மகரியின் பார்வையில் ..
கதை தலைப்பு : என்னை தின்றாய்
கதாசிரியர் : கார்த்தி சௌந்தர்
கார்த்தி சௌந்தர் கதைகள்ன்னா வாழ்வியல் சார்ந்த எதார்த்தம் தான் முதல்ல ஞாபகம் வரும். அப்படி இல்லாத கதைகளை இவர் இதுவரை குடுத்தது இல்ல ..
தாம்பத்யம் முதல் இப்ப என்னை தின்றாய் வரைக்கும் தினமும் நாம நம்ம வாழ்க்கைல அனுபவிக்கற விஷயங்கள் தான் இவரோட கரு.
இந்த கதைல அழகான ஆழமான காதலை வார்த்தைகளுக்கு உயிர் குடுத்து காட்டி இருக்கார்.
கௌதம் இனியா – இவங்க தான் இந்த கதையோட முக்கியமான கதாபாத்திரங்கள். இவங்களுக்கு நடுவுல ஏற்படர காதல், அத அவங்க கையாண்ட விதம், காதலை கல்யாணத்துல கொண்டு போய் சேர்க்க அவங்க அனுபவிச்ச கஷ்டங்கள் இது எல்லாமே ரொம்ப எதார்த்தமா குடுத்து இருக்காங்க.
பள்ளி காலத்துல வரும் காதல், அத கௌதம் வெளிப்படுத்தினது, அந்த முறையினால இனியாவுக்கு வந்த சங்கடம், அதை கௌதம் உணர்ந்து தன் காதல் சொல்லும் முறையை மாத்திக்கிட்டது இது எல்லாம் பாக்கறபோ நானும் அவங்க கூடவே பயணிச்ச உணர்வு தான் ஏற்பட்டது.
மெல்ல மெல்ல மலர்ந்த காதல், அது வீட்ல தெரிஞ்சதும் நடக்கற பிரச்சனைகள், இவங்க ரெண்டு பேரும் எப்படி தங்கள் காதலை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போறாங்க? இதுலாம் கதையோட முக்கியமான அம்சங்கள்ன்னு தான் சொல்லணும்.
காதலுங்கற பேர்ல நம்மல சுத்தியே நிறைய பேர் தடம் மாறி போயிக்கிட்டு இருக்காங்க, அப்படி அவங்களுக்கு சாதகமா இல்லாம, எல்லாருக்கும் சாதகமா, சுய அறிவு சிந்தனையோட இந்த காதல் பயணிச்சது இன்னொரு நல்ல விஷயம். கத்தி இல்லாம, சத்தம் இல்லாம அமைதியான வழில நடந்த போராட்டம் அருமை.
இனியா அப்பாவும் சரி, கௌதம் அப்பாவும் சரி நல்ல கதாபாத்திரங்கள். வழக்கமான எமோஷனல் ப்ளாக்மெயில் இல்லாம நிதானமா யோசிச்சி பேசும் அப்பாக்கள். அவங்க காதல் தெரிஞ்சதும், இவங்க கையாண்ட விதம் ரொம்பவும் பிடிச்சி இருந்தது.
கல்யாணம் பண்ணிட்டா போதுமா ? அந்த காதல் முடிஞ்சிடுமா ? காதல் ஒண்ணும் போட்டி இல்லயே வெற்றி கோட்டுக்கு வந்ததும் முடியறதுக்கு..
இந்த வரியை தான் ரொம்ப அருமையா சொல்லி இருக்கார் ஆசிரியர்.
அவங்க வழக்கமான வாழ்க்கையோட காதலும் மறந்து போய், அத எப்டி கௌதம் மீட்டெடுத்து வந்தார்ங்கறது தான் முடிவு..
முதல்ல இருந்து கடைசி வரைக்கும் கௌதம் இனியாவுக்கு நடுவுல ஏற்பட்ட காதல் முதல் கடைசில கௌதம் அந்த காதலுக்கு புத்துயிர் குடுத்து தன் வாழ்க்கைய மீட்டுக்கொண்ட வரைக்கும் கதையோட்டம் நம்மல வேற எதுவும் யோசிக்கவே விடாது.
சாதாரண விஷயங்கள் தான், ஆனா அத ஆசிரியர் குடுத்த விதம் வேற லெவல்.. அந்த பள்ளி காலம் எல்லாம் நானுமே என் பள்ளி காலத்துக்கு போய்ட்டு வந்த சந்தோஷம் குடுத்தது. இன்னும் சின்ன சின்ன ரசனைகளை நமக்கு கொட்டி கொடுத்து இருக்கார். அதை படிச்சா தான் ரசிக்கவும் முடியும்..
மொத்ததில் “என்னை தின்றாய்” படிக்கற நம்மலையும் முழுசா திண்ணும்ங்கறதுல எந்த சந்தேகமும் வேணாம்..
இந்த கதையை படிக்க :
வாழ்த்துக்கள் சகோதரா ..
இந்த கதாசிரியர் பத்தி தெரிஞ்சிக்க இங்க பாருங்க :
கார்த்தி சௌந்தர்