22 – அகரநதி
அறையில் இருந்து வெளியே வந்த அகரனைக் கண்ட நதியாள் தன்னை மறந்து அவனை இரசிப்பதை முதல் முறையாக உணர்ந்தபடி அவனை ஆராய்கிறாள்.
ஆறடிக்கும் அதிகமான உயரம், சற்றே அழுந்த கிள்ளினால் கூட சிவந்துவிடும் நிறம், ஆட்களை துளைத்தெடுக்கும் கண்கள், திடகாத்திரமான உடல், அகன்ற தோள்கள், நடந்து வரும் தோரணையில் நிச்சயம் அனைவரையும் கொள்ளை கொள்ளும் கள்வன் தான்.
இத்தனை நாட்கள் பள்ளியில் இருந்த அகரனாக பார்த்தவள் இன்று முழு ஆண்மகனாக எதிரில் வருபவனைக் கண்களால் அளந்தபடி இரசித்துக்கொண்டு இருந்தாள்.
“வாங்க மாமா. வா நதிமா.. வாங்க எல்லாரும்”, என அருகில் வந்து அனைவரையும் வரவேற்றான் அகரன்.
“வரேன் தம்பி. எப்படி இருக்கீங்க? பிரயாணம் சௌக்கியமா இருந்துச்சா?”, கண்ணன்.
“நல்லா இருந்தது மாமா. நதி பக்கத்துல இருக்கறப்ப நமக்கு என்ன குறைச்சல்?”,அகரன் கூறி அழகாய் அவளைக் கண்டுப் புன்னகைத்தான்.
அவனது புன்னகையில் தன்னைத் தொலைத்தவள் அடுத்த நொடி அதே புன்னகையில் தன்னை மீட்டும் கொண்டாள்.
“ப்ப்பா….என்னா ஸ்மைல்…. நதி இது ரொம்ப தப்பாச்சே…. இத்தனை நாள் இல்லாத அட்ராக்சன் இப்ப ஏன் அகன் மேல வருது? தப்பு தப்பு…. கான்சென்டிரேட். டைவர்ட் ஆகாத”, எனத் தனக்குள் தன்னைத் திட்டிக்கொண்டாள் நதி.
“ஆமா. அவ இருந்தா பேசிட்டே வருவா நமக்கும் அலுப்பு தெரியாது. சரண் என்னாச்சி அமைதியா நிக்கற?”, கண்ணன்.
“ஒன்னுமில்ல சித்தப்பா. வாங்க உள்ள போலாம். நதி உன் பிரண்ட்ஸ்அ கான்பிரன்ஸ் ரூம்ல உக்கார வச்சிட்டு டாகுமென்ட்ஸ் கலெக்ட் பண்ணிட்டு வா”, எனக் கண்ணனை அழைத்துக் கொண்டு தங்களின் அலுவலக அறைக்குச் சென்றான் சரண்.
“இப்படி வாங்க மிஸ் நதியாள். நான் ஸ்வப்னா”, எனக் கை நீட்டினாள்.
“ஹாய். நைஸ் டு மீட் யூ”, என நதியாளும் கைக்குழுக்கினாள்.
மற்றவர்களையும் அறிமுகப்படுத்தி விட்டு சரண் கூறியதைப் போல, அவர்கள் கொண்டு வந்த டிசைன்ஸ் மற்ற டாகுமென்ட்ஸ் ஐ வாங்கிக்கொண்டு ,ஸ்வப்னாவுடன் அகரனின் அறைக்குச் சென்றாள் நதி.
“மே ஐ கம் இன்”, நதியாள்.
“எஸ்”, சரண்.
உள்ளே வந்த நதியைக் கண்ட அகரன்,” ஹே நதிமா நீ பெர்மிஷனெல்லாம் கேக்க வேணாம். வா வா”,என அழைத்துத் தன்னெதிரில் அமர்த்தினான்.
“என்ன சாப்பிடறீங்க மாமா?”, அகரன்.
“ஒன்னும் வேணாம்ப்பா. மதியம் சாப்டதே இன்னும் அப்படியே இருக்கு. குழந்தைங்க நல்லா சமைச்சி இருந்தாங்க நானும் சேத்தி சாப்டுட்டேன்”, கண்ணன்.
“அதுல்லாம் முடியாது சித்தப்பா. முதல் தடவை நம்ம ஆபீஸ் வந்து இருக்கீங்க. எதாவது சாப்டே ஆகணும். நான் ஜூஸ் சொல்றேன்”, என சரண் இன்டர்காமில் அழைத்து ஜூஸ் அனைவருக்கும் கொடுக்கச் சொன்னான்.
“அப்பறம் தொழில் எப்படி போகுது?”, கண்ணன்.
“நல்லா போகுது மாமா. இப்ப 3 ஸ்டார் ஹோட்டல் கட்ட பிராஜெக்ட் கிடச்சி இருக்கு”,அகரன்.
“ரொம்ப சந்தோஷம். நல்லா தரமா வேலை செஞ்சி குடுத்து வாடிக்கைகாரங்கள திருப்தி படுத்தினா என்னிக்கும் நம்மள தான் தேடி வருவாங்க”, கண்ணன்.
“எல்லாம் உங்கள மாதிரி பெரியவங்க ஆசிர்வாதம் சித்தப்பா”, சரண்.
“உங்க இரண்டு பேரோட உழைப்பு தான் சரண் முக்கிய காரணம். உங்கப்பா எவ்வளவு கவலை பட்டுட்டு இருந்தாரு தெரியுமா உன்னபத்தி. இப்ப உன்னபத்தி கவலையே இல்லை ஜாலியா அண்ணன் வயலை பாத்துட்டு அண்ணிகூட சந்தோஷமா இருக்காரு. இதே போல நீங்க இரண்டு பேரும் கடைசி வரைக்கும் ஒத்துமையா இருக்கணும்”, கண்ணன்.
“நிச்சயமா மாமா. என் மச்சான விட்டுட்டு என்னாலயும் இருக்கமுடியாது”, என நதியைப் பார்த்தபடிக் கூறினான் அகரன்.
“அடேய் வார்த்தை எனக்கு அர்த்தமும் பார்வையும் அவளுக்கா?”, சரண் அகரனின் காதைக் கடித்தான்.
“கம்முனு இருடா”, அகரன்.
“என்ன தம்பி சரண் என்ன சொல்றான்?”, கண்ணன்.
“ஒன்னுமில்ல மாமா. நதியாள் கொண்டு வந்த பைல் பாக்கலாமான்னு கேட்டான்”,அகரன் சமாளித்தான்.
“ஆமா. முதல்ல அத பாருங்க. வந்ததே அதுக்காக தானே. உங்க பார்வையில இருந்தா எங்களுக்கும் பயம் இல்ல. பசங்கள நல்லா பாத்துக்கோங்க. கத்துக்க தயாரா இருக்காங்க கத்துகுடுங்க”, கண்ணன்.
“கண்டிப்பா மாமா. நதிமா நீ இங்க வச்சிட்டு முன்ன போ. நாங்க கொஞ்ச நேரத்துல வரோம்”, அகரன்.
“சரி”, எனக் கூறிவிட்டு நதியாள் விட்டால் போதுமென வெளியே ஓடினாள்.
“ஏன் இப்படி ஓடறா? ஏதோ சரியில்லை”, சரண் தனக்குள் கூறிக்கொண்டான்.
“சரண்”, அகரன்.
“ம்ம். சித்தப்பா… நதியாளையும் நம்ம கம்பெனில பார்ட்னரா சேத்துக்கலாம்னு நாங்க விருப்பப் படறோம். உங்க அபிப்ராயம் என்ன?”, சரண்.
“என்னப்பா திடீர்னு? அவ இன்னும் படிப்பையே முடிக்கல. மேல படிக்கணும்னு சொல்லிட்டு இருக்கா”, கண்ணன் சற்றுத் தடுமாறினார்.
“அது எல்லாம் நாங்க பாத்துக்கறோம் மாமா. அவ ஆசைபட்டது படிக்கட்டும் செய்யட்டும். படிச்சிட்டு இன்னொருத்தர்கிட்ட அவ வேலை செய்றத விட சொந்த இடத்துல வேலை செஞ்சா நல்லது. அவளுக்கு எல்லாம் சொல்லி குடுக்க நாங்க இருக்கோம். அவ சொந்த கால்ல நிக்கணும்னு ஆசைபடறா. இந்த ஒரு வாரத்துல அத நாங்க நல்லா புரிஞ்சிகிட்டோம். அவளுக்கும் நிறைய திறமை இருக்கு. அவளும் இதுல பார்ட்னரா இருந்தா இன்னும் நல்லா வருவா”, அகரன் .
“அதில்லை தம்பி . இந்த தொழில் முழுக்க முழுக்க உங்க இரண்டு பேரோட உழைப்பு இதுல திடீர்னு நதியாள பார்ட்னரா சேத்தா சரி வருமான்னு யோசிக்கறேன்”, கண்ணன்.
“சித்தப்பா. நதியாள எப்பவும் நாங்க எங்க பக்கத்துலயே வச்சி பாக்கணும்னு ஆசைபடறோம். எதிர்காலத்துல அவ புதுசா எத்தனை தொழில் எத்தனை கம்பெனி ஆரம்பிச்சாலும் எங்களுக்கு சந்தோஷம் தான். ஆனா இதுல அவளும் எங்க கூட இருந்தா நாங்க ரொம்பவே சந்தோஷப்படுவோம். யாள் குட்டி எப்பவும் எங்க கூடவே இருப்பா”, சரண்.
“வீட்ல ராதாகிட்ட கலந்து பேசிட்டு சொல்றேன். நீங்களும் வீட்ல பெரியவங்கள கேளுங்க. எல்லாம் கலந்து பேசி அப்பறம் முடிவுக்கு வரலாம். இப்ப என்ன அவசரம் ?” கண்ணன்.
“மாமா. இப்ப அவ கம்பெனில பார்ட்னர் ஆனாலும் அத உடனே நாங்க சொல்லப்போறது இல்ல. இங்க அடிமட்டத்துல இருந்து வேலை பாத்து அவ கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு. அப்ப தான் நிர்வாகம் பண்ண முடியும் எதிர்காலத்துல. இப்ப மத்த லீகல் ப்ரொசீஜர் எல்லாம் முடிச்சிட்டு அவ படிப்ப முடிச்சிட்டு கம்பெனிய தனியா நடத்தற அளவுக்கு வந்தப்பறம் சொல்லிக்கலாம். அவ உழைப்புக்குன்டான ஊதியமும் மதிப்பும் அவளுக்கு முழுசா கிடைக்கும். வெளியே உழைப்ப வாங்கிட்டு பாதி ஊதியம் கூட குடுக்க மாட்டாங்க. அவளுக்கு பெரிய கனவு இருக்கு அதுக்கு இந்த சம்பாத்தியம் உதவியா இருக்கும்”, அகரன்.
“நாங்க ஏற்கனவே வீட்ல பேசிட்டு தான் இத உங்ககிட்ட கேக்கறோம் சித்தப்பா”, சரண்.
“என்னப்பா இப்படி தடாலடியா கேட்டா நான் என்ன சொல்றது? நான் ஊர்ல எல்லார்கிட்டயும் பேசிட்டு சொல்றேன். அப்பதான் எனக்கும் மனசுக்கு நிம்மதியா இருக்கும்”, கண்ணன் அத்துடன் இந்தப் பேச்சை முடித்து கொள்ளலாம், மேலும் வளர்க்க வேண்டாம் எனத் தனது பேச்சை முடித்தார்.
“என்னிக்கு இருந்தாலும் நதியாள் எங்க கம்பெனி பார்ட்னர் தான். நாங்க முடிவு பண்ணிட்டோம். டாகுமென்ட்ஸ் ரெடி பண்ணிட்டு நதியாள் இங்க ஜாயின் பண்றப்போ சைன் வாங்கிடுவோம். எந்த மறுப்பும் நீங்க சொல்லக்கூடாது”, என சரணும் அகரனும் கோரசாய் கூறினர்.
கண்ணன் என்ன சொல்வதென புரியாது யோசனையாக அமர்ந்து விட்டார். பின் அகரனும் சரணும் தனது அலுவலக ஆட்களை வைத்து நதியாள் கொண்டு வந்த பைல்களை பிரித்து, யார் யாருக்கு எந்த எந்த கேடகிரியில் பிராஜெக்ட் குடுத்து வேலை வாங்கலாம் எனக் கலந்துப் பேசி, அதைத் தனியாக சார்ட்லிஸ்ட் செய்து வைத்தனர்.
அங்கிருந்து சென்ற நதியாள் தன் நண்பர்கள் கூட்டத்துடன் ஐக்கியமாக முடியாமல் தனக்குள்ளே தவித்தபடி அவர்கள் பேசியதைக் கவனியாமல் அமர்ந்து இருந்தாள்.
“ஹேய்…யாள்…. யாள்…. இங்க பாரு”, மீரா.
“ஹேய் யாள்…. என்னாச்சி ஏன் அமைதியா இருக்க?”, ஸ்டெல்லாவும் ரிஸ்வானாவும் அவளை உலுக்கினர்.
“ஹான்…என்ன ரிஸ்?”, நதியாள் திடுக்கிட்டுக் கேட்டாள்.
“எந்த உலகத்துல இருக்க நீ? நாங்க இவ்வளவு நேரம் உன்கிட்ட தானே பேசிட்டு இருக்கோம். எதையும் நீ கவனிக்கலையா?”, மீரா.
“இல்ல. வேற யோசனைல இருந்தேன். என்ன விஷயம் இப்ப சொல்லு”, நதியாள்.
“திலீப் எருமைக்கு ஸ்டைபன் இருபது ஆயிரம் வேணுமாம். உன்ன சரண் சார்கிட்டயும் அகரன் சார்கிட்டயும் பேசுன்னு சொல்லிட்டு இருக்கான்”, ஸ்வப்னா.
“ஏன் கம்மியா கேக்கற திலீப் ? இன்னும் ஐம்பது ஆயிரம் சேத்தி கேக்கலாம்ல?”, நதியாள் உதட்டில் சிரிப்பையும் கண்களில் கோபத்தையும் நிறுத்திக் கேட்டாள்.
“அது கொஞ்சம் அதிகமா இருக்கும் யாள். நீ இருபது ஆயிரம் மட்டும் பிக்ஸ் பண்ணிட்டன்னு வை உனக்கு ஸ்பெஷல் ட்ரீட் தருவேன்”, திலீப்.
“சஞ்சய் அவன கொஞ்சம் பிடிச்சிகோவேன்”,எனக் கூறியபடி எழுத்து திலீப் அருகில் வந்தாள் நதி.
“ஏய்…. பேச்சு பேச்சா தான் இருக்கணும். இப்ப எதுக்கு நீ சட்டைய மடக்கற? நான் என்ன கேட்டுட்டேன் இப்ப?”, திலீப் திக்கித் திக்கித் தப்பிக்க வழியறிய துலாவியபடிக் கூறினான்.
எங்கே தப்பிக்க? சஞ்சய் தான் இறுக்கி பிடித்தபடி அவனை கட்டியிருந்தான், ஒரு பக்கம் ஸ்டெல்லா அவன் தப்ப முடியாதபடி அங்கிருந்த சேர்களை அவனைச் சுற்றி அடுக்கினாள்.
“ஏன் இந்த கம்பெனியவே கேளேன்…. போனா போகுதுன்னு இருக்கற அரியர்ஸ் அ கண்டுக்காம பிராஜெக்ட் செய்ய உனக்கு ஒரு இடத்த காட்டினா இருபது ஆயிரம் கேப்பியா நீ? பிஹெச்டி பண்றவனுக்கே பத்தாயிரம் கிடைக்கறது இல்ல இப்ப. உனக்கு டிவன்டி கேக்குதா?”, என நதியாள் அவனின் முதுகில் தபேளா வாசித்தாள். அவளைத் தொடர்ந்து மற்றவர்களும் தபேளா வாசித்தனர்.
“அய்யோ அம்மா…. நான் குடுக்கறத கொஞ்சம் சேத்தி குடுத்தா நம்ம வீட்டு செலவுக்கு ஆகும்னு தானே கேட்டேன். அதுக்கு இப்படி அடிக்கறீங்க… உங்களுக்கும் சேத்தி தானே யோசிச்சி கேட்டேன். ஸ்டெல்லா உனக்கு சாப்பிங்க்கு ஆகும். மீராக்கு கார்டனிங் திங்ஸ் வாங்க யூஸ் ஆகும். உனக்கு இன்னும் நிறைய பேருக்கு ஹெல்ப் பண்ண ஆகும். இப்படி பொதுத்துவமா யோசிச்சி பேசற என்னை இப்படி அடிக்கறீங்களே நியாயமா?”, திலீப் அடியை வாங்கிக்கொண்டே பேசினான்.
“உனக்கு எதுக்கு ஆகும்னு சொல்லவே இல்லையே மச்சி நீ?”, சஞ்சய்.
“அவனுக்கு பீர் வாங்க யூஸ் ஆகும். வாரத்துல ஒரு நாள் குடிக்கறதுக்கு பதிலா வாரம் பூரா குடிக்க ஆகும்”, ஸ்வப்னா.
“ஹேய் சரவெடி…. நான் கவர்மென்ட்க்கு சர்வீஸ் பண்றேன். அதுல தான் நம்ம நாட்டுக்கு வருமானமே வருது”, திலீப்.
“உன் ஹேர் சர்வீஸ கொஞ்சம் நிறுத்தினா உனக்கு நல்லது. இல்லைன்னா இப்பவே உன் அப்பாக்கு கால் பண்ணி டிசி வாங்கிட்டு போக சொல்லி, ஊருல மாடு மேய்க்க விட சொல்லிடுவேன். இன்னும் அரியர்ஸ் அ க்ளியர் பண்ணல குடிக்க கிளம்பிட்டான். அதுக்கு ஒரு நியாயத்த இவனே சொல்லிக்கறது”, நதியாள்.
“யாரு அரியர்ஸ் வச்சி இருக்கறது?”, என்று கேட்டபடி அகரன் உடன் சரண் மற்றும் அலுவலக ஊழியர்கள் நான்கு பேர் உள்ளே வந்தனர்.
“இவன் தான் சார்”, என ஸ்டெல்லா திலீப்பைக் காட்டினாள்.
“அப்படின்னா உங்களுக்கு இங்க பிராஜெக்ட் பண்ண அலோவ் பண்ண முடியாது”, அகரன்.
“சார்….”, திலீப் அகரன் அருகில் வந்தான்.
“என்ன சார்? இங்க பிராஜெக்ட் பண்ணணும்னா ஆல்க்ளியர் பண்ணி இருக்கணும். இந்த எக்ஸாம்ல க்ளியர் பண்ணிட்டா நோ இஸ்யூஸ் மிஸ்டர் திலீப்”, அகரன்.
“ஓகே சார். பண்ணிடுவேன். இந்த அஞ்சு பேரையும் பேப்பர் குடுக்க சொல்லுங்க பண்ணிடறேன்”, என மீரா, ஸ்டெல்லா, நதியாள், ரிஸ்வானா மற்றும் சஞ்சயைக் கைக்காட்டினான் திலீப்.
“உனக்கு தில் அதிகம் தான்டா. இங்க வேலைக்கு சேரறதுக்கு முன்ன எக்ஸாம் வச்சி தான் எடுப்போம். அப்ப பாஸ் பண்ணா தான் சம்பளம் ,இல்லைன்னா காலம் முழுக்க பியூன் வேலை தான் அதுவும் பாதி சம்பளம் தான். எப்படி வசதி தம்பி?”, சரண்.
“சார் நீங்க யாள் அண்ணன்னு ப்ரூப் பண்றீங்க. எப்படியாவது பாஸ் பண்ணிடறேன். எனக்கு ஸ்டைபன் எவ்வளவு குடுப்பீங்க?”, திலீப்.
“இவன் அடங்கமாட்டான்”, சஞ்சய் நதியாள் காதில் கூறினான்.
“விடு சரண் என்ன பதில் சொல்லுவான்னு பாக்கலாம்”, நதியாளும் கிசுகிசுத்தாள்.
“ஸ்டைபன்னா? அப்படி எதுவும் இங்க விக்கறது இல்ல தம்பி. பிராஜெக்ட் முழுசா நீயே செஞ்சா நீ தான் செஞ்சன்னு செர்டிபிகேட் உன் டிபார்ட்மெண்ட் ஹெட்க்கு அனுப்புவோம் இல்லைன்னா இங்க பியூன் வேலைக்கு உன்ன அப்பாயிண்ட் பண்ணிட்டு சம்பளத்த உன் அப்பாக்கு அனுப்பிடுவோம்”, சரண்.
“சார் உங்க கிட்ட வாய் குடுத்தது தப்பு தான். நீங்க வந்த வேலைய ஆரம்பிங்க”,என வாயைப் பொத்தியபடி ஓரமாகத் தள்ளி நின்றான் திலீப்.
அவன் செயலில் அனைவரும் சிரித்தனர். இப்பொழுதும் நதியாள் அகரனின் சிரிப்பில் தன்னைத் தொலைத்தாள்.
நதியாள் வந்ததில் இருந்து அவளைக் கவனித்துக்கொண்டு இருந்த சரண், அவளின் பார்வையின் மாற்றத்தையும் அது நின்ற இடத்தையும் கண்டான்.
“ஆஹா….. சிங்கம் புலிகிட்ட மாட்டிரிச்சி போலவே. சரி கவனிப்போம் என்ன நடக்குதுன்னு. இவ பாக்கறத பாத்த சீக்கிரமே மாப்பிள்ளை ஆக்கி அவனை மேடைல உக்கார வச்சிருவா போலவே என் தங்கச்சி”,சரண் தனக்குள் பேசிச் சந்தோஷித்துக்கொண்டு இருத்தான்.
“அழகன் இப்படி சிரிச்சி சிரிச்சி கொல்றானே … டேய் அகன் உன்னை இத்தனை நாள் நான் கவனிக்கவே இல்லையே. உன்ன இப்படி சைட் அடிக்கறேனே. குட் கேர்ள் ஆ இருக்க விடு டா என்னை”, நதியாள் தனக்குள் பேசிக்கொண்டாள் அவனை இரசித்துக்கொண்டே.
“நதி பேபி…. என்னா கண்ணு உனக்கு?அப்படியே உள்ள விழுந்துடறேன் பாக்கறப்ப எல்லாம். ரொம்ப நாள் வையிட் பண்ண வைக்காத பேபி. உன்ன அப்படியே தூக்கி என் கைக்குள்ள வச்சிட்டு கொஞ்சனும்னு மனசு பரபரக்குது. சீக்கிரமே நம்ம லவ்அ ரியலைஸ் பண்ணிடு பேபி”, அகரன் நதியாளைப் பார்த்தபடி மனதிற்குள் பேசிக் கொண்டான்.
இப்படி மூவரும் ஒரே விஷயத்தை வெவ்வேறு விதமாக தனக்குள் பேசிக்கொண்டு, அடுத்த வேலையைக் கவனிக்க ஆரம்பித்தனர்.
சரணும் அகரனும் அவர்களுக்கு அவரவரின் கம்பர்ட் ஜோன் என்ன? கடிமான விஷயம் என்ன? என்று அனைத்தும் அலசி ஆராய்ந்து அவர்கள் கடினமென ஒதுக்கும் வேலையைப் பிராஜெக்டாகச் செய்யக்கூறினர்.
ஒருவாராக அனைவரும் அகரனின் சொல்லிற்கு இணங்கிப் பரிட்சை முடிந்து எப்பொழுது வந்து கம்பெனியில் சேர வேண்டும் என்பது வரைக் கூறி அனுப்பி வைத்தனர்.
“நதிமா….. நீயும் மாமாவும் எங்க கூட டின்னர் வாங்களேன்?”, அகரன்.
“இல்ல அகன். அவங்கள விட்டுட்டு எப்படி?”, நதியாள் தன் நண்பர்களை விட்டு வருவது ஒருபக்கமும், அகரனின் மேல் தன் பார்வை மாறியுள்ளதை அவன் அறிந்து கொள்ளக்கூடாது என்பதையும் மனதில் வைத்துக் கூறினாள்.
“எங்களுக்கு ஒன்னும் பிரச்சினை இல்ல யாள்.நீயும் அப்பாவும் போயிட்டு வாங்க. எங்களுக்கும் கொஞ்சம் வர்க் இருக்கு வீட்ல”, சஞ்சய்.
“இல்ல…அது…”, நதியாள் தயங்கினாள்.
“இல்லைன்னா எல்லாரும் வாங்க ஹோட்டல் போலாம்”, சரண்.
“இல்ல சார். மதியம் நாங்க புல்லா சாப்டோம். இப்ப சாப்பிட முடியாது. இன்னொரு நாள் வரோம். இப்ப நதியும் அப்பாவும் உங்ககூட வருவாங்க”, எனக் கூறி நண்பர்கள் பட்டாளம் கிளம்பியது.
“சரி. இந்தாங்க என் பைல். நான் வந்து வாங்கிக்கறேன்”, என நதியாள் நண்பர்களை வழியனுப்பிவிட்டு அகரனின் அறைக்கு வந்தாள்.
“ஹேய் மீரா இன்னிக்கு என்ன யாள் புதுசா தடுமாறுறா? என்னாச்சி அவளுக்கு?”, ஸ்டெல்லா.
“தெர்ல டி. வீட்டுக்கு வந்தப்பறம் கேக்கலாம்”, மீரா.
“ஒரு வேல அகரன் சார் மேல லவ் வந்து இருக்குமோ?”, ஸ்டெல்லா.
“என்ன டி சொல்ற? அகரன் சார் மேல லவ்வா?”, ரிஸ்.
“உனக்கு தெரியாதுல்ல.. இங்க பாரு”, என சஞ்சய் தன் மொபைலில் அகரன் நதியாள் இருக்கும் போட்டோஸை காட்டி, அகரன் தங்கள் வீட்டிற்கு வந்தது முதல் பார்வையால் நதியாளைத் தொடர்ந்தது, தங்களின் யூகம் என அனைத்தும் கூறினான்.
“இவ்வளவு நடந்து இருக்கா? யாள் அகரன் சார லவ் பண்றாளா?”, ரிஸ்.
“நேத்து வரைக்கும் இல்ல. இப்ப டவுட் தான்”, சஞ்சய்.
“டேய் சஞ்சய் எப்படி டா சொல்ற?”, திலீப்.
“நாம அங்க போனதுல இருந்து நதியாள் நார்மலாவே இல்ல. டிஸ்டர்ப்பா தான் இருந்தா. அகரன் சார்அ பாக்கற பார்வையே வித்யாசமா இருந்ததோன்னு தோணுது. கொஞ்ச நாள் கழிச்சி தான் கன்பார்ம் பண்ண முடியும்”, சஞ்சய்.
“நல்லது நடந்தா சரி தான்”, ஸ்டெல்லா.
“ஆமா. அகரன் சாரும் பாக்க நல்லவரா தான் தெரியறாரு… நம்ம யாள நல்லா பாத்துப்பாருல்ல?”, ரிஸ்.
“பாத்துப்பாரா? தங்க தட்டுல தாங்குவாரு”, மீரா.
“அப்படின்னா அகரன் சார் என்ன ஹெல்ப் கேட்டாலும் இந்த விஷயத்துல நாம செய்யணும்”, ரிஸ்.
“அது ஹெல்ப்ப பொறுத்து தான் ரிஸ்”, ஸ்டெல்லா.
“ஏன்டி அப்படி சொல்ற?”, மீரா.
“நம்ம யாள் ஹர்ட் ஆக கூடாதுன்னு தான்”, ஸ்டெல்லா.
“லூசு சரவெடி… அவர் அவளுக்கு கண்டிப்பா கெட்டது நினைக்க மாட்டாரு. அப்படியே அவள ஹர்ட் பண்ணாலும் அவளோட நல்லதுக்கா தான் இருக்கும்”, திலீப்.
“அவ்வளவு நம்பிக்கை வந்துரிச்சா அவர் மேல?”, ஸ்டெல்லா.
“ஆமா. இவ்வளவு சார்ட் பீரியட் ல இந்த பீல்ட்ல நேர்மையா சக்சஸ் பண்ணி இருக்காரு. சரண் சாரும், அவரும் ரொம்பவே மெனகெட்டு கஷ்டப்பட்டு தான் இந்த நிலமைக்கு வந்து இருக்காங்க. தவிர யாள் மேல இரண்டு பேரும் அன்பு எக்கசக்கமா வச்சி இருக்காங்க. இதுக்கு மேல என்ன வேணும்?”, சஞ்சய்.
“சரி. நல்லதே நடக்கும். இப்ப எக்ஸாம்அ பாஸ் பண்ண வழிய தேடலாம்”, ஸ்டெல்லா.
“பேப்பர் குடு பாஸ் பண்ணிடறேன் நான்”, திலீப்.
“உங்க இம்சை ஆகாது டா”, என மற்றவர்கள் கூறி அமைதியாகிவிட்டனர். திலீப்பும் ஸ்டெல்லாவும்வும் விடாமல் விவாதித்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தனர்.
இங்கே அகரனின் அறையில்…..
“வாங்க சித்தப்பா ஆபீஸ பாக்கலாம்”, என சரண் நதிக்கும் அகரனுக்கும் தனிமைத் தந்துச் சென்றான்.
அறைக்குள் வந்ததில் இருந்து நதியாள் அங்கு நடப்பதை கவனிக்கவில்லை. சரண் தன் தந்தையை அழைத்து சென்றது கூட கவனியாமல் தனக்குள்ளேயே உழன்றுக் கொண்டு இருந்தாள்.
அகரனும் வைத்த கண் வாங்காமல் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தான். அவள் இன்று மெரூன் கலர் சர்ட் வித் பேடட் புளூ ஜீன் அணிந்து இருத்தாள்.
அடர்த்தியான முடியை கிளிப்பிட்டு நான்கு பின்னல் இட்டு படறவிட்டு இருந்தாள். கண்களில் லேசான மை, திருத்தப்பட்ட புருவங்கள், சற்றே சிவந்த இதழ்கள், கூர் நாசி, கொலு கொலு கன்னம் என அவளை கண்களால் அளந்தபடி இரசித்துக்கொண்டு இருந்தான்.
“ஹம்ம்…. இப்படியே இருந்தா வேலைக்கு ஆகாது. எதாவது நாமலே பேச ஆரம்பிக்கலாம்”, அகரன்,”என்ன நதிமா பயங்கர யோசனைல இருக்க போல?”, எனக் கேட்டான்.
“ஹான்… ஆமா அகன்… என்ன டைட்டில் எடுத்தா பரவால்லன்னு யோசிச்சிட்டு இருந்தேன். அப்பா எங்க?”, நதியாள்.
“சரண் கூட்டிட்டு போய் இருக்கான் ஆபீஸ் சுத்திகாட்ட. நாம எந்த ஹோட்டல் போலாம் நதிமா? உனக்கு எங்க ரொம்ப பிடிக்கும்?”, அகரன்.
“ம்ம்…….பீச் ரெஸ்டாரெண்ட் போலாமா?”, நதியாள்.
“ஓ யஸ்…. உன் சாய்ஸ் தான் டார்லிங்”, அகரன்.
“என்ன சொன்ன?”, நதியாள்.
“உன் விருப்பம்னு சொன்னேன். சரி வா அவங்க வந்துட்டாங்க. கிளம்பலாம்”, என அவளை மேல யோசிக்கவிடாமல் அழைத்துச் சென்றான் அகரன்.
“சாரி மாமா. வீட்ல சமைக்க இன்னிக்கு ஆள் இல்லை அதான் வெளியே போறோம்”, அகரன்.
“பரவால்ல தம்பி. அடிக்கடி வெளிய சாப்பிடுவீங்களா?”, அகரன்.
“இல்ல மாமா. க்ளைண்ட் மீட்டிங் மதியம் வந்தா வெளியே தான் சாப்பிட்டாகணும். மத்தபடி எப்பயாவது தான் வெளியே சாப்பிடுவோம். சமைக்க ஆள் இருக்காங்க”, அகரன்.
“நல்லது. முடிஞ்ச அளவு வீட்டு சாப்பாடு சாப்பிடறது தான் உடம்புக்கு நல்லது. நம்ம ஊர்ல பிரச்சினை இல்லை நாம விளைவிக்கறோம் சத்தா இருக்கும். இங்க பட்டணத்துல அப்படி எதிர்பார்க்க முடியாது. ஆரோக்கியம் முக்கியம் அத பாத்துக்கோங்க இரண்டு பேரும்”, கண்ணன்.
“நிச்சயம் சித்தப்பா. இவனுக்கும் வெளி சாப்பாடு அவ்வளவா ஒத்துக்காது அதனால வீட்டு சாப்பாடு தான் அதிகம் எடுத்துப்போம்”, சரண்.
மூவரும் பேசிக்கொண்டே ரெஸ்டாரெண்ட் வந்து சேர்ந்து அவரவர் விரும்புவதை அகரன் கேட்டுக் கேட்டு ஆர்டர் செய்தான்.
“ஓய் வாலு…என்ன ஒரே அமைதியா இருக்க? என்னாச்சி?”, சரண்.
“ஒன்னுமில்ல சும்மா தான். எக்ஸாம் பத்தி யோசிச்சிட்டு இருந்தேன்”, நதியாள் சமாளித்தாள்.
“ஏன் அரியர்ஸ் வந்துடும்னு நினைக்கறியா?”, சரண் சீண்டினான்.
“அரியர்ஸ்லாம் இதுவரை வச்சதே இல்ல. நான் உன்னமாதிரி இல்ல டா சரணா”, நதியாள்.
“அப்பறம் என்ன பலத்த யோசனை…எப்படி மாட்டிக்காம பிட் அடிக்கறதுன்னா?”, சரண்.
“நீ பிட் எடுத்துட்டு போய் மாட்டினமாதிரிலாம் எதுவும் நடக்காது”, நதியாள் நக்கலாகக் கூறினாள்.
“யாரு சொன்னா நான் பிட் எடுத்துட்டு போய் மாட்டினேன்னு”,சரண் கேட்டான்.
நதியாள் அகரனைப் பார்க்க, அகரன் வேறு பக்கம் திரும்பிக்கொண்டான்.
“கிராதகா…. நம்ம கூடவே இருந்து எல்லாத்தையும் போட்டு குடுத்து மானத்த வாங்கிட்டான்”,என மனதிற்குள் திட்டியபடி , “அப்படியெல்லாம் நடக்கல. இதுல்லாம் நம்பாத”, எனக் கூறினான் சரண்.
“ஆஹான்….”, வடிவேலு பாணியில் நதியாள் கேட்க , “ஹான் ..”, எனப் பாண்டு பாணியில் பதில் கொடுத்தான் சரண்.
“சரி சரி சண்டை போடாம இருங்க. நதிகுட்டி அண்ணன் கூட சண்ட போடாம இருக்கணும்”, கண்ணன்.
“அது கஷ்டம் மாமா. இரண்டு பேருக்கும் சாப்பிடற சாப்பாடு ஜீரணம் ஆகுதோ இல்லையோ சண்டை போடாம நேரம் நகராது”,, அகரன் சிரித்தபடிக் கூறினான்.
“அது என்னமோ உண்மை தான் தம்பி. பாத்து உங்க காதுல இரத்தம் வந்துட போகுது.. இரண்டும் ஒரே இடத்துல இருந்தா ரணகளம் ஆகும். கம்பெனில எல்லாரும் பத்திரமா இருந்துக்க சொல்லுங்க இவங்க கிட்ட”, கண்ணன்.
“அப்பா…..”, நதியாளும் சரணும் கோரசாய் கூறினர்.
“ஒன்னும் சொல்லல டா”, என சாப்பிடுவதில் மும்முறமானார் கண்ணன்.
அதன் பின் அனைவரும் சாப்பிட்டு முடித்து இவர்களை அவர்களின் இல்லத்தில் விட்டுவிட்டு தங்களின் இல்லம் சென்றனர் அகரனும் சரணும்.
அதன் பின் வந்த நாட்களில் பரிட்சை ஆரம்பிக்க, அந்த அலுவலில் நதியாள் மும்முறமாகிட, அகரனும் சரணும் 3 ஸ்டார் ஹோட்டல் கட்டிட வேலையில் மும்முறமாகிவிட்டனர்.
ஒருவாராக நதியாளுக்கு பரிட்சை முடிந்தது. அடுத்து எப்பொழுது பிராஜெக்ட் செய்ய சென்று சேரலாம் எனக் கேட்க போன் செய்தாள் நதி.
எதிர்முனையில்……..