52 – அகரநதி
ஒரு வாரம் அவரவர் அவரவர் வேலைகளில் மூழ்கி இருக்க , நம் காதல் ஜோடிகளும் காதலில் லயித்தபடி வேலைகளிலும் கவனம் செலுத்தி வந்தனர்.
அகரனும் சரணும் சேர்ந்நு கருப்பசாமியை பிடித்து அவர் வாயிலாகவே அந்த கட்டிடம் அகரன் கம்பெனிக்கு கொடுத்தது எனக் கூற வைத்து பூரணன் வாங்கிய ஸ்டேவை கேன்சல் செய்ய வைத்தனர்.
வினய் ஒரு வாரமாக நதியாளை வேவு பார்த்தபடி இருக்க, பூரணன் மீண்டும் அகரனிடம் தோற்றதில் வெறி கொண்டு அகரனை தோற்கடிக்க சந்தர்ப்பம் தேடிக்கொண்டு இருந்தான்.
அன்று புதன்கிழமை, நதியாள், மீரா, ஸ்டெல்லா , ரிஸ்வானா நால்வரும் பீச் ரெஸ்டாரெண்டில் டேபிள் புக் செய்து சஞ்சயின் பிறந்தநாளைக் கொண்டாட ஏற்பாடு செய்திருந்தனர்.
“ஏய் யாள்….. யார் யாரை இன்வைட் பண்றது?”, ரிஸ்.
“ரஹீம் பையா, திலீப், மைக்கேல், நம்ம நாலு பேர், அகன், சரண், மதுர்”, என நதியாள் அன்றைய பிறந்தநாள் கொண்டாட்ட விருந்தினர்களாக யார் யாரை அழைப்பது எனக் கூறினாள்.
“தேவ் சார் அ விட்டுட்ட யாள்… அவரும் இப்ப சென்னைல தானே இருக்கார்?”, ஸ்டெல்லா.
“அவன கூப்பிடறதா வேணாமான்னு மீரா சொல்லட்டும்”, நதியாள் மீராவின் பக்கம் கேள்வியை திருப்பி விட்டு அமைதியாக பார்த்தாள்.
“அவரும் பிரண்ட் தானே … தாராளமா கூப்பிடலாம்…”, மீரா சாதாரணமாக பதிலளித்துவிட்டு தன் வேலையைத் தொடர்ந்தாள்.
“ஓக்கே…. அவரையும் இன்வைட் பண்ணிடலாம். நம்ம ஆபீஸ்ல யாரையும் கூப்பிட வேணாமா?”, ரிஸ்.
“ஸ்வப்னா, ஷீலா தான் கூப்பிட முடியும். பட் அவங்கள மட்டும் கூப்பிட்டா நல்லா இருக்காது…. எல்லாரையும் கூப்பிட நம்ம பட்ஜெட் பத்தாது…. ஸ்டைபன் கூட இன்னும் குடுக்கல இவனுங்க”, நதியாள் சலித்தபடி கூறினாள்.
“உன் கம்பெனில என்னடி ஸ்டைபன் எதிர்பாக்கற? நீயே அண்ணாகிட்ட கேட்டு வாங்க வேண்டியது தானே?!”, ஸ்டெல்லா.
“ம்க்கும்…. அது ஒன்னு தான் குறைச்சல்…. ஆல்ரெடி நான் அகன் கூட தங்கலன்னு சார் கோவத்துல இருக்காரு. இப்ப நான் போய் பார்ட்டிக்கு பணம் கேட்டா என்னை அங்கயே தங்கவைக்க எதாவது டீல் பேசுவான். நான் மாட்டேன்”, நதியாள் தோளை குலுக்கிக் கூறினாள்.
“ஏன் யாள் உனக்கும் ஆசைதானே அண்ணா கூட ஸ்டே பண்றதுக்கு…. கம்முன்னு அங்கயே இருக்கலாமே”, ரிஸ் தன் சந்தேகத்தை கேட்டாள்.
“ஆசை தான். ஆனா நான் அங்க போனா அகன் கண்ணியமா ஒதுங்கி தான் இருப்பான். அவனுக்கு இன்னும் மனசுக்குள்ள யாரையும் கேக்காம தாலி கட்டிட்டோம்னு வருத்தம் இருக்கு. நான் எவ்வளவு தான் சமாதானம் பண்ணாலும் அவன் அத இன்னும் விடல. பெரியவங்க சொல்ற இந்த சின்ன விஷயத்த செஞ்சாவாது அவனுக்கு உறுத்தல் குறையும்னு அவனும் அமைதியா இருக்கான். இந்த ஐஞ்சு மாசம் மட்டுமில்ல இன்னும் இரண்டு வருஷத்துக்கு நாங்க தனியா தானே இருக்க போறேம்…. லண்டன்ல படிக்க வீட்ல தாத்தா கிட்ட சொல்லிட்டான். அவர் எல்லாரையும் சமாளிச்சிடுவாரு. நானே எதிர்பாக்கல லண்டன்ல சீட் கிடைக்கும்னு.. கிடைக்கற வாய்ப்ப விட மனசு இல்ல எங்க இரண்டு பேருக்கும்”, நதியாள் கூறிவிட்டு ஆழ்ந்த மூச்செடுத்தாள்.
ரிஸ்வானா அவளருகில் வந்து தோளைத் தொட,”அவனுக்கு கஷ்டம் தான். அவன பிரிஞ்சு எனக்கும் கஷ்டம் தான். ஆனா இந்த கேப் தேவை ரிஸ். எங்கள, எங்க லவ்வ நாங்க புரிஞ்சிக்கவும், இன்னும் ஸ்ட்ராங் பாண்ட் பில்ட் பண்ணவும்… இதுவும் அழகா இருக்கு… லவ் பண்ணிட்டு இருந்தா எப்படா கல்யாணம்னு இருக்கும் இப்ப கல்யாணம் ஆகிடிச்சி,இப்ப இன்னும் நிறைய நிறைய காதல் பண்ணணும்னு தான் தோணுது… லண்டன்ல டிகிரி முடிச்சிட்டு வந்தப்பறம் தான் பேமிலி லைப் ஸ்டார்ட் பண்ணுவோம்”, நதியாள் கண்களில் காதலும் ஏக்கமும் கலந்தபடி கூறிமுடித்தாள்.
“வாரே வா….. சச் எ லவ்லி பீல்”, என தாமிரா கூறியபடி உள்ளே வந்தாள்.
“ஹேய் தமி….. நீ எப்ப வந்த?”, நதியாள் அவளை கட்டிக்கொண்டு கேட்டாள்.
“காலைல வந்தேன்….நாளைக்கு பிரண்ட் மேரேஜ்…. இன்னிக்கு உங்க கூட டைம் ஸ்பெண்ட் பண்ணலாம்னு வந்தேன்”, எனக் கூறி தாமிரா அனைவரையும் அனைத்து விடுவித்தாள்.
“எங்க கூடவா? சரண் சார் கூடவா தமி?”, என ஸ்டெல்லாவும் மீராவும் கண்ணடித்துக் கேட்க தாமிரா வெட்கப்புன்னகை புரிந்தாள்.
“எல்லார் கூடவும் தான்னு வச்சிக்கோங்க கேர்ல்ஸ்” தாமிரா.
“ஓஓஓஓஓஓஓஓ”, என அனைவரும் கத்த நதியாள் அனைவரையும் அமைதி படுத்தி,” ஏய் என் அண்ணிய கிண்டல் பண்ற அளவுக்கு உங்களுக்கு தைரியம் வந்துரிச்சா? டீச்சர்ராக்கும் அடி பின்னிடுவாங்க ஜாக்கிரதை”, என செல்லமாக நதி மிரட்டவென அந்த இடம் கலகலப்பானது.
“யாள்…. உன்ன அகரன் சார் கூப்பிடறாரு”, என சஞ்சய் வந்து அழைத்துச் சென்றான்.
இப்பொழுது அனைவரும் நதியாளுக்கு “ஓ ” போட, மீண்டும் அனைவரும் சிரிக்க என நதியாள் அங்கிருந்து விரல் ஆட்டி மிரட்டியபடி நகர்ந்தாள்.
“டேய் ஜெய்…. ஈவினிங் உன்னோட பைக்ல வரேன்…. மறந்துட்டு போனா உன்ன கொன்னுடுவேன்….”, என அவனிடம் கூறிவிட்டு அகரனின் அறைக்குச் சென்றாள்.
“மே ஐ கம் இன் சார்”, என கதவை திறந்து அனுமதி கேட்டாள்.
“எஸ்…”, என அகரன் கூறியபடி வாயிலை பார்க்க வழக்கம் போல் நதியாளின் கண்களில் தன்னைத் தொலைத்தான்.
“என்னை வரசொன்னீங்களா சார்?”, என நதி கேட்டதும் தன்னிலை அடைந்தவன், ” ஆமா நதிமா….. இந்த ப்ளோர்க்கு எந்த தீம் சூஸ் பண்ணி இருக்க? இது கொஞ்சம் ஸ்பெஷலா பண்ணச் சொல்லி மது சொல்லி இருக்கான்”,எனக் கேட்டான்
“அதுக்கு இன்னும் டிசைன் கம்ப்ளீட் பண்ணல சார். நாங்க மத்த டிபார்ட்மெண்டோட டிஸ்கஸன்ல தான் இருக்கோம். அந்த ப்ளோர் லாஸ்டா தானே பண்ணணும்? அதுக்குள்ள ரெடி பண்ணி உங்களுக்கு அனுப்பிடறோம் சார்”, நதியாள் சின்சியராக வேலையில் மட்டுமே கவனமாக பேசினாள்.
அகரன் அவள் உள்ளே வந்ததில் இருந்து அவளை மட்டுமே கண்களால் வருடியபடி இருந்தான். அவன் முகம் கவனமாக அவள் சொல்வதை கேட்பது போல் வைத்திருந்தாலும், அவன் கவனித்தது அவனின் ஜீவநதியை மட்டும் தான்….
“இல்ல முன்னயே எல்லா டிசைனும் காட்டிட்டு தான் ஆரம்பிக்கணும். பேஸ் செட் ஆகிரிச்சி இன்னும் இரண்டு நாள்ள பில்டிங் வர்க் ஸ்டார்ட் ஆகிடும். சீக்கிரம் ரெடி பண்ணுங்க…. அப்பறம்…..”, அகரன் இழுத்தான்.
“அப்பறம் வேற என்ன சார்?”, நதியாள் அவன் முகம் பார்த்துக் கேட்டாள்.
“அப்பறம்……”, அகரன் மெல்ல எழுந்து அவளருகில் வந்தான்.
நதியாள் பின்னோக்கி நகரந்தபடி ,” அவ்வளவு தான்னா நான் போறேன் சார். கொஞ்சம் வேலை இருக்கு”, என அவனைவிட்டு தள்ளி நின்றாள்.
“இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருக்கலாமே நதிமா…. உனக்கு டெஸ்க் இங்க போட்டு இருக்கு, நீ எப்ப பாரு அங்க பிரண்ட்ஸ் டெஸ்க்லயே இருக்க…. இது நல்லா இல்ல”, அகரன் சிறுகுழந்தை போல முகத்தை வைத்துக்கொண்டு சோபாவில் அமர்ந்தான்.
“டிசைன்ஸ் டிஸ்கஸன் தனியா பண்ண முடியாதே சார். எங்க டீம்க்கு தானே குடுத்தீங்க அதான் வேலை பாத்துட்டு இருக்கோம்”, நதியாள் சிரிப்பை அடக்கியபடி பதில் கூறினாள்.
“வேலையா பாக்கறீங்க? நல்லா அரட்டை அடிக்கறீங்க… எப்ப பாரு சவுண்ட் விடறீங்க…. உங்க லெஷர் ரூம் மாறி தான் இருக்கு அது”, அகரன்.
“வேலை செய்யறப்ப அதுலாம் சகஜம் சார். சரி நான் போறேன். ஈவினிங் பார்ட்டிக்கு கண்டிப்பா வந்துடுங்க…பீச் ரெஸ்டாரெண்ட்ல”, நதியாள்.
“யாருக்கு பார்ட்டி?”, அகரன்.
“இன்னிக்கு சஞ்சய் பர்த்டே சார்”, நதியாள்.
“ஓஓ……சரி. நீ நம்ம வீட்டுக்கு வந்து ரெடி ஆகிக்கோ நதிமா”, அகரன்.
“இல்ல நான் இப்ப இருக்கற வீட்டுக்கு போயே ரெடி ஆகிக்கறேன். நீங்க இரண்டு பேரும் சீக்கிரம் ரெடி ஆகி வந்துடுங்க”,எனக் கூறிவிட்டு சென்றாள்.
அவள் சென்றதும் அகரன் சற்றே முகம் வாட, சென்றவள் திரும்பி வந்து அவன் கன்னத்தில் இதழ் பதித்து மீண்டும் வெளியே ஓடினாள்.
அவள் செயலில் சன்னமாக சிரித்தவன், ” ஸ்வீட் கேடி “, என தனக்குத்தானே கூறிக்கொண்டு தன் வேலையை தொடர்ந்தான்.
“டேய் அகர்….”, என அழைத்தபடி சரண் உள்ளே வந்தான்.
“மே ஐ கம் இன் சார்…..”, என அழைத்தபடி தாமிராவுடன் ஸ்டெல்லா உள்ளே வந்தாள்.
தாமிராவை பார்த்ததும் சரண் தன்னை மறந்து நின்றான் சில நொடிகள்…..
அகரன் இடித்ததும் தன்னிலை பெற்றவன்,” வாங்க தாமிரா…. நீங்க எப்ப வந்தீங்க? மேடம் நல்லா இருக்காங்களா? “, என வரிசையாக கேள்வி கேட்டபடி அருகிலிருந்த சோபாவை கைகாட்டினான் அமரச்சொல்லியபடி.
“காலைல வந்தேன். இப்ப தான் இங்க வந்தேன்….நீங்க எப்படி இருக்கீங்க? அகரன் அண்ணா எப்படி இருக்கீங்க?”, என இருவரையும் கேட்டாள் தாமிரா.
“நல்லா இருக்கோம்மா….. என்ன சடனா சென்னை பக்கம்? நம்ம ஊர் எப்படி இருக்கு?”, அகரன் நலம் விசாரித்தான்.
“திலீப்…. ஜூஸ் கொண்டு வா”, என சரண் இன்டர்காமில் அழைத்துக் கூறினான்.
சிறிது நேரத்தில் உள்ளே வந்த திலீப் தாமிராவை பார்த்துவிட்டு, “சார் இங்க வந்ததுல இருந்து உங்களுக்கு ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தே நான் இளைச்சிட்டேன்…. இதுக்காகவே எனக்கு எக்ஸ்ட்ரா ஸ்டைபன் குடுக்கணும்”, எனக் கூறினான்.
“நீ வேலை பண்ணா தான் ஸ்டைபன். இருக்கற பொருள் எல்லாத்தையும் உடைச்சா உன்கிட்ட பிரேகேஜ் அமொண்ட் தான் வாங்கணும். அது நீ குடுக்கமாட்டன்னு தான் இந்த வேலை குடுக்கறாங்க திலீப்…உனக்கு ஸ்டைபன்னு ஒன்னு குடுக்கற ஐடியாவே இல்லை யாருக்கும் “,என ஸ்டெல்லா சிரித்தபடி கிண்டல் செய்தாள்.
இருவரும் வழக்கம் போல் சண்டை ஆரம்பிக்க தாமிராவும் சரணும் எதையும் கவனிக்காமல் இருவரும் ஒருவரில் ஒருவர் கவனத்தை ஈர்த்தபடி அமர்ந்து இருந்தனர்.
“நிறுத்துங்கடா இரண்டு பேரும்….. ஏன் இப்படி சண்டை போட்டுக்கறீங்க?”, சரண் எரிச்சல் அடைந்து கேட்டான்.
“ஏன் சார் உங்களுக்கு டிஸ்டர்ப் ஆகுதா?”, என ஸ்டெல்லா நக்கலாக கேட்டாள்.
“ஆமா….. நீ மதுகூட பேசறப்ப நாங்க பேசினா வருமே அதே தான் இங்கயும்…. கிளம்புங்க …..”, என சரண் கத்தினான்.
“ஓஓஓஓ….. நான் என் பியான்சி கூட பேசறேன். நீங்க தங்கச்சி பிரண்ட் கிட்ட தானே பேசறீங்க சார்…. “, ஸ்டெல்லா.
“என் பொண்டாட்டி கூட நான் பேசறேன்ம்மா…. எல்லாரும் இடத்த காலி பண்ணுங்க “, என மனதிலிருப்பது வார்த்தையாக வெளி வந்தது.
சரண் தாமிராவை பார்த்ததில் இருந்து மனதில் நீங்காத சலனம் ஏற்பட்டிருந்தது. அகரன் நதியாள் ரிஷப்சனில் அவள் அவன் மனதில் அச்சாரமாக ஆழ பதிந்துவிட்டிருந்தாள். மனைவி ஸ்தானத்தில் வைத்து கனவில் பேசியவன் நிஜத்திலும் இப்போது பேசிவிட்டான்.
அவன் கூறிய வார்த்தையில் திலீப் முழிக்க, சஞ்சயும் ரிஸ்வானாவும் எதற்கோ அங்கே வந்தவர்கள் இதைக் கேட்டு அதிர்ந்தனர்.
ஸ்டெல்லாவும் அகரனும் ஹை – பை கொடுத்துக் கொண்டனர்.
தாமிரா ஆனந்த அதிர்ச்சியில் உறைந்திருந்தாள்.
“என்னப்பா எல்லாரும் ஷாக்காகி உட்கார்ந்து இருக்கீங்க? என்ன விஷயம்? “, எனக் கேட்டபடி நதியாள் வந்தாள் உடன் மீராவும்.
“சார் உண்மைய சொல்லிட்டாரு. அடுத்த டும் டும் ரெடி”, என ஸ்டெல்லா சந்தோஷத்தில் குதித்தாள்.
“சூப்பர் டா சரணா”, என நதியாள் அவனைக் கட்டிக் கொண்டு குதித்தாள்.
பின் தாமிராவை பெண்கள் அனைவரும் சூழ்ந்து கொண்டு குதித்து கொண்டாடினர்.
“மச்சான்… நீ தான்டா வீட்ல பேசணும்”, என சரண் அகரனைக் கேட்டான்.
“நீ சொன்னியா டா இத்தனை நாளா? “, அகரன் போலியாக முறைத்தான்.
“அது வந்து … எனக்கே உங்க ரிஷப்சன் அப்ப தான்டா முழுசா புரிஞ்சது… இன்னும் அவங்க கிட்ட கூட சொல்லல. அவங்க கிட்ட ப்ரபோஸ் பண்ணவே இல்ல”, சரண்.
“நீ ப்ரபோஸ் பண்ணி இருந்தா அவங்க ஒத்துக்கறது கஷ்டம் மச்சான்”, என அகரன் கூற சரண் கோபமாக முறைக்க முயன்று அவனை கட்டிக்கொண்டு சிரித்தான்.
“ஓக்கே எங்களுக்கு எப்ப ட்ரீட் வைக்க போறீங்க? “, நதியாள்.
“இன்னிக்கு வைக்கலாமா தாரா?”, என சரண் அவளைக் கேட்க, தலையசைத்து தன் சம்மதம் கூறினாள் தாமிரா.
“ஓஓஓஓஓஓஓ……. தாரா….. ஸ்பெஷல் நேம்….”, என அனைவரும் கத்த சரணும் தாமிராவும் வெட்கப்பட்டு அருகில் இருப்பவர் தோளில் தங்கள் முகத்தைப் புதைத்துக் கொண்டனர்.
“ஓக்கே…. இன்னிக்கு பீச் ரெஸ்டாரெண்ட்ல ஈவினிங் பார்ட்டி…. நாங்க இப்பவே கிளம்பறோம் சரணா…. நீ பர்ஸ் புல் பண்ணிட்டு வந்துடு டா”, என அவள் சஞ்சயை இழுத்துக் கொண்டு முதலில் கிளம்பினாள்.
“நீங்களும் கிளம்புங்க…. 6க்கு வந்துடுங்க”, என அகரன் மற்ற வானரங்களையும் அனுப்பி வைத்தான்.
ரிஸ்வானா ரஹீமையும், ஸ்டெல்லா மதுரனையும், நதியாள் தேவ்வையும் போன் செய்து பார்ட்டிக்கு அழைத்தனர்.
வினய் இவர்கள் பார்ட்டி வைக்கும் விஷயம் கேள்விப்பட்டு இன்றே கடத்த திட்டமிட்டு ஆட்களோடு ஐந்து மணிக்கே வந்து காத்திருந்தான்.
ஆறா மணிக்கு மேல் அனைவரும் வரத் தொடங்கினர். நதியாள் கடைசியாக சஞ்சயுடன் உள்ளே நுழைந்தாள். தேவ் அதற்குப்பின் உள்ளே வந்தான்.
முதலில் சஞ்சய் பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்தது. அதற்கு பின் சரண் தாமிரா காதல் விஷயம் அனைவருக்கும் அறிவிக்கப்பட்டது.
மதுரனும்,தேவ்வும் சரணை அணைத்து தங்கள் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டனர்.
வினய் அவர்களின் கொண்டாடத்தை வன்மம் பொங்க பார்த்து, அதைப் பூரணனுக்கும் படம் எடுத்து அனுப்பி வைத்தான்.
பூரணன் ஐந்து பெண்களையும் கடத்த உத்திரவிட வினய் அதற்குன்டான ஏற்பாடுகள் செய்து கொண்டு காத்திருந்தான்.
அவன் எதிர்பார்த்த சமயமும் வந்தது… பெண்கள் தங்களது ஜோடிகளுடன் நேரம் செலவளிக்க ஒவ்வொருவராய் நகர வினய் நேரம் பார்த்து ஒவ்வொருவராக மயக்கம் ஏற்படுத்தி கடத்தினான்.
நதியாளை மட்டும் தானே பின் தொடர்ந்து மயக்க மருந்து தெளித்து அவளை தானே தூக்கிக் கொண்டு காரில் கிடத்தினான்.
பூரணன் கூறிய முகவரி நோக்கி கார் சென்று கொண்டிருந்தது.
தங்களில் ஐவரை காணாது மற்றவர்கள் பதறி நின்றனர்…..