20 – ருத்ராதித்யன்
தேனி நோக்கி சென்றுக் கொண்டிருந்த வாகனத்தில் யாத்ரா வெளியே வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.
இருளில் வரைந்த ஓவியமாக மலைத்தொடரும், இரவின் பனியும், பல செடிகொடி மரங்களின் மணமும் நாசியை துளைக்க, அதனை மெல்ல மெல்ல சுவாசித்தபடி இருந்தாள்.
மேலே நட்சத்திரங்களை பார்க்க மேற்கூரையை திறந்துவிட்டிருந்தாள். அதற்கு மேல் கண்ணாடி கூரை ஒன்றிருந்தது.
ஏற்கனவே சிலுசிலுவென்ற காற்று வீசுவதால் கண்ணாடி மேலடுக்கை திறக்காமல் வானத்தைப் பார்த்துக்கொண்டு வந்தாள்.
அவள் முகம் எதையும் வெளிகாட்டவில்லை. முகத்தில் இரசனையின் பாவம் தான் இருந்தது, ஆனால் அவள் தீவிரமாக சிந்தித்தபடி வருகிறாள்.
ஆதியின் வீட்டில் நிகழ்ந்ததை பீட்டர் கூறியபின் அவளது யோசனை பல யூகத்தை ஏற்படுத்தின.
அர்ஜுன் தற்போது எடுத்திருக்கும் கேஸ், தனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வேலை என அனைத்தும் எதையோ குறிக்கிறது.
ஆதி அவளை அவ்வப்பொழுது பார்த்தபடி வந்தான். மௌனத்தின் கால்கள் நீண்டுக்கொண்டே இருந்தன.
ஆதித்யன் அவள் அவசரமாக அழைத்ததும் ஓடிவந்தான். வீட்டில் யாருக்கும் தகவல் தரவில்லை. அதற்கு முன் இவளுக்கு தேவையானதை செய்துவிட்டு இல்லம் சென்று பார்க்கவேண்டும்.
பீட்டர் சொல்வதை அவனும் கவனித்த பின்னர் பாதுகாப்பை பலப்படுத்த எண்ணினான்.
“யாது….. யார் அவங்க? “, ஆதி பேச்சை ஆரம்பித்தான்.
“தெரியல அத்தான்….. “, வானத்தில் நட்சத்திர கூட்டத்தை கவனித்தபடி கூறினாள்.
“பாம் வச்ச கூட்டமும், நம்ம வீட்டுக்கு வந்த கூட்டமும் ஒன்னா?”
“வாய்ப்பு கம்மி தான்…. ஆனா முழுசா தெரியாம எதுவும் சொல்ல முடியாது அத்தான்”, இப்போது அவன் முகம் பார்த்து பதில் கொடுத்தாள்.
“அடுத்து என்ன பண்ணப்போற?”
“யோசிக்கணும்…. செழியன் கால் எடுக்கலியா அத்தான்?”
“இல்ல…. ஸ்விச் ஆப்னு வருது”, ஆதி யோசனை முடிச்சுக்களுடன் கூறினான்.
“நந்தனுக்கு கூப்பிட்டீங்களா?”
“கூப்பிட்டேன்…. அவனும் எடுக்கல… “
“சரி அப்பறம் கூப்பிடுவாங்க… தேனிக்கு போக இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் அத்தான்?”, முகிலில் மறைந்திருந்த நிலவை பார்த்தபடி கேட்டாள்.
“இன்னும் கொஞ்ச தூரம் தான்… அரை மணிநேரத்துல போயிடலாம்”, என வேகத்தை அதிகரித்தான்.
“மெதுவாவே போங்க அத்தான்… ஜான் கூப்பிடறான்”, என போனை காதில் வைத்தாள்.
“பூவழகி …. எப்படி இருக்க? அடிபட்டுரிச்சாமே? ஏன் அசால்டா இருந்த? எப்படி நீ கவனிக்காம இருந்த? இப்ப எங்க இருக்க? புல்லட் வெளியே எடுத்துட்டியா? இடத்தை சொல்லு நான் வரேன்”, என பதற்றமாக கேள்வி மேல் கேள்வியாக கேட்டான்.
“மூச்சு விடு ஜான்…. நான் தேனி போயிட்டு இருக்கேன்…. தாஸ் கூட வந்த அந்த இரண்டு பசங்களையும் கூட்டிட்டு வா…. தாஸ வீட்ல காவலுக்கு நிறுத்து…. தீரன்கிட்ட யாரும் நெருங்காம பாத்துக்க…. பாரஸ்ட் ஆபீசர் யாருன்னு கவனி… சாமியய்யா பார்வைல எப்பவும் தீரன் இருக்கணும்… ஜாக்கிரதையா இருக்காங்கன்னு வெளியே தெரியக்கூடாது… மதியம் மூனு மணிக்கு தேனிக்கு வந்துடு.. அத்தான் காலைல வீட்டுக்கு வருவாங்கன்னு சொல்லிடு… வேற எதுவும் சொல்லாத”, யாத்ராவும் கடகடவென உத்திரவிட்டாள்.
“இப்ப நீ தான் மூச்சு விட்டு பேசணும் யாது…. “, என்றபடி ஆதி சிரித்தான்.
“சரி பூவழகி…. பத்திரமா இரு… வந்துடறேன்”, எனக் கூறி ஜான் வைத்துவிட்டான்.
“அத்தான் நான் டெல்லி போக வேண்டி இருக்கும்… போயிட்டு நைட் வந்துடறேன்”, மென்னகையுடன் கூறினாள்.
“அடிபட்டிருக்கு யாது…. ஒரு நாள் ரெஸ்ட் எடு”
“வாய்ப்பில்ல அத்தான்… உடனே நான் டார்லிங்க பாக்கணும்… நிறைய சந்தேகம் இருக்கு…. அதுவும் இல்லாம இந்நேரம் கண்மயாவ கடத்தி இருப்பாங்க”, எனக் கூறி முடிக்கும் முன் பரத் அழைத்தான்.
“யாத்ரா மேம்…. கண்மயா சகஸ்ரா மிஸ்ஸிங்… அவங்க வேலை பாத்த லேப் தீப்பிடிச்சி எரியுது…. “, எனக் கூறினான்..
“முழுசா எரிஞ்சி முடிஞ்சிருச்சா இப்பதான் எரிஞ்சிட்டு இருக்கா?”.
“பாதி எரிஞ்சி இருக்கு மேம்…. தீ அணைக்க முடியல…. கெமிக்கல் கலந்திருக்காங்க போல… ஒவ்வொரு பொருளும் முழுசா எரிஞ்சா தான் அணையுது… பாதி கரி ஆகிடிச்சி…. “.
“டிஜிபி இப்ப யாரு?”.
“புது ஆளு மேம்… நமக்கு சரிபட்டு வரமாட்டான்”, அசால்டாக பரத் கூறியதும் யாத்ரா சிரித்தபடி, “உன் பெரியப்பாவ மறுபடியும் போடலாமா டா? அவரு சரிபட்டு வருவாரு”, எனக் கேட்டாள்.
“அய்யோ மேம்…. நான் அப்படி சொல்லல… நீங்க கோர்த்து விட்றாதீங்க…. “, என பதறினான்.
“சரி விடு…. நம்ம ப்ளாக் டீம் இறக்கு… கஜாகிட்ட ரிப்போர்ட் பண்ணிடு”, எனக் கூறி வைத்துவிட்டாள்.
சிறிது நேரத்தில் ஊருக்கு ஒதுக்குபுறமாக இருந்த ஒரு வீட்டின் முன் வண்டி நின்றது.
“யாது…. நீ சொன்னதுல ஓரளவு செஞ்சிருக்கு இங்க… பாரு… மீதியும் இந்த வாரத்துல முடிச்சிடலாம்”, என ஆதி அவளுடன் நடந்தபடி கூறினான்.
“பீட்டர்… அவன பின்னாடி டார்க் ரூம்ல அடைச்சி வை… சாப்பாடு தண்ணி வச்சிடு”, என உத்திரவிட்டபடி வீட்டை அளந்தாள்.
“பைன் அத்தான்…. மீதிய முடிச்சிடலாம்…. நீங்க ரெஸ்ட் எடுங்க… எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு”, என சிஸ்டம் ரூமிற்குள் சென்றாள்.
அவள் கண்களை ஸ்கேன் செய்யத பின்னர் அந்த ரூம் திறந்தது. தஞ்சாவூரில் இருந்ததை விட ஒரு மடங்கு மேம்படுத்தப்பட்ட கணிணிகள், செயலிகள், சாதனங்கள் அங்கே பொருத்தப்பட்டிருந்தன.
அதன் பயன்கள் என்னவென்று நாமும் உடன் பயணித்து அறிந்துகொள்வோம்….
அங்கே நந்தனும், அர்ஜுனும் அருணாச்சல பிரதேசத்தின் வனப்பகுதியில் இருந்தனர்.
ஹூலாக் கிப்பான் (Hoolock Ribbon) வகை குரங்குகள் அந்த வனப்பகுதியில் அதிகமாக இருக்கும்.
அந்த குரங்குகளின் உயிரில்லா உடல்கள் மேல் தோல் எடுக்கப்பட்ட நிலையில், பத்திற்கும் மேற்பட்டு ஆங்காங்கே கிடந்தன.
டில்லியில் இருந்து மீண்டும் ஹெலிகாப்டரில் டோபோரிஜோ எனும் இடத்திற்கு வந்தார்கள். அருணாச்சல மாநிலம் மலை சூழ்ந்த இடம் இது.
வடக்கில் பனிமலைகளும், தென்கிழக்கில் அடர்பச்சைமலைகளுமாக இருக்கும் இடம்.
வடகிழக்கு மாநிலங்களில் இந்த அற்புதமான காட்சிகள் காணலாம். தென்னிந்திய மாநிலங்களில் ஒரு வகை அழகும் வளமும் இருக்கிறதென்றால், வழகிழக்கிலும் அழகு சூழ் வனப்பும், வளமும் இருக்கிறது.
இந்திய நாட்டில் இருக்கும் ஒரே ஏப்(Ape species) தான் ஹூலாக் கிப்பான் குரங்கு வகை.
இதில் ஆண் குரங்கு அடர்நிறத்திலும், பெண் குரங்கு பழுப்பு நிறத்திலும் இருக்கும். குட்டியாக இருக்கும் பொழுது பழுப்பு நிறமாகத்தான் இருக்கும். வளர வளர ஆண் குரங்கிற்கு அடர்கருப்பு நிறமாக முடிகள் வளரும். புருவங்கள் மட்டும் வெள்ளையாக இருக்கும். அதனால் இதை வெள்ளைப் புருவ குரங்கென்றும் கூறுவார்கள்.
அழிந்து வரும் உயிரினங்களில் இதுவும் விரைவில் சேரப்போவதாக வதந்திகள் பரவி வருகின்றன.
“இந்த குரங்க ஏன்டா கொல்றானுங்க? வழக்கமா புலி, சிறுத்தை, கரடி இப்படி தான் கொல்லுவாங்க…. இந்த குரங்கோட தோல் கூடவா யூஸ் பண்றானுங்க? “, நந்தன் தலையை கோதியபடி அவற்றை பார்த்துக்கொண்டே பேசினான்.
“பாக்கலாம்…. அந்த மனுஷனோட உடம்பு எங்க இருக்கு?”, என அருகில் நின்றிருந்தவனிடம் ஹிந்தியில் வினவினான்.
அங்கிருந்து சிறிது தூரத்தில் பழங்குடி மக்கள் வாழும் பகுதிக்கு அருகில் மனிதனின் உடலில் இருந்து தோல் நீக்கப்பட்டு ஒரு உடல் கிடந்தது.
மேல் தோல் மட்டும் நீக்கப்பட்டதால், உடல் முழுக்க இரத்தம் வடிந்து காய்ந்திருந்தது.
நான்கு இடத்தில் சதையுடன் வெட்டி எடுத்திருப்பதைப் போல இருந்தது.
அர்ஜுன் அதைக் கண்டு ஒரு நொடி கண்ணை மூடி தன்னை நிலைப்படுத்திக் கொண்டான்.
இத்தனை ஆண்டுகளில் இப்படி ஒரு உயிரற்ற உடலை அவன் கண்டதில்லை. நந்தன் அர்ஜுனை பார்த்துவிட்டு அருகில் சென்று அந்த தலையின் அடியில் கிடந்த ஒரு பொருளை யாரும் அறியாமல் எடுத்து பாக்கெட்டில் வைத்துக்கொண்டான்.
கதிர் அந்த இடத்திற்கு அப்போது வந்து சேர்ந்தான்.
“கதிர்…. 360° இன்வெஸ்டிகேசன் பண்ணு…. சின்ன விஷயம் கூட நம்ம கண்ல தப்பக்கூடாது…. கேஸ் பைலிங் நான் பாத்துக்கறேன்…. “, என அர்ஜுன் அவனிடம் கூறிவிட்டு நந்தனுடன் சென்றான்.
சார்ஜில் இருந்த அர்ஜுன் போனை ஒருவன் கொண்டு வந்து கொடுத்ததும் ஆன் செய்தான்.
“என்ன இத்தனை மிஸ்டு கால் வந்திருக்கு… உனக்கு செஞ்சிருக்காங்களா பாரு நந்து?”, எனக் கூறியபடி ஆதிக்கு அழைத்தான்.
“ஆமான்டா எனக்கும் கூப்டு இருக்காங்க… நான் இங்க இறங்கினதும் சைலண்ட்ல போட்டுட்டேன்”, எனக் கூறிவிட்டு பாலாஜியை தொலைபேசியில் அழைத்து பேச சென்றான்.
“நான் அனுப்பற பிக் என்னனு பாத்துட்டு சொல்லு”, எனக் கூறிவிட்டு அந்த பொருளை போட்டோ எடுத்து அனுப்பினான்.
அதை பாரன்சிக் அனுப்ப தனியாக பேக் செய்து தன்னுடன் வைத்துக்கொண்டான்.
“சொல்லு ஆதி… இந்த நேரத்துல கூப்டு இருக்க… எதாவது பிரச்சினையா?”, அர்ஜுன் பேசியபடி வேறு பக்கமாக நடந்நு சென்றான்.
“சின்ன பிரச்சினை அஜ்ஜு…. “, என ஆரம்பித்து அவனுக்கு தெரிந்த அனைத்தும் கூறினான்.
“யாத்ரா எப்படி இருக்கா இப்ப? முழிச்சிட்டு இருந்தா போன் குடு டா”, என பதறாமல் பேசினான்.
“ஏன்டா அவளுக்கு அடிபட்டுரிச்சின்னு சொல்றேன் நீ கூலா பேசற…. பதட்டமே வரலியா டா உனக்கு?”, ஆதி அங்கலாய்த்தான்.
“எதுக்கு பதறணும்… அதுலாம் அவளுக்கு ஒன்னும் ஆகாது…. நீ பதறாத…. அவளே எல்லாத்தையும் சமாளிப்பா…. “, என பேசியபடி அங்கே உடலை வேனில் ஏற்றுவதைப் பார்த்துக்கொண்டே பேசினான்.
“உங்க இரண்டு பேருக்கும் கொழுப்பு அதிகமா இருக்குடா…. இரு அவ சிஸ்டம் ரூமுக்கு போனா…. இன்னும் அங்க தான் இருக்காளான்னு பாக்கறேன்…. “, எனப் பேசியபடி கீழ் தரைக்குச் சென்றான்.
டிவி வைத்திருக்கும் இடத்தை தள்ளியதும் உள்ளே நான்கு அடி நடந்து கண்களை ஸ்கேனரில் வைத்ததும் கதவு திறந்தது.
யாத்ரா உள்ளே சில குறிப்புகளை லேப்டாப்பில், டச் கீபோர்ட் கனெக்ட் செய்து, ஸ்மாட்ர் பென் வைத்து இடது கையால் இழுத்து போல்டரில் போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
“செழியனா அத்தான் போன்ல?”, என திரும்பாமல் கேட்டவள் கையை மட்டும் நீட்டி போனை வாங்கிக்கொண்டாள்.
“யாதுமா… உனக்கு சாப்பிட எதாவது கொண்டு வரவா?”,எனக் கேட்டான் ஆதி.
“இப்ப வேணாம் அத்தான்…. பீட்டர வாசல் பக்க ரூம்ல இருக்க சொல்லுங்க…. நீங்க தூங்குங்க… எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு”, என்றபடி போனில் பேச ஆரம்பித்தாள்.
“அவன் அங்க தான் இருக்கான் யாது… நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு… மூனு மணிநேரம் கூட தூங்கலன்னா நான் உன்னை டெல்லி அனுப்பமாட்டேன்…. “, என அவளை அன்பாக மிரட்டிவிட்டு வீட்டை ஒருமுறை சுற்றி வந்து பாதுகாப்பை உறுதிசெய்து கொண்டு ஹாலில் இருந்த சோபாவை கட்டிலாக மாற்றி படுத்துக்கொண்டான்.
“சொல்லுங்க செழியன்…. எங்க இருக்கீங்க? பிரச்சினை பெருசா சின்னதா?”, எனக் கேட்டாள்.
“நமக்கு எப்ப சின்னதா குடுத்து இருக்காங்க செல்லம்…. நீ என்ன புதுசா அடிபட்டு வந்திருக்க…. கவனமா இல்லையா? யாரு வந்தவங்க?”, எனக் கேட்டான்..
“வீட்ல வந்தவங்க கண்மயா சொன்ன ஆளுங்க…. பாம் வச்சது யாருன்னு இன்னும் கன்பார்ம் பண்ணல செழியன்”
“அப்ப கண்மயா?”
“தூக்கிட்டாங்க…. லேப் எரிஞ்சிட்டு இருக்குன்னு பரத் போன் பண்ணான்.. நம்ம ப்ளாக் டீம் இறக்க சொல்லிட்டேன்…. கிடைக்கற அத்தனையும் பத்திரப்படுத்த சொல்லி இருக்கேன்… வேற எதாவது இன்னும் சொல்லணுமா அதுல?”, என பரத் அனுப்பிய படங்களைப் பார்த்தபடி கேட்டாள்..
“ஒரு சின்ன பீஸ் கூட விடாம பாக்க சொல்லு… கஜாகிட்ட நான் அப்பறம் பேசிக்கறேன்…. ஆதிய எப்ப வீட்டுக்கு அனுப்பற? அவனுக்கும் செக்யூரிட்டி போடலாமா?”
“வேணாம் செழியன். அத்தானுக்கு பிரச்சினை இல்லை…. சிவி வீட்ல தான் இருக்கான். குழந்தை பொறந்து இதழியோட தான் தஞ்சாவூர் போவேன்னு சொல்லிட்டான்…. தாஸ்கிட்டயும் அங்கங்க ஆளுங்கள போட சொல்லிட்டேன்….. “
“ம்ம்….. “
“நீ போனதும் மிருகவதை தானே?”, என யாத்ரா மற்றொரு கம்ப்யூட்டர் பார்த்தபடி கேட்டாள்.
“இந்நேரம் எல்லாம் பாத்திருப்பியே…. கவர்மெண்ட் பைல்ஸ் அவ்வளவு அசால்ட்டா நீ ஹேண்டில் பண்றத தான் ஒருத்தனும் கண்டுபிடிக்க மாட்டேங்கறான்”, என அர்ஜுன் சிரித்தபடி கூறினான்.
“எவனும் கண்டிபிடிக்க முடியாது செழியன்.. கண்டுபிடிச்சாலும் கவலை இல்லை…. நம்ம இரண்டு பேரும் ஒரே புள்ளிய நோக்கி தான் போறோமா?”, என கேட்டு அமைதியானாள்.
“இருக்கலாம்…. இல்லாமலும் போகலாம்…. நான் அடுத்து நரேன்கிட்ட ரிப்போர்ட் பண்ணிட்டு தான் என்ன பண்றதுன்னு பாக்கணும்…. “
“அவனபத்தி பேசாத செழியன்…. பலிஆடு வேணுமேன்னு அவனை விட்டு வச்சிருக்கேன்… அவன் குழந்தைக்காகவும் தான்… பாப்பா செம்ம க்யூட்ல”
“நமக்கும் கூட க்யூட்டா ஒரு குழந்தை வரதுக்கு ஏற்பாடு பண்ணலாம்… நீ தான் என்னை கிட்டவே விடமாட்டேங்கறியே”, என குரலில் கிறக்கம் காட்டினான்.
“போன வேலைய முதல்ல பாருங்க மிஸ்டர் நாகார்ஜுன இளஞ்செழியன்….. வேலை நேரத்துல ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்கறது தப்பு”
“அதுக்காக வேலைய மட்டுமே பாக்கறதும் தப்பு ரது டார்லிங்….. நீ அன்னிக்கு புடவைல எவ்வளவு அழகா இருந்த தெரியுமா? அப்படியே சொக்கிட்டேன் டி செல்லம்…. ஒரு உம்மா கூட நீ குடுக்க மாட்டேங்கற… என்னையும் குடுக்க விடமாட்டேங்கற…. இதுலாம் அநியாயம் தெரியுமா? அவனவன் லவ் பண்றப்ப என்னென்னமோ பண்றான்…. நான் மட்டும் இப்படி இருக்கேன்”, என போலியாக குரலில் வருத்தம் காட்டி நாடகம் ஆடினான் கள்வன்.
“நந்தன் பக்கத்துல இல்லையா இவ்வளவு நேரமா பேசற…. இந்நேரம் அவன் வந்திருக்கணுமே”, என யாத்ரா சிரித்தபடி கேட்டாள்.
“அவன் உன்கிட்ட பேச ஆரம்பிச்சதும் வந்துட்டான்…. அவன் தோள் மேல கைய போட்டு அவன் வாய மூடிட்டு தான் பேசிட்டு இருக்கேன் ரது டார்லிங்”, என பதிலளித்தான்.
“அடப்பாவி…. நான் அப்பறம் கூப்பிடறேன்…. சாயத்திரம் டெல்லி வரேன்… மீட் பண்ணலாமா?”
“லாமே…. பண்ணலாமே….. “, என அவன் குஷியுடன் பதில் கொடுத்தான்.
நந்தன் தலையில் அடித்தபடி அர்ஜுனையும் நான்கு அடி அடித்து விட்டு இழுத்துக் கொண்டு போனான்.