46 – அகரநதி
நதியாள் எழுந்து அகரனை நெருங்க, அகரன் அவளை விட்டு தூரம் நகர என அவர்களின் நடை ஓட்டமாக மாறியது.
“நில்லுடா….”, நதியாள் கோபமாக கத்தினாள்.
“முடிஞ்சா பிடிச்சிக்கோ”, அகரன் நக்கலாக கூறினான்.
“ஒழுங்கா இங்க வந்து நில்லு…. அவ்வளவு திமிரா போச்சா உனக்கு?”, நதியாள் கையில் சிக்கியதை எரிந்தபடி கேட்டாள்.
“ஹேய்….. பொருள உடைக்காத…. எதுவா இருந்தாலும் பேச்சு பேச்சா தான் இருக்கணும்…. அதுலாம் ரொம்ப காஸ்ட்லியான திங்க்ஸ்… அத தூக்கி போடாத டி”, என அகரன் அவளை கெஞ்சலும் கொஞ்சலுமாக பார்த்து கூறினான்.
“அப்படின்னா என்கிட்ட அடிவாங்கிக்க…. இல்லைன்னா எல்லாத்தையும் ஒடச்சிடுவேன்”, நதியாள் கையில் விலையுயர்ந்த பீங்கான் பொம்மையை கையில் தூக்கியபடிக் கூறினாள்.
“வேணும்னே உன்கிட்ட வந்து அடிவாங்க நான் என்ன உங்கண்ணன் சரணா? உன் புருஷன் டி. கல்லானாலும் கணவன் , புல்லானாலும் புருஷன்னு நம்ம ஊர்ல சொல்வாங்க அது தெரியாதா உனக்கு? இப்படி புருஷன அடிக்க தொறத்துர நீ”, அகரன் ஓடியபடி கேட்டான்.
“அதே ஊர்ல தான் சொல்றபேச்சு கேக்காம திரியர புருஷனுங்கள எல்லாம் வெளக்குமாத்துலையும் , உலக்கையும் வச்சி அடிப்பாங்க… உன்னை நான் பாவம் பாத்து என் கையால அடி வாங்கிக்க சொல்றேன்… வாடா இங்க”, நதியாளும் அவனை துரத்தியபடி அவனின் கேள்விக்கு பதிலளித்தாள்.
“உன் கையால அடி வாங்கறதுக்கு அதுவே பரவால்ல… உனக்கு இருக்கறது கையா இரும்பு ராட் மாதிரி வலிக்குது நீ அடிச்சா..
அன்னிக்கு என் பிரண்ட் பாவம் … இன்னிக்கு அந்த பூரானும் பாவம்…மூளை கலங்கி இருக்கும் அவங்களுக்கு….”, அகரன் சிரித்தபடிக் கூறினான்.
“அப்படியாவது அவனுங்களுக்கு மூளை ஒழுங்கா வேலை செஞ்சா சரி. உனக்கு கொலுப்பு ஓவரா இருக்கு வா அதை கரைக்கிறேன்”, என சோபாவில் இருந்து தாவி அவனின் முதுகில் ஏறினாள் நதி.
“ஏய்… ராட்சசி… விடு டி…. அய்யோ…அம்மா…. கடிக்கிறாளே….. காப்பாத்துங்க… காப்பாத்துங்க…”, என அகரன் கத்த, நதியாள் அவனின் தோளை கடித்தாள்.
“இனிமே டி போட்டு கூப்பிடுவ நீ?”, என அவனை அடித்தாள் நதி.
“அப்படித்தான்டி கூப்பிடுவேன் டி…என்ன டி பண்ணுவ டி? “, அகரன் வேண்டுமென்றே மீண்டும் டி போட்டு அழைத்தான்.
“உன்ன…..”, என நதியாள் அவள் முதுகில் இருந்து இறங்கவும், அகரன் அவளை தன் தோளில் தூக்கி இருந்தான்.
“டேய் விடு டா… இடியட் ஸ்டுப்பிட்….. என்னை இறக்கி விடு டா” இப்பொழுது நதியாள் கத்தினாள்.
“விடமாட்டேன். என்ன டா போட்டு நீ மட்டும் கூப்பிடுவ…. நான் டி போட்டா என்னை கடிப்பியா நீ… இரு உன்னையும் கடிக்கறேன்”, என அவளை தன் மடியில் படுக்கவைத்துக்கொண்டு அவளின் புஜத்தில் கடித்தான்.
“ஆஆஆ…… அம்மா…. எரும மாடே… பிசாசு…. வலிக்குது டா….. “, என அவள் கத்தினாள்.
“இப்ப வலிக்குதா… இதே மாதிரி தானே எனக்கும் வலிக்கும்…”, என அவளை தன் கைகளுக்குள் அடக்கி இறுக்கி பிடித்துக்கொண்டான் அகரன்.
இருவரும் மூச்சிறைக்க ஒருவரை ஒருவர் பார்த்தபடி இருந்தனர்.
அகரனின் முகத்தில் இரத்தம் வேகமாக பாய்வதை அவன் முகச்சிவப்பு மூலம் அறிய முடிந்தது.
நதியாளின் முகமோ கோபத்திலும், அவனின் பிடியிலும் சற்றே வலி தெரியவும் சிவக்க தொடங்கியிருந்தது.
“விடு அகன்…. “, நதியாள்.
அகரன் முடியாதென தலையசைத்து, அவளை தன்னருகில் அமரவைத்து அவளின் மடியில் தலைவைத்துப் படுத்துக்கொண்டான்.
தன்னிச்சையாக நதியாளின் கரம் அவன் தலைகோத, அவனும் அவளின் இடைச்சுற்றி இறுக்கிப் பிடித்தபடி அவள் வயிற்றில் முகம் புதைத்துக் கொண்டான்.
எத்தனை நேரம் அப்படியே கடந்ததோ தெரியவில்லை. இருவரும் மோனநிலையில் அப்படியே தங்களின் ஸ்பரிசத்தை அனுபவித்தபடி மாயலோகத்தில் வலம் வந்து கொண்டிருந்தனர்.
நதியாளுக்கு தன் கூச்சத்தையும் தாண்டி, அவனின் ஏக்கம் புரிந்ததால் அவனை தடுக்கவில்லை.
இவளுக்கும் இதே ஏக்கம் உண்டு தானே… எத்தனை நாட்கள் ஆனது இருவரும் ஒன்றாக நேரம் கழித்து….
எவ்வித வார்த்தையாடலும் வேண்டாம்… இருவரும் அருகருகில் இருக்கிறோம் என்கிற உணர்வும், ஸ்பரிசமமுமே போதுமானதாக இருந்தது அவர்களுக்கு….
கணவன் மனைவி தான் இருவரும்…. ஆனாலும் இருவரும் கண்ணியம் காத்து தற்சமயம் வேறெந்த சிந்தனையும் இன்றி இந்நிலை போதும் என்று தங்களின் அன்பை சுகித்தபடி இருந்தனர்.
ஒரு மணிநேரம் கடந்தபின் சரணிடம் இருந்து போன் வந்தது.
ஒருமணிநேரமாக இப்படியே இருக்கிறோம் என்பதே அப்போது தான் உணர்ந்தனர் இருவரும்.
“டேய் அகர்…. மண்டபத்துல என்ன டெகரேசன் பண்ணலாம்? அந்த ஆர்கனைஸர ஈவினிங் நம்மல பாக்க வரசொல்லவா? எங்க வரசொல்லலாம்?”, சரண்.
“ஒரு நிமிஷம் நதிகிட்ட கேக்கறேன்…”, அகரன்.
“நதிமா… ஸ்டேஜ் டெகரேசன் ஆர்கனைஸர எங்க வரசொல்லலாம்?”, அகரன்.
“நாம மண்டபம் போய் பாத்துட்டு அப்படியே அந்த வீட்ல என்னை விட்று. நாளைக்கு ஆபீஸ்லயே வரசொல்லி பேசிக்கலாம் எல்லாரும் இருப்பாங்க. நாளைக்கு எந்த இம்பார்டண்ட் வர்க்கும் இல்ல தானே?”, நதியாள்.
“இல்லடா… சரி நாளைக்கு லன்ச் முடிச்சிட்டு டிசைட் பண்ணிக்கலாமா?”, அகரன்.
“சரி… 3 மணிக்கு வரசொல்லு”, என நதியாள் கூறிவிட்டு எழுந்து கிட்சன் சென்றாள்.
“சரண்… இன்னிக்கு நானும் நதியும் மண்டபம் பாத்துட்டு நாளைக்கு டிசைன்ஸ் டிஸ்கஸ் பண்ணிக்கலாம். நாளைக்கு 3 மணிக்கு நம்ம ஆபீஸ் வரசொல்லிடு. அடுத்து எங்க போற?”, அகரன்.
“அடுத்து காசிக்கு போறேன்…. ஏன்டா என்னை அம்போன்னு கலட்டி விட்டுட்டு புருஷனும் பொண்டாட்டியும் ஓடிட்டீங்க. நான் டாக்ஸில சுத்திட்டு இருக்கணுமா? ஒழுங்கா எனக்கு கார் அனுப்பி வை. நேரா நான் ஆபீஸ் போறேன். நீ எப்ப வான்னு சொல்றியோ அப்ப வீட்டுக்கு வரேன். உங்கள தனிக்குடித்தனம் வைக்கற வரைக்கும் என்னை ரோட்ல படுக்க விட்றுவீங்க போலடா… “, சரண் புலம்பினான்.
“சரி சரி புகழாத… உனக்கு கார் சஞ்சய் கொண்டு வருவான். மச்சானுக்கு இந்த உதவி கூட நீ பண்ணலண்ணா எப்படி சரண்? நாளைக்கு என் தங்கச்சி கூட நீ டைம் ஸ்பெண்ட் பண்ணணும்னு கேட்டா நான் செய்வேன்ல” , அகரன் சிரித்தபடிக் கூறினான்.
“உன் தங்கச்சி தானே…. இதுவரைக்கு அவ நம்பர் வாங்கி தந்தியா டா நீ ? வந்துட்டான் பெரிய இவனாட்டம் பேசறதுக்கு…. “, சரண் கோபமாக கேட்டான்.
“நம்பர் தானே… உடனே இப்ப உன் வாட்ஸ்அப் ஓபன் பண்ணு வந்து இருக்கும்”, என அகரன் நதியாளின் போனில் இருந்து தாமிராவின் நம்பரை அவனுக்கு அனுப்பினான்.
“நண்பேன்டா…. இப்ப தான் நீ எனக்கு மச்சான்…. நீ என் தங்கச்சி கூட பேசிட்டு இரு. நான் வைக்கறேன்”, எனக்கூறி சரண் சீட்டியடித்தபடி போனை கட் செய்தான்.
சரண் அங்கே தாமிராவின் எண்ணை பார்த்து சிரித்தபடி “மை டீச்சர்” என சேமித்தான்.
“என்ன சார் தாமிரா நம்பர் அனுப்பிட்டீங்களா?”, எனக் கேட்டபடி நதியாள் இருவருக்கும் ஜூஸ் கொண்டு வந்தாள்.
“ஹேய் யாள்…. நீ ஏன் போட்ட? நானே வந்து போட்டு இருப்பேன்ல… உனக்கு ஏன் சிரமம்?”, எனக் கேட்டபடி அகரன் அவளை அமரவைத்து முதலில் அவளை குடிக்கவைத்தான்.
“இதுல என்ன சிரமம்? நீ தான் கேட்டுட்டியே புருஷன் கேட்டா போட்டு தரமாட்டியான்னு… சரி கல்யாணம் ஆகி இத்தனை நாள்ல இன்னிக்கு தான் என்கிட்ட கேட்டு இருக்க… அதான் போட்டு குடுத்தேன்…. குடிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லு அகன்”, என அவனை குடிக்கச் சொன்னாள் நதி.
“அது சும்மா வெளாட்டுக்கு கேட்டேன்….”, அகரன் ஒரு மிடறு விழுங்கியபடிக் கூறினான்.
“பரவால்ல குடி… “, நதியாள்.
“ம்ம்ம்….. நதி… ஜூஸ் சூப்பர்… இவ்வளவு நல்லா ஜூஸ் போடுவியா நீ? சுகர் கரெக்டா இருக்கு. புளிப்பும் சேர்ந்து செம…. அப்ப உனக்கு சமைக்கவும் தெரியுமா?”, அகரன் அவளை பார்த்தபடி அமர்ந்து கேட்டான்.
“அதுலாம் தெரியாது. நீயே கத்துகுடு. பர்ஸ்ட் கார் ஓட்ட கத்துகுடு”, நதியாள் அவனின் தோள் சாய்ந்து கேட்டாள்.
“கத்துக்கலாம். சரி டிரஸ் மாத்திட்டு பிரஸ் ஆகிட்டு வா போய் மண்டபம் பாக்கலாம்… நானும் ரெடி ஆகறேன்”, அகரன் அவளின் தலை வருடியபடி கூறினான்.
“என் டிரஸ் எல்லாம் அங்க இருக்கு அகன்…. “, நதியாள்.
“உனக்காக ஒரு சேரி எடுத்து வச்சி இருக்கேன். அத கட்டிக்கறியா நதிமா?”, என கண்களில் ஆர்வம் பொங்க கேட்டான் அகரன்.
“காட்டு அகன்…”, நதியாள் எழுந்து நின்றபடிக் கேட்டாள்.
அகரன் தன்னறைக்கு அழைத்து வந்து கபோர்டில் இருந்து ஒரு கவரை திறந்தான்.
அதில் அழகான பேன்ஸி டிசைனர் புடவை இருந்தது.
பிங்க்கும் தாமரை நிறமும் கலந்தது போல பார்டரில், த்ரெட் எம்பிராய்டரி செய்யப்பட்டு, ஆங்காங்கே உடலில் வெள்ளை பூக்கள் இருப்பது போல பார்க்கவே கண்களை கவர்ந்தது.
சிம்பிளாவும், கண்களுக்கு குளிர்ச்சியான நிறத்தில் இருந்த புடவை நதியாளுக்கு மிகவும் பிடித்திருந்தது.
தன்னவன் தனக்காக முதல் முதலாக எடுத்து கொடுக்கும் புடவை… எப்பெண்ணும் அதை மறுக்கமாட்டார்கள்..
வாழ்வில் எத்தனை புடவைகள் இனி எடுத்தாலும் இது பிடிக்கும் இடத்தை இனி எதுவும் பிடிக்காது என்பது நிச்சயம்.
“வாவ்….அகன்… இட்ஸ் சிம்ளி லவ்விங்….. எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு…. இதையே கட்டிக்கறேன்…. நீ வெளியே இரு”, என புடவையை கையில் வாங்கிக் கொண்டு கூறினாள்.
“நதிமா… ஐ திங்..நானும் உனக்கு சேரி கட்ட ஹெல்ப் பண்ணலாம்னு நினைக்கறேன். இங்க குடு நான் ப்ளீட்ஸ் எடுக்கறேன்”, என கையை நீட்டினான்.
“உங்க கரிசனத்துக்கு நன்றி மிஸ்டர் அகரன். நீங்க வெளியே இருங்க”, என அவனை வெளியே தள்ளினாள்.
“நான் மிஸ்டர் நதியாள்தானே… இங்க இருந்தா என்ன?”, அகரன் சிணுங்களாக கேட்டான்.
“யாரா இருந்தாலும் உள்ள இருக்க விடமாட்டேன். நீ வெளியே போறியா இல்ல நான் சரண் ரூமுக்கு போகவா?”, கதவை அடைக்கவிடாமல் அகரன் கைத்தடுத்தது பார்த்துவிட்டு கேட்டாள்.
“நான் என் டிரஸ் எடுத்துட்டு போறேன்”, என அவளை தள்ளி விட்டு அவனின் துணி எடுத்துக்கொண்டு சரண் அறைக்குச் சென்று கதவடைத்துக் கொண்டான்.
“ஹாஹா… திருடா ..”, என நதியாள் சிரித்தபடி கதவடைத்துக் கொண்டு தயாராகச் சென்றாள்.
முகம் கழுவி வந்தவள் புடவை அணிந்து ,தலைமுடியை பின்னலிட்டு லேசாக முக ஒப்பனை செய்தாள்.
அந்த சமயம் கதவு தட்டப்பட சென்று திறக்க, அகரன் ஆளைமயக்கும் கள்வனாக தயாராகி நின்றிருந்தான். நதியாள் சில நொடிகள் இரசித்து பின் சுதாரித்துக் கொண்டாள்.
நதியாளைக் கண்டவனும் வண்டாக மாறி அவளையே மொய்த்த வண்ணம் இருந்த கண்களை அடக்கமுடியாமல் சிரமப்பட்டான்.
நேர்த்தியாக நதியாள் புடவையணிந்து கலை சிற்பமாக காட்சியளித்தாள்.
“வாவ்…. மெஸ்மரைஸிங் பேபி….. யூ லுக் சோ கார்ஜியஸ்….. ஆனா…. ஏதோ குறையுதே”, என அவளை ஆராய்ந்தவன்.
தன் டிரஸ்ஸிங் டிரா திறந்து அவள் வழக்கமாக அணியும் காஜல் ஸ்டிக் எடுத்து, தானே தன்னை கட்டியிலுக்கும் கண்களுக்கு மையிட்டு விட்டான்.
“ம்ம்…. இப்ப பர்பெஃக்ட்”, அகரன் அவளை விட்டு கண் எடுக்காமல் கூறினான்.
“அகன் …எனக்கு போற வழில பூ வாங்கி குடு. கோவிலுக்கு போயிட்டு போகலாம்”, என அவள் சகஜமாக உரையாடியபடி வெளியே வந்தாள்.
“ஹ்ம்ம்…… கொல்றாளே….. அகர்…. கன்ட்ரோல்… கன்ட்ரோல்…. “, என தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு வெளியே வந்து கதவை பூட்டிக்கொண்டு இருவரும் புறப்பட்டனர்.
காரில் ஏறியதில் இருந்து நிமிடத்திற்கு ஒரு முறை நதியாளை பார்த்தபடி காரோட்டிக்கொண்டிருந்தான் அகரன்.
“அகன்… ரோட்டை பாத்து ஓட்டு டா”, என நதியாள் அவனை பார்க்காமலேயே கூறினாள்.
“அதெப்படி என்னை பாக்காமயே என்னை ரோட்டை பாத்து ஓட்ட சொல்ற நதிமா?”, அகரன்.
“வீட்ல இருந்து இன்னும் என்னையே பாத்துட்டு இருக்க. ஒழுங்கா கார ஓட்டு. அப்பறம் பாக்கலாம் என்னை. நான் எங்கயும் ஓடிட மாட்டேன்”, நதியாள் இப்பொழுதும் அவனை பார்க்காமலே பதில் கொடுத்தாள்.
“அதை என்னை பார்த்து சொல்லலாம்”, அகரன் அவளின் கண் காணும் ஆசையில் கேட்டான்.
“கோவில் வந்தாச்சி இறங்கு அகன். அங்க பூ வாங்கிட்டு இருக்கேன். கார் பார்க் பண்ணிட்டு வா”, என அவனை பார்க்காமல் கூறிவிட்டு இறங்கி நடந்தாள்.
“மேடம் என்னை பார்க்காம எங்க போவீங்க…. வரேன் இரு”, அகரன் தனக்குள் பேசியபடி காரை பார்க் செய்துவிட்டு நதியாள் இருக்கும் இடம் வந்தான்.
“பாட்டி ஒரு முழம் பூ குடுங்க”, நதியாள்.
“நாலு முழம் வாங்கி வை கண்ணு… புதுசா கண்ணாலம் ஆன புள்ளை தலை நிறைய பூ வச்சா தான் நல்லா இருக்கும்”, பூக்கார பாட்டி.
“அவ்வளவு எல்லாம் வேணாம் பாட்டி. ஒரு முழம் போதும். சாமிக்கு இரண்டு முழம் குடுங்க”, நதியாள்.
“என்னா கண்ணு நீ…. இந்தா உன் வீட்டுகாரரு வந்துட்டாரு… ராசா நாலு முழம் வாங்கி உன் கையால வச்சி விடு. சாமிக்கு தனியா வாங்கிக்க …..”, பூக்கார பாட்டி.
“இரண்டு முழம் குடுங்க பாட்டி… இரண்டு முழம் சாமிக்கு தனியா கட் பண்ணி குடுங்க..”, அகரன்.
“ஏன் கண்ணு இன்னும் இரண்டு வச்சா என்ன?”, பூக்கார பாட்டி.
“அவளுக்கு தலைல பாரமா இருக்கும். இரண்டு முழம் போதும் பாட்டி” எனக் கூறி நெருக்க கட்டிய குண்டுமல்லி வாங்கி தானே வைத்துவிட்டான்.
பின் பணம் கொடுத்து உள்ளே செல்லத் திரும்புகையில், “தாயி…. உன் கஷ்டம் புரியர மகாராசன கட்டி இருக்க… நல்லா பாத்துக்க… நல்லா இருங்கய்யா இரண்டு பேரும்”, என பூக்காரபாட்டி மனதார வாழ்த்தினார்.
அகரனும் நதியாளும் சிரித்தபடி கோவில் வந்து விளக்கேற்றி தரிசனம் முடித்து மண்டபம் நோக்கிக் கிளம்பினர்.
“அகன்….”, நதியாள் தாழ்த்திய குரலில் அழைத்தாள்.
“என்ன நதி?”, அகரன் ரோட்டை பார்த்தபடி கேட்டான்.
“அகன்…..”
“சொல்லு நதி”
“அகன்ன்ன்ன்ன்…….”, நதியாள் சிணுங்கினாள்.
அவளின் குரலில் இருந்த மாற்றம் உணர்ந்து அகரன் அவளைப் பார்த்தான்.
“சொல்லு நதிமா…. எதுக்கு கூப்பிட்ட?”, அகரன்.
“நீ ஏன் என்னை பார்க்காம ரோட்டை பார்த்து ஓட்ற?”, நதியாள்.
அகரன் அவளின் கேள்வியிலும், அக்குரலில் இருந்த காதலையும் உணர்ந்து,” நீ தானே ரோட்டை பார்த்து ஓட்ட சொன்ன “, அகரன் முகத்தை சாதாரணமாக வைத்துக்கொண்டு கூறினான்.
“அது அப்போ…. இப்ப ஏன் என்னை பாக்கல?”, என சிறுகுழந்தை போல கேட்பவளை காரை ஓரமாக நிறுத்தி விட்டு பார்த்தான்.
“இப்ப உனக்கு என்ன வேணும்?”, அகரன்.
“ஒன்னுமில்ல. காரை எடு”, என முகத்தை திருப்பிக் கொண்டாள் நதி.
அவள் முகம் பற்றி தன் பக்கம் திருப்பியவன், அவள் எதிர்பாரா சமயம் மிருதுவாக இதழணைத்து ,” இப்படி எதுவும் பண்ணிடக்கூடாதுன்னு தான் பாக்கல. இப்ப நீ அவ்வளவு அழகா இருக்க தெரியுமா..… இந்த புடவைல …எனக்கு என்ன வார்த்தை சொல்றது தெர்ல …நீ இதை கட்டினதுல இருந்து அப்படி ஒரு சந்தோஷம் எனக்குள்ள …… என்னை நான் புதுசா உணர்றேன். நிச்சயமா வெறும் வார்த்தையால சொல்ல முடியாது என் உணர்வுகள …. இப்ப மண்டபம் போலாம். அப்பறம் பேசலாம்.. சரியா? “, என அகரன் கேட்க , நதியாள் தன்னிச்சையாக தலையசைத்தாள் அவனைப் பார்த்தபடி.
இப்பொழுது நதியாளின் கண்கள் அவனை அகல மறுக்க அவனையே கண் இமைக்காது கண்டபடி வந்தாள்.
“நதி பேபி இப்படிலாம் பாத்து வைக்காத மாமா பாவம் டி… அந்த பக்கம் திரும்பு… இல்லையா எனக்கு தெரியாம சைட் அடி”, அகரன்.
“ஐ லவ் யூ அகன்…”, எனக் கூறி அவனின் கன்னத்தில் அழுத்தமாக இதழ் பதித்தாள் நதி.
“லவ் யூ நதி”, என அவளை அணைத்துக்கொண்டான் அவளின் அகன்.
அதற்கு பின் மண்டபம் சேரும் வரையிலும் அமைதியே நிலவியது இருவரிடையும்.
“நதிமா…. எழுந்திரி”, என அகரன் அவளை எழுப்பினான்.
நதியாள் கண் திறந்து பார்க்க, எதிரே பிரம்மாண்டமான மண்டபம் இருந்தது.
தனியாக அலங்காரம் ஏதும் செய்யாமலே அழகாக இருந்தது. அதில் பதித்திருந்த கிராணைட் கல்லும் சுவர் வர்ணமும், கதவுகளின் வேலைபாடும் என மிக நேர்த்தியாக அழகாக இருந்தது.
பெரும் புள்ளிகளின் திருமணங்கள் நிச்சயம் இதிலேயே நிகழும். அத்தனை இடவசதியுடன் மரங்கள், தோட்டம் என சுத்தமாக பராமரிப்பு செய்து வருகின்றனர் என்பதை முதல் பார்வையிலேயே உணரலாம்.
“அகன்… மண்டபம் சூப்பர்…. மதுரன்கிட்ட சொல்லிடு”, நதியாள் புன்னகையுடன் கூறினாள்.
“சரி சொல்லிடலாம். வா உள்ள போய் பாக்கலாம்”, என அகரன் அவளின் கைப்பிடித்து அழைத்துச் சென்றான்.
மேனேஜர் அவர்களுக்காக வாசலில் காத்திருந்து உள்ளே அழைத்துச் சென்று எல்லா இடமும் சுற்றிக் காட்டினார்.
மிகவும் விசாலமான இடம் தான். குறைந்தது மூவாயிரம் பேர் உட்காரலாம். பெரிய மேடை. அலங்கார வசதிகளுக்கு தேவைபடும் உபகரணங்கள் முதல் சமையல் பாத்திரங்கள் வரை அனைத்தும் இருந்தது.
மணமக்கள் அறைகளுடன் சேர்த்து பதினைந்து அறைகளும் முதல் தளத்தில் இருந்தது. எல்லாமே நவீன வசதிகள் செய்யப்பட்டு சுத்தமாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
“அகன்…எனக்கு மண்டபம் ரொம்ப பிடிச்சி இருக்கு”, நதியாள்.
“ம்ம்…நல்லா இருக்கு. எல்லா வசதியும் இருக்கு. நமக்கு அலைச்சல் இருக்காது. முக்கியமா சரணுக்கு… டேட் கன்பார்ம் பண்ணிகிட்டீங்களா?”, என நதியாளிடம் பதில் கூறி மேனேஜரிடம் கேள்வியில் முடித்தான் அகரன்.
“பண்ணிட்டேன் சார். நீங்க டெகரேசன் செய்ய இரண்டு நாள் முன்னவே கேட்டாலும் மண்டபம் ப்ரீ தான். மதுரன் சார் முன்னயே சொல்லிட்டாரு”, மேனேஜர்.
“ஓகே. அட்வான்ஸ் எவ்வளவு?”, அகரன்.
“சார்….அது வாங்க கூடாதுன்னு மதுரன் சார் சொல்லிட்டாரு”, என மேனேஜர் தயங்கியபடிக் கூறினார்.
“அது நாங்க அவர் கிட்ட பேசிக்கறோம் மேனேஜர் சார். நீங்க வாங்கினா தான் இங்க வைப்போம் இல்லைன்னா வேற மண்டபம் பாத்துக்கறோம்”, என நதியாள் கூறினாள்.
“மேடம் ….அது…..”, என மேனேஜர் தயங்கினார்.
“டபுள் அமொண்ட் வாங்கிக்கோங்க மேனேஜர்….” எனக் கூறியபடி மதுரன் அவ்விடம் வந்தான்.
“டபுள்லாம் இல்ல… என்ன யூசுவல் அமொண்ட்டோ அத சொல்லுங்க”, நதியாள்.
“ஹாஹாஹா…. மேனேஜர்….”, என மதுரன் சரியென கைகாட்ட அகரன் அதற்கான பணத்தை செலுத்தினான்.
“என்ன மேடம்… இன்னும் சூடு குறையாம இருக்கீங்க போல?”, மதுரன் வம்பிலுத்தான்.
“காலைல அவனுங்களுக்கு குடுத்தத விட உங்களுக்கு அதிகம் குடுத்து இருக்கணும் மிஸ்டர் மதுரன். அவன பேச விட்டு வேடிக்கை பாத்தீங்கல்ல நீங்க….”, நதியாள் கோபமாக கேட்டாள்.
“அது நான் விடல. உன் புருஷனும் அண்ணணும் தான் அப்படி இருக்க சொன்னாங்க. உங்க ஆக்சன் ரியாக்சன் பாக்கணும்னு”, மதுரன் அவர்களை கோர்த்துவிட்டான்.
“டேய் ஏன்டா மது? இப்பதான் மலை இறக்கினேன் மறுபடியுமா?”, என அகரன் மதுரனைக் கேட்டான்.
“நம்ம நதியாள் தானே…. விடு… அப்பறம் இன்னிக்கு நைட் டின்னர் என் வீட்ல தான். அப்பா உங்க மூனு பேரையும் பாக்கணும்னு சொன்னாரு… சரணுக்கு இன்பார்ம் பண்ணிட்டேன். உங்கள கையோட கூட்டிட்டு போக சொல்லிட்டான். அவன் வந்துடறானாம்…”, மதுரன்.
“நாங்க மட்டும் தானா? இல்ல டாலையும் கூட்டிட்டு வரவா?”, என நதியாள் புருவம் உயர்த்தி சிரிப்புடன் கேட்டாள்.
“இன்னிக்கு நீங்க மூனு பேரும் வந்து ஸ்கோர் பண்ணுங்க. அப்பறம் டால் அ கூட்டிட்டு போறேன்”, என மதுரனும் கண்ணடித்து பதில் கூறினான்.
“டேய் என் பொண்டாட்டி பாத்து கண்ணடிக்கற நீ…”, என அகரன் சிரிப்புடன் அடித்தான்.
“என் பிரண்ட் டா. உனக்கு என்ன?”, என மதுரனும் அவனை செல்லமாக அடித்தான்.
“போதும் நிறுத்துங்க டா. இப்ப தான் மணி 5 ஆகுது. வா அங்கிள் ஆண்டிக்கு எதாவது கிப்ட் வாங்கிட்டு போலாம்”, என அகரனை அழைத்தாள் நதி.
“எனக்குல்லாம் இல்லையா?”, என பவ்யமாக மதுரன் கேட்டான்.
“உன் கல்யாணத்துல மொய் வைக்கறோம். இப்பலாம் குடுக்க முடியாது”, என நதியாள் கூறியபடி நடக்க , மூவரும் வெளியே வந்தனர்.
“மது நீயும் கூட வா… உன் கார்ல டிரைவர் இருக்காங்கல.”, அகரன் அழைத்தான்.
“தட்ஸ் பைன்.. “, என மதுரன் தன் காரை அனுப்பிவிட்டு, நதியாளை முன்னே அமரும் படி கூறிவிட்டு, பின்னே ஏறிக்கொண்டான்.
“டேய் மது…. வீட்ல உன் விஷயம் சொல்லிட்டியா?”, அகரன் கண்ணாடி வழியாக பார்த்தபடிக் கேட்டான்.
“நான் சொல்லல. பட் வீட்ல கெஸ் பண்ணிட்டாங்க… என் ஆக்டிவிட்டீஸ் வச்சி”, மதுரன் மென்னகை புரிந்தபடிக் கூறினான்.
“அப்படி என்ன ஆக்டிவிட்டி பண்ண மதுர்?”, நதியாள்.
“லூசுத்தனமா சிரிக்கறேன். இப்பலாம் கோவம் அவ்வளவா வரதே இல்ல… அதிக நேரம் தோட்டத்துல இருக்கேன். அம்மாவ கவனிக்கறேன்… இதுலாம் வச்சி அவங்களே கெஸ் பண்ணிட்டாங்க”, என லேசாக வெட்கப்பட்டபடிக் கூறினான் மதுரன்.
“அடடா… வெட்கம் வேறயா…. கடவுளே…என்னை ஏன் இப்படி சோதிக்கற?”, என நதியாள் கிண்டல் செய்ய, மதுரன் அசடுவழிய, அகரன் சிரிக்கவென அவ்விடம் கலகலப்பானது.
ஓர் மாலில் இறங்கி மதுரனின் தாய் தந்தையருக்கு விருப்பமான பொருட்கள் வாங்கிக் கொண்டு பார்க்கிங் வந்தனர்.
அங்கே பூரணணும், வினயும் இவர்களை வன்மம் பொங்கும் விழிகளால் பார்த்துக்கொண்டு இருந்தனர்.
“அவ இனிமே சிரிக்கவே கூடாது வினய்…. அந்த மதுரனும்…….”, பூரணன்.
“மதுரன தொட முடியாதுன்னு நீங்க தானே பாஸ் சொன்னீங்க?”, வினய்.
“அவன் யாரையோ லவ் பண்றானாம் டா. அது யாருன்னு பாரு. இந்த நதியாளும் அகரனும் இனி சந்தோஷமா இருக்கவே கூடாது. அப்படி எதாவது பண்ணணும்.. என்னை ஒவ்வொரு தடவையும் தோக்கடிச்சிட்டே இருக்காங்க டா அவனுங்க. இந்த தடவை நான் தான் ஜெயிக்கணும். அவ எனக்கு வேணும். அகரனுக்கு கிடைக்ககூடாது”, பூரணன் குரலில் வஞ்சமும் பகையும் வழியக் கூறினான்.
“அவங்களுக்கு இன்னும் மூனு வாரத்துல இங்க ரிசப்ஷன் வைக்கறாங்களாம் பாஸ். ஆறு மாசத்துக்கு தனி தனியா தான் இருக்கணும்னு ஜோசியர் சொன்னதால தனியா தான் இருக்காங்க.. எப்படியும் நதியாள உங்ககிட்ட கொண்டு வருவேன்”, வினய்.
“இவள மாதிரி ஒருத்திய கல்யாணம் பண்ணி பிரம்மச்சாரியா இருக்கிறது கஷ்டம் டா. அகரன் வாழ்க்க பூராவும் அப்படியே இருக்க வைக்கணும். என்னை அடிச்சி அவமானப்படுத்தின இவள சும்மா விடக்கூடாது”, என தான் அறை வாங்கிய கன்னத்தை தடவியபடிக் கூறினான் பூரணன்.
“விடமாட்டேன் பாஸ்…”, என அவனும் அறை வாங்கிய கன்னத்தை தடவினான்.
இவர்களை கவனியாமல் அவர்கள் மூவரும் சிரித்து பேசியபடி தங்கள் பயணத்தை தொடங்கினர் மதுரனின் இல்லம் நோக்கி…