வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ்..
இவங்க யாருன்னு நம்மல்ல நிறைய பேருக்கு தெரியும்-னு நினைக்கறேன் .. இவங்க அதிகமா பேசமாட்டாங்க ஆனா இவங்க கதை ரொம்ப பலமா பேசும் ..
இவங்க கதை கருவுக்கு ரொம்ப எல்லாம் யோசிக்க மாட்டாங்க, ஆனா படிக்கற நம்ம மண்டைல இருக்கற நாலு முடியும் நாமலே பிச்சிக்கற மாதிரி எதிர்பாராத திருப்புமுனை வைப்பாங்க .. “காதல்“ இது மட்டும் தான் இவங்க கரு, ஆனா வித விதமான காதல நம்மள உணரவைப்பாங்க .. யாருன்னு கண்டு பிடிசிங்களா?
வாங்க அவங்க கிட்ட பேசினா தெரிஞ்சிடும் ..
எழுத்துப்பயணத்தில் நம்முடன் இன்று….
1. புனைபெயர் – இல்லை (புனைபெயர் அவசியம் இல்லை னு வச்சிக்கல போல )
2. இயற்பெயர் – செல்வராணி
3. படிப்பு – B.E
4. தொழில் – இல்லத்தரசி
5. பிடித்த வழக்கங்கள் – தினமும் சிறிது நேரமாவது தனிமையில் பாடல் கேட்பது.
6. கனவு –
அனைவருக்கும் பிடித்த மாதிரியான அதே சமயம் வித்தியாசமான படைப்பு ஒன்றை படைக்க வேண்டும்.
7. உங்களுக்கு ஏற்பட்ட எழுத்தின் மீதான தாக்கம் என்ன?
சிலரின் எழுத்துக்களின் தாக்கம் பல நாட்களானாலும் மனதை விட்டு விலகுவதில்லை. கதையின் முடிவு
மனதிற்கு வருத்தத்தைக் கொடுக்கும் பட்சத்தில் ஏன் இப்படி அமைந்தது என்று கலங்கியதும் உண்டு.
8. உங்களின் வாசிப்பு அனுபவம் பற்றி –
வாசிக்க தொடங்கி விட்டால் முடிவு தெரியும் வரை விடுவதில்லை. இடையில் யாரேனும் தொந்தரவு செய்து விட்டால் நெற்றிக்கண்ணை திறக்கும் அளவிற்கு கோபம் கொள்வது.
9. உங்களை எழுத தூண்டியது எது?
பலரின் கதைகளை விரும்பி படிக்கும் பொழுது இது போல தனது கற்பனைகளுக்கும் உருவம் கொடுத்தால் என்ன என்று தோன்றியது.
10. எப்போது எழுத ஆரம்பித்தீர்கள்?
கல்லூரியில் படிக்கும் பொழுது.
11. உங்களது எழுத்தை படித்தவரிடம் அதன் தாக்கத்தை உணர்ந்தது உண்டா?
உண்டு.
12 . எழுத்தால் எதையும் மாற்ற முடியும் என்று நம்புகிறீர்களா ?
நிச்சயம் முடியும்.
13 . மின்னூல் , பதிப்பு புத்தகம் . இவற்றினைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
மின்னூலை விட பதிப்பு புத்தகமே சிறந்தது என்று எண்ணுபவள் நான். ஏனெனில் ஒரு எழுத்தாளருக்கு அடையாளமாய் இருப்பது பதிப்பு புத்தகம் தான். எனினும் இன்றைய நிலையில் ஒரு எழுத்தாளருக்கான அடையாளத்தை உருவாக்குவது மின்னூல் என்பது மறுக்க முடியாத உண்மை.
14. நீங்கள் பதிபித்த பதிப்பு புத்தகங்கள் எத்தனை ? (அவற்றை பெற தொடர்பு கொள்ள )
1. காதல் என்பது யாதெனில்.
2. நிலவில்லா நீலவானம்
வாட்சப் எண் – 9080515206
15. ஆடியோ புத்தகங்கள் மீதான உங்கள் பார்வை என்ன?
அதில் பெரியதாக ஈடுபாடு இல்லை.
16 . எழுத்தாளரின் வெற்றி என்பது எதன் அடிப்படையில் இருக்கிறது?
வாசகர்களின் மனதில் இந்த எழுத்தாளரின் கதையை துணிந்து படிக்கலாம் என்ற நம்பிக்கையை பெறுவதில் இருக்கிறது.
17 . உங்கள் படைப்பில் எதையாவது எழுதி இருக்க வேண்டாம் என்று எண்ணியதுண்டா ?
இல்லை.
18 . உங்களின் படைப்புகளில் எது உங்களுக்கான அங்கீகாரத்தை பெற்று கொடுத்ததாக நினைக்கிறீர்கள் ?
எனது முதல் கதை விக்ரம் வேதா.
19 . கதை கரு மற்றும் கதா பத்திரங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள் ? அதற்கான மெனக்கெடல் எந்த அளவிற்கு கொடுப்பீர்கள் ?
உண்மையை கூற வேண்டும் எனில் காதல் என்ற ஒரு வார்த்தையை வைத்து அதை வெவ்வேறு வகையில் கொடுக்க முயல்வதால் கதை கருவைப் பற்றி தனியாக யோசித்ததில்லை.
(twist மட்டும் தான் யோசிப்பாங்க போல )
20 . நீங்கள் பெற்ற போட்டி பரிசுகள் –
போட்டியில் கலந்து கொண்டது ஒரு முறை. அதற்கு கிடைத்த ஆறுதல் பரிசு பிரதிலிபி சின்னம் பதித்த டீஷர்ட்.
21. எதிர்வினை கருத்துக்களை எப்படி கையாள்கிறீர்கள்?
படிக்கும் போது வருத்தம் இருக்கும். எனினும் அக்கருத்திற்கு மதிப்பளித்து திருத்தி கொள்ளவே முயல்கிறேன்.
22 – நீங்கள் அதிகம் எழுத விரும்புவது எது ? (கதை , கவிதை, தொடர்கதை, நாவல் , சிறுகதை) ஏன் ?
நாவல்.
23. ஏன் மாறுபட்ட கதைக்கரு கொண்ட கதைகள் வாசகர்களை அதிகமாக சென்றடைவதில்லை?
பெரும்பாலும் காதல் கதைகளையே விரும்புவதால் கூட இருக்கலாம்.
24 . குடும்பம் காதல் சாராத கதைகளை நீங்கள் எழுதியது உண்டா? (படைப்பின் தலைப்பு)
இல்லை.
25 . அனைவரும் படிக்க வேண்டிய புத்தகங்களாக நீங்கள் கருதுவது என்ன என்ன?
பொன்னியின் செல்வன்.
26 . ஓர் படைப்பின் வார்த்தை அளவுகள் பற்றி உங்களது கருத்து என்ன?
மற்றவர்களுக்கு சலிக்காத வரையில் எழுதலாம்.
27 . எழுதுபவர்கள் பெறும்பாலும் பயன் அடைவதில்லை. அவர்கள் பயன்பெற நீங்கள் கூறும் சில யோசனைகள் என்ன?
எனக்கும் தெரியவில்லையே.
28. உங்கள் தனி தன்மை என்று தாங்கள் கருதுவது என்ன ?
பெரியதாக ஒன்றுமில்லை.
29. உங்களது கவிதை , பிடித்த வாக்கியம் , பழமொழி (பைனல் பஞ்ச்).
Be Positive and Think Positive
30 . உங்கள் படைப்புகள் (லிங்க்குகளுடன்) :
Amazon kindle :
https://www.amazon.com/author/selvaraninovels
பிரதிலிபி லிங்க் :
https://tamil.pratilipi.com/user/selva-rani-3cba2hwu9x
இவங்க கதைகளை கண்டிப்பா மிஸ் பண்ணக்கூடாது .. விக்ரம் – வேதா, மனம் போல் மாங்கல்யம் எல்லாம் படிச்சி பாருங்க..
மறுபடியும் நம்ம பயணத்துல இன்னொரு எழுத்தாளர சீக்கிரம் சந்திக்கலாம் ..