வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் ..
இன்னிக்கி நம்ம பாக்க போற அந்த சுட்டி எழுத்தாளர் யாருன்னு தெறிஞ்சிக்கரத்துக்கு முன்ன சின்ன இன்ட்ரோ பாத்துடலாம் ..
இவங்க கிட்ட பேசறப்போ சின்ன புள்ள மாதிரி தான் தோணும் ..
உண்மைலயே சின்ன பொண்ணு தாங்க .. வெறி ஸ்வீட் அண்ட் லவ்லீ ஆல்சோ ..
சின்ன குழந்தை வளர்ற மாதிரி இவங்க எழுத்தும் வளர்ந்துட்டே வருது ..
“நின் முகம் கண்டேன் “ எழுதினப்போ இருந்த கருத்து ஆழம் நல்லா தெரிஞ்சது. அப்ப எழுத்து குழந்தையா இருந்தது அதுவும் ரொம்பவே நல்லா இருந்தது ..
இப்போ நல்லா வளர்ந்த எழுத்து இவங்க கையாள கத்துகிட்டு வராங்க .. வளர்ச்சி நல்லாவே பார்க்க முடியுது .. அதுக்கு இவங்க எவ்ளோ உழைச்சி இருப்பாங்கணும் தெரியுது ..
யாருன்னு கண்டு பிடிச்சிங்களா ?
வாங்க உள்ள போய் பாக்கலாம் ….
எழுத்துப்பயணத்தில் நம்முடன் இன்று….
1. புனைபெயர் – பாகி லட்சுமணமூர்த்தி
2. இயற்பெயர் – பாக்கியலட்சுமி
3. படிப்பு – BBA
4. தொழில் – இல்லத்தரசி
5. பிடித்த வழக்கங்கள் – புத்தகம் படிப்பது, பாட்டு ,எம்ராய்டரி,தையல், வரைவது
6. கனவு –
சொன்னா சிரிக்க கூடாது…. பரதநாட்டியம் கத்துக்கனும் ரொம்ப ஆசை…. கனவுன்னு கூட சொல்லலாம்.. எங்க பாட்டி வீடு சென்னைல இருந்தது, சின்ன வயசுல லீவுக்கு போவேன். அப்போ எல்லாம் காலை மாலை இரண்டு நேரமும் பால் வாங்குவாங்க… பால் வாங்க பரதநாட்டிய கிளஸ் நடக்குற இடத்தை தாண்டிதான் போகனும், அப்படி போகும் போதும் வரும் போதும் அதை பார்த்து பார்த்து அது மேல ஒரு காதல்….. வீட்டுக்கு வந்து நான் அதே மாதிரி ஆடி பார்ப்பேன் சொன்னா சிறு பிள்ளை தனமா இருக்கும். இன்னும் அந்த ஆசை இருக்குன்னா பாருங்களேன்… எனக்கு பெண் பிள்ளை பிறந்தா நிச்சயம் பரதநாட்டியகிளஸ் அனுப்பனும்னு ஆசை இருந்தது, இப்போ அதுக்கும் வழி இல்லை, பிறந்தது இரண்டும் ஆண் குழந்தைங்க சோகத்தல எங்க போய் சொல்ல……
7. உங்களுக்கு ஏற்பட்ட எழுத்தின் மீதான தாக்கம் என்ன?
முதல்ல சாதரண குடும்ப நாவல்கள் தான் படிச்சிட்டு இருந்தேன். சரித்திர நாவல்களையும் படிப்பேன் . ஆனா எனக்கு ஒரு பெரிய தாக்கம் கொடுத்த வாசிப்புன்னா அது கல்கி அய்யா எழுதின பொன்னியின் செல்வன் தான் . அதுக்கு பின் நான் எந்த சரித்திர நாவலையும் படிக்கல ஏன்னு தெரியல பொன்னியின் செல்வன் நாவலை படிக்கும்போது இருந்த ஆர்வம், வேற எந்த நாவலை படிக்கும் போது வரலை. எல்லா நாவல்களிலும் நான் அதையே தேடிக்கிட்டு இருக்கேன் போல இதுவரை 2 முறை முழுமையா வாசித்து விட்டேன் ஆனாலும் இப்போ படிக்கும் போது கூட எனக்கு புதுசா இருக்கு….
8. உங்களின் வாசிப்பு அனுபவம் பற்றி –
பள்ளியில் படிக்கும் போதே புத்தகங்களை விரும்பி படிக்க ஆரம்பித்தேன் சிறுவயதில் ஆரம்பித்த வாசிப்பு பழக்கம் சிறுவர்மலரில் தொடங்கி நாவல்களை அடைந்தது… ஒரே இரவில் கூட ஒரு நாவலை படித்து முடித்து இருக்கிறேன். எழுத்தின் மீது அத்தனை ஆர்வம் .. திருமணம் ஆனா பின்பு வாசிப்பு என்பது குறைந்து விட, மிகவும் தனிமையை உணர்ந்த தருணத்தில் தான் ஆன்லைன் வாசிப்பு பழக்கமானது. என்னுடைய முக்கால் வாசி நேரத்தை வாசிப்பதிலையே கழித்திடுவேன். நிறைய நிறைய புத்தகங்களை படிப்பதன் மூலம் வேறோரு உலகத்தில் பயணிப்பதை போன்ற புது அனுபவத்தை உணர்ந்து இருக்கிறேன்…
9. உங்களை எழுத தூண்டியது எது? –
என்னை எழுத தூண்டிய ஒரே ஒரு தூண்டு கோல் என் தங்கை தான். நான் எழுத வந்தது ஒரு விபத்துன்னு சொல்லிட முடியாது ஆனா எனக்குள்ள இருக்க திறமைய கண்டுபிடிச்சதே அவ தான்.
10. எப்போது எழுத ஆரம்பித்தீர்கள்?
சரியா சொல்லனும் ணா நான் எழுத வந்து மூன்றை வருஷம் ஆகுது
11. உங்களது எழுத்தை படித்தவரிடம் அதன் தாக்கத்தை உணர்ந்தது உண்டா?
உணர்ந்தது உண்டு . சில பேர் அவர்களின் மனச்சுமை என் கதையைப்படிக்கும்போது சற்றே குறைகிறது, என்று கூறும்போது மனது சந்தோஷமாக இருக்கும்
12 . எழுத்தால் எதையும் மாற்ற முடியும் என்று நம்புகிறீர்களா ?
கண்டிப்பா முடியும்…. ஒன்றை நாமா வலியுறுத்தி சொல்ல சொல்ல தான் அது மக்களோட மனசுல கொஞ்சம் கொஞ்சமா மாற்றத்தை கொண்டு வரும். அதுவும் அவங்க மனதை கவர்ந்த கதாபாத்திரங்கள் மூலம் சொன்னா இன்னும் சிறப்பா இருக்கும்.
13 . மின்னூல் , பதிப்பு புத்தகம் . இவற்றினைப் பற்றி உங்கள் கருத்து என்ன ?
மின்னூல் புத்தகம் , பதிப்பு புத்தகம் இரண்டுமே எனக்கு பிடித்தமானதுதான் . இரண்டுமே ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல
14. நீங்கள் பதிபித்த பதிப்பு புத்தகங்கள் எத்தனை ? (அவற்றை பெற தொடர்பு கொள்ள )
இன்னும் என்னுடைய புத்தகங்கள் பதிப்பிகப்படவில்லை . அதற்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன
15. ஆடியோ புத்தகங்கள் மீதான உங்கள் பார்வை என்ன ?
வீட்டு வேலைகளை கவனிக்கும்போது பண்பலையைக் கேட்பதுபோல் இப்போது ஆடியோ புத்தகங்கள் கேட்கப்படுகின்றன . என்னைப் பொருத்தவரை ஆடியோ புத்தகங்கள் என்பது கதை சொல்பவரின் வசன ஏற்ற இறக்கங்கள், ல மற்றும் ள, போன்ற எழுத்துக்களின் உச்சரிப்பு போன்றவை சரியாக இருக்குமெனில் , வாசகர்களை ஒரு மாய உலகத்திற்கு கூட்டிச்சென்றுவிடும் என்பதுதான்.
16. எழுத்தாளரின் வெற்றி என்பது எதன் அடிப்படையில் இருக்கிறது ?
நமது கதையைப் படித்து ஒரு வாசகராவது கதை அருமை , உங்களது கதைக்காக காத்திருக்கிறேன் போன்ற வார்த்தைகளை கூறும்போதுதான் இருக்கிறது என நினைக்கிறேன் . ஏனெனில் அவர்கள் தனது பொன்னான நேரத்தே நமக்காக செலவழிப்பது என்பதே ஒரு எழுத்தாளருக்கான வெற்றிதானே
17 . உங்கள் படைப்பில் எதையாவது எழுதி இருக்க வேண்டாம் என்று எண்ணியதுண்டா ?
அப்படி எதுவும் இல்லை மனதிற்கு பிடித்தால் மட்டுமே அதை எழுதும் பழக்கம் உண்டு
18 . உங்களின் படைப்புகளில் எது உங்களுக்கான அங்கீகாரத்தை பெற்று கொடுத்ததாக நினைக்கிறீர்கள் ?
முதல் இரண்டு கதையுமே மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது அதிலும் குறிப்பாய் முதல் கதை
19 . கதை கரு மற்றும் கதா பத்திரங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள் ? அதற்கான மெனக்கெடல் எந்த அளவிற்கு கொடுப்பீர்கள் ?
வழக்கமாக அழுத்தம் கொண்ட கதை கருவை எடுக்க மாட்டேன்
20. நீங்கள் பெற்ற போட்டி பரிசுகள் –
இதுவரை எந்த போட்டியிலும் நான் பங்கேற்கவில்லை . இனிமேல் பங்கேற்கும் எண்ணம் உண்டு
21. எதிர்வினை கருத்துக்களை எப்படி கையாள்கிறீர்கள்?
எதிர்வினை கருத்துகள் இதுவரை வந்ததில்லை . அப்படி வந்தாலும் அதை என் வளர்ச்சியின் படிகல்லாய் நினைத்து மீண்டும் அக்கருத்து வாசகர்களிடமிருந்து வராமல் பார்த்துக்கொள்ள முயற்சிப்பேன்
22. நீங்கள் அதிகம் எழுத விரும்புவது எது ? (கதை , கவிதை, தொடர்கதை, நாவல் , சிறுகதை) ஏன் ?
தொடர்கதை. ஒவ்வொரு அத்தியாயமும் முடியும்போது அடுத்தடுத்த அத்தியாயங்களுக்காக வாசகர்கள் அளிக்கும் கருத்துக்களை பார்க்கும்போது மிக மகிழ்ச்சியாக இருக்கும் . அடுத்த அத்தியாயத்திற்காக நான் காட்சிகளை கற்பனையில் வரிக்கும்போது ஏதோ புது உலகில் சஞ்சரித்து வந்தது போல் இருக்கும் . எனக்கு ஏனோ இந்த அனுபவங்கள் மிகவும் பிடித்த காரணத்தினால் தொடர்கதைக்குத்தான் என் வாக்கு
23 – ஏன் மாறுபட்ட கதைக்கரு கொண்ட கதைகள் வாசகர்களை அதிகமாக சென்றடைவதில்லை?
அவரவர்களுக்கு ஏதோ ஓரு பிரச்சனை இருக்கும். அவ்வாறான சமயங்களில் அவர்களின் மனது இதமான கதைகளையே நாடும் . இது என்னுடைய கருத்து அது உண்மையா இல்லையா என்பது வாசகர்களுக்குத்தான் தெரியும்
24. குடும்பம் காதல் சாராத கதைகளை நீங்கள் எழுதியது உண்டா? (படைப்பின் தலைப்பு)
இதுவரை எழுதியதில்லை . எழுத வேண்டும் என்ற ஆசை உள்ளது . பார்க்கலாம்.
25 . அனைவரும் படிக்க வேண்டிய புத்தகங்களாக நீங்கள் கருதுவது என்ன என்ன?
பொன்னியின் செல்வன்
26. ஓர் படைப்பின் வார்த்தை அளவுகள் பற்றி உங்களது கருத்து என்ன?
அது அந்தந்த எழுத்தாளரையும் அவரது வாசகவட்டாரத்தையும் பொருத்தது என நினைக்கிறேன்
27. எழுதுபவர்கள் பெறும்பாலும் பயன் அடைவதில்லை. அவர்கள் பயன்பெற நீங்கள் கூறும் சில யோசனைகள் என்ன?
நானும் எழுத்துலகில் கத்துக்குட்டிதான் . எனக்கே பல யோசனைகள் தேவைப்படுகின்றனவே
28. உங்கள் தனி தன்மை என்று தாங்கள் கருதுவது என்ன ?
கதை என்றால் அதிகம் வர்ணனை இருக்காது… என் எழுத்து நடையை தனி தன்மையாக கருதுகிறேன்.
எனக்குள் இருக்கும் தனிதன்மை என்றால் நல்லா வரைவேன்
29. உங்களது கவிதை , பிடித்த வாக்கியம் , பழமொழி (பைனல் பஞ்ச்).
முயற்சி என்பதே ஒருவனுக்கு ஆக சிறந்த ஆசான்
30 . உங்கள் படைப்புகள் (லிங்க்குகளுடன்) (Youtube also ):
பிரதிலிபி:
காதலில் உள்ளங்கள் பந்தாடுதே
நின் முகம் கண்டேன்
வாட்பேட் :
நின் முகம் கண்டேன்
நிகரில்லா வானவில் தளம்
பூ போல் என் இதயத்தை கொய்தவளே
https://forum.nigarilaavanavil.com/threads/1598/
இவங்க கதை எல்லாமே படிக்க சுவரஸ்யமா இருக்கும். அடுத்து என்ன என்ன னு நம்மள நல்லாவே யோசிக்க வைக்கும்.
இவங்க கதைல எனக்கு பிடிச்ச முக்கியமான விஷயம் இவங்க ஹீரோயின் எல்லாருமே தைரியமா வாழ்க்கைய வாழறவங்களா தான் காட்டுவாங்க …
வெறும் பொம்மை ஆக மட்டுமே இருக்க மாட்டாங்க .. இவங்க கதா பத்திரங்களுக்கு காட்டற வித்யாசமும் , அதை கதைல கொண்டு போற விதமும் ரொம்பவே நல்லா இருக்கும் .
வெறும் சாக்லேட் ஈட்டிங் கதையா இல்லமா நிச்சயம் சில நல்ல விஷயங்கள இவங்க கதைல கண்டிப்பா நம்ம பாக்கலாம் ..
அழகான ஆழமான காதல் அழகா காட்டுவாங்க .. படிக்கறப்போ மனசுக்கு இதமாவும் இருக்கும் ..
இந்த கத்துக்குட்டி சீக்கிரமே பெரிய சிகரமா மாறனும் அதுக்கு எங்களோட மனமார்ந்த வாழ்த்துகள் ..
சீக்கிரம் உங்க பரதநாட்டியம் கத்துக்கற ஆசை நிறைவேறட்டும் .. எனக்கும் அந்த ஆசை இருக்கு.. எதிர் காலத்துல வாய்ப்பு கிடைக்கும்னு நம்புவோம் .. நம்பிக்கை அதானே எல்லாம்..
உங்க எழுதுக்கள் கையில் புத்தகமா சீக்கிரம் தவழட்டும் .. எங்க எல்லாரோட வாழ்த்துக்கள் ..
உங்க பயணம் மேலும் மேலும் தொடரணும் .. உங்க தங்கச்சிக்கு எங்க எல்லாரோட பெரிய நன்றியும் சொல்லிடுங்க சிஸ்டர் ..
உங்களோட எல்லா முயற்சிகளுக்கும் எங்களோட மனமார்ந்த வாழ்த்துக்கள் ..
பெரிய பெரிய உயரங்களை நீங்க அடைவீங்க அதுல எந்த மாற்றமும் இல்லை .. . உஜங்க முயற்சிய மட்டும் எப்பவும் விடாதீங்க ..
இவங்களோட நம்ம பயணம் உங்களுக்கு புடிச்சி இருக்கும்னு நினைக்கறேன் ..
சீக்கிரமே அடுத்து ஒரு அருமையான எழுத்தாளரோட வரேன் ….