47 – அகரநதி
மதுரனுடன் அகரனும் நதியும் மதுரனின் இல்லம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தனர்.
“மதுர் ….. அங்கிள் ஆண்டிக்கு இதுலாம் பிடிக்கும் தானே?”, நதியாள் தான் வாங்கியதைப் பார்த்தபடிக் கேட்டாள்.
“நான் உன்ன எதுவும் வாங்காதன்னு சொன்னேன். நீயா எல்லாத்தையும் வாங்கிட்டு. மறுபடியும் என்னை இப்படி கேக்கற…. இன்னும் ஐஞ்சு நிமிஷம் வீட்ல குடுத்துட்டு அவங்க கிட்டயே கேட்டுக்க…. “, மதுரன்.
“உன்னை கேட்டேன் பாரு…. எதாவது உருப்படியா பதில் சொல்றியா நீ? ஸ்டெல்லா கிட்ட சொல்லி உனக்கு ஸ்பெஷல் ட்ரீட்மென்ட் குடுக்க சொல்றேன். அப்பதான் நீ ஒழுங்குக்கு வருவ”, நதியாள்.
“முதல்ல அவள அவ வீட்ல சொல்ல சொல்லு, அப்பறம் நானே அவள கவனிச்சிக்கறேன்”, மதுரன் சிரிப்புடன் கூறினான்.
“நீ முதல்ல வீட்ல சொல்லுடா….”, நதியாள் மதுரனின் தலையில் அடித்துக் கூறினாள்.
“கொஞ்சமாது மரியாதை குடுக்கறியா? உன்னைவிட பெரியவன்னு பயம் இருக்கா பாரு…. டேய் அகர் இவள போய் கல்யாணம் பண்ணி கஷ்டப்படறியே டா”, என மதுரன் நதியாளை கிண்டல் செய்தான்.
“அவன் கஷ்டப்படறான்னு உன்கிட்ட சொன்னானா டா? மரியாதையெல்லாம் நாங்களா குடுக்கணும்… நீயா கேட்டு வாங்க கூடாது…. உனக்கு இவ்வளவு குடுக்கறதே பெருசு… வாய மூடிட்டு இரு இல்லை வீட்ல உன் விஷயத்த வேறமாதிரி சொல்லி வச்சிட்டு போவேன்”, என விரல் நீட்டி எச்சரித்தாள் நதி.
“ஹேய்….. யார விரல் நீட்டி மெரட்டுற? நான் பிஸ்னஸ் மேக்னெட் தெரியுமா?”, மதுரன் பந்தா காட்ட அகரன் சிரித்தான்.
“மேக்னெட் வச்சி மேஜிக் காட்டி பொலைக்கறவன்கிட்ட உன்னை வித்துடறேன் இரு”, நதியாள்.
“யப்பா…. வாய்… வாய்…. அகர்…. ரொம்பவே கஷ்டம் தான் டா….. ஜாக்கிரதை”, என கண்ணீர் துடைப்பதைப் போல மதுரன் பாவ்லா செய்ய, நதியாள் அடிக்க என வீடு வந்து சேர்ந்தனர்.
“வெல்கம் டூ மை ஸ்வீட் ஹோம் மை லவ் பேர்ட்ஸ்”, என மதுரன் முதலில் இறங்கி நதியாளுக்கு கதவை திறந்தான்.
“அடடா…. என் பையன கதவு திறக்க வச்ச முதல் பொண்ணு நீ தான் “, எனக் கூறியபடி மதுரனின் அப்பா மதன் வெளியே வந்தார்.
“என் பையன் சுபாவம் இப்ப மாறிடிச்சின்னு கிண்டல் பண்றிங்களா…. பழைய மதுவ பாத்தா இப்படி பேசுவீங்களா நீங்க? “, என தன் கணவரை கிண்டல் செய்தபடி சுமித்ரா வெளியே வந்தார்.
“மாம் டேட்…. இவங்க தான் நான் சொன்ன லவ் பேர்ட்ஸ்…. அகரன் நதியாள்”, என மதுரன் இருவரையும் தன் தோளோடு அணைத்தபடி தன் தாய்தந்தைக்கு அறிமுகப்படுத்தினான்.
“வெல்கம் யங் மேன்… வெல்கம் ப்யூட்டி…..”, என மதன் அவர்களை வரவேற்றார்.
“வாப்பா… வாம்மா”, என சுமித்ராவும் வரவேற்றார்.
நதியாளும் அகரனும் அவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டனர்.
“எல்லா நலமும் வளமும் பெற்று பல்லாண்டு வாழணும் பசங்களா”, என இருவரும் மனதார ஆசிர்வதித்தனர்.
“பாத்தியா மது…. எவ்வளவு பண்பா இருக்காங்க…..”, என சுமித்ரா கூறினார்.
“ஏன்டா…..”, என மதுரன் சலித்தபடி தன் பெற்றவர்கள் காலில் விழுந்து எழுந்தான்.
“இவ்வளவு சலுப்பா ஆசிர்வாதம் வாங்கினாலாம் நாங்க பண்ண முடியாது”, என மதன் முகத்தை திருப்பிக்கொண்டார்.
“முடிஞ்சா பண்ணுங்க இல்லைன்னா விட்றுங்க”, மதுரனும் வேறு பக்கம் திரும்பிக்கொண்டான்.
“அடடா…. இப்பவே ஆரம்பிக்காதீங்க இரண்டு பேரும்…. உள்ள வாங்க முதல்ல… வாம்மா”, என நதியாளை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றார் சுமித்ரா.
“ஒரு நிமிஷம் ஆண்டி….”, என நதியாள் காரில் இருந்து அவர்களுக்காக வாங்கிய பொருட்களை எடுத்து வந்தாள்.
அகரனுடன் மதன் பேசிக்கொண்டு இருந்தார்.
“அகரன்….. எப்படி போகுது கம்பெனி?”, என மதன் பேச்சை துவக்கினார்.
“நல்லா போகுது அங்கிள். ஆர்டர்ஸ் இருக்கு . முடிஞ்சவரை கஸ்டமர சேடிஸ்பை பண்ண ட்ரை பண்ணிட்டு இருக்கோம்”, அகரன்.
“தட்ஸ் பைன். கஸ்டமர் தான் நமக்கு முதலாளி. அவங்க சேடிஸ்பேக்சன் அண்ட் டிலைட் ரொம்ப முக்கியம். மதுவோட ஹோட்டல் ஸ்டார்ட் பண்ணியாச்சா?”, மதன்.
“பேஸ்மண்ட் போட்டுட்டோம் அங்கிள். நெக்ஸ்ட் வீக்ல இருந்து அடுத்த கட்ட வேலை ஆரம்பிச்சிடுவோம்”, அகரன்.
“தட்ஸ் குட். ஆல் த பெஸ்ட் “,என மதன் கைக்குலுக்கினார்.
“இந்தாங்க ஆண்டி எங்களோட சின்ன கிப்ட்”, என நதியாள் தான் வாங்கி வந்ததைக் கொடுத்தாள்.
“எதுக்குமா இதுலாம் ? நாங்க தான் உங்களுக்கு கிப்ட் தரணும். எப்ப ரிசப்ஷன் வச்சி இருக்கீங்க?”, சுமித்ரா.
“இன்னும் மூனு வாரத்துல ஆண்டி. நீங்களும் அங்கிளும் கண்டிப்பா வரணும். இன்விடேசன் வந்ததும் இன்வைட் பண்ண மறுபடியும் வரோம் ஆண்ட்டி “, நதியாள்.
“கண்டிப்பா…. என் மதுவ இந்த அளவுக்கு நீங்க மாத்தி இருக்கீங்க, அதுக்காகவே நானும் அவரும் உங்களுக்கு பெரிய தேங்கிங் செரிமோனி நடத்துவோம்”, என சுமித்ரா சிரித்தபடி கூறினார்.
“என்ன ஆண்டி இப்படி சொல்றீங்க? நாங்க ஒன்னுமே பண்ணல…. இதுலாம் அதிகம்.. பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதீங்க”, நதியாள் சிரித்தபடி கூறினாள்.
“ஹாஹா… மது சரியா தான் சொல்லி இருக்கான். உன்கிட்ட வாய் குடுத்து ஜெயிக்கறது கஷ்டம்னு. இரண்டு பேர் ஜோடி பொருத்தமும் பிரமாதம்”, என சுமித்ரா அகரன் நதியாள் ஜோடியை பாராட்டினார்.
“தேங்க்யூ ஆண்டி….”, நதியாள் அகரனை கண்களால் ஸ்பரிசித்தபடிக் கூறினாள்.
அச்சமயம் அகரனும் நதியாளைப் பார்க்க இருவரும் சில நொடிகள் ஒருவரை ஒருவர் பார்த்தபடி சுற்றம் மறந்து இருந்தனர்.
மதுரன் படிகளில் இறங்கும் சமயம் எழுப்பிய சத்தத்தில் சுய உணர்வு பெற்று அசடு வழிந்தபடி பெரியவர்களைப் பார்த்து சிரித்தனர்.
“ஹாஹாஹா……. விடு அகர். இதுலாம் இப்ப தான் என்ஜாய் பண்ணிக்க முடியும்”, என மதன் கிண்டல் செய்ய அகரனின் முகம் நாணத்தால் சிவந்தது.
“அடடே…. எப்பவும் பொண்ணுங்க முகம் தான் வெட்கத்தில் சிவக்கும்னு சொல்வாங்க. இங்க ஆப்போஸிட்டா இருக்கு”, மதன் சிரித்தபடிக் கூறினார்.
“அப்பா…..”, மதுரன் சிரித்தபடி அருகில் வந்தான்.
“சுமி உன் பையன் என்னை தமிழ்ல அப்பான்னு கூப்டுட்டான். இதுக்கு நீ எனக்கு பாயாசம் தந்தே ஆகணும். வா அதை செய்வோம். மது நீ வீட்ட சுத்தி காட்டிட்டு வா. அதுக்குள்ள டின்னர் ரெடியா இருக்கும்”, மதன் சிறியவர்களுக்கு தனிமை தந்து தன் மனைவியுடன் சிரித்து பேசியபடி அவ்விடம் விட்டு நகர்ந்தார்.
“சச் எ லவ்லி கப்புள்”, என அகரனும் நதியாளும் ஒரே நேரத்தில் கூறினர்.
“அவங்க எப்பவும் லவ் பண்ணிட்டே தான் இருப்பாங்க. வாங்க நாம மேல போலாம்”, என மதுரனும் உதட்டில் புன்முறுவலோடு தன் பெற்றோரை பார்த்து கூறினான்.
“ஹேய் மது… அங்கிள் ஆண்டிக்கு லவ் மேரேஜ் ஆ?”, நதியாள்.
“இல்ல… அரேன்ஜ் மேரேஜ் தான். ஆனா இரண்டு பேருக்கும் ரொம்ப லவ் நான் பொறந்தப்பறமும் கூடிட்டே தான் இருக்கு இப்பவரை”, மதுரன்.
“தட்ஸ் லவ்லி… அப்ப உன் லவ்வுக்கு எந்த தடையும் சொல்லமாட்டாங்க தானே?”, நதியாள்.
“மேக்ஸிமம் இருக்காது யாள். உன் பிரண்ட் வீட்ல எப்படி?”, மதுரன்.
“கொஞ்சம் கஷ்டம் தான். புரியவைக்கலாம்”, நதியாள் பெருமூச்சு விட்டபடி கூறினாள்.
“ஏன் நதிமா டல்லா சொல்ற?”, அகரன் நதியாளை தோளோடு அணைத்தபடிக் கேட்டான்.
“ஸ்டெல்லா வீட்ல தான் எப்படி சொல்றதுன்னு யோசனை. கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கும் அகன் அவங்கள கன்வின்ஸ் பண்றது…. ஹ்ம்ம்… பாக்கலாம்”, நதியாள் உண்மையான கவலையுடன் கூறினாள்.
“அதான் நாம எல்லாம் இருக்கோமே பாத்துக்கலாம் விடு”, அகரன் தைரியம் கொடுத்தான்.
“அப்படியே தேவ் விஷயமும் கவனிச்சா நல்லா இருக்கும் அகர்”, மதுரன்.
“அவன் விஷயத்துல நாங்க எதுவுமே செய்ய முடியாது மது. அது அவன் தான் சரி பண்ணணும். இப்ப இந்த வினய் பூரணன் கூட சேந்து இருக்கான். அங்க வீட்ல என்ன நிலைமையோ தெர்ல… மீரா மனசு மாறனும். அவ காயத்த அவன் எப்படி குணபடுத்தறான்னு பாக்கலாம். ஒரு பொண்ணுக்கு சுயமரியாதை ரொம்ப முக்கியம். அதுக்கு கலங்கம் பண்ணவங்கள பக்கத்துல வச்சிட்டு இவன் அவள கல்யாணம் பண்ணாலும் நிம்மதியா வாழ முடியாது. உன் அளவுக்கு தேவ் மெச்சூர் ஆகல டா”, அகரன் உள்ளார்ந்த அர்த்தத்துடன் கூறினான்.
“சரி அவனையும் கொஞ்சம் நியாபகம் வச்சிக்கோங்க…. நதியாள் வீடு நல்லா இருக்கா?”, மதுரன்.
“சூப்பரா இருக்கு. கண்டிப்பா அங்கிளோட ஐடியாதான் புல்லா இருக்குன்னு தெரியுது”, நதியாள் சுற்றிப்பார்த்தபடிக் கூறினாள்.
“சரியா சொன்ன நதியாள்… எல்லாமே என் ஐடியா தான்”, எனக் கூறியபடி மதன் அங்கே வந்தார்.
“நைஸ் அங்கிள். அதுவும் கார்டன் எக்ஸலண்ட்…. “, என நதியாள் மனதார பாராட்டினாள்.
“தேங்க்யூ மை பிரட்டி கேர்ள். வாங்க சாப்டுட்டே பேசலாம்”, என அனைவரையும் அழைத்துக்கொண்டு தோட்டத்தில் ஏற்பாடு செய்திருந்த உணவுமேஜைக்கு வந்தார் மதன்.
“ப்யூட்டிபுல் அங்கிள் இந்த செட்அப்… பார்ட்லி கிளாஸ் அண்ட் வுட் ஹவுஸ்.. அகன் நான் இந்தமாதிரி தான் சொன்னேன் ரூப்டாப் ரெஸ்டாரெண்ட்க்கு…. டேய் மது இதுமாதிரி போடலாமா?”, நதியாள் வழக்கமான குஷியுடன் இருக்கும் இடம் மறந்து அகனின் தோளில் தொங்கியபடி மதுரனையும் பேச்சுவாக்கில் உள்ளே புகுத்தினாள்.
“பேபி…. அங்கிள் ஆண்டி இருக்காங்க. கண்ட்ரோல்… “, என அகரன் மெதுவாக அவள் காதோரத்தில் கூறி அவளின் கைகளை தன் கழுத்தில் இருந்து பிரித்து பக்கவாட்டில் பிடித்துக்கொண்டான்.
“நோ ஷை அகர்… இது தான் அவளோட நேச்சர். இதுவரைக்கும் கஷ்டப்பட்டு கைகால கம்முன்னு வச்சிட்டு இருந்தான்னு தெரியுது. பீல் ப்ரீ. நாங்க வேணா கண்ணு மூடிக்கறோம்”, என மதனும் சுமித்ராவும் அவர்களை கிண்டல் செய்தனர்.
“சாரி ஆண்டி அங்கிள் …. “, என நதியாள் சிறுகுழந்தை போல முகத்தை வைத்துக்கொண்டு, தலையை கோதியபடி கேட்க அனைவரும் சிரித்துவிட்டனர்.
“வாங்க சாப்பிடலாம்”, என சுமித்ரா அழைக்க அகரனும் நதியாளும் அருகருகே அமரவைக்கப்பட்டு பதார்த்தம் பறிமாறினார் சுமித்ரா.
“நீங்களும் உட்காருங்க ஆண்டி ஒன்னா சாப்பிடலாம்”, என நதியாள் அவரையும் அமரவைத்து அவரவர் பேசியபடியே சாப்பிட்டு முடித்தனர்.
“ஹாஹாஹா…. ரொம்ப நாள் கழிச்சி நல்லா சிரிச்சி இருக்கேன். வாலு பொண்ணு…. சமத்து பையன் சூப்பர் கோம்போ…. மது நீயும் உன் லவ்வர இன்ட்ரோ குடுத்தா டின்னர் பர்பஸ் புல்பில் ஆகிடும்”, என மதன் அதிர்ச்சி கொடுத்தார்.
“டேட்…..”, மதுரன் சற்றே அதிர்ந்து தன்னை சமன் படுத்திக் கொண்டான்.
“சொல்லு… சுமி உன் நடவடிக்கை மாற்றத்த பத்தி சொன்னப்ப நான் கண்டுக்கல. இப்ப பாத்துட்டேன். யார் அந்த பொண்ணு? “, மதன் பிடிவாதத்தை கண்ணில் வைத்துக் கேட்டார்.
“அது வந்து…. “, மதுரன் முதல் முறையாக தன் தந்தையின் முன் திணறினான்.
அவன் திணறுவதைக் கண்டு ,” ஹாஹாஹாஹா….. பாத்தியா மதுரா… ஒரு நாள் நீ என்கிட்ட பதில் சொல்ல முடியாம தெனறுவண்ணு சொன்னேன்ல… அந்த நாள் இன்னிக்கு தான். என் மகன மாத்தின மேஜிக்கல் ஏஞ்சல் யாரு?”, மதன் சிரிப்புடன் கேட்டார்.
“நான் தான் அங்கிள்”, எனக் கூறியபடி ஸ்டெல்லா அங்கே வந்து நின்றாள்.
“டால் நீ எப்படி இங்க?”, மதுரன் மற்றோர் அதிர்ச்சியுடன் கேட்டான்.
“நான் தான் வர சொன்னேன் மது”, நதியாள் பதில் அளித்தாள்.
“ஏன்?”, மதுரன் கடுப்புடன் கேட்டான்.
“இதவிட நல்ல டைம் இல்லைன்னு தோணிச்சு. அங்கிள் ஆண்டி…. இவ பேர் ஸ்டெல்லா. என் பிரண்ட். உங்க மதுரனோட லவ்வர்…. உங்களுக்கு இவள உங்க மருமகளா கொண்டு வர சம்மதமா?”, நதியாள் நேரடியாக விஷயத்திற்கு வந்தாள்.
“வணக்கம் ஆண்டி அங்கிள். நான் ஸ்டெல்லா… க்ரிஸ்டியன். ஆனா எல்லா கோவிலுக்கும் போவேன் . என்னை பொறுத்தவரை சாமி ஒன்னு தான். என்னோடது மிடில் க்ள்ஸ் பேமிலி தான். அப்பா ஒரு கம்பெனில அசிஸ்டண்ட் மேனேஜரா இருக்காரு. அம்மா ஹவுஸ்வைப். எனக்கு ஒரு தம்பி, ப்ளஸ் டூ படிக்கறான். நான் அகரன் சார் கம்பெனில இப்ப பிராஜெக்ட் பண்ணிட்டு இருக்கேன்”, ஸ்டெல்லா தன்னைப்பற்றிய முழு விவரங்களும் கூறி அவர்களின் பதிலுக்காக காத்திருந்தாள்.
“பிரண்ட்க்காக எதுவும் பண்ணுவ. அப்பறம் இப்ப ஸ்டார்ட் பண்ண ஸ்டார் ஹோட்டல்ல நீ தான் டெரஸ் கார்டன் அண்ட் ஓவரால் கார்டன் டிசைனர். அடுத்து அப்ராட்ல ஹையர் படிக்க எக்ஸாம் எழுதிட்டு வையிட் பண்ணிட்டு இருக்க. அதோட ரிசல்ட்….”, என மதன் கைத்தட்ட ஒரு கவர் அவரிடம் கொடுத்துவிட்டு சென்றார் ஒருவர்.
“ஸ்டெல்லா, நதியாள், மீரா மூனு பேருக்கும் லண்டன் யுனிவர்சிட்டில சீட் கிடைச்சி இருக்கு “, எனக் கூறியபடி அந்த கவரை அவளிடம் கொடுத்தார்.
ஸ்டெல்லாவும், நதியாளும் ஆர்வமாக அந்த கவரைப் பிரித்து பார்த்தனர்.
அதில் அவர்களுக்கு அங்கே படிக்கும் வாய்ப்பு உறுதி செய்து இருந்தது அந்த கடிதம்.
ஸ்டெல்லாவும் நதியாளும் சந்தோஷத்தில் தங்களை கட்டிப்பிடித்து சுற்றிக்கொண்டனர்.
“டேய் அகர்… இவளுங்க இப்ப கூட நம்மல பாக்கமாட்டாளுங்களா டா? இப்படி இருந்தா நம்ம நிலைமை?”, என மதுரன் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்க, அகரன் முறைப்புடன் அவனைப் பார்த்தான்.
“என்னை ஏன்டா முறைக்கற?”, மதுரன்.
“உன் அப்பா தான்டா அட்மிஷன் கன்பர்ம் பண்ணாரு…. வீட்ல குதிப்பாங்க. அத யாரு சமாளிப்பா? இவ வேற ஒரு பக்கம் குதிப்பா டா”, என அகரன் சோகமாக கூறி முடித்தான்.
“அப்ப நீயும் இரண்டு வருஷத்துக்கு பிரம்மச்சாரியா தான் இருப்பல்ல”, மதுரன் சந்தோஷமாக கேட்க அகரன் கொலைவெறியுடன் பார்த்தான்.
“நதி இது எப்ப எழுதினீங்க? இனிமேல் தானே ரெடி ஆகணும்னு சொன்ன”, அகரன்.
“இது நாங்க போன செம்ல எழுதினோம். ஜஸ்ட் ஒரு ட்ரை குடுக்கலாம்னு. நம்ம காலேஜ் தான் நடத்தினாங்க. பட் நாங்க மூனு பேரும் செலக்ட் ஆவோம்னு கொஞ்சம் கூட நினைச்சி பாக்கல அகன்…. ஐ ம் சோ ஹேப்பி”, என அகரனைக் கட்டிக்கொண்டு சுற்றினாள்.
“கன்கிராட்ஸ் போத் ஆப் யூ”, மதுரன் ஒரு பக்கம் சந்தோஷமும், வருத்தமுமாக கூறினான்.
“ஏன்டா இரண்டு பேரும் டல் ஆகிட்டீங்க?”, சுமித்ரா இருவரையும் பார்த்து கேட்டார்.
“இவங்க போயிட்டா இரண்டு வருஷம் தனியா இருக்கணும்ல …. அந்த கவலை சுமி பசங்களுக்கு. பட் இப்ப இவங்களோட மெச்சூரிட்டி அண்ட் சம உரிமை உணர்வு எந்த அளவுக்கு இருக்குன்னு பாக்கலாம்”, என மதன் முகத்தில் தீவிரம் கொண்டு கூறினார்.
“என்ன அங்கிள் சொல்றீங்க?”, அகரன் புரியாமல் கேட்டான்.
“நீங்க இரண்டு பேரும் இவங்கள லவ் பண்றீங்க தானே?”, மதன் நேரடியாக கேள்விகள் கேட்க தொடங்கினார்.
“ஆமா”, இருவரும் ஒன்றாக பதில் கொடுத்தனர்.
“அப்ப அவங்களோட விருப்பு வெறுப்பு உங்களுக்கு முக்கியமானதா இல்லையா?”, மதன்.
“அவங்க எங்களுக்கு ரொம்ப முக்கியமானவங்க டாட். அவங்களோட எல்லாமுமே அப்படி தானே”, மதுரன் கூற, அகரனும் தலையசைத்தான்.
“சரி….. இப்ப இவங்களுக்கு படிக்க சான்ஸ் கிடைச்சி இருக்கு ஒன் ஆப் த வேல்ர்ட் பெஸ்ட் யுனிவர்சிட்டில…. இவங்க படிக்க போனா உங்க கல்யாண வாழ்க்கை ஆரம்பிக்க லேட் ஆகும். சோ நீங்க என்ன முடிவு எடுக்க போறீங்க?”, மதன் சிரிப்புடன் கேட்டார்.
“கண்டிப்பா நதி படிக்க போவா அங்கிள். அது என் பொறுப்பு… அவளோட கனவ அவ அடைய எல்லா வகைலயும் நான் உறுதுணையா இருப்பேன். இது அவளுக்கு கிடைச்ச சான்ஸ்… அத என் நதி மிஸ் பண்ண நான் அனுமதிக்க மாட்டேன். நான் அவளோட சேத்து, அவளோட எண்ணம், கனவு, விருப்பு, வெறுப்பு எல்லாத்தையும் தான் நேசிக்கறேன்”, அகரன் தெளிவாக அழுத்தமாக கூறினான்.
“தட்ஸ் குட்… மது நீ என்ன சொல்ற?”, மதன் மதுரனைக் கேட்டார்.
“அது ஸ்டெல்லா முடிவு டேட். எனக்கு எந்த அப்ஜெக்சனும் இல்ல”,மதுரன் அவளின் விருப்பத்திற்கு விட்டான்.
“ஸ்டெல்லா நீ என்ன சொல்ற?”, மதன்.
“அப்ப என்னை நீங்க மருமகளா ஏத்துகிட்டீங்களா அங்கிள்?”, ஸ்டெல்லா மெதுவாக கேட்டாள்.
சுமித்ரா சிரித்தபடி எழுந்து வந்து அவளை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்தார்.
“இதுக்கு மேல உனக்கு சந்தேகம் இருக்கா ஸ்டெல்லா”, மதன் சிரித்தபடிக் கேட்டார்.
“தேங்க்யூ அங்கிள் ஆண்டி….”, என இருவரின் காலிலும் விழ எத்தனித்தவளை,” மது இப்ப நீ சந்தோஷமா சேர்ந்து ஆசிர்வாதம் வாங்கலாம்”, என மதன் கூற மதுரன் சிரித்தபடி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி பின் கட்டிக்கொண்டான்.
“சரி இப்ப சொல்லு.. என் மருமகள நான் படிக்க அனுப்ப போறேன். நீ என்ன சொல்ற?”, மதன்.
“நீங்க லண்டன்ல ஒரு பிராஞ்ச் ஸ்டார்ட் பண்ணணும்னு சொல்லிட்டு இருந்தீங்கள்ல, அத நான் அங்க போய் பாத்து செட் பண்ணிட்டு இரண்டு வருஷத்துல டாலையும் கூட்டிட்டு வரேன் டேட்”, என மதுரன் கூற அவ்விடம் சிரிப்பலையால் நிறைந்தது.
“கேடி படவா….”, என சுமித்ரா மதுரனை அடிக்க அவன் தாயை அணைக்க என சந்தோஷமான சூழ்நிலை உருவாகி இருந்தது.
இதைப் பார்த்து ஸ்டெல்லா , “தேங்க்ஸ் யாள்”, என அவளை கட்டிக்கொண்டாள்.
“லூசு…. ட்ரீட் எப்ப குடுக்க போற?”, நதியாள் அவளை அணைத்தபடி அடித்து கேட்டாள்.
“மனு சொல்வாரு”, ஸ்டெல்லா.
“பார்ரா… மனுவா ? செல்லப் பேரு… ஹம்ம்…. சரி அப்பா அம்மா கிட்ட கையோட பேசிடலாமா?”, நதியாள் கேட்டாள்.
“நானே பேசவா?”, மதன் கேட்டார்.
“இல்லப்பா நான் முதல்ல வீட்ல பேசிட்டு சொல்றேன். எதுவும் தப்பா தர்மசங்கடமா நடந்துடக்கூடாது”, என ஸ்டெல்லா முந்திக்கொண்டு கூறினாள்.
“பாத்தீங்களா என் மருமகள… எவ்வளவு அக்கறையா இருக்கா “, சுமித்ரா மனம்நிறைந்த மகிழ்வுடன் கூறினார்.
“நம்ம மக சுமி…. “, எனக் கூறி ஸ்டெல்லாவை அருகில் அழைத்து தன் தோளில் சாய்த்துக் கொண்டார் மதன்.
“சரிமா… நீயே பேசிட்டு சொல்லு. நீ தான் என் பையனுக்கு மனைவி இந்த ஜென்மத்துல…. அதுல இனி எந்த மாற்றமும் இல்ல”, என மதன் பரிபூரண சம்மதம் கூறினார்.
“சரிப்பா”, ஸ்டெல்லா.
“ஓக்கே டைம் ஆச்சி நாங்க கிளம்பறோம் ஆண்டி அங்கிள்”, நதியாள் கூறினாள்.
“அதுக்குள்ளயா ? இன்னும் டால் சாப்பிடல யாள்… “, மதுரன் சோகமாக கூறினான்.
“நீ உன் டால சாப்பிட வச்சி கூப்பிட்டு வா. நானும் நதியும் கிளம்பறோம். அங்கிள் ஆண்டி நாங்க போயிட்டு வரோம். இன்விடேசனோட சீக்கிரமே வரோம். எல்லாரும் எங்க ரிசப்ஷனுக்கு கண்டிப்பா வரணும்”, என அகரன் கூறிக்கொண்டு கிளம்பினான்.
“சீக்கிரம் வீடு போய் சேரு ஸ்டெல். மதுரன் இருக்கற ஸ்பீடுக்கு கொஞ்சம் ஜாக்கிரதையா இரு… பாய்”, என நதியாள் ஸ்டெல்லாவின் காதில் முணுமுணுத்துவிட்டு கிளம்பினாள்.
“நீயும் சீக்கிரம் வீடு போய் சேரு யாள். அப்பறம் ஊருல இருந்து மீனு கால் பண்ணுவாங்க . அதுக்குள்ள அங்க போயிடு. அண்ணா இன்னிக்கு உன்ன அவ்வளவு சீக்கிரம் விடமாட்டாருன்னு நினைக்கறேன். நீயும்……”, எனக் கூறி ஸ்டெல்லா சிரிக்க நதியாள் அவளை முதுகில் செல்லமாக அடித்துவிட்டு மற்றவர்களிடம் கூறிக்கொண்டு கிளம்பினாள்.
அதன்பின் நாட்கள் விறுவிறுவென கடக்க அவர்களின் ரிசப்ஷனும் வந்தது……