11 – காற்றின் நுண்ணுறவு
தன் அலுவலகத்தில் இருந்து மருத்துவமனை நோக்கி வந்துக் கொண்டிருந்த தர்மதீரனுக்கு, வல்லகியை யாரோ தூக்கிச் சென்று விட்டதாக தகவல் வரவும் அவசர கதியில் மருத்துவமனைக்கு விரைந்து வந்தான்.
ஜிதேஷ் அடித்து தள்ளியதில் பாலாவிற்கு உதடு கிழிந்து இரத்தம் வழிந்தது. தலையிலும் அடிபட்டு வீக்கம் கொண்டிருந்தது.
டாக்டர் அவளுக்கு முதலுதவி செய்தபடி அவளை அமைதிபடுத்த முயன்றுக் கொண்டிருந்தார்.
“ப்ளீஸ் பாலா… கொஞ்சம் சைலண்ட் ஆ இருங்க. போலீஸ் வந்துட்டு இருக்காங்க…. காயத்துக்கு மருந்து போடணும்… கொஞ்சம் கோ-ஆப்ரேட் பண்ணுங்க”, டாக்டர்.
“அந்த தர்மதீரன வரசொல்லுங்க … அவரால தான் வகிக்கு இப்ப இவ்வளவு பிரச்சினை…. அவர் ஏதோ பண்றதுக்கு எங்கள சிக்கல்ல மாட்டிவிட்டுட்டாரு…. வகி எங்க போனாளோ? அவனுங்க என்ன பண்ணாங்களோ …? அய்யோ வகி…. எங்க இருக்க டி? உனக்கு என்னாச்சின்னு தெரியலியே…. நான் என்ன பண்ணுவேன்…. சீக்கிரம் வாடி…. நமக்கு இந்த ஊரும் வேணாம் வேலையும் வேணாம்… நாம நம்ம ஊருக்கே போயிடலாம்…. வகி…. வகி….”, விடாமல் அழுது கரைபவளைக் கண்டு டாக்டரும் நர்ஸும் அவளை அமைதியாக உட்காரவைக்கப் படாதபாடுபட்டனர்.
அச்சமயம் தர்மதீரன் உள்ளே வரவும் எழுந்து சென்று அவன் சட்டையைப் பிடித்து உலுக்கி, “என் வகி எங்க? அந்த ஜிதேஷ் தான் அவள தூக்கிட்டு போனான்… என்ன நடக்குது எங்கள சுத்தி? என் வகி இப்ப இங்க வரணும்…. அவ வரலன்னா உங்கள நான் சும்மா விடமாட்டேன்…. என் வகிய சீக்கிரம் கண்டுபிடிச்சு குடுங்க…..இல்லன்னா உங்க மேல தான் நான் கம்ப்ளைண்ட் பண்ணுவேன் .. ”
“பாலா….. ப்ளீஸ் கொஞ்சம் அமைதியா என்ன நடந்துச்சின்னு சொல்லு….. “, தர்மதீரன் அவளிடமிருந்து தன் சட்டையைப் பிரித்து விலக்கித் தள்ளி நிறுத்திக் கேட்டான்.
“சார்….. பின் பக்க வழியா தான் அந்த பொண்ண கொண்டு போய் இருக்காங்க…. ஆம்னி ஒன்னு பின்பக்க கேட் வழியா போய் இருக்கு… நாங்க பாலோ பண்ணிட்டு போறோம்”, தர்மதீரன் உதவியாளன் விமல் அவ்விடம் வந்து கூறினான்.
“நானும் வரேன் விமல். நம்ம கூட ஒரு டாக்டர் அண்ட் நர்ஸ் ஏத்திக்கலாம்…. இங்க பாலாவுக்கும் சுதாகருக்கும் போலீஸ் ப்ரோடெக்ஷன் ஏற்பாடு பண்ணு…. நம்ம ஹெட்க்கு தகவல் சொல்லியாச்சான்னு கேளு…. ஒரு நிமிஷம் வெளியே வெயிட் பண்ணு வரேன்”, மலமலவென உத்திரவுகளை அடுக்கிவிட்டு காத்திருக்கக் கூறினான்.
அழுதழுது முகம் வீங்கி இருந்த பாலாவை பார்த்து,” பாலா….. உன் பிரண்ட் வல்லகிக்கு எந்த அசம்பாவிதமும் நடக்காது. அதுக்கு நான் பொறுப்பு…. நானே அவள கண்டுபிடிச்சு கூட்டிட்டு வரேன். நீ கொஞ்ச அமைதியா இரு. வல்லகி வீட்டுக்கு பேசினியா?”, எனக் கேட்டான்.
அவன் கேட்கும் போது தான் பாலாவின் தாய் அழைத்தார். அதை எடுத்து ஸ்பீக்கரில் போட்டு பேச சொன்னான்.
“அம்மாடி பாலா…. வல்லகியோட அக்காவ யாரோ கடத்திட்டாங்களாம் டா. அவள காப்பாத்த போன அவங்க அம்மாவ சுட்டுட்டாங்களாம். அவங்க அப்பாவும் ஊர்ல இல்லயாம்…. நீ அவள பாத்துக்க… நான் இங்க நிலவரம் பாத்துட்டு கிளம்பி வரேன். உன் பிரண்ட்ஸ் யாராவது பக்கத்துல இருந்தா போன் குடு டா”, பாலாவின் அம்மா.
“ஹலோ… அம்மா… நான் பாலாவோட ட்ரைனர் பேசறேன். நாங்க இவங்கள பாத்துக்கறோம். நீங்க அங்க பாத்துட்டு எங்களுக்கு தகவல் குடுங்க. கவலை படாதீங்க. நாங்க பாத்துக்கறோம்”, தர்மதீரன் பாலாவின் போனை வாங்கிப் பேசினான்.
“நல்லது சார். வல்லகி முழிச்சிட்டாளா? அவளுக்கு இந்த அதிர்ச்சியான விஷயத்த சொல்லாதீங்க…. அவங்க அப்பாவ நாங்க பாத்து பேசிட்டு உங்களுக்கு சொல்றோம். கொஞ்சம் புள்ளைங்கள பத்திரமா பாத்துக்கங்க சார்… வச்சிடறேன்.. “
உறைந்து போய் அமர்ந்திருந்த பாலாவை தர்மா உலுக்கி நினைவுக்குக் கொண்டு வந்தான்.
“பாலா… பாலா…..பாலா…….”
“ஆஹ்…… என்ன சார் நடக்குது? வகி அக்காவ யார் கடத்தினாங்க? ஏன் இப்படி நடக்குது? வகிக்கு அவங்க அம்மான்னா உயிர் சார்…. அவங்களுக்கு என்னாச்சி தெர்லியே… வகிய காணோம்னு நான் அவங்க அப்பாகிட்ட எப்படி சொல்றது? “, கனமான மனதுடன் வினவினாள்.
“அவங்க அக்கா, குடும்பம் பத்தின விவரம் உனக்கு தெரிஞ்சது சொல்லு. நான் எங்க ஹெட்கிட்ட சொல்லி போலீஸ்க்கு ப்ரசர் குடுக்கறேன்.. ”
“அவ அக்கா பேரு….. ஒரு நிமிஷம் சார்…. “, என எழுந்து சென்று வகியின் போனை எடுத்து வந்து அவர்கள் போட்டோவைக் காட்டினாள்.
“இவங்க தான் வகியோட அக்கா…. பேரு.. “
“சுடரெழில் நாச்சியார்”, தர்மதீரன் அதிர்வுடன் கூறினான்.
“உங்களுக்கு தெரியுமா சார் இவங்கள?”, பாலா குழப்பமாக கேட்டாள்.
“நாங்க பிஜி பண்றப்ப தெரியும். ஒரே காலேஜ்…. நாச்சியாவோட தங்கச்சி தான் வல்லகியா….. அவ இப்ப என்னவா இருக்கா? ஆர்க்கியாலஜி டிபார்ட்மெண்ட்ல தானே வர்க் பண்றா?”, அவசரமாக கேட்டான் ஏதோ மனதில் பிடி எழுந்தது.
“ஆமா சார். எங்கன்னு தெரியாது… ஆர்க்கியாலஜி டிபார்ட்மெண்ட்ல தான் இருக்காங்க.. இப்ப கூட பெரிய ஆர்க்கியாலஜிஸ்ட் ஒருத்தர் கிட்ட அசிஸ்டெண்ட் -ஆ ஜாயின் பண்ணதா வகி சொன்னா.. “
“இந்த போன் நான் எடுத்துக்கறேன். சீக்கிரமே வகியோட வருவேன். அதுவரைக்கும் அவள கடத்தினது உங்க வீட்ல கூட சொல்லாத … புரிஞ்சதா பாலா?”, தர்மா தீர்க்கமான பார்வையுடன் கூற பாலா சரியென தலையசைத்தாள்.
“விமல்…. சுதாகர் இருக்கற ரூம்லயே பாலாவையும் மாத்துங்க.. போலீஸ் மட்டும் கண் முன்னாடி தெரியட்டும். நம்ம ஆளுங்க பத்து பேர் உள்ள வெளியே எல்லா இடத்துலயும் கண்காணிப்போட இருக்கணும். சீக்கிரம் வண்டி ரெடி பண்ணு… ஒரு குரூப் வெளியூர் போகணும். பாஸ்ட் … டைம் இல்ல….”, எனக் கூறிவிட்டு அலுவலகம் நோக்கி விரைந்தான்.
“சோழன் சார்…. ஆர்க்கியாலஜி குரூப் யாரையாவது கடத்தி இருக்காங்களா ?”, பத்தே நிமிடத்தில் வந்தவன் மூச்சு வாங்கியபடிக் கேட்டான்.
“தர்மதீரன்…. என்னாச்சி…?”, சோழன்.
“இப்பதான் சார் தகவல் வந்தது …. பேமஸ் ஆர்க்கியாலஜிஸ்ட் தசாதிபன் கடத்தப்பட்டு இருக்கார். இது அவரோட டைரி…”, என அந்த பார்சலில் இருந்த டைரியை டேபிளில் வைத்தார் மாவழுதி.
“அவரோட டீமையும் கடத்தி இருக்காங்க சார். வல்லகியோட அக்காவும் கடத்தப்பட்டு இருக்காங்க… அவங்களும் ஆர்க்கியாலஜிஸ்ட்… ப்ரோபசர் தசாதிபனோட அசிஸ்டெண்ட். இப்ப தான் தெரிஞ்சது. நம்ம ஆளுங்க ஒரு குரூப் பல்லவபுரம் போகணும். அவரோட டீம்ல வேற யார் யார கடத்தி இருக்காங்கன்னு கண்டுபிடிக்கணும் சார்”, தர்மதீரன்.
“மிஸ்டர் தர்மதீரன்….. இத நாம மட்டுமே செய்ய முடியாது. இன்டெலின்ஸ் ப்யூரோவும் இருந்தா தான் பரவால்ல. எனக்கு ஐ.பி கமிஷனர் பார்க்க இப்ப அப்பாயிண்மெண்ட் கெடச்சி இருக்கு. நீங்க வல்லகியை தேடி போங்க. பின்னாடியே ஐ.பி ஆளுங்களும் வருவாங்க…. என்கூட கான்டாக்ட்-ல இருங்க”, மாவழுதி.
“பல்லவபுரம் யார் போறது சார்?”, தர்மதீரன் ஒருவித தவிப்புடன் கேட்டான்.
“அது நாம இப்ப பாக்க முடியாது தீரன். முதல்ல வல்லகிய பாருங்க. அதுக்கப்பறம் அதபத்தி பேசிக்கலாம்”, என சோழன் பேச்சுவார்த்தை முடித்துவிட்டு எழுந்தார்.
தர்மனும் வல்லகியை காப்பாற்றிவிட்டு அடுத்த கட்ட நடவடிக்கை பற்றிப் பார்த்துக் கொள்ளலாம் என விமலுடன் ஆறு பேர் கொண்ட குழு அங்கிருந்து ஜிதேஷ் சென்ற ஆம்னியை தொடர்ந்துச் சென்றது.
மாலை வரை அந்த ஆம்னி சென்ற தடம் அறிய முடிந்தது. அதற்கு மேல் வனத்திற்கு செல்லும் பாதையில் நின்றனர்.
“எந்த பக்கம் போய் இருப்பாங்க சார்? நாம உள்ள போகணும்னா பாரஸ்ட் ஆபீஸ்ல பர்மிஷன் வாங்கணும். இந்த நேரத்துல குடுப்பாங்களான்னு தெர்ல…”, விமல் சுற்றி முற்றிப் பார்த்துக்கொண்டே கேட்டான்.
“சாருக்கு கால் பண்ணி பேசு.. அவங்க உள்ள தான் போய் இருக்காங்க…. டயர் அச்சு கேட் குள்ள போகுது… வண்டியும் உள்ள தான் எங்கயோ இருக்கணும்”, எனக் கூறியபடி வேலி ஒட்டி பார்வையைச் செலுத்தியபடி கூறினான்.
ஒரு மணிநேர போராட்டத்திற்கு பிறகு முதல் கேட் அனுமதி கிடைத்தது. உள்ளே நான்கு கிலோமீட்டர் சென்றதும் அடுத்த கேட் இருந்தது. அது தான் அடர்வனம் செல்லும் பாதை.
“சார் டயர் அச்சு இந்த கேட் தாண்டி உள்ள போகுது”, விமல் பரபரப்புடன் கூறினான்.
“ம்ம்… இதுக்கு மேல உள்ள போக, ஐ.பி இல்லைன்னா போலீஸ் வரணும்”, எனக் கூறும் போதே ஒரு ஜீப் உள்ளே வந்தது.
உள்ளிருந்து இறங்கியவர்,”ஹலோ .. யார கேட்டு இவ்வளவு தூரம் வந்தீங்க? முதல்ல கிளம்புங்க…. அதான் கம்ப்ளைண்ட் குடுத்தாச்சில்ல போங்க போங்க”, என ஒரு எஸ்.ஐ விரட்டினார்.
“நாங்க டிடெக்டீவ் ஏஜென்சி ஆளுங்க சார். பாத்து பேசுங்க …. நீங்க பாக்கற வேலைய தான் நாங்களும் பாக்கறோம்”, தர்மதீரன் சற்றே உஷ்ணமாக கூறினான்.
“அதுக்கு நீங்களும் நாங்களும் ஒன்னா? முதல்ல கிளம்புங்க… இனிமே நாங்க பாத்துக்கறோம்…”, எஸ்.ஐ.
“மிஸ்டர் தினேஷ்…. இந்த கேஸ்ல காணாம போனது யாருன்னு தெரியுமா?”, தர்மதீரன்.
“யாரோ பாலாவாம்… என்ன எழவு கேஸோ… ஒன்னும் அடக்கமா இருக்கறது இல்ல. எவனையாவது கூட்டிட்டு சுத்தறது அப்பறம் எங்க தாலிய அறுக்கறது.. ”
தர்மதீரன் வாய் திறக்கும் முன், “தினேஷ்….. “, என ஒரு அதட்டலான குரலோடு இறங்கினான் அவன்.
“ஒரு பொண்ண பத்தி எது வேணா பேசலாம்னு பேசுவீங்களா? கடத்தப்பட்டது வல்லகி. பாலா இல்ல. . முதல்ல கேஸ் பைல ஒழுங்கா பாருங்க… “, என உறுமிவிட்டு தர்மதீரன் அருகில் வந்தான்.
“ஹலோ ப்ரோ… நான் யாழினியன்… அசிஸ்டெண்ட் கமிஷனர் ஐ.பி. நீங்க தர்மதீரன் ரைட்?”, எனத் தன்னை அறிமுகப்படுத்தியபடி அருகில் வந்தான்.
“எஸ். இவன் விமல் அண்ட் மை டீம்.. ”
“ஹாய் ஆல்…. இவ்வளவு தூரம் நீங்களே வந்துட்டீங்களே…. இந்த கேட் இல்லன்னா நீங்களே உள்ள போயிருப்பீங்க…. குட் எபர்ட்…. “, என மனதாரப் பாராட்டினான்.
“அவங்க வந்த ஆம்னி இந்த கேட் உள்ள போய் இருக்கு…. நீங்க ப்ரோசீட் பண்ணா உள்ள போலாம். அந்த பொண்ண தூக்கிட்டு வந்து இவ்வளவு நேரமாச்சி… அடிபட்டப்பறம் சுயநினைவும் முழுசா வரல ….. “, தர்மதீரன் நிலையை விளக்கி துரிதப்படுத்தினான்.
“போலாம். இதுக்கு மேல நோ கேட் ஃபார் அஸ். முத்து அண்ட் தினேஷ் வெயிட் ஹியர். டாக்டர் நம்ம கூட வராரா?”, யாழினியன்.
“எஸ். அந்த பொண்ணோட கண்டிஷன் எனக்கு தான் தெரியும். கொஞ்சம் சீரியஸ்”, டாக்டர்.
“ஓக்கே…. லெட்ஸ் கெட் இன். முகுந்தன்….. கேட்ல ஆளுங்கள காணோம் என்னாச்சி…. ”
“எல்லாரும் ப்ளாட் ஆகிட்டாங்க சார். பாட்டில் இருந்தது”, விமல் கேட்டின் அந்த பக்கம் இருந்து குதித்து வந்தான்.
“சரி வாங்க போலாம். காய்ஸ்…. பீ ஷார்ப் அண்ட் கேர்புல். மூவ்….”
யாழினியன் அந்த கேட் ஆபீசர்கள் குடி போதையில் மயங்கி இருப்பதை பார்த்துவிட்டு அவ்விடத்தை ஆராய்ந்தான்.
தர்மதீரனின் கண்ணில் ஒரு வரைபடம் தட்டுப்பட்டது. அதை எடுத்து பார்த்து விட்டு இனியனை அழைத்தான்.
“சார்…. “
“ப்ரோ. கால் மீ இனியன். நோ பார்மாலிட்டீஸ்”
“சரி….. இனியன்… இந்த மேப் இந்த பாரஸ்ட் ஓடதா பாருங்க….”
“ஒன் செகண்ட்”, எனக் கூறிவிட்டு தன் டேப்பை உயிர்பித்து பார்த்தான். மிக சமீபமாக அப்லோட் செய்யப்பட்ட காட்டுப்பகுதியின் மேப் தான். ஆனால் சில குறியீடுகளும் வழிகளும் புதிதாக இருந்தது இருவரையும் யோசனைக்குள்ளாக்கியது.
“இரண்டு பாதை போகுது இனியன். நாம எந்த பக்கம் போறது?”, தர்மதீரன் யோசனையுடன் கேட்டான்.
“இங்கி பிங்கி போடலாமா ப்ரோ”, என சீரியஸாக கேட்டான் இனியன்.
தர்மதீரன் முறைக்கவும், “ஓக்கே ஓக்கே… நான் எப்பவும் மனசு சொல்றத கேப்பேன். சோ நான் லெப்ட்ல போறேன். நீங்க ரைட்ல போங்க… இந்தாங்க வாக்கி…. ஆளுங்க இரண்டு பக்கமும் சஃபுல் ஆகிடுங்க… முகுந்தன் கன்ஸ் அவங்களுக்கு குடுத்து விடுங்க. டச்லயே இருக்கணும் இரண்டு டீமும்”, என அனைத்து முன்னெச்சரிக்கை தகவல்கள் மற்றும் பிற யோசனைகளை தர்மதீரனுடன் கலந்தாலோசித்துக் கூறினான்.
“ப்ரோ… நீங்களும் என்கூடவே வாங்களேன்…. முகுந்தன் அண்ட் விமல் அந்த டீம் லீட் பண்ணட்டும்.. ”
“இல்ல… “, தர்மதீரன் யோசித்தான்.
“ஓக்கே… இன்பிட்வீன்ல ஒரு ஜாயின்ட் வருது அதுல நீங்க இந்த பக்கம் வந்துடணும் டீல் ஆ?”, குறும்புடன் கேட்டான்.
“சரி”, எனக் கூறிவிட்டு தன் ஆட்களை இனியன் சொல்வது போல செய்ய பணித்துவிட்டு அந்த டீம்முடன் சென்றான்.
முகுந்தனுக்கு இனியன் கண்காட்டிவிட்டு முன்னே நடந்தான்.
விமலும் முகுந்தனும் சுற்றியும் பார்வையைச் சுழற்றியபடி வந்தனர்.
தர்மதீரன் கண்களுக்கு இடது பக்கம் ஏதோ தென்பட அதை நோக்கி ஓடினான்.
இருட்டில் ஆம்னியில் ஒட்டியிருந்த லேசர் ஸ்டிக்கர் நிலவொளி பட்டு மின்னியதைப் பார்த்து தான் ஓடினான் தீரன்.
“விமல்…. “, லேசாக குரல் கொடுத்ததும் முன்னே வந்தவன் பைனாகுலரை கொடுத்தான்.
“யாரும் இல்ல போல சார்…. முகுந்தன் சார்…. நீங்க பார்த்தீங்களா…”, விமல் கேட்டான்.
“வண்டிய நிறுத்திட்டு காட்டுக்குள்ள போயிருப்பாங்க சார். வாங்க எதாவது தடயம் கிடைக்குதான்னு பாக்கலாம்”, என முன்னே சென்றான்.
சில மது புட்டிகள், போதை பொட்டலங்கள் தவிர எதுவும் சிக்கவில்லை.
அவர்கள் வல்லகி அருகில் பூந்தொடிகளை தூக்கிச் செல்லும் போது ஒவ்வொன்றாய் விழுந்து நொறுங்கியது அவர்கள் சென்ற வழியை அப்பட்டமாகக் காட்டியது.
சிறிது தூரத்தில் அதுவும் இல்லாமல் போக தர்மதீரன் யோசனையுடன் அங்கிருந்து பிரிந்த நான்கு வழிகளை ஆராய்ந்தான்.
நான்கு வழிகளிலும் காலடி தடங்கள் புதிதாகவே இருந்தது.
இனியன் சென்ற வழியிலும் ஒரு இடத்தில் நான்கு வழிகள் தென்பட்டது. அங்கும் காலடிதடங்கள் புதிதாகவே இருந்தது.
தேடி வருபவர்களை குழப்பவென்றே ஜிதேஷ் செய்த செயல் இப்போது பலன் கொடுத்தது.
நடு இரவு வரையிலும் தேடியவர்கள் ஒரு இடத்தில் சந்திப்பை ஏற்படுத்திக்கொண்டு ஆசுவாசப்படுத்திக் கொண்டனர்.
இவர்கள் இருந்த இடத்தில் இருந்து மூன்று கி.மீ தொலைவில் தான் ஜிதேஷ் குழு தங்கி இருந்தது.
காலத்தின் பிடியில் எது எப்படி நடக்க வேண்டும் என்று இருக்கிறதோ, அது அப்படியே நடந்து தீரும்…..
இவர்கள் ஓய்வெடுத்த நேரத்தில் அவர்கள் வல்லகியை புதைத்துவிட்டு கிளம்பி இருந்தனர்.
நடுவில் ஆந்திரா எல்லை இருந்ததால் எல்லைகடக்க அனுமதி வாங்குவதில் ஏற்பட்ட காலதாமதம், ஜிதேஷ் குழுவை அன்றிரவு தப்பிக்க வைத்தது.