24 – மீள்நுழை நெஞ்சே
24 - மீள்நுழை நெஞ்சே ஓயாமல் அடிக்கும் கைப்பேசியை எடுத்து காதில் வைத்ததும் கனிமொழி சரமாரியாக அவளை வசைப்பாடத் தொடங்கினாள். "எங்க டி போய் தொலைஞ்சு? எத்தனை மணி நேரமா உனக்கு போன் பண்றேன்… என்ன கிழிச்சிட்டு இருந்த இவ்ளோ நேரம்? பேயே …பிசாசே…. எருமையே…. ", இப்படி அவள் அங்கே கத்திக்கொண்டிருக்க இவள் போனை கையில் ஆட்டியபடி ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் பொருட்களை எல்லாம் எடுத்து வைத்து ஒழுங்குப்படுத்திக் கொண்டிருந்தாள். பத்து நிமிடம் முடிந்த ...