21 – அர்ஜுன நந்தன்
நம்ம யாத்ரா@பூவழகி பண்ண இம்சைல ஜான் அவ கேட்ட கரடி பொம்மைய வாங்கிட்டு வந்தான்.
“பூவழகி….. பூவழகி”, ஜான்.
“வரேன் வரேன்..”, பூவழகி.
“இந்தா நீ கேட்ட பொம்மை “,என ஒரு ஆள் உயர பாண்டா கரடி பொம்மையை அவளிடம் கொடுத்தான்.
அதைக் கண்டவள் சிறு பிள்ளையென துள்ளி
குதித்து அதை கட்டிக் கொண்டு ஆடிக் கொண்டு இருந்தாள்.
அந்த சமயம் உள்ளே வந்த ஆர்யனின் மேல் மோதி அவனைத் தள்ளி விட்டவள், பொம்மையைப் பிடித்துக் கொண்டு இந்தப் பக்கம் விழுந்தாள்.
ஆர்யனின் பின்னே வந்த வைபவ் ஆர்யனை தாங்கி பிடித்துக்கொண்டு ,”ஏய்…. உனக்கு அறிவு இல்ல? இப்படி தள்ளி விட்ற பாஸ்அ,” எனக் கோபமாக கேட்டான்.
வைபவை புதிதாகக் கண்டவள் ,”ஒரு ரூம்குள்ள வரப்ப கதவை தட்டிட்டு வரணும்ங்கறது உன் பாஸ்க்கு தான் தெரியல. உனக்கும் தெரியாதா?”, கேலியாக வினவினாள்.
“ஏய்… ஒழுங்கா பேசு இல்ல நீ உயிரோட இங்கிருந்து போகமாட்ட”, வைபவ்.
“ஹாஹா…. என் உயிர் போறதா இருந்தா இங்க வந்த அன்னிக்கே போய் இருக்கும். இவ்வளவு ராஜ உபசாரம் எனக்கு செய்ய வேண்டிய அவசியம் உங்களுக்கு என்ன?”, ஒரு புருவத்தை மட்டும் உயர்த்தித் திமிராகக் கேட்டாள்.
அவள் கேட்டதும் சரிதான். இவளை கொல்ல கொண்டு வந்தபின் இவளுக்கு ராஜ உபசாரம் தான் நடந்து கொண்டு இருக்கிறது என மனதில் நினைத்து கொண்டான்.
அதுவரை ஆர்யன் இருவரின் உரையாடலையும் சுவாரசியமாகக் கேட்டுக் கொண்டு இல்லை இல்லை பூவழகியை ரசித்துக் கொண்டு இருந்தான்.
அன்று அவள் அடர் ஊதா நிற டாப்ஸ் மற்றும் வெள்ளை ஜீன்ஸ் அணிந்து கொண்டு அவளின் அடர்த்தியான கூந்தலை இடவாக்கு எடுத்து காதுகளில் முடி படாத வண்ணம் இருபக்கமும் ஹேர்பின் குத்தி பின்னே படர விட்டு இருந்தாள்.
அவளுக்கு ஏற்பட்ட காயங்களும் ஆறி இருந்தது. உதட்டில் மட்டும் இன்னும் சிவப்பேறி அவளின் இதழ் அழகை தூக்கிக் காட்டியது.
ஒப்பனை ஏதும் இன்றியே அவள் பேரழகி என அனைவருக்கும் பறைசாற்றியது. வைபவிடம் உரையாடும் போது அவள் உதட்டை சுழித்தும் கேலியாக புன்னகைத்தும் திமிராக மென்னகைத்ததும் அவனின் மனதில் ஆழமாக பதிந்துக் கொண்டு இருந்தது.
வைபவ் ஆர்யனை ,”பாஸ்…. பாஸ்….”.
“என்னடா?”,ரசிப்பதை தடுத்ததால் கடுப்பில் கேட்டான் ஆர்யன்.
“வந்த வேலைய பாக்கலாம் பாஸ்”, வைபவ்.
“அத தானேடா பாத்துட்டு இருக்கேன்”,என பூவழகியைப் பார்த்தவாறே கூறினான் ஆர்யன்.
“பாஸ்….”,எனப் பொறுமை இழந்து கத்தினான் வைபவ்.
அவன் கத்தலில் சுய உணர்வு பெற்ற ஆர்யன் அந்த அறையைக் கண்டான். சோபா , சேர் , மெத்தை என எல்லா இடங்களும் பொம்மையால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது.
“என்ன இவ்வளவு பொம்மை? நீ என்ன சின்ன குழந்தையா?”,ஆர்யன் பூவழகியிடம் கேட்டான்.
“ பொம்மைனா எனக்கு ரொம்ப பிடிக்கும்“, பூவழகி பொம்மையை ஆராய்ந்துக் கொண்டே கூறினாள்.
“அதுக்குன்னு இத்தனை பொம்மையா?”,ஆர்யன்.
“இந்த ரூம்ல நான் மட்டும் தான் இருக்கேன். போர் அடிக்குது. ஜான்அ கூப்பிட்டாலும் பேச வரமாட்டேங்கிறான். அதான் பொம்மை கூட பேசிட்டு இருக்கேன்”, பூவழகி.
“சரி இங்க நீ இருக்கற வரைக்கும் தினம் கொஞ்ச நேரம் உன்கூட பேசறேன்”, ஆர்யன்.
“ஓகே. எனக்கு படம் பாக்கணும் . அவன்ஜர்ஸ் என்டு கேம்”, பூவழகி.
“ஹே என்ன நீ? கொஞ்சம் இடம் குடுத்தா தலை மேல ஏற பாக்கற”, வைபவ் அவளை அதட்டினான்.
“உங்க பாஸ் இருக்கறப்பவே படம் பாக்கலாம். எனக்கு படம் பாக்கணும் அவ்வளவு தான்”, பூவழகி பிடிவாதமாக நின்றாள்.
“அந்த படம் கேசட்ல அனுப்பி விடறேன் பாத்துக்க”, வைபவ்.
“எனக்கு தியேட்டர் எபக்ட்ல 3டி ல பாக்கணும். மினி தியேட்டர் செட் பண்ணுங்க”, பூவழகி.
“ஹேய் … என்ன நீ? ஓவரா பேசிட்டு போற… கொஞ்சம் கூட பயம் இல்லயா உனக்கு?”, வைபவ்.
“எதுக்கு பயப்படனும்?”,பூவழகி.
“உன்ன கடத்திட்டு வந்து இருக்கோம். என்ன வேணா உன்ன நாங்க பண்ணுவோம்”, வைபவ்.
“கடத்திட்டு வந்து 3 நாள் ஆகுது. நான் வெளியே சுத்திட்டு இருந்தத விட இப்ப வசதியா இருக்கேன். நல்ல சாப்பாடு சாப்பிடறேன். உயிர பத்தி எனக்கு கவலை இல்ல. எனக்குன்னு யாரும் இல்ல. நீங்க கொன்னாலும் என்னைய நினைச்சு கவலைபட உறவும் இல்லை. சோ எனக்கு பயம் இல்லை. இருக்கற வரை நல்லா அனுபவிச்சிட்டு போறேன் “,பூவழகி திமிராக்க் கூறி முடித்து விட்டு சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தாள்.
அவளின் திமிரும் நிமிர்வும் அங்கிருந்த மூவரையும் வியக்கச் செய்தது. இந்த சூழ்நிலையில் வேறு பெண்ணாக இருந்தால் அவர்கள் இருக்கும் நிலையே வேறு. மூவரும் உணர்ந்த ஒரு விஷயம் இவள் சராசரி பெண் அல்ல.
“இன்னும் ஒன் ஹவர்ல படம் பாக்க ஏற்பாடு பண்ணு வைபவ்”, ஆர்யன் பூவழகியை பார்த்தவாறேக் கூறினான்.
“என்ன பாஸ் நீங்க? இப்ப இதுலாம் அவசியமா?”, வைபவ்.
“சொன்னத பண்ணு உனக்கு டைம் போயிட்டு இருக்கு “,ஆர்யன்.
அவள் ஆசைபட்டு அவன் முன் கேட்ட முதல் விஷயம் அவனால் மறுக்க முடியுமா? உடனே ஏற்பாடுச் செய்யச் சொல்லிவிட்டான்.
“வில் ஜாயின் வித் யூ சூன் பேபி”, ஆர்யன் கூறிச் சென்றுவிட்டான்.
அவன் பின்னே வைபவ்வும் அவளை முறைத்துவிட்டுச் சென்றான்.
“என்ன பூவழகி இப்படி பேசிட்ட?”,ஜான்.
“உண்மைய தானே பேசினேன் ஜான். இங்க வா இந்த பொம்மைல என்ன ஸ்பெஷல்ன்னு பாக்கலாம்”, பூவழகி.
அந்த பொம்மையின் துணி, உள்ளே இருக்கும் பஞ்சு வகை என அனைத்தும் பிரித்து பார்த்து பின் வழக்கம் போல ஊசி நூல் வைத்து முன்பு இருந்ததை போலவே தைத்துவிட்டு அதைக் கொண்டு போய் பால்கனி சோபாவில் வைத்தாள்.
“ம்ம்… இது இங்க இருந்தா தான் நல்லா இருக்கு. இங்கயே இரு பாண்டா நான் படம் பாக்க ரெடி ஆகிட்டு வரேன்”, எனப் பொம்மையிடம் பேசிவிட்டு திரும்பினாள்.
“ஜான் வெளிய இரு நான் ரெடி ஆகணும்”,பூவழகி.
சரியென தலையசைத்து ஜான் வெளியே சென்றான்.
அவன் சென்றதும் கதவை அடைத்தவள். பெட்ரூமில் இருந்த சாக்லேட் கரடி பொம்மையின் உள்ளே கைவிட்டு எதையோ எடுத்தாள். அந்த சின்ன ஆன்டனா ரௌடர் அவளே செய்தது. அதைக் கொண்டு போய் பாண்டா கரடி பொம்மை கண் பகுதியில் வைத்து விட்டு ரெடி ஆகத் தொடங்கினாள்.
அழகான புடவை கட்டி தலை கூந்தலை பல ஹேர்பின் குத்தி பின்னே படறவிட்டாள். பின் ஜானை அழைத்தாள்.
“நான் ரெடி. தியேட்டர் ரெடியா ஜான்?”, பூவழகி.
உள்ளே வந்த ஜான் அவளை புடவையில் கண்டு இத்தனை நாட்கள் சின்ன பெண்ணாக நம்மிடம் சண்டையிட்டவள் திடீரென பெரிய பெண்ணாக நிற்பதை உணரவே அவனுக்கு சில வினாடிகள் தேவைபட்டன. ஏனோ அவனுக்கு அவளின் மீது தங்கை உணர்வு ஏற்பட்டது. இவ்விடம் விட்டு இவளை தப்ப வைக்க தன்னால் ஆன முயற்சியைச் செய்ய தன்னுள் முடிவெடுத்துக் கொண்டான்.
“என்ன கோலம் இது பூவழகி?”, ஜான்.
“ஏன் ஜான் நல்லா இல்லையா?”, பூவழகி.
“சுத்தமா நல்லா இல்ல”,ஜான்.
சிறிது யோசித்தவள் ,“அப்ப சூப்பரா இருக்குன்னு அர்த்தம். தேங்க்ஸ் ஜான்”, எனக் கூறி புன்னகைத்தாள் பூவழகி.
அவளை அழைத்துக் கொண்டு வரும்படி அழைப்பு வர ஜானும் இன்னும் நான்கு பேரும் அவளை நடுவில் விட்டுச் சுற்றி நடந்து வந்தனர்.
அவள் நினைத்தது போலவே அது ஒரு ஸ்டார் ஹோட்டல் என்பதை உறுதிப்படுத்தி கொண்டாள். ஆனால் எந்த ஊர் என்று இன்னும் தெரியவில்லை. படம் பார்த்து முடிப்பதற்குள் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு கட்டிக் கொண்டாள்.
அவள் இருந்த தளத்தில் இருந்து லிப்ட் மூலமாக கீழே இறங்கினர். அந்த ஹோட்டலில் மொத்தம் 25 தளங்கள் இருக்கிறது என லிப்ட் பட்டன் காட்டியது. 10வது தளத்தில் இருந்து 5வது தளத்திற்கு அழைத்து வந்தனர்.
அந்த தளத்தில் அறைகள் இருப்பதாக தெரியவில்லை. அந்த தளத்தில் கடை கோடியில் இருந்த ஒரு அறையை நோக்கிச் சென்றுக் கொண்டு இருந்தனர். சுற்றிப் பார்த்துக் கொண்டு வந்த பூவழகி ஆர்யன் ஒரு அறையில் இருப்பதைக் கண்டு இது அலுவலக அறை என தெரிந்துக் கொண்டாள். இன்னொரு அறை மூடி இருந்தது. இரண்டும் எதிர் எதிராக இருந்தது.
அது கான்பிரன்ஸ் ஹால் போல அதை இவள் கேட்டதால் தியேட்டராக மாற்றி இருந்தனர்.
ரெக்ளைனர் சோபா சகிதம் அனைத்து வசதிகளும் இருந்தது. அங்கு நின்றவர்கள் ஆர்யன் வரும்வரை காத்திருக்கச் சொல்லிச் சென்றனர்.
ஆர்யனும் வைபவ்வும் அங்கு வந்து கொண்டு இருந்தனர்.
புடவையில் நின்று இருந்த பூவழகியைக் கண்டு பல நொடிகள் அசையாமல் நின்று விட்டான்.
நடந்து கொண்டு இருந்தவன் திடீரென நின்றதும் வைபவ்,” பாஸ் என்னாச்சி ?”.
“அது பூவழகி தானு?”,ஆர்யன் அவளை கைக் காட்டிக் கேட்டான்.
“ஆமா பாஸ் அவ தான்”, வைபவ்.
“புடவைல ரொம்ப அழகா இருக்கால்ல?”,ஆர்யன்.
“ஏன் இருக்க மாட்டா? அந்த புடவை 20ஆயிரம். நல்லா இல்லாமையா இருக்கும்?”, வைபவ் கடுப்பில் கூறினான்.
“அதுல வர்க் எதுவும் இருக்கறா மாதிரி தெரியலையே டா”,ஆர்யன் அவளின் புடவையை பார்த்துக் கொண்டு கேட்டான்.
“பாஸ் அது ஏதோ ஒரு ரேர் மெட்டீரியல். பிளைன் தான். அவ அது தான் வேணும்னு நேத்து ராவடி பண்ணி ஜான் எடுத்துட்டு வந்து குடுத்தான்”, வைபவ்.
“ஜான்க்கு நல்லா டிரஸ் செலக்சன் சென்ஸ் இருக்குல்ல வைபவ்”, ஆர்யன் அவளின் அழகைப் பார்த்துக் கொண்டே கூறினான்.
“பாஸ்… நாம பொண்ணு பாக்க போகல இப்ப. வாங்க போலாம் “, என இழுத்துச் சென்று சோபாவில் அமர வைத்தான்.
பூவழகி அவன் அமர்ந்த சோபாவில் இருந்து ஒன்று விட்டு அமர்ந்தாள்.
ஜான் அவள் அருகில் நின்று கொண்டான். அதை கண்ட பூவழகி “ இங்க உட்காரு ஜான் “என பக்கத்தில் கைகாட்டினாள். அவன் வேண்டாமென மறுக்க அதை கண்டவள் ஆர்யனிடம் திரும்பி ,”மிஸ்டர் ஆர்யன். இங்க இருக்கற எல்லோரும் உக்காந்து தான் படம் பாக்கணும். நான் எங்கயும் ஓடிட மாட்டேன். வெளியே வேணும்னா உங்க பிஏ லாக் பண்ணிட்டு நிக்கட்டும்”, என வைபவை கேலியாகப் பார்த்துக் கொண்டே கூறினாள்.
வைபவ் பேச வாய் எடுக்கும் முன் ஆர்யன், ”வைபவ் எல்லாரையும் உக்கார சொல்லு. இந்த பிளோர லாக் பண்ணிட்டு வா” ,எனக் கூறினான்.
அவன் கூறியதைப் போலே வைபவ் அனைவரையும் அமரச் சொல்லிவிட்டு அந்த ப்ளோரையும் லாக் செய்துவிட்டு வந்து ஆர்யனுக்கு பின்னால் அமர்ந்தான்.
3டி கண்ணாடி குடுத்ததும் லைட் ஆப் செய்யப்பட்டு படம் ஆரம்பமானது.
அங்கு வந்ததும் தன் தலையில் இருந்த ஹேர்பின்னை அழுத்தியவள் அதில் இருந்த வைபை பைன்டர் ஆன் ஆனது.
அந்த தளத்தில் இருந்த வைபையுடன் இணைந்து அவள் அறையில் இருந்த பொம்மையில் கனெக்ட் ஆகியது.
அந்த படம் முடிய மூன்று மணிநேரம் ஆகும். அந்த வைபை அட்ரஸ் வைத்து அவள் இருக்கும் இடம் தெரிய வைத்து விடலாம் என இந்த ஏற்பாட்டை செய்து இருந்தாள் பூவழகி.
அங்கே பரிதி, நந்து ,அர்ஜுன் அந்த கம்ப்யூட்டர் அறைக்கு வந்து சமயம் சரியாக அவளின் பொம்மையில் இருந்து வந்த சிக்னல் மெஸேஜ் வந்து சேர்ந்தது.
அதைக் கண்ட பாலாஜி உடனடியாக அதை காப்பி செய்து அந்த வைபை நெட்வர்க்கை டிரேஸ் செய்தான். அந்த வைபை அட்ரஸ் இருக்குமிடம் தெரிந்ததும் ஆவலாக திரும்பினான்.
“சார் யாத்ரா மேடம் இருக்கற இடம் தெரிஞ்சிரிச்சி”, என பாலாஜி கூறும் முன் பரத் கூறினான்..
“எங்க இருக்கா?”, செந்திலும் பரிதியும் ஆவலோடு கேட்க .
“ஆந்திர ல இருக்காங்க”, பாலாஜி பதில் சொன்னான் .
ஐவரும் பாலாஜி மற்றும் பரத்தையும் மாறி மாறி பார்த்தனர்.