வாசகருடன் சில நிமிடங்கள் ..
1. பெயர் – ஷைலபுத்ரி. இரா
2. படிப்பு – M.Sc (CS)
3. தொழில்/வேலை – Home maker
4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது?
7 வயதில் இருந்து.
5. எந்த மாதிரியான சூழ்நிலையில் நீங்கள் வாசிப்பை நாடுவீர்கள்?
எல்லா நேரமும். பஸ்ல சாதாரண சுண்டல் பேப்பர் கிடைச்சா கூட வாசிப்பேன். என் தனிமையின் நண்பன்
6. உங்களின் வாசிப்பு என்பது பெரும்பாலும் புத்தகங்கள் வழியிலா? கணினி வழியிலா?
இரண்டுமே உண்டு. புத்தகங்களுக்கு முன்னுரிமை.
7. ஒரு வருடத்தில் எத்தனை புத்தகங்கள் வாங்குவீர்கள்? எத்தனை புத்தகங்களை படிப்பீர்கள் ?
வாங்குவது மாத நாவல் ஒரு 10 இருக்கும், படிக்கும் போது கணினிவழி எல்லாம் சேர்த்து வருஷத்துக்கு ஒரு 40-80 கதை படிச்சிருவேன்.
8. Ebook / Paperback புத்தகம் எதில் உங்களின் வாசிப்பு முழுமை பெறுவதாக உணர்கிறீர்கள்?
பேப்பர் பேக் தான். அதுல தான் ஒரு நிறைவு இருக்கும்.
9. வாசிப்பினால் உங்களுக்கு ஏற்பட்ட முதல் தாக்கம் என்ன?
அன்னைக்கு முழுக்க அதை பற்றியே யோசிச்சிட்டு இருந்தேன்.. Charlie and Chocolate Factory (chutti vikatan tamil version)
10. வாசிப்பினால் கிடைத்த அனுபவத்தினால் உங்களது செயல்பாடு / குணாதிசயங்கள் மாற்றிக் கொண்டது உண்டா? அது என்ன?
எனக்கு காதலிக்க கற்றுக்கொடுத்ததே புத்தங்கள் தான். எல்லா கதைலயும் ஒவ்வொரு ஹீரோவும் ஹீரோயின்னும் எப்படி எல்லாம் லவ் பன்றாங்க, எப்படி எல்லாம் காதலுக்கு போராடுறாங்கன்னு பார்த்து பார்த்து தான், என் காதல்ல வந்த பிரச்சனைகளை எதிர் கொண்டேன். இப்போ என் காதலுக்கு வயசு 12 இன்னும் கதைகள் எப்படி காதலிக்க வேண்டும்ன்னு சொல்லி கொடுத்துக்கிட்டே இருக்கு.
11. புதிய புத்தகங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள்? (அட்டை படம், தலைப்பு, ஆசிரியர், பதிப்பகம், முன்னுரை.. )
ஏற்கனவே படிச்ச ஆசிரியர்ன்னா அவங்க முதல் கதை அனுபவம் வச்சி அடுத்த கதை எடுப்பேன். புது ஆசிரியர்ன்னா தலைப்பு வச்சி எடுப்பேன்.
12. உங்களுக்கு எந்த வகையான புத்தகங்கள் / கதைகள் மிகவும் பிடிக்கும்?
(சுயசரிதம், மர்மம், திகில், சாகசம், காதல், குடும்பம், ஆன்மீகம், ரொமான்டிக், வரலாறு, புராண கதைகள், இலக்கியம் , சரித்திரம் , etc….)
எல்லா புக்கும் ஒரு ரவுண்ட் போவேன். காதல், புராணம், சாகச கதைகள் ரொம்ப விரும்பி படிப்பேன்.
13. “எழுத்தாளர்” என்பவர் உங்களுக்கு எப்படிபட்ட உறவாக தெரிகிறார்கள்?
பல பேர் நண்பர்கள், சில பேர் உறவுகள். எல்லாம் ஃபேஸ்புக் மகிமை.
14. உங்கள் வாழ்வில் முக்கிய திருப்பம் ஏற்படுத்திய புத்தகம்/கதை என்ன?
“என் கண்ணில் பாவையன்றோ” ரமணிசந்திரன் அம்மா ஆன்டி ஹீரோ கதை.
15. அன்றைய எழுத்தாளர்களுக்கும், இன்றைய எழுத்தாளர்களுக்கும் உங்களுக்கு தோன்றும் வித்தியாசங்கள் என்னென்ன?
அப்போ எல்லாம் செலெக்டட்டா புக்ல வரும். ஆசிரியர்கள் கூட தொடர்புல இருக்க முடியாது. அவங்க கிட்ட கதை நல்லா இருக்கு, இத மாத்திக்கலாமே-ன்னு சொல்லனும்ன்னு தோனும் ஆனா முடியாது. இப்போ அப்படி இல்ல நல்லதோ கெட்டதோ ஆசிரியர் கிட்ட பகிர்ந்துகிறோம். அவங்களும் அவங்களுக்கு தேவையான கருத்துகளை எடுத்துகிறாங்க.
16. இன்றைய எழுத்தினால் மொழி வளர்ந்து வருவதாக நினைக்கிறீர்களா?
கண்டிப்பா, சாதாரணமா ஃபேஸ்புக்ல கூட தமிழும் இல்லாம ஆங்கிலமும் இல்லாம கமெண்ட் பண்ணது போய் இப்போ எல்லாம் தமிழ்ல நானே டைப் பன்றேன். ஆங்கிலம் கலக்காம தமிழ் பேச முடியலன்னாலும் தமிழ்ல தமிழா தான் எல்லா இடத்துலயும் அதிகமா பயன்படுத்துறேன். முழு ஆங்கில போதைல இருந்து என்னை மீட்டெடுத்தது இன்றைய எழுத்துக்கள் தான்.
17. “வழக்குமொழி, பேச்சுமொழி, வட்டார மொழி, செந்தமிழ் மொழி” இதில் எது வாசிக்கும் போது உங்களுக்கு நெருக்கமாக இருக்கிறது? எந்த வகையை அதிகமாக வாசிப்பீர்கள்?
சாதாரண தமிழ்ல எழுதுனாலே எனக்கு போதும் தான், செந்தமிழ் ரொம்ப புடிக்கும். சரித்திர கதைகள் படிக்கும் போது பல நேரம் புல்லரிக்க வச்சிருக்கு.
18. வரலாற்று நாவல்கள் வாசிப்பீர்களா? எந்த நாவல் மிகவும் பிடிக்கும்?
காலேஜ் படிக்கும் போது முதல்ல பார்த்திபன் கனவு படிச்சி ரொம்ப ஆர்வம் ஆனேன். அதோட தொடர்ச்சியா சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் படிச்சேன். எல்லாமே வரலாற்று புனைவு தான். பிடிச்சது “பார்த்திபன் கனவு”.
இப்போ சமீபத்துல வேள்பாரி.
19. இன்றைய காதல்/குடும்ப நாவல்கள் பற்றிய தங்களின் கருத்து என்ன?
சாதாரண சின்ன சின்ன குடும்ப விஷயங்கள கூட ஒரு கதை தெளிவு படுத்துது. நம்ம மாமியாரோ நாத்தனாரோ நமக்கு சின்ன சின்ன டார்ச்சர் பண்ணும் போது அந்த ஹீரோயின் அவ மாமியார ஹாண்டில் பண்ண மாதிரி, நம்மளும் ட்ரை பண்ணுவோமான்னு யோசிக்க வைக்கிது. நல்ல குடும்ப நாவல், ரியல் லைஃப்க்கு நல்ல கைட் போல.
20. வித்தியாசமான கரு கொண்ட கதைகளை பிடிக்குமா? அறிவியல் சார்ந்த புத்தகங்கள்/ கதைகள் வாசிப்பீர்களா?
ரொம்ப புடிக்கும் நம்ம கதை படிச்சிட்டு இருக்கும் போது நம் கருவிழிகளை விரிய வைக்கிறது வித்தியாசமான கருவும், அறிவியல் கதையும் தான். இதுல எனக்கு ரொம்ப புடிச்சது மீனாட்சி அடைகப்பன் அக்காவோட அற்றை திங்கள், அப்பறம் அக்கினி பழத்தில் அரைத்த ஆரல்.
21. வாசிப்பதற்கு தினமும் நேரம் ஒதுக்குவீர்களா? எத்தனை நேரம்?
ஒரு நாளைக்கு சாதாரணமா 4 மணி நேரம் ஒதுக்குவேன். வேலை இருக்கும் நாட்கள்ல சில நேரம் மாறுபடும்
22. வாசித்த புத்தகம் / கதை பற்றி விமர்சனம் கொடுப்பீர்களா? எழுத்தாளரின் தவறுகளை எந்த விதத்தில் சுட்டிக்காட்டுவீர்கள்?
நிறைய விமர்சனம் கொடுத்துருக்கேன். ரொம்ப படிக்கவே முடியாத கதைன்னா ஆசிரியர்கிட்ட தனிபட்ட முறைல சொல்லி டிஸ்கஸ் பண்ணிக்குவேன். சின்ன சின்ன மிஸ்டேக்ஸ் இருந்தா, இருக்கு ஆனா இல்ல டெக்னிக்ல சொல்லிருவேன்.
23. உங்களுக்கு மிகவும் பிடித்த புத்தகங்கள் / கதைகள் (5)
தரமான எழுத்துகள் உள்ள எல்லா கதையும் பிடிக்கும் பாரபட்சம் கிடையாது. ஆனாலும் ரொம்ப ஸ்பெஷல் என் கண்ணில் பாவையன்றோ ரமணி சந்திரன் அம்மா கதை. அப்பறம். எனக்கு வாசிப்பை ஆரம்பிச்சி வச்ச சுட்டி விகடன்ல அப்போ தோணின்னு ஒரு ஆக்ஷன் காமிக் வரும். ரியா மூர்த்தி அக்கா காதல்காரா காத்திருக்கிறேன் கதை மாதிரி இருக்கும். அந்த காமிக். அதுவும் சார்லி அண்ட் தி சாக்லேட் ஃபேக்டரி தமிழ்ல வந்தது அது தான் எனக்கு படிக்க ஆர்வம் கொடுத்த கதைகள் அது எல்லாம் ரொம்ப ஸ்பெஷல்.
24. நீங்கள் வாசித்ததில் மறக்கமுடியாத / மனதை மிகவும் தொட்ட விஷயங்கள் / தகவல்கள் என்ன?
சில வரிகள் கதை மறந்தாலும் அப்படியே மனசுல இருக்கும். ஒரு கதைல மெத்தென்ற தோசையை சட்டினியில் இட்டு வாயில் இட்டான். தோசை பஞ்சாக கரைந்ததுன்னு ஒரு கிராமத்து கதைல எழுதிருந்தாங்க. இப்போ வரை ஒவ்வொரு வாட்டி தோசைக்கு மாவு அரைக்கும் போதும், தோசை ஊற்றும் போதும், சாப்பிடும் போதும் அது மாதிரி இருக்கான்னு யோசிப்பேன். இது மாதிரி நிறைய வரிகள் மனசுல இருக்கும். அந்த அந்த சூழ்நிலைல மனசுல இருந்து வெளிய வரும்.
25. இன்றைய எழுத்து உலகம் பற்றிய உங்களின் கருத்து என்ன?
ரொம்ப ரொம்ப நல்ல விஷயம். யார் வேணும்மானாலும் அவங்கவங்க கற்பனைய வச்சி கதை எழுதலாம் திறமை இருக்க யார்னாலும் மேல வரலாம்ன்னு சொல்றது நல்ல விஷயம் தான.
26. அன்று முதல் இன்று வரை வெகு சில ஆசிரியர்களின் புத்தகங்கள் / கதைகள் மட்டுமே அதிகமாக வாசகர்களை அடைகிறது. பல நல்ல விஷயங்களை கூறும் புத்தகங்கள் அதிக வரவேற்பு பெறுவதில்லை. நீங்கள் அந்த எழுத்தாளர்களை கொண்டாட மறுக்கும் காரணம் என்ன ?
ஃபர்ஸ்ட் இம்ப்ரஷனா இருக்கும். முதல் கதைல எழுத்து பிழை, கதைகளம்ல தெளிவு இல்லாம இருக்கது, இது மாதிரி சில பிரச்சணைகளை அவங்க எதிர் கொண்டு இருக்கலாம். அதை படிக்கும் வாசகர்களுக்கு அடுத்த கதையும் அதே மாதிரி இருக்குமான்னு டவுட் வந்துருக்கலாம். ஆனாலும் தன்னை மெருகேற்றி வரும் எந்த எழுத்தாளர்களையும் இந்த எழுத்து உலகம் கைவிடாதுன்றது தான் என்னோட எண்ணம்.
27. உங்களுக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்கள் (அன்றைய 5வர் & இன்றைய 5வர்) ஏன் அவர்கள் எழுத்து பிடிக்கும்? அவர்களின் சிறப்பாக நீங்கள் கருதுவது என்ன?
இத சொன்னா பஞ்சாயத்து ஆகிருமே.. பிடிச்சவங்கன்னு சொல்றத விட ஆச்சரிய பட வைத்தவர்கள் உண்டு. அன்றைய எழுத்தாளர்கள்ல ரமணிசந்திரண் அம்மா, கல்கி, ராஜேஷ் குமார் மட்டும் தான் நான் படிச்சேன் அவங்க கதை எல்லாம் ரொம்ப புடிக்கும்.
இப்போ எழுதுற எல்லா கதைலயும் வாவ் போட வச்சது என் குரு மீனாட்சி அடைக்கப்பன் அக்கா, என் பெஸ்டீ மேகவாணி.
அப்பறம் இவங்க கதைன்னா தரமா இருக்கும் படிக்காலாம்ன்னு எடுக்குறது ஸ்ரீகலா மேம் அருணா அக்கா ஆத்விகா பொம்மு அக்கா.
28. ஒரு புத்தகத்தில் / கதையில் நீங்கள் எதிர்பார்க்கும் முக்கியமான விஷயங்கள் என்னென்ன?
ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம இருக்கனும். நீங்க எழுதுறது ஒரு நிமிஷ கதையா இருக்கலாம், அத ஒரு பாரமரன், சரியா படிக்க தெரியாதவன், எழுத்து கூட்டி உங்க கதைய படிச்சாலும் நீங்க சொல்ல நினைச்ச விஷயம் அவங்களுக்கு போய் சேர்ந்துருக்கனும்.
29. எழுத்தில் ஆண் / பெண் பேதம் இல்லை. ஆனால் மொழி ஆளுமை உள்ள எழுத்து ஆண் எழுத்தாளர்களின் எழுத்தில் உள்ளதா அல்லது பெண் எழுத்தாளர்களின் எழுத்தில் உள்ளதா? உங்களின் தனிப்பட்ட கருத்து என்ன?
நான் பெர்சன்ல்லா பெண் எழுத்தாளர்கள் கதை தான் 95% படிப்பேன். சோ எனக்கு இதுக்கு நிஜமா பதில் தெரியல.
30. யாருடைய ஆட்டோகிராப் இருக்கிறது அல்லது வாங்க வேண்டும் என்று ஆசை?
இல்லாதவங்கல சொல்ல விரும்பல. இப்போ ப்ரெசண்ட் ஆக்டிவ் ரைட்டர்ஸ்ல
ஸ்ரீ கலா மேம். ஆத்விகா பொம்மு அக்கா, அருணா அக்கா.
31. கதைகளில் எதிர்மறை முடிவுகளை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? அதன் தாக்கம் உங்களுக்கு எப்படிபட்ட மனநிலையை கொடுக்கிறது?
கதை களம் பொறுத்து. ஒரு கதைக்கு எதிர்மறை முடிவு இருந்தா தான் கதைக்கு அழுத்தம் சரியா இருக்கும்ன்னா இருக்கட்டும்.
32. ஆடியோ கதைகள் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் ? நீங்கள் விரும்பிய ஏதேனும் ஒரு ஆடியோ கதையை கூறுங்கள்.
ஆடியோ கதைகள்ல உண்மைலயே எனக்கு நாட்டம் இல்ல வேலை பார்த்துகிட்டு இருக்கும் போது கதை கேப்பேன். ஆனா வேலை ஆர்வத்துல கதைய கவனிக்க தவறிடுவேன் அப்பறம் மறுபடியும் பேக்ல போய் கேக்கனும். அதுல ஒரு நிறைவு வந்தது இல்ல.
33. ஒரு கதையில் இருந்து மற்றொரு கதையின் தொடக்கம் இருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன ?
நல்ல விஷயம் தான, காத்திருத்தல் நல்லா தான இருக்கும்.
34. மேற்கண்ட விஷயங்கள் தவிர நீங்கள் எழுத்தாளர்களிடம் வேறு என்ன கூற ஆசைபடுகிறீர்கள் ?
ஒரு கதைய படிக்கும் போது ஆட்டோமட்டிக்கா நம்ம மனசுல அது காட்சியா விரிய ஆரம்பிக்கும். அது ஒரு திரைபடம் போல மனசுல ஓட ஆரம்பிக்கும். நல்ல கதை படிச்சி முடிச்சதும் நல்ல படம் பார்த்த நிறைவு வரும். அப்படி உங்க கதை இருந்ததுன்னா அது தான் எனக்கு வெற்றி கதை. இதுல லோ பட்ஜெட் படமும் பார்க்கிறோம், பாகுபலி மாதிரி ஹை பட்ஜெட் படமும் பார்க்கிறோம். சோ கதைகளம் நீங்க எடுக்குறது மேட்டர் இல்ல கொடுக்குறத தரமா கொடுங்க அவளோ தான்.
எல்லா எழுத்தாளர்க்கும் வாழ்த்துகள்
அன்புடன்.
ஷைலபுத்ரி இரா.
ஒரு அற்புதமான நேர்காணல் ஷைலபுத்ரி.. உங்க கூட உக்காந்து பேசினமாதிரி உங்க வாசக அனுபவத்த ரொம்ப அழகா எங்ககிட்ட பகிர்ந்துகிட்டதுக்கு ரொம்பவும் சந்தோஷம். நீங்க ஒரு முரட்டு வாசகர்ன்னு முகநூல்ல எல்லாருக்கும் தெரியும். ஒரு போட்டி நடந்தா அங்க நீங்க குடுக்கற உற்சாக ஊக்குவிப்பு எல்லாம் வேற லெவல்.
இயல்பான ஒரு உரையாடல் குடுத்ததுக்கு மிக்க நன்றி. உங்க வார்த்தைகள் பல எழுத்தாளர்களுக்கு எனர்ஜி டானிக் . சோ, எப்பவும் உங்க வாசிப்ப விடாதீங்க..
வாசிப்பை சுவாசிப்போம் ..