வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் ..
இன்னிக்கி நம்ம பாக்க போற எழுத்தாளர் .. இவர்கிட்ட எனக்கு இன்டர்வியூ வாங்கறதுக்குள்ளயே ஸ்ஸ் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்பாஆஆ ன்னு ஆகிரிச்சி .. இவரு குடுக்கவே 10 நாள் பண்ணாரு .. அதுக்கு மேல நான் உங்களுக்கு சொல்ல பத்து நாள் பண்ணிட்டேன் ..
இதோ நம்ம கன்னக்குழி காதலர் .. இப்டி சொன்ன சரியா இருக்கும் ன்னு நினைக்கறேன் ..
இவரு எழுத்துல கன்னக்குழி பத்தி இல்லாத படைப்புகள் விரல் விட்டு எண்ணலாம் .. ஆனாலும் எங்கயாவது ஒரு வார்த்தை இதை பத்தி சொல்லிடுவாரு ..
எனக்கு தெரிஞ்ச இன்னொரு நல்ல எழுத்தாளர் .. தெளிவான கதை போக்கு , ஸ்வரஸ்யமான விஷயங்கள் பல தூவி நம்மை கட்டி போடும் எழுத்து நடை என பல அருமையான விஷயங்களை கை வந்த கலையாக வைத்திருக்கார் .
ஆனா அதிகம் இவரும் எழுதறது இல்லை ..
யாருன்னு தெரிஞ்சதா ?
வாங்க உள்ள போய் பாக்கலாம் ..
எழுத்துப்பயணத்தில் நம்முடன் இன்று….
1. புனைபெயர் – சசிகுமார் தங்கவேல்
2. இயற்பெயர் – சக்தி
3. படிப்பு – முதுகலை கணினி அறிவியல்
4. தொழில் – விவசாயம்
5. பிடித்த வழக்கங்கள் –
குடும்பத்துடன் செலவிடும் நேரம், உண்பது, நண்பர்களோடு மலைதேசங்களுக்கு சுற்றுலா செல்வது
6. கனவு – மாட்டு பண்ணை வைப்பது
7. உங்களுக்கு ஏற்பட்ட எழுத்தின் மீதான் தாக்கம் என்ன?
எதேர்ச்சியாய் ஒரு கவிதைக்கு வலைதள தேடலில் இறங்கி, பின் வாசிக்க ஆரம்பித்து, படிப்படியாய் எழுத தொடங்கியது.
8. உங்களின் வாசிப்பு அனுபவம் பற்றி –
நான்கு வருடங்களுக்கு முன்பு வரை இல்லாதது.. இப்போது தடுத்ததாலும் நில்லாதது
9. உங்களை எழுத தூண்டியது எது?
பிரதிலிபி தளத்தில் கிடைத்த நண்பர்களின் ஊக்கம்
10. எப்போது எழுத ஆரம்பித்தீர்கள்?
2017.. அக்டோபர்
11. உங்களது எழுத்தை படித்தவரிடம் அதன் தாக்கத்தை உணர்ந்தது உண்டா?
நிறையவே உண்டு.. இடுகையிலும் உள்பெட்டியிலும் அதை நிறையவே கண்டுள்ளேன்.. இப்படி கூட நடக்குமா என ஆச்சர்யபட்டு வாசகர்கள் கேட்ட போதும், கதையில் ஒரு கதாபாத்திரம் இறப்பது போன்று காட்டிய போதும் அவர்களின் வலி நிறைந்த வார்த்தை தான் நான் உணர்ந்தது..
12 . எழுத்தால் எதையும் மாற்ற முடியும் என்று நம்புகிறீர்களா ?
எதையும் மாற்ற முடியும் என்றே நம்புகிறேன்.. கத்தி முனையை விட பேனாவின் முனை கூர்மையானதல்லவா.. நான் எழுதிய கன்னக்குழி அழகினிலே கதையில் இறுதியில் தந்தையை நிலையை புரிந்து கொள்ளும் வகையில் காட்சியை வைத்திருந்தேன், அதைப்படித்த வாசகர் ஒருவர் ‘இத்தனை நாள் தந்தையை பற்றி தவறாக நினைத்து பேசாது இருந்துவிட்டேன், நாளைக்கு முதல் வேலையாய் அவரிடம் மன்னிப்பு கேட்க போகிறேன்’ என கூறியபோது
எழுத்தால் பலவற்றை மாற்ற முடியும் என நம்பினேன்..
13 . மின்னூல் , பதிப்பு புத்தகம் . இவற்றினைப் பற்றி உங்கள் கருத்து என்ன ?
பதிப்பு புத்தகம் பொக்கிஷம்..
மின்னூல் வரம்..
ஆனாலும் புத்தக வாசத்தை மின்னூலால் தர முடியாது… புத்தகம் அது தனி போதை..
14. நீங்கள் பதிபித்த பதிப்பு புத்தகங்கள் எத்தனை ? (அவற்றை பெற தொடர்பு கொள்ள ) –
இன்னும் பதிப்பிக்கவில்லை..
15. ஆடியோ புத்தகங்கள் மீதான உங்கள் பார்வை என்ன ?
ஓடிக்கொண்டிருக்கும் மனிதர்களுக்கானது..
16 . எழுத்தாளரின் வெற்றி என்பது எதன் அடிப்படையில் இருக்கிறது ?
கதை முடிந்த பின்னர் கிடைக்கும் வாசகர்களின் வார்த்தையை கொண்டு.
17 . உங்கள் படைப்பில் எதையாவது எழுதி இருக்க வேண்டாம் என்று எண்ணியதுண்டா ?
இதுவரையில் இல்லை
18 . உங்களின் படைப்புகளில் எது உங்களுக்கான அங்கீகாரத்தை பெற்று கொடுத்ததாக நினைக்கிறீர்கள் ?
முதல் கதையே.. கொலை காதலன்..
19 . கதை கரு மற்றும் கதா பத்திரங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள் ? அதற்கான மெனக்கெடல் எந்த அளவிற்கு கொடுப்பீர்கள் ?
மெனக்கெடல் என்று இல்லை.. பெரும்பாலும் எனது கதையின் கரு நம்மை சுற்றி நடப்பதாய் தான் இருக்கும்.. அதற்கு பெரிதாய் தேடல் என்று இருந்தததில்லை.. கதா பாத்திரமும் நம்மை சுற்றி இருப்பவர்கள் தான்.. தனியாக எதையும் இழுப்பதில்லை.
20 . நீங்கள் பெற்ற போட்டி பரிசுகள் –
நேரமின்மை காரணமாக நான் போட்டியில் பங்கு கொள்வது இல்லை..
21. எதிர்வினை கருத்துக்களை எப்படி கையாள்கிறீர்கள்?
ஐந்து கதையை முடித்துவிட்டேன்.. இதுவரை எதிர்வினை இடுகைகள் தென்படவில்லை.
22. நீங்கள் அதிகம் எழுத விரும்புவது எது ? (கதை , கவிதை, தொடர்கதை, நாவல் , சிறுகதை) ஏன் ?
தொடர்கதை தான்.. முதலில் தொடர்கதையாய் எழுத ஆரம்பித்தது இன்று வரை தொடர்கிறது..
23 – ஏன் மாறுபட்ட கதைக்கரு கொண்ட கதைகள் வாசகர்களை அதிகமாக சென்றடைவதில்லை?
பலருக்கு, பல பிரச்சனைகளின் வடிகாலாய் இருப்பது வாசிக்கும் கதைகள் தான்.. வாசிப்பில் நிம்மதியை தேடும் காரணத்தால் அவர்களின் தேடல் காதல் மற்றும் குடும்ப கதையோடு நின்றுவிடுகிறது.. இப்போது டிரன்ட் நிறைய மாறி விட்டது, வெகுஜன மக்களால் அனைத்து கதை கருக்களும் வாசிக்க படுகிறது..
24 . குடும்பம் காதல் சாராத கதைகளை நீங்கள் எழுதியது உண்டா? (படைப்பின் தலைப்பு)
இல்லை
25 . அனைவரும் படிக்க வேண்டிய புத்தகங்களாக நீங்கள் கருதுவது என்ன என்ன?
பொன்னியின் செல்வன், வேள்பாரி..
26 . ஓர் படைப்பின் வார்த்தை அளவுகள் பற்றி உங்களது கருத்து என்ன?
வாசகர்கள் படைப்பாளியின் வார்த்தை சுழலில் சிக்கினால் அதற்கு அளவுகோல் இல்லை..
வாசகர்கள் லேசாக கண் சுருக்கி, ஸ்கிப் செய்துவிட்டு போகாதவரை வார்த்தை இருத்தல் நலம்.
27 . எழுதுபவர்கள் பெறும்பாலும் பயன் அடைவதில்லை. அவர்கள் பயன்பெற நீங்கள் கூறும் சில யோசனைகள் என்ன?
அவர்களின் எழுத்தையும் அவர்களையும் மெருகேற்ற தான் கூறுவேன்.. முடிந்தவரை தன் எழுத்தை வாசகர்களுக்கு கொண்டு சேர்க்க நிறைய முயற்சி செய்தல் அவசியம்.
28 . உங்கள் தனி தன்மை என்று தாங்கள் கருதுவது என்ன ?
நான் எழுதுவதே..
29 . உங்களது கவிதை , பிடித்த வாக்கியம் , பழமொழி (பைனல் பஞ்ச்).
அத்தனையும் நேசி..
Something is better than nothing..
30 . உங்கள் படைப்புகள் (லிங்க்குகளுடன்) (Youtube also ):
விழியின் கனவு:
கன்னக்குழி அழகினிலே:
மயானபூமி:
கொலை காதலன்:
இதோ பாத்தீங்களா நம்ம சசி சகோதரர் கூட நம்ம பயணம் .. பெரிய விஷயத்தையும் சிம்பிள் ஆக முடிச்சிடுவாங்க ..
இவருக்கு கதை ரொம்ப நல்லா வரும் .. கதை போக்கு, எழுத்து நடை, கதை மூலமா இவர் குடுக்கற தகவல்கள்ன்னு எல்லாமே ரொம்ப ஈசியா எல்லாருக்கும் புரியும்படி சொல்றது இவரோட பெரிய பிளஸ்ன்னு சொல்லலாம் ..
இவரும் வேலை பளு காரணமா நிறைய எழுத முடிவதில்லை .. தொடர்ந்து எழுதினா காண்டிப்பா இவருக்கு ஒரு வாசகர் வட்டம் உருவாகும் ..
சீக்கிரம் பதிப்பு புத்தகம் போடுங்க உடன்பிறப்பு .. உங்க எழுத்துல நாங்களும் வித விதமா கன்னக்குழிய ரசிக்க காத்திருக்கோம்.
என் அன்பு மிக்க உடன்பிறப்பு எடுக்கும் எல்லா முயற்சிகளுக்கும் எங்களோட மனமார்ந்த நல்வாழ்த்துகள் ..
இன்னும் இன்னும் பெரிய உயரங்களை நீங்க உங்க கனவுலையும் , உங்க எழுத்துலையும் அடைய எங்களோட வாழ்த்துகள் ..
உங்க பண்ணை கனவை சீக்கிரமே நீங்க அடைவீங்க .. அப்படியே சின்ன சின்ன விவசாய குறிப்பும் எங்களுக்கு குடுத்தா நாங்களும் வீட்ல செய்ய முடியறத பண்ணுவோம் ..
உங்ககிட்ட பல நல்ல படைப்புகள் உங்க வாசகர்களா நாங்க எதிர்பாக்கறோம்..
அடுத்து ஒரு அருமையான எழுத்தாளர கூட்டிட்டு வரேன்..