• About us
  • Contact us
Tuesday, June 2, 2026
Facebook social icon Twitter X social icon Instagram social icon Pinterest social icon
Aalonmagari
  • Login
  • Register
  • Home
  • கதை
    • நாவல்
    • தொடர்கதை
    • சிறுகதை
  • கிறுக்கல்கள்
  • புத்தகம் வாங்க
  • நேர்காணல்
    • எழுத்தாளர் நேர்காணல்
    • வாசகர் நேர்காணல்
  • மகரியின் பார்வையில்
  • நாமளும் சமைக்கலாம் தப்பில்ல
  • English
    • Short story
No Result
View All Result
  • Home
  • கதை
    • நாவல்
    • தொடர்கதை
    • சிறுகதை
  • கிறுக்கல்கள்
  • புத்தகம் வாங்க
  • நேர்காணல்
    • எழுத்தாளர் நேர்காணல்
    • வாசகர் நேர்காணல்
  • மகரியின் பார்வையில்
  • நாமளும் சமைக்கலாம் தப்பில்ல
  • English
    • Short story
No Result
View All Result
Aalonmagari
No Result
View All Result

இன்னிலா போஸ்

March 16, 2024
Reading Time: 1 min read
0
இயல்புகள்
adventure thrill book to buy

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் .. 

 

இன்னிக்கி நம்ம பாக்க போற எழுத்தாளர் செம மாஸ் .. அவங்க பேரும் செம மாஸ் அண்ட் ஸ்வீட் ஆக இருக்கும் . ரொம்ப நாளா கண்ணில் படும் எழுத்தாளர் ஆனா அவங்க கதைகளை நான் படிச்சது இல்லை . ஏன் இவ்ளோ நாளா இவங்க கதைகளை படிக்கமா இருந்தேன் இவங்க கதை படிக்க அப்பறம் ரொம்ப வருத்தப்பட்டேன் . 

 

அவ்வளவு அருமையான மொழி கையாளுதல் இவங்க பண்றாங்க . கதைல வழக்கமான விஷயங்கள் கூட ஒரு சிலர் கை வழி நம்ம படிக்கறப்போ அதி அற்புதமா இருக்கும் . இவங்க கைல  அந்த மேஜிக் இருக்கு .. 

 

கலப்படம் இல்லாத தமிழ் சொற்கள், தெளிவான கதை போக்கு, அதுல எதிர்பாராத திருப்பங்கள், மனசுல பதியும் உணர்வுகள், படிச்சு பத்து நாள் ஆனாலும் அந்த தாக்கம் விட்டு இப்போவும் வெளிய வரவிடாத கதையம்சம்னு நிறைய இப்படி சொல்லலாம் .. 

 

யாருன்னு தெரிஞ்சதா ?

 

வாங்க உள்ள போய் பாக்கலாம் .. 

 

எழுத்துப்பயணத்தில் நம்முடன் இன்று….

 

1. புனைபெயர் – இன்னிலா போஸ்

 

2. இயற்பெயர் – இன்னிலா. திருமணத்திற்குப் பிறகு இன்னிலா சந்திரபோஸ்.. இதை மட்டும் கொஞ்சமாக  சுருக்கி விட்டேன். அதனால் இன்னிலா போஸ்.

 

3. படிப்பு – B.Sc கணிதம்

 

4.தொழில் – இல்லத்தரசி

 

5.பிடித்த வழக்கங்கள் –

நிறைய பாட்டு கேட்பது, கொஞ்சமாக வரைவது, அதைவிட கொஞ்சமாக படிப்பது

 

6. கனவு –

அந்தந்த வயதில் மாறிக் கொண்டே இருக்கிறது. சில நிறைவேறின. சில காற்றோடு கலந்து விட்டன. இப்போது கூட நிறைய கனவுகள் உண்டு. கனவு காணச் சொன்னது அப்துல் கலாம் ஐயாவாச்சே.. மீற முடியுமா.. சொல்லுங்க.

 

7. உங்களுக்கு ஏற்பட்ட எழுத்தின் மீதான் தாக்கம் என்ன?

தமிழின் மேல் உள்ள பிரியம்.. அதனால் தான் எழுத ஆரம்பித்தேனோ?

 

8. உங்களின் வாசிப்பு அனுபவம் பற்றி –

கல்கி, பாலகுமாரன், ரமணி சந்திரன், இந்திரா சௌந்தர்ராஜன் போன்ற ஜாம்பவான்களின் படைப்புகளில் சிலவற்றை ரசித்து ரசித்து படிக்கும் பாக்கியம் பெற்ற  ரசிகைகளில் நானும் ஒருத்தி தான்ங்க.

 

9. உங்களை எழுத தூண்டியது எது?

பள்ளியில் படிக்கையில், கட்டுரை எழுதும் போது நடுவில் ஏதாவது நாலுவரி கிறுக்கி.. கொடேஷனாக மாற்றி விடுவேன். என் தமிழ் ஆசிரியை.. தலையில் கொட்டி தண்டிக்காமல்.. பாராட்டியதே.. மேலும் மேலும் கிறுக்க வைத்தது. (கவிதை என்ற பெயரில்)

 

10. எப்போது எழுத ஆரம்பித்தீர்கள்?

எப்போது என்று ஞாபகம் இல்லை. அவ்வப்போது தோன்றும் வரிகளை, கவிதை என்று நினைத்து.. ஒரு நோட்டில் எழுதி எழுதி அலமாரிக்குள் புதைத்து வைப்பேன்.

பிரதிலிபி என்ற தளம் இருப்பதை தோழி மூலமாக அறிந்த பின்பு பயத்தோடே.. பதிவிட ஆரம்பித்தேன். அதுவும் கவிதைகள் மட்டுமே.

 பிரதிலிபி மூலமாக முதன் முதலில் இரு நண்பர்கள் கிடைத்தார்கள். அவர்களின் ஊக்க வார்த்தைகளால் மட்டுமே கதைக்குள் எட்டு வைத்தேன் எனலாம்.(நன்றி நண்பர்களே)

 

11. உங்களது எழுத்தை படித்தவரிடம் அதன் தாக்கத்தை உணர்ந்தது உண்டா?

சில வாசகர்களின் விமர்சனம் மூலம், சில சமயம் உணர்ந்திருக்கிறேன்.

 

12 . எழுத்தால்  எதையும் மாற்ற முடியும் என்று நம்புகிறீர்களா ?

கண்டிப்பாக. பேனா முனை எப்போதும் வாளை விட கூர்மை தான். அதனாலேயே என் எழுத்துக்களில் மிகவும் கவனத்தோடே இருக்கிறேன்.

 

13 . மின்னூல் , பதிப்பு புத்தகம் . இவற்றினைப்  பற்றி  உங்கள் கருத்து என்ன ?

பதிப்பு புத்தகம் அன்னை போல. மின் புத்தகம் குழந்தை.

பதிப்பகத்தாரை அணுகுவது என்பது என்னைப் போன்ற சிலரால் இயலாமல் போகையில்.. மின் புத்தகம் என்பது மிகப் பெரிய வரம் தான்.

 

14. நீங்கள் பதிபித்த பதிப்பு  புத்தகங்கள் எத்தனை ? (அவற்றை பெற தொடர்பு கொள்ள ) –

ஐந்து நாவல்களும் ஒரு கவிதைப் புத்தகமும் பதிப்பித்துள்ளேன். அனைத்துமே மின் புத்தகங்கள் மட்டுமே.

ISBN number உண்டு.

 பதிப்பு புத்தகத்திற்கான வாய்ப்பு இன்னும் கிட்டவில்லை.

 

15. ஆடியோ புத்தகங்கள் மீதான உங்கள் பார்வை என்ன ?

ஓரிடத்தில் அமர்ந்து படிக்கும் நேரம் இல்லாத பொழுதுகளில்.. நாம் நம் வேலைகளை செய்தபடி கேட்கும் வாய்ப்பினைத் தரும் வல்லமை பெற்றவை. வரவேற்கிறேன் கண்டிப்பாக.

 

16 . எழுத்தாளரின் வெற்றி என்பது எதன் அடிப்படையில் இருக்கிறது ?

என்னைப் போன்ற கத்துகுட்டி எழுத்தாளர்களுக்கு.. கதைகளை படிக்கும் வாசகர்களின் மனதில் இடம் பிடிப்பதே வெற்றி தான்ங்க.

 

17 . உங்கள் படைப்பில் எதையாவது  எழுதி இருக்க வேண்டாம் என்று எண்ணியதுண்டா ? 

இது வரை இல்லைங்க. இனியும் அத்தவறை செய்ய மாட்டேன்.

 

18 . உங்களின் படைப்புகளில் எது உங்களுக்கான அங்கீகாரத்தை பெற்று கொடுத்ததாக நினைக்கிறீர்கள் ?

ஆன்மீகத்தை உள்ளடக்கி நான் எழுதிய பூச்சடைக்காரி நாவல்.

பக்தியை ஊட்டியதாக பலரும் பாராட்டியது மகிழ்வோடு ஊக்கத்தையும் ஊட்டியது.

 

19 . கதை கரு மற்றும் கதா பத்திரங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள் ? அதற்கான மெனக்கெடல் எந்த அளவிற்கு கொடுப்பீர்கள் ?

 நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளில் சில நம்மை தாக்கி.. அவற்றை உற்று கவனிக்க வைக்கும். அவை தான் என் கதைக்கான கருவாகி விடுகின்றன பல நேரங்களில். கதாபாத்திரங்களைக் கூட முடிந்த அளவு நல்லவர்களாக உருவாக்கவே மெனக்கெடுவேன்.

 

 20  . நீங்கள் பெற்ற போட்டி பரிசுகள் –

 முகநூல் கவிதைப் போட்டிளில் சில பரிசுகள் பெற்றிருக்கிறேன்.

 குவிகம் நடத்திய பெண்களுக்கான சிறுகதைப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளை அச்சில் ஏற்றி புத்தகமாக்கினர். அவற்றில் என் கதையும் ஒன்று.

பிரதிலிபியின் கதைப் போட்டிகள் சிலவற்றில் சிறப்புப் பரிசு பெற்றுள்ளேன்.

 

21.  எதிர்வினை கருத்துக்களை எப்படி கையாள்கிறீர்கள்?

இதுவரை எதிர்வினைக் கருத்துக்கள் வரவில்லைங்க. (அதற்கு இன்னும் வளர வேண்டுமென்று நினைக்கிறேன்.)

 

22  – நீங்கள் அதிகம் எழுத விரும்புவது எது ? (கதை , கவிதை, தொடர்கதை, நாவல் , சிறுகதை)  ஏன் ?

கவிதை, சிறுகதை.

குறைந்த நேரத்தில், குறிப்பிட்ட நேரத்தில் முடித்து விடலாமே.

 

23 – ஏன் மாறுபட்ட கதைக்கரு கொண்ட கதைகள் வாசகர்களை அதிகமாக சென்றடைவதில்லை?

பொழுது போக்குக்காக படிக்கும் வாசகர்களே அதிகம் என்பதால் இருக்கலாம்.

 

24 .  குடும்பம் காதல் சாராத கதைகளை நீங்கள் எழுதியது உண்டா? (படைப்பின் தலைப்பு)

ஆன்மீகம், மர்மம்.. எந்த களத்தைத் தேர்ந்தெடுத்தாலும் குடும்பத்தோடே கதையினை நகர்த்திப் பயணிக்கிறேன்.

1. யானைப் பாறைக்குப் பின்னால்(ஆன்மீகம், மர்மம்)

2 .பூச்சடைக்காரி(ஆன்மீகம், மர்மம்)

3 .காத்திருப்பேன் கிணற்றுக்குள்ளே(திகில், மர்மம்)

 

25. அனைவரும் படிக்க வேண்டிய புத்தகங்களாக நீங்கள் கருதுவது என்ன என்ன?

நீங்கள் எனக்குச் சொல்லுங்கள் நண்பர்களே..

 

26. ஓர் படைப்பின் வார்த்தை அளவுகள் பற்றி உங்களது கருத்து என்ன?

படைப்பவரின் எண்ணத்தை எத்தனை வார்த்தைகளில் கொண்டு வர முடியும் என்பது.. அவருக்கே தெரிந்த ஒன்று. ஆகையால் வார்த்தை அளவுகள் படைப்பவருக்கே உரித்தானது. இது என் தனிப்பட்ட கருத்து.

 

27  . எழுதுபவர்கள் பெறும்பாலும் பயன் அடைவதில்லை. அவர்கள் பயன்பெற  நீங்கள் கூறும் சில யோசனைகள் என்ன?

நீங்கள் தான் அந்த யோசனையை எனக்குக் கூற வேண்டும். நானும் கூட சின்ன எழுத்தாளராச்சே..

 

28  . உங்கள் தனி தன்மை என்று தாங்கள் கருதுவது என்ன ?

கதைகளுள் ஆன்மீகத்தை கலப்பதாக இருக்கக் கூடும்.

 

29. உங்களது கவிதை , பிடித்த வாக்கியம் , பழமொழி (பைனல் பஞ்ச்).

என் பெயருக்கு நானே எழுதிய கவிதை (வேறு யாரும் எழுத மாட்டாங்களே…)

நிலவின் மறுபக்கம்

இருளா??

இல்லை இல்லை

இன்னொரு நிலவாய்

நான்

இன்(நிலா)

 

பிடித்த வாக்கியம்

வாழ்வென்றால் போராடும் போர்க்களமே..

இரவானால் பகலொன்று வந்திடுமே..

 

பழமொழி

தூரத்துப் பச்சை

கண்ணுக்கு குளிர்ச்சி தான் எப்போதும்

 

30 . உங்கள் படைப்புகள் (லிங்க்குகளுடன்)   (Youtube also ): 

 

மின்நூல் லிங்க் :

 http://www.amazon.in/Innila-Bose/e/B084L5XXWY%3Fref=dbs_a_mng_awm_scns_share

 

பிரதிலிபி லிங்க் :

https://tamil.pratilipi.com/user/e8cofrk0el?utm_source=android&utm_campaign=myprofile_share

 

என்னையும் எழுத்தாளராக அறிமுகப் படுத்தும் ஆலோன் மகரி அவர்களுக்கும், என்னை ஊக்கப் படுத்திக் கொண்டிருக்கும் அன்புள்ளங்களுக்கும் நன்றி.

இன்னிலா போஸ்

 

இதோ நம்ம சூப்பர் மாஸ் எழுத்தாளர் இன்னிலா போஸ் .. 

 

ஆனாலும் அம்மா உங்களுக்கு இவ்ளோ தன்னடக்கம் இருக்க கூடாது .. உங்கள போல ஒரு எழுத்தாளர நான் தெரிஞ்சிக்க இது ஒரு அருமையான வாய்ப்பா அமைஞ்சது எனக்கு ரொம்ப சந்தோஷம்.. 

 

நம்ம இன்னிலா அம்மா எழுத்து வேற லெவல் பீல் குடுக்கும் .. ஒரு சில எழுத்துல தான் நம்ம மனச துல்லியமா தொட்டு கூட்டிட்டு போகும் . அப்டி ஒரு எழுத்து நம்ம இன்னிலா அம்மா கிட்ட இருக்கு .. 

 

“பூச்சடைக்காரி “ இந்த கதைல இவங்க குடுத்து இருக்க நல்ல விஷயங்கள், ஜென்மங்கள் கடந்த தொடர்பு, நல்ல எண்ணத்தோட விளைவு, சுயநலமா இருந்தா என்ன நடக்கும், கடவுள் மேல வைக்கற நம்பிக்கை, அன்புனு ஒவ்வொரு விஷயமும் அவ்ளோ அற்புதமா சொல்லி இருக்காங்க .. 

 

நான் இந்த கதை படிச்சி ஒரு மாசம் இருக்கும், ஆனாலும் இப்போ நினைச்சாலும், படிக்கறப்போ நான் உணர்ந்த உணர்வுகள் தான் இப்போவும் மனசுல வருது. 

 

அழகான எழுத்து நடை, தெளிவான கதை போக்கு, குழப்பாத சூழ்நிலை விளக்கங்கள், ஒவ்வொரு கதா பத்திரமும், அதுக்கு காட்டின வித்தியாசமும் ரொம்ப நல்லா இருந்தது. 

 

கடவுள உண்மையான அன்போட யார் வேணா நெருங்க முடியும்னு இதுல அழகா காட்டி இருப்பாங்க.. தேவை இல்லாத மிரட்டலோ, மாயாஜால காட்சிகளோ இல்லாம இயல்பா போனது இந்த கதைக்கு பெரிய பிளஸ் .. 

 

அம்மா நீங்க சீக்கிரம் பதிப்பு புத்தகம் போடுங்க.. உங்களோட எழுத்துல பல அற்புதமான படைப்புகளை நாங்க எதிர்பாக்கறோம்.. 

 

உங்க எழுத்து பயணம் மென்மேலும் உயரந்தபடி போகணும் . 

 

உங்களோட எல்லா முயற்சிகளுக்கும் எங்களோட மனமார்ந்த வாழ்த்துகள் .. 

 

இன்னிக்கி நம்ம இன்னிலா அம்மா கூட போன பயணம் உங்களுக்கு பிடிச்சி இருக்கும்னு நினைக்கறேன் .. 

 

 

அடுத்து ஒரு ஸ்ட்ரிக்ட் எழுத்தாளர கூட்டிட்டு வரேன் .. 

Click to rate this post!
[Total: 0 Average: 0]
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Facebook Twitter Email
Post Views: 3,527

aalonmagarii

Subscribe
Login
Notify of

0 Comments
Newest
Oldest

About Me

Aalonmagari

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Categories

  • English (5)
  • Food Recipes (3)
  • Short story (2)
  • இன்னும் பல .. (5)
  • எழுத்தாளர் நேர்காணல் (31)
  • கதை (384)
  • கிறுக்கல்கள் (107)
  • சிறுகதை (10)
  • தொடர்கதை (164)
  • நாமளும் சமைக்கலாம் தப்பில்ல (7)
  • நாவல் (212)
  • நேர்காணல் (56)
  • புத்தகம் வாங்க (9)
  • மகரியின் பார்வையில் (5)
  • வாசகர் நேர்காணல் (25)

Popular

  • இயல்புகள்

    தேன் நிலா

    560 shares
    Share 224 Tweet 140
  • 1 – அகரநதி

    505 shares
    Share 201 Tweet 126
  • 1 – அர்ஜுன நந்தன்

    482 shares
    Share 192 Tweet 120
  • 1 – வலுசாறு இடையினில் 

    454 shares
    Share 181 Tweet 113
  • 1 – காற்றின் நுண்ணுறவு

    399 shares
    Share 159 Tweet 100
  • Terms & Conditions
  • Privacy Policy
Email us : aalonmagari@gmail.com

Copyright © 2026. Aalonmagari. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • கதை
    • நாவல்
    • தொடர்கதை
    • சிறுகதை
  • கிறுக்கல்கள்
  • புத்தகம் வாங்க
  • நேர்காணல்
    • எழுத்தாளர் நேர்காணல்
    • வாசகர் நேர்காணல்
  • மகரியின் பார்வையில்
  • நாமளும் சமைக்கலாம் தப்பில்ல
  • English
    • Short story
  • Login
  • Sign Up
Facebook social icon Twitter X social icon Instagram social icon Pinterest social icon

Copyright © 2026. Aalonmagari. All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Please wait...

Subscribe to our newsletter

Want to be notified when our article is published? Enter your email address and name below to be the first to know.
SIGN UP FOR NEWSLETTER NOW
error: Content is protected !!
wpDiscuz
0
0
Would love your thoughts, please comment.x
()
x
| Reply