10 – ருத்ராதித்யன்
நந்துவைக் கண்டதும் கண்மயாவும் சகஸ்ராவும் எழுந்து நின்றனர்..
“நந்தன்… ஏன் அவங்கள மெரட்றீங்க?”, எனக் கேட்டபடி யாத்ரா பின்னே வந்தாள்.
“அவங்க ஏதோ சீரியஸா பேசிட்டு இருந்தாங்க அதான் என்னனு கேட்டேன்…..”, எனக் கூறியபடி அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான்.
“இந்தாள பாத்தாலே பத்திகிட்டு வருது…. ஆளும் மூஞ்சியும்”, என சகஸ்ரா நந்துவை பார்த்தபடி கண்மயாவிடம் முணுமுணுத்தாள்.
“திட்றதா இருந்தா நேரடியா திட்டுங்க சகஸ்ரா மேடம்…. ஏன் அவங்க காத கடிக்கறீங்க?”, நந்து சகஸ்ராவை அளந்தபடிக் கூறினான்.
“அப்படியெல்லாம் ஒன்னுமில்ல நந்தன் சார். அவ ஊருக்கு கிளம்பலாம்னு சொல்றா”, என கண்மயா பேச்சை ஆரம்பித்தாள்.
“மாயா டார்லிங்… இப்பதானே விஷேசம் முடிஞ்சிருக்கு… உடனே என்ன அவசரம்…? இங்க சுத்திபாக்க நெறைய இடம் இருக்கு… பாத்துட்டு அப்பறம் போலாம்”, எனக் கூறியபடி யாத்ரா கண்மயா தோளின் மேல் கைப்போட்டு அமர்ந்தாள்.
“இல்ல… வேலை இருக்கு”, என சகஸ்ரா ஆரம்பித்தாள்.
“எதுவா இருந்தாலும் இந்த பைல் இல்லாம நீங்க போக முடியாது தானே மிஸ்.சகஸ்ரா”, என பைலை காட்டி கேட்டபடி அர்ஜுன் அங்கே வந்தான்.
கண்மயாவும் சகஸ்ராவும் அடுத்து என்ன சொல்வதென தெரியாமல் சில நொடிகள் அமைதியாகி, பின் கண்மயாவே பேச ஆரம்பித்தாள்.
“அர்ஜுன் சார்… அந்த பைல்-அ இந்நேரம் நீங்க படிச்சி இருப்பீங்க… பிரச்சினை என்னனு உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்…. அதை எங்க கொண்டு போனா சால்வ் பண்ணலாம்னு தெரியாம தான் நாங்க முழிச்சிட்டு இருக்கோம்… நீங்க எல்லாரும் யாரு என்னனு எங்களுக்கு முழுசா எதுவும் தெரியாது.. ஆனா உங்கள நம்பலாம்ன்னு தோணுது… இப்ப நீங்களே சொல்லுங்க நாங்க என்ன பண்ணணும்னு”, என கரகரப்பான குரலில் பேசி முடித்தாள் கண்மயா.
அர்ஜுன் இருவரையும் பார்த்துவிட்டு யாத்ராவிடம், “யாத்ரா….நீ என்ன சொல்ற?”, எனக் கேட்டான்.
“இது வைல்ட் லைப் கண்ட்ரோல் ப்யூரோக்கு தான் கொண்டு போகணும் செழியன்…. தவிர இதுல நிறைய சிக்கல்கள் இருக்கு…. நிறைய விஷயங்கள தேடி ஆதாரமாக்கணும்”, யாத்ரா அர்ஜுனை முறைத்தபடி கூறினாள்.
“அத இவங்க பண்ணமுடியுமா? இவங்க குடுக்கறத அவங்க ஏத்துக்கற அளவுக்கு பண்ண முடியுமா?”, நந்து.
“காட்டு உயிரினங்கள் பொறுத்தவரை இப்ப நிறைய பாதுகாப்பு விஷயங்களை செஞ்சிட்டு தான் இருக்காங்க நந்தன். ஆனாலும் தவறுகள் நடந்துட்டே தான் இருக்கு….கொஞ்சம் ரிஸ்க் தான். ஆனா முடியும்… இவங்க இரண்டு பேரும் பண்றது கஷ்டம் தான்”, என யாத்ரா சகஸ்ராவைப் பார்த்தபடி கூறினாள்.
“நீங்க யாருன்னு நாங்க தெரிஞ்சிக்கலாமா மேடம்? “, சகஸ்ராவை யாத்ராவைப் பார்த்து கேட்டாள்.
“நானும் கவர்மெண்ட் எம்ப்ளாயி தான். கொஞ்சம் விஷயம் தெரியும்… இந்த விஷயத்த அவங்க தான் ஹேண்டில் பண்ண முடியும்…. நீங்க அவங்ககிட்ட பேசிட்டு இருங்க… நான் வந்துடறேன்”, என அங்கிருந்து அவள் கிளம்பினாள்.
கண்மயா யாத்ராவை ஏக்கமாகப் பார்த்தபடி இருக்க, யாத்ரா அதை கண்டும் காணாமல் சென்றாள்.
நந்து அர்ஜுனைப் பார்த்தான், அவனும் கண் சிமிட்டி சைகை காட்டிவிட்டு கண்மயாவிடம், “நீங்க சொல்லுங்க… இதை நாங்க எடுக்கணும்னா நிறைய ப்ரோசீஜர் இருக்கு… இப்ப ஆரம்பிச்சா ஒரு வாரம் ஆகும் நாங்க அபீஸியலா இதுல இறங்கறதுக்கு… இது சம்பந்தப்பட்ட எல்லாத்தையும் சொன்னா தான் நாங்க முடிவெடுக்க முடியும்”, என அர்ஜுன் தெளிவாகக் கூறிவிட்டு சோபாவில் சாய்ந்து அமர்ந்துக்கொண்டான்.
சகஸ்ரா கண்மயாவை பார்த்தாள். இருவரும் சில நொடிகள் அமைதியாக அமர்ந்திருந்தனர்.
“சார்… நாங்க ஜுவாலஜி க்ராஜுவேட்ஸ்…. அதுல டாக்டரேட் பண்றதுக்கு முயற்சி பண்ணிட்டு இருக்கோம்….”, என கண்மயா பேச ஆரம்பித்தாள்.
“சாரி காய்ஸ் …. ஒரே நிமிஷம்”, என யாத்ரா உள்ளே ஓடி வந்து கண்மயாவை இழுத்துக்கொண்டு சென்றாள்.
“ஹேய்… எங்க கூட்டிட்டு போற?”, அர்ஜுன்.
“அவங்க கிட்ட பேசிக்கோங்க செழியன்… இவங்ககிட்ட முக்கியமான வேலை இருக்கு”, எனக் கூறியபடி ஓடினாள்.
சகஸ்ரா இப்போது திருதிருவென விழித்தபடி ஓடும் கண்மயாவைப் பார்த்துவிட்டு, இவர்களையும் பார்த்தாள்.
“ம்ம்… சொல்லுங்க…”, என நந்து விறைப்பாக கூறி அர்ஜுனைப் பார்த்தான்.
“அது… மாயாவே வந்து சொல்லட்டுமே…..”, எனத் திணறியபடிக் கூறினாள்.
“என்ன பிரச்சனைன்னு உங்களுக்கும் தெரியும் தானே… சொல்லுங்க… எப்படியும் நாங்க இரண்டு பேர்கிட்டயும் தனி தனியா தான் விசாரிப்போம்”, என அர்ஜுன் கூறிவிட்டு அவள் முகத்தைப் பார்த்தான்.
“இல்ல… அது… எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு”, என திக்தித் திணறிக் கூறினாள்.
“தப்பு பண்றவன் தான் பயப்படுவான்… நீங்க ஏன் பயப்படறீங்க?”, என நந்து அவளை நேரடியாக கேட்க அவளுக்கு இதயத்துடிப்பு எகிற ஆரம்பித்தது.
“அப்படியெல்லாம் இல்ல…. மத்தவன் செஞ்ச தப்பை சொல்ல பயப்படறவங்களும் இருக்காங்க…. ஒரு நிமிஷம் சார்….நான் டேப்லெட் போட்டுக்கறேன் “, என எழுந்துச் சென்று மாத்திரை சாப்பிட்டாள்.
“சுத்தம்….. பேச ஆரம்பிக்கறதுக்கு முன்னயே மாத்திரையா …. இவ எப்படி இந்த பைல் ரெடி பண்ணி இருக்க முடியும் அஜு? “, என நந்தன் அவளை சந்தேகமாகப் பார்த்தபடிக் கேட்டான்.
“முதல்ல பேசட்டும்… நீ போய் யாத்ரா என்ன பண்றான்னு பாரு… “, என நந்துவை அனுப்பி வைத்தான்.
“ம்ம்… உடனே வரவா அரைமணிநேரம் கழிச்சி வரவா?”, எனக் கேட்டான்.
“நண்பேன்டா…. நான் கூப்பிட்டப்பறம் வந்தா போதும்”, என சிரித்தபடி அனுப்பிவைத்தான்.
நந்து வெளியே சென்றதும் அர்ஜுன் எதிரில் வந்து அமர்ந்தாள்.
“சார்… நீங்க நிஜமா சிபிஐ தானா?”, என தயங்கியபடிக் கேட்டாள்.
“இது என் ஐடி…. இன்னும் சந்தேகம் இருக்கா?”, என ஐடியை அவள் முன் வைத்துவிட்டு கேட்டான்.
“இப்பல்லாம் டூப்ளிகேட் ஈஸியா ரெடி பண்றாங்க சார்…. இது நிஜம்னு நான் எப்படி நம்பறது?”, என மீண்டும் கேட்டாள்.
“என் பே-ஸ்லிப் பாத்தா நம்புவீங்களா மிஸ்.சகஸ்ரா?”, அர்ஜுன் இழுத்து வைத்த பொறுமையுடன் கேட்டான்.
அவன் அப்படி கேட்டதும் பயந்து குரல் உள்ளே செல்ல ஆரம்பித்தது.
“இல்ல சார்… சாரி சார்…. எனக்கு உங்கள தெரியாது.. அதான் கேட்டேன்…. “, என அவனிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு தனக்கு தெரிந்த விவரங்களை ஒன்று விடாமல் அவனிடம் ஒப்பித்தாள்.
அவள் கூறுவதை எல்லாம் அவனும் பதிவு செய்துக் கொண்டான்.
முக்கால் மணிநேரம் கழித்து அர்ஜுன் வெளியே வந்து நந்துவை அழைத்தான்.
“என்னடா இரண்டு ஷார்ட் ப்ளிம் பாத்த போல?”, எனக் கேட்டபடி வந்த நந்தனை தோளில் கைப்போட்டு இழுத்துக்கொண்டுத் தன்னறைக்குச் சென்றான்.
யாத்ரா வந்து கண்மயாவை அழைத்துச் சென்றது தீரனிடம் தான்.
அவன் வித்தியாசமாக இருக்கிறான் என அறிந்ததும் அவளை வந்து இழுத்துக்கொண்டு சென்று காட்டினாள்.
“மாயா…. இது பாருங்க…. இந்த மாதிரி ஒரு கண்ணுகுட்டி நீங்க பாத்திருக்கீங்களா?”, எனக் கேட்டாள்.
தீரன் யாத்ராவிடம் கொஞ்சியபடி கண்மயாவை பார்த்தது.
கண்மயா விழிகளை ஆச்சரியமாக விரித்தபடி அருகில் வந்தாள்.
“இதோட அம்மா காங்கேய வகை .. ஆனா குட்டி வித்தியாசமா இருக்கே… என்ன வகை மாட்டோட சினை சேத்தாங்க?”, எனக் கேட்டாள்.
“தெரியலம்மா….வாங்கிட்டு வந்து இரண்டு நாள்ல எங்களுக்கு அது சினையா இருக்குன்னு தெரிஞ்சது”, என சாமியய்யா கூறினார்.
“இத உங்ககிட்ட வித்தவங்க சொல்லலியா ?”, கண்மயா..
“இல்லம்மா… நாங்களா தான் அதோட நடவடிக்கைல சந்தேகப்பட்டு பாத்தோம்….. சினையா இருந்த அடையாளமே இல்ல….. குட்டியும் மடார்னு போட்டுரிச்சி… எல்லாமே வித்தியாசமா இருக்கு”, சாமியய்யா தீரனை தடவிக் கொடுத்தபடிக் கூறினார்.
“இதோட சேம்பல் எடுத்து நீ என்ன-ன்னு பாக்கமுடியுமா மாயா?”, என யாத்ரா கேட்டாள்.
“ம்ம்…. நான் கிளம்பறப்ப எடுத்துட்டு போறேன் யாத்ரா…. இதை காட்டத்தான் என்னை இழுத்துட்டு வந்தியா?”, என கண்மயா சந்தேகமாகக் கேட்டாள்.
“ஆமா … தீரன பாத்ததும் உன்கிட்ட காட்டணும்னு தோணிச்சி.. நீ அனிமல்ஸ் பத்தி ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கல்ல…. ஆமா… உனக்கு யாரு கைட்? “, எனக் கேட்டபடி கண்மயாவின் நடவடிக்கைகளை ஆராய்ந்தாள்.
இருவரும் பேசியபடி ரோட்டோரமாக நடந்தபடி இருந்தனர்.
சற்று தூரத்தில் சக்தி வருவது கண்டு யாத்ரா அவனை அழைத்தாள்.
“டேய் குட்டி பையா…. இங்க பாருடா…. நேரா பாருடா”, என யாத்ரா கத்தினாள்.
சக்தி கையாட்டிவிட்டு சட்டென சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு கையை இறக்கிக்கொண்டு பின்னால் ஓடினான்.
அவன் ஓடுவது கண்ட யாத்ரா அவன் பின்னோடே துரத்திக்கொண்டு ஓடினாள்.
கண்மயாவும் யாதென புரியாமல் இருவரையும் தொடர்ந்து ஓடினாள்…
ஏன்னு அடுத்த அத்தியாத்துல பாக்கலாம் நட்பூஸ்……