12 – ருத்ராதித்யன்
ருதஜித் அடுத்த விலங்கினை அடையாளம் கண்டு கடத்த மிகுந்த முயற்சிகள் மேற்கொண்டபடி இருந்தான்.
அவனது ஆட்களை பல இடங்களுக்கு மாறுவேடத்தில் அனுப்பி சோதித்தும், ஒருசில ஊரில் உள்ளவர்களிடம் வாய்பிடுங்கவும் வைத்தான்.
“ஏன் பெருசு… நம்ம ஊரு பக்கம் எதாவது வித்தியசமா விலங்கு பொறந்ததா?”, மாட்டுச்சந்தையில் ஒருவன் வந்து அந்த பெரியவரிடம் கேட்டான்.
“வித்தியாசமாவா?”, பெரியவர் யோசனையுடன் கேட்டார்.
“அதான் பெருசு இப்பகூட ஒரு மாடு மூனு கண்ணோட பொறந்திருக்குன்னு பேப்பர்ல டீவில கூட சொன்னாங்களே.. அப்படி எதாவது வழக்கத்து மாறா நடந்துக்கறது, வித்தியாசமான தோற்றம்னு எதாவது இருக்கா?”.
“அப்படியெதுவும் தெரியல… ஆனா போன மாசம் இந்த சந்தைல ஒரு மாடு வாங்கிட்டு போனாங்க.. அத விக்கறப்ப செனையா இல்லை.. வாங்கிட்டு போனவங்களும் செனை சேத்தல… இப்ப அது குட்டி போட்டு இருக்குன்னு ஒருத்தன் சொல்லிட்டு போனான். முன்னயே அது குட்டி போட்டிருந்தா எனக்கு காசாவது கூட்டி கிடைச்சிருக்கும்”, என அங்கலாய்த்தார்.
“அதுல அப்படி என்ன விஷேசமா இருக்கு பெருசு?”, அதில் இருக்கும் வித்தயாசம் அறியக் கேட்டான்..
“அது காங்கேய பசு தான். ஆனா குட்டி இப்பவே காளை கணக்கா இருக்காம். ஒரு மாசம் கூட முழுசா முடியலன்னு நம்ம சாமியய்யா சொன்னாப்டி…. அதோ அங்க போறாரு பாரு சிவப்பு சட்டைல… அவரு தான்… “, என அந்த பெரியவர் சாமியய்யாவை கைக்காண்பித்தார்.
“அவரு எந்த ஊரு?”
“மேகமலைல நம்ம தமிழரசன் ஐயா வீட்ல தான் வேலை பாக்கறாரு… போய் அவரையே கேட்டுக்க… இன்னிக்கு வரேன்னு சொன்ன கிராக்கி இன்னும் காணோம் .. நான் அவங்களுக்கு போன் போடறேன்”, என அவர் எழுந்து சென்றுவிட்டார்.
அவர் எழுந்து சென்றதும் விஷயத்தை ஊர்ஜிதப்படுத்த எழுந்து அவரை நோக்கிச் சென்றான்.
“சாமியய்யா… சாமியய்யா…. என்ன வெறும் கையோட போறீக…. நம்ம சந்தைக்கு வந்துட்டு வெறும்கையோட போலாமா?”, என மிகவும் அறிந்தவன் போல பேச்சை ஆரம்பித்தான்.
“நான் பழைய மாடு ஒன்னு விக்க வந்தேன். வித்துட்டேன்… நீங்க யாரு தம்பி ?”, சாமியய்யா யோசனையுடன் கேட்டார்.
“நானும் மாட்ட வாங்கி விக்கற ஆளு தான். நம்ம வீட்ல புதுசா போட்ட கண்ணுகுட்டி வித்தியாசமா இருக்குன்னு சொன்னீங்களாம். அந்த ஆலமரத்தடி பெருசு சொல்லிச்சு… அதான் என்ன ஏதுன்னு கேட்டுக்கலாம்னு வந்தேன்….”, லுங்கியை அவிழ்த்து லாவகமாக கட்டியபடி கேட்டான்.
“அதுக்குள்ள அந்த முனியன் பரப்ப ஆரம்பிச்சிட்டானா? அது ஒன்னுமில்வ தம்பி அது கொஞ்சம் உருவத்துல பெருசா இருக்கு… வளர்ற வேகமும் அதிகமா இருக்கு… அதான் அந்த ஆளுகிட்ட இப்படி இருக்கு என்ன வகைன்னு கேட்டேன்”.
“நான் அத பாக்க வரலாமுங்களா …. வேற ஊரு பக்கமெல்லாம் போய் பாக்க முடியாது… போன வாரம் கூட முனு கண்ணோட ஒரு கண்ணுகுட்டி பொறந்திருக்கு பேப்பர்ல எல்லாம் போட்டிருந்தாவ…. நம்ம கண்ணு குட்டிய பாத்துக்கறேன்….”, என ஏற்றம் இறக்கமாக பேசினான்.
“அது என் முதலாளி வீடு தம்பி…. அப்படியெல்லாம் தெரியாதவங்கள கூட்டிட்டு போய் காட்டினா எங்க முதலாளி அம்மா திட்டுவாங்க… சரி நேரமாச்சி நான் வரேன் தம்பி”, என அவன் நோக்கம் நிறைவேறாதென பட்டென கத்தரித்துக் கொண்டு கிளம்பிவிட்டார்.
“போ போ… நானே வந்து பாத்துக்கறேன்”, என மனதில் கருவியபடி ருதஜித்திற்கு அழைத்தான்.
“பாஸ்… மேகமலை தமிழன்பன் வீட்டுல புதுசா பொறந்த கண்ணுகுட்டி வித்தியாசமா இருக்காம்…. “
“அத நேர்ல பாத்துட்டு எனக்கு போட்டோ அனுப்பு ஐயப்பா…. சீக்கிரம் ஆளுங்கள வேகமா தேடச்சொல்லு… நமக்கு நேரம் ரொம்ப கம்மியா இருக்கு”, ருதஜித்.
“பசங்க எல்லாம் தூங்காம சுத்திட்டு இருக்காங்க பாஸ். … கவலைபடாதீங்க… கண்டிப்பா பிடிச்சிடுவாங்க…. விளம்பரம் எந்த பக்கம் வந்தாலும் நேர்ல போய் பாக்க சொல்லிட்டேன்…..இன்னிக்கு இராத்திரி நான் பாத்துட்டு உங்களுக்கு அனுப்பறேன்”, எனக் கூறிவிட்டு போனை வைத்தவன் மேகமலை நோக்கி புறப்பட்டான்.
“உன்கிட்ட நான் என்ன சொன்னேன் நீ என்ன செஞ்சிருக்க? நான் நோட் பண்ண சொல்றப்ப எந்த ****** இருந்த?”, ஆருத்ரா சக்தியை பொறிந்துக்கொண்டிருந்தாள்.
“மேம்….. நான் எல்லாம் நோட் பண்ணேன்.. ஒரு நம்பர் சரியா புரியல அதான் டவுட்…”. என பேசிக்கொண்டு வந்தவன் ஆருத்ராவின் முறைப்பில் வாய்பொத்தி, தலைக்குனிந்து கைகட்டி நின்றுக்கொண்டான்.
“ஆழிமதி…. அந்த டாக்குமெண்ட் ரெடியா?”, என தன் இன்னொரு பி.ஏவிடம் கேட்டாள்.
“எல்லாம் ரெடி மேம்… நீங்க ஒருதடவை படிச்சிட்டு சைன் பண்ணா போதும்”, என பவ்யமாக ஒரு பைலை அவளிடம் கொடுத்தாள்.
“நான் ரவுண்ட்ஸ் போயிட்டு வரதுக்குள்ள அந்த ******* டாக்குமெண்ட் ரெடி பண்ணிடு…. சக்தி இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே நிக்கலாம்னு இருக்க…உன் மெயில்ல டீடைல்ஸ் இருக்கு. அத வச்சி கோட் ரெடி பண்ணு…. இந்த தடவை மிஸ் ஆகக்கூடாது”, என அமைதியும் அழுத்தமுமாக கூறிவிட்டுச் சென்றாள்.
“மெயில்ல இருக்குன்னு சொல்றதுக்குள்ள எத்தனை திட்டு…. ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பாஆஆஆஆஆ… முடியல…. என்னை யாராவது தத்து எடுத்துக்கோங்களேன்”, என வாய்விட்டு புலம்பியபடி தன் இருப்பிடம் நோக்கி நகர்ந்தான்.
“சக்தி…. இந்த டாக்குமெண்ட் பார்மேட் இது தானே…”,என ஆழிமதி அவனருகில் வந்து கேட்டாள்.
“மேடம் கிட்டயே இத கேக்கவேண்டியது தானே பி.ஏ மேடம்… ஏன் என்கிட்ட வரீங்க… நீங்க மெயில் அனுப்பினத சொல்லி இருந்தா நான் இவ்வளவு திட்டு வாங்கி இருக்க மாட்டேன்ல”, சக்தி அவளை முறைத்தபடிக் கேட்டான்..
“நான் மதியம் அனுப்பினத நீங்க இப்பவரை பாக்கலன்னா நான் என்ன பண்ணட்டும் சக்தி சார்…. உங்களுக்கு நான் ஹெல்ப் பண்றேன்.. உங்களுக்கு தான் அது தெரியறது இல்ல”, எனக் கூறிவிட்டு தன்னிடத்தில் சென்று அமர்ந்து வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.
சக்தி அவளை ஒரு நொடி கூர்ந்து பார்த்துவிட்டு தன் வேலையில் மும்முறமானான்.
“செழியன்… எனக்கு ஒரு இடத்துக்கு போகணும்… கூட்டிட்டு போயேன்”, என யாத்ரா அவன் எதிரே கைகளில் வாட்ச் கட்டியபடி கேட்டாள்.
அர்ஜுன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, “என்னையா கேட்ட?”, என ஆச்சரியத்துடன் கேட்டான்.
“உங்க பேர் தானே செழியன்?”
“இல்ல… வழக்கமா நீ மட்டும் தானே போவ… புதுசா இருக்கு… “, என அவளைப் பார்த்து புருவம் உயர்த்தினான்.
“அவ தான் கூப்பிடறால்ல போயேன்டா…. கேள்வி மேல கேள்வி கேட்டுகிட்டு”, என கயல் சத்தம் போடவும் பைக் சாவியை எடுத்துக்கொண்டு வெளியே வந்தான்.
“அவள ஒன்னும் சொல்ல விடமாட்டேங்கறாங்க.. நான் என்னமோ அவளை கொடுமை படுத்தற மாதிரில்ல பேசறாங்க”, என முணுமுணுத்தபடி வண்டியை ஸ்டார்ட் செய்தான்.
“ஹலோ மிஸ்டர் செழியன்.. பின்னாடி தள்ளுங்க… வண்டி நான் ஓட்றேன்”, என கூலர்ஸை அணிந்தபடிக் கூறினாள்.
“நீ கூட்டிட்டு போகதானே சொன்ன.. உக்காரு…. “, என அவனும் கூலர்ஸை அணிந்தபடி வண்டியை முறுக்கினான்.
“மாட்டேன்… நீங்க பின்னாடி உக்காருங்க”, என யாத்ரா வாயிற்குள் சிரிப்பை மறைத்தபடி கூறினாள்.
“நானும் போக முடியாது”, என அவனும் சிரிப்பை அடக்கியபடி அவளைப் பார்த்தான்.
இருவரும் கூலர்ஸை தாண்டி தன் காதலின் கண்களை பார்த்துக்கொண்டிருந்தனர்.
“என்னடா வண்டிய ஸ்டார்ட் பண்ணிட்டு கிளம்பாம இருக்க?”, என கேட்டபடி ஆதி அங்கே வந்தான்.
“பாருங்க அத்தான்…. நான் வண்டி ஓட்டறேன்னு சொன்னா அவன் குடுக்கமாட்டேங்கறான்”, என அவன் கைகளை பிடித்து சிறுபிள்ளைப் போல பேசுபவளை ஆதியும் பார்த்துச் சிரித்தான்.
“அவன் குடுக்கலன்னா விடு… உனக்கு ஒரு கிப்ட் வாங்கி இருக்கேன்… பாக்கலாமா?”, என ஆதி அவள் தலையை தடவி கொடுத்படிக் கேட்டான்.
“கிப்ட்ஆ… வாவ்…. அத்தான் நீங்க எப்பவும் ஸ்வீட்…. என்ன கிப்ட்….? எங்க இருக்கு?”, என யாத்ரா சுற்றும்முற்றும் கூலர்ஸை கலட்டிவிட்டு பார்த்தாள்.
“கூலர்ஸ்ஸோட பாத்தா கண்ணு தெரியலியா யாத்ரா?”, எனக் கேட்டபடி நந்து அங்கே வந்தான்.
“டேய்….”, என அர்ஜுனும் ஆதியும் ஒரே நேரத்தில் கூற நந்து கப்சிப்பென வாய் பொத்தி நின்றான்.
“அந்த பயம் இருக்கணும் மிஸ்டர் நந்தன். என் அத்தானும், செழியனும் எப்பவும் என் பக்கம் தான்”, என நக்கலாக கூறினாள்.
“நாளைக்கு ஆதியண்ணா பொண்டாட்டி வந்தா எப்படி நீ அங்க நிக்கறன்னு நானும் பாக்கறேன்…”, என நந்துவும் பதில் கொடுத்தான்.
“அவங்கள நான் தானே செலக்ட் பண்ண போறேன். சோ.. அவங்களும் எனக்கு தான் சப்போர்ட் பண்ணுவாங்க…. நீ எப்பவும் சிங்கிளா தான் இருப்ப”.
“உங்க கூட சேர்ந்தா நான் சிங்கிளா இல்லாம பத்து பேர் கூட மிங்கிளாவா இருக்க முடியும்?”, என முணுமுணுத்துவிட்டு, “அர்ஜுன் அந்த பொண்ணுங்கள மதுரைல விட்டாச்சி… பாலோ பண்ண ஆளையும் போட்டு இருக்கேன்… நெடுமாறன் யாத்ராகிட்ட இத குடுக்க சொன்னான்…”, என ஒரு கவரை அவளிடம் கொடுத்தான்.
“சரி…. அந்த பொண்ணுங்க எந்த லேப்ல வேலை பார்க்கறாங்கன்னு சொன்னாங்க?”, அர்ஜுன்.
“எவிக்ட் ரிசர்ச் லேப் …. மதுரை தாண்டி அறுபது கி.மீல ஒரு பொட்டல் காடுகிட்ட ரோட் உள்ள போகுது… ஆளுங்கள அனுப்பி இருக்கேன்…. நீ நம்ம பாஸ்கிட்ட பேசினியா? இந்த கேஸ் நாம எடுக்கலாமா?”, நந்து.
“பேசிட்டேன்… இத அப்பறம் பாக்கலாம்ன்னு சொல்லிட்டாரு…. உடனே நார்த் – ஈஸ்ட் பாரஸ்ட் போக சொல்லி இருக்காரு… நைட் ப்ளைட் புக் பண்ணிட்டேன்… வந்துடு”
ஆதி அவர்கள் பேச ஆரம்பித்ததும் யாத்ராவை அழைத்துக்கொண்டு மறுபக்கம் சென்று ஒரு ஷெட்டைக் காட்டினான்.
“அதுல என்ன அத்தான் இருக்கு?”, யாத்ரா அதைக் கூர்ந்துப் பார்த்தபடிக் கேட்டாள்.
“போய் பாரேன்”, ஆதி மென்மையாக சிரித்தபடிக் கூறினான்.
“இவ்ளோ சஸ்பென்ஸ் எனக்கு வைக்காதீங்க அத்தான்…. நான் தான் சஸ்பென்ஸ் வைக்கணும்.. நீங்க இல்ல”, என செல்லமாக அவரை திட்டியபடி நடந்தாள்.
“சஸ்பென்ஸ் யார் வேணா வைக்கலாம் … அதை சஸ்பென்ஸா மெயின்டெயின் பண்ண தெரிஞ்சா போதும்… இப்ப சஸ்பென்ஸ் அண்ட் சர்ப்பரைஸ் என் டர்ன்”, என அவளுக்கு மேலும் ஆர்வத்தைத் தூண்டினான்.
“நீங்க வேணா பாருங்க… உங்க லைப்ல நீங்க மறக்கமுடியாத சஸ்பென்ஸ் அண்ட் சர்ப்பரைஸ் நான் தான் குடுப்பேன்… எழுதி வச்சிக்கோங்க”, எனக் கூறிவிட்டு அந்த ஷெட்டை திறந்தாள்.
அதன் உள்ளே ஒரு பெரிய பெட்டி இருந்தது. அது கிப்ட்வ்ரேப் செய்யப்பட்டிருந்தது.
“என்ன இவ்ளோ பெருசா இருக்கு ? குட்டி வீடு செட் அப் செஞ்சி இருக்கீங்களா?”.
“என் அறிவே…. உனக்கு ஏன் மூளை வேலை செய்யறது நின்னுடிச்சி? நீயெல்லாம் ஒரு இன்டெலிஜென்ஸ் டிடெக்டீவ்… “, என ஆதி தலையில் அடித்துக்கொண்டான்.
“அது.. உங்கள பாத்தா தான் அத்தான் வேலையே செய்யமாட்டேங்குது… “, எனக் கண்ணடித்து அவனை வம்பிலுத்தாள்.
” அப்ப அர்ஜுன் பக்கத்துல 100% வேலை செய்யுதா?”, என அவனும் சிரித்தபடிக் கேட்டான்.
“அவன் பக்கத்துல இருந்தா இன்பினிட்டி(infinity) லெவல் அத்தான்…. என் செழியன் எப்பவும் என் எனர்ஜிகிவ்வர்”, எனக் கூறியபடி பேண்ட் பாக்கெட்டில் இருந்த கத்தியை எடுத்து இரண்டு இடத்தில் வெட்ட மொத்தமாக பெட்டி சரிந்து விழுந்தது.
யாத்ராவின் கண்கள் விரிந்தபடி அப்படியே நின்றன…. ஆதி அவளைப் பார்த்து ‘ஓக்கே தானே’ என சத்தம் வராமல் கேட்டான்.