• About us
  • Contact us
Saturday, June 27, 2026
Facebook social icon Twitter X social icon Instagram social icon Pinterest social icon
Aalonmagari
  • Login
  • Register
  • Home
  • கதை
    • நாவல்
    • தொடர்கதை
    • சிறுகதை
  • கிறுக்கல்கள்
  • புத்தகம் வாங்க
  • நேர்காணல்
    • எழுத்தாளர் நேர்காணல்
    • வாசகர் நேர்காணல்
  • மகரியின் பார்வையில்
  • நாமளும் சமைக்கலாம் தப்பில்ல
  • English
    • Short story
No Result
View All Result
  • Home
  • கதை
    • நாவல்
    • தொடர்கதை
    • சிறுகதை
  • கிறுக்கல்கள்
  • புத்தகம் வாங்க
  • நேர்காணல்
    • எழுத்தாளர் நேர்காணல்
    • வாசகர் நேர்காணல்
  • மகரியின் பார்வையில்
  • நாமளும் சமைக்கலாம் தப்பில்ல
  • English
    • Short story
No Result
View All Result
Aalonmagari
No Result
View All Result

மீனாட்சி அடைக்கப்பன்

March 16, 2024
Reading Time: 2 mins read
0
இயல்புகள்

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் ..

இன்னிக்கி நம்ம பாக்க போரவங்களா அவ்ளோ ஈசியா  எல்லாம் ஒரு எடத்துல  பாக்க முடியாது.. ஏன்னா அவங்க பிரபஞ்சம் விட்டு பிரபஞ்சம் டிராவல் பண்ணிட்டே இருப்பாங்க.

அப்டி அவங்க டிராவல் பண்ணிட்டு நம்ம பூமிக்கு வந்தப்போ வலை போட்டு பிடிச்சி நம்ம பயணத்துல இணைச்சிட்டேன் .

யாருன்னு கெஸ் பண்ணிங்களா ?

இன்னும் தெரியலியா ? இவங்க எழுத்து நடைல நான் மயங்கி, இன்னிக்கி வரைக்கும் அந்த எழுத்தோட அவங்களையும் ரொம்ப பிடிச்சி போச்சி .. அவ்ளோ ஸ்வீட் அண்ட் லவ்லீ ஹார்ட் அவங்க ..

அவங்க கன்னக்குழி ல விழறத்துக்கு முன்ன, அவங்களோட கருந்துழை எழுத்துல நம்ம விழுந்து பல ஆயிரம் வருஷம் டிராவல் பண்ணி முன்னாடி , பின்னாடி னு போய்ட்டு வரலாம். இங்க போர் அடிச்சா வேற உலகத்துக்கு கூட இவங்க கூட்டிட்டு போவாங்க ..

வாங்க அவங்க வந்துட்டாங்க .. உள்ள போய் பாக்கலாம் ..

எழுத்துப்பயணத்தில் நம்முடன் இன்று…. 

1. புனைபெயர் – எதுவும் இல்லை.

2. இயற்பெயர் – மீனாட்சி அடைக்கப்பன்

3. படிப்பு – B.Tech Biotechnology

4. தொழில் – மென்பொருள் துறையில் பணி.

5. பிடித்த வழக்கங்கள் – வாசிப்பு, தற்பொழுது எழுத்து

6. கனவு – என் எழுத்து நான்கு பேரிடம் தாக்கத்தை ஏற்படுத்தினால் போதும்.

7. உங்களுக்கு ஏற்பட்ட எழுத்தின் மீதான் தாக்கம் என்ன?

என்னை பொறுத்தவரை எழுத்து எனக்கு பிடித்தமான ஒன்று. மனதிற்கு நெருக்கமான ஒன்று. படிக்கும்போது என்னோட கவலைகளை மறந்திடுவேன்.

8. உங்களின் வாசிப்பு அனுபவம் பற்றி –

பாலகுமாரன், கல்கி, சாண்டில்யன், சுஜாதா, அகிலன், அனுஷா வெங்கடேஷ், இந்திரா சௌந்தரராஜன் மற்றும் இன்னும் பலர். பட்டியல் நீண்டு கொண்டே போகும். ஆங்கிலத்தில் சேத்தன் பகத், ஸ்டெப்னி மேயர்.

9. உங்களை எழுத தூண்டியது எது?

என் எண்ணங்களை சமுதாயத்தில் எங்கும் வெளிப்படுத்த முடியாது போனதன் தாக்கமே எழுத்து.

10. எப்போது எழுத ஆரம்பித்தீர்கள்?

ஏப்ரல் 2019

11. உங்களது எழுத்தை படித்தவரிடம் அதன் தாக்கத்தை உணர்ந்தது உண்டா?

ஆம்.

12 . எழுத்தால்  எதையும் மாற்ற முடியும் என்று நம்புகிறீர்களா ?

அப்படி கூற முடியாது. ஆனால் இப்படியும் ஒரு கோணம் இருக்கிறது என்று எழுத்தின் மூலம் உணர வைக்கலாம். மாற்றம் என்றும் வாசிப்பவரைப் பொறுத்தது.

13 . மின்னூல், பதிப்பு புத்தகம். இவற்றினைப்  பற்றி  உங்கள் கருத்து என்ன ?

புத்தகம் ஏற்படுத்தும் தாக்கம் மின்னூல் ஏற்படுத்துவதில்லை என்பது என் கருத்து.

14. நீங்கள் பதிபித்த பதிப்பு புத்தகங்கள் எத்தனை ? (அவற்றை பெற தொடர்பு கொள்ள ) –

இரண்டு. 

திரௌபதி சபதம் 

தீரா வஞ்சம் தீர வாராயோ

வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. அவர்களை தொடர்பு கொண்டு வாங்கிக்கொள்ளலாம்.

தொடர்பு கொள்ள : 044 – 24342810

15. ஆடியோ புத்தகங்கள் மீதான உங்கள் பார்வை என்ன ?

நான் பெரிதாக ஆடியோ நாவல் கேட்டதில்லை.

16 . எழுத்தாளரின் வெற்றி என்பது எதன் அடிப்படையில் இருக்கிறது ?

பரிசும் , புகழும் எழுத்தாளரின் வெற்றி கிடையாது. நம் எழுத்துக்கள் ஏதோ ஒரு வகையில் வாசகரிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதுவே எழுத்தாளரின் வெற்றி.

17 . உங்கள் படைப்பில் எதையாவது  எழுதி இருக்க வேண்டாம் என்று எண்ணியதுண்டா ?

இல்லை.

18 . உங்களின் படைப்புகளில் எது உங்களுக்கான அங்கீகாரத்தை பெற்று கொடுத்ததாக நினைக்கிறீர்கள் ?

தீரா வஞ்சம் தீர வாராயோ, அற்றைத் திங்களில் கதை பெரும் வாசகர் வட்டத்தை சென்றயைடவில்லை என்றாலும், அதில் எனக்கு கிடைத்த அங்கீகாரம் என் மனதை நிறைத்தது.

19 . கதை கரு மற்றும் கதா பத்திரங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள் ? அதற்கான மெனக்கெடல் எந்த அளவிற்கு கொடுப்பீர்கள் ?

உண்மையில் விளக்கமாக சொல்லத் தெரியவில்லை. சில சமயம் கதைக் கருவை மையமாக கொண்டு, அதைச் சுற்றி கதாபாத்திரம் புனைவேன். சில சமயம் மனதில் தோன்றிய கதாபாத்திரம் கதையை புனையும்படி அமையும். பொதுவாக எனது கதையில் நிறைய தகவல்கள் இருக்கும். அதையெல்லாம் சரிபார்த்து, என் மனதிற்கு ஒப்புமை இருந்தால் மட்டுமே பதிவிடுவேன்.

20  . நீங்கள் பெற்ற போட்டி பரிசுகள் –

பிரதிலிபியில் கிடைத்த பரிசுகள்

வரமாய் வந்த தேவதை நீ

காவியத் தலைவி வேலு நாச்சியார்

ஒரு கோப்பைக் காஃபி.. கொஞ்சம் காதல்

மோப்பக் குழையா அனிச்சம்

அற்றைத் திங்களில்

கவிதை உறவு நடத்திய இலக்கிய மன்ற விழாவில் திரௌபதி சபதம் என்னும் நாவலுக்கு மூன்றாம் பரிசு கிடைத்தது.

21. எதிர்வினை கருத்துக்களை எப்படி கையாள்கிறீர்கள்?

காரணம் கூறாமல் சாடியிருந்தால் கடந்து சென்றுவிடுவேன். காரணத்துடன் விளக்கியிருந்து, அதில் தவறும் இருந்தால், நிச்சயம் மாற்றிக் கொள்வேன்.

22  – நீங்கள் அதிகம் எழுத விரும்புவது எது ?

(கதை , கவிதை, தொடர்கதை, நாவல் , சிறுகதை)  ஏன் ?

அனைத்தும்.. 

23 – ஏன் மாறுபட்ட கதைக்கரு கொண்ட கதைகள் வாசகர்களை அதிகமாக சென்றடைவதில்லை?

இது ஆன்லைன் வாசகரை மட்டும் கருத்தில் கொண்டு கேட்கப்பட்ட வினா. மாறுபட்ட கதைகள் அனைவரையும் சென்றடைய காலம் பிடிக்கும். கமல்ஹாசனின் அன்பே சிவம் போல்.

24 .  குடும்பம் காதல் சாராத கதைகளை நீங்கள் எழுதியது உண்டா? (படைப்பின் தலைப்பு)

நிறைய.‌.. அறிவியல், சரித்திரம், திகில் மற்றும் மர்மம் எழுதியிருக்கிறேன்.

25 . அனைவரும் படிக்க வேண்டிய புத்தகங்களாக நீங்கள் கருதுவது என்ன என்ன?

பதில் தெரியவில்லை. அவரவர் மனநிலையைப் பொறுத்தது.

26 .  ஓர் படைப்பின் வார்த்தை அளவுகள் பற்றி உங்களது கருத்து என்ன?

அந்த படைப்புக்கு‌ எவ்வளவு தேவையோ அவ்வளவு.

27  . எழுதுபவர்கள் பெறும்பாலும் பயன் அடைவதில்லை.

அவர்கள் பயன்பெற  நீங்கள் கூறும் சில யோசனைகள் என்ன?

கடமையை செய். பலனை எதிர் பார்க்காதே.

28  . உங்கள் தனி தன்மை என்று தாங்கள் கருதுவது என்ன ?

மொழியைக் கையாளும் விதம். இன்றளவு எனக்கு இருக்கிறது என்று நினைக்கிறேன். ஆனால் இன்னும் தெரிந்து கொள்ள வேண்டும்.

29 .  உங்களது கவிதை , பிடித்த வாக்கியம் , பழமொழி (பைனல் பஞ்ச்).

நான் எழுதியதில் பிடித்த கவிதை

நிலா முற்றம்

இளகிய வெளிச்சம்

அலையும் தென்றல்

இருண்ட வானம்

திரண்ட மேகம்

உருண்ட இடிகள்

மருண்ட மரங்கள்

உதிர்ந்த செம்மல்

அழகாய்‌ நீ

அரணாய் நான்

வெள்ளைக் காகிதம்

உதிர்ந்த முத்து

மரபு கவிதை

மயங்கொலி சொற்கள்

அணி இலக்கணம்

இயைந்த பாக்கள்

பொருண்மை நீ

சந்திப்பிழை நான்

மார்கழி மாதம்

கூதிர்‌ காலம்

உறையும் பனி

ஊதைக் காற்று

உலர்ந்த தேகம்

ஊரும் கண்மாய்

படித்துறை நீர்

கால் நனைக்க நீ

சிலிர்க்க நான்

அந்தகாரம்

மஞ்சள் விளக்கு

நலுங்கிய இரவு

நாயின் ஓலம்

வேக நடை

இரையும் நிசப்தம்

கரையும் நேரம்

மருகிய தனிமை

இருகிய தசைகள்

நடுங்கும் திரேகம்

அச்சம் நீ

தவிர்க்க நான்

வாழை இலை

அறுசுவை ஊண்

வகைக்கொரு பட்சனம்

மணக்கும் சுவை

சுரந்த உமிழ்நீர்

பசியாய் நீ

பரிமாற நான்

நெடுந் தூரம்

நீண்ட பயணம்

களைத்த வதனம்

சளைத்தப் பார்வை

வலித்தக் கால்கள்

சலித்தப் புன்னகை

அலுத்த தேகம்

இன்னிசை நீ

கசிந்துருகி நான்.

அந்தி மாலை

மலை முகடு

மறையும் ஞாயிறு

சிவந்த வானம்

வீசியெறிந்த செம்மை

பொழியும் எழில்

பகலின் நிழல்

திங்கள் நீ

இருள்‌ நான்.

மல்லிகைப் பந்தல்

வெடித்த மொட்டு

அலர்ந்த மலர்

அரும்பிய வாசம்

மயங்கிய மாலை

மங்கும் பொழுது

பறிக்க நீ

சூட நான்.

நீலக்கடல்

சலித்த மணல்

அலையின் பேரரவம்

மீட்சியற்ற மோதல்

கரைந்த மணற்கோட்டை

மேலெழுந்த சுடரோன்

சுண்டியிழுக்கும் எழில்

இமையாமல் நீ 

இழைய நான்.

மரகத வயல்

கார் காலம்

மன்‌ வாசம்

துளிர்த்த விதை

முளைத்த நெல்

அகண்ட கிணறு

களையெடுக்க நீ

கதிரறுக்க நான்

தென்னங் கீற்று

ஒழுகும் நிலவு

வழியும் இரவு

நெளியும் சுனை

பொழியும் காற்று

கசியும் ஓசை

களையும்‌ மேகம்

சிலிர்த்த சாரல்

கயிற்றுக் கட்டில்

தாலாட்டு நீ

இமையடைத்த நான்

தீர்த்தக் கரை

தெவிட்டா வேளை

பௌர்ணமி நிலவு

இமைக்கும் வின்மீண்

நிசியின் வனப்பு

மூச்சின் கணப்பு

களவாடிய பொழுது

அசையும் மரங்கள்

இசையும் காற்று

நடுவில் ஓடம்

துடுப்பாய் இரவு

வலிக்க நீ

சுகிக்க நான்

இருள்‌ சூடிய குழல்

பெருவெடிப்பு வகிடு

வெட்டி வைத்த நிலவு

வின்மீண் பொட்டு

கருந்துளை விழிகள்

மேகத்துண்டு கன்னம்

பால்வெளி அதரம்

வெட்கத்தில் நீ

விகல்பமாய் நான்

கூழாங் கற்கள்

ஆற்றுப் படுகை

இளம் வெயில்

செங்கதிர் செறிவு

குளிர்காயும் நீர்

தெறிக்கும் ஒளி

கல்லெறிய நீ

ரசிக்க நான்

 

30 . உங்கள் படைப்புகள் (லிங்க்குகளுடன்)   (Youtube also ):

Amazon kindle :

https://www.amazon.in/s?i=digital-text&rh=p_27%3AMeenakshi+Adaikappan&s=relevancerank&text=Meenakshi+Adaikappan&ref=dp_byline_sr_ebooks_1

 

பிரதிலிபியில் என்னை ஃபாலோ செய்ய :

https://tamil.pratilipi.com/user/t86z0c7j89?utm_source=android&utm_campaign=myprofile_share

 

இவங்களோட கதைகள் எல்லாமே வித்யாசமான கதை கருவோடவும், அவங்க எழுத்து நடை நம்ம தமிழ் மொழியோட அழகு, ஆழம், நயம், லயம்-னு எல்லாமே காட்டும். வெறும் கற்பனையா சொல்லாம நிறைய அறிவியில் ரீதியான எடுத்து காட்டோட சொல்றது தான் இவங்க தனி தன்மை-னு சொல்லலாம் .

பிறழ்ச்சி கோணங்கள இவங்க காட்டுற விதம் தான் நம்மள அவங்க எழுத்து மேல நிச்சயம் காதல் செய்ய வைக்கும். நான் காதல் செய்ற எழுத்துக்கள், இப்போ உங்களுக்கும்  ஆரவாரமா  தூக்கி காட்டி சந்தோஷப்படறேன்.

நீங்களும் இவங்க எழுத்த படிச்சி காதல் பண்ணுங்க .. இவங்க ஒரு சரித்திர நாவல் எழுத்திட்டு இருக்காங்க .. சீக்கிரமே அதை அவங்க முடிச்சி புத்தகமா வரணும் . புத்தகத்துல தான் நானும் படிக்கணும்-னு அந்த ஒரு கதை மட்டும் படிக்காம ஏக்கமா பாத்துகிட்டு  இருக்கேன்..

“ஸ்வர்ண பூமி “ அந்த கதை  தலைப்பு. உங்க முயற்சிகள் எல்லாம் வெற்றி பெறணும்  அதுக்கு நாங்க பிரார்த்தனை செஞ்சிக்கிறோம். சீக்கிரம் அந்த புக் போற்றுங்க மீனுக்கா ..

இவங்களோட நம்ம பயணம் உங்களுக்கு பிடிச்சி இருக்கும்னு நெனைக்கறேன் .. அடுத்து ஒரு  தைரியமான எழுத்தாளரோட சீக்கிரமே வரேன் ….

Click to rate this post!
[Total: 0 Average: 0]
What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Facebook Twitter Email
Post Views: 3,142

aalonmagarii

Subscribe
Login
Notify of

0 Comments
Newest
Oldest

About Me

Aalonmagari

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Categories

  • English (5)
  • Food Recipes (3)
  • Short story (2)
  • இன்னும் பல .. (5)
  • எழுத்தாளர் நேர்காணல் (31)
  • கதை (388)
  • கிறுக்கல்கள் (107)
  • சிறுகதை (10)
  • தொடர்கதை (168)
  • நாமளும் சமைக்கலாம் தப்பில்ல (7)
  • நாவல் (212)
  • நேர்காணல் (56)
  • புத்தகம் வாங்க (9)
  • மகரியின் பார்வையில் (5)
  • வாசகர் நேர்காணல் (25)

Popular

  • இயல்புகள்

    தேன் நிலா

    564 shares
    Share 226 Tweet 141
  • 1 – அகரநதி

    508 shares
    Share 202 Tweet 127
  • 1 – அர்ஜுன நந்தன்

    485 shares
    Share 194 Tweet 121
  • 1 – வலுசாறு இடையினில் 

    457 shares
    Share 182 Tweet 114
  • 1 – காற்றின் நுண்ணுறவு

    400 shares
    Share 160 Tweet 100
  • Terms & Conditions
  • Privacy Policy
Email us : aalonmagari@gmail.com

Copyright © 2026. Aalonmagari. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • கதை
    • நாவல்
    • தொடர்கதை
    • சிறுகதை
  • கிறுக்கல்கள்
  • புத்தகம் வாங்க
  • நேர்காணல்
    • எழுத்தாளர் நேர்காணல்
    • வாசகர் நேர்காணல்
  • மகரியின் பார்வையில்
  • நாமளும் சமைக்கலாம் தப்பில்ல
  • English
    • Short story
  • Login
  • Sign Up
Facebook social icon Twitter X social icon Instagram social icon Pinterest social icon

Copyright © 2026. Aalonmagari. All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Please wait...

Subscribe to our newsletter

Want to be notified when our article is published? Enter your email address and name below to be the first to know.
SIGN UP FOR NEWSLETTER NOW
error: Content is protected !!
wpDiscuz
0
0
Would love your thoughts, please comment.x
()
x
| Reply