வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் ..
இன்னிக்கி நம்மளோட நேரம் செலவழிக்க போற வாசகர். என்னோட முன்னாள் “மாடரேட்டர்“.. “SMS azhagiyasangamam-2“ போட்டில 20 கதைகளுக்கு இவங்க தான் promoter, meme க்ரியேட்டர், பூஸ்டர், விமர்சகர் இப்டி பல்முகங்களை காட்டியவர்.
யாருன்னு தெரிஞ்சதா ?
வாசகருடன் சில நிமிடங்கள் ..
1. பெயர் – கௌசல்யா M
2. படிப்பு – B. E (ECE)
3. தொழில் / வேலை – தற்போதைக்கு வீட்டை பராமரிப்பது மட்டுமே !!
4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது?
எங்க பெரியம்மா வீட்டு எதிர்த்து தான் நூலகம் !!! அப்போ லீவ்க்கு போகும்போது அங்க உள்ள கதைகள் படிக்க ஆரம்பிச்சது !!
5. எந்த மாதிரியான சூழ்நிலையில் நீங்கள் வாசிப்பைநாடுவீர்கள்?
எந்த சூழ்நிலையிலும் படிப்பேன் !!! இப்போ வாசிப்பு மட்டும் தான் எனக்கு எந்த நிலையிலும் என் கூடவே இருக்கும் என்னோட தோழி மாதிரி !!!
6. உங்களின் வாசிப்பு என்பது பெரும்பாலும் புத்தகங்கள் வழியிலா? கணினி வழியிலா?
இப்போதைக்கு மொபைல் வழி தான் !!
7. ஒரு வருடத்தில் எத்தனை புத்தகங்கள் வாங்குவீர்கள்? எத்தனை புத்தகங்களை படிப்பீர்கள் ?
இவ்வளவு தான் அப்படின்னு கணக்கில்லை!!
8. Ebook / Paperback புத்தகம் எதில் உங்களின் வாசிப்பு முழுமை பெறுவதாக உணர்கிறீர்கள்?
Paperback தான்
9. வாசிப்பினால் உங்களுக்கு ஏற்பட்ட முதல் தாக்கம் என்ன?
வாசிப்பினால் தான் நிறைய புரிய ஆரம்பிச்சது !! எந்த ஒரு விஷயத்துலையும் எல்லாரும் பாக்குறது, யோசிக்கிறது தாண்டி வேறு ஒரு கோணம் இருக்கும்னு புரிஞ்சதும் வாசிப்பதினால் தான் !!
“ஜெயலக்ஷ்மி கார்த்திக்” அக்காவோட “ஏங்கினேன் ஏந்திழையே” கதை எந்த பிரச்சினையையும் மனதைரியத்தோட எதிர்கொண்டா தான் தீர்வு காண முடியும்னு புரிய வச்சது!!
10. வாசிப்பினால் கிடைத்த அனுபவத்தினால் உங்களது செயல்பாடு / குணாதிசயங்கள் மாற்றிக் கொண்டது உண்டா? அது என்ன?
கண்டிப்பா !! என் வார்த்தையிலும், செயலிலும் கொஞ்சம் நிதானம் வந்திருக்கு !!! உறவுகள், உறவுகள் எப்படி இருப்பாங்க அப்படிங்குறதை ரொம்பவே இயல்பா வேதா விஷால் அம்மா அவங்க கதைகளில் சொல்லிருப்பாங்க !!! முக்கியமா “திமிருக்கு அரசன்” கதைல வரும் நந்தினி கதாப்பாத்திரத்தினால் நிறைய புரிஞ்சுகிட்டேன் !!!
11. புதிய புத்தகங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள்? (அட்டை படம், தலைப்பு, ஆசிரியர், பதிப்பகம், முன்னுரை.. )
ஆசிரியரும், தலைப்பும்
12. உங்களுக்கு எந்த வகையான புத்தகங்கள் / கதைகள் மிகவும் பிடிக்கும்? (சுயசரிதம், மர்மம், திகில், சாகசம், காதல், குடும்பம், ஆன்மீகம், ரொமான்டிக், வரலாறு, புராண கதைகள், இலக்கியம் , சரித்திரம் , etc….)
எந்த வகையான கதையா இருந்தாலும் முழுதும் வாசிக்க வைப்பது எழுத்து நடையும், சொல்லும் விதமும் தான் !! அப்படிப்பட்ட கதைகளை படிப்பேன் !!
13. “எழுத்தாளர்” என்பவர் உங்களுக்கு எப்படிபட்ட உறவாக தெரிகிறார்கள்?
எப்படி பள்ளி ஆசிரியர்களுக்கு, மருத்துவர்களுக்குனு சமூகத்தில் பொறுப்பும், கடமையும் இருக்கும் அதுக்கு கொஞ்சமும் குறைவில்லாமல் எழுத்தாளர்களுக்கும் இருக்கு !! அதனால் எழுத்தாளர்கள் மேல எப்போதும் தனி மரியாதை உண்டு !!!
14. உங்கள் வாழ்வில் முக்கிய திருப்பம் ஏற்படுத்திய புத்தகம் / கதை என்ன?
ஒவ்வொரு புத்தகமும் கண்டிப்பா நமக்கு எதையாவது சொல்லிக் கொடுக்கும் !!! அப்படி இப்ப எனக்கு உடனே நியாபகம் வந்த சில கதைகள் சொல்றேன் !!!
“ஊனாகி உறவாகி உயிராகி” – புவனா அம்மா, “விஷ்வரூபிணி” – சரண்யா ஹேமா கா, “தாலாட்டுதே காதல்“ – பவித்ரா நாராயணன் கா, “அகலாதே ஆருயிரே” – ஜெயலக்ஷ்மி கார்த்திக் கா, “அழகிய பிழையே” – புவனா மாதேஷ்
15. அன்றைய எழுத்தாளர்களுக்கும், இன்றைய எழுத்தாளர்களுக்கும் உங்களுக்கு தோன்றும் வித்தியாசங்கள் என்னென்ன?
ஒவ்வொரு எழுத்தாளர்களும் தனித்துவமானவர்கள் தானே!!!… அதனால் ஒப்பிட்டு வித்தியாசம் பார்க்க முடியலை….
16. இன்றைய எழுத்தினால் மொழி வளர்ந்து வருவதாக நினைக்கிறீர்களா?
நிச்சயமா !!! நிறைய எழுத்தாளர்கள் தமிழ் வார்த்தைகள் மட்டும் வச்சு இன்னமும் கதை எழுதுறாங்க !!! புதிய சொல்லாடல்கள், புது விதமான சிறப்பான எழுத்து நடை, இப்படியும் எழுதுற எழுத்தாளர்கள் இருக்காங்க !!! அப்படிபட்ட எழுத்தாளர்களை நம்ம நிறைய வாசிச்சா மட்டும் தான் கண்டறிய முடியும் !! நந்தினி சுகுமாரன், மீனாட்சி அடைகாப்பன், கார்த்தி சௌந்தர், ஆண்டாள் அருகன், பவித்ரா நாராயணன், இவங்களோட சொல்லாடல்கள், தமிழ் எனக்கு ரொம்ப பிடிக்கும்!!!..
17. “வழக்குமொழி, பேச்சுமொழி, வட்டார மொழி, செந்தமிழ் மொழி” – இதில் எது வாசிக்கும் போது உங்களுக்கு நெருக்கமாக இருக்கிறது? எந்த வகையை அதிகமாக வாசிப்பீர்கள்?
கதைக்கரு, கதைக்களத்துக்கு தேவையான வகை மொழியை நல்லா தெரிஞ்சுகிட்டு, சரியா பயன்டுத்துனா எந்த வகையான மொழியையும் நல்லா ரசிச்சு படிக்கலாம் !!!
18. வரலாற்று நாவல்கள் வாசிப்பீர்களா? எந்த நாவல் மிகவும் பிடிக்கும்?
வாசிப்பேன் !! பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு !!!
வேள்பாரி கதை வாசிக்கணும் ரொம்ப நாள் ஆசை !! அது புத்தகத்தில் தான் வாசிக்கனும்னு புக் வாங்க வெயிட்டிங் !!
19. இன்றைய காதல்/குடும்ப நாவல்கள் பற்றிய தங்களின் கருத்து என்ன?
இன்றைய குடும்ப நாவல் எழுதும் நிறைய எழுத்தாளர்களை நிஜமாவே பாராட்டணும் !!! காதல்னு சும்மா நடக்காத ஒன்னை மிகைப்படுத்தி சொல்லாமல் இதுதான் நிஜம், இதுதான் நிதர்சனம்னு பிரச்சினைகளையும், அதற்கான தீர்வுகளுமாய் இருக்கும் கதைகள் அழகு!! குடும்பத்துக்கு தேவையானது வெறும் உறவும், உணர்வும் மட்டுமில்லாது பொறுமை, பொறுப்பு, கல்வி, உத்யோகம், சமயோஜிதமா எல்லாரையும் யோசிச்சு எடுக்குற முடிவுன்னு நிறைய புது வித கதைகள் நமக்கு சொல்லிக் கொடுக்கும் விஷயங்கள் பல பல !!
20. வித்தியாசமான கரு கொண்ட கதைகளை பிடிக்குமா? அறிவியல் சார்ந்த புத்தகங்கள்/ கதைகள் வாசிப்பீர்களா?
வித்தியாசமான கதைகளை படிக்க முயற்சிப்பேன் !! முழுவதும் படிப்பது என்பது எழுத்து நடையிலும், விஷயத்தை சொல்லும் விதத்தில் மட்டும் !! இதுவே அரசியல் சார்ந்த கதைகளுக்கும் !!
21. வாசிப்பதற்கு தினமும் நேரம் ஒதுக்குவீர்களா? எத்தனை நேரம்?
செய்ய வேண்டிய வேலைகளை முடித்த பின் இருக்கும் பல நேரம் வாசிப்பிற்கு மட்டுமே !!
22. வாசித்த புத்தகம் / கதை பற்றி விமர்சனம் கொடுப்பீர்களா ? எழுத்தாளரின் தவறுகளை எந்த விதத்தில் சுட்டிக்காட்டுவீர்கள்?
கண்டிப்பா விமர்சனம் அளிப்பேன் !! நிறை எப்படி சொல்வேனோ அப்படிதான் குறையையும் சொல்வேன் !!! ஆனால் சொல்லும் போது கண்டிப்பா யார் மனதையும் காயப்படுத்த கூடாது !! அதே நேரம் விமர்சனம் எழுத்தை பத்தி மட்டும் தான் இருக்கணும் !! எழுத்தாளர்களை பத்தி எழுதக்கூடாது என்பதில் உறுதியா இருப்பேன் !!!
23. உங்களுக்கு மிகவும் பிடித்த புத்தகங்கள் / கதைகள் (5)
லிஸ்ட் ரொம்ம்ம்பபபபபபப பெரிசு !!! அதில் ரொம்ப ரொம்ப கொஞ்சம் இங்க சொல்றேன் !!
அகம் புறம் – ப்ரீத்தி S கார்த்திக்
தன்மதியே தாரகையே – ஜெயலக்ஷ்மி கார்த்திக்
சத்தமின்றி முத்தமிடு – மல்லிகா மணிவண்னன்
தபுதாரன் – கார்த்தி சௌந்தர்
என் காட்சிப்பிழை நீ – நித்யா மாரியப்பன்
சிலம்பல் – மேக்னா சுரேஷ்
யாழோவியம் – காதம்பரி குமார்
காதலில் கூத்துக் கட்டு – யுவகார்த்திகா
அழகியே – அழகி
நெற்காட்டு ராஜகுமாரி – அருணா கதிர்
பூவெல்லாம் உன் வாசம் – யாழினி
அன்புடன் அதியமான் அண்ணா – அமுதவல்லி நாகராஜன்
வீணையடி நீ எனக்கு – சஷிமுரளி
24. நீங்கள் வாசித்ததில் மறக்கமுடியாத / மனதை மிகவும் தொட்ட விஷயங்கள் / தகவல்கள்என்ன?
*காதலாழியில் வரும் குடும்பமும், நட்பும் !!
*இணைக்கோடு கதையில் வரும் பல வாழ்க்கைக்கு தேவையான நல்ல விஷயங்கள் !!!
*காதலே காதலே தணிப்பெருந்துனையே கதையில் வரும் ஒவ்வொரு கருத்துக்களும், காதலும் !!!
*நெஞ்சோடு கலந்திடு உறவாலே கதையில் தாய்மை !!!
*உயிர்மெய் கதையில் வரும் திருநங்கைகளின் வலி !!!
*செவ்வானம் நாணுமோ பாவையாலே கதையில் வரும் ஒரு ஆண்மகனின் மனச்சிதைவும், அதை மீட்டெடுக்கும்
பெண்ணவளின் காதலும் !!!
*நாயகன் 2 கதையில் வரும் காதலும், கருத்தும் !!!
*நீலவானம் கதையில் வரும் காயங்களும், நிதர்சனமும் !!!
*அன்பே என் அன்பே கதையில் வரும் அவந்திகாவின் சுய மரியாதையும், ராகவின் காதலும்!!
*ஒழுகும் நிலவு வழியும் இரவு கதையில் வரும் கற்பனையும், தமிழும் !!!
*வேள்வியாய் ஒரு காதல் கதையில் வரும் திலோவின் காதலும், நிமிர்வும், உண்மையும் !!!
*வேதா விஷால் அம்மாவின் கதைகளில் வரும் செல்ல பெயர்கள் !!
*தாம்பத்தியம் கதையில் வரும் பிரபுவுடனான உரையாடல்கள் அனைத்தும் !!!
*க்ஷிப்ராவின் புதுமணம் : மறுமணம் கதையில் வரும் நிதர்சனங்கள் !!
*துஷ்யந்தா ஏ துஷ்யந்தா கதையில் வரும் விதுரனின் கன்னியமும், காதலும் !!
*திகில் கதைகளை படிக்காத என்னைய திகில் கதை படிக்க வைத்த ஜாத ரூபம் !!
இன்னும் நிறையா இருக்கு !! எல்லாத்தையும் சொல்ல முடியலை !!
25. இன்றைய எழுத்து உலகம் பற்றிய உங்களின் கருத்து என்ன?
இன்றைய எழுத்து உலகத்தை பத்தி நானே இன்னும் புரிஞ்சுக்கலை !! ஆனால் மூஞ்சு புக்கை தாண்டி இருக்குற எழுத்துலகம் ரொம்ப அழகாகவும், அமைதியாவும் இருக்கும்னு தோணுது !!
26. அன்று முதல் இன்று வரை வெகு சில ஆசிரியர்களின் புத்தகங்கள் / கதைகள் மட்டுமே அதிகமாக வாசகர்களை அடைகிறது. பல நல்ல விஷயங்களை கூறும் புத்தகங்கள் அதிக வரவேற்பு பெறுவதில்லை. நீங்கள் அந்த எழுத்தாளர்களைக் கொண்டாட மறுக்கும் காரணம் என்ன ?
இதை நான் ஏத்துக்கவே மாட்டேன் !!! அந்த புத்தகங்கள் நிறைய பேசப்படாமல் இருக்கலாம் !! படித்தவர்கள் கொண்டாடுவது நமக்கு தெரியாமல் இருக்கலாம் !! உண்மையில் அத்தகைய புத்தகங்களை படித்து மகிழ்பவர்களே அதிகம் என்பது என் கருத்து !! புது விதமான கருத்துக்கள் உள்ள கதைகள் எப்போதும் எனக்கு பிடித்தமானவையே !!!
27. உங்களுக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்கள் (அன்றைய 5வர் & இன்றைய 5வர்) ஏன் அவர்கள் எழுத்து பிடிக்கும்? அவர்களின் சிறப்பாக நீங்கள் கருதுவது என்ன?
அன்றைய எழுத்தாளர்:
கல்கி
பாலகுமாரன்
இன்றைய எழுத்தாளர்கள்:
ஜெயலக்ஷ்மி கார்த்திக்
பிரவீணா தங்கராஜ்
நித்யா மாரியப்பன்
மேகவாணி
வேதா விஷால்
புவனா சந்திரசேகரன்
கார்த்தி சௌந்தர்
யாழினி
சாராமோகன்
மீனாட்சி அடைகாப்பன்
சரண்யா ஹேமா
யுவகார்த்திகா
அருணா கதிர்
அழகி
பவித்ரா நாராயணன்
28. ஒரு புத்தகத்தில் / கதையில் நீங்கள் எதிர்பார்க்கும் முக்கியமான விஷயங்கள் என்னென்ன?
கதைக்கரு, எழுத்து நடை, சொல்லாடல்கள், கதாப்பாத்திரங்களின் பெயர்கள்.
29. எழுத்தில் ஆண் / பெண் பேதம் இல்லை. ஆனால் மொழி ஆளுமை உள்ள எழுத்து ஆண் எழுத்தாளர்களின் எழுத்தில் உள்ளதா அல்லது பெண் எழுத்தாளர்களின் எழுத்தில் உள்ளதா? உங்களின் தனிப்பட்ட கருத்து என்ன?
அதுவும் ரெண்டு பேரிடமும் இருக்கு !! ஆனால் ரொம்ப கம்மியானவர்களிடம் தான் இருக்குன்னு என் கருத்து !!
30. யாருடைய ஆட்டோகிராப் இருக்கிறது அல்லது வாங்க வேண்டும் என்று ஆசை?
வேதா விஷால் அம்மா, மேக்னா சுரேஷ், புவனா அம்மா, அமுதவல்லி நாகராஜன், ப்ரீத்தி S கார்த்திக், யாழினி, இன்னும் நிறைய எழுத்தாளர்கள் இருக்காங்க !!
31. கதைகளில் எதிர்மறை முடிவுகளை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? அதன் தாக்கம் உங்களுக்குஎப்படிபட்ட மனநிலையை கொடுக்கிறது?
கதைக்கு தேவையான முடிவு எதுவா இருந்தாலும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் !! அது எதிர்மறையாக இருந்தாலும் சரி !! ஆனால் அம்முடிவிற்கான விளக்கங்களும், கருத்துக்களும் தெளிவாகவும், ஏற்புடையதாகவும் இருத்தல் வேண்டும் !!
32. ஆடியோ கதைகள் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? நீங்கள் விரும்பிய ஏதேனும் ஒரு ஆடியோ கதையை கூறுங்கள்.
ஆடியோ கதைகள் நான் கேட்டதில்லை !!
33. ஒரு கதையில் இருந்து மற்றொரு கதையின் தொடக்கம் இருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?
அது கதையை பொருத்து அப்படிங்குறதுனால பொதுவா கருத்து சொல்ல முடியலை…..
34. மேற்கண்ட விஷயங்கள் தவிர நீங்கள் எழுத்தாளர்களிடம் வேறு என்ன கூற ஆசைபடுகிறீர்கள்?
எழுத்தாளர்கள் எப்போதும் தன்னம்பிக்கையோடு இருக்கணும் !! இங்க வளர்ந்த எழுத்தாளர்கள், வளர்ந்து வரும் எழுத்தாளர்கள்ன்னு யாரும் இல்லை (என்னை பொறுத்த வரைக்கும்) !! இப்போது பல எழுத்தாளர்கள் அழகான கற்பனையும், தெளிவான கருத்துக்களும், அருமையான எழுத்து நடையும், புதுமையான சொல்லாடல்களும் கொண்டு எழுதுறாங்க !!! உங்கள் உழைப்பிற்கு பலன் கண்டிப்பாக கிடைக்கும் !! அது இன்றைக்கா ?? நாளைக்கா?? என்பது வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம் !!! ஆனால் பலன் கண்டிப்பாக இருக்கும் !! எதிர்மறை விமர்சனங்களை பல எழுத்தாளர்கள் ரொம்ப அழகாவே கையாளுறாங்க !! கேள்வி கேட்கும் வாசகருக்கும், பதில் சொல்லும் எழுத்தாளருக்கும் நடுவில் மற்றவர்கள் வராமல் இருந்தால் பல குழப்பங்களை தடுக்க முடியும் (இதுவும் என் கருத்து மட்டுமே) !! ஆனால் வார்த்தைகள் சரியானதாக இருத்தல் வேண்டும் !! ஆரோக்கியமான வாதங்கள் வளர்ச்சியை கொடுக்கும் !! தரமற்ற வார்த்தைகளை கடந்து விடவும் !! அதே நேரத்தில் தங்களின் சுய மரியாதையையும், சுய கட்டுபாட்டையும் எந்நேரத்திலும் இழந்து விடாதீர்கள் !! அனைத்து எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துகளும், அன்பும் !!! ஏதோ என் மனசுல தோணுனதை சொல்லிட்டேன் !! தப்பா எதுவும் சொல்லலைன்னு நம்புறேன் !!! சொன்ன எழுத்தாளர்கள் தான், சொன்ன கதைகள் தான் பிடிக்குமான்னு கேட்டால் கண்டிப்பாக இல்லை !! இன்னும் நிறைய எழுத்தாளர்களை, நிறைய கதைகளை பிடிக்கும் !!! இவ்வளவு தான் சொல்ல முடிந்தது !! அதுதான் உண்மை !! எழுத்தாளர்கள் அனைவருக்கும் படைப்புகள் பல படைக்க வாழ்த்துகள் !! நன்றி வணக்கம் !!!
நம்ம மனசுக்கு பிடித்த எழுத்துக்களை பத்தியும், எழுத்தாளர்களை பத்தியும் சொல்ல வாய்ப்பு கொடுத்த ஆலோன் மகரி அக்காவுக்கு மனமார்ந்த நன்றிகள் !! நன்றி வணக்கம் !!!
இத்தனை அருமையான நேர்காணல் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி கௌசல்யா .. பல எழுத்துக்கள் எழுத்தாளர்களை நீங்க கொண்டாடுறீங்க – ன்னு உங்களோட பேசின இந்த சில நிமிடங்களில் ரொம்ப நல்லா புரிஞ்சது. உங்களை போல புரிந்துணர்வு உள்ள வாசகர்கள் உண்மையில் வரம் தான் .
உங்க மனசுல இருக்க விஷயங்களை வெளிப்படையா பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள். இன்னும் பல பல எழுத்தையும், எழுத்தாளர்களையும் நீங்க கொண்டாடணும்.. அதற்கு எழுத்தாளர்கள் சார்பில் நான் உங்களுக்கு நன்றியும், வாழ்த்துகளும் தெரிவிக்கிறேன்.
வாசிப்பை சுவாசிப்போம் ..