8 – மீள்நுழை நெஞ்சே
நீண்ட பெருமூச்சொன்றை இழுத்து விட்டவள் எழுந்து அறையை விட்டு வெளியே வந்து, அந்த சிறிய கூடத்தைத் தாண்டிய பால்கனி நோக்கிச் சென்றாள்.
அங்கிருந்து பார்த்தால் ஊட்டி மலைத்தொடர் கொஞ்சம் தூரமாகத் தெரிந்தது. பொதுவாகவே கோயம்புத்தூரில் குளிர் அதிகம் தான். சுற்றிலும் இருக்கும் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர் அந்த இடத்தைக் குளிமையாக வைத்திருந்தது.
நீர் வளம் நன்றாக இருப்பதனால் விவசாயமும் அங்கே நன்றாக இருந்தது. இப்போது நகரமாக மாறியதால் நகரத்தைச் சுற்றி உள்ள ஊர்களில் ஓரளவு விவசாயம் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது.
ஆனாலும் அந்த மண் அவளை ஏதோ செய்தது. மரத்து கிடக்கும் மனதிற்கு புத்துணர்ச்சிக் கொடுக்க முயற்சிக்கிறதா ? அவளை அவளுக்கே புதிதாகப் பரிட்சயப் படுத்தப்போகிறதா? பொறுத்திருந்து நாமும் காணலாம்..
“இன்னும் தூக்கம் வரலியா துவாரகா ?”, என்ற குரல் கேட்டதும் திடுக்கிட்டுத் திரும்பினாள்.
“இல்ல.. கொஞ்ச நேரம் நடக்கலாம்ன்னு வந்தேன்..”, என அவனுக்கு பதில் கூறிவிட்டு தனக்குக் கொடுக்கபட்ட அறை நோக்கித் திரும்பினாள்.
“நீங்க ஃப்ரீயா இருங்க.. நான் தூங்க போறேன்.. குட் நைட்“, என மென்னகையுடன் கூறினான்.
“குட் நைட்..”, எனக் கூறிவிட்டு அவளும் உள்ளே புகுந்துக் கொண்டாள்.
“ரொம்ப கஷ்டம் இவங்கள பேச வைக்கறது ..”, எனத் தனக்குள் முணுமுணுத்துக் கொண்டு முகிலமுதனும் சென்று உறங்கினான்.
இன்னும் இரண்டு நாட்கள் கழித்து அலுவலகம் சென்றால் போதும். அதற்கு முன் சில விஷயங்களை முன்னேற்பாடாக அறிந்து கொள்ள இன்றே கிளம்பினாள்.
“ஆண்ட்டி.. நான் ஆபீஸ் வரைக்கும் போயிட்டு வரேன்..”, எனக் காலையில் எழுந்ததும் தயாராகி வந்துக் கூறினாள்.
“இப்போவே வா ? இன்னும் ரெண்டு நாள் கழிச்சி தானே ஜாயின் பண்ணனும்ன்னு சொன்ன ராகா ..”, அன்பு அவளுக்கு டீ கொடுத்தபடிக் கேட்டார்.
“ப்ரீவியஸா பாக்க வேண்டிய விஷயம் கொஞ்சம் இருக்கு ஆண்ட்டி.. நான் பாத்துட்டு கொஞ்சம் ஊர் சுத்தி பாத்துட்டு வந்துடறேன்.. “, எனக் காலை உணவை வேண்டாம் எனக் கூறிவிட்டுக் கிளம்பினாள்.
எதிரில் பத்மினி தேவி இடுப்பில் கை வைத்து முறைத்தபடி அவளை வழிமறித்து நின்றார்.
துவாரகா அவரைப் பார்த்துவிட்டு அவரை விட்டு தள்ளி நடக்க முயல மீண்டும் அவள் முன் வந்து நின்றார்.
“ஆண்ட்டி..”, என துவாரகா முழிக்க, “டிபன் ரெடி.. சாப்டு எங்க வேணா போயிட்டு வா”, என அவளை கைப்பிடித்து இழுத்துக் கொண்டு வந்து டைனிங் டேபிளில் அமரவைத்தார்.
“இப்ப தான் ஆண்ட்டி டீ குடிச்சேன் உடனே என்னால சாப்பிட முடியாது..”, எனத் தயங்கித் தயங்கிக் கூறினாள்.
“காலைல வெறும் வயித்தோட கெளம்ப கூடாது துவாரகா.. கொஞ்சமா சாப்டு நீ வெளிய கூட நல்லா சாப்பிட்டுக்கோ ..”, எனப் பேசியபடியே இரண்டு இட்லி வைத்தார்.
அவரிடம் மறுத்து பேசமுடியாமல் துவாரகா அவசரமாக இரண்டு இட்லி சாப்பிட்டு விட்டு கைக்கழுவிக் கொண்டாள்.
“நான் தோசை கொண்டு வரதுக்கு முன்ன எந்திரிச்சிட்ட.. போதுமா உனக்கு?”, என மீண்டும் முறைத்தார்.
“போதும் ஆண்ட்டி.. டீ குடிச்ச உடனே சாப்பிட முடியாது.. நான் வரேன்..”, எனத் தனது கைப்பையை சரி பார்த்தபடிக் கிளம்பினாள்.
“டேய் முகில்.. துவாரகாவ டிராப் பண்ணிடு டா”, என அன்பு கூறினார்.
“வேணாம் ஆண்ட்டி.. நான் ஆட்டோல போயிக்கறேன்.. எனக்கும் கொஞ்சம் ஊர தெரிஞ்சிக்கணும்”, எனக் கூறிவிட்டு மறுவார்த்தைக்கு காத்திராமல் அங்கிருந்துச் சென்றாள்.
அவசரமாக நடக்கும் அவளைப் பார்த்தபடி வந்த முகில், ”ரொம்ப கஷ்டம் அரசிம்மா.. ஒரு வார்த்தை நின்னு பேச மாட்டேங்கறாங்க.. நான் அவங்கள கடத்திட்டா போயிடுவேன் இப்டி ஓடராங்க ..”, என அலுத்தபடிக் கூறினான்.
“அந்த பொண்ணுக்கு இஷ்டம் இல்ல அதோட விடு.. என்னை வீட்ல கொண்டு போய் டிராப் பண்ணு.. கொஞ்சம் திங்க்ஸ் எடுத்துட்டு வரணும்..”, எனக் கூறினார் பத்மினி.
“தி க்ரேட் பத்மினி தேவி நீங்களாவே போகலாம்.. வேர்ல்ட் டூர் போக ப்ளான் பண்றவங்களுக்கு, இங்க இருக்க வீட்டுக்கு போக தெரியாதா ?”, எனக் கூறிவிட்டு அவனும் தனியே கிளம்பிவிட்டான்.
“இவனுக்கு யாரு இத சொன்னது?”, என பத்மினி கேட்க, மித்ரா திருதிருவென்று முழித்தாள்.
“மினிம்மா.. கோவப்படக்கூடாது…”, என அசடு வழிந்தபடிச் சிரித்துக்கொண்டு முன்னே வந்தாள்.
“எல்லாத்தையும் ஒளறிட்டியா ?”, என்றபடி அவளை முறைத்தார்.
“சாரி மினிம்மா.. அவன் சென்னைல இருந்து கிளம்பின அப்றம் என்ன பண்ணினன்னு கேட்டான்.. நான் வரிசையா எல்லாம் சொல்றப்போ இதயும் சொல்லிட்டேன்..”, எனக் கூறிவிட்டு அவரைக் கட்டிக்கொண்டாள்.
“இனி அவன நான் என்ன சொல்லி கல்யாணம் செய்ய வைக்கறது? இதுக்கு தகுந்த எல்லா பதிலும் இனிமே ரெடியா அவன் வச்சி இருப்பான்.. போ மித்து ..”, என அவர் சோர்ந்து அமர்ந்தார்.
“அவன் மனசுக்கு பிடிச்ச பொண்ண பாத்தா அவனே சரின்னு சொல்லுவான் பேபி.. ரிலாக்ஸ்.. நான் மித்ராவ கூட்டிட்டு நம்ம வீடு வரைக்கும் போயிட்டு வரேன்.. உனக்கு என்ன எடுக்கணும் சொல்லு நாங்க எடுத்துட்டு வரோம்..”, என ராஜாங்கம் கூறியபடி அங்கே வந்தார்.
“இப்போவே வயசு முப்பதுங்க.. என்னமோ .. இதுல அவன கட்டாயப்படுத்தாம தானே நான் இவ்ளோ வருஷம் இருந்தேன்.. இதுக்கு மேலயும் தள்ளி போடறது நல்லா இல்லைங்க .. “, எனப் பேசிவிட்டு அவர் உள்ளே சென்று விட்டார்.
“உனக்கு எதுவும் எடுத்திட்டு வரவேணாமா பேபி?”, என ராஜாங்கம் கேட்டதும், “வேர்ல்ட் ட்ரிப் போக தெரிஞ்சவளுக்கு வீட்டுக்கு போகவும் தெரியும்.. நீங்க கெளம்புங்க..”, என உள்ளிருந்தே குரல் கொடுத்தார்.
“அவ்ளோ தான்.. இனி ஒரு வாரம் சரியா இருக்கும் பாரு.. “, என ராஜாங்கம் சிரித்தபடி மித்ராவை அழைத்துக் கொண்டுக் கிளம்பினார்.
“விகாஷ நான் பாத்துக்கறேன் நீ போயிட்டு வா மித்து .. லஞ்ச் வரதா இருந்தா எனக்கு முன்னயே சொல்லிடு..”, என அன்பு, மகள் அவரைப் பார்த்து நிற்கவும் கூறினார்.
மித்ரா மென்னகையுடன் தலையசைத்து விட்டுக் கிளம்பினாள்.
அங்கிருந்து கிளம்பிய துவாரகா, தான் செல்லவேண்டிய அலுவலகத்தை தேடிப்பிடித்துச் சென்றாள்.
பல நிறுவனங்கள் இயங்கும் அந்த ஐடி பார்க் உள்ளே சென்று, சரியான தகவலை கீழே பெற்றுக் கொண்டு மேலே சென்றாள்.
“குட் மார்னிங்.. ஐ ‘ம் துவாரகா .. வாண்ட் டூ மீட் யுவர் எம். டி ..”, எனக் கூறிவிட்டு தனது டிஜிட்டல் அடையாள அட்டையைக் காட்டினாள்.
“ஒன் மினிட் மேம் ..”, எனக் கூறிய வரவேற்பாளர், அவளை அங்கிருந்த ஷோபாவில் அமரச் சொன்னார்.
துவாரகா தனது நண்பன் வில்சன் அனுப்பிய அடிப்படைத் தகவலைப் பார்த்தபடி அமர்ந்து இருந்தாள்.
இடையில் இந்த பதினெட்டு மாதங்கள் அவள் வேலை செய்யாமல் இருந்தாலும் அவ்வப்பொழுது தனது நண்பர்களுக்கு உதவிக் கொண்டே இருந்ததால் இப்போது மீண்டும் பணியில் இணைந்து வேலை செய்யும் போது ஏற்படுகிற தடுமாற்றங்கள் சற்று இல்லாமல் இருந்தது.
அவள் வாழ்வில் இதில் மட்டும் தான் இப்போது தடுமாற்றம் இல்லை என்றும் கூறலாம்..
“மேம்.. எம். டி சார் இன்னும் வரல.. நீங்க மேனேஜர பாக்கலாம்.. அவர் உங்களுக்கு தேவையான டீடெயில்ஸ் சொல்லுவாரு.. “, என அந்த பெண் வந்துக் கூறினாள்.
“இல்ல.. ஐ வாண்ட் டூ மீட் யுவர் எம். டி .. ஆஃப்டர் தட் ஐ வில் கோ அஹெட் வித் த டீம்.. (i Want to meet ur M.D.. after tat i will go ahead with the team) “, எனக் கூறிவிட்டு மீண்டும் தனது லேப்டாப்பில் மூழ்கி விட்டாள்.
“ஓகே மேம்.. நீங்க எம். டி சார் ரூம்ல வெயிட் பண்ணுங்க”, என உள்ளே எம். டி அறைக்குச் செல்ல வழிக் கூறியனுப்பி வைத்தாள்.
வரவேற்பறைத் தாண்டி உள்ளே சென்றதும் துவாரகாவின் கால்கள் நடுங்கின. அத்தனை நேரம் இருந்த திடம் மறைந்து ஒரு வகையான பயம் அவளை ஆட்கொண்டது. மிகவும் சிரமப்பட்டு அதை வெளியே தெரியாமல் மறைத்துக் கொண்டு வேகமாக நடந்து வந்து, எம். டி அறையின் முன் இருந்த ஷோபாவில் அமர்ந்துக் கொண்டாள்.
அவளைக் கடந்து நிறைய பேர் அப்போது வந்து போய் கொண்டிருக்க, அதில் ஒருவன் அவளை குறுகுறு பார்வையில் குடைந்தபடி, அவளை மீண்டும் மீண்டும் சுற்றி வந்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
முன்பிருந்த துவாரகா என்ன செய்து இருப்பாளோ? இப்போது இருக்கும் துவாரகா அவனை நிமிர்ந்துப் பார்க்கவும் விரும்பவில்லை, பேசவும் விரும்பவில்லை.
தனது லேப்டாப்பில் மட்டும் கவனத்தைப் பதியவைத்தபடி, அவனையும் கவனித்துக் கொண்டு தான் இருந்தாள் அவன் அறியாமல்…
அவள் முகத்தை பார்க்கும் ஆவலில் அவன் அவள் முன் வந்து நின்று, “ஹலோ”, என்றான்.
“கிரண் .. நீ இங்க என்ன பண்ற ?”, என ஒரு பெண் குரல் கேட்டது.
“சரன பாக்கலாம்ன்னு வந்தேன்.. மேடம் புதுசா இருக்காங்க அதான் யாரு என்னனு விசாரிக்கலாம்ணு போனேன் .. அதுக்குள்ள ..”, எனச் சிரித்தபடிக் கூறினான்.
“எம். டி இன்னிக்கி கொஞ்சம் லேட்டா தான் வருவாரு.. நான் அவங்கள பாத்துக்கறேன் நீ உன் கேபின் போ..”, என அவள் கறாராகப் பேசி அவனை அங்கிருந்து அனுப்பினாள்.
“சரி.. பை ப்யூடி ..”, என அவன் இவளுக்கு டாடா காட்டியபடிச் சென்றான்.
“ஹாய்.. நான் அதிதி.. ரிசப்செனிஸ்ட் சொன்னாங்க.. வாங்க உள்ள போலாம்..”, என எம். டி அறைக்குள் அவளை அழைத்துச் சென்றாள் அந்த பெண்.
“ஹாய்.. ஐ ‘ம் துவாரகா..”, எனத் தன்னை அறிமுகம் செய்துக் கொண்டு, தனது கம்பெனி அனுப்பிய மெயிலை அவளுக்குக் காட்டினாள்.
“வெரி ஃபைன்.. எங்களுக்கும் உங்கள பத்தி மெயில் அனுப்பி இருந்தாங்க.. நீங்க ஜாயின் பண்ண இன்னும் ரெண்டு நாள் இருக்கு .. இப்போவே வந்துட்டீங்க ..”, எனச் சிரித்தபடி அதிதி பேசுவது துவாரகாவிற்கு சற்று ஆசுவாசமாக இருந்தது.
“கொஞ்சம் ஊர பத்தி தெரிஞ்சிக்கணும் …….. அதோட ப்ராஜெக்ட் எந்த அளவுல இருக்கு? இன்னும் சில டீடைல்ஸ் எனக்கு தேவைபடுது …. “, எனக் கூறிவிட்டு நிமிர்ந்துப் பார்த்தாள்.
” பைன்… கொஞ்ச நேரம் வைட் பண்ணுங்க… இந்த ப்ராஜெக்ட்ல எம்.டி தான் லீட்… சோ அவரு வந்து உங்களுக்கு வேண்டிய விவரங்கள குடுப்பாரு …. ஜூஸ் கொண்டு வர சொல்லவா துவாரகா?”
“ஐ ம் பைன் அதிதி… இப்பதான் சாப்டு வந்தேன்…. “
” எப்ப இங்க வந்தீங்க? வீடு பாத்துட்டீங்களா? ஆபீஸ்ல அரேஞ்ச் பண்ணட்டுமா?”, அதிதி மற்ற விவரங்கள் கேட்க ஆரம்பித்தாள்.
“என் ப்ரெண்ட் வீட்ல தங்கி இருக்கேன்… மேக்ஸிமம் இரண்டு மாசம் தானே… “, சீக்கிரம் வேலையை முடித்துக்கொண்டு நாட்டை விட்டு பறக்கும் ஆவல் தெரிந்தது அவள் பேச்சில்.
“பறக்குறதுலயே குறியா இருக்கீங்க போலவே துவாரகா…. டீம் பாவம் தான் போல”, என அதிதி கூறிவிட்டுச் சிரித்தாள்.
அப்போது……