7 – அர்ஜுன நந்தன்
சாப்பிட்டு முடித்ததும் டிஐஜியிடம் அந்தப் போஸ்ட்மார்டம் ரிப்போர்டைக் கேட்டான் செந்தில்.
அவரது அலுவலக அறையிலேயே நகல் எடுத்துக் கொண்டு அவரிடம் உரையாட ஆரம்பித்தான்.
“அங்கிள் , இவன் சாப்பிட்ட பொருள்ல தான் விஷம் கலந்து இருக்கறதா போட்டு இருக்கு. அதுவும் இவன் அரெஸ்ட் ஆகறதுக்கு முன்னயே குடுக்கப்பட்ட ஸ்லோபாய்சன். இந்த மருந்து எங்க கிடைக்கும்னு விசாரிக்கனும். இன்னும் கொஞ்சம் இவன பத்தி தெரியனும் அங்கிள். அங்க பாதுகாப்பு எதாவது போட்டு இருக்கீங்களா? அங்க இவனுங்க இருந்த டென்ட் மத்த திங்ஸ் எல்லாம் பாக்கனும். அந்த 14 பேரும் எங்க இருக்காங்க?”
“கொஞ்சம் மூச்சு விடுப்பா”, டிஐஜி.
“மூச்சு விடக்கூட நேரம் இல்ல அங்கிள். இன்னும் ஒரு மணி நேரத்துல எனக்கு போன் வரும் அப்ப நான் ஓரளவு கண்டுபிடிச்சி இருந்தா தான் பேச முடியும்”, செந்தில்.
“உன் சீஃப் கிட்ட சொல்லனுமா செந்தில்?”, டிஐஜி.
“பரிதிகிட்ட சொல்லனும் அங்கிள். இல்லன்னா அவ என்னைய கிழிச்சி தொங்க விட்ருவா”, சிரித்துக் கொண்டே கூறினான் செந்தில்.
டிஐஜி ,”பரிதிக்கு குடுக்கற பில்டப் அதிகமா இருக்கு செந்தில். ஏதாவது ரூட் விட்றியா?”.
“ஐயோ அங்கிள் என் பொண்டாட்டி என் தோல உரிச்சுடுவா .ஏன் இப்படி ?”, செந்தில்.
“கல்யாணம் ஆகிடுச்சா தம்பி உங்களுக்கு? எங்க இருக்காங்க அவங்க ?”கேட்டுக் கொண்டே உள்ளே வந்தார் பரிமளம்.
“ஆகிடுச்சி ஆன்ட்டி. நானே தேடி போய் மாட்டிகிட்டேன். அந்த கதைய இன்னொரு நாள் சொல்றேன்”.
“அங்கிள் இவனுக்கு அசிஸ்டண்ட் ஒருத்தன் இருக்கனுமே அவன் எங்க? “, செந்தில்.
“அவன் இரண்டு நாளைக்கு முன்ன தான் சொந்த ஊருக்கு போனதா சொன்னாங்க. அப்பறம் இவன் மெமரிகார்ட் நம்ம கைக்கு கிடைக்கனும்னு தான் முழுங்கி இருக்கனும். அன்னிக்கு வேற ஏதோ நடந்து இருக்கு. அரெஸ்ட் பண்ணப்ப கூட கொஞ்சம் கூட அப்போஸ் பண்ணல ஓடவும் இல்ல. மத்த பசங்கள விசாரிச்ச வரை ஒன்னும் தகவல் வரல”, டிஐஜி.
செந்தில் யோசித்துக் கொண்டிருந்த சமயம் டிஐஜி தன் அலுவலகம் கிளம்பத் தயாராகச் சென்றார்.
“சரி, நான் ஆபிஸ் கிளம்பறேன் பரிமளா. செந்தில் நீ அவனுங்க தங்கி இருந்த டென்ட் திங்ஸ் பத்தி கேட்டல அது பரிதி கன்ட்ரோல்ல இருக்கு. அந்த 14 பேரும் ஸ்டேசன்ல தான் இருக்காங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல என் ஆபீஸ்க்கு ஷிப்ட் பண்ணிடுவாங்க. நீ கேட்டது எல்லாம் சாயந்திரம் ரெடியா இருக்கும். எதாவது தேவைபட்டா கால் பண்ணு. பாய்”, டிஐஜி.
“ஓகே அங்கிள் இங்க ஒருத்தன சாய்ச்சி வச்சி இருக்கேன் அவன மட்டும் நான் தூக்கிட்டு போறேன் .பாய்”, செந்தில்.
“ஏணிய சாய்ச்சி வச்சி எடுத்துட்டு போறமாதிரி சொல்ற… எங்க கொண்டு போற?”, டிஐஜி.
“உங்க பிரைவேட் பில்டிங் தான்”, செந்தில்.
டிஐஜி முனகிக் கொண்டே கிளம்பினார்.
இவர்கள் பேசி கொண்டிருந்த சமயம் தன் குவாரியில் சந்தனபாண்டியன் தனது அடியாட்களை விலாசிக் கொண்டு இருந்தான்.
முதல் முறையாக தான் வைத்தக் குறி தப்பியதை நினைத்துக் குமுறிக் கொண்டு இருந்தான்.
“பிளான் சரியா தானே போட்டேன் அவ எப்படி டா தப்பிச்சா?”, சந்தனபாண்டியன்.
“அண்ணே அவ தனியா போறதா தான் நமக்கு தகவல் வந்துச்சி ஆனா அவ முன்னயும் பின்னயும் போலீஸ் வண்டி வந்துரிச்சி . அவள சுட சந்தர்ப்பம் அமையல”, அடியாள்.
” வந்து சுடுனு சொல்லி நிப்பாளாடா ? எரும கணக்கா இருக்கீங்க ஒரு பொண்ண சுட முடியாம திரும்பி வந்து இருக்கீங்க. அவ டிஐஜி வீட்டுக்கு போறப்ப ஒருத்தன அனுப்பினோமே அவன் என்ன ஆனான்?”, சந்தனபாண்டியன்.
“அவன் என்ன ஆனானுட்டு தெரியல அண்ணே”,அடியாள்.
கையில் இருந்த துப்பாக்கியால் சரமாரியாக மேலே சுட்டு கொண்டிருந்தான்.
அந்த சமயம் காவ்யா ஜுவல்லர்ஸ் ஓனர் சந்திரகேசவன் அவன் இருந்த இடம் வந்தார்.
“என்ன பாண்டியா குறி தப்பிடுச்சினு வெசனம் பட்டுட்டு இருக்கியா?”, சந்திரகேசவன்.
அடியாட்களை போகச் சொல்லிவிட்டு அங்கிருந்த அறையில் இருவரும் அமர்ந்தனர்.
“எப்படி தப்பிச்சான்னு தான் கேட்டுட்டு இருந்தேன் சந்திரா. அந்த கலெக்டர் குடைய ஆரம்பிச்சிட்டா. அதான் முடிச்சிரலாம்னு நினைச்சேன்”, சந்தனபாண்டியன்
“அவள இப்ப முடிச்சா நீ தான்னு ஊருக்கே தெரிஞ்சிடும். அந்த கோவில் நிர்வாகிய இன்னிக்கு விசாரிக்க வரச் சொல்லி இருக்காங்கலாம். எனக்கு போன் பண்ணான் அவன் . சமாளிக்கச் சொல்லி பணம் குடுத்து இருக்கேன். அவனைய நம்ப முடியாது. அவன் குடும்பத்து கழுத்துல கத்திய நீட்டனும்,” சந்திரகேசவன்.
“அவன் எதுவும் சொல்ல மாட்டான். ஏற்கனவே அந்த வேலைய செஞ்சிட்டேன். அந்த கலெக்டர் குடைய ஆரம்பிச்சா ஆனி வேற பிடிக்காம விடமாட்ட சந்திரா. என்ன பண்றது?”,சந்தனபாண்டியன்.
“நம்மல நாமலே வெளிச்சம் போட்டு காட்டிக்கக் கூடாது. கொஞ்சம் பொறுமையா இரு அவ விஷயத்துல. உன் குவாரி பசங்கள என்ன பண்ணப் போற? அந்த டிஐஜி போற போக்கு பிடிபடலன்னு டிபார்ட்மெண்ட்ல சொல்றாங்க”, சந்திரகேசவன்.
“அந்த கேஸ்அ திசை திருப்பி விடனும் அப்ப தான் நமக்கு பரவால்ல.சேரலாதன் கிட்ட பேசினியா?”, சந்தனபாண்டியன்.
“சேரலாதன்கிட்ட பேசிட்டு தான் வந்தேன். மேலிடத்துல இருந்து தகவல் வந்து இருக்காம்.நம்மல வரசொல்லி இருக்காப்பல”,சந்திரகேசவன்.
“வரவேண்டிய வரவு இன்னும் வந்து சேரல. எப்ப வரும்? இங்க குடுக்க வேண்டியது அப்படியே இருக்கு. அந்த ஆராய்ச்சிகாரன் குடும்பத்த என்ன செய்ய?”, சந்தனபாண்டியன்.
“அது சம்பந்தமா தான் நம்மல வர சொல்லி இருக்காரு. அந்த குடும்பத்த பத்தி அங்க பேசிட்டு முடிவு பண்ணிக்கலாம் .பழைய பாலத்துகிட்ட வந்துரு சேந்து போலாம்”, சந்திரகேசவன்.
“சரி சந்திரா வந்துட்றேன்”, சந்தனபாண்டியன்.
மாலை 4 மணி அளவில் டிஐஜியும் , செந்திலும் பெரிய கோவில் பின் பக்கமாய் பரிதிக்காக காத்திருந்தனர்.
தனியாக பரிதி காரில் வந்து இறங்கினாள். அந்த சமயம் இன்னொருவனும் பைக்கில் வந்து நின்றான்.
டிஐஜி அவனை செந்தில் மற்றும் பரிதியிடம் அறிமுகப்படுத்தி வைத்தார்.
“இவர் பேரு பரத். நம்ம வேலைக்கு சரியா இருக்கும்”, டிஐஜி.
“ஹாய்”, செந்தில்.
பரிதியும் தலையசைத்தாள். பின் டிஐஜியிடம் ,
“இவர உங்க டிபார்ட்மெண்ட் ஆளுங்களுக்கு தெரியுமா அங்கிள் ?”, பரிதி.
“தெரியாது மா. இவர் என்னோட தம்பி பையன் தான். இவ்ளோ நாள் வெளிநாட்ல டிடெக்டீவ் ஜர்னலிஸம் படிச்சிட்டு இப்ப தான் இந்தியா வந்து இருக்கான். அங்க ஒரு சில கேஸ்ல சக்ஸஸ் பண்ணி இருக்கான். பத்திரிக்கைல வேலை பாக்க இன்டரஸ்ட் இல்லனு சிபிஐல ஜாயின் பண்ண டிரை பண்ணிட்டு இருக்கான்.அதான் இந்த கேஸ்ல இவன இன்வால்வ் பண்ணா யாருக்கும் தெரியாது, வேலையும் நம்பிக்கையான ஆளு கைல இருக்கும்”,டிஐஜி.
“பத்திரிக்கைகாரங்கள எந்த அளவு நம்பறது அங்கிள்?”, பரிதி.
“நான் பத்திரிக்கைகாரன் இல்ல மேடம். எனக்கு நாட்டுக்கு நல்லது பண்ணனும்னு ஆசை. அதான் ஜர்னலிஸம் படிச்சேன். ஆனா அதுவே இங்க தப்பானவங்க கைல தான் இருக்கு. அதான் சிபிஐ டிரை பண்றேன். டிஐஜி சார் என்கிட்ட வேலை செய்ய ஆள் வேணும்னு கேட்டாரு அதான் நானே வந்தேன்”,பரத்.
செந்திலும் பரிதியும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். பின் பரத்தை இந்த ஆபத்தான வேலைக்கு அனுப்புவதால் ஏற்படும் விளைவுகளை கூறினர். பரத்தின் முழு சம்மதத்திற்கு பின் அவன் செய்ய வேண்டிய வேலையைக் கூறி அனுப்பினர்.
“என்ன ஸ்டேட்டஸ் செந்தில்?”, பரிதி.
“சேரலாதன் இன்னிக்கு சந்தனபாண்டியனையும் சந்திரகேசவனையும் வரச்சொல்லி இருக்கான். அவங்கள பாலோ பண்ணா விஷயம் தெரியும்”, செந்தில்.
“அங்கிள் அந்த கோவில் நிர்வாகி என்ன சொன்னான்?”, பரிதி .
“நாம எதிர்பார்த்த பதில் தான் பரிதி. அவன் குடும்பம் கத்திக்கு நடுவுல நிக்கிதுன்னு மட்டும் தெரிஞ்சது”,டிஐஜி.
“சந்தனபாண்டியன் தானே?”, பரிதி.
“ஆமா, அந்த ஆராய்ச்சிகாரன் குடும்பமும் அவன்கிட்ட தான் இருக்கு”, டிஐஜி.
“அடுத்த மூவ் என்ன செந்தில்?”,பரிதி.
“இன்னிக்கு காலைல ஒருத்தன் உன்ன முடிக்க வந்தான்ல அவன் மூலமா ஒரு விஷயம் தெரிய வந்து இருக்கு. சுத்தி இருக்கற 10 -15 ஊர்ல இருக்கர முக்கியமான ஆளுங்களுக்கு எல்லாம் பணம் போக போகுதாம்”, செந்தில்.
“எதுக்காக?”, டிஐஜி.
“எதுக்குனு முழுசா தெரியல அங்கிள். நான் உங்ககிட்ட கேட்ட லிஸ்ட் மாதிரி அவங்களும் எடுத்து இருக்காங்க. பொக்கிஷத்துக்கு கூட்டம் சேத்த மாட்டானுங்க. இது விஷயம் கொஞ்சம் பெருசா இருக்கும் போல”, செந்தில்.
“பணம் தான் பேசுது வாய் பேசறதுக்கு முன்ன. எல்லாரும் பணத்துக்கு மயங்கிருவாங்களா என்ன? “, பரிதி.
“இந்த கேஸ் எவ்ளோ சீக்கிரம் ஸ்பெஷல் விங் கிட்ட போகுதோ அவ்ளோ நல்லது. அதுக்கு தகுந்தாமாதிரி யோசிக்கணும் பரிதி. உயிர் பலி அனாவசியமா நம்ம பக்கம் நடக்கக் கூடாது. உன்மேல கை வைக்க துணிஞ்சிடானுங்க டிஐஜி மேலயும் கண்ணு வச்சிடாங்க. சீக்கிரம் என்னனு கண்டுபிடிக்கணும். நம்ம மட்டுமே இவங்கள சமாளிக்க முடியும்னு தோணல”, செந்தில்.
“இன்னும் ஒரு வாரம் தான் லிமிட் செந்தில் அதுக்குள்ள கண்டுபிடிச்சிட்டா நான் வேற மாதிரி இத மேல கொண்டு போய்க்கறேன். நீங்க அந்த மீட்டிங் நடக்கற ஸ்பாட் போயிட்டு கூப்பிடுங்க. அங்கிள் இனிமே நாம போன்ல கான்டாக்ட் பண்ணிக்கலாம் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க”, பரிதி.
செந்தில் ஒரு கவரை பரிதியிடம் குடுத்துவிட்டு சென்றான்.
பழைய பாலத்தின் அருகில் சந்திரகேசவன் சந்தனபாண்டியனுக்காகக் காத்திருந்தான்.
சில நிமிடங்கள் கழித்து வந்த சந்தனபாண்டியன் சந்திரகேசவனுடன் இணைந்து, சேரலாதனைக் காண புறப்பட்டனர்.
அவர்கள் அறியாமல் செந்திலும் பரத்தும் அவர்களைப் பின் தொடர்ந்தனர்.
அங்கே மர குடோனில் சேரலாதன் ……