43 – அகரநதி
நதியாளின் அறைக்கு வந்ததும் அகரன் அவளை தன்னோடு சிறிது நேரம் இருக்கச் சொல்ல , அவள் அவனிடம் கோப முகம் காட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டாள்.
“சரணா….. அகன் உன்ன கூப்பிடறான்”, எனக் கூறி அவனை அனுப்பி வைத்துவிட்டு தன் தாயைத் தேடிச் சென்றாள் நதி.
அமைதியாக தன்னருகில் வந்து நிற்கும் மகளைக் கண்ட ராதா,” என்னடி இங்க வந்து நிக்கற? போய் மாப்ள கூட பேசிட்டு இருக்கவேண்டியது தானே? நான் சாப்பாடு தயாரானதும் கூப்பிடறேன் அப்ப கீழ வந்தா போதும்”, எனக் கூறினார்.
“உன் மாப்ள கூட அவரோட மச்சான் பேசிட்டு இருக்காரு. எனக்கு அங்க என்ன வேலை ? இங்க எதாவது வேலை இருந்தா சொல்லு செய்றேன்”, நதியாள் குரலில் குறையாத கோபத்துடன் கூறினாள்.
“என்னடி இது அதிசயமா இருக்கு? சமையல்கட்டுல வேலை இருக்கு வந்து செய்யின்னு சொன்னாலும் ஆயிரத்தெட்டு காரணத்த சொல்லிட்டு வேலை செய்யாம ஓடுவ. என்ன அவ்வளவு அக்கறை இன்னிக்கு சமையல்கட்டுல உனக்கு?”, ராதா நதியாளை கண்களில் சந்தேகப்பார்வை கொண்டு கேட்டார்.
“ஆயிரத்தெட்டுல ஒன்னு குறைஞ்சிடிச்சி அதான் வந்தேன். வேலை இல்லைன்னா சொல்லு நான் வயலுக்கு போறேன்”, எனக் கோபமாக பேசிவிட்டு திரும்பிய நதியாளை ராதா தடுத்தார்.
“என்னட்டி…. மாப்ள கூட சண்டை போட்டியா?”, ராதா அவளை பார்வையால் துளைத்தபடிக் கேட்டார்
“ஆமா ஐம்பது வருஷம் குடும்பம் நடத்தி இன்னிக்கு தான் மொத தடவையா சண்டை போட்டேன். வந்து பஞ்சாயத்து செய்யறியா?”, நதியாள் அடக்கமுடியாத கோபத்துடன் தன் தாயிடம் பொறிந்தபடி இருந்தாள்.
“ஹாஹாஹா….. அடியே என் வெல்லக்கட்டி….. எம்புட்டு கோவம் வருது உனக்கு? இப்ப உனக்கு எங்க மேல கோபமா ? மாப்ள மேல கோபமா?”, என ராதா சிரித்தபடிக் கேட்டார்.
“இப்ப நான் என்ன ஜோக்கா அடிச்சேன். சிரிக்காதம்மா…. “, நதியாள் முறைத்தபடிக் கூறினாள்.
“சரி சரி சிரிக்கல…. என்ன பிரச்சனை சொல்லு ……”, ராதா அங்கேயே வந்தார்.
“ஒரு பிரச்சினையும் இல்லம்மா… சும்மா இருக்க சலுப்பா இருக்கு அதான் இங்க வந்தேன். நான் வெளியே வயலுக்கு போயிட்டு வரேன். உன் மாப்ளைய கவனிச்சிக்க. நான் மதியம் வரலன்னாலும் அவருக்கு முன்ன சாப்பாடு போட்று”, எனக் கிளம்பியவளை செல்லம்மாள் தடுத்தார்.
“ஏன்டா யாள்குட்டி …. கல்யாணத்துக்கு அப்பறம் மொத தடவை வீட்டுக்கு இரண்டு பேரும் ஜோடியா வந்து இருக்கீங்க…. அதெப்படி நீ இல்லாம தம்பி சாப்பிடும்? நீ எங்கனயும் போகாத… இந்தா இந்த தளையெல்லாம் கிள்ளி போடு”, என கத்தை கொத்தமல்லி பொதினா தளையை அவளிடம் கொடுத்தார் செல்லம்மாள்.
நதியாளும் அமைதியாக அதை வாங்கிக்கொண்டு பின்பக்க தோட்டத்திற்கு சென்று அங்கிருந்த கருங்கல் மேடையில் அமர்ந்து கொண்டாள்.
“என்னக்கா அத அவகிட்ட குடுத்து அனுப்பிட்டீங்க? கொஞ்ச நேரம் பேசி இருந்தா என்னனு தெரிஞ்சி இருந்துக்கலாம். தம்பிகூட என்னமோ சண்டை போட்டுட்டு வந்துட்டா போல ….”, ராதா.
“விடு ராதா. அது அவங்க சரி பண்ணிப்பாங்க. நேத்து தம்பியோட சிநேகித தம்பி இவங்கள சமாதானம் பண்றேன்னு போய் அவகிட்ட வசமா அடிவாங்கிட்டு தான் ஊருக்கு போச்சாம் சரண் சொன்னான். நீ என்ன தான் தொண்டை கிழிய கேட்டாலும் அவ வாய தொறக்கமாட்டா. அதான் அவள அமைதியா உட்காரவச்சிட்டேன். நாம சமையலை பாக்கலாம். எங்க இங்க காய்கறிய நரிக்கிட்டு இருந்தவளுங்க?”, செல்லம்மாள்.
“ஆனாலும் மனசு கேக்கமாட்டேங்குக்கா…. பெருசா எதாவது பிரச்சினை பண்ணிடுவாளோன்னு பயமா இருக்கு….”, ராதா தாயிற்கே உரிய அக்கறையில் கூறினார்.
“ஹாஹா…. ராதா …. இன்னும் அவள நீ இங்க பள்ளிகூடத்துல சண்டை போட்டுட்டு இருந்த மாறியே நினைச்சிட்டு இருக்கியா?”, செல்லம்மாள் சிரித்தபடிக் கேட்டார்.
“இல்லக்கா…. என்ன இருந்தாலும் அவ இன்னும் சின்னபுள்ள தானே…. கொஞ்சம் புரிஞ்சி நடந்துகிட்டாலும் அப்ப அப்ப அந்த நதியாளாத்தான் தெரியுறா நடந்துக்கறா…..”, ராதா.
“ராதா…. போக போக புள்ள புரிஞ்சி நடந்துப்பா… நீ வீணா கவலைபடாம இப்ப ஆகற வேலைய பாக்கலாம் வா. பழத்த எங்க வச்சி இருக்க ஜூஸ் குடுக்கணும்ல”, செல்லம்மாள் ராதாவை சமாதானப்படுத்தியபடியே அடுத்த வேலையை கவனிக்க சென்றார்.
ராதாவும் மனதைத் தேற்றியபடி வேலையை கவனிக்கலானார்.
வெளியே தோட்டத்தின் நடுவே சற்று உயரமும் அகலமுமான கருங்கல்லில் அமர்ந்த நதியாள் அகரனைப் பற்றி சிந்தித்தபடியே தளைகலை கிள்ளிக் கொண்டு இருந்தாள்.
“எவ்வளவு தைரியம் இந்த அகனுக்கு? சொல்லாம தாலி கட்டினதும் இல்லாம கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம மீனு சொன்னதும் தலைய தலைய ஆட்டிட்டு இங்கயே விட்டுட்டு போய்ட்டான். சரி விருந்துக்கு சீக்கிரம் வருவான்னு பாத்தா, நடுராத்திரில வந்து இறங்குறான். என்கூட பேசல, என்னை பாக்கணும்னு கூட தோணல இவனுக்கு….. சே…. இவன நினைச்சி நினைச்சி நான் தான் இப்படி பொலம்பிட்டு இருக்கேன். அவன் ஜாலியா சுத்திட்டு இருக்கான் …. இனிமே அவன் வந்து சமாதானம் பண்ணினாலும் நமக்கு கோவம் குறைஞ்சிடாம மேக்அப் பண்ணிகிட்டு சென்னைல நம்ம கேங்க் கூடவே தங்கிடனும். தனியா இருந்தா தான் என் அருமை தெரியும் இவனுக்குல்லாம்…..
அச்சோஓஓஓஓஓஓ….. இப்படி பொலம்பறனே….. ஆண்டவா கடைசில என்னை இப்படி பொலம்ப விட்டுட்டியே…. நீயும் லவ் பண்ணி என்னை மாதிரி அவஸ்தை படணும் அது நான் உனக்கு குடுக்கற பனிஸ்மெண்ட்”, என தன் போக்கில் அதையும் இதையும் தனக்கு தானே பேசியபடி இருந்தாள்.
“சரி தான் அந்த ஆண்டவனுக்கு பனிஸ்மெண்ட் குடுக்கறது இருக்கட்டும். உன் புருஷனுக்கு குடுக்கற பனிஸ்மெண்ட் ரொம்ப தப்புன்னு அந்த ஆண்டவன் சொல்றாரு”, எனக் அகரன் கூற அவன் குரலில் திரும்பியவள் அங்கிருந்த வேப்பமரத்தின் மேல் தோள்சாய்ந்து கைகளை கட்டியபடி இவளைப் பார்த்து சிரித்துக் கொண்டு இருந்தான்.
அவனை சில நொடிகள் இரசித்தவள் பின்,”யார் சொல்றதையும் கேக்கறமாதிரி நான் இல்ல…. “, வெடுக்கன பதில் தந்து தளைகளை வேகமாக கிள்ளிக் கொண்டு இருந்தாள்.
“என்மேல இருக்கற கோவத்துல அந்த தளைய ஏன் இப்படி படுத்தற. இங்க குடு… இந்த கொத்தமல்லி தளைய இப்படி கொஞ்சம் தண்டுவிட்டு கிள்ளி போட்டா நல்லா இருக்கும்”, என அவள் கைகளில் இருந்து வலுக்கட்டாயமாக பிடுங்கி அவளுக்கு விளக்கம் கொடுத்தான் அகரன்.
நதியாள் அவனை முறைத்தபடி பார்க்க , அகரன் அவள் கோபத்தை இரசித்தபடி சிரித்தான்.
“எதுக்கு சிரிக்கற? உன்னை யார் இங்க வரசொன்னது ? போய் உன் மச்சான் கூட பிஸ்னஸ் பத்தி பேச வேண்டியது தானே? இங்க வந்து ஏன் டைம் வேஸ்ட் பண்ற?” சிடுசிடுத்தபடி நதியாள் கேட்டாள்.
“கட்ன பொண்டாட்டிய பக்கத்துல வச்சிட்டு அவன் கூட பிஸ்னஸ் விஷயம் பேசினா என்னை அந்த பசுமாடு கூட மன்னிக்காதுன்னு ஒரு மகான் சொல்லி இருக்காரு”, எனக் கூறித் தன் கன்னத்தில் போட்டுக் கொண்டான் அகரன்.
“இஷ்டத்துக்கு கதை சுத்தாத…. திடீர் பாசம் என்மேல இப்ப எதுக்கு?”, நதியாள்.
“உன்மேல பாசம் வந்து எட்டு வருஷம் ஆகுது ஆனா இந்த காதல் தான் எப்ப வந்துச்சின்னு தெர்ல….. உனக்கு தெரியுமா டார்லிங்?”, முகத்தில் தெரியாத பாவணைக் காட்டிக் கேட்டான் அகரன்.
“எனக்கு ஒன்னும் தெரியாது. அது வந்து என்ன பிரயோஜனம்? இல்லாம இருந்தா தான் என்ன வித்தியாசம்?”, நதியாள் பொறிந்து தள்ளினாள்.
“ஹாஹாஹாஹா….. நதிமா…. நமக்கு கல்யாணம் ஆனதும் உனக்கு இவ்ளோ கோவம் வருது…. இத்தனை நாள் என்மேல கோவமே வரல இப்ப மட்டும் ஏன் வருதுன்னு தெரியுமா?”, அகரன் சிரித்தபடி அவளை குறுகுறுவென்று பார்த்தபடிக் கேட்டான்.
“அது தெரிஞ்சி நான் என்ன பண்ணப் போறேன்? நீ எதுவும் பேசாத. எழுந்திரி ரூமுக்கு போ…. “, நதியாள் அவனை விரட்டினாள்.
“இந்தாட்டி ….. தம்பிகிட்ட மரியாதையா பேசணும்….. என்ன நீ போன்னு சொல்லிகிட்டு? நாலு எழுத்து படிச்சா மரியாதை மறந்துடுமோ? “, ராதா பின்னிருந்து கடுமையான பார்வையுடன் பேசினார்.
“அத்தை….. இது எங்களுக்குள்ள நடக்கற விஷயம் நீங்க பெருசு படுத்தாதீங்க…. ஜூஸ் தானே கொண்டு வந்தீங்க குடுங்க. நாங்க காத்தாட பேசிட்டு இங்கயே குடிச்சுட்டு இருக்கோம். நதி என்னை எப்படி கூப்பிட விருப்ப படறாளோ அப்படியே கூப்பிடட்டும். அவள நீங்க எதுவும் சொல்றத நான் அனுமதிக்க முடியாது….. நீங்க மத்த வேலைய கவனிங்க”, அகரன் அவருக்கு பதில் கொடுத்துவிட்டு நதியாள் அருகில் ஜூஸ் கிளாஸுடன் வந்தான்.
“இல்ல தம்பி நாளைக்கு நாலு பேர் மத்தியிலும் இதே பேச்சு தான் வரும். கொஞ்சம் அவ……”, ராதா பேச அகரனின் பார்வையில் அமைதியானார்.
“அத்தை….நதியாள் என் பொண்டாட்டி. நாலு பேருக்கு மத்தில புருஷன் மட்டும் பொண்டாட்டிய டி போட்டு பேசறப்ப , பொண்டாட்டி ஏன் டா போட்டு பேசக்கூடாது? இந்த ஒருதலை நியாயத்த என்னால ஏத்துக்க முடியாது அத்தை. நாங்க மனசார ஒருத்தரை ஒருத்தர் விரும்பறோம். நான் அவ சம்மதம் இல்லாம தாலி கட்டினப்ப கூட அவ கோவப்படாம , அவ மனசுல வருத்தம் இருந்தும் உங்க எல்லாரையும் சமாதானம் பண்ணா….. எங்களுக்குள்ள இருக்கற அன்பு யாருக்கும் புரியாது…… புரியனும்னு அவசியமும் இல்லை. நதிமாவ நான் நல்லா பாத்துக்குவேன். நதி என்னை ரொம்பவும் நல்லா பாத்துப்பா…. நீங்க கவலைபடாம இருங்க…. சீக்கிரம் சாப்பாடு ரெடி பண்ணுங்க வாசனை இப்பவே பசிய கிளறுது…..”, அகரன் அவரின் பேச்சை தடுத்து பதில் கொடுத்தான்.
“சரிங்க தம்பி. அவ சின்ன புள்ள தப்பா எதாவது பேசினா பெருசா எடுத்துக்காதீங்க….இதோ சீக்கிரம் தயார் பண்ணிடறேன் தம்பி… குடிச்சிட்டு காலார நடந்துட்டு வாங்க. பின்னால நம்ம தென்னந்தோப்பும் சப்போட்டா தோப்பும் இருக்கு. இந்தாட்டி தம்பிய கூட்டிட்டு போயிட்டு வா”, என ராதா அவளையும் அதட்டிவிட்டே இடத்தை காலி செய்தார்.
“இந்தா நதிமா ஆரஞ்ச் ஜூஸ்…. “, அவளுக்கு கொடுத்துவிட்டு தானும் குடிக்க ஆரம்பித்தான் அகரன்.
“நான் கேட்டேனா? இப்ப எதுக்கு நீ இவ்வளவு விளக்கம் குடுக்கற? இதுல்லாம் யார் உன்னை சொல்ல சொன்னா? அம்மாக்கும் எனக்கும் ஆயிரம் இருக்கும் ….. நீ ஏன் நடுவுல வர?”, அகரனிடம் இதற்கும் எகிறினாள் நதி.
“அடி என் பஞ்சுமிட்டாய்….. உன்ன….. முதல்ல குடி… வா தோப்புக்கு நடந்துட்டே பேசலாம்”, அகரன் அவளை ஜூஸ் குடிக்கச் சொன்னான்.
“நான் எங்கயும் வரல…. நீயே போயிக்க….. வந்துட்டான் இப்ப மட்டும்….”, என அவன் காதில் விழும்படி முணுமுணுத்துவிட்டு, அவனைக் கடந்து கிணற்றுப் பக்கம் சென்றாள் ஜூஸை குடித்தபடி தான்…
(நமக்கு ஹெல்த் முக்கியம்… ஆரஞ்ச் ஜூஸ் எவ்வளவு நல்லது)
“நதி டார்லிங் இந்த பக்கம் உன் ரூமுக்கு இன்னொரு கதவு இருக்குல்ல?”, அகரன் அவளை உரசியபடி நின்று கேட்டான்.
“எனக்கு தெரியாது….. “, வெடுக்கென பதில் கொடுத்து முடிக்கும் முன் அவன் கைகளில் மிதந்துக் கொண்டு இருந்தாள் நதி.
“டேய்…விடு டா…. விடு அகன்….நான் வரமாட்டேன்…. நீ மோசம்….. விடப்போறியா இல்லியா……”, நதியாள் கத்த கத்த அவளை தூக்கிக் கொண்டு பின்படிக்கட்டு வழியாக அவளின் அறைக்கு வந்தவன் அவளை கட்டிலில் கிடத்திவிட்டு கதவை அடைத்தான்.
“ஸ்ஸ்சப்ப்ப்ப்ப்பாஆஆஆஆஆஆ…… நதிமா நீ பாக்க மட்டும் இல்ல தூக்கறதுக்கும் வெயிட்டா தான் தெரியற….. உன்னை தூக்கிட்டு வந்து என் முதுகு வலிக்குது. கொஞ்சம் மஸாஜ் பண்ணி விடேன்”, எனக் கூறியபடி தன் சட்டையை கழட்டிவிட்டு அவளின் அருகில் படுத்தான் அகரன்.
“உன்ன நானா தூக்க சொன்னேன்…. ? நான் போறேன்….. அந்த எரும மாடு சரணாவ அனுப்பறேன் அவன மஸாஜ் பண்ணிவிட சொல்லு….. “, என அவனின் முதுகில் வலிக்காதமாதிரி அடித்தபடிக் கூறினாள் நதி.
“ஆஹ்ஹாஆஆஆ….. வெரி குட்…. அப்படி தான்…. அப்படியே ரைட்ல மஸாஜ் பண்ணு….. “, என அகரன் அவளின் அடிகளை இரசிக்க, நதியாள் இன்னும் கோபமாகி நன்றாக வலிக்கும்படியே அடித்தாள்.
“அச்சோ….அம்மா….. காத்ப்பாத்துங்க…. என் பொண்டாட்டி என்னை அடிச்சி கொடுமை படுத்தறா…… யாராவது வாங்க”, அகரன் கத்தினான்.
அகரனின் வாயை அடைத்த நதி,” கத்தாத டா…. மறுபடியும் உன் மாமியார் வந்து சொற்பொழிவ ஆரம்பிச்சிடும்……”, என தன் கைக் கொண்டு அவன் வாயை மூடியபடிக் கூறினாள்.
தன் இதழ் மூடிய கைகளுக்கு மிருதுவாய் முத்திரை பதித்த அகரன் தன் மனைவியின் இடை பற்றி தன் பக்கம் இழுத்துக்கொண்டு அவள் மடியில் படுத்துக்கொண்டான்.
அவனின் இதழ் ஸ்பரிசத்தில் அதிர்ந்த நதியாள் சுதாரிக்கும் முன் அவளை இழுத்து அவளின் மடியில் படுத்து அவள் இடையை கட்டிக்கொண்டான்.
“விடு அகன்…. எனக்கு ஒருமாதிரி இருக்கு”, நதியாள் நெளிந்தபடிக் கூறினாள்.
“…… ………..”
“கைய எடு அகன்….அம்மா கூப்பிடுவாங்க……”, எனக் கூறியபடி அவனின் கையை எடுக்க முயற்சித்தாள் நதி.
அவனின் பிடி இறுகிக் கொண்டே தான் சென்றதே தவிர சற்றும் இளகவில்லை. சிறிது நேரம் போராடி பார்த்தவள் அதன்பிறகு அமைதியாக அவன் முதுகை வருடிக்கொடுக்க ஆரம்பித்திருந்தாள்.
“நதிமா…… நான் உன்னை எவ்வளவு மிஸ் பண்ணேன் தெரியுமா? கொஞ்சம் பிரச்சினை டா….. அதான் சீக்கிரம் கிளம்பி வரமுடியல….. எனக்கு மட்டும் உன்னை விட்டுட்டு இருக்க முடியுமா சொல்லு? “, மெதுவாக பேச்சை ஆரம்பித்தான் அகரன்.
“போ அகன்….. நீ இப்படி தான் சொல்ற ஆனா ஒன்னும் பண்றது இல்லை. என்னை மிஸ் பண்ணா ஒரு போன் கூட பண்ணி பேசணும்னு தோணலல்ல? உனக்கு எத்தனை டைம் கால் பண்ணேன்? நீ எடுத்தியா? இங்க வந்தப்பறம் எனக்கு சாப்பிட பிடிக்கல …… தூக்கம் வரல ……. வயல் தோப்புன்னு சுத்தியும் உன் நினைப்புல இருந்து வெளியே வர முடியல …. ஆனா நீ விருந்துக்கு முதல் நாள் இராத்திரி தான் வர….”, நதியாள் குரலில் அவனுக்கான அப்பட்டமான தவிப்பும் ஏக்கமும் தெரிந்தது .
அவளின் முகம் பார்த்து திரும்பி படுத்த அகரன், அவளின் கண் வழியே தனக்கான தேடலையும், காதலையும் உணர்ந்து மனதில் நிறைத்துக்கொண்டான்.
“நம்ம மதுரன் ஸ்டார் ஹோட்டல் பிராஜெக்ட் ல ஒரு பிரச்சினை நதிமா. அது விஷயமா தான் அலஞ்சிட்டு இருந்தேன். மதுரனும் மைராவும் இன்னும் அலஞ்சிட்டு இருக்காங்க. கோர்ட் ல ஸ்டே வாங்கிட்டாங்க அந்த இடத்துல ஸ்டார் ஹோட்டல் கட்டக்கூடாதுன்னு….”, அகரன் உண்மை காரணத்தை கூறத் தொடங்கினான்.
“என்னாச்சி அகன்? யார் ஸ்டே வாங்கினது? அது அவங்க சைட் தானே? சாயில் டெஸ்ட் பண்ணி அப்ரூவல் வாங்கிட்டு தானே நாம ஸ்டார்ட் பண்ணோம்…. அதுல என்ன பிரச்சினை?”, நதியாள் பிஸ்னஸ் ரீதியாக யோசித்து பேச ஆரம்பித்தாள்.
“ஆமா எல்லாம் செஞ்சோம். பட் அந்த காண்ட்ராக்ட் அவங்களுக்கு குடுத்ததா சொல்லி நாம கட்டக்கூடாது ன்னு ஸ்டே வாங்கி இருக்காங்க. எங்க தப்பு நடந்ததுன்னு விசாரிச்சிட்டு இருக்கோம். இதுக்கு நடுவுல நம்ம பில்டிங் க்கு தேவையான திங்க்ஸ் எல்லாம் வர ஸ்டார்ட் ஆகிரிச்சி. அதை எங்க சேப்ஃ பண்றதுன்னு யோசனையா இருக்கு…. எல்லாம் பே பண்ணியாச்சு…. “, அகரன் கவலையுடன் கூறினான்.
“யார் அது அகன்?”, நதியாள் யோசனையுடன் கேட்டாள்.
“நம்ம ஆப்போசிட் கம்பெனி. பல்லவா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்….. “, அகரன்.
“பல்லவா? ஹ்ம்ம். ….. நான் கேள்வி பட்டு இருக்கேன். அவங்க தான் நமக்கு எதிரா வராங்களா….?”, நதியாள்.
“ஆமாடா….. கொஞ்சம் டென்ஷன் பண்றானுங்க…. நம்ம கம்பெனிக்கு முக்கியமான டர்னிங் குடுக்கற பிராஜெக்ட்ஸா டார்கெட் பண்ணி தொல்லை தராங்க… நானும் சரணும் வார்ன் பண்ணிட்டோம். பட் அடங்கமாட்றானுங்க பேபி”, அகரன் பேசியபடியே அவளை தன் முகத்தின் அருகில் கொண்டு வந்திருந்தான்.
அவள் முகத்தில் தன் கண்கொண்டு ஊர்வலம் தொடங்கினான் அகரன்…..
கானகம் புகுந்த வண்டாய் சிறகடிக்கும் மைவிழிகள்….
பரந்துவிரிந்த பால்வெளியின் பிரதி பிம்பமான நெற்றி……
காற்றும் சறுக்கி விளையாடும் நாசி…
தேனும் செந்தாமரையும் கலந்த இதழ்கள்…. – நீ
யோசனையில் முடிச்சிடும் வேளையெல்லாம் சிக்கித்தவிக்கும் என் மனது…..
நிச்சயம் நீ நிலவல்ல…..
என் மனதின் அணுஉலை நீ….
என் உயிரை பிடித்து – அதில்
என் அணுக்கள் பிரித்து…..
அனைத்திலும் உன்னை பதிவேற்றிய கிருமி நீ…..
கிருமிநாசினியும் உன்னை தீண்டாது…- நான் உன்னையே என்னுள் நிறைக்கிறேன்… – நீ
என்னை உன்னுள் படர்ந்து கொண்டதுபோல……
“அகன்…. நாம கண்டிப்பா இந்த பிராஜொக்ட் சக்ஸஸ் பண்றோம். சீக்கிரமே சென்னை போலாம்…. அங்க போய் பாத்துக்கலாம்…. நீ தூங்கு நான் கீழ போறேன்….”, என எழ முயன்றாள் நதி.
“இன்னும் என் மேல கோபமா?”, அகரன் சிறுகுழந்தை போல கேட்டான்.
“ஆமான்னு சொல்ல தோணல ஆனா இல்லைன்னும் சொல்லமாட்டேன்…. “, நதியாள் வேறெங்கோ பார்த்தபடி கூறினாள்.
“உன்னை…..”, என அகரன் எழவும் பட்டென்று நதியாளும் எழுந்து ஓடினாள்.
அந்தோ பரிதாபம் அனைத்து கதவுகளும் பூட்டியிருந்தது திறக்க முடியவில்லை.
அகரன் அனைத்து கதவுகளையும் பூட்டிவிட்டே அவளை தூக்கிவந்தான் என்று அவளுக்கு தெரிய வாய்ப்பில்லை தான்…. ஆனாலும், இப்பொழுது புரிந்து கொண்டாள்.
“வேணாம் அகன்….. கதவ தொற… நான் போறேன்”, நதியாள் ஓடியபடிக் கூறினாள்.
“உன்னை அனுப்பவா இவ்வளவு ஏற்பாடு செஞ்சி தூக்கிட்டு வந்தேன். இங்க வா டார்லிங். கொஞ்ச நேரம் லவ் பண்ணலாம். இருபது நாள் ஆகுது நான் உன்கூட டைம் ஸ்பெண்ட் பண்ணி. இன்னிக்கு மட்டும் இல்ல இனிமே என்கூடவே தான் நீ இருக்கணும்…. “, அவனும் அவளை பிடிக்க முயன்று துரத்தியபடி பதிலளித்தான்.
“முடியாது போடா”, நதியாள்.
“கல்யாணம் ஆனதுல இருந்து நீ என்னை டா போட்டு கூப்பிடற டார்லிங். கேக்க எவ்வளவு நல்லா இருக்கு தெரியுமா? இதுக்கு போய் அத்தை திட்றாங்க…. வா நாம அத்தைக்கு சொல்லி குடுக்கலாம்”, அகரன் அவளை எட்டி கைகளை பிடித்துவிட்டான்.
“ஒன்னும் நீ குடுக்கவேணாம். நகரு. கதவ தொறந்து விடு”, நதியாள் துள்ளியபடிக் கூறினாள்.
“சொன்னா கேக்கமாட்ட நீ…..”, எனக் கூறிவிட்டு பலம்கெண்டு அவளை தன்பக்கம் இழுக்க இருவரும் சோபாவில் விழுந்து கீழே உருண்டனர்.
“ஹாஹா…. இப்ப என்ன பண்ணுவ பேபி ? எவ்வளவு ஆட்டம் காமிச்ச…. இப்ப மாட்டினியா? இனிமே நான் உன்னை ரிலீஸ் பண்ணா தான்”, என அவளை இறுக்கி கட்டிக்கொண்டான் அகரன்.
அவளை நேராக படுக்கவைத்து தன் பிடியிலேயே வைத்துக்கொண்டு அவளின் வயிற்றில் தலை வைத்து படுத்துக்கொண்டான்.
“டேய்…. எழுந்திரி டா. வயிறு வலிக்குது”, நதியாள் கத்த அவளின் வாய் மூடி அவளின் தோளில் படுத்துக்கொண்டான் அகரன்.
தோளில் அவன் முகம் குறுகுறுப்பும், அவனின் மூச்சுக்காற்றும் இம்சிக்க அவனை கீழே தள்ள முயன்றுக் கொண்டு இருந்தாள்.
சரியாக அந்த சமயம் கதவு தட்ட அகரன் பிடி விலக்காமலே எழுந்து கதவைத் திறந்தான்.
“வாங்க மாப்பிள்ளை சாப்பிடலாம்”, என செல்லம்மாள் சங்கடமாக அகரனைப் பார்த்து கூறிவிட்டு விடுவிடுவென்று சென்றுவிட்டார்.
“ஏன் இப்படி ஓட்றாங்க?”, அகரன் புரியாமல் கேட்டான்.
“ஒழுங்கா சர்ட் போடு. போச்சு என்னை ஒருவழி பண்ணப்போறாங்க… கைய விடு அகன்… சீக்கிரம் கீழ வா. நான் முன்ன போறேன்… என்ன என்ன இன்னும் அட்வைஸ் சொல்வாங்களோ தெர்ல… உன்ன வச்சிட்டு……”, என அவனை அடித்துவிட்டு கையை உருவிக்கொண்டு கீழே ஓடினாள் நதி.
அதன் பிறகு சாப்பிட்டு விட்டு நதியாள் தாய்மாமா வீடு சென்று விருந்து முடித்தனர்.
அதன் பிறகு அகரன் இல்லம் வந்து விருந்துக்கு செல்ல வேண்டிய வீடுகளுக்கு எல்லாம் சென்று விட்டு நான்கு நாட்களில் சென்னை புறப்பட்டுவிட்டனர் புதுமண தம்பதிகள்.. .
அன்று அகரனின் அலுவலக்கத்தில் நதியாள் தன் தோழமைகளோடு உள்ளே வர அந்த சமயம்………..