• About us
  • Contact us
Monday, April 20, 2026
Facebook social icon Twitter X social icon Instagram social icon Pinterest social icon
Aalonmagari
  • Login
  • Register
  • Home
  • கதை
    • நாவல்
    • தொடர்கதை
    • சிறுகதை
  • கிறுக்கல்கள்
  • புத்தகம் வாங்க
  • நேர்காணல்
    • எழுத்தாளர் நேர்காணல்
    • வாசகர் நேர்காணல்
  • மகரியின் பார்வையில்
  • நாமளும் சமைக்கலாம் தப்பில்ல
  • English
    • Short story
No Result
View All Result
  • Home
  • கதை
    • நாவல்
    • தொடர்கதை
    • சிறுகதை
  • கிறுக்கல்கள்
  • புத்தகம் வாங்க
  • நேர்காணல்
    • எழுத்தாளர் நேர்காணல்
    • வாசகர் நேர்காணல்
  • மகரியின் பார்வையில்
  • நாமளும் சமைக்கலாம் தப்பில்ல
  • English
    • Short story
No Result
View All Result
Aalonmagari
No Result
View All Result

வினு மணிகண்டன் 

March 16, 2024
Reading Time: 2 mins read
0
இயல்புகள்

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் .. 

 

இன்னிக்கி நம்ம பாக்க போற அந்த lazy எழுத்தாளர் .. என்னடா இவ lazy னு சொல்றாளேனு பாக்கறிங்களா  ???  அவரே அவர அப்படி தான் சொல்றாரு சகோஸ் .. அதான் நானும் அதயே சொல்றேன் . 

இவர பத்தி இங்க எத்தன பேருக்கு தெரியும்னு எனக்கு தெரியல ஆனா நீங்க இவர் எழுத்த படிச்சது இல்லைனா அது நிஜமா நீங்க எழுத்தோட ஒரு வகை சுவைய  சுவைக்கல னு தான் சொல்வேன் . 

நறுக்குனு முறுக்கு மாறி கொஞ்சம் காரமா கடைசில இனிப்போட இருக்கும். 

இவர் நாவல் எழுதினது இல்ல, சிறுகதை குறுநாவல் தான் எழுதி இருக்காரு. எதுவா இருந்தாலும்  ரத்ன சுருக்கமா சொல்றதுல இவரு ஒரு ஸ்பெஷலிஸ்ட்-னு தான் நான் சொல்வேன் .. 

யாருன்னு இன்னும் தெரியலியா ? 

சரி வாங்க உள்ள போய் பேசலாம் .. 

 

எழுத்துப்பயணத்தில் நம்முடன் இன்று…. 

 

1.  புனைபெயர் – வினு மணிகண்டன் 

 

2. இயற்பெயர் – ம. விநாயக குமார மணிகண்டன்

 

3. படிப்பு – MCA

 

4. தொழில் –

personality development master VINU TRAINING RESOURCES 

 

5. பிடித்த வழக்கங்கள் –

பயணம் செய்வது, உணவை ருசிப்பது 

 

6. கனவு –

நமக்கு தேவையானதை ஈட்டுவதும், தேவைப்படுவோருக்கு ஈவதும். 

 

7. உங்களுக்கு ஏற்பட்ட எழுத்தின் மீதான் தாக்கம் என்ன?  

நம்மை சிரிக்க வைக்கிறது, அழவைக்கிறது, கோபம் கொள்ள செய்கிறது. எழுத்தின் வழி சென்ற காதலும் சுவாரஸ்யம்.. எழுத்தின் வழி பார்க்கும் அனைத்தும் ரசனை. 

 

8. உங்களின் வாசிப்பு அனுபவம் பற்றி – 

நாங்க 90’s குழந்தைகள். தாத்தாவுக்கு செய்தித்தாள் படிச்சு காமிச்சோம். பாட்டிக்கு ராமாயணம் படிச்சு காமிச்சோம். தந்திகளை கூட படித்து காட்டி பலரின் பதட்டத்தை தணித்துள்ளோம். கதைகள் படிக்க தொடங்கி கவிதைகள் படிக்க தொடங்கி இலக்கியத்தின் வாசக் கதவில் காலிங் பெல் அடிக்க தொடங்கியுள்ளேன்

 

9. உங்களை எழுத தூண்டியது எது? 

கற்பனையை சொல்லால் விவரிக்க முயன்று எழுதி பார்க்க தொடங்கிய பழக்கம் அப்படியே இன்று வரை தொடர்கிறது

 

10. எப்போது எழுத ஆரம்பித்தீர்கள்? 

கல்லூரியில் தமிழ் வாத்தியார் அளித்த ஊக்கத்தில் பயணம் என்ற ஒரு சிறுகதையை எழுதினேன். கல்லூரி இதழில் பிரசுரித்து பெரிய வரவேற்பைப் பெற்றது. 

 

11. உங்களது எழுத்தை படித்தவரிடம் அதன் தாக்கத்தை உணர்ந்தது உண்டா? 

இனிமே பாருங்க இதை மாதிரியே நானும்……. என்று சொல்லி சென்றவர்களும் இருக்கிறார்கள். 

 

12 . எழுத்தால்  எதையும் மாற்ற முடியும் என்று நம்புகிறீர்களா

எழுத்துக்கும் சொல்லுக்கும் அவ்வளவு சக்தி உண்டு. ஒருவரை சாகடிக்கவும் முடியும். ஒரு தற்கொலையை தடுத்து நிறுத்தவும் முடியும். 

 

13 . மின்னூல் , பதிப்பு புத்தகம் . இவற்றினைப்  பற்றி  உங்கள் கருத்து என்ன ?

இடத்தை அடைத்துக் கொள்ளும் புத்தகங்கள் இதயத்தை அடைந்துவிடும். கைபேசி மெமரியை அடைத்துக் கொள்ளும் புத்தகங்கள் பெரும்பாலும் படிக்காமலேயே டெலிட் செய்யப்படுகின்றன  நம் சுய நினைவோடு. 

 

14. நீங்கள் பதிபித்த பதிப்பு  புத்தகங்கள் எத்தனை ?(அவற்றை பெற தொடர்பு கொள்ள ) –

 

காதலும் காதல் சார்ந்த இடமும் 

பெறுவதற்கு – 7010255768 

 

15. ஆடியோ புத்தகங்கள் மீதான உங்கள் பார்வை என்ன ? 

கண்பார்வை மறைந்தாலும், காணும் வகை செய்யும் இவை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. 

 

16 . எழுத்தாளரின் வெற்றி என்பது எதன் அடிப்படையில் இருக்கிறது ?

எனக்கு தெரிந்து வெற்றி தோல்வி என்பது எழுத்தில் இல்லை. வரவேற்பு பெறாத எழுத்தாளர்களுக்கு அது தோல்வி இல்லை. 

அவர்களுக்கான காலம் விரைவில் வரும் என்றே அர்த்தம். 

 

17 . உங்கள் படைப்பில் எதையாவது  எழுதி இருக்க வேண்டாம் என்று எண்ணியதுண்டா ?

எழுதும் முன் யோசித்ததுண்டு. எழுதிய பிறகு நினைத்ததில்லை. 

 

18 . உங்களின் படைப்புகளில் எது உங்களுக்கான அங்கீகாரத்தை பெற்று கொடுத்ததாக நினைக்கிறீர்கள் ?

எனது சிறுகதை நடை கொஞ்சம் யதார்த்தமாய் இருக்கிறது என்று பாராட்டிய ஒரு கிலோ அதிர்ஷ்டம் என்ற சிறுகதை. (யாவரும் கேளிர் என்ற சிறுகதை தொகுப்பில் ஒரு சிறுகதை) 

யாரும் கையில் எடுக்க தயங்கும் ஒரு கதைக்களத்தை சரியாக கையாண்டேன் என்ற பெருமையை பெற்றுத் தந்த பொதுமகள் என்ற சிறுகதை. 

 

19 . கதை கரு மற்றும் கதா பத்திரங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள் ? அதற்கான மெனக்கெடல் எந்த அளவிற்கு கொடுப்பீர்கள் ?

கதாபாத்திரங்கள் நினைவில் நிற்க சில தனித்துவமான குணங்களை சேர்ப்பேன். பெரும்பாலும் இவர் அவரைப்போலவே இருக்கிறார் என்ற கருத்து இதுவரை வந்ததில்லை. 

 

20  . நீங்கள் பெற்ற போட்டி பரிசுகள் – 

தமிழ் சுடர் விருது 2018 சேலம்

 

21.   எதிர்வினை கருத்துக்களை எப்படி கையாள்கிறீர்கள்? 

அதற்கு பதில் சொல்வதில் எனக்கு அலாதி ஆர்வம். வாங்க வாங்க என்று வரவேற்பேன் நம்மையும் கொஞ்சம் சரிசெய்யவும் உதவும். 

 

22  – நீங்கள் அதிகம் எழுத விரும்புவது எது ? (கதை , கவிதை, தொடர்கதை, நாவல் , சிறுகதை)  ஏன் ? 

நான் ரொம்ப சோம்பேறி எழுத்தாளன். தொடர்கதை எழுத தொடங்கியதும் அதை திரைப்படமாக்க வந்துவிட்ட வாய்ப்பு தான் இன்று வரை எனக்கு சிறப்பான சிரிப்பு…… சின்னதா சிறுகதை.. குட்டியா கவிதை.. எழுத பிடிக்கும். 

 

23 – ஏன் மாறுபட்ட கதைக்கரு கொண்ட கதைகள் வாசகர்களை அதிகமாக சென்றடைவதில்லை? 

படிக்க வைத்து படிக்க வைத்து பழக்கப்படுத்த வேண்டும். நம் எழுத்துகளை புரிந்து கொள்ளும் ரசிகர்கள் கூட கூட புரிய ஆரம்பித்து விடும். 

 

24 .  குடும்பம் காதல் சாராத கதைகளை நீங்கள் எழுதியது உண்டா? (படைப்பின் தலைப்பு)

 

ஒரு எடை பார்க்கும் இயந்திரம் பேசும் கதை

ஒரு கிலோ அதிர்ஷ்டம் 

 

அரசியல் கதைக்களமான 

பொது மகள் 

டோக்கன் 

 

25 .  அனைவரும் படிக்க வேண்டிய புத்தகங்களாக நீங்கள் கருதுவது என்ன என்ன? 

நல்ல மனிதர்களின் வாழ்வில் நடந்த சம்பவங்கள், வாழ்க்கையை, வெற்றியை, தோல்வியை அவர்கள் கையாண்ட விதம்  குறித்த புத்தகங்கள். 

 

26 .  ஓர் படைப்பின் வார்த்தை அளவுகள் பற்றி உங்களது கருத்து என்ன? 

நான் எண்ணியதை எழுதியிருக்கிறேன்.. எழுதியதை எண்ணியதில்லை. 

 

27  . எழுதுபவர்கள் பெறும்பாலும் பயன் அடைவதில்லை. அவர்கள் பயன்பெற  நீங்கள் கூறும் சில யோசனைகள் என்ன? 

பயன், பரிசு, பணம் இதை எதிர்பாராமல் எழுதினால் இவை மூன்றும் உங்கள் வசமே

 

28  . உங்கள் தனி தன்மை என்று தாங்கள் கருதுவது என்ன ?

நகைச்சுவையான போக்கு என் கதைகளை இன்னும் மெருகூட்டுகிறது

 

29 .  உங்களது கவிதை , பிடித்த வாக்கியம் , பழமொழி (பைனல் பஞ்ச்). 

I m a lazy writer.. 

 

30 . உங்கள் படைப்புகள் (லிங்க்குகளுடன்)   (Youtube also):

 

பிரதிலிபி :

https://tamil.pratilipi.com/user/esbe8v1seq?utm_source=android&utm_campaign=myprofile_share

 

பொதுமகள்  மின் புத்தகம் :

https://www.amazon.in/dp/B08LK52423/ref=cm_sw_r_cp_apa_glt_A87GZT64JAWJQZ15CQ3X

 

வெண்பா மின் புத்தகம் :

https://www.amazon.in/dp/B08KYJT64N/ref=cm_sw_r_cp_apa_glt_AR0T3M2VBB22MJ3XYTH1

 

பாக்கெட் நிறைய பணம் மின் புத்தகம் : 

https://www.amazon.in/dp/B0893FHLJR/ref=cm_sw_r_cp_apa_glt_HHA9RR5P8DEA0BA5ZVDT

 

தாயுமானவள் மின் புத்தகம் :

https://www.amazon.in/dp/B087RTZ4Y4/ref=cm_sw_r_cp_apa_glt_CHGQE0V14B5MQVW5P2EJ

 

யாவரும் கேளிர் மின் புத்தகம் : 

https://www.amazon.in/dp/B088B79VXC/ref=cm_sw_r_cp_apa_glt_MVFW112SD4AZ6Q4ZCH49

 

காதலும் காதல் சார்ந்த இடமும் மின் புத்தகம் : 

https://www.amazon.in/dp/B088X28PRB/ref=cm_sw_r_cp_apa_glt_SW7XEH0KEAPRTZA1YWYQ

 

பாத்தீங்களா எப்டி இவர் பதிலும் நறுக்குன்னு வந்து இருக்கு .. 

 

“சந்தியன் “ இந்த கதை அவர் ஆரம்பிச்ச உடனே திரை உலகம் இவர்கிட்ட கேக்கவும் அதை இவரும் தூக்கி குடுத்துட்டாருங்க.. அந்தரத்துல நான் தான் இன்னும் அவர் நிறுத்தின அத்தியாயத்துல நிக்கறேன். சீக்கிரம் அதை திரையில் பார்க்க ஆர்வமா இருக்கோம் .. 

 

“பொது மகள் “கதைல இவர் சொன்ன விஷயமும், அதில் இருந்த கடந்த கால காதல், நிகழ் கால குரூரம்-னு எல்லா சென்சிடிவ் விஷயங்களும் இவர் எழுத்துல குடுத்த விதம் தாங்க அவ்ளோ அருமை. 

 

முகம் சுழிக்க வைக்காத எழுத்து இவரோடாதுனு அடிச்சி சொல்வேன் . இவர் கூடவே நாமளும் சிரிச்சி , மென்மையா காதல் உணர்வு கொண்டு பயணிச்சி , நம்மள நாமலே கேள்வி கேட்டு , நம்ம சமூகம்  வச்சி இருக்கற தேவை இல்லாத ஆணிகளை எல்லாம் இப்பவே பிடிங்கி போற்றலாம்னு பரபரக்க வைப்பாரு .. 

 

இவர் எழுத்து படிக்கறது எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனா இவரு அத்தி பூத்த மாதிரி தான் எழுதுவாரு,  அது ஒண்ணு தான் கோவமா வரும் .

 

என்னை விட சோம்பேறினு சொல்லலாலாம் .. 

 

தென் தமிழக மக்கள் எப்பவும் தமிழ் கையாளற விதம் ரொம்ப அருமையா இருக்கும் . வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு வகை பேச்சு தான் அதிகம் . அவங்க பேச்சுலையும் சரி , எழுத்துளையும் சரி.  அதன் அவங்க பெருசா எழுத விரும்பறது இல்ல போல .. 

 

இவர் எப்ப எழுதினாலும் படிக்க ஒரு கூட்டம் இருக்குங்க .. நீங்க எழுதினா மட்டும் போதும்னு தான் நாங்க சொல்றது .. 

 

மொத்ததுல இவர் எழுத்து மிஸ் பண்ணா நஷ்டம் நமக்கு தான் அதுல சந்தேகமே வேணாம் .. நீங்க நிறைய நிறைய எழுதனும் அண்ணா , நாங்க அதை படிச்சிட்டே உங்க கூட வருவோம் .. 

 

நீங்க எடுக்கற  எல்லா முயற்சிகளும் வெற்றி பெறனும் னு நாங்க வேண்டிக்கறோம் அண்ணா .. நிச்சயம் இவர் எழுத்து ஒரு நல்ல எடத்த பிடிக்கும்ங்கறதுல  நமக்கு எந்த சந்தேகமும் இல்லை .. 

 

இன்னிக்கி இவரோட நம்ம பயணம் போனது உங்களுக்கு பிடிச்சி இருக்கும் னு நினைக்கறேன் .. 

 

சீக்கிரமே ஒரு busy writer கூட்டிட்டு வரேன் .. 

 

Click to rate this post!
[Total: 0 Average: 0]
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Facebook Twitter Email
Post Views: 2,215

aalonmagarii

Subscribe
Login
Notify of

0 Comments
Newest
Oldest
Inline Feedbacks
View all comments

About Me

Aalonmagari

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Categories

  • English (5)
  • Food Recipes (3)
  • Short story (2)
  • இன்னும் பல .. (5)
  • எழுத்தாளர் நேர்காணல் (31)
  • கதை (381)
  • கிறுக்கல்கள் (107)
  • சிறுகதை (10)
  • தொடர்கதை (161)
  • நாமளும் சமைக்கலாம் தப்பில்ல (7)
  • நாவல் (212)
  • நேர்காணல் (56)
  • புத்தகம் வாங்க (9)
  • மகரியின் பார்வையில் (5)
  • வாசகர் நேர்காணல் (25)

Popular

  • இயல்புகள்

    தேன் நிலா

    552 shares
    Share 221 Tweet 138
  • 1 – அகரநதி

    501 shares
    Share 200 Tweet 125
  • 1 – அர்ஜுன நந்தன்

    471 shares
    Share 188 Tweet 118
  • 1 – வலுசாறு இடையினில் 

    429 shares
    Share 171 Tweet 107
  • 1 – காற்றின் நுண்ணுறவு

    397 shares
    Share 158 Tweet 99
  • Terms & Conditions
  • Privacy Policy
Email us : aalonmagari@gmail.com

Copyright © 2026. Aalonmagari. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • கதை
    • நாவல்
    • தொடர்கதை
    • சிறுகதை
  • கிறுக்கல்கள்
  • புத்தகம் வாங்க
  • நேர்காணல்
    • எழுத்தாளர் நேர்காணல்
    • வாசகர் நேர்காணல்
  • மகரியின் பார்வையில்
  • நாமளும் சமைக்கலாம் தப்பில்ல
  • English
    • Short story
  • Login
  • Sign Up
Facebook social icon Twitter X social icon Instagram social icon Pinterest social icon

Copyright © 2026. Aalonmagari. All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Please wait...

Subscribe to our newsletter

Want to be notified when our article is published? Enter your email address and name below to be the first to know.
SIGN UP FOR NEWSLETTER NOW
error: Content is protected !!
wpDiscuz
0
0
Would love your thoughts, please comment.x
()
x
| Reply