வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் ..
இன்னிக்கி நம்ம பாக்க போற அந்த சூப்பர் எழுத்தாளர் ..
இவங்க கதைகள் எல்லாமே ஷார்ட் அண்ட் ஸ்வீட் ஆக கொண்டு போவாங்க .. இன்னொரு முக்கியமான சிறப்பா இவங்க தமிழ் மொழிய கையாள்ற விதம் எனக்கு ரொம்ப பிடிக்கும் ..
ஆங்கில கலப்பு அதிகம் இருக்காது ஆனா நம்ம வழக்கு மொழிய அருமையா குடுப்பாங்க ..
இவங்க வாங்காத பொங்கல் இல்லைங்க .. ஆனா எத்தன பேரு எப்படி வேணா வைங்க என் எழுத்துல எண்ணத்துல எந்த தப்பும் இல்லை .. யாருக்காகவும் என் அடிபடை குணத்த மாத்திக்க மாட்டேன்னு கெத்தா நிப்பாங்க ..
இவங்க கதைகளும் அத விட கெத்தா பேசும் ..
யாருன்னு கண்டுபிடிச்சிங்களா ?
வாங்க உள்ள போய் பாக்கலாம் ..
எழுத்துப்பயணத்தில் நம்முடன் இன்று….
1. புனைபெயர் இல்ல.. pen name Gowri Muthukrishnan
2. இயற்பெயர் – கௌரி சங்கரி
3. படிப்பு – B.sc
4. தொழில் – Graphic visualizer
5. பிடித்த வழக்கங்கள் –
புத்தகம் வாசிப்பது, வரைவது, வீட்டை அலங்காரம் செய்வது, பிக்சர் கலெக்சன்.
6. கனவு –
யாருக்கும் தொந்தரவும் சுமையும் தராத வாழ்வு என்னவரோடு 💜
7. உங்களுக்கு ஏற்பட்ட எழுத்தின் மீதான் தாக்கம் என்ன?
தாக்கம் வந்தது எழுத வந்த பின் தான், ஆரம்பிக்கும் போது நல்லதை சொல்லணும் என்ற எண்ணம் மட்டும் தான். என் எழுத்து பிறருக்கு உதவவும் தான் பிடிப்பு, தாக்கம் அனைத்தும் வந்தது.
8. உங்களின் வாசிப்பு அனுபவம் பற்றி –
நான் எழுத்தாளர் கல்கி, எழுத்தாளர் ராஜேஷ் குமார், எழுத்தாளர் ராகா மூவருக்கும் பெரிய விசிறி. மூவரின் கதைகளும் தான் என் பெரிய வாசிப்பு. இப்போது எழுத வந்த பின் தமிழ் மதுரா, ஶ்ரீ, யாழ் சத்யா, சுகமதி, ஶ்ரீ கலா, ஸ்ருதி வினோ, ராஜலட்சுமி நாராயணசாமி, ரியா மூர்த்தி, பூர்ணிமா கார்த்திக், ஜானு நவீன், வநிஷா என விருப்ப எழுத்தாளர்கள் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
9. உங்களை எழுத தூண்டியது எது?
என்னுடைய மற்றும் என் உடன் இருந்தோர் செய்த சரியையும், தவறையும் பிறருக்கு சொன்னால் அது அவர்களுக்கு உதவும் என்ற எண்ணத்தில் அதை கதையாக எழுத வந்தேன். இன்று வரை எண்ணம் போல் எழுத்து அமைந்து நிறைய பேரின் வாழ்வில் மாற்றம் செய்து உள்ளது.
10. எப்போது எழுத ஆரம்பித்தீர்கள்?
2018 செப்டம்பர் 26
11. உங்களது எழுத்தை படித்தவரிடம் அதன் தாக்கத்தை உணர்ந்தது உண்டா?
கள்வனின் கண்மணி பாகம் 1 &2, நாயகன் பாகம் 1&2, அவள் வந்துவிட்டாள், ஆரலி, நிறைவென்பது நீ, இல்லறம் நல்லறமாக பாகம் 1 & 2 என இப்படி நிறைய கதை வாசித்து என்னுடன் அவர்களின் உணர்வுகளை பகிர்ந்து கொண்டவர்கள் உண்டு.
12 . எழுத்தால் எதையும் மாற்ற முடியும் என்று நம்புகிறீர்களா ?
எழுத்தால் மாற்றம் வரும் என்பது உண்மை. அதை நான் நம்பவும் செய்கிறேன். ஆனால், வாசிப்பவரின் மன மாற்றம் என்பது அவரின் மனநிலை பொறுத்தும் தான்.
13 . மின்னூல் , பதிப்பு புத்தகம் . இவற்றினைப் பற்றி உங்கள் கருத்து என்ன ?
பதிப்பு புத்தகம் என்பது எழுத்தாளர் அனைவருக்கும் பெரும் கனவு. ஆனால் புது எழுத்தாளர்களுக்கு அதிக அங்கீகாரம் இல்லாத, கிடைக்காத இடம். புத்தகம் படிப்பது எளிதான ஒன்று இல்லை இந்த 2021 ஆம் ஆண்டிலும் அதனால் தான் அது பலருக்கு கனவாக உள்ளது.
மின்னூல் இல்லாது புது எழுத்தும் எழுத்தாளர்கள் கிடைத்து இருக்க மாட்டார்கள். பாரபட்சம் இன்றி அனைவருக்கும் எழுத வாய்ப்பு கிடைக்கிறது. அதோடு எப்போது எங்கு வேண்டும் என்றாலும் வாசிக்க முடியும் என்பது இதன் இன்னொரு சிறப்பம்சம்.
14. நீங்கள் பதிபித்த பதிப்பு புத்தகங்கள் எத்தனை ?
22 நாவல்கள்
NOTION PRESS :
https://notionpress.com/author/220142
15. ஆடியோ புத்தகங்கள் மீதான உங்கள் பார்வை என்ன ?
ஆடியோவில் கேட்பார்களா என்ற எண்ணம் இருந்தது உண்மை. ஏன் என்றால் எனக்கு வாசிக்க தான் பிடிக்கும். ஆனால் என்னுடைய நாவலுக்கு பாக்கெட் எப்எம் உள்ளே கிடைத்த வரவேற்பு தான் ஆடியோ நாவலும் சிறந்து என்ற எண்ணத்தை தந்தது. ஆடியோ நாவலுக்கு முக்கியம் குரல். என் நாவல்கள் அபர்ணா குரலில் அருமையாக வந்து உள்ளது.
16 . எழுத்தாளரின் வெற்றி என்பது எதன் அடிப்படையில் இருக்கிறது ?
எழுத்துக்கு வெற்றி வாசித்தவரின் மன மாற்றம். அவரின் வாழ்வில் உங்களின் வரிகள் செய்யும் சிறு சலனம் தான் எழுத்தாளரின் வெற்றி.
17 . உங்கள் படைப்பில் எதையாவது எழுதி இருக்க வேண்டாம் என்று எண்ணியதுண்டா ?
நாயகன்
ஏன்டா எழுதினோம் நினைச்சதும் அதை தான்..
அதை எழுதாம போய் இருந்தா எனக்கு நிறைய விஷயம் தெரியாம போய் இருக்கும் என நிசைச்சதும் அதை தான்.
18 . உங்களின் படைப்புகளில் எது உங்களுக்கான அங்கீகாரத்தை பெற்று கொடுத்ததாக நினைக்கிறீர்கள் ?
கள்வனின் கண்மணி பாகம் 1 மற்றும் 2
19 . கதை கரு மற்றும் கதா பத்திரங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள்? அதற்கான மெனக்கெடல் எந்த அளவிற்கு கொடுப்பீர்கள்?
என் கதையும் அதற்கான கருவும் நேரடியாக மனிதர்களிடம் இருந்து அவர்களின் அனுமதியுடன் பெறப்படுகிறது. மனிதர்கள் உடன் நிறைய பேசுவது தான் கதைக்கான கரு கிடைக்க நான் செய்யும் பெரிய மெனக்கெடல். அப்புறம் அழுகை. சில கதைகள் கேட்கும் பொது நெஞ்சு வலிக்கும். சமீபமாக அப்படி அழுதது அருவியின் வாழ்வை கேட்டு, நிறைவென்பது நீ நான் எழுதிய கதைகளில் என்னை அதிகம் அழ வைத்தது. அதுபோக கதைக்கு என தேடும் தகவல்கள். நான் கதைக்கு தேவையான தகவல்களை திரட்டி முடித்த பின் தான் எழுத அமருவேன் என்பதால் கதைக்கு முன்னரே கதை என்னுள் தயாராகி இருக்கும். வார்த்தைகளாக மாற்றுவது தான் என் இறுதி வேலையாக இருக்கும்.
20 . நீங்கள் பெற்ற போட்டி பரிசுகள் –
ஆரலி கதைக்காக பிரதிலிபியின் மறுபடியும் போட்டியில் பெற்ற ஆறுதல் பரிசு.
21. எதிர்வினை கருத்துக்களை எப்படி கையாள்கிறீர்கள்?
ஜூலை 2020 வரை கையாள தெரியாத ஒருத்தி தான் நானும். என்னை நானே உடைத்து, பிறரையும் காயப்பட செய்து இருக்கிறேன். ஆனால் இப்போ அந்த பூனைகுட்டிகளை கவனத்தில் கொள்வது இல்லை. என்னை பற்றி எனக்கு தெரியும். என் உழைப்பும், எண்ணமும் நான் அறிவேன். அவர்களின் கருத்து என்னிடம் எதையும் குறைத்து விட போவது இல்லை. அதனால் அதில் அக்கறை காட்டுவது இல்லை.
22 – நீங்கள் அதிகம் எழுத விரும்புவது எது ? (கதை , கவிதை, தொடர்கதை, நாவல் , சிறுகதை) ஏன் ?
தொடர்கதை.. சஸ்பென்ஸ் வைக்க பிடிக்கும் அதான்.. 😂 இப்போது தான் சிறுகதை எழுத பழகி கொண்டு இருக்கிறேன்.
23 – ஏன் மாறுபட்ட கதைக்கரு கொண்ட கதைகள் வாசகர்களை அதிகமாக சென்றடைவதில்லை?
மாறுபட்ட கதைக்கருவில் அதிகம் எதார்த்தம் இருக்கே அதான் காரணம்.
24 . குடும்பம் காதல் சாராத கதைகளை நீங்கள் எழுதியது உண்டா? (படைப்பின் தலைப்பு)
இல்லை.
25 . அனைவரும் படிக்க வேண்டிய புத்தகங்களாக நீங்கள் கருதுவது என்ன என்ன?
அறிந்ததில் இருந்து விடுதலை – J.K
சீக்ரெட் – rhonda byrne
26 . ஓர் படைப்பின் வார்த்தை அளவுகள் பற்றி உங்களது கருத்து என்ன?
என்னை பொறுத்த வரை சுருங்க சொல்லி விடுவது தான் பிடிக்கும். ஒரு நாவலுக்கு 30 ஆயிரம் வார்த்தைகள் தான் என்னை பொறுத்த வரை சரி. தொடர்கதை என 80 அத்தியாயம் எழுதி விடலாம். ஆனால் அதை புத்தகமாக விலை கொடுத்து வாங்க முடியுமா? இந்த புத்தகங்களின் விலையும் அதிகம். புத்தகத்தின் அளவு வாசகனை பயம் கொள்ள செய்ய கூடாது. அதுவும் போக கதையின் முடிவு எப்போது என்று தோன்ற வைக்க கூடாது. விளக்கமாக சொல்கிறேன் என தேவை இல்லாத தகவலும் வர்ணனையும் தவிர்க்க வேண்டியது அவசியம்.
27 எழுதுபவர்கள் பெரும்பாலும் பயன் அடைவதில்லை. அவர்கள் பயன்பெற நீங்கள் கூறும் சில யோசனைகள் என்ன?
முதலில் எழுதி பயன் பெறும் வழிகளை எனக்கு சொல்லி கொடுத்தால் நலம். பயன் பெற்ற பின் யோசனைகள் கூறுகிறேன்.
28 . உங்கள் தனி தன்மை என்று தாங்கள் கருதுவது என்ன ?
வாசகர்களின் மனதை எழுத்தால் தொடுவது 💜
29 . உங்களது கவிதை , பிடித்த வாக்கியம் , பழமொழி (பைனல் பஞ்ச்).
அன்பு அனைத்தும் செய்யும். சுய அன்பு அற்புதங்கள் செய்யும் 💜
30 . உங்கள் படைப்புகள் (லிங்க்குகளுடன்) (Youtube also ):
அமேசான் :
https://amazon.com/author/gowrimuthukrishnan
பிரதிலிபி :
https://tamil.pratilipi.com/user/01116ru547?utm_source=android&utm_campaign=myprofile_share
நோசன் பதிப்பகம் :
https://notionpress.com/author/220142
தொடர்புக்கு :
வாய்ப்பு கொடுத்த ஆலோன் மகரி அவர்களுக்கும், வாசித்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துகள். Stay safe 💜
பாத்தீங்களா நட்பூஸ் நம்ம கௌரி சிஸ்டர் என்ன சொல்றாங்கணு .. நாயகன் எழுதி இருக்க கூடாதுணு நினைச்சாங்கலாம் .. அந்த கதை தான் நிறைய பேருக்கு அவங்க செஞ்சிட்டு வந்த தப்ப உணர வச்சது . இனிமே இப்படி எல்லாம் அந்த கதை பத்தி யோசிக்காதீங்க சிஸ் ..
“கௌரி முத்துகிருஷ்ணன்” ங்கற பேர் கேள்வி படாதவங்க நம்ம வட்டத்துல ரொம்ப கம்மி தான். இவங்க 22 புக் பப்ளிஷ் செஞ்சி இருக்காங்கபா..
இவங்க எழுத்துல தேவை இல்லாத வர்ணனை மட்டும் இல்ல, சொல்ல வர்ற விஷயத்த நேரடியா எந்த பூச்சும் இல்லாம சொல்றது தான் இவங்க சிறப்பு.
சென்சிடிவ் விஷயத்த கூட இவங்க எழுத்து கண்ணியமான சொல்லாடல்ல கொடுக்கும். இவங்க கதை எல்லாமே நம்ம வாழ்க்கைல நம்மள சுத்தி நடக்கற விஷயங்கள் தான்.
இவங்க குடுக்கற மனோ தத்துவ தகவல்கள் நிச்சயம் நம்ம நம்ம வாழ்க்கைலயும் உபயோகம் படுத்தலாம் அப்டி தான் ரொம்ப எளிமையா சொல்வாங்க .
இவங்க “நாயகன் “ எந்த அளவுக்கு நம்ம மனசுல நின்னானோ அந்த அளவுக்கு நிறைய கதைகள், அவங்க எழுதின சமயத்துல கண்டிப்பா பேசப்படுது.
இவங்க சொல்ற எதார்த்தம் நிறைய பேருக்கு பிடிக்கறது இல்லை . அதனால தான் அவங்க அவ்ளோ பொங்கறாங்க போல .. வெறும் பொய்யான கனவுகளை மட்டுமே கதைகளில் இருக்கணும்னு நினைச்ச நிறைய பேருக்கு எதார்த்த வாழ்க்கைல இருக்கற பிரச்சனைகளுக்கு கதை மூலமா தீர்வும் , யோசனையும் சொல்ல முடியும் னு புரியவச்சி ,அழுத்தமா பேசும் கதைகளை இவங்க குடுத்துட்டு வராங்க ..
இவங்க பயணம் நீண்ட நெடுங்காலம் தொடர்ந்துட்டே இருக்கணும் நாமளும் கூடவே பயணிக்கணும் .
எல்லாதாயும் விட இவங்க ரொம்பவே அன்பானவங்க .. அவங்க காட்டுற அன்பு போலவே அவங்க வாழ்க்கையும் எல்லா வளங்களும் , நலங்களும் நிறைஞ்சி அவங்க சந்தோஷமா இருக்கணும் நாம வேண்டிக்கலாம் ..
என் நாயகனோட எழுத்தாளர் கூட இன்னிக்கி நம்ம பயணம் போனதுல எனக்கு செம சந்தோஷம் நட்பூஸ் ..
அடுத்து சீக்கிரமே ஒரு lazy ரைட்டர் ஓட வரேன் ..