வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் ..
“காற்றின் நுண்ணுறவு” கதை நமது தளத்தில் விரைவில் வரப்போகிறது ..
அந்த கதையில் இருந்து சில துளிகள் இதோ ..
உயரத்தில் பறந்துக் கொண்டிருந்த ஹெலிகாப்டர் வடக்கு அட்லான்டிக் கடற்பகுதியில் இருந்து கினியா வளைகுடா இருக்கும் பக்கம் சென்றுக் கொண்டிருந்தது.
பைலட் இறங்கும் இடத்திற்கான அட்சரேகை மற்றும் தீர்க்கரேகைக் குறியீடுகளைக் கேட்டுக்கொண்டிருந்தார்.
“கிங்காங் ஆன் கினியா… ஐ ரிபீட் கிங்காங் ஆன் கினியா….. வேர் டூ லேண்ட்?”, பைலட்.
“காப்பீட்…. யூவர் மார்க் இஸ் latitude 0.700, longitude 0.954… “, எனக் கட்டளை வந்தது.
ஹெலிகாப்டர் அந்த குறியீட்டைக் காண அது கடற்பகுதியாக இருந்தது.
தற்காலிகமாக ஆப்பரிக்க கண்டத்தில் அக்ரா எனும் இடத்தில் கடற்கரை ஓரமாகத் தரையிறக்கினர்.
ஹெலிகாப்டரில் இருந்து இருவர் இறங்கி தங்களது மேலிடத்திற்குத் தொடர்புக் கொண்டனர்.
“பாஸ்….. இது கினியா வளைகுடா…. இங்கிருந்து 175 கி.மீ தூரத்துல தான் லொகேஷன் இருக்கு”, சார்லஸ்.
“……………….”
“ஓக்கே பாஸ்….. அதுக்கான ஆளுங்கள தேட ஆரம்பிக்கறேன்…. “, என அவன் கூறியதும் லைன் கட் ஆனது.
சார்லஸ் மற்றும் ஜேக் இருவரும் தான் அந்த ஹெலிகாப்டரில் வந்தது. பைலட்டிடம் இந்த இடம் தான் எனக் கூறி இருவரும் கடற்கடரை நோக்கிச் சென்றனர்.
“அங்க பெரிய மீன்கள் இருக்க வாய்ப்பு இருக்கு….. என்ன பண்ணப்போற?”.
“ஓ மை காட்…… ஏஞ்சல்…. இந்த பாறை மிதக்குது…… “, என ஆச்சரியம் குரலில் ததும்பக் கூறினாள்.
“என்ன சொல்ற பாறை மிதக்குதா?”,ஏஞ்சல் சந்தேகமாக கேட்டாள்.
“ஆமா ஏஞ்சல் … அந்த பெரிய பாறை மிதக்குது…. நேத்து நாம பார்த்த பாறை”.
“அது எப்படி சாத்தியம்?”, ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியுடன் கேட்டாள்.
“இங்க பாறைக்கு நடுவுல ஓட்டை இருக்கு…. அதுக்கு உள்ளயும் தண்ணி இருக்கு…. ஆனா…. ஏதோ வித்தியாசமான செயல்பாடு நடக்கறமாதிரி தோணுது”, எனக் கூறியபடி அந்த ஓட்டையை நோக்கிச் சென்றாள்.
ஊசியை எறிந்துவிட்டு கத்தியை எடுத்துக்கொண்டனர்.
“சப்ஜெட்க்கு எதுவும் ஆகக்கூடாது பாய்ஸ்…. “, மீண்டும் மாமல்லன் குரல் கொடுத்தான்.
“அவனுங்களுக்கு எதுவும் ஆகக்கூடாதுன்னு நீ வேண்டிக்க டா முட்டைகோஸ் மண்டையா”, பாலா சிரித்தபடி வல்லகியின் அடுத்த ஆட்டத்தைக் காண ஆவலாக இருந்தாள்.
“பாலா கம்ப தூக்கிபோடு”
பாலாவும் ஓடிச்சென்று கம்பை எடுத்துவந்து தூக்கிப்போட்டாள்.
“வகி… இப்ப டி.ஆர் பாட்டு பாடினா செமயா இருக்கும்ல?”.
“அத நீயே பாடு”
“வாடா என் மச்சி வாழக்கா பஜ்ஜி… உன்னுடம்ப பிச்சி …. போடப் போறேன் பஜ்ஜி”, என பாலா சொடக்கு போட்டு பாடியபடி சுவாரஸ்யமாக நின்றிருந்தாள்.
“ஆமாங்க…. ஏன் நீங்க எதையும் நம்பவே மாட்டேங்கறீங்க?”, இனியன் சலித்துக்கொண்டான்.
“என் நேச்சர் அதான்… யாருக்கும் நான் விளக்கம் குடுக்க முடியாது…”, பட்டென கூறிவிட்டு அதில் எழுதி இருந்ததைப் படித்தாள்.
“இருபதாம் நூற்றாண்டின் எச்சமில்லா-
உயிர்களின் மிச்சம்…
முந்தைய குமரியின் மேற்கு கோடி….
பாறை சதுப்பில் துவாரமுண்டு….
நடுவெளியில் வளிகொண்டு உன்குருதி துணைக்கொண்டு இறங்கு”, என அதில் எழுதி இருந்தது.
“ஒன்னுமே புரியல… என்ன இது?”, யாழினியன் அதை மீண்டும் படித்தபடிக் கேட்டான்.
“இந்த பொருள் எல்லாத்தையும் அவன்கிட்ட குடுத்துட்டு வாங்க “, என இனியனிடம் கொடுத்தாள்.
“என்னன்னு கேட்டா பதில் சொல்லாம என்னை வேலை வாங்கிட்டே இருங்க நீங்க…”, எனச் சலித்தபடிப் பக்கத்து அறைக்குச் சென்றான்.
“வழிய கண்டுபிடிச்சிட்டாளா?”, ம்ரிதுள் அவன் வருவதைக் கண்டு கேட்டான்.
நொடியில் அந்த இரண்டு பாறைகளும் அதிஉஷ்ண கதிர்களை வீசத் தொடங்கியது. நொடிகளில் அதன் உஷ்ணம் நூறு மடங்கு உயர்ந்து அவ்வொளி எதிரில் இருந்தவற்றை எல்லாம் பற்றி எரிய வைத்தது.
நொடிகளில் பலர் அந்த ஒளிக்கு சாம்பலாகி காற்றோடுக் காற்றாகக் கலந்தனர்.
அதைக் கண்ட மற்றவர்கள் மனதில் மரணபீதி எழுந்தது.
நாச்சியாவும் வல்லகியும் பாலாவை நடுவில் வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தனர்..
வல்லகியின் கண்களில் நீர் வழிய ஆரம்பித்தது…
இந்த விறுவிறுப்பான பயணத்தை விரைவில் துவங்குவோம் ..