வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் ..
இன்னிக்கி நம்ம பாக்க போற எழுத்தாளர் .. நான் இவங்க எழுத்த சமீபமா தான் படிச்சேன் . முன்ன ஒரு சிறுகதை மட்டும் படிச்சி இருந்தேன் . இப்போ அழகான ரெண்டு தொடக்கத்தையும் படிச்சிட்டு உங்ககிட்ட பகிர்ந்துக்க வந்து இருக்கேன்.
இவங்க எழுத்து நடை ரொம்ப அருமையா இருக்கும் . ரெண்டாவது கதைக்காக னு ஹீரோவ பில்ட் அப் பண்ணாத எதார்த்தமான அறிமுகம். நாயகிகளை உருவாக்கற விதம். வெறும் அழகு பாதுமையா காட்டாம அவங்க திறமைகளுக்கு முக்கியம் குடுத்து கதையை நகர்த்தும் விதம் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்சி இருந்தது.
இன்னொரு முக்கியமான விஷயம் இவங்க கணக்குல புலி .. “கணிதம்“ சொல்றேன் . அதுல ஆராய்ச்சி வேற பண்றாங்கப்பா .. நமக்கு இப்போ வரை வாய்பாடே ததிகினா தான் .. அதுல இவங்க PHd பண்றாங்க பா ..
யாருன்னு தெரிஞ்சதா ? வாங்க உள்ள போய் பாக்கலாம் ..
எழுத்துப்பயணத்தில் நம்முடன் இன்று….
1. புனைபெயர் – கனவு காதலி ருத்திதா
2. இயற்பெயர் – அனிதா
3. படிப்பு – ஒவ்வொண்ணா எழுத நினைச்சா போகும் ட்ரெயின் மாதிரி… சோ PhD… (Maths ) இதோட சுருக்கமா நிறுத்திக்குவோம்…
4. தொழில் – இப்போதைக்கு முழுநேர ஆராய்ச்சியாளர்;
5. பிடித்த வழக்கங்கள் –
பிடித்த வழக்கங்களா… அப்படின்னா பெரிய லிஸ்டே போடலாமே… ஆக்சுவலா எல்லாமே பிடிக்கும் இருந்தாலும் கேள்வின்னு வர்றப்போ எதெல்லாம் ரொம்பப் பிடிக்கும்ன்னு யோசிச்சு யோசிச்சு லிஸ்ட் போட வேண்டியதா இருக்குது…
ம்ம்ம்.. பிடிச்ச விஷயங்கள்… எனக்கு வரையுறது, எதாவது கைவினைப் பொருட்கள் செய்யுறது, ட்ரெஸ் டிசைன் பண்றது இதெல்லாம் ரொம்பப் பிடிக்கும்.. கூடவே ஹவுஸ் கீப்பிங், கார்டனிங் இதுவும் பேவரைட் விஷயங்கள் தான்… இதெல்லாம் பாருங்க வீட்டுக்குள்ளேயே இருந்து செய்யற வேலைகள்.. சோ சிம்பிளா சொல்லணும்ன்னா வீட்டுக்குள்ள இருக்கிறதே பிடித்த விஷயம் தான்.. ஹா ஹா… ரொம்ப டீப்பா எக்ஸ்ப்ளெயின் பண்ணிட்டேனோ?!
6. கனவு –
ஒவ்வொரு சமயத்துல ஒவ்வொரு கனவு இருந்திருக்குது.. சூழ்நிலைகள், மனநிலையைப் பொருத்து அப்பப்போ மாறும் இந்த கேட்டகிரி.. இப்போதைக்கு என்ன கனவுன்னா இவ்ளோ பரபரப்பான வாழ்க்கையில நிம்மதியா தூங்கி எழுந்திரிக்கிறதுக்கு ஒரு ரெண்டு நாள் லீவ் கிடைக்கணும்… அது கனவாவே போய்டுமோன்னு தான் பயமே.. ஏன்னா மீ தூங்கிங் ஜஸ்ட் நாலு அவர்ஸ் பெர் டே…
(உடம்பு பாத்துகோங்க சிஸ் ..)
7. உங்களுக்கு ஏற்பட்ட எழுத்தின் மீதான தாக்கம் என்ன?
எழுத்தின் மீதான தாக்கம்… இந்த கேள்விக்கு ஒரு வாசகியா பதில் சொல்ல விரும்புறேன்.. பல நேரங்களில் நாம் வாசித்த கதைகள், அதில் வரும் மாந்தர்கள் நிலையில் நாம் வந்து நிற்க கூடிய சூழல் உருவாகும்.. அப்பவெல்லாம் நிஜம், நிழல் ரெண்டையும் கம்பேர் செஞ்சு ரொம்ப ப்ராக்டிக்கலா முடிவெடுத்திருக்கிறேன்… அதெல்லாம் ஓரளவு சரியாவும் இருந்திருக்குது… நெறய தடவை தனியா இருக்கிறப்போ, தடுமாறுறப்போ, இப்படி பல சூழ்நிலைகளில் எழுத்தும், வாசிப்புமே என்னோட சாய்ஸ்…
8. உங்களின் வாசிப்பு அனுபவம் பற்றி –
என்னைப் பொருத்தவரை வாசிப்பு ஒருவித சுயஇன்பம், ஒருவித போதை.. ஆக்சுவலா இந்த போதைக்கு அடிக்ட் ஆகிட்டா வெளியே வரவே முடியாது.. ஆனா சரியான புத்தகத்தை தேர்வு செய்து படிச்சா மனசும், உடம்பும் ரொம்பவே ஆரோக்கியமா இருக்கும்.. இல்லைன்னா டண்டணக்கா தான்… என்னோட வாசிப்புக்கு அப்பாதான் வழிகாட்டி… வழக்கமான காதல் கதைகளை எப்பவும் அவர் எனக்கு சஜெஸ்ட் பண்ணினதே இல்லை.. வாழ்வியல், எதார்த்தம், தனிமனித ஒழுக்கம் மாதிரியான கதைகளைத் தான் வாசிக்க வலியுறுத்துவார்.. இன்னைக்கு சமுதாயத்துல ஒரு மதிப்புமிக்க பொண்ணா, நெறய பேருக்கு முன்னுதாரணமா இருக்கிறேன் அப்படின்னா முழுக்க முழுக்க காரணம் அப்பாவும் அவர் சஜெஸ்ட் செய்த புத்தகங்கள் தான்..
9. உங்களை எழுத தூண்டியது எது?
இது ஒரு நல்ல கேள்வி… எழுதத் தூண்டியது எதுன்னா என்னோட தனிமை… ஆக்சுவலா வாழ்வளித்த வள்ளல் கதை படிச்சிருந்தா தெரியும் நான் எந்த மாதிரியான நிலையிலிருந்து மீண்டு வந்திருக்கிறேன்னு.. அப்போ அந்த மாதிரி வேதாவோட நான் வாழ்ந்த வெறுப்பான நேரங்களில் என் தனிமையையும், வெறுமையையும் போக்கிக்கிறதுக்காக எழுத ஆரம்பிச்சேன்.. இப்போ அதுவே ஒரு தன்னம்பிக்கையை அதிகரிக்கிற ஒரு எனர்ஜி டிரிங் ஆகிருச்சு…
10. எப்போது எழுத ஆரம்பித்தீர்கள்?
அபீஷியலா எழுதத் தொடங்கின நாள்ன்னு பார்த்தா ஜனவரி 2018.
11. உங்களது எழுத்தை படித்தவரிடம் அதன் தாக்கத்தை உணர்ந்தது உண்டா?
ஆப்வியஸ்லி… காவியங்கள்ன்னு சொல்லிக்கிற அளவுக்கு நான் இன்னும் எழுதத் தொடங்கலைன்னாலும் ரீட் பண்ணினவங்க அதைப் பத்தி சிலிர்த்துப் பேசுறப்போ ரொம்பவே நெகிழ்ச்சியா இருக்கும்.. உதாரணமா விஷ்வா அப்படின்னு ஒரு வார்த்தைக்கு உருகுற ஸ்டூடண்ட்ஸ் நெறைய பேர் இருக்கிறாங்க.. அந்தக் கதை பிரதிலிபி ப்ரீம்யம்ல இருக்கிறதால ரீட் பண்ண முடியலைன்னு வாரத்துக்கு ஐந்தாறு மெயில் வந்துட்டே இருக்குது.. அந்த அளவுக்கு அவர் பேவரைட் எல்லாருக்கும்… “உயிரே ஒரு வார்த்தை சொல்லடா” நட்சத்திராவுக்காக சண்டை போட்ட பசங்க பல பேர்.. அதே மாதிரி இன்னொரு கதை எழுத சொல்லிட்டு இருக்கிறாங்க… அவளை பார்த்ததுக்கு அப்புறம்தான் காதல் மேல நம்பிக்கை வந்து காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு ரீசன்டா ஒருத்தங்க மெசேஜ் பண்ணினப்போ செம ஹாப்பி.. அவங்க பொண்ணு பெயர் கூட நட்சத்திரா தானாம்..
12 . எழுத்தால் எதையும் மாற்ற முடியும் என்று நம்புகிறீர்களா ?
ஆக்சுவலி திஸ் சென்டன்ஸ் டிபன்ட்ஸ் அபான் தி ரைட்டிங்க்ஸ் வீ ரீட்… வெறுமனே காதல், குடும்பம்ன்னு வாசிச்சா நிச்சயமா அந்த இடத்துல எழுத்தோட இம்பாக்ட் ஸீரோ தான்… சிலிர்ப்பைத் தவிர வேறெந்த சிறப்புமில்லை அங்கே.. வாழ்வியல், சக மனிதன், தனிநபர் பத்தின விஷயங்கள் கொண்ட எழுத்துகள் நிச்சயமா ரொம்பவே தாக்கத்தையும், மாற்றத்தையும் ஏற்படுத்தும்..
13 . மின்னூல் , பதிப்பு புத்தகம் . இவற்றினைப் பற்றி உங்கள் கருத்து என்ன ?
ரெண்டுமே நமக்கு பரிச்சயம் தான்.. ஆனாலும் என்னை மாதிரி சோம்பேறிக்கு இதை ரெடி பண்ணவே சலிப்பா இருக்கும்.. பட் அஸ் எ ரீடரா பதிப்பு புத்தகம் தான் ரொம்பவே க்ளோஸ் டூ ஹார்ட்… என்னதான் ஈ-புக்ல படிச்சாலும் அந்த பீல் வரவே வராது.. பேசிக்கா நான் ஒரு புக் பர்சன்… ஆன்லைனில் பெரிய அளவில் படிச்சது இல்லை.. சோ என்னோட வோட் எப்பவும் பேப்பர் பேக் புத்தகத்துக்கு தான்..
14. நீங்கள் பதிப்பித்த பதிப்பு புத்தகங்கள் எத்தனை ? (அவற்றை பெற தொடர்பு கொள்ள )
இரண்டு புத்தகங்கள்;
இளவேனிற் தீஞ்சுடரே
விஜயசாலி
(ஸ்ரீ பதிப்பகம் மூலம் புத்தகமாக வந்தவை) – +91 7038304765
15. ஆடியோ புத்தகங்கள் மீதான உங்கள் பார்வை என்ன ?
ஈ-புத்தகம் மாதிரியே எனக்கு இந்த ஆடியோ புத்தகமுமே ரொம்ப புதுசு.. சோ பெரிய அளவில் எனக்கு கருத்து எதுவும் சொல்லத் தெரியல.. பட் என்னோட கதைகள் ஆடியோ புத்தகமா வெளியாகி இருக்குது.. லாஸ்ட் வீக் என்னோட கதையை சொந்தக் குரல்ல கேக்கிறப்போ ஒருவித சிலிர்ப்பாதான் இருந்துச்சு… மே பீ இன்னும் நெறய கதைகளைக் கேட்டா ஒரு தெளிவு கிடைக்கலாம்..
16 . எழுத்தாளரின் வெற்றி என்பது எதன் அடிப்படையில் இருக்கிறது ?
இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியலை.. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விஷயம் வெற்றியா இருக்கும்.. சிலருக்கு போட்டியில் ஜெயிச்சா அது வெற்றி, சிலருக்கு அதிக கமெண்ட்ஸ் வந்தா வெற்றி, இன்னும் சிலருக்கு அதிக ரிவியூ வந்தா அது வெற்றி.. என்னைப் பொருத்த வரைக்கும் உங்க கதையால் அல்லது அதில் சொல்லப்பட்ட கருத்தால் என் வாழ்க்கையில் இந்த இடத்தை சரியா எதிர்கொண்டேன் அப்படின்னு முகம் தெரியாத ஒருத்தர் மனசுல உக்காரணும்.. அந்த வெற்றியை அடையுறதுக்கு நான் இன்னும் ரொம்ப தூரம் ஓட வேண்டியது இருக்குது..
17 . உங்கள் படைப்பில் எதையாவது எழுதி இருக்க வேண்டாம் என்று எண்ணியதுண்டா ?
டெபனைட்லி…
“வாழ்வளித்த வள்ளல்” எழுதியிருக்க வேணாம்ன்னு பலதடவை நெனச்சிருக்கிறேன்…
பட் ஒரு வாசகியா “உயிரே ஒரு வார்த்தை சொல்லடா” கதை எழுதியிருக்க வேணாம்ன்னு நெனச்சிருக்கிறேன்.. நெறைய பசங்களுக்கு அது பேவரைட்டா இருந்தாலும் இப்போ வாசிச்சா எனக்கே என்மேல கோபமா வரும்.. ரொம்ப ஆளுமையான சுயமா சிந்திக்கிற பொண்ணை காதல் அப்படிங்கற பெயர்ல ரொம்ப சாதாரணமானவளா காட்டி, அவளோட சுயத்தைக் கொன்னுட்டோமோன்னு ஒரு குற்ற உணர்ச்சி, கூடவே ஆதங்கம்..
18 . உங்களின் படைப்புகளில் எது உங்களுக்கான அங்கீகாரத்தை பெற்று கொடுத்ததாக நினைக்கிறீர்கள் ?
நிச்சயமா “தாலாட்டும் காற்றே வா” தான்.. அதே அளவு அங்கீகாரத்தை இப்போ எழுதிட்டு இருக்கிற “பூமியிலே தேவதைகள்” கொடுத்ததா உணர்றேன் சில நாட்களா..
19 . கதைக் கரு மற்றும் கதாப்பாத்திரங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள் ? அதற்கான மெனக்கெடல் எந்த அளவிற்கு கொடுப்பீர்கள் ?
என்னோட கதைக்கரு எப்பவும் ஒண்ணுக்கு ஒண்ணு வித்தியாசமா தான் இருக்கும்.. எதிலேயும் ரிப்பிடீஷன் இருக்காது.. தினமும் கடக்கிற எதாவது ஒரு விஷயத்தை ஸ்கெலிட்டனா வச்சிட்டு அப்படியே மேலே லவ், சென்டிமென்ட்ன்னு உடம்பை வடிமைச்சிடுவேன்… மெனக்கெடல் எல்லாம் தினமும் தூங்காம உக்கார்ந்து யோசிச்சு நோட்டுல எழுதி வைக்கிறது தான்… மத்தபடி கூகிளில் தேடுறது எல்லாம் எனக்கு கொஞ்சம் போரா இருக்கும்.. சோ தெளிவா தெரிஞ்ச விஷயங்களை மட்டுமே கேட்டு கன்பார்ம் பண்ணிட்டு எழுதுவேன்… அண்ட் ஒவ்வொரு காட்சியையும் முன்னாடியே தெளிவா ப்ளான் பண்ணிடுவேன்.. உதாரணமா என் பேராசிரியர் – கல்லூரி மாணவி காதல் கதையில் ஒரு காட்சியில் அவருக்கும் அவளுக்கும் FLAMES போட்டு HoDகிட்டே மாட்டிக்கிற மாதிரி முன்னாடியே யோசிச்சு வச்சேன்… சோ Vishwa – Mithra அப்படிங்கற அவங்களோட பெயரை Vishwakanthan – Mithra Kumariன்னு மாத்தினேன்.. இப்படி சின்ன சின்ன விஷயத்தையும் ரொம்பவே உன்னிப்பா பார்ப்பேன்.. மேக்ஸிமம் லாஜிக்கல் மிஸ்டேக் வரக் கூடாதுன்னு நெனைப்பேன்.. ஆனாலும் சில தவிர்க்க முடியாத பிழைகள் வரத்தான் செய்யுது…
20 . நீங்கள் பெற்ற போட்டி பரிசுகள் –
நான் பெரிய அளவுல போட்டிகளில் பங்கேற்றது கிடையாது… பட் கலந்துகிட்ட சில போட்டிகளிலும் பிரதிலிபி கதைத் திருவிழாவில் “அமைதியாய் ஒரு அழிவு” கதை , பட்டுகோட்டை பிரபாகர் அவர்களால் ஆறுதல் பரிசுக்காக தெரிவு செய்யப்பட்டதைத் தான் எழுத்துப் பயணத்தின் உச்சபட்ச அங்கீகாரம் அண்ட் பரிசா கருதுறேன்…
21. எதிர்வினை கருத்துக்களை எப்படி கையாள்கிறீர்கள்?
எப்படி கையாளுறேன்?? கூட இருக்கிறவங்களை டார்ச்சர் பண்ணி தான்… ஹா ஹா… ஆரம்பத்திலே அப்படி தான் செஞ்சிட்டு இருந்தேன்.. இப்போ கொஞ்சமா மெச்சூரிட்டி வந்துடுச்சு.. அண்ட் கையாளுற பக்குவமும் வந்தாச்சு… அவங்க சொல்ற விஷயம் சரியா இருந்தா நிச்சயமா கன்சிடர் பண்ணுவேன்.. அதர்வைஸ் இக்னோர் தான்.. அதிலும் நம்ம கைலாசா (ப்ளாக்) பக்கம் போனதிலிருந்து எது பத்தியும் கண்டுக்கிறது இல்லை..
22. நீங்கள் அதிகம் எழுத விரும்புவது எது ? (கதை , கவிதை, தொடர்கதை, நாவல் , சிறுகதை) ஏன் ?
இப்போதைக்கு தொடர்கதை எழுதுறது தான் ஈஸியா இருக்குது… மே பீ கடமைகளை நிறைவேத்தின பிறகு நாவல் முயற்சிக்கலாம்… ஆனா சிறுகதை மட்டும் சுட்டுப் போட்டாலும் வரமாட்டிக்குது…
23. ஏன் மாறுபட்ட கதைக்கரு கொண்ட கதைகள் வாசகர்களை அதிகமாக சென்றடைவதில்லை?
இதுபத்தி பலதடவை பேசியிருக்கிறேன்… பட் ஜெனரலா சொல்லணும்ன்னா யாருக்கும் எழுத்துகள் மூலமா வித்தியாசத்தை விரும்புறதில்லை.. வெறும் காதல், கல்யாணத்தோட ஈஸியா ரீட் பண்ணிட்டு கடந்துட நெனைக்கிறாங்க.. இதுக்கு நாம வாழ்ந்துட்டு இருக்கிற பாஸ்ட் மூவிங் வாழ்க்கையும் ஒருவித காரணமா இருக்கலாம்… அதனால கதையிலாவது ரொம்ப ஸ்மூத்தா போயிடலாம்ன்னு நெனைக்கிறாங்களோ என்னவோ?? சிலர் மாறுபட்ட கதைகளை ரசிக்கிறாங்க தான்… ஆனா அவங்க ஏனோ வெளிப்படையா பாராட்ட முன்வர்றது இல்லை.. அதனாலேயோ என்னவோ அவையெல்லாம் கவனிக்கப்படாமலேயே போய்டுது…
24. குடும்பம், காதல் சாராத கதைகளை நீங்கள் எழுதியது உண்டா? (படைப்பின் தலைப்பு)
இருக்குதே… எழுதியிருக்கிறேனே… ஒரு பானை சோறு, அமைதியாய் ஒரு அழிவு, கூர்முனை போர், மர்மராணி, காற்றில் எந்தன் கீதம், வாழ்வளித்த வள்ளல், விஜயசாலி, ரக்ஷாவின் ரகசியம்… இன்னும் ரெண்டு மூணு இருக்குது.. ஆனா பெயர் நினைவில்லை…
25. அனைவரும் படிக்க வேண்டிய புத்தகங்களாக நீங்கள் கருதுவது என்ன என்ன?
இது நபருக்கு நபர் மாறுபடும்… சோ நான் எதையும் சஜெஸ்ட் பண்ண விரும்பலை மா… சாரி..
26 . ஓர் படைப்பின் வார்த்தை அளவுகள் பற்றி உங்களது கருத்து என்ன?
எழுதுறவங்களுக்கும் வாசிக்கிறவங்களுக்கும் திருப்தியைத் தரணும்… சோ அக்கார்டிங் டூ மீ படைப்பின் வார்த்தைகள் doesn’t matter… ஆனாலும் வளவளன்னு இழுத்துட்டே போனா கொஞ்சம் கடுப்பாகும்…
27 . எழுதுபவர்கள் பெறும்பாலும் பயன் அடைவதில்லை. அவர்கள் பயன்பெற நீங்கள் கூறும் சில யோசனைகள் என்ன?
நான் இதுவரைக்கும் ரைட்டிங்க்ஸ் மூலமா ஒரு பைசாகூட சம்பாதிக்கலை டியர்… சோ எனக்கும் எதாவது பயன்பெற ஐடியா இருந்தா சொல்லுங்க…
28 . உங்கள் தனித்தன்மை என்று தாங்கள் கருதுவது என்ன?
சொந்த வாழ்க்கையில தனித்தன்மைன்னு பார்த்தா எந்த கடினமான சூழ்நிலையா இருந்தாலும் ஒரு விஷயத்தை சாதிக்கணும்ன்னு முடிவு பண்ணிட்டா கிவ் அப் பண்ணாம முடிச்சிடுவேன்… அண்ட் எந்த சூழ்நிலையிலேயும் யாரையும் காயப்படுத்த மாட்டேன்.. யார் எவ்ளோ டார்ச்சர் பண்ணினாலும் சகிச்சுப்பேனே தவிர்த்து பதிலுக்கு காயப்படுத்த மாட்டேன்.. எந்த உதவி கேட்டாலும் என்னோட லெவல் பெஸ்ட் ஹெல்ப் பண்ண ட்ரை பண்ணுவேன்..
ரைட்டிங்க்ஸ்ன்னு பார்த்தா என்னோட எழுத்து நடை எனக்கு ஒரு ப்ளஸ் பாயின்ட்.. கூடவே என்னோட கதாப்பாத்திர தேர்வு, கதாநாயகன்களை வடிவமைக்கிற விதம் ரெண்டுமே ஒரு ப்ளஸ்ன்னு நெனைக்கிறேன்…
29. உங்களது கவிதை , பிடித்த வாக்கியம் , பழமொழி (பைனல் பஞ்ச்).
The harder I Work, The more I live…
Spread positivity as much as you can..
30 . உங்கள் படைப்புகள் (லிங்க்குகளுடன்) (Youtube also ):
https://www.youtube.com/channel/UCILQMoC_vpaXmSNaYSpGOzg/videos
என்றும் அன்புடன்,
ருத்திதா
இதோ நம்ம கனவு காதலி கூட நாமளும் ஒரு சின்ன பயணம் போய்ட்டு வந்துட்டோம்..
எல்லா கேள்விகளுக்கும் தெளிவான பதில் குடுத்து அவங்க பார்வைல இருந்து எல்லாத்தையும் சகஜமா நம்ம கூட பேசினது நமக்கு ரொம்பவே சந்தோஷம்.
உங்க கண்ணோட்ட பதில்கள் எல்லாருக்கும் ஒரு பிறழ்ச்சி கோணம் காட்டி இருக்கும்.
உங்க எழுத்து நடை ரொம்ப அருமையா இருக்கு. நீங்க உருவாக்கற கதா பாத்திரங்கள் எல்லாமே ஒரு வித தனி தன்மை மற்றும் அதற்கான மதிப்போட கதைல வர்றது ரொம்ப அருமை.
ஷிவாணி கதா பாத்திரம், ராஜேஷ், சிவ பிரகாஷ், வனஜா எல்லாரும் ரொம்ப அருமை. அந்த கதைல நீங்க காட்டின வாழ்வியல் பிரச்சனை, அதை அவங்க கையாண்ட விதம், எல்லாமே எதார்த்தமா இருந்தது.
உங்களோட மத்த கதைகளும் சீக்கிரம் படிக்கணும்ங்கற ஆர்வம் உங்க எழுத்து தூண்டுது.
எடுக்கற கருவில் இருந்து குடுக்கற கடைசி அத்தியாயம் வரைக்கும் எல்லாமே உங்க மெனக்கெடல் நல்லாவே தெரியுது .
நீங்க சொன்ன லாஜீக் கதை முழுதும் பயணிக்கறது ரொம்ப அருமையா இருக்கு . சில எடங்கள்ல மீறினாலும் அது கதைக்கு தேவையான இடம் தான் . அதனால எந்த பிரச்சனையும் இல்லை சிஸ்டர் ..
நீங்க இன்னும் நிறைய கதைகள் எழுதணும் . நீங்க பெரிய பெரிய உயரங்களை தொட எங்களோட மனமார்ந்த வாழ்த்துகள் சிஸ்டர்..
சீக்கிரம் அடுத்து ஒரு அழகான எழுத்தாளரோட வரேன் ..