தேடிட்டு இருக்காங்க. அவங்க கண்ல படாம இங்க வரதுக்குள்ளயே போதும் போதும்னு ஆகிரிச்சி. அப்பவே அந்த பரிதிய போட்டு தள்ளி இருந்தா இப்ப இவ்வளவு இம்சை நமக்கு வந்து இருக்காது”, சந்தனபாண்டியன்.
“என்ன செய்யறது சில சமயம் நம்ம கணக்கு தப்பத்தான் செய்யுது. கொஞ்ச நாள் போகட்டும் மறுபடியும் வந்து நம்ம தொழில பண்ணலாம். இந்த ஜனங்க மறக்கறது யாருக்கு நல்லதோ இல்லையோ நமக்கு நல்லது . இரண்டு மூனு வருஷம் கழிச்சி வருவேன். சரி அந்த பொண்ணுங்க எல்லாம் எங்க?”, யோகி.
“கண்டைனர்ல அரைமயக்கத்துல இருக்காங்க சார் பின்னாடி தான் வண்டி நிக்கிது”,சந்தனபாண்டியன்.
“மயக்கத்துல இருந்தா எப்படி நடக்கவச்சி கூட்டிட்டு போகறது? உங்கள யார் மயக்கமருந்து குடுக்கச்சொன்னா?”, யோகி கோபத்தில் கத்தினான்.
“இல்ல சார். தப்பிக்க முயற்சி பண்ணிச்சிங்க அதான் குடுக்க சொன்னேன். அந்த பரிதினால இப்ப எல்லா பொண்ணுங்களும் ரொம்ப உஷாரா இருக்குதுங்க. அந்த போலீஸ் அப்ளிகேஷன் எல்லார் போன்லயும் இருக்கு”, சந்தனபாண்டியன் தயங்கித் தயங்கிக் கூறினான்.
பரிதி பெண்கள் பாதுகாப்பிற்காக காவல் துறை ஏற்கனவே அறிமுகப்படுத்தி இருந்த அப்ளிகேஷனை மேம்படுத்தி இன்னொரு அப்ளிகேஷனை உருவாக்கி பெண்களை பயன்படுத்தக் கட்டாய உத்தரவு இட்டிருந்தாள். அவர்கள் அந்த அப்ளிகேஷனை ஓபன் செய்தாலே போதும் அவர்கள் இருக்கும் இடம்காவல்துறை கன்ட்ரோல் ரூமிற்கு தகவல் அனுப்பிவிடும். பத்து நொடிக்கு அதிகமாக அந்த அப்ளிகேஷன் ஓபனில் இருந்து எதுவும் செய்யப்படாமல் இருந்தால் ஆபத்து என்று அறியும்படி உருவாக்க செய்திருந்தாள். அந்த பெண்களின் வீட்டிற்கும் தகவல் உடனடியாக செல்லும். வீட்டினர் அந்த தகவல் பாரத்த்தும் காவலர் கன்ட்ரோல் ரூமிற்கு தொடர்பு கொண்டால் அப்பெண் ஆபத்தில் இருப்பதை உறுதி செய்து தேடுதல் பணி தொடங்கும்.
“ஷிட் பிளடி ********* வுமன்.. எவ்வளவு இடைஞ்சல் குடுக்கறா அவ. இப்ப சொல்றேன் அவள போட்டு தள்ளிட்டேன்னு நான் கப்பல் ஏறினதும் நியூஸ் வரணும். வேற யாரும் நம்ம வழிக்கு வரக்கூடாது இனிமே”, யோகி வன்மத்துடன் கூறினார்.
“சரி சார்”, என சந்தனபாண்டியன் கூறினான்.
“எங்க அந்த சலீம் அவன முன்ன இழுத்துட்டு வாங்க”, யோகி.
“சார்”, என ஜாக்சன் சலீமை இழுத்து வந்தான்.
“இங்க பார். ஒழுங்கா பொக்கிஷம் எடுக்க அந்த பாறையை தொறந்து விடு. இல்லை உன் தங்கச்சி இப்பவே சிதஞ்சிருவா”, என யோகி விகாரமாகப் புன்னகைத்துக் கொண்டே கேட்டான் .
“நீ நினைக்கிற மாதிரி அந்த கல்ல நகத்தறது ஈஸி இல்ல. அதுல நிறைய சிக்கல் இருக்கு”, சலீம்.
“உன் தங்சக்கி வாழ்க்கைய ரொம்ப சிக்கலாக்கற சலீம். டேய் அவள மட்டும் இறக்கி கூட்டிட்டு வாங்கடா”, என யோகி கூறினான்.
“வேணாம் சார் பிலீஸ் விட்ருங்க சார். அவ சின்ன பொண்ணு சார். உங்க கால பிடிச்சி கேக்கறேன் சார்”, சலீம் கதறினான்.
“இங்க பார். எனக்கு தேவை அங்க இருக்கற பொக்கிஷம். நீ தானே நான் தொறக்கறேன்னு விட்ட வேலைய ஆரம்பிக்க வச்ச. நீதான் இத பண்ணணும்”, யோகி.
“சார் நான் எவ்வளவோ முயற்சி பண்ணி பாத்தேன் சார். ரெண்டு பாதை தொறக்க முடிஞ்சது. அதுல ஒன்னு சுத்தமா பயன்படுத்த முடியாத அளவுக்கு இடிஞ்சி போச்சி. ஒன்னு நான் சொன்ன மாதிரி ரெடி பண்ணி குடுத்துட்டேன். அந்த பொக்கிஷம் எடுக்க முடியாது சார்”, சலீம்.
“நீ வாய்ல சொன்னா கேக்கமாட்டல்ல. பாண்டியன் அந்த பொண்ணோட டிரஸ்ஸ கழட்ட சொல்லுங்க. இவன் அந்த பாறைய நகத்தறேன்னு சொல்லணும்”, யோகி.
“டேய் யோகி… நீ மனுசனா டா? சின்ன பொண்ண கடத்தி வச்சிட்டு பிளாக்மெயில் பண்ற. இதுக்கு எல்லாம் நீ நல்லா வாங்குவ டா”, நரேன் கத்தினான்.
“டேய் அவனுங்க கண்ண அவுத்து விடு” , யோகி.
கண்கட்டுகள் அவிழ்க்கப்பட்டதும் கண்களை நன்றாகத் திறந்து திறத்து மூடி பார்வையை சகஜமாக்கினர் நரேனும் முகிலும்.
சுற்றி பார்வையை சுழல விட்டவர்கள் தாங்கள் எங்கே இருக்கிறோம் என்பதை அறிய பார்வையை சுழலவிட்டனர்.அவர்கள் நிற்கும் இடம்……….