51 – அகரநதி
அந்த சந்தோஷமான மனநிலையில் அனைவரும் லயித்திருக்க அகரனுக்கு வந்த அழைப்பு அவனை கோபத்தில் முகம் சிவக்க வைத்தது.
“அரை மணி நேரத்துல வரேன். அதுவரைக்கும் எவனும் உள்ள வரக்கூடாது பாத்துக்க”, எனக் கூறி போனை வைத்துவிட்டு சரணிடம் வெளியே செல்வதாக கூறி ஒரு மணி நேரத்தில் தான் அழைக்கவில்லையென்றால், அவனை முன்னேற்பாட்டுடன் அவ்விடம் வரக்கூறினான் அகரன்.
நதியாள் இங்கே விஷேசத்தில் நண்பர்களுடன் ஆளவளாவிக்கொண்டிருந்த சமயம் அகரன் அவளிடம் சொல்லாமல் சென்று விட்டான்.
அகரன் சென்று சிறிது நேரம் கழித்தே அவன் அவ்விடம் இல்லை என்பதை கவனித்தாள் நதி. சரணிடம் கேட்க சிறு வேலையாக வெளியே சென்றிருப்பதாக கூறி வேறு பக்கம் சென்றுவிட்டான்.
அகரன் அரைமணிநேரத்திற்கும் சற்றே குறைவான மணித்துளிகளில் அந்த கட்டிடத்தின் வாயிலை வந்தடைந்தான்.
அங்கே வேலைசெய்பவர்களை தடுத்து நிறுத்திவிட்டு, என்ஜினியர் மற்றும் சூப்பர்வைசரிடம் வினய் சண்டையிட்டுக் கொண்டிருந்தான்.
“இனிமே இந்த கான்ட்ராக்ட் எங்க கம்பெனிக்கு தான் சொந்தம். ஒழுங்கா அத்தனை பேரும் இடத்த காலி பண்ணுங்க. இல்லைன்னா வேற மாறி நான் பேசவேண்டியாதா இருக்கும்”, என வினய் அவர்களிடம் சண்டையிட்டுக் கொண்டு இருந்தான்.
“எப்படி சார் இப்ப வந்து உங்க கான்ட்ராக்ட்னு சொல்வீங்க? இதை நாங்க முடிக்கற ஸ்டேஜ்ல இருக்கோம். அப்படி எல்லாம் விட்டுட்டு போக முடியாது”, சூப்பர்வைசர் சரவணன்.
“டேய் நான் ஒழுங்கா சொன்னா கேட்கமாட்டீங்களா டா?”, என வினய் கை ஓங்க அகரன் அவன் கையை தடுத்துப் பிடித்தான்.
“சரவணன் என்ன பிரச்சனை இங்க?”, அகரன் வினயை முறைத்தபடிக் கேட்டான்.
“இப்ப வந்து இந்த பில்டிங் கான்ட்ராக்ட் இவங்க கம்பெனியோடதுன்னு சொல்றாங்க சார்….”, சூப்பர்வைசர்.
“ஓஓ….. சொல்லுங்க மிஸ்டர் வினய்…. இது எப்ப உங்க பிராஜெக்ட் ஆச்சி?”, அகரன் நக்கலாக பார்த்தபடிக் கேட்டான்.
“அத என்கிட்ட கேளு டா”, என பூரணன் வினயின் பின்னிருந்து கூறினான்.
“இந்த தருதலையும் இங்க தான் இருக்கா”, என முணுமுணுத்தபடி பூரணனைப் பார்த்தான் அகரன்.
“பாஸ்…. இவனுங்கள அடிச்சி தொறத்திட்டு இந்த பில்டிங்அ தரமட்டமாக்கலாம் …. நம்ம பிளான் படி புதுசா கட்ட ஆரம்பிக்கலாம் பாஸ்”, வினய்.
“என்ன தரமட்டமாக்குவீங்களா? இது எங்க பிராஜெக்ட்”, என என்ஜினியர் குரல் கொடுத்தான்.
“அவசரப்படாத டா என்ஜினியர்…. இன்னும் இருக்கு. இங்க எங்களுக்கு இஷ்டவிரோதமா பில்டிங் கட்டினது இல்லாம எங்களுக்கு கொஞ்ச கூட பிடிக்காத வகையில கட்டினதால ஐஞ்சு கோடி ரூபாய் நஷ்ட ஈடு குடுக்கணும்னு உங்க கம்பெனி மேல நாங்க கேஸ் பைல் பண்ணி இருக்கோம்”, என ஒரு கவரை அகரனிடம் கொடுத்தான்.
“திஸ் இஸ் புல்ஷிட் சார்”, சூப்பர்வைசர் அகரனிடம் ஆதங்கத்தை காட்டினார்.
“அவ்ளோ ஈஸிய எல்லாம் நீங்க கேஸ் பைல் பண்ண முடியாது பூரணன். இதுக்கு நாங்களும் ஆக்சன் எடுப்போம். அதுவரைக்கும் இந்த பில்டிங்-அ நீ தொடக்கூடாது. தொட விடமாட்டேன்”, அகரன் அழுத்தமாகக் கூறினான்.
“இப்பவே உன் கண் முன்னாடி இடிக்கப் போறேன். பாத்துட்டு போய் ஆக்சன் எடு டா”, பூரணன் திமிராகக் கூறினான்.
“அதெப்படி ஆக்சன் எடுப்ப டா பூராண்”, எனக் கூறியபடி சரண் அங்கே வந்தான் உடன் போலீஸ், வக்கீல் மற்றும் கட்டிடத் துறை அதிகாரிகளுடன் அவ்விடம் சேர்ந்தான்.
“மிஸ்டர் பூரணன். இது இவங்களுக்கு கொடுக்கப்பட்ட பிராஜெக்ட். இந்த இடத்தோட ஓனர் மிஸ்டர் கருப்பசாமி அக்ரீமெண்ட்-ல கையெழுத்து போட்டு குடுத்து இருக்கார். இங்க நீங்க பிரச்சினை பண்றது சட்டத்துக்கு விரோதமானது”, வக்கீல்.
“இந்த இடத்தோட ஓனர் என் பாஸூம் தான். அதுக்கு ஆதாரம் இதோ”, என வினய் ஒரு பத்திர நகலை அவர்களிடம் காட்டினான்.
அகரனும், சரணும், பூரணனையும் வினயையும் முறைத்தபடி நின்றிருந்தனர்.
“இருக்கலாம் சார். பட் கருப்பசாமி அக்ரீமெண்ட்-ல தன் சொந்த பொறுப்புல இந்த நிலத்துல பில்டிங் கட்டற அதிகாரத்தையும், அந்த டென்டர்-ல இவங்களுக்கு இந்த பிராஜெக்ட் குடுத்து இருக்காரு. சோ நீங்க இந்த பில்டிங் இடிக்கமுடியாது. மீறினா வேற மாதிரியான நடவடிக்கை நீங்க சந்திக்க வேண்டி வரும். இந்த பிரச்சினை கோர்ட்ல வச்சி பேசிக்கலாம். அகரன் சார் இங்க போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு பண்ணிட்டேன். மத்தத ஆபீஸ்ல பேசிக்கலாம் தானே”, என வக்கீல் கேட்டார்.
“ஒரு நிமிஷம் சார்”, சரண் கூறிவிட்டு பூரணனிடம் சென்றான்.
“நீ ஏன் இப்படி பண்றன்னு எங்களுக்கு நல்லா தெரியும். கண்ட நாதாரிங்க பேச்ச கேட்டு தெருவுக்கு போயிராத. உங்க அப்பா காதுக்கு விஷயம் போனா என்ன நடக்கும்னு தெரியும்ல. பாத்து இரு”, என சரண் வினயை பார்த்தப்படிக் கூறிவிட்டு சென்றான்.
அகரன் இருவரையும் நக்கலாக பார்த்தபடி அங்கிருந்து நகர்ந்தவன், பின் வினய் மற்றும் பூரணனைப் பார்த்து ,” ஒவ்வொரு தடவையும் இப்படி அமைதியா போகமாட்டேன். நான் நல்லவன் தான் ஆனா ரொம்ப நல்லவன் இல்ல… “, என எச்சரித்துவிட்டு சென்றான்.
வினய் தான் வந்த வேலை முழுதாக முடியாமல் போனதில் எரிச்சல் பட்டு பூரணனை அழைத்துக்கொண்டு பீச் ஹவுஸ் சென்றான்.
“என்ன பாஸ்…அவனுங்கள நஷ்டம் பண்ணி காணாம பண்ணிடலாம்னு பாத்தா இப்படி ஆகிரிச்சி. அந்த கருப்பசாமிய விட்டு கேஸ் பைல் பண்ண சொல்லலாமா?”, வினய் பூரணனுக்கு ஊற்றிக்கொடுத்தபடிக் கேட்டான்.
“அவனுங்க எப்பவும் உஷாரா இருப்பானுங்க டா..படிக்கறப்பவே அப்படி தான். ஒரு இடத்துல இறங்கறதுக்கு முன்னாடி அத்தனையும் அலசி ஆராய்ஞ்சிட்டு தான் அடி வைப்பானுங்க. இந்த அளவுக்கு கேஸ் பைல் பண்ணதே பெருசு தான். இதுவே இரண்டு மாசம் இழுத்தா வேற பிரச்சினை கொண்டு வரலாம்”, பூரணன் மதுவை அருந்தியபடிக் கூறினான்.
“வேற என்ன பாஸ் பண்றது இவங்கள ஒழிக்கறதுக்கு?”, வினய்.
“இவனுங்க வீக் பாயிண்ட் சரியா பிடிச்சி அடிச்சா தான் நம்ம பேச்ச கேப்பானுங்க. நீ அவனுங்க ஊரு தானு. அவங்க குடும்பம் எப்படி?”, பூரணன்.
“ஊருல பெரிய குடும்பம் சார். மூனு பேரும் ஊரு பெரிய தலைங்களோட புள்ளைங்க. தனி மரியாதை. நிலம் மில்லு பண்ணைன்னு சொத்து ஏகப்பட்டது இருக்கு”, வினய்.
“அப்பறம் ஏன்டா இவனுங்க இங்க இருக்கானுங்க?”, பூரணன்.
“சொந்த கால்ல நிக்கறேன்னு வந்துட்டானுங்க பாஸ்”, வினய் வெறுப்புடன் கூறினான்.
“அந்த பொண்ணு நதியாள் ? அவ குடும்பம் எப்படி?”, பூரணன்.
“இவங்கள விட அவ ஒரு படி மேல சார். இவனுங்க அங்க அமைதியா இருப்பானுங்க. அந்த பொண்ணு கொடி தான் அங்க மூனு வீட்லயும். அவ்வளவு நெருக்கம் மூனு குடும்பமும். அவ வாய் பேசறதுக்கு முன்ன கை பேசும்”, என வினய் வன்மத்துடன் தன் கன்னத்தை தடவியபடி கூறினான்.
“நீயும் பஞ்சாயத்துல வாங்கினியா வினய்?”, என பூரணன் சிரிப்புடன் கேட்டான்.
“ஆமா பாஸ். அதான் கொலைவெறில இருக்கேன் அவமேல…. அத்தனை பேரும் நான் சொன்னத கொஞ்சம் கூட நம்பல பாஸ். என்னை தான் கொல்ல வந்தானுங்க. அப்ப அகரன் தான் இந்த பிரச்சினை இதோட விட்றுங்கன்னு சொல்லிட்டான். இல்லைன்னா அன்னிக்கே என்னை கண்டம் துண்டமா வெட்டிருப்பானுங்க . சரணோட அப்பா போதும் அவ்வளவு கோவத்துல இருந்தாரு அந்த ஆளு”, வினய்.
“அப்ப அங்க அடிச்சா இவனுங்களுக்கு வலிக்கும்ல?”, பூரணன்.
“அந்த ஊருல கஷ்டம் பாஸ். அங்க அத்தனை பேரும் சொந்தகாரவங்க தெரிஞ்சவங்க. மத பேதம் கூட பாக்காம பழகறாங்க… வெளியூர் ஆளுங்கள பாத்தா ஆயிரம் கேள்வி கேப்பானுங்க. ரொம்ப கட்டுபாடான ஊரு”, வினய் உண்மை நிலையை விளக்கினான்.
“அப்ப இவனுங்கள அடிக்க அந்த பொண்ண தூக்கிடலாம். அந்த மதுரன் லவ் பண்ற பொண்ணையும் சேர்த்து… “, என பூரணன் கூறி முடிக்கும் முன் மதுரன் நிச்சய தகவல் அவனை வந்தடைந்தது.
“டேமிட்….”, என பூரணன் தன் கைப்பேசியை தூக்கி எறிந்தான்.
“என்னாச்சி பாஸ்?”, வினய்.
“அந்த மதுரனுக்கு இன்னிக்கு காலைல நிச்சயம் நடந்து இருக்கு. அந்த பொண்ணோட அப்பனுக்கு அந்த ராஸ்கல-அ கால் பண்ண சொல்லு. இன்னொரு போட்டோ அனுப்ப சொல்லு…. “, என பூரணன் கோபத்தில் கத்தினான்.
“எஸ் பாஸ்…”, என வினய் யாருக்கோ தொடர்பு கொண்டான்.
அந்த பக்கம் எந்த பதிலும் இல்லாமல் போகவே மீண்டும் மீண்டும் முயற்சித்தான்.
“இந்த பீட்டர் எங்க போய் தொலைஞ்சான்? சே…. போன் லைனே கிடைக்கல. இந்த ஆளு வேற கத்து கத்துன்னு கத்தறான்….”, வினய் அலுத்தபடி பூரணன் அருகில் வந்து நின்றான்.
“பாஸ்…. யாரும் போன் எடுக்கல…. “, வினய்.
“அந்த பீட்டர் பிரண்டுக்கு போடு”, பூரணன்.
“சரி பாஸ்” , வினய்.
“ஹலோ….. பீட்டர் பிரண்ட் தானே? பீட்டர் எங்க? ஏன் போன் லைன் போகல? “, வினய்.
அந்த பக்கம் கூறிய பதிலில் அதிர்ந்த வினய் பூரணன் அருகில் வந்து , “பாஸ்…. நேத்து நைட் இருந்து பீட்டர் அங்க இல்லையாம். எங்க போனான்னு தெரியலன்னு சொல்றான்”, எனக் கூறினான்.
“இடியட்….. அவன் எங்க போய் தொலைஞ்சான்? ஷிட் … ஷிட்…..ஷிட்….”, என கைகளில் கிடைத்த பொருட்கள் அத்தனையும் உடைத்து நொறுக்கினான் பூரணன்.
“இப்ப என்ன பாஸ் பண்றது?”, வினய்.
“உடனே அவளுங்க இரண்டு பேரையும் கடத்த சொல்லு. இந்த முறை நான் அவனுங்க கிட்ட தோக்கவே கூடாது. அவளுங்கள கடத்தினதும் எனக்கு சொல்லு நான் எங்க அடைச்சி வைக்கணும்னு சொல்றேன்”, என பூரணன் வெறி பிடித்தவன் போல கத்திவிட்டு எங்கோ கார் எடுத்துக்கொண்டுச் சென்றான்.
இங்கே அகரனும், சரணும் அலுவலகத்தில் அமர்ந்து யோசித்துக்கொண்டிருந்தனர்.
“அகர்….. அடுத்து நம்ம மூவ் என்னடா?”, சரண்.
“கருப்பசாமிய கான்டாக்ட் பண்ண ட்ரை பண்ணு. அவர வச்சி தான் இந்த பிரச்சினைய முடிக்க முடியும். அப்பறம் இது யாருக்கும் தெரிய வேணாம். தெரிஞ்சா தேவையில்லாத பிரச்சினை தான் கிளம்பும் வீட்ல”, அகரன்.
“சரி. ஆனா யாள்கிட்டயும் சொல்ல வேணாமா?”,சரண்.
“வேணாம்னு சொல்றதே அவளுக்காக தான். தெரிஞ்சா தாம்தூம்னு குதிப்பா. அப்பறம் மதுவோட சேர்ந்து எதாவது பண்ணிடுவா அவனுங்கள. இன்னிக்கு மதுவோட இன்னொரு முகத்த பாத்தேன். அவ்ளோ கொடூரமா இருந்தது”, அகரன்.
“இன்னும் எத்தனை நாளைக்கு இவனுங்க சகிச்சிட்டு இருக்கணும்னு சொல்ற நீ?”, சரண் சலிப்புடன் கேட்டான்.
“கொஞ்ச நாள்டா. பூரணன் அப்பாகிட்ட பேசறப்ப நீயும் தானே இருந்த…. விடு கொஞ்ச நாள் சரியாகிடும். எல்லாத்துக்கும் அடிதடி செட் ஆகாது டா”, அகரன் பொறுமையாக கூறினான்.
“என்னமோ போ…. உன் அளவுக்கு பொறுமை எனக்கு இல்ல… நான் வக்கீல பாத்துட்டு வீட்டுக்கு போறேன். நீயும் சீக்கிரம் கிளம்பி வா. எல்லாரும் நைட் ஊருக்கு கிளம்பறாங்க”, சரண் கூறிவிட்டு சென்றான்.
“பாத்து போயிட்டு வாடா”, என அகரன் அவனை அனுப்பிவிட்டு மற்ற கன்ஸ்ட்ரக்ஷன் சைட்களுக்கு தொடர்பு கொண்டு எந்த பிரச்சினையும் இல்லையென உறுதி படுத்திக்கொண்டு மேலும் சில முன்னேற்பாடுகளை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றான்.
நேராக தன் இல்லம் வந்தவன் அங்கே சுந்தரம் தாத்தா மட்டும் இருப்பது கண்டு அவர் அருகில் வந்தான்.
“தாத்தா….. நீங்க மட்டும் தான் இருக்கீங்க…மத்தவங்க எல்லாம் எங்க?”, அகரன்.
“எல்லாரும் அந்த வீட்டுக்கு போயிட்டாங்க ராசா. நான் உன்னை கூட்டிட்டு வரேன்னு இங்க இருந்துட்டேன். சாப்பிட்டு ஊருக்கு கிளம்பறோம் கண்ணா. கல்யாணம் ஆகியும் உங்கள பிரிச்சி வச்சி இருக்கறது எங்களுக்கு சங்கடமா தான் இருக்கு. ஆனாலும் ஜோசியர் சொல்லிட்டதால தனி தனியா இருக்க வேண்டிய சூழ்நிலை. மனசுல எதுவும் வச்சிக்காத கண்ணு…. எங்க மேல கோவம் எதுவும் இல்லையே”, என அவன் தாடையைப் பிடித்துக் கேட்டார்.
“ஏன்டா தாலி கட்டினன்னு நீங்க யாருமே இப்ப வரை கேக்கலியே தாத்தா. நான் மட்டும் எப்படி உங்க மேல கோவப்படறது? என் மேல நீங்க வச்சி இருக்கற நம்பிக்கைய விட அதிகம் நான் உங்க எல்லார் மேலயும் வச்சி இருக்கேன். ஆறு மாசம் தானே சட்டுன்னு போயிடும் தாத்தா. அதுக்கப்பறம் அவ லண்டன்ல போய் படிக்கப்போறா. அங்க இருக்கற டாப் காலேஜ்ல சீட் கெடச்சி இருக்கு உங்க பேத்திக்கு. இத வீட்ல சொல்லி நீங்க தான் எல்லாரையும் சமாதானம் பண்ணணும் இப்பவே சொல்லிட்டேன்”, என அகரன் அவரை கட்டிப்பிடித்தபடிக் கூறினான்.
“லண்டன்லயா? எத்தனை வருஷம் ராசா?”, சுந்தரம் தாத்தா.
“இரண்டு வருஷம் தான் தாத்தா”, அகரன் சிரித்தபடிக் கூறினான்.
“ஏன் கண்ணு அவ்வளவு தூரம் போய் படிக்கணுமா? இங்கயே படிக்கட்டுமே…. இன்னும் இரண்டு வருஷம் நீங்க சேர முடியாம போகுமேய்யா”, சுந்தரம் தாத்தா அவன் முகத்தை பார்த்தபடிக் கூறினார்.
“ஏன் தாத்தா போனா என்ன? நீங்க தானே சொன்னீங்க அவங்கள நாம சந்தோஷமா வச்சிகிட்டா நம்ம குடும்பத்தையே நல்லா பாத்துப்பாங்கன்னு. என் நதி தேவதை தாத்தா…. அவ நம்ம பரம்பரையவே நல்லா பாத்துப்பா…. அவ சொந்த முயற்சில இந்த சீட் கிடச்சி இருக்கு. அவளுக்கு ஆர்வமும் இருக்கு திறமையும் இருக்கு….. என் பொண்டாட்டி பெரிய ஆளா வந்தா எனக்கு தானே பெருமை…. அவ லண்டன்ல கண்டிப்பா படிப்பா. லீவ்ல இங்க வருவா இல்லைன்னா நான் அங்க போவேன். பண்ற டிக்கெட் செலவுக்கு அவள சம்பாதிச்சி குடுக்க சொல்லிடலாம். சரிதானே தாத்தா?”, அகரன் புன்னகையுடன் கூறினான்.
“ஹாஹாஹா….. இரண்டு பேரும் ஜாடிக்கு ஏத்த மூடி தான் கண்ணுங்களா…. நான் வீட்ல பேசி சரிகட்றேன் … சரி முகம் கழுவி உடுப்பு மாத்திட்டு வா கிளம்பலாம்”, என சுந்தரம் தாத்தா அவனைத் தயாராக அனுப்பி வைத்தார்.
அகரனும் சுந்தரம் தாத்தாவும் சிறிது நேரத்தில் கிளம்பி நதியாள் இருக்கும் இல்லம் சென்றடைந்தனர்.
அங்கே சிறிது நேரத்தில் அனைவரும் உணவுண்டவுடன் அவர்களிடம் கூறிக்கொண்டு அனைவரும் ஊருக்கு கிளம்பினர்.
நதியாளுக்கு ஆயிரம் புத்தி கூறி, அகரனிடமும் சரணிடமும் லட்சம் பத்திரம் கூறி, மற்ற நண்பர் பட்டாளத்திடம் சூதானமாக இருக்கச் சொல்லி என அவர்கள் கிளம்புவதற்குள் ஒரு மணிநேரம் சென்றுவிட்டது.
ஒருவழியாக அவர்கள் ஊருக்கு புறப்பட்டதும் , அகரனும் சரணும் கூட விடைபெற்று தங்கள் இல்லம் வந்து சேர்ந்தனர்.
அகரன் கண்களில் ஆயிரம் செய்தி கூறி, ஏக்கம் காட்டி நதியாளை இறுக்கமாக அணைத்து விடைபெற்றான்.
நதியாள் கண்களில் தவிப்பிருந்தாலும், அதை வெளிகாட்டாமல் அவனை செல்லமாக அடித்து வழியனுப்பினாள்.
பூரணன் கூறியது போல வினய் ஆட்களை தயார் செய்து நதியாளை கடத்த சரியான தருணம் பார்த்து காத்திருந்தான்.
ஒரு வாரம் கடந்திருக்க……….