49 – அகரநதி
மறுநாள் விடியும் முன்னேயே தூக்கம் கலைந்து எழுந்த நதியாள் சத்தம் செய்யாமல் அகரன் இருக்கும் அறைக்கு சென்றாள்.
அகரனோ தலையனையை அணைத்தபடி, உதட்டில் உறைந்த புன்னகை மாறாமல் வளர்ந்த குழந்தையாக தூங்கிக் கொண்டு இருந்தான்.
அவன் அருகில் யாரும் இல்லாதது வசதியானது நதிக்கு. பின் அவன் தலைபக்கம் வந்து கீழே அமர்ந்து அவனையே கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அகரன்…… அவளின் அகன் …… அவளை முழுதாய் அறியாவிட்டாலும் அவளை புரிந்து கொண்டவரை உணரவும் செய்பவன்.
அவளின் சிறு சந்தோஷமும் அவனுக்கு பெரும் விழா, சிறு சுணக்கமும் அவனை வாட்டினாலும் அவளை சமாதானம் செய்து கெஞ்சி கொஞ்சி அவளின் மனநிலை மாற்றும் மாயவன்.
“அகன்…… உனக்கு நியாபகம் இருக்கா?”, எனக் கேட்டு அவனைப் பார்த்தாள்.
அவன் உறங்கிக்கொண்டிருக்கவும்,” நம்ம ஸ்கூல்ல நாம மீட் பண்ணது, சண்டை போட்டது, விளையாடினது…. இதுல்லாம் நேத்து நடந்தாமாறி இருக்குடா…. ஆனா இப்ப நமக்கு கல்யாணம் ஆகிரிச்சி. இத்தனை வருஷத்துல நான் உன் அன்பை மறக்கல. நீயும் மறக்கலன்னு தெரியும். நடுவுல சில நாள் பாக்கல ஆனா அது தான் நம்மல இப்ப அதிகம் நேசிக்க வைக்குது போல. நிறைய பேர் சொல்வாங்க காதல்ல பிரிவு தான் காதல பலப்படுத்தும்னு… அதை நிறைய டைம் நான் மறுத்து இருக்கேன் பிரிவு எப்படி பலப்படத்தும்னு…. ஆனா இப்ப அதை மனப்பூர்வமா உணர்றேன். இன்னமும் உன்கிட்ட என் காதல முழுசா சொல்லல. ஆனா எனக்கு எல்லாமா நீ மாறிட்ட…. உன் சில சுபாவம் மாறினாலும் அதுலயும் நீ என் மேல வச்சிருக்கற காதல் தான் நான் உணர்றேன் டா…. அகன்…. இந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமத்தான் உன்னை கூப்பிட்டேன். இப்ப என் அகம் முழுக்க நீ தான் இருக்க. என் புறமும் நீ தான் இருக்க. உன்னை நிறைய காதலிக்கணும், நிறைய சண்டை போடணும், நிறைய கெஞ்ச வைக்கணும், நிறையவே கொஞ்சவும் வைக்கணும்… இப்படி நிறைய ஆசை இருக்கு. நாம வாழற வாழ்க்கை நமக்கு திருப்தியா, சந்தோஷமா, நம்ம கனவு ஆசைன்னு எல்லாத்தையும் நிறைவேத்தி, நம்மல சுத்தி இருக்கறவங்களையும் சந்தோஷமா வச்சிக்கணும். அதிக சந்தோஷத்துல எனக்கு தூக்கம் தெளிஞ்சிரிச்சி அகன்… உன்னை பாக்கணும்னு ஆசையா இருந்தது அதான் வந்து இப்படி உன்கிட்ட பேசிட்டு இருக்கேன்… சரி நீ தூங்கு நாம விடிஞ்சப்பறம் பேசலாம். நீ சொன்னமாதிரி முக்கியமான வேலைகளை இன்னிக்கு முடிச்சிடலாம்”, என தன் மனதில் இருக்கும் அத்தனையும் சின்ன சிணுங்கல்கள், வெட்கம், காதல் என அனைத்தும் கலந்தபடி கூறி அவன் முன்நெற்றியில் இதழ் பதித்து எழுந்தாள் நதி.
அவள் எழும் சமயம் அவளை இழுத்து தன்மேல் போட்டுக் கொண்டான் அகரன்.
“அகன்…. நீ தூங்கலையா?”, என கண்கள் விரியக் கேட்டாள் நதி.
“நீ உள்ள வந்தப்ப முழிச்சிட்டேன். சரி நீ வந்தியே என்னை கொஞ்சுவன்னு பாத்தா பக்கம் பக்கமா வசனம் பேசிட்டு நெத்தில போனா போகுதுன்னு முத்தம் குடுத்துட்டு போற…. இத நான் ஒத்துக்க மாட்டான்”, என அகரன் அவளை தன்னருகில் நெருக்கியபடி பேசினான்.
“விடு அகன். எல்லாரும் எந்திரிக்கற நேரம். நான் போகணும்”, என நதியாள் அவனிடம் இருந்து விடுபட முனைந்தாள்.
“ம்ம்ஹூம்ம் … என்னை கொஞ்சிட்டு எங்க வேணா போ”, அகரன் பிடிவாதமாக அவளை அணைத்தபடிக் கூறினான்.
“இப்படி நீ பிடிச்சா உன்னை எப்படி கொஞ்ச முடியும்? கைய விடு.. தள்ளி படு…..”, என நதியாள் நெளிந்தாள்.
“அதுல்லாம் முடியாது…. இப்படியே என்னை கொஞ்சு…. நான் வேணா பழையபடி கண் மூடி படுத்துக்கறேன்”, என கண்கள் மூடி தலையை அவள் புறமாக வைத்துக் கொண்டான்.
“அச்சோ…. உன்னால இம்சை அகன்…. “, நதியாள் எரிச்சலுடன் கூறினாள்.
“இப்பதாண்டி என்னை பத்தி அவ்வளவு பேசின. உடனே இம்சைங்கற இப்ப”, அகரன் வம்பிலுத்தான்.
“அப்ப நீ சமத்தா இருந்த. இப்ப அப்படியா இருக்க? விடு என்னை முதல்ல”, நதியாள்.
“முடியாது”, அகரன் சிரித்தபடிக் கூறினான்.
“அப்பறம் நான் கத்தினா எல்லாரும் வந்துடுவாங்க டா”, நதியாள் மிரட்டிப்பார்த்தாள்.
“கத்து… கேட்டா நீ தான் என்னை தொந்தரவு பண்றன்னு சொல்லுவேன். ஏன்னா நான் உன் ரூமுக்கு வரல… நீ தான் என் ரூமுக்கு வந்திருக்க பேபி”, என அவளின் கன்னத்தில் இதழ் பதித்தான்.
“ஆமால்ல…. “, எனக் கூறி நதியாள் திருதிருவென விழித்தாள்.
அவள் விழிப்பதைக் கண்டவனுக்கு சிரிப்பு பொங்க சற்று சத்தமாக சிரிக்க ஆரம்பித்தான் அகரன்.
“ஸ்ஸ்ஸ்… சத்தமா சிரிக்காதடா…எல்லாரும் முழிச்சிக்க போறாங்க”, என அவனின் வாயை கைவைத்து அடைத்தாள்.
“கொலைகாரி…. என் மூச்ச நிறுத்த பாக்கற நீ”, என அகரன் அவளின் கைகளை தள்ளிவிட்டு அவள் எதிர்பாரா சமயம் அவள் இதழை அணைத்திருந்தான் தன் இதழ் கொண்டு.
முதலில் அதிர்ந்த நதியாள் எதிர்ப்பு காட்டியவள், பின் நொடிகள் கடந்த பிறகு அவனுள் புதைய ஆரம்பித்தாள்.
ஆழ்ந்த இதழணைப்பு நிகழ்ந்தபின்னும் நெற்றி, கன்னம் என ஊர்வலம் சென்றவன் மீண்டும் அவள் இதழில் தன்னை சங்கமித்துக்கொண்டான்.
இருவருக்குமே ஒருவரில் ஒருவர் அடைந்த நிம்மதி எழுந்து காமம் கலக்காத காதலின் பரிசுகளைப் பகிர்ந்துக்கொண்டனர்.
சில நிமிடங்கள் கடந்தபின் அகரன், ” நதிமா…. உன் ரூமுக்கு போலயா?”, என அவளின் இடையணைத்தபடிக் கேட்டான்.
“போகணும்…. “, என அவன் நெஞ்சத்தில் தஞ்சம் கொண்டபடிக் கூறினாள் நதி.
“இன்னிக்கு நம்ம வேலைய முடிச்சிடலாம்ல நதிமா?”, அகரன்.
“முடிச்சி தான் ஆகணும் அகன். சரி சீக்கிரம் ரெடி ஆகு. நான் போய் ரெடி ஆகறேன். எல்லாரும் ஊருக்கு கிளம்பறதுக்குள்ள செய்யணும்”, என மீண்டும் அவன் இதழணைத்துவிட்டு தன்னறைக்குச் சென்றாள் நதி.
அகரனின் மனமும் முகமும் சந்தோஷத்தில் குதூகளித்தது. பின் அவனும் தயாராகச் சென்றான்.
காலை 6.30 மணிக்குள் இருவரும் தயாராகி வெளியே வந்தனர்.
நதியாள் அழகாக எளிமையான புடவை அணிந்து, அதற்கேற்ற அணிகலன்கள் பூட்டி புதுமணப்பெண்ணாய் காட்சியளித்தாள்.
அகரன் பேண்ட் சர்ட் அணிந்து வெளியே வந்தவன் நதியாள் தலையில் பூவைத்தபடி சமையலறையில் பால் காய்ச்சிக் கொண்டு இருப்பதைக் கண்டு அவளின் செய்கைகளை இரசித்தபடி நின்றுக் கொண்டான்.
“என்னடா அதுக்குள்ள ரெடியாகிட்ட? “, எனக் கேட்டபடி திலகவதி வந்தார்.
“கொஞ்சம் வெளிய போற வேலை இருக்கு அத்தை. இந்தாங்க டீ. தாத்தாக்கு சக்கரை இல்லாம, மீனுக்கு டபுள் சக்கரை, மாமாக்கு காபி, பெரியம்மா எந்திரிச்சிட்டாங்களா?”, என அவருக்கு கொடுத்துவிட்டுக் கேட்டாள்.
“குளிக்க போய் இருக்காங்க டா. இதுல்லாம் நீ ஏன் இப்ப பண்ணிட்டு இருக்க? நான் பாத்துக்கறேன். அகரனுமா கூட வரான்?”, திலகவதி டீ குடித்தபடிக் கேட்டார்.
“ஆமாத்தை. அவர் இல்லாமையா….. நான் எல்லாருக்கும் குடுத்துட்டு வரேன் அத்தை நீங்க உட்கார்ந்து குடிங்க”, என அவரிடம் கூறிவிட்டு அனைவருக்கும் அவரவர் தேவையறிந்து கொடுத்துவிட்டு வந்தாள் நதி.
“அகன் உனக்கு காபியா? டீயா?”, நதியாள் கேட்டபடி அவன் அருகில் வந்தான்.
“எனக்கு தேன் கலந்த எதுவா இருந்தாலும் ஓக்கே பேபி”, என அவள் இதழ் காட்டிக் கூறினான்.
“ஒழுங்கா இதுல எதாவது எடுத்துக்குடி…. நான் அத்தைகிட்ட வெளியே போறோம்னு சொல்லிட்டிட்டேன். டிபன் போற வழில பாத்துக்கலாம்”, எனக் கூறி அவன் கையில் ஒரு கப்பை திணித்துவிட்டுச் சென்றாள்.
சிரிப்புடன் அவளைப் பார்த்தபடி தன் தாயருகில் வந்து அமர்ந்தான்.
“என்ன அகரா இவ்வளவு சீக்கிரம் போய் வேலை பாக்கணுமா? கொஞ்சம் நேரம் சேத்தி தூங்கலாம்ல?”, திலகவதி ஆதரவுடன் அவன் தலையை தடவியபடிக் கேட்டார்.
“ஆமாம்மா…. கொஞ்சம் அவசரம் …. வேலைய முடிச்சிட்டு வந்து சொல்றோம். நீங்க சாப்டுட்டு ரிலாக்ஸ் பண்ணுங்க”, அகரன்.
“ஊருக்கு கிளம்பணுமே கண்ணா…. எல்லாத்தையும் எடுத்து வைக்கணும்”, திலகவதி.
“ஊருக்கு பொறுமையா போய்க்கலாம் அத்தை . ஊருக்கு போனதும் ஒரு வேலை நீங்க செய்யணும்”, எனக் கூறியபடி வந்து அமர்ந்தாள் நதி.
“என்ன வேலைடா நதிமா?”, திலகவதி.
“நம்ம சரணுக்கு கல்யாணம் முடிவு பண்ணணும்”, நதியாள்.
“அவனுக்கு இப்ப என்ன அவசரம் யாள்குட்டி?”, எனக் கேட்டபடி பரமசிவம் வந்து அமர்ந்தார்.
“அதான் எனக்கு கல்யாணம் ஆகிரிச்சில்ல.. அவனுக்கும் செஞ்சி வெச்சிடலாம். பொண்ணு நான் பாத்துட்டேன். அவங்க தான் சரணுக்கு பொண்டாட்டி. யாரும் மறுக்க கூடாது”, என நதியாள் பரமசிவத்தைப் பார்த்துக் கூறினாள்.
செல்லம்மாளுக்கு தாமிரா நியாபகம் வந்து போனது ஒரு நொடி. பின் நதியாள் யாரைக் கூறுகிறாள் என்பதை தெளிவு செய்து கொள்ளலாம் என நதியாள் அருகில் அமர்ந்து,” யாருடா பொண்ணு?”, எனக் கேட்டார்.
“நம்ம தாமிரா தான். நம்ம ஸ்கூல் பழைய ஹெச். எம் பேத்தி. நம்ம ஊருல தான் டீச்சரா இருக்காங்க. என் பிரண்ட். நல்ல பொண்ணு …நம்ம சரணுக்கு சரியா இருக்கும்”, நதியாள் கூறிவிட்டு பரமசிவத்தைப் பார்த்தாள்.
“அவன் அந்த புள்ளை பின்னாடி நேத்து சுத்தறப்பவே நினைச்சேன்… அவன் உன்கிட்ட இதை சொல்லி தானே நீ பேசற யாள்குட்டி?”, பரமசிவம் உக்கிரசிவமாக மாறத்தொடங்கி இருந்தார்.
“மாமா…. சரண் சின்ன பையன் இல்ல. ஒரு கம்பெனிய நடத்தறான். அவனுக்கு விருப்பம்னா நேரடியா உங்க கிட்ட வந்து சொல்ல மாட்டானா என்ன? இது நாங்க முடிவு பண்ணது. இதுக்கும் அவனுக்கும் சம்பந்தம் இல்ல. தாமிரா சரண கட்டிகிட்டா நல்லா பாத்துப்பான்னு நதி சொன்னா , நானும் யோசிச்சி பாத்து சரின்னு சொல்லிட்டேன். அதான் உங்கள கேட்கறா…. நீங்க ஏன் தேவை இல்லாம சரணை திட்டறீங்க?”, அகரன் சமயம் பார்த்து உள்ளே புகுந்து விஷயத்தை தெளிவாக கூறுவதுப் போல குழப்பி விட்டான்.
“அதில்ல மாப்பிள்ளை… நான் அவங்க மாமாக்கு வாக்கு கொடுத்திருக்கேன்…. “, என பரமசிவம் ஒரு வெடியை வீசினார்.
“என்ன வாக்கு? யாருக்கு கொடுத்தீங்க?”, செல்லம்மாள் அதிர்ச்சியுடன் கேட்டார்.
“என் அத்தை மகனுக்கு தான்…. அவங்க குடும்பத்துல பொண்ணு எடுக்கறேன்னு… சொந்தம் விட்டு போயிடக்கூடாதில்லையா…. அதான் அவன் அன்னிக்கு பிரச்சினை பண்ணப்பவே இப்படி வாக்கு குடுத்துட்டேன் ஒரு பொண்ண எடுத்துக்கறேன்னு”, என விளக்கம் கொடுத்தார்.
“என்ன பெரியப்பா இது? அப்ப சரண் பண்ணது தப்பு தான். அதுக்காக இன்னிக்கு வரை நீங்க அவன்கிட்ட சரியா பேசறதில்லைன்னு வருத்தப்பட்டுட்டு இருக்கான். இப்ப இப்படி சொல்றீங்க? அவன் ….”, என மேலும் நதியாள் பேசப்போக அகரன் அவள் கைபிடித்து தடுத்தான்.
“யாருக்கு மாமா வாக்கு குடுத்தீங்க?”, அகரன்.
“உங்களுக்கும் தெரியும் மாப்ள….. உங்க அத்தை ஊருல இருக்காங்க அவங்க. அந்த குடும்பம்னு தான் சொன்னேன். பொண்ண குறிப்பிட்டு சொல்லல”, பரமசிவம்.
“சரி அத அப்பறம் பாத்துக்கலாம். நதிமா நீ கிளம்பு நாம வெளி வேலைய முடிச்சிட்டு வரலாம்”, என அகரன் நதியாளின் கரம் பற்றி அழைத்துச் சென்றான்.
“அகரா சாப்பிட்டு போப்பா…..”, என மீனாட்சி கூறியபடி வந்தார்.
“இல்ல பாட்டி. கொஞ்சம் அவசரவேலை வெளியே சாப்பிட்டுக்கறோம்”, என அகரன் கூறி நதியாளை இழுத்துக்கொண்டு சென்றான்.
“ஏன் அகன் இப்படி இழுத்துட்டு வர?”, நதியாள்.
“மண்டு மண்டு…. அவன் லவ் பண்ற விஷயத்த மட்டும் நீ ஒளரி இருந்த அவ்வளவு தான். வா அவன் விஷயத்த அப்பறம் பாத்துக்கலாம்”, என அகரன் கூறிவிட்டு நேராக நதியாள் தங்கி இருந்த வீட்டிற்குச் சென்றான்.
மதுரன் அங்கே வாசலிலேயே காத்திருந்தான் இவர்களுக்காக.
“என்னடா இங்க நிக்கற?”, அகரன்.
“நான் காலைல 4 மணிலேர்ந்து நிக்கறேன். நீங்க தான் லேட்டு”, என மதுரன் முறைத்தான்.
“டேய் நியாயமா பேசு டா. இப்பதான் மணி 7.15 ஆகுது…. நாலு மணிக்கு நீ வந்து நிக்கறன்னு நாங்க அவங்கள எழுப்பி அந்நேரத்துல பேசி குத்து வாங்கணுமா?”, நதியாள்.
“நீ பேசாத… அவனவன் அவஸ்தை அவனுக்கு தான் தெரியும்… போங்க. போய் முதல்ல ஆரம்பிங்க. ஓக்கேன்னா ஒரு சவுண்ட் குடு உடனே வந்துடறேன்”, என மதுரன் விடலைப்பையனைப் போல பேசினான்.
“என்ன அகன் இவன் இப்படி இருக்கான்?”, நதியாள் பரிதாபமாக முகத்தை வைத்துக்கொண்டு அவனைப் பரிகசித்தாள்.
“அகர் …. உன் பொண்டாட்டிய கூட்டிட்டு போயிடு… இல்லைன்னா இருக்கற டென்சன்ல அவளை கடிச்சி வச்சிடுவேன்”, என மதுரன் கூற அகரன் நதி இருவரும் சிரித்தனர்.
“போங்கடா…. “, என மதுரன் துரத்த சிரித்தபடி வீட்டிற்குள் நுழைந்தனர்.
“அடடே…. காலைலயே இந்த பக்கம் வந்திருக்கீங்க….என்ன வேலை யாள்?”, என திலீப் அருகில் வந்து கேட்டான்.
“உன்னை ப்யூன் வேலைல சேத்துவிடலாம்னு தான்”, நதியாள்.
“அதான் முருகன்ன இருக்காருல்ல அங்க”, திலீப்.
“அவருக்கு எடுபிடியா நீ இரு”, நதியாள்.
“வா யாள். வாங்கண்ணா….”, என மீரா அழைத்து உள்ளே சென்றாள்.
“மீரா ….ஸ்டெல்லா எங்க?”, நதியாள் அகரனுக்கு சைகை காட்டிவிட்டு மீராவுடன் செல்ல அகரன் திலீப்புடன் மாடிக்கு சென்றான்.
“என்னடி இந்த நேரத்துல வந்து இருக்கீங்க? எதாவது பிரச்சினையா?”, என மீரா கேட்டாள்.
“அதுல்லாம் ஒன்னுமில்ல மீரா… சும்மா தான். ஸ்டெல்லா ரெடி ஆகிட்டாளா?”, நதியாள்.
“குளிச்சிட்டு இருந்தா. நான் காபி போட வந்தேன். நீ குடிக்கறியா?”, மீரா பேசியபடி அனைவருக்கும் காபி கலக்கினாள்.
“நாங்க குடிச்சிட்டு தான் வந்தோம் மீரா. டிபன் சேத்தி பண்ணிடு. நானும் ஹெல்ப் பண்றேன்”, என நதியாள் கூற , மீரா அதிசயமாக அவளைப் பார்த்தாள்.
மீரா தன்னை ஆச்சரியமாகப் பார்ப்பதை பார்த்து,” ஏன்டி அப்படி பாக்கற?”, நதியாள்.
“இல்ல நீயா பேசின இப்படி?”, மீரா ஆச்சரியம் விலகாமல் கேட்டாள்.
“ஆமா நான் தான்… அதுக்கு ஏன் இப்படி பாத்து கேக்கற?”, நதியாள்.
“நீயா பேசியது என் அன்பே…. நீயா பேசியது”, எனப் பாட்டு பாடியபடி ஸ்டெல்லா உள்ளே வந்தாள்.
“என்னடி இரண்டு பேரும் என்னை கிண்டல் பண்றீங்க? இத்தனை நாள் கிட்சன் பக்கம் வரல தான். அதுக்காக எதுவும் தெரியாதுன்னு நினைச்சீங்களா? “, என நதியாள் இருவரையும் அடித்த படி துறத்தினாள்.
“அடடா….காலைலயே என்ன சத்தம் இங்க? வாவ்…. யாள் … நீயா இது? ஆமா உனக்கு கிட்சன்ல என்ன வேலை?”, எனக் கேட்டபடி ரிஸ்வானா வந்தாள்.
“ஹேய் ரிஸ் நீ இங்க தான் இருக்கியா? என்ன அதிசயம்?”, நதியாள் ரிஸ்-ஐ கட்டிக்கொண்டாள்.
“நான் மட்டுமில்ல உன் அண்ணாவும் தான் இருக்காரு”, ரிஸ்வானா சிரித்தபடி பதிலளித்தாள்.
“ஓஓஓ…….. “, என மீரா ஸ்டெல்லா நதி மூவரும் கோரசாய் கத்தினர்.
“சரி சரி என்னை ஓட்றது இருக்கட்டும். யாள் நீ கிட்சன்ல என்ன பண்ற?”, ரிஸ்வானா.
“நான் ஹெல்ப் பண்ணலாம்னு வந்தேன். உடனே என்னை ஓட்டாதீங்க எல்லாரும்”, நதியாள் செல்லமாக மிரட்டினாள்.
“சரி சரி…. வா டீ போடு”, என அனைவரும் அனைவருக்கும் தேவையானதை எடுத்துக்கொண்டு மாடிக்குச் சென்றனர்.
“என்ன சொல்றீங்க தம்பி? அதுக்காக நாங்க மதம் மாறி எங்க பொண்ண கட்டிக்குடுக்கனுமா?”, என ஸ்டெல்லாவின் தந்தை கோபமாக கேட்டார் அகரனைப் பார்த்து….