20 – அர்ஜுன நந்தன்
பாலாஜி கம்ப்யூட்டர் ஆன் செய்ததும் ஒரு தகவல் வந்தது. அதைப் படித்ததும் அனைவரும் திகைத்து அப்படியே நின்றுவிட்டனர்.
செந்தில் அதை உடனே பரிதிக்கும், அர்ஜுன் மற்றும் நந்துவிற்கும் அனுப்பச் சொன்னான்.
அதில் அப்படி என்ன தான் இருக்குன்னு நாமலும் கிட்டபோய் பாக்கலாம் வாங்க நண்பர்களே….
“சேப். ஆர்யன். டூ தி சீகுவன்ஸ் பாஸ்ட்”,
என ஒளிரிக்கொண்டு இருந்தன, அனுப்பியது யாத்ரா தான் அதில் சந்தேகமில்லை.
எப்படி எங்கு இருந்து அனுப்பினா? எங்க இருக்கா? என்ன சீகுவன்ஸ்? யாரு இந்த ஆர்யன்? என பல கேள்விகள் ஓடிக் கொண்டு இருந்தது அங்கிருந்த எல்லோருக்கும்.
பரத்,”சார் யாத்ரா மேடம் தானே? எங்க இருக்காங்கனு சொல்லயே”.
“ஹம்ம்…. பரிதியும் இவங்க டீம் ஹெட்ம் இன்னும் வரல. என்ன பண்றது?”, செந்தில் யோசனையாகத் தலையை நீவினான்.
“சார் இப்ப கிளம்பி இருப்பாங்க செந்தில் சார்”, முகில்.
பாலாஜி அமைதியாக தகவல் திரையையே பார்த்துக் கொண்டு இருந்தான்.
அதை கண்ட முகில்,”என்ன பாலாஜி அங்கயே பாத்துட்டு இருக்க?”.
“இந்த தகவல் எது மூலமா அனுப்பினாங்கன்னு யோசிட்டு இருக்கேன் சார்”,பாலாஜி.
“எதாவது மொபைல் ஆர் வேற மெஸேஜ்ஜிங் சைட்ல இருந்து தானே அனுப்பி இருப்பாங்க?”, பரத்.
“இல்ல பரத்.இங்க பாருங்க நான் சிஸ்டம் ஆன் மட்டும் தான் பண்ணேன். ஆன் பண்ணதும் மெஸேஜ் வருது ஆனா மெஸேஜ் அனுப்பி 3 நாள் ஆகுது”, பாலாஜி.
“என்ன 3 நாள் ஆகுதா? நான் நேத்து கூட இந்த சிஸ்டம் ஆன் பண்ணேன் அப்ப எந்த மெஸேஜ்ம் வரல”,செந்தில்.
“அப்படின்னா இன்னைக்கு தான் நமக்கு டெலிவர் ஆகணும்னு பிக்ஸ் செஞ்சு அனுப்பி இருக்காங்க”,பாலாஜி.
“அது எப்படி பாலாஜி அப்படி அனுப்ப முடியும்?”,முகில்.
“முடியும் சார். ஹையர் ஆபிஸ் மற்றும் ஸ்டார் ஹோட்டல்ல நெட்வர்க் ப்ரொவைடர்ஸ் குடுக்கற ஆப்ஸன்ஸ் இது. நம்ம மொபைல்லயே இப்ப வந்துரிச்சி நம்ம பிக்ஸ் பண்ற டைம்ல டெலிவர் ஆகும். ஆனா இத இவங்க எந்த சிஸ்டம்ல அனுப்பினாங்கன்னு தெரியல”, யோசனையுடன் கூறினான் பாலாஜி.
“மெஸேஜ் வந்ததுன்னா அந்த சிஸ்டம் ஐபி அட்ரஸ் பாருங்க”,பரத்.
“ஐபி அட்ரஸ் வரல. வேற ஏதோ நம்பர் பார்மேட்ல இருந்து வந்து இருக்கு .அதான் யோசிச்சிட்டு இருக்கேன் பரத்”, பாலாஜி.
செந்தில் அந்த நம்பர் பார்மேட் பார்த்தான். “இது டிவி கேபிள் நம்பர் பார்மேட். இந்த சிரிஸ் எந்த இடம்ன்னு கண்டுபிடிக்கணும். அது தெரிஞ்சா ஓரளவு கெஸ் பண்ணலாம் யாத்ரா எங்க இருக்கான்னு”.
முகில், பரத்,பாலாஜி மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“சரி நம்ம நெக்ஸ்ட் மூவ் என்ன?”, முகில் செந்திலிடம் வினவினான்.
“அந்த குப்பம் அவங்க கைக்கு போகாம இருக்கணும். அத தான் நானும் பரத்தும் பாத்துட்டு இருக்கோம். உங்களுக்கு ஆர்டர்ஸ் சொல்லி அனுப்பலயா?”,செந்தில்.
“இல்ல. இங்க போன்னு சொல்லி அனுப்பிட்டு திங்க்ஸ் கூட அனுப்பி இருக்காங்க. இங்க வந்து தான் ஆர்டர்ஸ் குடுப்பாங்க. நீங்க சொல்ற டாஸ்க் தான் இப்ப”,முகில்.
சிறிது யோசித்துவிட்டு, “ஓகே, இந்த மெஸேஜ் பத்தி பரிதி அர்ஜுன நந்தன்க்கு சொல்லிடலாம்”, செந்தில்.
செந்தில் பரிதிக்கு அழைத்தான்.
“ஹாய் பரிதி. எங்க இருக்க?”, செந்தில்.
“மதுரை ரீச் ஆகிடோம் செந்தில். சொல்லுங்க என்ன விஷயம்?”,பரிதி.
“யாத்ரா கிட்ட இருந்து மெஸேஜ் வந்து இருக்கு”,செந்தில்.
“என்ன அனுப்பி இருக்கா? எங்க இருக்கா?”,பரிதி ஆவலுடன் வினவினாள்.
“நேர்ல வந்துருங்க மூனு பேரும் பேசலாம்”,செந்தில்.
சரியென பரிதி அர்ஜுன் மற்றும் நந்துவிடம் கூறினாள்.
“காய்ஸ் யாத்ரா கிட்ட இருந்து மெஸேஜ் வந்து இருக்காம். தஞ்சாவூர் வந்துட்டு போங்க”,பரிதி.
இருவரும் சரியெனக் கூற மூவரும் தஞ்சை நோக்கி பயணித்தனர்.
இவங்க தஞ்சை வரதுக்குள்ள நாம யாத்ரா என்ன பண்றான்னு பாத்துட்டு வரலாம் வாங்க….
3 நாளா நம்ம ராங்கி பண்ண அழிசாட்டியம் இவ்வளவு தான்னு இல்ல நண்பர்களே….
“ஜான்… ஜான்….. ஜான்”, யாத்ரா.
“இப்ப என்ன வேணும் உனக்கு?”, கடுப்புடன் ஜான் உள்ளே வந்தான்.
“ஏன் இவ்வளவு கடுப்பா மூஞ்ச வச்சி இருக்க? கொஞ்சம் சிரிச்சிட்டே என்ன னு கேளு பாப்போம்”, யாத்ரா.
“தூக்கிட்டு வந்து இருக்காங்கன்ற நினைப்பு இருக்கா இவளுக்கு? எத்தன தான் கேக்கறா இவ? இவ கேக்கறத வாங்கி குடுக்க சொல்லி பாஸ் சொல்லிட்டு போய்டாரு. மனுசன் எவ்வளவு அவஸ்தை பட்றான்னு யாராவது கண்டுக்கறாங்களா? பேசாம ஒரு ஹைபர் மார்கெட்ல இவள வச்சி இருக்கணும்”, மனதிற்குள் ஜான் பொறிந்துத் தள்ளினான்.
வாயை இளித்துக் காட்டி ,”என்னனு சொல்லு”, ஜான்.
“இங்க வந்து உக்காரு வா”, என அருகில் இருந்த சோபாவைக் காட்டினாள்.
ஜான் சற்று சுதாரிக்கும் முன் கையை இழுத்து உட்கார வைத்தாள்.
“இங்க புக்ல பாரேன். எவ்வளவு பெரிய பொம்மை. இந்த பொம்பைய அந்த சோபால வச்சா நல்லா இருக்கும்ல”, ஒரு படத்தைக் காட்டிக் கேட்டாள்.
அவளை முறைத்துக் கொண்டே அந்த அறையை பார்த்தான். அங்கே கால்வாசி அளவு ரூமில் பொம்மையாக கிடந்தது.
அதுவும் ஒவ்வொரு ஆங்கிளில் சோபா சேர் மெத்தை என… இப்படி இருக்க மீண்டும் ஒரு பொம்மை வாங்க பணம் கேட்டு வைபவ்விடம் சென்றால் அவன் எப்படி கத்துவான் என்று தெரியும்.
“இங்க பாரு பூவழகி. ஏற்கனவே நிறைய வாங்கி குவிச்சி வச்சி இருக்கற நீ. எத்தனை பொம்மை தான் வாங்குவ? அதுல அப்படி என்ன இருக்கு?”, ஜான் இழுத்துப் பிடித்த பொறுமையுடன் வினவினான்.
யாத்ரா வழக்கம் போல முகத்தை தூக்கி வைத்து கொண்டாள். அவளின் நிலை கண்ட ஜானிற்கு மனதும் ஏதோ செய்தது. சிறு குழந்தையென அவள் செய்யும் சேட்டை, முறைப்பு, விறைப்பு, தைரியம் என அவளின் பன்முகம் கண்டு ஜானிற்கு அவளின் மீது ஓர் பாசப்பிணைப்பு உண்டாகி இருந்தது இந்த மூன்று நாட்களில்.
எத்தனை வேலை குடுத்தாலும் திட்டிக் கொண்டே செய்துக் கொடுத்தான் ஜான்.
“சரி என்ன கலர் வேணும் அதுல?”, ஜான் கேக்கவும் துள்ளி குதித்து வெள்ளையும் கருப்பும் கலந்த பான்டா கரடியை காட்டினாள்.
“சரியான பொம்மை பைத்தியம். அதுல என்ன தான் இருக்கு?” , ஜான்.
“வாங்கிட்டு வா நாம ரெண்டு பேரும் பாத்து தெரிஞ்சிகலாம்”, யாத்ரா சிரித்துக் கொண்டே கூறினாள்.
தலையில் அடித்துக் கொண்டு பொம்மையை வாங்கச் சென்றான் ஜான்.
அங்கே வைபவ்யின் அறையில் ஆர்யன் குறுக்கும் நெடுக்குமாக நடந்துக் கொண்டு இருந்தான். ஜானைக் கண்டவன் என்ன என்று கேட்க யாத்ரா கேட்டதைக் கூறினான்.
“அந்த பூவழகி பொம்மை வேணும்னு கேக்கறா பாஸ்”, ஜான்.
“சரி பணம் வாங்கிட்டு போ”,ஆர்யன்.
“இது எத்தனையாவது பொம்மைனு கேளுங்க பாஸ். இதுவரை 15 வாங்கியாச்சி”,வைபவ்.
“எதுக்கு இத்தனை?”, ஆர்யன் புரியாமல் வினவினான்.
“ஒரு டைம் ரூம் வந்து பாருங்க பாஸ். பொம்மை தான் எல்லா சோபா சேர்லயும் இருக்கு. எந்த புக்லயாவது எதாவது பாத்துட்டா உடனே வேணும்னு அடம் பிடிக்கறா”, ஜான்.
ஆர்யன் தன் இதழில் மென்னகையைப் பூசிக் கொண்டான்.
“கொஞ்சம் கூட கடத்திட்டு வந்து இருக்கோம்ங்ற நினைப்பு இல்ல அந்த பொண்ணு கிட்ட”, வைபவ்.
“சரி அப்பா இந்த வாரம் வந்துடுவாரு. அதுவரை கேக்கறத குடுங்க”,ஆர்யன்.
மனதில் அவளைச் சென்று காண ஆவல் கிளம்பியது. பின்னர் பார்க்கலாம் என நினைத்துக் கொண்டான்.
வைபவ் பணம் கொடுத்து அனுப்பிவிட்டு ஆர்யனிடம் சென்று நின்றான்.
“பாஸ்…. ஏன் இந்த பொண்ண இப்படி வச்சிட்டு இருக்கணும். நமக்கு ஆகாதுன்னு ஆனப்பறம் விட்றலாம் இல்லையா போட்டு தள்ளிடலாம்”, வைபவ்.
அப்படி கூறிய வைபவை தீ பார்வை பார்த்தான் ஆர்யன். ஏனோ அவளைக் கொல்ல மனம் வரவில்லை அவனுக்கு ஏதோ ஈர்ப்பு இருந்தது.
“இல்ல வைபவ். அந்த பொண்ணுகிட்ட என்னமோ இருக்கு. எனக்கு கொல்லவும் மனசு வரல. ஷி ஸ் சம்திங் ஸ்பெஷல்”, ஆர்யன் சிந்தித்துக் கொண்டே கூறினான்.
வைபவ்விற்கு ஆர்யனின் பேச்சு புதிதாய் இருந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளாக இவனிடம் பணி புரிகின்றான். இதுவரை அவன் செய்யும் செயலில் குறுக்கே நிற்பவர்களை சிறிதும் யோசனை செய்யாமல் கொலை செய்துவிடுவான் இல்லையேல் நாட்டை விட்டு அனுப்பிவிடுவான். இந்த பெண்ணிடம் மட்டும் இத்தனை கருணை எதற்கு என பல முறை யோசித்தவன் ஆர்யனின் பதிலில் திகைத்து தான் நின்றான்.
“பாஸ் டூ யு வான்ட் ஹெர்?”,வைபவ்.
“தெரியல வைபவ். அவள பாக்கறப்ப நான் தடுமாற செய்றேன். அவள கஷ்டபடுத்த விரும்பல”, ஆர்யன் தன் மனம் யாதென தெரியாத நிலையில் கூறினான்.
வைபவிற்கு சற்று ஆச்சரியமாக இருந்தது. இதுவரை பெண்கள் விஷயத்தில் ஆர்யன் இப்படி ஆனதில்லை.
பெண்ணாசை இல்லாமல் இருந்த ஆர்யனை ஒரு சாதாரண பெண் அசைத்துப் பார்க்கிறாள் என்று தான் நினைத்துக் கொண்டான்.
“பாஸ் அவள லவ் பண்றீங்களா?”, வைபவ்.
“தெரியல வைபவ். ஆனா அவ என்கூட இருந்தா நல்லா இருக்கும்னு தோணுது டா”, ஆர்யன் கூறிவிட்டுச் சிரித்தான்.
இந்த சிரிப்பும் புதிது தான். மனதில் வைபவ் என்ன ஆகுமோ என்கிற நினைப்புடன் அங்கிருந்து நகர்ந்தான்.
இவர்கள் உரையாடிய சமயம் அங்கே தஞ்சாவூரில் பரிதி நந்தன் மற்றும் அர்ஜுன் மூவரும் அந்த வீட்டை வந்தடைந்தனர்.
“வாவ்…. வீடு சூப்பரா இருக்கு. யாரோடது அக்கா?”, நந்து.
“யாத்ரா பிரண்ட் வீடு”, பரிதி.
அர்ஜுன் ஒருமுறை கண்களால் அந்த வீட்டையும் அதன் அமைப்பையும் அளந்தான். சரியான இடம் தான் என மனதில் நினைத்துக் கொண்டான்.
அந்த கதவை திறக்க நந்து கை வைக்கும் சமயம் செந்தில் கதவைத் திறந்து வந்து இவர்களை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றான்.
“வாங்க மிஸ்டர் முகேஷ் நந்தன் , அர்ஜுன். வா பரிதி”, செந்தில்.
“என்ன மெஸேஜ் வந்து இருக்கு பாக்கலாம் வாங்க”, பரிதி.
“இரு அக்கா. பர்ஸ்ட் டைம் வீட்டுக்கு வந்து இருக்கோம் கொஞ்சம் எதாவது சாப்பிட்டு வேலைய ஆரம்பிக்கலாம். என்ன செந்தில் சார் நான் சொல்றது சரிதானே? கொஞ்சம் ஜுஸ் கிடைக்குமா?”, நந்து.
“பொண்ணு பாக்க வந்த மாதிரி பேசரிங்க நீங்க. கண்டிப்பா டின்னர் இருக்கு கவலை வேணாம். இரு பரிதி கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கட்டும்”, செந்தில்.
“பொண்ண பாக்க தானே வந்து இருக்கோம் .இல்லடா அர்ஜுன்?”, நந்து.
அர்ஜுன் அவன் காலை மிதித்துவிட்டு, “இவனுக்கு பசிக்க ஆரம்பிச்சிரிச்சி அதான் ஒலர ஆரம்பிச்சுட்டான். நாங்க தங்க ரூம் எங்கன்னு சொன்னா கொஞ்சம் பிரஷ் ஆகிட்டு வந்துட்றோம்”.
“மாடில ரெண்டு ரூம் இருக்கு அதுல ஒரு ரூம்ல யாத்ரா இருந்தா. நீங்க ரெண்டு பேரும் தனி தனியா இருக்கீங்களா இல்ல ஒரே ரூம் போதுமா?”,செந்தில்.
“நான் யாத்ரா இருந்த ரூம்ல தங்கிகறேன் நோ பிராப்ளம்”,எனக் கூறிவிட்டு மேலே சென்றான் அர்ஜுன்.
பரிதியும் நந்துவும் ஒருவரை ஒருவர் பார்த்துத் தலையசைத்துக் கொண்டனர் அர்த்தமாக.
அங்கு வந்த பரத் பரிதிக்கு வணக்கம் சொல்லிவிட்டு நந்துவிடம் தன்னை அறிமுகம் படுத்திக் கொண்டான்.
“நீ தான் உன் பிகர பாக்காம வேலை செய்ய மாட்டேன்னு சொன்னதா தம்பி?”, நந்து .
பரத் செந்திலையும் பரிதியையும் பார்க்க உடனே செந்தில்,”நான் சொல்லல டா”.
“சாரி தம்பி பிளாஸ்பேக் சொல்றப்ப எல்லாமே சொல்லிட்டேன்”,பரிதி சிரித்துக் கொண்டே கூறினாள்.
பரத் அவளை முறைத்துவிட்டு, “அப்படி இல்ல சார். இன்பர்மேசன் வேணும்னா பாக்கனும்ல”.
“விடு விடு இதுலாம் சகஜம். நீயாவது லவ்வு லவ்வர்ன்னு ஒன்னு வச்சி இருக்க”, என அங்கலாய்த்துக் கொண்டுக் கூறினான்.
“உங்களுக்கு லவ்வர் இல்லையா சார்”,பரத்.
“அப்படி ஒரு நல்ல விஷயம் என் வாழ்க்கைல இன்னும் நடக்கல டா தம்பி. அதுவும் என்கூட ஒருத்தன் இருக்கான் பாரு அவன் வரவிடமாட்டான்”, சலிப்புடன் கூறி முடித்தான் நந்து.
“என்னடா வரவிடல?”,அர்ஜுன் கீழே வந்துக் கொண்டே வினவினான்.
“இல்லடா நீ தப்பு செய்ய விடமாட்டன்னு சொன்னேன்”, சமாளிக்க ஏதோ கூறிவிட்டு ,
“சரி வாங்க போய் அந்த லவ் மெஸேஜ் பாக்கலாம்”, நந்து.
அனைவரும் அவனை பார்க்க, தான் சொன்னதை உணர்ந்து, “சாரி யாத்ரா மெஸேஜ் பாக்கலாம்”,எனக் கூறி முன்னே சென்றான்.
பரிதி அவனை பிடித்து நிறுத்தி, ” அது கிட்சன் டா. இந்த பக்கம் போ”.
“பர்ஸ்ட் டைம் ரூட் தெரியல”, நந்து.
கீழே பாதாள அறைக்கு படிகளின் வழி சென்றனர் அனைவரும்.
அங்கு இருந்த முகிலும் பாலாஜியும் நந்தன் மற்றும் அர்ஜுனுக்கு சல்யூட் செய்தனர்.
அதை ஏற்று தலையசைத்தவர்கள் அந்த கம்ப்யூட்டர் மெஸேஜைக் காட்டச் சொல்ல.
பாலாஜியும் அந்த சிஸ்டம்-ஐ ரிபிரஷ் செய்ததும் இன்னொரு தகவல் வந்தது வேறு வடிவில்….