வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் ..
இன்னிக்கி நம்ம பாக்க போற எழுதாளர் கொங்கு தமிழ் ல நம்மள மயக்கறவங்க ..
ஆமாங்க இவங்க கதைல இருக்க பெரிய காந்தம் அவங்க உபயோகிக்கற கொங்கு தமிழும் , அங்க இருக்கற பழக்க வழக்கங்கள எல்லாம் சொல்றத பாக்கறப்போ நாமலே அங்க வாழற உணர்வு அவங்க எழுத்துல இருக்கு ..
ஆரம்ப நிலை எழுத்தாளர் தான் ஆனா இவங்க எழுத்துல இருக்கற தெளிவும் , கதா பாத்திரத்துக்கு இவங்க குடுகற குணமும் ரொம்பவே ஈர்க்கும் ..
யாருன்னு தெரிஞ்சதா ?
வாங்க உள்ள போய் பாக்கலாம் ..
எழுத்துப்பயணத்தில் நம்முடன் இன்று….
1. புனைபெயர் – மதுகிருஷ்ணா (காரணம் எல்லாம் ஸ்பெஷலா இல்ல.. சும்மா தோணுச்சு).
2. இயற்பெயர் – கோகிலவாணி
3. படிப்பு – Msc., MPhil.,
4. தொழில் – இப்போதைக்கு விஐபி
5. பிடித்த வழக்கங்கள் –
படிக்கறது, மீம் கிரியேட் பண்றது.. சின்ன சின்ன கைவினைப் பொருட்கள் செய்யறது.. எனக்கு வரைய வராது ஆனா அந்த வீடியோக்கள் பாக்க ரொம்ப பிடிக்கும்.
6. கனவு –
ஆர்கானிக் ஃபார்ம் ஒன்னு உருவாக்கனும்னு ஆசை
7. உங்களுக்கு ஏற்பட்ட எழுத்தின் மீதான் தாக்கம் என்ன?
சின்ன வயசுல கட்டுரைப் போட்டி, பேச்சு போட்டிக்காக மேற்கோள் காட்ட நிறைய புத்தகங்கள் படிக்கும் போது.. ஒருசில வாசகங்கள் எல்லாம் ரொம்ப கவரும்.. நம்ம உபயோகம் பண்ற அதே முப்பது (உயிர்+மெய்) எழுத்து தானே.. இவங்க மட்டும் எப்படி இப்படி அழகா எழுதறாங்கன்னு யோசிச்சிருக்கேன்.. தனிப்பட்ட முறையில கண்ணதாசனோட பேனா மேல ஒரு பிரேமையே இருந்திருக்கு.. அப்படி ஆரம்பிச்சது தான் எல்லாம்.
உதாரணம் சொல்லனும்னா கடைசியா வேள்பாரியில ஒவ்வொரு வசனத்துக்கும் அடிமை ஆகிட்டேன்.. ‘காதல் சற்றே தலைகீழானது தான்.. நீர் இருக்கும் இடத்தில் தழைக்கும் வேரல்ல.. வேர் இருக்கும் இடத்தில் சுரக்கும் நீர்’, ‘தேனின் சுவை சுவைப்பதில் அல்ல.. சுவைத்ததில் இருக்கிறது.. ‘ இப்படி நிறைய இருக்கு.
8. உங்களின் வாசிப்பு அனுபவம் பற்றி –
எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து படிச்சிகிட்டு இருக்கேன்.. சிறுவர்மணி, சிறுவர்கதிர்ல ஆரம்பிச்சு நான் வளர வளர என்னோட வாசிப்பும் வளர்ந்துச்சு.. அதுக்கு நூலகம் மட்டுமில்லாம பேருந்து நிலையத்தில இருக்க டீக்கடை, புத்தகக்கடை எல்லாம் உபயோகமா இருந்துச்சு.. நான் முதல்ல நாவல்னு படிச்சது க்ரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமார் அவங்களோட ‘இனிமேல் இந்திரா’ தான்.. அதுக்கப்புறம் ஒவ்வொரு எழுத்தாளரையும் இந்திரா சௌந்திரராஜன், சுஜாதா அப்படின்னு அவங்க எழுதற வகை வச்சு பிரிச்சு படிக்க ஆரம்பிச்சேன்.. இன்னைக்கும் ஏகப்பட்ட க்ரைம்நாவல், சீக்ரெட் நாவல், எவரெஸ்ட் நாவல்னு குட்டி குட்டி நாவல் வீட்ல தூங்கிட்டு இருக்கு.
9. உங்களை எழுத தூண்டியது எது?
எம்பில் வர வரைக்குமே நான் வாசிச்சிகிட்டு மட்டும் தான் இருந்தேன்.. அது ஜாயின் பண்ணப்ப முழுசா செல்ப் ஸ்டடி தான்.. சோ நிறைய டைம் இருந்துச்சு.. சும்மா விளையாட்டுக்கு எழுத ஆரம்பிச்சேன்.
10. எப்போது எழுத ஆரம்பித்தீர்கள்?
நவம்பர் 2018ல ஆரம்பிச்சேன்
11. உங்களது எழுத்தை படித்தவரிடம் அதன் தாக்கத்தை உணர்ந்தது உண்டா?
சிரிச்சிகிட்டே படிச்சேன்.. நிறைய தமிழ் வார்த்தைகள் தெரிஞ்சிகிட்டேன்னு சொல்லக் கேட்டிருக்கிறேன்.
12 . எழுத்தால் எதையும் மாற்ற முடியும் என்று நம்புகிறீர்களா ?
அது படிப்பவர்களின் மனநிலையைப் பொறுத்தது.. ஏன்னா ரைட்டரோட வ்யூலையே ரீடரும் படிப்பாங்கன்னு சொல்ல முடியாது.
13 . மின்னூல் , பதிப்பு புத்தகம் . இவற்றினைப் பற்றி உங்கள் கருத்து என்ன ?
எந்த நிலையில நாம இருந்தாலும் அதுக்கு அடுத்த நிலைன்னு ஒன்னு இருக்குமே.. மின்னூல் உடனடியா எழுதி வாசகர்கள் கையில கொடுத்து நம்ம பிழைகளை திருத்த உதவும்.. அதே மாதிரி நட்ட குழியிலேயே இருக்காம எழுத்தோட அடுத்தகட்டமா பதிப்பு புத்தகத்தைப் பாக்கறேன்.
14. நீங்கள் பதிபித்த பதிப்பு புத்தகங்கள் எத்தனை ? (அவற்றை பெற தொடர்பு கொள்ள )
இதுவரை புத்தகங்கள் பதிப்பிக்கவில்லை.
15. ஆடியோ புத்தகங்கள் மீதான உங்கள் பார்வை என்ன ?
படிச்சுத் தெரிஞ்சுக்கறவங்களுக்கு மத்தியில கேட்டுத் தெரிஞ்சுக்கறவங்களும் இருப்பாங்க தானே.. அவங்களுக்கான ஒரு தளமா அது இருக்கும்.
16 . எழுத்தாளரின் வெற்றி என்பது எதன் அடிப்படையில் இருக்கிறது ?
நாம எழுதறதுக்கு எந்த பிரதிபலிப்பும் இல்லாமயே போனாலும்.. எவ்வளவு எதிர்மறைக் கருத்துக்கள் வந்தாலும் சொல்ல வந்ததை முழுசா சொல்லி.. வாசகர்கள் கிட்ட அதைக் கொண்டு போய் சேர்க்கறதுல இருக்குன்னு நான் நினைக்கறேன்.
17 . உங்கள் படைப்பில் எதையாவது எழுதி இருக்க வேண்டாம் என்று எண்ணியதுண்டா ?
இதுவரை அப்படி தோன்றியது இல்லை.
18 . உங்களின் படைப்புகளில் எது உங்களுக்கான அங்கீகாரத்தை பெற்று கொடுத்ததாக நினைக்கிறீர்கள் ?
‘நிறைகாக்குங் காப்பே தலை’. இது ஒரு போட்டிக்காக எழுதின குறுநாவல்.. எனக்கு வந்த முதல் விமர்சனம் இந்தக் கதையோடது தான்.. ‘வசனங்கள் நல்லாருக்கு’ன்னு சொன்னாங்க.. அதுவே எனக்குக் கிடைச்ச பெரிய அங்கீகாரமா நினைக்கறேன்.
19 . கதை கரு மற்றும் கதா பத்திரங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள் ? அதற்கான மெனக்கெடல் எந்த அளவிற்கு கொடுப்பீர்கள் ?
நம்மை சுத்தி நடக்கற விஷயங்களைத் தான் பெரும்பாலும் நான் எழுதுறேன்.. கதாபாத்திரங்களும் அப்படியே.. ‘நிறைகாக்குங் காப்பே தலை’ வெண்மதி கூட அப்படி எடுக்கப்பட்ட பாத்திரம் தான்.
20 . நீங்கள் பெற்ற போட்டி பரிசுகள் –
பிரதிலிபி நடத்திய இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றேன். முதலில் மனதின் மொழி போட்டிக்காக நான் எழுதிய பத்து கட்டுரைகளில கண்ணதாசன் அவங்களோட வனவாசம் வின் பண்ணுச்சு.. இரண்டாவது மகாநதி போட்டியில ‘மோகனம்’ என்ற குறுநாவல் தேர்வாச்சு.
21. எதிர்வினை கருத்துக்களை எப்படி கையாள்கிறீர்கள்?
எனக்கு எதிர்வினைக் கருத்துக்கள் அதிகமா வந்தது இல்ல.. வந்த ஒன்று இரண்டையும் நான் கண்டுக்கல.. முதல்லையே சொன்ன மாதிரி நாம என்ன மாதிரி எழுதுறோமோ அதே மாதிரியே படிக்க வாய்ப்பு கம்மின்னு நானே நினைச்சுப்பேன்.
22. நீங்கள் அதிகம் எழுத விரும்புவது எது ? (கதை, கவிதை, தொடர்கதை, நாவல், சிறுகதை) ஏன் ?
நாவல் தான்..
23 – ஏன் மாறுபட்ட கதைக்கரு கொண்ட கதைகள் வாசகர்களை அதிகமாக சென்றடைவதில்லை?
பெரும்பாலும் காதல் சார்ந்த கதைகளையே எல்லாரும் விரும்பறாங்க.. மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டவை சிறுகதையா இருந்து சட்டுனு படிச்சு அதோட முடிவைத் தெரிஞ்சுக்க தான் நினைக்கறாங்க.
24 . குடும்பம் காதல் சாராத கதைகளை நீங்கள் எழுதியது உண்டா? (படைப்பின் தலைப்பு)
இதுவரை அப்படி எதுவும் எழுதலை.. ஆனா எதிர்காலத்துல சமூகம் சார்ந்த அழுத்தமான கதை எழுத ஆசை.
25. அனைவரும் படிக்க வேண்டிய புத்தகங்களாக நீங்கள் கருதுவது என்ன என்ன?
முதல்ல பொன்னியின் செல்வன்.. அப்புறம் வேள்பாரி.. பாரிக்காகவே இதைப் படிக்கனும்.. வார்த்தைக் கோர்வைகளும் வசனங்களும் மிக அருமையா இருக்கும்.. அடுத்து ‘அறியப்படாத தமிழ்மொழி’ நம்மமொழி மேல பொய் சாயம் பூசாம.. அதைக் கொண்டாட அதிலையே ஓராயிரம் விஷயம் இருக்குன்னு சொல்ற புத்தகம்.
26 . ஓர் படைப்பின் வார்த்தை அளவுகள் பற்றி உங்களது கருத்து என்ன?
சுருங்கச் சொல்லி விளங்க வைக்கனும்.. இது முக்கியம்.. சொல்ல வந்ததை முழுசா சொல்லனும் இதுவும் முக்கியம்.
27. எழுதுபவர்கள் பெறும்பாலும் பயன் அடைவதில்லை. அவர்கள் பயன்பெற நீங்கள் கூறும் சில யோசனைகள் என்ன?
என்னோட எழுத்தை வெளியே காட்டவே நான் தயங்கினப்ப.. என்னோட நண்பர்கள் தான் அதை அமேசான்ல போடுன்னு எனக்கு ஊக்கம் தந்தாங்க.. சோ நானே இன்னும் யோசனை கேட்கற ஸ்டேஜ்ல தான் இருக்கேன்.
28. உங்கள் தனி தன்மை என்று தாங்கள் கருதுவது என்ன ?
தலைப்பு தான்.. ஓரளவு வித்தியாசமா தேர்ந்தெடுப்பேன்.. அப்புறம் முடிஞ்ச அளவு திருக்குறளோ சங்கப் பாடல்களோ கதைகள்ல வரும்.
29. உங்களது கவிதை , பிடித்த வாக்கியம் , பழமொழி (பைனல் பஞ்ச்).
அன்பென்று கொட்டு முரசே!
30. உங்கள் படைப்புகள் (லிங்க்குகளுடன்) (Youtube also ):
பிரதிலிபி:
https://tamil.pratilipi.com/user/6w3v17c98d?utm_source=android&utm_campaign=myprofile_share
Youtube:
https://youtube.com/channel/UC-csIq7e5B-kIFkoupJOmkQ
பாதிங்களா நம்ம மது சிஸ்டர் பதில் எல்லாம் எவ்ளோ தெளிவுன்னு ..
இவங்க சொல்றது போல வசனங்களும், இவங்க கொடுக்கற மேற்கோளும் அவளோ அற்புதமா இருக்கும்.
படிக்க படிக்க படிக்கிட்டே இருக்கலாம்ன்னு தான் தோணும் .. பேச பேச மட்டும் இல்லைங்க , படிக்க படிக்கவும் நம்ம தமிழ் எவ்ளோ இனிமையானது புரிஞ்சிக்கலாம் .
அதுவும் இவங்க எழுத்து காந்தம் தாங்க .. எவ்ளோ பெரிய கதையா இருந்தாலும் முழுசா படிக்காம கீழ வைக்க முடியாது .
சீக்கிரமே நீங்க பதிப்பு புத்தகம் போடுங்க .. நிச்சயம் அது ஒரு விருந்தா படிக்கற எல்லாருக்கும் இருக்கும் ..
உங்க கனவு எனக்கு ரொம்பவே பிடிச்சி இருக்கு சீக்கிரம் அத நிறைவேத்துங்க , எங்களோட மன மார்ந்த வாழ்துக்கள் .
நீங்க இன்னும் இன்னும் பெரிய சிகரங்கள தொடணும் , பெரிய சாதனைகளை பண்ணவும் எங்க எல்லரோடா மனமார்ந்த வாழ்ததுகள்..
இன்னிக்கி இவங்களோட நம்ம பயணம் உங்களுக்கு பிடிச்சி இருக்கும்.
அடுத்து ஒரு கலாட்டா எழுத்தாளரோட சீக்கிரமே வரேன் ..