வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் ..
இன்னிக்கி நம்ம பாக்க போற எழுத்தாளர் ..
இவர் இன்னும் முழு நேர எழுத்தாளரா மாறலைன்னு நான் ரொம்பவே வருத்தபடறேன் ..
இவருக்கு எழுத்துல எங்க , எதை , எவ்ளோ , எப்படி குடுக்கணும் னு இவரு அதிகம் யோசிக்காமயே இயற்கையா வரும் . இப்படி ஒரு எழுத்தாளர் முழுசா எழுதிட்டே இருந்தா , இன்னும் எவ்ளோ எவ்ளோ நல்ல நல்ல படைப்புகள் கொடுப்பார் னு தான் ஒவ்வொரு முறையும் இவர் எழுத்த படிக்கறப்போ நினைக்கறேன் .
பேச்சு வழக்குல அற்புதமா இவர் குடுக்கற சிறுகதைகள் அவ்ளோ அழுத்தமும் , அருமையாவும் இருக்கும் .
யாருன்னு தெரிஞ்சதா ?
வாங்க உள்ள போய் பாக்கலாம் ..
எழுத்துப்பயணத்தில் நம்முடன் இன்று….
1. புனைபெயர் – சேதுபதி விசுவநாதன்
2. இயற்பெயர் – சேதுபதி
3. படிப்பு – B.E Mechanical
4. தொழில் –
Design Engineer & Astrologer
5. பிடித்த வழக்கங்கள் –
கோவில் பயணங்கள், மலையேற்றம், வண்டியில நைட் தனியா லாங்ட்ரைவ் போறது
6. கனவு –
அது அடிக்கடி மாறிட்டே இருக்கும். நாம நிராகரிக்கப்பட்ட இடத்திலயும், அவமானத்தை சந்தித்த இடத்திலயும் அடையாளமா மாறனும்னு என்ற கனவு எப்போதும் உண்டு. அதை பல இடங்களில் நிரூபித்துள்ளேன்.
7. உங்களுக்கு ஏற்பட்ட எழுத்தின் மீதான தாக்கம் என்ன?
தாக்கம் எல்லாம் எதுவும் இல்லைங்க.
8. உங்களின் வாசிப்பு அனுபவம் பற்றி –
இதை எழுதும் போது சிரிப்பு தான் வருது. வாசிக்கும் பழக்கம் எனக்கு இல்லை. சோம்பேறி என்று கூட சொல்லலாம். இதுவரை 15க்கும் குறைவான நாவல் தான் படித்திருப்பேன். அதில் முக்கால்வாசி நட்பு ரீதியான வாசிப்பு. சிறுகதைகள் 50க்கும் குறைவுதான்.
9. உங்களை எழுத தூண்டியது எது?
2018ல் முகநூலில் suggested post ஆக பிரதிலிபி சிறுகதை ஒன்று வந்தது. படித்தேன். பிறகு சில நாட்கள் கழித்து நான்கைந்து சிறுகதை படித்திருப்பேன். அதன் பிறகு எழுதலாம் என்று நினைத்து எழுதிய உண்மை சம்பவம் தான் எனது முதல் சிறுகதை.
10. எப்போது எழுத ஆரம்பித்தீர்கள்?
ஜனவரி 2018
11. உங்களது எழுத்தை படித்தவரிடம் அதன் தாக்கத்தை உணர்ந்தது உண்டா?
கட்டாயம் உண்டு. ஏனென்றால் நான் எழுதும் சிறுகதைகள் பெரும்பாலும் நெகடிவ் என்டிங் தான். அழுகாச்சி ரைட்டர் நான். வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து எழுதுவேன். ஆனால் நம்மை சுற்றி நடப்பவை தான் அது. அதனால் எளிதில் மற்றவர்கள் கண்களில் அது கண்ணீரை வரவழைத்துவிடுகின்றன என் எழுத்துக்கள்.
12 . எழுத்தால் எதையும் மாற்ற முடியும் என்று நம்புகிறீர்களா ?
தவறாக பேசியதை விட எழுதியதற்காக பல கொலைகள் நடந்துள்ளது. ஏனென்றால் எழுதியது எத்தனை காலங்கள் ஆனாலும் அழியாது. அதனால் தான் கத்தியை விட பேனாவின் கூர்மை ஆபத்தானது என்று சொன்னார்கள்
13 . மின்னூல் , பதிப்பு புத்தகம் . இவற்றினைப் பற்றி உங்கள் கருத்து என்ன ?
மின்னூல் இன்றைய புது எழுத்தாளர்களுக்கு வரம் என்று தான் சொல்லுவேன்.
14. நீங்கள் பதிபித்த பதிப்பு புத்தகங்கள் எத்தனை ? (அவற்றை பெற தொடர்பு கொள்ள ) –
இதுவரைக்கும் அந்த பாக்கியம் கிடைக்கவில்லை.
15. ஆடியோ புத்தகங்கள் மீதான உங்கள் பார்வை என்ன ?
படிப்பவர் குரல் மற்றும் நடை மட்டுமே அதனை அழகாக்கும். ரசிக்க வைக்கும். ஆனால் படித்தலை விட கேட்டல் என்பது எனக்கு செட் ஆகாது.
16 . எழுத்தாளரின் வெற்றி என்பது எதன் அடிப்படையில் இருக்கிறது ?
தொடர்ந்து எழுதுவதில் தான்.
17 . உங்கள் படைப்பில் எதையாவது எழுதி இருக்க வேண்டாம் என்று எண்ணியதுண்டா ?
நிச்சயமாக இல்லை. இனியும் நினைக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் முடிவு செய்த பிறகு தான் எழுதவே ஆரம்பிப்பேன். நெகட்டிவ் கமெண்ட், இன்றைய பாஷையில் பொங்கல் வந்தாலும் கவலைப்படவே மாட்டேன். ஏனென்றால் என் எழுத்துக்கள் எனது மனசாட்சிக்கு கட்டுப்பட்டவை.
18 . உங்களின் படைப்புகளில் எது உங்களுக்கான அங்கீகாரத்தை பெற்று கொடுத்ததாக நினைக்கிறீர்கள் ?
திருநங்கையுடன் ஓர் இரவு சிறுகதை தான்.
19 . கதை கரு மற்றும் கதா பத்திரங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள் ? அதற்கான மெனக்கெடல் எந்த அளவிற்கு கொடுப்பீர்கள் ?
கதைக்கரு நம்மை சுற்றி நடப்பவை தான். சில நேரங்களில் மனிதர்கள், சூழ்நிலைகள், செய்திகள் தான்.
கதா பாத்திரங்கள் போற போக்குல தூக்கி உள்ள இழுத்து போட்டுக்க வேண்டியது தான்
20 . நீங்கள் பெற்ற போட்டி பரிசுகள் –
சங்கமம் தளத்தில் நடைபெற்ற தனிமை சிறுகதை போட்டி. ஜான்சி அக்கா தளத்தில் நடைபெற்ற புகைப்பட பரிசு போட்டி.
பெரும்பாலும் போட்டி கதைகளில் பங்குகொள்ளவே மாட்டேன். காரணம் நேரத்திற்கு எழுதி முடிக்க முடியாது என்ற எண்ணம் தான்.
21. எதிர்வினை கருத்துக்களை எப்படி கையாள்கிறீர்கள்?
ஜாலியா கையாளுவேன்.
22 – நீங்கள் அதிகம் எழுத விரும்புவது எது ?
(கதை , கவிதை, தொடர்கதை, நாவல் , சிறுகதை) ஏன் ?
சிறுகதை, கவிதைகள் தான். ஏன்னா சீக்கிரம் எழுதிடலாம். அதுக்கு தான்.
23 – ஏன் மாறுபட்ட கதைக்கரு கொண்ட கதைகள் வாசகர்களை அதிகமாக சென்றடைவதில்லை?
காதல் என்ற ஒன்றில் மனிதன் மனதை செலுத்திவிட்டான். மேலும் நிஜத்தில் கொண்டாடப்படாத அல்லது வாழ முடியாத பலவும் காதல் மற்றும் குடும்பக் கதைகளில் கிடைக்கும். மாறுபட்ட கதையில் நிஜம் இருக்கும் அல்லது கற்பனை இருக்கும்.
24 . குடும்பம் காதல் சாராத கதைகளை நீங்கள் எழுதியது உண்டா? (படைப்பின் தலைப்பு)
என்னோட எல்லா கதையுமே அப்படி தானே.
25 . அனைவரும் படிக்க வேண்டிய புத்தகங்களாக நீங்கள் கருதுவது என்ன என்ன?
அந்த அளவுக்கு நான் இன்னும் வாசிக்கவில்லை.
26 . ஓர் படைப்பின் வார்த்தை அளவுகள் பற்றி உங்களது கருத்து என்ன?
இது எழுத்தாளரின் மனநிலை பொறுத்தது
27 . எழுதுபவர்கள் பெறும்பாலும் பயன் அடைவதில்லை. அவர்கள் பயன்பெற நீங்கள் கூறும் சில யோசனைகள் என்ன?
அப்படி ஏதாவது யோசனை இருந்தா எனக்கு சொல்லுங்க.
28 . உங்கள் தனி தன்மை என்று தாங்கள் கருதுவது என்ன ?
உடனடியாக கதைகளை யோசித்துவிடுவேன். ஆனா எழுதமாட்டேன்.
இதுக்கு என்ன சொல்றதுன்னே தெரியவில்லை
29 . உங்களது கவிதை , பிடித்த வாக்கியம் , பழமொழி (பைனல் பஞ்ச்).
நிறைய இருக்கே.
30 . உங்கள் படைப்புகள் (லிங்க்குகளுடன்) (Youtube also ):
பிரதிலிபி
https://tamil.pratilipi.com/user/trfojhj5iz?utm_source=android&utm_campaign=myprofile_share
யூடியூப்
இவரோட நம்ம நேர்காணல் கூட பாருங்க சட்டுன்னு முடிஞ்சிரிச்சி .. பாயிண்ட் மட்டும் தான் பேசுவாரு அதுக்கு மேல எவ்ளோ நம்ம பேசினாலும் அவர் அமைதியா சிரிச்சிட்டு போய்டுவாரு ..
இவரோட ஒவ்வொரு கதையும் நம்மல அந்த களத்துக்கு கூட்டிட்டு போய்டும். நாமலே அங்க இருந்து அத்தனையும் பாத்து உணர்ந்து , அனுபவிச்சிட்டு வரும் உணர்வு கண்டிப்பா எல்லாருக்கும் வரும் .
இவர் இன்னும் நிறைய எழுதினா ரொம்பவே சந்தோஷமா இருக்கும் . ஆனா இவர் வேலை அதுக்கு விட மாட்டேங்குது அது தான் வருத்தம் .
திருநங்கையுடன் ஓர் இரவு கதைல நம்ம திருநங்கைகளை எவ்ளோ கொடுமை பண்றோம் , எவ்ளோ அவங்களை ஒதுக்கி வச்சி அவங்க ஒரு சராசரி வாழ்க்கை வாழ கூட நம்ம விடறது இல்லைனு தெரிஞ்சிக்கலாம் .
அந்த கதைல எந்த வர்ணனை , மேல்பூச்சு எதுவும் இல்லமா ரொம்பவே எதார்த்தமா இவர் கதை குடுத்து இருக்கற விதம் வேற லெவல் ..
இவரோட ஒவ்வொரு கதையும் இப்டி ஒவ்வொரு வகைல நம்ம பண்ணிட்டு வர்ற தப்ப கண்டிப்பா மூஞ்சிக்கு நேரா காட்டி பேசும் .
மேக்கப் தேவை இல்லாத எழுத்து இவருக்கு இயற்கையா அமைஞ்சி இருக்கு . அது மூலமா இவர் இன்னும் நிறைய கதைகளை நமக்கு தரணும் .
இப்போ நேரம் சரியா கிடைக்கலன்னு கம்மியா எழுதராரு , இனிமே உங்களுக்கு எழுத நிறைய நேரம் கிடைக்கணும் னு நாங்க வேண்டிக்கறோம் .
இவரோடது கண்டிப்பா எல்லாரும் படிக்க வேண்டிய எழுத்து. யாரும் மிஸ் பண்ணாதீங்க .
உங்களோட எல்லா முயற்சிகளுக்கும் எங்களோட மன மார்ந்த வாழ்த்துகள் …
எப்பவும் சந்தோஷமா இருக்கணும், பெரிய பெரிய உயரங்களை நீ அடைவ பங்கு .. சீக்கிரம் சிறுகதை தொகுப்பு போடு பங்கு ..
இன்னிக்கி நம்ம பயணம் உங்க எல்லாருக்கும் பிடிச்சி இருக்கும்னு நினைக்கறேன் ..
சீக்கிரமே அடுத்து ஒரு அற்புதமான எழுத்தாளரோட வரேன் ..