20 – மீள்நுழை நெஞ்சே
அடுத்த நாள் காலையில் அவளது அறையின் அழைப்பு மணி அலறிக்கொண்டிருந்தது.
வெகு நேரமாக போன் எடுக்காததால் இனியாவும், ரிச்சர்ட் வில்சனும் அவளது அறைக்கு வந்திருந்தனர்.
அரைமணி நேரமாக அடிக்கும் அழைப்புமணியின் ஓசையின் இடையே கலைந்த தூக்கத்தில், கேசம் கூட ஒதுக்காமல் கொட்டாவி விட்டபடி வந்து அறைக்கதவைத் திறந்தாள் துவாரகா.
“என்ன காய்ஸ்… இவ்வளோ சீக்கிரம் வந்து இருக்கீங்க?”, எனத் தூக்கத்திலேயே உளறினாள்.
“ஓஹ் மேன்…. இந்த பொண்ணு இப்படி தூங்கிட்டு பேசினா எவன் வேணா ரூம்ல இருக்கறத தூக்கிட்டு போவான்… இனியா … அவள ப்ரஷ் ஆகி வரசொல்லு”, என ரிச்சர்ட் கூறிவிட்டு அங்கிருந்த சோபாவில் அமர்ந்து தண்ணீர் அருந்தினான்.
மீண்டும் கட்டிலில் படுத்தத் துவாரகாவை இனியா எழுப்பி வாஷ்ரூம் அனுப்பி வைத்துவிட்டு ரிச்சர்ட் அருகில் வந்து, “ரிலாக்ஸ் வில்ஸ்… ஷீ இஸ் பைன்”, என அவனை சமாதானம் செய்தாள்.
“உனக்கு தெரியுமா நான் எவ்வளவு பயந்துட்டேன்னு…. அவ எப்படி தூங்கிட்டு இருக்கா பாரு… நம்மல முழுசா கண்ண தொறந்து கூட பாக்கல… இவள எப்படி தனியா அனுப்பினாங்க? சச் எ கேர்லெஸ் கேர்ள்”, என மனதில் இருப்பதை எல்லாம் கொட்டினான்.
“குட் மார்னிங் காய்ஸ்… என்ன இவ்வளவு சீக்கிரம் வந்திருக்கீங்க?”, தெளிவாகி வந்தும் அதே கேள்வியை கேட்டாள் துவாரகா.
“சீக்கிரமா…. உனக்கு அப்படி தோணுதா இனியா? பாரு… சீ த டைம் … எங்கள எவ்வளவு பயமுறுத்திட்ட தெரியுமா?”, என ரிச்சர்ட் அவளிடம் கோபமாகக் கேட்டான்.
“டைம் ஆ… பதினொன்னு தானே ஆகுது… ஏன் நீ இவ்வளோ டென்ஷன் ஆகற வில்சன்? கூல்”, என மூவருக்கும் ப்ளாக் காபி கலந்தபடிப் பேசினாள்.
“காலைல இவன் கால் பண்ணப்ப நீ என்னமோ உளறி இருக்க… அதுல அவன் பயந்து என்னையும் இழுத்துட்டு வந்து அரைமணிநேரமா காலிங்பெல் அடிச்சிட்டு நிக்கறோம். ஃபோனும் நீ எடுக்கலன்னதும் நானும் பயந்துட்டேன் துவா…. “, இனியா ரிச்சர்ட் வில்சனின் இந்த போக்கிற்கானக் காரணத்தை விளக்கினாள்.
“ஓஹ்… தூக்கத்துல என்ன சொன்னேன்னு தெரியல ஸ்வீட்டி…. வாட்எவர். தேங்கயூ போத்.. எனக்காக இவ்வளவு தூரம் வந்திருக்கீங்க… “, எனச் சிரிப்புடன் இருவருக்கும் காபி கோப்பையைக் கொடுத்தாள்.
“ஐ லவ் திஸ் ஹாஸ்பிட்டாலிட்டி…. சோ பர்கிவ்விங் யூ லிட்டில் பட் (bud)”, எனக் கூறிவிட்டு காபியை இரசித்துக் குடித்தான்.
“ப்ளாக் காப்பி அவ்வளவு பிடிச்சி இருக்கா ரிச்?”, என இனியா சிரிப்புடன் கேட்டாள்.
“எஸ்… இவளையும் தான்”, எனக் கூறிவிட்டு துவாரகாவிடம் திரும்பினான், “என் அபார்ட்மெண்ட்ல ஒரு வீடு இருக்கு.. வந்து பாரு… பிடிச்சா அங்க ஸ்டே பண்ணிக்கோ… நானும் இரண்டு மணிநேரம் ட்ரைவ் பண்ணி வந்து உன்ன எழுப்ப வேண்டியது இருக்காது ராக்ஸ்….”, என சின்ன சிரிப்புடன் கூறினான்.
“ஹாஹா.. தட்ஸ் க்யூட் வில்சன்… கண்டிப்பா வந்து பாக்கறேன்… ஐ ம் ஹேப்பி டூ ஹேவ் எ ஃப்ரெண்ட் லைக் யூ”, எனக் கூறிவிட்டுத் தயாராகச் சென்றாள்.
“அவ என்னை ஃப்ரெண்ட்-ன்னு சொன்னாளா?”, வில்சன் அதிர்ச்சியுடன் கேட்டான்.
“ஆமா வில்ஸ்…. நேத்தே அவ உன்னை ப்ரெண்ட்னு கன்பார்ம் பண்ணிட்டா.. சோ டைம் வேஸ்ட் பண்ணாத”, என இனியா அங்கிருந்த ஒரு பத்திரிக்கையைப் புரட்டியபடிக் கூறினாள்.
“ஓ நோ…. “, எனத் தலைக் கவிழ்ந்து அமர்ந்தான்.
இனியா அதைக் கண்டு சத்தமாக சிரித்தாள். ஏனோ ரிச்சர்ட் வில்சனுக்கு இந்திய பெண்கள் மீது ஒரு ஈர்ப்பு அதிகமாக இருந்தது. ஒரு இந்திய பெண்ணை காதலியாக ஏற்கவேண்டும் என நெடுநாளாக முயற்சித்து வருகிறான். ஆனால் அவனிடம் பழகியதும் நண்பன் ஸ்தானத்தில் அனைவரும் நிறுத்தியது தான் அவனை சோகம் கொள்ளச் செய்தது.
டேட் செல்ல கூட யாரும் ஒப்புக்கொள்ளவில்லை… அதில் அந்த அமெரிக்க ஆணழகனுக்கு பெரும் வருத்தம் தான்.
“காய்ஸ்.. நான் ரெடி… போலாமா?”, எனக் கூறியபடி ஜீன்ஸ் டீசர்ட்டில் வந்து நின்றாள் துவாரகா.
“வாவ்… சச் எ பிஸிக்… “, என இனியா வில்சன் இருவரும் வாய் பிளந்தனர்.
“வாய் மூடுங்க கொசு உள்ள போயிடும்… “
“நிஜமா துவா… யூ ஆர் அமேஸிங்… எப்படி இப்படி மெயின்டெயின் பண்ற?”, இனியா அவளின் திடமான கைகளை பிடித்துக் கேட்டாள்.
“நம்ம ஊர்ல வயல் வேலைல இருந்து கம்பு சுத்திற வரைக்கும் எல்லா வேலையும் பாத்து இருக்கேன் ஸ்வீட்டி… அதான் காரணம்… கம்பு சுத்தறது எவ்வளவு ப்ளக்ஸிபிளிட்டி குடுக்குமோ அதே அளவு திடத்தையும் குடுக்கும்… வீக்லி நாலு நாள் கம்பு சுத்தினா போதும் ஒரு கலோரி கூட எக்ஸ்ட்ரா கொலுப்ப சேரவிடாது… “, எனக் கூறியபடி முன்னே நடந்தாள்.
“வாட் ஷீ இஸ் சேயிங்”, என வில்சன் இனியாவிடம் கேட்டு அறிந்துக்கொண்டான்.
“ஹேய் ராக்ஸ்… எனக்கும் சொல்லி தருவியா?”
“எது?”
“கம்பு சுத்த தான்”
“எனக்கு பிடிச்ச மாறி வீடு புடிச்சி குடு”, சிரிப்புடன் கூறி முன் இருக்கையில் அமர்ந்தாள்.
வில்சன் நேராக இந்திய உணவகம் சென்று வண்டியை நிறுத்தினான்.
“நாட் பேட் வில்சன்… தேங்க்யூ.. வா நீயும் நம்ம சாப்பாடு சாப்பிடு.. பிரியாணி வாங்கி தரேன்”, என அவனையும் அழைத்துக்கொண்டு உள்ளே சென்றாள்.
“அவன் உன்ன கரெக்ட் பண்ண வந்தா நீ அவனுக்கு பிரியாணி வாங்கி குடுத்து கரெக்ட் பண்ற… என்ன ஒரு அருமையான ஆரம்பம்?”, என இனியா சிரித்தபடி இருவரையும் கிண்டல் செய்தாள்.
“வில்சன் நாம் ஃப்ரெண்ட்ஸ் ஆனத கொண்டாட தான் உனக்கு இந்த பிரியாணி.. ஓக்கே ?”, என அவனிடம் தெளிவாகக் கூறிவிட்டு இனியாவிற்கும் பிரியாணி கூறினாள்.
“உனக்கு என்ன சொன்ன?”
“எனக்கு முழுசா க்ரில் பண்ண சிக்கன் வருது… எங்கூர்ல நாங்களே செஞ்சி சாப்டுவோம். செமையா இருக்கும்… இங்க எப்படி இருக்குன்னு இப்ப பாத்துடலாம்….”, என அந்த ரெஸ்டாரண்ட்டைக் கண்களால் சுற்றிப் பார்த்தபடிக் கூறினாள்.
“உன் கண்ணு ஒரு இடத்துல நிக்காம எல்லாத்தையும் கவனிக்குது.. ஆனா தூக்கத்துல மட்டும் நீ எல்லாத்தையும் விட்டுடற ராக்ஸ்”, என வில்சன் சிரித்தபடிக் கூறினான்.
“ஹாஹா.. என்ன பண்ண வில்ஸ்…. தூக்கம் வந்தா நான் மனுஷியாவே இருக்க மாட்டேன்”, எனத் துவாரகாவும் சிரித்தபடிக் கூறினாள்.
“உன்ன எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு… நாம டேட் போலாமா ராக்ஸ்?”, வசீகரிக்கும் புன்னகையுடன் கேட்டான்.
“ஓஹ் காட்…. உன் ஸ்மைல் ரொம்ப நல்லா இருக்கு வில்ஸ்… பட் எனக்கு டேட்-ல இன்ட்ரெஸ்ட் இல்ல… நாம் நல்ல ஃப்ரெண்ட்ஸ்-ஆ இருக்கலாம். நல்லா ஊர் சுத்தலாம்… கிட்ட வா…..”, என அருகில் அழைத்து, “சரக்கு கூட அடிக்கலாம்… ஆனா இந்த சரக்கு விஷயம் மட்டும் எங்க வீட்டுக்கு தெரியாம நீங்க மெயின்டெயின் பண்ணணும்…. டீல்?”, எனக் கடைசி வரிகளை மட்டும் மெதுவாகக் கூறிக் கேட்டாள்.
இனியாவும் வில்சனும் மாறி மாறி பார்த்துக் கொண்டு வாய்விட்டுச் சிரித்தனர்.
“ஏன் சிரிக்கறீங்க ?”, துவா புரியாமல் பார்த்தபடிக் கேட்டாள்.
“நாங்க ஏன் உன் வீட்ல இத சொல்ல போறோம் ராக்ஸ்…? கூல்… சரக்குன்னு சொல்லிட்டா நம்ம வில்ஸ் மிலிட்டரி சீக்ரெட் அண்ட் ப்ராமிஸ மெயின்டெயின் பண்ணுவான்….”, இனியா பிரியாணியை முகர்ந்தபடிக் கூறினாள்.
“நாம ஃப்ரெண்ட்ஸ்”, என வில்சனும் துவாரகாவிற்கு கைக்கொடுத்தான்.
“சூப்பர்… இப்ப நீ பிரியாணி சாப்டலாம் வில்ஸ்… “, என அவனுக்கு பிரியாணி எப்படி சாப்பிட வேண்டும் எனச் சொல்லிக் கொடுத்தாள்.
காரம் தாங்காமல் அவன் உஃப் உஃப் என ஊதவும், தயிர் பச்சடி சாப்பிட வைத்து கம்மியாக குழம்பில் பிரட்டி சாப்பிடக் கூறினாள்.
க்ரில் சிக்கனை மற்ற இருவருடன் பகிர்ந்துக் கொண்டு ஒரு கல் தோசை மட்டும் கூறி சாப்பிட்டு முடித்து வெளியே வந்தனர்.
இம்முறை இனியா பணம் கொடுத்துவிட்டு வெளியே வந்தாள்.
“நல்லா தூங்கியாச்சி, நல்லா சாப்டாச்சி… அடுத்து வீடு புடிக்கற வேட்டை ஆரம்பிக்கலாமா காய்ஸ்”
“எஸ் யூவர் ஹைன்ஸ்”, என வில்சன் இடைவரைக் குனிந்துக் கூறினான்.
“போதும் டா கலாய்ச்சது… வண்டிய எடு”, என அவன் முதுகில் அடித்துவிட்டு காரில் ஏறினர்.
“இங்க பொதுவா லிவ்விங் காஸ்ட் எவ்ளோ ஆகும் ஸ்வீட்டி?”
“கோவிட் முன்ன கம்மியா தான் இருந்தது.. இப்ப எல்லாமே டபுள் ட்ரிபுள் ஆகிரிச்சி ராக்ஸ்… “
” அப்ப சம்பளமும் நமக்கு ட்ரிபுள் செஞ்சிருக்கணும்ல “
“கனவுல தான் நடக்கும் ராக்ஸ் அது… நம்ம மேனேஜர் நமக்கு வர வேண்டிய ஹைக் கூட தராம இன்னும் இழுத்துட்டு இருக்கான்…. ஷேரிங்ல இருந்தா காஸ்ட் அட்ஜஸ்ட் ஆகிடும் இல்லன்னா உனக்கு குடுக்குற சம்பளம் மொத்தம் சரக்குக்கே போயிடும்”, என வண்டியை லாவகமாக ஒட்டியபடி கூறினான் வில்சன்.
“சரி… அப்ராக்ஸிமேட்டா சொல்லுங்களேன்… “
“மினிமம் 3000$ ஆகும் ஒருத்தருக்கு இப்போ…. பார்ட்டி அது இதுன்னு வச்சா இன்னும் இதுல டபுள் ஆகிடும்”, இனியா.
“ஓ மை காட்… எனக்கு இவன் குடுக்கறேன்னு சொன்னதே 8 ஆயிரம் டாலர் தான்… இதுல எங்கிருந்து நான் மிச்சம் பண்ணி ஊருல இடம் வாங்கி வீடு கட்டறது”, எனத் திகைத்துக் கூறினாள்.
“ஊருல வீடு இல்லையா உனக்கு?”, வில்சன் சீரியஸாக முகம் வைத்துக் கொண்டு கேட்டான்.
“இருக்கு ஆனா.. அது என் வீடு இல்ல வில்ஸ்… என் அப்பா வீடு…. எனக்குன்னு ஒரு வீடு நான் இனிமே தான் கட்டணும்”
“சீக்கிரம் கட்டிடலாம் கவலபடாத…. நம்ம கம்பெனில விருப்பம் இருந்தா ரெண்டு ப்ராஜெக்ட் ல வேல பாக்கலாம்… அதுக்கு இன்னொரு பே வரும்… ஆனா உனக்கு ரெஸ்ட் எடுக்க டைம் கம்மியா இருக்கும்… “, இனியா காரை விட்டு இறங்கியபடிக் கூறினாள்.
“ஏரியா நல்லா தான் இருக்கு…. பக்கத்துல எல்லாம் வில்லா போலவே…”, என அக்கம் பக்கம் பார்வையைச் சுழற்றியபடிக் கேட்டாள்.
“ஆமா ராக்ஸ்…. இது கொஞ்சம் இந்தியன்ஸ் இருக்க ஏரியா… அந்த பக்கம் எல்லாம் சொந்த வீடு வாங்கின ஆளுங்க தான் இருக்காங்க… “, வில்சன் விவரம் கூறியபடி முன்னே நடந்தான்.
“அங்க எல்லாம் ரெண்ட் எவ்ளோ வரும்?”
“ஏதேது நீ விலை என்ன ரெண்டு வாங்கி போடலாம்னு கேட்ப போலவே ராக்ஸ்…”, இனியா சிரிப்புடன் கேட்டாள்.
“நீ எக்ஸ்ட்ரா பே பத்தி சொன்னியே அது பத்தி தெளிவா சொன்னா அதுவும் பண்ணிக்கலாம்…. ரெஸ்ட் தானே அத நாம பாத்துக்கலாம். அப்பறம் அது பத்தி சொல்லு ஸ்வீட்டி இப்ப வீடு பாக்கலாம் வா”, என மூவரும் பேசியபடியே லிப்டில் ஏறினர்.
“கேடி தான் நீ”, என இனியா கூறியதும் மூவரும் சிரித்தனர்.
“நீ எந்த ப்ளோர்ல இருக்க வில்ஸ்….?”
“நான் செகண்ட் ப்ளோர்ல இருக்கேன்… மூனாவது ப்ளோர்ல வீடு காலியா இருக்கு… “
“வேற யாரும் அங்க இல்லையா? எவ்ளோ ரெண்ட் வரும்?”, இனியா கேட்டாள்.
“சின்ன வீடு தான்.. ஒரு ரூம், ஒரு கிட்சன் தான்.. சோ 1600$ சொல்றாங்க… இவளுக்கு வீடு பிடிச்சா கொஞ்சம் பேசிக்கலாம்…”, எனக் கூறியபடி அந்த வீட்டின் முன் சென்று நின்று யாருக்கோ அழைத்தான்.
பத்து நிமிடத்தில் வருவதாக அந்த பக்கம் இருந்த நபர் கூறியதால் அந்த காரிடோரில் மூவரும் நடந்துக்கொண்டு இருந்தனர்.
ஓரளவிற்கு விஸ்தீரனமாகவே இருந்தது. அந்த மாடியில் நான்கு வீடுகள் இருந்தன. அதில் இவள் பார்க்க வந்திருக்கும் வீடு மட்டும் ஒற்றை படுக்கையறை உள்ள வீடு. மற்றவை எல்லாம் இரண்டு அல்லது மூன்று படுக்கையறைக் கொண்ட வீடுகள்.
வில்சன் தங்கியிருப்பதும் மூன்று படுக்கையறை கொண்ட வீடு. அவனுடன் இப்போது யாரும் இல்லை தான் ஆனாலும் அவனது அண்ணனும், சகோதரியும் இந்த கிறிஸ்துமஸ் வருவார்கள் என தான் மட்டும் அதில் தங்கியிருக்கிறான்.
“கம்முன்னு உன் வீட்ல ஒரு ரூம் இவளுக்கு குடுத்தா உனக்கும் காஸ்ட் சேவ் ஆகும்ல வில்ஸ்….”, இனியா கேட்டாள்.
“கிறிஸ்துமஸ் வரைக்கும் தானே…. வின்டர் ஆரம்பிச்சதும் என் சிஸ்டர் இங்க வந்துடுவா ஸ்வீட்…. அண்ணனும் இரண்டு மாசத்துல வந்துடுவான்.. இந்த வீடு வசதியா இருக்கு… தவிர ரெண்ட்ல அவங்களும் கொஞ்சம் ஷேர் பண்ணிக்கறாங்க சோ ப்ராப்ளம் இல்ல…”
“சரி சரி…. எங்க இன்னும் ஆள காணோம்?”
“வந்துடுவான் இரு…”, எனச் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே ஒருவன் வந்து வீட்டைத் திறந்தான்.
சிறியதாக ஒரு வரவேற்பறை, ஒரு மாடர்ன் கிச்சன், ஒரு படுக்கையறை அட்டாச்டு பாத்ரூம் வசதியுடன், தனியாக வெளியே ஒரு காமன் பாத்ரூமும் இருந்தது.
படுக்கையறையில் இருந்த பால்கனி வழியாக பார்த்தால் வெளியே இயற்கை காட்சிகள் கண்களை நிறைக்கும் வண்ணம் இருந்தது.
மொத்தத்தில் வீடு அவளுக்கு மிகவும் பிடித்துவிட்டது. 1600 இல் இருந்து 1500$ மாத வாடகை பேசி ஒப்பந்தமும் போடப்பட்டது.
அவளுக்கு தேவையானபடி இடத்தை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். அது தான் அவளுக்கு மிகவும் பிடித்தது.
“எப்ப வீட்டு சாவி குடுப்பாங்க?”
“இரண்டு நாள்ல வீடு க்ளீன் பண்ணிட்டு தருவான். நாளைக்கு வேணா நீ உன் லக்கேஜ் எல்லாம் என் வீட்ல கொண்டு வந்து வச்சிடலாம்… “, வில்சன் குஷியாகக் கூறினான்.
“நீ தானே என் இம்சையெல்லாம் இனி தாங்க போற… ஒரு மாசம் கழிச்சும் இப்படி குஷியோட நீ இருந்தா சரி … இன்னிக்கு லீவ் தானே… எங்கயாவது வெளியே போலாமா? “, என உற்சாகமாகக் கேட்டாள் துவாரகா.
“இங்கிருந்து மால் போகணும்னாலே ஒரு மணிநேரம் ஆகும்”, இனியா சலிப்புடன் கூறினாள்.
“அவ்ளோ தானே…. மெட்ரோல போலாமா? எனக்கும் ஊர பத்தி தெரிஞ்சுகிட்ட மாதிரி இருக்கும்”
“ஸ்டேஷன்க்கு அரைமணிநேரம் ஆகும்”, வில்சன்.
“பஸ் இருக்கே…. வில்ஸ்.. உன் வீட்ல ப்ரெஸ் ஆகிட்டு அப்படியே வாக்ல போலாம்ல…?”, என துவாரகா கேட்டதும் மற்ற இருவரும் புன்னகைத்தபடிச் சரியென்றுக் கூறித் தயாராகக் கிளம்பினர்.