6 - விடா ரதி… “ரதி….” என அவன் தவிப்புடன் பேச ஆரம்பிக்கவும், “இதுல உங்க தப்புன்னு நான் எதுவும் சொல்ல முடியாது ராக்கி… நான் தான் உங்ககிட்ட பேசவே இல்லயே…… நான் பேசி நீங்க மறுத்திருந்தா உங்கள மறக்க முடியலன்னாலும், என்னோட தவிப்பாவது கொறஞ்சி இருக்கும்…. ஆனா நான் எதுக்குமே வாய்ப்பு ஏற்படுத்திக்கல….”ரகு அவள் கூறுவதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான். அவன் அருகில் வந்து, “இப்போ நீங்க என் புருஷன் … ஆனா என்னால தான் அந்த உரிமைய முழுசா எடுத்துக்க முடியாம கொஞ்சம் நெருடல் இருக்கு….““ஏன்?”“என்னை நீங்க அப்போ...
88 - ருத்ராதித்யன் மூன்று உருவங்களையும் அவன் நீரில் விட்ட ஈட்டி தொடும்படியான தூரத்தில் நடு புள்ளியில் வந்து நின்று படக்கினை வட்டமாக செலுத்தினான். அப்படி செலுத்தும் போது தான் அவனுக்கு இன்னொரு விஷயம் கண்களில் பட்டது. முதலில் ஒரு உருவம் பின்னே செல்ல அதற்கு இரு நொடிகள் வித்தியாசத்தில் மற்ற இரண்டு உருவங்களும் பின்னால் சென்றன. நீரில் அவை பின் செல்வது நடுவில் இருந்து பார்த்தவனுக்கு இன்னல் தீர்க்கும் மார்க்கமும் புரிந்தது. நீரில் பின்னால் அடித்து செல்லப்பட்ட முதல் உருவத்தினை குறித்துக் கொண்டு அதை நோக்கி படகை செலுத்தினான். நிஜமான மகதன்...
5 - விடா ரதி… அவளது வாழ்வில் மறக்க முடியாத நாள், முதன்முதலில் அவனைக் கண்டு மெய்மறந்து நின்றது அன்று தான். ஆலீவ் பச்சை மேல்சட்டையும், கருப்புநிறத்தில் கால்சராயும் அணிந்திருந்தான். அவளோ வெள்ளையில் மஞ்சள் எம்ப்ராய்டரி செய்தப் பூக்கள் கொண்ட சல்வார் அணிந்திருந்தாள். அது அவளுக்கு கல்லூரி முதல் வருடத்தின் கடைசி மாதங்கள்…. அந்த வயதிற்குரிய குறும்பும், சேட்டையும் என அவளது குணம் கலகலப்பானதாக இருந்தது. அவளைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். அவளது வேடிக்கைப் பேச்சில் அவ்வப்போது சிரிப்பு சத்தமும் வெடித்துக் கொண்டே இருக்கும். அதிக அலங்காரமின்றி எப்போதும் கல்லூரிக்குச் செல்வது போல...
87 - ருத்ராதித்யன் “தாங்கள் ஏன் மன்னிப்பு கேட்கிறீர்கள் ஐயா? இது எங்களின் தவறு தான். ஒரு மனிதனின் சொல்லை கண்மூடித்தனமாக நம்பக்கூடாது என்று ஓர் உயிரை இழந்தபின் தான் புரிகிறது. இவனைப் பற்றி அப்போதே இங்கே ஆள் அனுப்பி விசாரித்து இருந்தால் இப்படியொரு நிலை அவளுக்கு வந்திருக்காது. என் ஐயன் ஊர் தலைவர் கூறினார் என்ற ஒரே காரணத்திற்காக வேறெந்த கேள்விகளும் இன்றி பெண்ணை மனம்முடித்து கொடுத்தார்..” எனக் கூறியவள் அக்காளின் நினைவிலும், தந்தையின் நினைவிலும் கண்ணீர் சிந்தினாள். “இல்லையம்மா.. இந்நாட்டில் வாழும் ஒவ்வொருவரும் அருகிருப்பவரின் நலனில் அக்கறை எடுக்கவேண்டியது கடமை....
4 - விடா ரதி… அடுத்தநாள் காலை சுந்தரியின் நிச்சயத்திற்கு புடவைக் கட்டிக்கொண்டிருந்தபோது ரகு அறைக்குள் வந்தான். இடையில் மடிப்புகளைச் சரிசெய்தபடி கண்ணாடி முன் நின்றுக்கொண்டிருந்தாள். ரகு அவளைப் பார்த்தபடி அருகில் வந்து அவளை தன் முன் நிறுத்தி கீழே சில மடிப்புகளைச் சரிசெய்துவிட்டு, அமர்ந்த வாக்கிலே அவளைத் தலைநிமிர்ந்துப் பார்த்தான். “உனக்கு புடவைன்னா ரொம்ப பிடிக்குமா ரதி?”“புடவை கட்டப்பிடிக்கும்…...““எனக்கும் தான் உனக்கு கட்டிவிடணும்-ன்னு ஆசை இருக்கு... ஆனா உனக்கு நல்லாவே கட்ட தெரியும் போலவே?” கவலையுடன் கேட்டான். “ஹலோ மிஸ்டர்…... உங்களுக்கு மனசுல டீனேஜ் பையன்னு நினைப்பா? ரெண்டுபேரும் ஏர்லி 30’sல இருக்கோம்… ஞாபகம்...
86 - ருத்ராதித்யன் “ஆம் யுவராஜனே.. உனது வாழ்நாளில் நீ செய்யும் அனைத்தும் சேரும் ஒரே புள்ளி பைரவக்காடு தான். சில நூறு வருடங்கள் முன்னே உனது பாட்டனார் அந்த பாதையைக் கணித்து ஓர் கல்லில் வடித்து வைத்துள்ளார். அவரது மனைவி இறந்துபோனதால் அவரால் அங்கே செல்லமுடியவில்லை. தாம் தம்பதி சமேதராக அங்கே செல்வது உறுதிப்பட்டுவிட்டது. தங்களது தர்மபத்தினி அந்த பாதையை கண்டுக்கொண்டார். இன்னொரு பெண்ணும் அறிந்து கொண்டாள். அவளால் மிகப்பெரும் அதிசயம் நிகழும். ஆனால் அதற்கு முன் நீங்கள் அனைவருமே பல இன்னல்களை சந்திக்க வேண்டும். அதற்கு தங்களது ஆத்மாக்களை...
3 - விடா ரதி… “பலமா தாக்கப்படணுமா?” எனத் தனக்குத் தானே பேசிக்கொண்டு அவன் கூறியதன் அர்த்தம் புரிந்து சட்டென விழிகள் மலர அவனை நோக்கினாள். அவன் அறைக்கதவைத் திறந்து அவளைத் திரும்பிப் பார்த்து ஒரு மென்னகைச் சிந்திவிட்டுச் சென்றான். “இப்ப லவ் பண்ண சொல்றானா? ஆனா ஏன் அன்னிக்கி அப்படி சொன்னான்?” எனத் தனக்குள் பேசியபடி யோசனையில் ஆழ்ந்தாள். சில வருடங்களுக்கு முன்பு….. மூன்றாம் ஆண்டு இளங்கலை பட்டம்… அன்று அவளுக்கு நேர்காணலில் வேலைக் கிடைத்தது. மிகவும் சந்தோஷமாக வீட்டிற்கு வரும் முன்னரே அலைபேசி வழியே அனைவரிடமும் கூறியிருந்தாள்.லேசாக இருட்டியிருந்த மாலை வேளையில், கையில் கணினிசார்...
85 - ருத்ராதித்யன் “மகதா.. நீரின் போக்கில் அடிபடாமல் செல்.. உன் பின்னோடு வருகிறேன்..” நரசிம்மன் கூறிமுடிக்கும் முன் மகதன் வெகுதூரம் நீரினால் அடித்து செல்லப்பட்டான். அவ்விடத்தில் ஆறுகள் ஒன்று கலப்பதால் நீரின் போக்கும் ஒரு பக்கமாக இன்றி எதிரும் புதிரும் அடித்துக் கொள்வது போல ஓடிக்கொண்டிருந்தன. அங்கே சுழல்களும் அதிகமாக உருவாகி தன் பக்கம் வரும் அத்தனையையும் உள்ளே இழுத்துக் கொண்டிருந்தன. நரசிம்மன் ஒரு சுழலில் சிக்கி அதிலிருந்து வெளிவரும்போது மீண்டும் இன்னோர் சுழலில் சிக்கிக் கொண்டான். நரசிம்மன் அருகே நீரின் அடியே பெரும் பாம்பு ஒன்று சுழலில் சிக்கி புதைமணலில் இருந்து...
2 - விடா ரதி… அவள் தேநீர் குடித்து முடித்து திரும்பும்போது தான் அவன் குளித்துவிட்டு வெளியே வந்தான். நேற்று வெறும் துண்டுடன் வெளியே வந்தவனைக் கண்டு, சங்கடம் கொண்டு வெளியே ஓடினாள். இன்று பனியன், ட்ராக் பேண்ட் உடன் வந்தவன், அவள் நிற்கும் பக்கம் பார்த்துவிட்டு கண்ணாடி முன் நின்று தலைவார ஆரம்பித்தான். அவனுடையது சற்றே சுருண்ட கேசம். ஆனால் கம்பி போல வலுவாகவும் இருக்கும். அதை அவன் மிலிட்டரி கட் செய்துக் கொள்வது தான் அவளுக்கு சுத்தமாகப் பிடிக்காது. சற்று நீண்டு வளர்ந்தக் கேசத்தில் விரல் நுழைத்து விளையாடலாம் என்ற எண்ணம்...
84 - ருத்ராதித்யன் கிழக்கு மலைகளில் இருந்து வெளியே வந்ததும் நரசிம்மனும், மகதனும் தென்கிழக்கு திசை நோக்கி தங்களது பயணத்தை தொடர்ந்தனர். அவர்களை தேடி சென்ற சேயோன் ஒரு நாள் பொழுதை காடுகளில் கழித்து விட்டு இல்லம் சென்றான். அவனைத் தேடி அரசனின் பணியாளும் வந்து நின்றான். “அரசர் தங்களை உடனே வரச்சொன்னார்..” பணியாள். “இரண்டு நாழிகையில் வருகிறேன். இப்போது தான் காட்டில் இருந்து வந்தேன் என்று அரசரிடம் தெரிவி..” எனக் கூறியவன் அவசரமாக குளித்து உடைமாற்றிக் கொண்டு தன் ஆட்களில் சிலரை அழைத்து காட்டினில் வேட்டையாடிய மிருக உடல்களை குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு...
வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….
Notifications