19 – அர்ஜுன நந்தன்
அர்ஜுனிடம் இருந்து உத்திரவை பெற்றக் கதிர் நேராக இஷான் ஆட்கள் இருக்குமிடம் வந்து மும்பைகாரன் மாட்டியதைப் பற்றியும் அவன் அப்ரூவராக மாறிவிட்டான் எனவும் அறை குறையாக்க் கூறிச் சென்றுவிட்டான்.
அர்ஜுனுக்கு கால் செய்து அவ்விஷயத்தை கூறிவிட்டு அடுத்த உத்திரவைக் கேட்டான்.
“கதிர் விகேஎஸ் குரூப் நிஷாந்த் சர்மாவ கொஞ்சம் பாலோ பண்ணி அவன பத்தின டீடைல்ஸ் கலெக்ட் பண்ணி அனுப்புங்க. அப்பறம் அந்த இஷான் சௌத்ரிய 24*7 பாலோ பண்ணுங்க”, அர்ஜுன்.
“ஓகே பாஸ்”, கதிர்.
அர்ஜுனின் கைங்கரியத்தால் தான் மும்பைகாரன் வெட்டுபட்டது. இஷான் அவனை முடிக்கச் சொல்லி அனுப்பினான். ஆனால் அவன் உயிருடன் தன்னிடம் வந்து நிற்பதை கண்டு அதிர்ந்து அருகில் அழைத்து விசாரித்தான்.
“நீ எப்படி இங்க?”, இஷான்.
“ஒரு சந்தேகம் அதான் உங்கள பாக்க வந்தேன்”, மும்பைகாரன்.
“என்ன சந்தேகம்? நீ இப்ப ஜெயில்ல தானே இருக்கணும். யார் வெளியே விட்டா? நீயா தப்பிச்சி வந்தியா?”, இஷான் கோபமாகக் கேட்டான்.
“இல்ல. நான் இங்க வந்துட்டு போனது மட்டும் தான் நியாபகம் இருக்கு. அதுக்கப்பறம் என்ன நடந்ததுனு தெரியல. இரண்டு நாளா அடிபட்டு ஹாஸ்பிடல்ல இருந்ததா அங்கிருந்த நர்ஸ் சொன்னா. ஆனா எனக்கு குழப்பமா இருக்கு”, மும்பைகாரன்.
இஷானும் சற்று குழம்பினான். அவனிடம் குடுத்த பென்டிரைவ் பாக்கெட் இருக்கிறதா என செக் செய்தான். அதுவும் இருந்தது. அந்த பெண்ணின் புகைபடமும் இருந்தது.
வேறு உடையில் இருந்தான், அவன் அனுப்பிய ஆட்களால் ஆன வெட்டு காயமும் இருந்தது. நடுவில் ஏதோ சதி நடந்து இருக்கிறது என்று மட்டும் புரிந்தது.
இஷானின் பி.ஏ அச்சமயம் அங்கு வந்தான்.
“சார்”, ராஜேஷ் இஷானின் பி.ஏ.
“என்ன ?”, இஷான்
“அந்த கலெக்டர் பிரசிடெண்ட்அ மீட் பண்ணி டிரான்பர்அ கேன்சல் பண்ணிட்டா. இரண்டு வருஷம் அங்கயே இருக்கவும் ஆர்டர் வாங்கிட்டா”, ராஜேஷ்.
“இது எப்படி சாத்தியம்?அவ எப்ப டெல்லி வந்தா?”, இஷான்.
“தெரியல சார். பேக்ஸ் அவள ரீச் ஆகி ஒரு மணிநேரத்துல பிரசிடெண்ட் அப்பாயின்மெண்ட் வாங்கி இருக்கா”, ராஜேஷ்.
“வாட் த ****** ஹேப்பனிங்?”, இஷான்.
“இப்ப என்ன பண்றது சார்?”, ராஜேஷ்.
“கால் ஆர்யன் நௌ”, இஷான்.
“டெல் மீ “, ஆர்யன்.
“பரிதிக்கு இரண்டு வருஷம் அங்கேயே இருக்க உத்தரவு வாங்கிட்டா. சிபிஐயும் என்னமோ சீக்ரெட் மிஷன் நடத்தறாங்க”, இஷான்.
“என்ன ? சொல்றது உண்மையா?”, ஆர்யன்.
“ஆமாம். அந்த மும்பைகாரன் என்கிட்ட தான் இருக்கான். என்ன நடந்ததுனு தெரியலன்னு சொல்றான்”, இஷான்.
“டேமிட்”, எனக் கோபமாக அங்கிருந்தச் சுவற்றில் பொருட்களைத் தூக்கி வீசினான்.
“அந்த மும்பைகாரன கொன்னு விகேஎஸ் கம்பனில பொதைச்சிடு. அவன்கிட்ட குடுத்த பென்டிரைவ் பாக்கெட் எடுத்துக்க”, ஆர்யன்.
“அந்த பரிதிய என்ன பண்றது?”, இஷான்.
“இப்ப எதுவும் செய்ய வேணாம். நான் சொல்றவரை அந்த நரேன மட்டும் பாலோ பண்ணு”, ஆர்யன்.
“அந்த நரேன்க்கு லீவ் நிறைய இருக்கறதா கேள்விப்டடேன். அவன அனுப்பிட்டு அவன் இடத்துல நம்ம ஆள போடலாமா?”, இஷான்.
“நோ. அவன அந்த விகேஎஸ் கேஸ்ஸ டேக்அப் பண்ண சொல்லு. அவன் இந்த கேஸ எடுக்கவே கூடாது”, ஆர்யன்.
“ஓகே. அந்த பொண்ணு எதாவது சொன்னாளா?”, இஷான்.
“இல்ல. இன்னோசென்ட்னு சொல்றா ஆனா அவளோட பிகேவியர் ரொம்பவே வித்தியாசமா இருக்கு. அப்பா கிட்ட சொல்லி இருக்கேன். இன்னும் 2 மாசத்துல பிரச்சினைய முடிச்சிட்டு வேலைய ஆரம்பிக்க ஏற்பாடு பண்ண சொல்லிட்டாரு”, ஆர்யன்.
“சரி. அந்த கலெக்டர் அங்க இருக்கறவரைக்கும் கஷ்டம் தான். சைலண்ட்டா வேலைய முடிக்கறா. அவமேல இன்னும் கண்ணு அதிகம் பண்ணணும். நான் சேரலாதன் கிட்ட சொல்றேன்”, இஷான்.
“சரி. பாய்”, ஆர்யன்.
இஷான் ஆர்யன் சொன்னபடி அந்த மும்பைகாரனைக் கொன்று விகேஎஸ் கம்பனியில் புதைத்துவிட்டு சி.பி.ஐக்கு தகவல் கொடுத்தான்.
நரேன் அந்த கேஸை எடுக்கும்படி தன் தந்தையின் செல்வாக்கை பயன்படுத்தி எடுக்கச் செய்தான்.
நரேனும் நடப்பதை புரிந்து அந்த கேஸை விசாரிப்பது போல பாவ்லா செய்ய ஆரம்பித்தான்.
மும்பைகாரனை பின்தொடர்ந்து வந்த சக்தி இஷான் மும்பைகாரனை கொல்வதை படம்பிடித்து கொண்டு நந்துவிடம் சென்றான்.
“சார் இந்தாங்க”, சக்தி போனை குடுத்தான்.
“என்னடா அதுக்குள்ள இங்க வந்துட்ட உன்ன அந்த மும்பைகாரனை பாலோ பண்ண சொல்லி தானே அனுப்பினேன்”, நந்து.
“அவன இதுக்கு மேல நான் பாலோ பண்ணணும்னா எமலோகத்துக்கு தான் போகணும். நான் கொஞ்ச நாள் உயிரோட இருக்கணும்னு நினைக்கிறேன்”, சக்தி.
“செத்துட்டானா?”, நந்து.
“மொபைல்ல வீடியோவை பாருங்க சார்”, சக்தி.
அதில் இஷான் மும்பைகாரனைக் கத்தியால் குத்திக் கொல்வது படமாக ஓடியது.
“நல்ல எவிடன்ஸ் டா தம்பி”, நந்து.
“அடுத்து என்ன பண்றது சார்?”, சக்தி.
“மதுரைக்கு கிளம்பு”, அர்ஜுன் கூறினான்.
“எத்தனை நாள் சார் அங்க ?”, சக்தி.
“தெரியாது. உனக்கு வேணும்கிறது உன் அக்கவுண்ட்ல அப்ப அப்ப வரும்”,அர்ஜுன். அவனும் சரியெனக் கூறி அங்கிருந்து சென்றான்.
அந்த சமயம் உள்ளே வந்த நரேன்,” அர்ஜுன் நந்து அந்த மும்பைகாரன நிஷாந்த் கம்பனில பொதச்சிட்டானுங்க. அந்த கேஸ நம்மல எடுக்க சொல்லி பிரஸர் வருது”.
சிறிது யோசித்த நந்து,” எங்க டீம்க்கு லீவ் குடுத்துடுங்க. நேத்து இருந்து நாங்க ஆறு பேரும் லீவ். கதிர மட்டும் அப்ப அப்ப உங்கள பாக்கற மாதிரி பண்ணிட்டு நாங்க சொல்றப்ப ஊருக்கு அனுப்பிவிட்ருங்க. நீங்களே இப்ப வந்த புது பசங்கள வச்சி இன்வெஸ்டிகேசன் ஆரம்பிங்க”.
“அதுவும் சரிதான். அந்த பசங்க இன்னும் யார் கீழயும் வேலை செய்யல. நாங்க ஹைட் ஆகி தஞ்சாவூர் கேஸ பாக்கறோம்”, அர்ஜுன்.
“சரி டா பாத்து ஜாக்கிரதை எல்லாரும்”, நரேன் கூறிக் கிளம்பிவிட்டான்.
அர்ஜுனும் நந்துவும் தங்களுக்கு தேவையானதை அங்கிருந்து எடுத்துக் கொண்டு, ரூமிற்குச் சென்று துணிகளைப் பேக் செய்துக் கொண்டு நரேன் வீட்டிற்கு சென்றனர்.
“ஹாய் குட்டி”, இருவரும் கோரசாக அழைக்க அனுவிடம் சாப்பிட்டுக் கொண்டு இருந்த தாரிகா அவர்களிடம் ஓடி வந்தாள்.
“வாங்க டா. என்ன பேக்கிங்லா பெருசா இருக்கு?”, அனு வினவினாள்.
“பசங்க தமிழ்நாட்டுக்கு கிளம்பிட்டாங்க சிஸ்டர் “,பரிதி உள்ளே வந்துக் கொண்டே கூறினாள்.
“பரிதி மேடம் எங்க இருந்தாலும் தகவல் மட்டும் வந்துடுது”, அர்ஜுன்.
“நீ என்ன வேலைக்கு போன அக்கா? இப்ப சொல்லு”, நந்து கேட்டான்.
பரிதி சிரித்து கொண்டே “எனக்கு வந்த டிரான்ஸ்பர்அ கேன்சல் பண்ணிட்டு இரண்டு வருஷம் தஞ்சாவூர்லயே இருக்க ஆர்டர் வாங்கிட்டு வந்தேன் டா”, பரிதி.
“பிரசிடெண்ட பாக்க போனியா?”,நந்து.
“ஆமா”, தாரிகாவை தூக்கிக் கொஞ்சிக் கொண்டு கூறினாள்.
“எப்படி உடனே அப்பாயின்மெண்ட் கிடச்சது?”, அர்ஜுன்.
“அது சீக்ரெட்”, கூறிக் கண்ணடித்தாள் பரிதி.
“உன்ன முதல்ல 24*7 பாலோ பண்ணணும் பக் வச்சி”,நந்து சிரித்துக்கொண்டே கூறினான்.
“ஹாஹா… அவ்ளோ பெரிய ஆள் இல்லபா நானு”, கையசைத்துக் கூறினாள் சிரிப்புடன்.
“சரி வாங்க எல்லாரும் சாப்பிட்டு பேசலாம்”, அனு அழைத்தாள்.
“இன்னும் அண்ணா வரல அண்ணி?”, அர்ஜுன்.
“அவர் வர லேட் ஆகுமாம். நீங்க சாப்பிடுங்க”,அனு கூறிக்கொண்டே அனைவருக்கும் சாப்பாடு எடுத்து வைத்தாள்.
மூவரும் அமர்ந்து சாப்பிட பரிதி அனுவையும் சாப்பிட அமர்த்தினாள்.
அவரவர் பரிமாறி கொள்ள பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தனர்.
அப்பொழுது தான் நரேன் உள்ளே வந்தான்.
“எல்லாரும் சாப்பிட்டிங்களா?”,நரேன்.
“நீங்க சாப்பிடுங்க சார். நாங்க சாப்டோம்”,பரிதி கூறிவிட்டு ரெடியாகச் சென்றாள்.
நரேன் சாப்பிட்டு முடித்து வந்து,” யார் யார் எங்க போக போறீங்க?”.
“நான் மேகமலை போறேன். நந்துவும் என்கூட வந்துட்டு அடுத்த நாள் சென்னை போறான். பரிதி மேடம் தஞ்சாவூர் போறாங்க. நான் இரண்டு நாள் கழிச்சி மதுரை வந்துடுவேன்”, அர்ஜுன்.
“சரி. அப்ப அப்ப அப்டேட் பண்ணுங்க. சரண்-க்கு கேபின் ரெடி பண்ணி குடுத்துட்டேன். அவனுக்கு வேணும்ங்கறத செய்யவும் ஆள ஏற்பாடு பண்ணிட்டேன். முகிலும் பாலாஜியும் பிளைட் ஏறிட்டாங்க. யாரு அவங்கள பிக் பண்ண போறாங்க?”,நரேன்.
“செந்தில் தான். நான் ஏற்கனவே சொல்லிட்டேன். மதுரைல அவங்க இறங்கினதும் செந்தில் நம்ம இடத்துக்கு கூட்டிட்டு போய்டுவாரு”, பரிதி.
“வேற எதாவது தேவைபடுமா அர்ஜுன் நந்து?”, நரேன்.
“மதுரைல நாங்க தங்கறதுக்கு ஒரு இடம் வேணும்”, அர்ஜுன் கூறினான்.
“தஞ்சாவூர்ல ஒரு வீடு இருக்கு .அங்க தான் எல்லாமே செட்டப் பண்ணி இருக்கா யாத்ரா. நீங்க அங்கயே தங்கிகலாம்”, பரிதி.
“அது சரிக்கா. மதுரைலயும் வேணும். அந்த இடம் யாருக்கும் சந்தேகம் வராத இடமா இருக்கணும். இந்த கேஸ் முடியற வரைக்கும் அங்கயே தங்கறமாதிரி இருக்கணும் தேவைபடறப்ப”, நந்து.
பரிதி சிறிது யோசித்து தான் தஞ்சாவூர் சென்றதும் ஏற்பாடு செய்வதாகக் கூறினாள்.
சரியென அனைவரும் கூறிக்கொண்டு கிளம்பினர். தாரிகா தான் அழுக ஆரம்பித்துவிட்டாள். அவளை ஒருவாறு சமாதானம் செய்து அங்கிருந்து கிளம்பியது நமது படை.
இவர்களுக்கு முன் பாலாஜியும், முகிலும் மதுரையை வந்தடைந்துவிட்டனர்.
செந்தில் அவர்களுக்காக காத்திருந்து அழைத்துக் கொண்டு தஞ்சாவூர் சென்று அவர்கள் தங்கியிருந்த இல்லத்திற்கு வந்தான்.
அந்த கதவில் இருந்த லாக்கிங் சிஸ்டம் பாலாஜிக்கு வியப்பை ஏற்படுத்தியது, அதைப் பற்றி வினவவும் செய்தான் செந்திலிடம்.
“செந்தில் சார் இந்த லாக்கிங் சிஸ்டம் யாரு பண்ணது?”, பாலாஜி.
“யாத்ரா தான். இது அவ பிரண்ட் வீடு. கட்டறப்பவே இங்க அவளுக்கு தகுந்தாமாதிரி ஒருசில விஷயத்த செஞ்சிகிட்டா”, செந்தில்.
“எப்படி சார் இன்னொருத்தர் வீட்ல இந்த மாதிரி ஹைடெக் செக்யூரிட்டி சிஸ்டம் இன்ஸ்டால் பண்ணுவாங்க? அவங்க இஷ்டத்துக்கு செய்ய இந்த வீட்டுகாரங்க விடுவாங்களா?”, பாலாஜி.
“ஹாஹா… நீங்க யாத்ராவ பாத்தது இல்லல அதான் இப்படி கேக்கறீங்க. கொஞ்ச நேரம் பேசினா போதும் உங்க சொத்தை உங்க கையால எழுதி வாங்கிடுவா. அந்த அளவுக்கு வாய் சாதுர்யம். உள்ள ஒரு ரா நெட்வொர்க் சிஸ்டம்ஏ செட் பண்ணி வச்சிட்டு போய் இருக்கா. வந்து பாருங்க”, செந்தில்.
பாலாஜியும், முகிலும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே உள்ளே சென்றனர்.
அவர்கள் தங்க மேலே இருந்த இரண்டு அறைகளை காட்டினான். நல்ல விசாலமான அறைகள் தான் எல்லாமே.
குளித்து தயாராகி வந்தவர்கள் பரத்திடம் அறிமுகம் செய்துக் கொண்டனர். அவனும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.
செந்தில் அவர்களை பாதாள அறைக்கு அழைத்துச் சென்றான்.
அந்த அறையை கண்ட பாலாஜி அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிட்டான். அங்கே சூப்பர் கம்ப்யூட்டர்க்கு இணையான அனைத்து கணினி தொழில்நுட்ப வசதிகளும் இவர்கள் துறைக்கு ஏற்றதாக வைக்கப்பட்டு இருந்தது.
அந்த கணினியில் அனைத்து அரசாங்க பதிவேடுகளும் மற்றும் பல தகவல்களுக்கும் அவர்கள் இயக்க வசதியாக இருந்தது.
பாலாஜி சிஸ்டத்தை ஆன் செய்ததும் ஒரு தகவல் வந்தது. வந்த தகவலைக் கண்டு அனைவரும் ஸ்தம்பித்து நின்றனர்…