9 – அர்ஜுன நந்தன்
பரிதி தான் கொண்டு வந்திருந்த பென்டிரைவை அங்கிருந்த கம்ப்யூட்டரில் கனெக்ட் செய்தாள்.
அதில் சேரலாதன், சந்தனபாண்டியன் மற்றும் சந்திரகேசவனின் சம்பந்தப்பட்ட தகவல்கள் இருந்தன. டிஐஜியிடம் பெற்றது மட்டுமின்றி, மேலும் சில தகவல்கள் அதில் சேர்க்கப்பட்டு இருந்தன.
பரிதி, “செந்தில் நீங்க சேரலாதன் போன வீடு இது தானே?”
செந்தில்,” ஆமா உனக்கும் லொகேசன் அனுப்பினேன்ல. இது அவன் வீடு தானே ?”
பரிதி ,”பரத் உங்களுக்கு இந்த வீட்ல இருக்கறவங்கள தெரியும் தானே?”.
பரத் சற்று அதிர்ந்து பின் ஆம் என ஒப்புக்கொண்டான்.
“சரி நீங்களே சொல்லுங்க அங்க யார பிடிச்சா நம்ம ஆளுங்கள உள்ள அனுப்ப முடியும்?”, பரிதி.
“சேரலாதனோட அக்கா வீடு இது. அக்கா புருஷன் செத்தப்பறம் சேரலாதன் உதவி செய்யறேன்னு உள்ள வந்து பெருசா வளந்துட்டார். அவங்களுக்கு ஒரே பொண்ணு இருக்கு. அந்த பொண்ண சேரலாதன் தன் மகனுக்கு கட்டி வைக்க முயற்சி பண்ணிட்டு இருக்காரு ஆனா அந்த பொண்ணு ஒத்துக்காம பிரச்சனை பண்ணிட்டு இருக்கு”,பரத்.
“ஏன்?”,செந்தில்.
“ஏன்னா அந்த பொண்ணு பரத்அ லவ் பண்ணிட்டு இருக்கு .சரி தானே பரத்?”, பரிதி.
பரத் திணறினான். பின்,”ஆமாம், அந்த சேரலாதன் அவங்க சொத்து மொத்தமா அவனுக்கு வரனும்னு கட்டாயப்படுத்திட்டு இருக்காரு. அந்த அம்மாக்கு சேரலாதன் பத்தி முழுசா தெரியாது. ரொம்ப சின்ன வயசுலயே புருஷன இழந்தப்ப தம்பி வந்து காப்பாத்தறான்னு சேரலாதன் பண்ற எதையும் கண்டுக்காம விட்டுடாங்க” .
“டேய் தம்பி, இவ்வளவு இன்பர்மேசன் வச்சிட்டு ஒன்னுமே தெரியாத மாதிரி என்கூட சுத்திட்டு இருந்தியே டா?” செந்தில்.
“சரி அந்த பொண்ணு பேரு என்ன? எப்படி பழக்கம்?”,பரிதி.
“பொண்ணு பேரு வெண்பா. இன்டர்காலேஜ் மீட்ல பாத்தோம். அப்ப இருந்து பழக்கம்”, பரத்.
“நல்ல பேர். அந்த வெண்பா குரூப் ஆப் கம்பனிஸ் இவங்களது தானா?”,செந்தில்.
“ஆமா சார். போன வருஷம் இவ அந்த கம்பனி சார்ஜ் எடுக்கறப்ப தான் அங்க நடந்த ஒரு சில தப்புகள் தெரிஞ்சது. என்ன ஏதுன்னு கேட்டதும் சேரலாதன் அவள வீட்ட விட்டு வெளியே போக்க் கூடாதுன்னு 3 மாசமா அடச்சி வச்சி இருக்கார். நானும் வெளிநாட்ல இருந்ததால ஒன்னும் பண்ண முடியல. எப்படியாவது அவள மீட் பண்ணனும் யோசிட்டு இருக்கறப்ப தான் பெரியப்பா என்கிட்ட இந்த கேஸ் பத்தி பேசினாரு நானும் சரின்னு வந்தேன்”, பரத்.
“ஏன்டா இங்க நாட்டுக்கு நல்லது பண்ண வந்து இருக்கன்னு நினைச்சா உன் வீட்டு நல்லதுக்கு தான் வந்தியா?” , செந்தில்.
“வீட்டுக்கு நல்லது பண்ணா அது நாட்டுக்கு பண்றது தான் செந்தில். நமக்கு வேணும்கிறத சொன்னா பரத் உடனே செய்யப் போறான்”,பரிதி.
“பரத் அங்க உன்ன யாருக்காவது தெரியுமா?”,பரிதி.
“சேரலாதன் பையன் என் போட்டோ பாத்ததா வெண்பா சொன்னா”,பரத்.
“இவன அனுப்ப முடியாது போலவே?”, செந்தில்.
“அந்த பொண்ணு மூலமா சேரலாதன் கிட்ட வேலைல யாரயாவது சேக்க முடியுமா?”, பரிதி.
“நான் ஊருக்கு வந்ததுல இருந்து இன்னும் அவள பாக்கல மேம். அவ மொபைல் நம்பர்ல இருந்து எல்லாமே மாத்திடாங்க . 3 மாசமா அவகிட்ட பேச முடியல. வெண்பாவ ஒரு டைம் பாத்து பேசிட்டா நமக்கு ஒரு பிகர் கிடைக்கும்”,பரத்.
“மொத்தத்துல உன் பிகர பாக்காம வேலை பண்ண மாட்ட ?!”, செந்தில்.
“நம்ம ரவுடி எப்ப இங்க வரா செந்தில்?” பரிதி.
“அய்யோ அவளா? அவதான் அந்த இன்னொரு ஏஜெண்ட் ஆ?”செந்தில்.
“ஏன் இவ்ளோ பயபடறீங்க செந்தில்?” பரிதி.
“அவ பண்ணிட்டு போன வேலைக்கு என் குடும்பத்த நான் காப்பாத்திக்க எவ்வளவு கஷ்டப்பட்டேன்னு எனக்கு தான் தெரியும்”, செந்தில்.
“அவளுக்கு தகுந்த ஒருத்தன மாட்டிவிட்றலாம் .இப்ப அவனுங்க பிளான் குப்பத்த காலி பண்றது கரெக்ட்?”, பரிதி.
“ஆமா”, பரத் மற்றும் செந்தில் கோரசாய் சொல்ல.
“அப்ப ஸ்பெஷல் விங்அ இப்பவே இறக்கனும்”, பரிதி.
“ப்ராப்பர் எவிடன்ஸ் இல்ல எப்படி அவங்க இத கைல எடுப்பாங்க? கஷ்டம் பரிதி. நம்ம சேம்பர்லயே இத ஒத்துக்க மாட்டாங்க”, செந்தில்.
“எல்லாம் கைமீறி போனதுக்கு அப்பறம் அவங்க வந்து என்ன பண்ண முடியும்? இங்க ஸ்டேட்ல கண்டிப்பா சப்போர்ட் கிடைக்காது. அவங்க குப்பத்த காலி பண்றதுக்குள்ள அவங்க உள்ள வந்தா தான் தடுக்க முடியும்”, பரிதி.
“இன்னும் ரெண்டு நாள்ல நீ வெண்பாகிட்ட பேசி என்ன நிலவரம்னு கேட்டு சொல்லு. நம்பர் உனக்கு நாளைக்கு காலைல வரும். அங்க ஒருத்தர் கண்டிப்பா உள்ள இருக்கணும். அதுக்கு ஐடியா பண்ணச் சொல்லு”, பரிதி.
“செந்தில் நீங்க உங்ககிட்ட இருக்கற லிஸ்ட்ல யாருக்கு எல்லாம் பணம் போக வாய்ப்பு இருக்குனு மார்க் பண்ணுங்க. ரெஜிஸ்டரர் ஆ மாத்த நான் ஏற்பாடு பண்றேன். இன்னிக்கு இருந்து மூனாவது நாள் நான் டெல்லிக்கு போறப்ப அந்த லிஸ்ட் வேணும். அங்க நான் போய் பேசி விங்அ கூட்டிட்டு வரேன்”, பரிதி.
“3 நாள்ள டெல்லி போறியா? பரிதி ரொம்ப அவசரபடர மாதிரி இருக்கு. 10 நாள் என்ன ஏதுன்னு பாத்துட்டு போய் சொல்லு. இப்ப தான் நாம ஆளுங்கள பாத்து இருக்கோம். இவங்களுக்கு யாரு ஹெட்னு தெரியாம என்ன ரிபோர்ட் குடுத்தா அவங்க வருவாங்க?”, செந்தில்.
“நான் கேக்கற டீம் தான் வரணும் செந்தில் அதுக்காக தான் இப்பவே போகணும்னு சொல்றேன்”, பரிதி.
“சரி முடிஞ்ச வரைக்கும் 2 நாள்ள யாருக்கு எவ்வளவு போகும்னு பாக்கறேன்”, செந்தில்.
“அந்த ரவுடி எப்ப வருவா?”,பரிதி.
“தெரியல. டீடைல்ஸ் மட்டும் நம்ம சேம்பர்ல வாங்கிகிட்டா போல மெஸேஜ் வந்தது. ஸ்பாட்ல ரிப்போர்ட் ஆகாம எப்படி இத அவளுக்கு குடுத்தாங்கனு தெரியல”, செந்தில் சற்று எரிச்சலுடன் கூறினான்.
“ஹாஹா உங்கள டென்ஷன் பண்ற ஒரே ஆளு அந்த ரவுடி தான். நல்லா ஜாலியா போகும் இந்த கேஸ்”, பரிதி.
“சிரிக்காத பரிதி. இந்த ரிஸ்க்கான கேஸ்ல அவள ஏன் போட்டாங்க? சொல்பேச்சு ஒன்னு கூட கேக்க மாட்டா”,சலித்துக் கொண்டு கூறினான் செந்தில்.
“யார் சார் அந்த ரவுடி?”, பரத்.
“வருவா அப்ப பாரு”, செந்தில்.
பரிதி சற்று யோசனையுடன் அமர்ந்து இருந்தாள்.
“பரத் வெண்பா போட்டோ காட்டு”, பரிதி.
பரத் தன் போனில் இருந்த போட்டோவைக் காட்டினான்.
“பொண்ணு நல்ல அழகு தான். இவளுக்கு க்ளோஸ் பிரண்ட்ஸ் யாராவது இருக்காங்களா? ” , பரிதி.
“ஒருத்தர் இருக்காங்க . தேனி பக்கம் ஊரு. இப்ப எம்.பி.ஏ அங்கயே பண்ணிட்டு இருக்காங்க. அந்த பொண்ணு மட்டும் தான் இவங்க வீட்டுக்கு வரும்”, பரத்.
“அந்த பொண்ணு பேரு என்ன?”,செந்தில்.
“நன்முகை இதழி”, பரத்.
“அழகான பேரு”,செந்தில்.
“சரி அந்த பொண்ணு பத்தி விசாரிச்சி இன்னிக்கு சாயந்திரம் சொல்லுங்க. இப்ப நான் கிளம்பறேன்”, பரிதி.
மணி 3 எனக் காட்டியது. செந்திலிடம் அந்தப் பென்டிரைவை வைத்துக் கொள்ளச் சொல்லிவிட்டு, மேலும் சில விஷயங்களை செந்தில் காதில் ஓதிவிட்டு வந்த வழியேச் சென்றாள்.
பைக்கில் சென்றவள் அதே போல் அந்த குடிசைக்கு அருகில் வண்டியை விட்டுவிட்டு
காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து தன் அறைக்கு சென்று உடையை மாற்றி படுத்து கொண்டாள்.
6 மணிக்கு எழுந்து மாடி பால்கனியில் நின்று சுற்றி நோட்டம் விட்டாள். நேற்று இரவு இருந்த அதே இடத்தில் இருவர் நிற்பதைப் பார்த்துப் புன்னகை புரிந்தாள்.
பின் குளித்து தயாராகி டிபன் செய்துவிட்டு போன்காலுக்காகக் காத்திருந்தாள்.
புது எண்ணில் இருந்து கால் வருவதைப் பார்த்து யோசனையுடன் எடுத்தாள்.
“ஹாய் டார்லிங். ஹௌ ஆர் யூ? உன்ன பாத்து எத்தனை மாசம் ஆகுது? ஐ ம் கம்மிங் டு சீ யூ. லவ் யூ டார்லிங்”, கைப்பேசியில்.
“பேசாத நீ . இன்னும் எங்க சுத்திட்டு இருக்க?”, பரிதி.
“அதுக்குள்ள சொல்லிடாங்களா?” ,கைப்பேசியில்.
அமைதியாக இருந்தாள் பரிதி.
“இங்க பாரு டார்லிங் உனக்காக தான் இந்த பிராஜெக்ட்அ கேட்டு வாங்கி இருக்கேன். கோவப்படாத. உன் வேலைய ஈஸி பண்ண தான் நான் இப்ப தேனில இருக்கேன்”, கைப்பேசியில்.
“உன்ன யாரு அங்க போகச் சொன்னா? முதல்ல நீ கிளம்பி இங்க வா”, பரிதி.
“முடியாது அந்த பொண்ணோட டீடைல்ஸ் கலெக்ட் பண்ணிட்டு நைட் செந்தில் வீட்ல பாக்கலாம். உன்ன கொல்ல டிரை பண்றாங்கலாமே .வந்து அவனுங்கள கவனிச்சிக்கறேன் டார்லிங். டேக் கேர். பாய்”, கைப்பேசியில்.
“ஹலோ… ஏய் ரவுடி…. வச்சிட்டாளா? இவள வச்சி எப்படி சமாளிக்கறது?”, யோசித்தபடிக் கீழே இறங்கினாள்.
தயாராக காத்திருந்த வாகனத்தில் தன் அலுவலகம் நோக்கி சென்றாள்.