45 – அகரநதி
“மிஸ்டர் மதுரன்…. உங்க கம்பெனியோட டீம் மெம்பர்ஸ்…. அதாவது இந்த பிராஜெக்ட்காக கோட் ரெபரிங் அண்ட் பிரசன்டேசன் அட்டெண்ட் பண்ணவங்கள இங்க கூப்பிட முடியுமா?”, பூரணன்.
“அவங்கள எதுக்கு கூப்பிடணும் ? அவங்க அனலைஸிங் அதாரிட்டி மட்டும் தான். ஈவன் மைராவுக்கு கூட டிசைடிங் அதாரிட்டி கிடையாது. இதுல 70% ஷேர் என்னோடது. சோ ஐ டிசைடட் த கம்பெனி அண்ட் டிசைன்ஸ் பர்சனலி. எத்தனையோ கம்பெனிஸ் கோட் அனுப்பினாங்க அதுல பில்டர் பண்ணி சிலத மட்டும் தான் பிரசன்டேஷன் குடுக்க சொன்னோம். அதுல ஒரே நாள்ள உங்க இரண்டு கம்பெனில பிரசன்டேஷன் அட்டண்ட் பண்ணி இருந்தாங்க. பட் பைனலைஸ் பண்ணது நான். நான் மட்டும் தான் மிஸ்டர் பூரணன்”, மதுரன் தெளிவாக ஆரம்பம் முதல் முடிவு வரை உரைத்துவிட்டு இதில் எங்கிருந்து நீ வந்தாய் என கேள்வி வைத்து , இதில் நீ எங்குமே வரவே இல்லையென பதிலும் கொடுத்தான்.
“ஆனா அன்னிக்கு ஈவினிங் ஆறு மணிக்கு என் கம்பெனிக்கு உங்களோட மீட்டிங் இருக்கறதா மெயில் வந்து இருக்கு . அதுவும் நீங்க எங்க கம்பெனிக்கு பிராஜெக்ட் குடுக்க ஒத்துகிட்டு எங்கள வரசொன்னதா இருக்கு. அன்னிக்கு உங்க டீம் ஹெட் எங்க மேனேஜர மீட் பண்ணி பேசி இருக்காரு. அதுக்கப்பறம் ஏழு மணிக்கு நீங்க இவங்கள பாத்து பேசி இருக்கீங்க”, பூரணன் நயவஞ்சகமான பார்வையுடன் பேசினான்.
மதுரன் கண்கள் சிவக்க தன் பி.ஏ வை பார்க்க அவர் உடனே அந்த ஹெட்டை தேடி ஓடினார்.
“இதுல எங்க இருந்து உங்களுக்கு பிராஜெக்ட் குடுத்ததா நீங்க சொல்றீங்க?”, சரண் அசாத்திய அமைதியான குரலில் கேட்டான்.
“எங்களுக்கு மெயில் அனுப்பனதே குடுக்கறோம்னு தானே… இதுல எந்த எச்ச நடுவுல புகுந்து எத காட்டி வாங்கிச்சோ? யாரு கண்டா?”, என அவன் கூறி முடிக்கும் முன் நதியாள் அவனை அறைந்திருந்தாள்.
சாதாரண பெண் அடித்த அடியிலா நமக்கு இப்படி தலை கிண்ணெண்று சுற்றுகிறது என நினைத்தவன், இரண்டு நிமிடங்கள் தலை கவிழ்ந்து தன்னை நிதானப்படுத்த முயன்றான்.
“ஏய்…. யார் மேல வைக்கற? இவர் யாரு தெரியுமா? இனிமே நீங்க யாருமே உயிரோட இருக்க முடியாது. எப்படி இவர மீறி கம்பெனி நடத்தறீங்கன்னு பாக்கறேன்”, என வினய் அடிக்க வர அதையும் அசால்டாக தடுத்த நதியாள் அவனையும் ஒரு அறை அறைந்தாள்.
“என்னடா வாங்கனது மறந்துரிச்சா? கண்ட தெருப்பொறுக்கி எல்லாம் என் அகன பேச வந்துட்டீங்க…… ஆளும் பார்வையும் மொகரையும் பாரு. மதுரன் நீங்க எங்ககிட்ட போட்ட அக்ரீமெண்ட் இருக்கு. அதுக்கு ப்ரூப்ஃ ம் இருக்கு. இதுக்கு மேல எங்க பிராஜெக்ட் கெடுக்க எவன் வந்தாலும் உயிரோட போகமாட்டாங்க. இந்த கலிசடையோடல்லாம் நாங்க உட்கார்ந்து பேசணும்னு எதுவும் இல்ல. உங்க பக்கம் தான் தப்பு எங்கயோ நடந்து இருக்கு. இதுக்கு மேல எங்க வர்க்ல குறுக்கீடு வராம பாத்துக்கோங்க…. வாங்க போலாம்”, என நதியாள் கோபத்தில் கொதித்துவிட்டு வெளியே சென்றாள்.
அவளைத் தொடர்ந்து மதுரனை ஒரு பார்வை பார்த்துவிட்டு ஸ்டெல்லாவும் வெளியே சென்றாள்.
சரணும் அகரனும் நக்கலான சிரிப்புடன் பூரணன் அருகில் வந்தனர்.
“என்ன மச்சான் இவன் இன்னும் அப்படியே தான் இருக்கான்….. எத்தனை வருஷம் ஆனாலும் திருந்தாம நம்ம கிட்ட செருப்படி வாங்கி கிட்டே தான் இருப்பான் போல. இன்னிக்கு உன் பொண்டாட்டி கையாலையும் நல்லா வாங்கிட்டான். அடுத்து யார் கையால வாங்குவான்?”, எனக் கேட்டு சரண் யோசிப்பது போல பாவனை செய்தான்.
“அடுத்து உன் பொண்டாட்டி கையால வாங்குவானா இருக்கும் மச்சான்….. “, அகரனும் நக்கலாகப் பார்த்து சிரித்தான் அவனை.
“இதோ இங்கிருக்கே இன்னொரு பன்னாட…. இதுக்கு ஊருல வாங்கனது பத்தல…. அன்னிக்கு இவன காப்பாத்தி உயிரோட விட்டது இவனுக்கு புரியல போல. இப்பவும் நம்ம ஊருகாரங்க கிட்ட விட்டா போதும் உறிச்சி உப்புகண்டம் போட்றுவாங்க. ஏன் அகர் இவனும் அவனும் சேர்ந்து என்னத்த கிழிக்க போறானுங்க? இத்தனை காலமா பல்லவா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்க்கு இருந்த பேர் தான் கெடும்..”, சரண் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கூறினான்.
“ஏய்…. “, வினய் கைநீட்டி மிரட்ட இந்த முறை மதுரன் அவனை அறைந்திருந்தான்.
“என்னடா என்கிட்டயே வாலாட்டறீங்களா? நான் யாருன்னு தெரியாது உங்களுக்கு? டேய் பூரான்…. உங்கப்பன கேளுடா நான் யாருன்னு…… என் க்ஷேர் இருக்கற கம்பெனில வச்சிகிட்டாலே இல்லாம பண்ணிடுவேன் இதுல என் சொந்த காசுல நான் தனியா கட்ற ஹோட்டல்ல வந்து பிரச்சினை பண்ணா உன்னை சும்மா விடுவனா? இப்ப வெறும் உதாரணம் தான் காட்டிட்டு இருக்கோம். பொண்ணுங்க தானேன்னு அசால்ட்டா அவங்க இரண்டு பேரையும் நினைச்சிராத …. நாங்க கூட பாவம் பார்ப்போம் அவளுங்க பாக்க மாட்டாளுங்க. உயிர மட்டும் விட்டுவச்சிட்டு அத்தனை கொடுமையும் பண்ணுவாங்க. போ.. போ… இனிமே இங்க வராத…வந்தா உசுரோட இருக்க மாட்ட….”, என மதுரன் நன்றாக கவனித்து வெளியே துரத்தினான்.
அவன் வெளியே சென்றதும் மதுரனின் பி.ஏ அந்த டீம் ஹெட்டை அழைத்து வந்தார்.
“சார்…..”, ஹெட்.
“யார கேட்டு அவனுக்கு மெயில் அனுப்பனீங்க?”, மதுரன் கோபம் அடக்கப்பட்ட குரலில் கேட்டான்.
“சார் அது தவறுதலா அனுப்பிட்டாங்க. நான் தப்பா அனுப்பிட்டாங்கன்னு சொல்ல தான் போனேன்”, ஹெட் பயத்துடன் நடுங்கும் குரலில் கூறினார்.
“யார் அனுப்பினா? அவங்கள பத்து நாள் சஸ்பெண்ட் பண்ணுங்க…. “, மதுரன் கூறி அவரை அனுப்பினான்.
அவர்கள் சென்றதும் மதுரன் அருகில் வந்து,
“சாரி அகர்…. சாரி சரண்….. “, எனக் கூறினான்.
“விடு டா. இவன் எங்களுக்கு எப்பவும் குடுக்கற குடைச்சல் தான். இந்த தடவை கொஞ்சம் அதிகம் . ஆனா நதி பலமா குடுத்துட்டா …. “, அகரன் மதுரனை சமாதானப்படுத்தினான்.
“யாரு டா அவன்? உங்களுக்கு முன்னயே தெரியுமா?”, மதுரன்.
“எங்க கூட தான் படிச்சான். அப்ப இருந்தே எங்களுக்கு தொல்லை தான். நாங்களும் அவன் அப்பா மூஞ்சிக்காக விட்டுட்டு இருக்கோம்….”, சரண்.
“சரி டா ஜாக்கிரதை. இரண்டு பன்னாடைங்களும் ஒன்னு சேர்ந்து இருக்குங்க… நதியையும் டாலையும் கொஞ்சம் கவனமா பாத்துக்கணும்.. அவன் பார்வையே சரியில்லை. யாள் வேற அவன அடிச்சிட்டா…கண்டிப்பா எதாவது தொல்லை பண்ணுவான். பாத்து இருங்க”, என மதுரன் அறிவுருத்தி அனுப்பினான்.
“சரிடா நாங்க கிளம்பறோம். மது உன் மண்டப மேனேஜர் நம்பர் குடு நான் இன்னிக்கு போய் பாக்கணும்”, சரண் கேட்டு வாங்கி கொண்டதும் இருவரும் கிளம்பினர்.
இவர்களுக்கு முன் வெளியே வந்த ஸ்டெல்லாவும், நதியாளும் கோபத்தை அடக்க சற்றே சிரமப்பட்டு சஞ்சயிடம் காட்டிக்கொண்டிருந்தனர்.
“என்னடா இன்னும் காணோம்? அந்த பரதேசிங்க தான் அப்பவே போய்டானுங்களே இன்னும் இவனுங்க அங்க என்ன புடுங்கிட்டு இருக்கானுங்க?”, என நதியாள் சஞ்சயை திட்டிக்கொண்டிருக்க , அகரனும் சரணும் அவள் பேசியதைக் கேட்டு சிரித்தபடியே அங்கு சென்று நின்றனர்.
“என்ன மேடம் இன்னும் கோவம் குறையல போல? “, சரண் சிரித்தபடி சீண்டினான்.
“மூடிட்டு முதல்ல கிளம்புங்க. சைட் போய் பேசிக்கலாம்”, நதியாள் கூறிவிட்டு முன்னே நடந்தாள்.
“சஞ்சய் நீயும் ஸ்டெல்லாவும் ஆபீஸ் போங்க நாங்க சைட் போயிட்டு வரோம்”, என அகரன் அவர்களை அனுப்பிவிட்டு சரணின் காரில் மூவரும் ஏறிக்கொள்ள கார் புறப்பட்டது.
நதியாள் இருவரையும் முறைத்துவிட்டு வெளியே திரும்பிக்கொண்டாள்.
“யாள்….. ஏன் எங்க மேல கோவப்படற? நாங்க என்ன பண்ணோம்?”, சரண்.
“இத்தனை நாளா அந்த புண்ணாக்கு உங்கள டார்ச்சர் பண்ணிட்டு இருக்கான், அவன தூக்கி மிதிக்காம ஏன்டா அமைதியா இருக்கீங்க? என்ன பேச்சு பேசறான் பாத்தியா? இது உங்க உழைப்பு டா. இவ்வளவு சார்ட் டைம் பீரியட்ல ஸ்டார் ஹோட்டல் கட்றது அவ்வளவு ஈஸி இல்லன்னு அப்படி பேசாத இப்படி பண்ணாதன்னு எனக்கு அவ்வளவு கிளாஸ் எடுத்தீங்கள்ல இரண்டு பேரும். அவன தட்டி உக்கார வைக்காம ஏன் இன்னும் வளர விட்றீங்க? அட்லீஸ்ட் அந்த சேர்மேன் கிட்ட சொல்லலாம்ல இவ்வளவு தொல்லை தரான்னு”, நதியாள் மனதிலிருப்பதை எல்லாம் கொட்டிக் கொண்டு இருந்தாள்.
அகரனும் சரணும் வாய் மூடி சிரிக்க, அதில் கடுப்பானவள் அவர்களை சரமாரியாக அடிக்கத்தொடங்கினாள்.
“ஹேய் அவன அப்பறம் அடிச்சிக்க இப்ப டிரைவிங்ல இருக்கான்ல…. யாள்.. யாள்….”, சரண் சமாதானப்படுத்தினான்.
“போ சரணா….. அவன் அப்படி சொன்னதும் எனக்கு எவ்வளவு கோவம் வந்தது தெரியுமா? அவன உயிரோட விடக்கூடாது டா. என்ன ஆனாலும் சரி நான் அந்த சேர்மன் பாத்து பேச போறேன்”, நதியாள் கைகட்டிக்கொண்டு தீவிரமான குரலில் கூறினாள்.
அகரன் காரை ஓரமாக நிறுத்திவிட்டு நதியாளைத் திரும்பிப் பார்த்தான்.
“நதிமா….. நீ அங்க நடந்துகிட்டது ஓக்கே…. பட் இப்ப பேசறது ஸ்கூல் பொண்ணு மாதிரி பேசற. இதுல்லாம் பிஸ்னஸ்ல சகஜம் டா. இதையெல்லாம் நாம லைட்டா எடுத்துகிட்டு நம்ம வழில நாம போய்கிட்டே இருக்கனுமே தவிர அவன் ஹெட்கிட்ட போய் கம்ப்ளைன்ட் பண்ணக்கூடாது. வார்ன் பண்ணலாம் அதுவே லாஸ்ட் ஸ்டெஜ்ல தான் பண்ணணும். நிலைமை கைமீறி போறப்ப அவன் ஹெட்கிட்ட சொல்லலாம் அதுவே ரொம்ப யோசிச்சி எந்த இடத்துலையும் நம்ம தன்மானம் இழக்காத மாதிரி தான் அமைச்சிக்கணும். நீ கோவப்பட்டு அடிச்சல்ல அது ஒக்கே… நாம அவன் ஹெட் கிட்ட இதுக்கெல்ல்ம் போய் நின்னா அவன் நம்மல என்ன நினைப்பான்? நம்ம தரம் எப்பவும் யாருக்காகவும் தாழவே கூடாது. இத நல்லா நியாபகம் வச்சிக்க… “, அகரன் பொறுமையாகவும், அழுத்தமாகவும் கூற நதியாள் அதில் இருக்கும் அர்த்தம் புரிந்து சரியென தலையசைத்தாள்.
“ஹப்பாடா… தலைய ஆட்டிட்டா டா. இதுக்கு மேல தான் அந்த பன்னாட என்ன பண்ணும்னு யோசிக்கணும்… கண்டிப்பா தொல்லை தருவான் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும். தனியா எங்கயும் கொஞ்ச நாள் போகாத யாள்….”, சரண்.
“அவனுக்கு பயந்து நான் ஏன் இருக்கணும்?”, நதியாள் மீண்டும் கோபமாக ஆரம்பித்தாள்.
“அம்மா தாயே….உன்னை பயந்து அப்படி இருக்க சொல்லல… இதுல்லாம் முன் எச்சரிக்கை அவ்வளவுதான். உன்கிட்ட அடிவாங்கி சாவணும்னு அவனுக்கு எழுதி இருந்தா யாரால மாத்தமுடியும்? வா வந்து சைட் புல்லா பாத்துட்டு ப்ராகிரஸ் சொல்லு”, என அவளை இறங்க வைத்தான் சரண்.
நதியாள் சரணை முறைத்தபடி ஏற்கனவே பாதி முடிந்த ஒரு கட்டிடத்திற்குள் நுழைந்து அதன் பணிகள், முடிந்த, முடிக்கவேண்டிய என அனைத்து பிரிவுகளையும் ஆராய்ந்து எழுதிக்கொண்டாள்.
பின் அகரன் சரணை அனுப்பிவிட்டு நதியாளோடு தன் இல்லம் அழைத்து வந்தான்.
“இங்க ஏன் வந்தோம் அகன்? “, நதியாள் காரில் இருந்து இறங்காமலே கேட்டாள்.
“உன்ன ஒன்னும் கடிச்சி சாப்பிட்டுட மாட்டேன் பயபடாம வா”, என அகரன் அவளிடம் கூறி கார் கதவை திறந்தான்.
“க்கும்…. நகரு “, என அவளும் இதழ் சுழித்து காட்டி இறங்கி இல்லம் நோக்கி நடந்தாள்.
“யப்பா….. எவ்ளோ கோவம் வருது இந்த நதிக்கு… நம்ம பாடு திண்டாட்டம் தான் போலவே”, என வேண்டுமென்றே அவள் காதுபட கூறி வம்பிலுத்தான் அகரன்.
திரும்பி பார்க்காது நடந்தவள் படிகளில் ஏறி இரண்டாம் தளத்தில் இருக்கும் தன்னவனின் இல்லத்திற்கு முன் வந்து நின்றாள்.
அகரனும் பொறுமையாக அவளின் கோபத்தையும், அவளையும் இரசித்தபடி மிகவும் சாவகாசமாக கதவை திறந்து உள்ளே சென்றான்.
வாயிற்குள் முனகியபடி அவளும் அவனை தள்ளிவிட்டு உள்ளே சென்று சோபாவில் அமர்ந்தாள்.
“என்ன வந்து உட்கார்ந்துட்ட…. போ… போய் நல்லா ஜில்லுன்னு ஒரு ஆரஞ்ச் ஜூஸ் போட்டு கொண்டு வா… நான் பிரஸ் ஆகிட்டு வரேன்”, என தோரணையாக கட்டளையிட்டவன் தன் அறைக்குள் சென்று கதவடைத்து வாய்மூடி சிரித்தான்.
ஏற்கனவே கோபத்தில் இருக்கும் நதி இவனின் அதட்டலில் இன்னும் கொதிப்படைந்து இருக்கும் இடம் அசையாது சோபாவில் சரிந்து படுத்தபடி தன் மொபைலில் விளையாடிக் கொண்டிருந்தாள்.
சில நிமிடங்கள் கழித்து வெளியே வந்தவன் நதியாளின் சயன கோலம் கண்டு மனம் அலைப்புற, கஷ்டப்பட்டு தன்னை நிதானப்படுத்திக் கொண்டு அவளின் அருகில் சென்று நின்றான்.
“என்ன படுத்துட்டு இருக்க? ஜூஸ் போட்டியா இல்லையா? தாலி கட்டின புருஷன் நின்னுட்டு இருக்கேன், நீ படுத்துட்டு இருக்க”, அகரன் முகத்தை கோபமாக வைத்துக்கொண்டு கேட்டான்.
நதியாள் அவனை மேலிருந்து கீழ்வரை பார்த்துவிட்டு, கால் மேல் கால் போட்டு நன்றாக படுத்துக்கொண்டாள்.
“ஏய்…என்ன…. உன்ன தான்… எந்திரி முதல்ல”, அகரன் மிரட்டினான்.
“என்னடா ? நானும் போனாபோகுதுன்னு பாத்தா ஓவரா சவுண்ட் குடுக்கற….. “, எனக் கேட்டு அமைதியாக எழுந்தாள்.