வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ்..
இன்னிக்கி நம்ம பாக்க போற வாசகர் எனக்கு சமீபமா தான் பரிச்சயம். ஆனா அவரோட வாசக முறை எனக்கு உண்மையில் சந்தோஷமா இருந்தது. நீங்களும் அத அவர் வாய் மொழியிலயே தெரிஞ்சிக்கலாம் வாங்க …
வாசகருடன் சில நிமிடங்கள் ..
1. பெயர் – ரபி ஆதவ்
2. படிப்பு – முதுகலை பட்டப்படிப்பு
3. தொழில்/வேலை –
தனியார் நிறுவன தொழிலாளி
4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது?
12 வயதில் மாத மற்றும் வார இதழ்கள் வழியாக
5. எந்த மாதிரியான சூழ்நிலையில் நீங்கள் வாசிப்பை நாடுவீர்கள்?
அமைதியான பெரும்பாலும் இரவு நேரங்களில்
6. உங்களின் வாசிப்பு என்பது பெரும்பாலும் புத்தகங்கள் வழியிலா? கணினி வழியிலா?
புத்தகங்கள் வாயிலாக
7. ஒரு வருடத்தில் எத்தனை புத்தகங்கள் வாங்குவீர்கள்? எத்தனை புத்தகங்களை படிப்பீர்கள் ?
அது மனநிலையையும் தொழிலையும் பொறுத்து அமையும் .
8. Ebook / Paperback புத்தகம் எதில் உங்களின் வாசிப்பு முழுமை பெறுவதாக உணர்கிறீர்கள்?
Paperback book
9. வாசிப்பினால் உங்களுக்கு ஏற்பட்ட முதல் தாக்கம் என்ன?
தமிழின் மீதும் எழுத்தின் மீதும் உண்டான ஆர்வம்
10. வாசிப்பினால் கிடைத்த அனுபவத்தினால் உங்களது செயல்பாடு / குணாதிசயங்கள் மாற்றிக் கொண்டது உண்டா? அது என்ன?
மாற்றம் உண்டு என்பது உண்மை. பல நேரங்களில் என்னுள் அமைதியை உணர்வேன்.
11. புதிய புத்தகங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள்? (அட்டை படம், தலைப்பு, ஆசிரியர், பதிப்பகம், முன்னுரை.. )
முன்னுரை
12. உங்களுக்கு எந்த வகையான புத்தகங்கள் / கதைகள் மிகவும் பிடிக்கும்? (சுயசரிதம், மர்மம், திகில், சாகசம், காதல், குடும்பம், ஆன்மீகம், ரொமான்டிக், வரலாறு, புராண கதைகள், இலக்கியம் , சரித்திரம் , etc….)
கிரைம் நாவல்ஸ் மற்றும் கவிதைகள் மற்றும் இலக்கியம் சார்ந்த கதைகள்
13. “எழுத்தாளர்” என்பவர் உங்களுக்கு எப்படிபட்ட உறவாக தெரிகிறார்கள்?
அவர்கள் எந்த உறவுக்குள்ளும் அடங்குவது இல்லை . ஏனெனில் அவர்கள் அவர்களின் உணர்வுகளை எழுத்துகளின் வழியாக நமக்குள் விதைப்பவர்கள்.
14. உங்கள் வாழ்வில் முக்கிய திருப்பம் ஏற்படுத்திய புத்தகம்/கதை என்ன?
கண்ணதாசனின் எழுத்துக்கள்
15. அன்றைய எழுத்தாளர்களுக்கும், இன்றைய எழுத்தாளர்களுக்கும் உங்களுக்கு தோன்றும் வித்தியாசங்கள் என்னென்ன?
மொழி மற்றும் கலாசாரங்களை பேணுவதில் மற்றும் வளர்ப்பதில் இன்றைய எழுத்தாளர்கள் மறந்து விடுகின்றனர்
16. இன்றைய எழுத்தினால் மொழி வளர்ந்து வருவதாக நினைக்கிறீர்களா?
இல்லை என்பதே என் எண்ணம்.
17. “வழக்குமொழி, பேச்சுமொழி, வட்டார மொழி, செந்தமிழ் மொழி” இதில் எது வாசிக்கும் போது உங்களுக்கு நெருக்கமாக இருக்கிறது? எந்த வகையை அதிகமாக வாசிப்பீர்கள்?
செந்தமிழ்
18. வரலாற்று நாவல்கள் வாசிப்பீர்களா? எந்த நாவல் மிகவும் பிடிக்கும்?
வரலாற்று நாவல்கள் பிடிக்கும். ஆன்மீகம் சார்ந்த நாவல்கள் எனது விருப்பம்.
19. இன்றைய காதல்/குடும்ப நாவல்கள் பற்றிய தங்களின் கருத்து என்ன?
உணர்வுகள் அற்ற வார்த்தைகள்
20. வித்தியாசமான கரு கொண்ட கதைகளை பிடிக்குமா? அறிவியல் சார்ந்த புத்தகங்கள்/ கதைகள் வாசிப்பீர்களா?
அதிகமாக படிப்பேன்.
21. வாசிப்பதற்கு தினமும் நேரம் ஒதுக்குவீர்களா? எத்தனை நேரம்?
எத்தனை நேரம் ஒதுக்க வேண்டும் என்பது எண்ணமாக இருந்தாலும் வேலை பளு மற்றும் சூழல் தான் நேரத்தை நிர்ணயிக்கும்.
22. வாசித்த புத்தகம் / கதை பற்றி விமர்சனம் கொடுப்பீர்களா ? எழுத்தாளரின் தவறுகளை எந்த விதத்தில் சுட்டிக்காட்டுவீர்கள்?
இல்லை. ஒருவரின் கற்பனையை ரசிக்க வேண்டுமே தவிர விமர்சிப்பது தவறு என்பது என் எண்ணம்.
23. உங்களுக்கு மிகவும் பிடித்த புத்தகங்கள் / கதைகள் (5)
ராஜேஷ்குமார் நாவல்கள், கருவாச்சி காவியம், விக்கிரமாதித்தன் மற்றும் தெனாலிராமன் கதைகள், இலக்கிய கதைகள்.
24. நீங்கள் வாசித்ததில் மறக்கமுடியாத / மனதை மிகவும் தொட்ட விஷயங்கள் / தகவல்கள் என்ன?
கிரைம் நாவல்களில் தவறுகளை கண்டுபிடிக்கும் புது புது தொழில்நுட்ப சார்ந்த வழிமுறைகள்
25. இன்றைய எழுத்து உலகம் பற்றிய உங்களின் கருத்து என்ன?
அறுவடைக்காக மட்டுமே விதைக்கின்றனர்
26. அன்று முதல் இன்று வரை வெகு சில ஆசிரியர்களின் புத்தகங்கள் / கதைகள் மட்டுமே அதிகமாக வாசகர்களை அடைகிறது. பல நல்ல விஷயங்களை கூறும் புத்தகங்கள் அதிக வரவேற்பு பெறுவதில்லை. நீங்கள் அந்த எழுத்தாளர்களை கொண்டாட மறுக்கும் காரணம் என்ன ?
பல அணிகள் மோதும் விளையாட்டில் வெற்றிபெறும் அணி மட்டுமே பேசப்படுகிறது. இதற்கு காரணம் அந்த அணி மட்டும் தான் திறமையான அணி என்பதா . இல்லை. மற்ற அணிகளுக்கு ஊக்கம், வழிகாட்டுதல், இன்னும் பல சரியாக கிடைக்காமல் இருப்பதே அவர்களின் தோல்விக்கு காரணம்.
27. உங்களுக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்கள் (அன்றைய 5வர் & இன்றைய 5வர்) ஏன் அவர்கள் எழுத்து பிடிக்கும்? அவர்களின் சிறப்பாக நீங்கள் கருதுவது என்ன?
தனிப்பட்ட விதத்தில் யாரையும் நான் பின் தொடருவது இல்லை. கதைகளை, களங்களை, முரண்பாடுகளை மட்டுமே மனதில் நிறுத்துவேன். நான் படிக்கும் கதைகளின் ஆசிரியர்கள் அனைவரையும் எனக்கு பிடிக்கும்
28. ஒரு புத்தகத்தில் / கதையில் நீங்கள் எதிர்பார்க்கும் முக்கியமான விஷயங்கள் என்னென்ன?
புதுமையான கற்பனைகள் மற்றும் சூழல்கள்.
29. எழுத்தில் ஆண் / பெண் பேதம் இல்லை. ஆனால் மொழி ஆளுமை உள்ள எழுத்து ஆண் எழுத்தாளர்களின் எழுத்தில் உள்ளதா அல்லது பெண் எழுத்தாளர்களின் எழுத்தில் உள்ளதா? உங்களின் தனிப்பட்ட கருத்து என்ன?
இருவரிடம் இருந்தும் வரவேண்டும் என்பதே என் எண்ணம்
30. யாருடைய ஆட்டோகிராப் இருக்கிறது அல்லது வாங்க வேண்டும் என்று ஆசை?
இல்லை இருக்க போவதும் இல்லை. எழுத்துகளை ரசிக்கிறது தான் என் வழக்கம். எழுத்தாளர்களை அல்ல.
31. கதைகளில் எதிர்மறை முடிவுகளை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? அதன் தாக்கம் உங்களுக்கு எப்படிபட்ட மனநிலையை கொடுக்கிறது?
கதையின் வலிமையை முடிவு தான் முடிவு செய்யும். அது எந்த விதமான முடிவாக இருந்தாலும் சரி..
32. ஆடியோ கதைகள் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் ? நீங்கள் விரும்பிய ஏதேனும் ஒரு ஆடியோ கதையை கூறுங்கள்.
நான் கேட்டது இல்லை
33. ஒரு கதையில் இருந்து மற்றொரு கதையின் தொடக்கம் இருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன ?
அது எழுத்தாளர்களின் ஒரே மாதிரியான சிந்தனை
34. மேற்கண்ட விஷயங்கள் தவிர நீங்கள் எழுத்தாளர்களிடம் வேறு என்ன கூற ஆசைபடுகிறீர்கள் ?
உங்கள் எழுத்துகள் இருபுறமும் கூர் கொண்ட ஈட்டி போன்றது என்பதை உணர்ந்து எழுதுங்கள்.
மிகவும் முதிர்ச்சியான வார்த்தைகள்.. எழுத்தாளர்கள பெருசா பாக்கமா அவங்க சொல்ற கருத்தை மட்டும் பாக்கற வாசகர்.. இது போலான வாசகர்கள் தான் இனி வரும் காலங்கள்ல ரொம்பவே தேவைங்கறது என் கருத்து.
உங்களோட ரசனையும், வாசிப்பும் எப்பவும் தொடர்ந்துட்டே இருக்கணும் சகோதரா.. உங்களோட பயணிச்ச இந்தா நிமிடங்கள் ரொம்ப அருமையா இருந்தது.. மிக்க நன்றி..
வாசிப்பை சுவாசிப்போம் …