22 – அர்ஜுன நந்தன்
யாத்ரா இருக்கும் இடம் இருவரும் கூற , செந்தில் ,” என்னடா இரண்டு பேரும் ஒரே நேரத்துல காப்பி அடிச்சா மாதிரி சொல்றீங்க! கொஞ்சம் தெளிவா சொல்லுங்க டா” .
“பர்ஸ்ட் மெஸேஜ்ல வந்த சிரிஸ் நம்பர் டிரேஸ் பண்ணிட்டு இருந்தோம்ல இப்ப தான் கால் பண்ணி சொன்னாங்க .யாத்ரா மேடம் ஆந்திரால இருக்காங்கன்னு”, பரத்.
“ஆந்திரால எங்க இருக்காங்க?”, அர்ஜுன்.
“விஜயவாடா பாரதி நகர் ”, பாலாஜி.
“டேய் யப்பா முழுசா சொல்லி தொலைங்க”, நந்து கத்தினான்.
“யாத்ரா மேடம் அவங்க இருக்கற இடத்துல இருக்கற வைபை மூலமா நமக்கு சிக்னல் அனுப்பி இருக்காங்க சார். அத வச்சி தான் நான் சொன்னேன்”, பாலாஜி.
“டிவி கேபில் சிரிஸ் டிரேஸ் பண்ணி வந்த இன்பர்மேசன் நான் சொன்னேன்”, பரத்.
பரத்தும் பாலாஜியும் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டனர்.
“3 நாளா வராத மெஸேஜ் இன்னிக்கு மட்டும் ஏன் வருது? அவங்கள கடத்தின நாளே அனுப்பி இருக்கலாமே”, நந்து.
“அங்க என்ன நிலைமைன்னு தெரிஞ்சப்பறம் அனுப்பி இருக்கா. நாம மூவ் பண்ண சரியான டைம்ஆ இருக்கலாம். ஆனா எந்த இன்பர்மேசன்ம் அவள கடத்தினவங்கள பத்தியோ இல்ல கேஸ் ரிலேடட்ஆவோ அனுப்பலியே. ஏன்?”, செந்தில்.
“அவ இன்னும் கொஞ்ச நாள் அங்க இருக்கணும்னு நினைக்கறா. முழு தகவலும் தெரியர வரைக்கும் அவ வரமாட்டா”, பரிதி தீவிரமாக சிந்தித்துக் கொண்டு கூறினாள்.
“அவங்கள யார் கடத்தி வச்சி இருக்காங்கன்னு அவங்க சொல்லி இருக்காங்க செந்தில்”, அர்ஜுன்.
“ஆர்யன் ?!”, நந்து.
ஆம் என தலையசைத்தான் அர்ஜுன்.
“பாலாஜி அந்த வைபை அட்ரஸ் என்ன? அது என்ன இடம்?”, பரிதி.
“மேடம் இது நவோடல் 5 ஸ்டார் ஹோட்டல்ல காட்டுது”, பாலாஜி.
“அது யாரோடது ?”, செந்தில்.
“நரசிம்ம ரெட்டி விஜயவாடா ல விவிஐபி. ஆனா அவருக்கு பசங்க இருக்காங்களான்னு தெரியல. விசாரிக்கனும் சார்”, முகில்.
“அங்க போய் யாராவது விசாரிச்சி என்ன நிலைமைன்னு தெரிஞ்சிக்கணும். யார் போறது?”, நந்து.
“நான் போறேன். என்கூட செந்தில் ஆர் பரத் யாராவது வாங்க”, அர்ஜுன்.
“யாத்ராக்கு தெரிஞ்சவங்க யாராவது போகணும் அப்ப தான் அவ வெளிய வருவா. செந்தில் நீங்க அர்ஜுன் கூட போங்க”, பரிதி.
“சரி”, செந்தில்.
“செந்தில் நான் அந்த ரெஜிஸ்டர் அ டிரான்ஸ்பர் பண்ண ஏற்பாடு பண்ணிட்டேன். நீங்க குப்பத்து ஆளுங்கள பாத்தீங்களா?”, பரிதி.
“இல்ல பரிதி. அந்த குப்பத்து ஹெட் அ காணோம்ன்னு ஒரு பேச்சு இருக்கு. வெளியூர் போயிருக்கான்னு சிலர் சொல்றாங்க. டிஐஜி சார் கிட்ட விசாரிக்க சொல்லி இருக்கேன் . இன்னும் கொஞ்ச நேரத்துல கூப்பிட்றதா சொல்லி இருக்காரு”, செந்தில்.
“சரி. அர்ஜுன் நீ எப்ப கிளம்பற?”, பரிதி.
“எனக்கு யாத்ரா ரூம்ல இருந்து சில திங்ஸ் தேவைபடும். அங்க அங்க என்ன என்னமோ எழுதி இருக்கா. அது என்னனு நீங்க பாருங்க “, அர்ஜுன்.
“சரி செந்தில் பாப்பாரு. வேற எதாவது தேவைபட்டா என்னோட இந்த நம்பர்க்கு கூப்பிடுங்க. நந்து நீ வா உன்ன டிஐஜி கிட்ட இன்ட்ரோ குடுக்கறேன்”, பரிதி.
“பாஸ் நாங்க என்ன பண்ணட்டும்?”, முகில் பாலாஜி கோரசாய் கேட்க.
“இன்னும் ஸ்கூல் பழக்கத்தை விடலியாடா நீங்க?”, நந்து கலாத்தான்.
அனைவரும் சிரிக்க இறுக்கம் சற்று தளர்ந்தது.
“நந்து பரிதி சொல்றது தான் காய்ஸ். நானும் செந்தில் சாரும் அங்க நைட் பிளைட்ல கிளம்பறோம்”, அர்ஜுன்.
செந்தில் அர்ஜுனுடன் யாத்ரா அறைக்கு நடந்தான். நந்து பரிதியுடன் கிளம்பினான். முகில் பரத்துடன் கிளம்பினான். பாலாஜி சிஸ்டமில் தன் வேலையை கவனிக்க ஆரம்பித்தான்.
செந்தில் அறைக்கு செல்லும் வழியில் அந்த வீட்டை பற்றிக் கூறிக் கொண்டு அவனுக்கு தெரிய வேண்டிய விஷயங்களை பகிர்ந்துக் கொண்டான்.
“செந்தில் சார். அந்த மூனு பேரோட ரியாக்ஷன் என்ன யாத்ரா கடத்தப்பட்ட அப்பறம்? அந்த நெடுமாறன நீங்க மீட் பண்ணீங்களா?”, அர்ஜுன்.
“கால் மீ செந்தில் அர்ஜுன். அவனுங்க மூனு பேரும் அன்னிக்கு அப்பறம் இன்னும் மீட் பண்ணிக்கல . ஆனா நெடுமாறன் மட்டும் டென்சன்ஆ அவன் அப்பா சேரலாதன் கிட்ட சண்டை போட்டதா தெரிஞ்சது. அந்த காவ்யா ஜுவல்லர்ஸ் ஓனர் மதுரைக்கு பையன் வீட்டுக்கு போய் இருக்காருன்னு சொன்னாங்க. சந்தனபாண்டியன் அந்த கோவில தான் சுத்தி வந்துட்டு இன்னொரு பக்கம் ரெஜிஸ்டர் அ சரிகட்ட பணபட்டுவாடா நடந்துட்டு இருக்கு”, செந்தில்.
“ஓ…… டு த சீக்குவன்ஸ்ன்னு யாத்ரா அனுப்பி இருக்கா. ஆல்ரெடி இது தான் பிளான்னு போட்டு தான் போனாளா?”, அர்ஜுன்.
“நாங்க ஒன்னு செய்ய சொன்னா அவ ஒன்னு செய்வா அர்ஜுன். அவ எந்த சீக்குவன்ஸ் சொல்றான்னு எனக்கு தெரியல. பரிதி வேணும்னா சென்ஸ் பண்ண வாய்ப்பு இருக்கு”, செந்தில்.
“இங்க கண்ணாடிய பாருங்க என்னமோ எழுதி இருக்கு. என்னனு எனக்கு சரியா புரியல” , அர்ஜுன் கண்ணாடியின் மேல் ஓரமும் கீழ் ஓரமும் காட்டினான்.
அங்கே கோட் வேர்ட் மாதிரியான வார்த்தைகள் எழுதி இருந்தன கோர்வை இல்லாமல். அதை கண்ட செந்தில் ஒரு பேப்பரில் எழுதினான். அந்த நான்கு மூலைகளில் இருந்த எழுத்துக்கள் வார்த்தைகள் மிகவும் முரனாக இருந்தது. ஆரம்பம் ஒன்றாகவும் முடிவு வேறாகவும் மத்திய பகுதிகள் போலும் தோன்றின.
“வேற எங்க எங்க இந்த மாதிரி இருக்கு அர்ஜுன்?”, செந்தில்.
அவன் துணி கப்போட்ர் கதவு ஜன்னல் திரை என அனைத்தும் காட்டினான்.
“சுத்தம். இவ ஒரு சஃபுல் எழுதினாலே கண்டுபிடிக்கறதுக்குள்ள மண்டை காயும். இத்தனை எழுதி வச்சி இருக்கா. எத எதுக்கு ரிலேட் ஆகும்ன்னு கண்டுபிடிக்கவே டைம் எடுக்கும். நாம எல்லாத்தையும் எழுதிட்டு கொண்டு போலாம். போற வழில யோசிக்கலாம். போட்டோவும் எடுத்துக்கோங்க அர்ஜுன். நான் பேக் பண்ண போறேன்”, கூறிச் சென்றான் செந்தில்.
“சரி செந்தில்”, என கூறியவன் அந்த அறையில் அவள் எழுதி இருந்தவற்றை புகைப்படம் எடுத்துக் கொண்டு விஜயவாடா புறப்பட தயாரானான்.
பரிதியுடன் சென்ற நந்து டிஐஜி வீட்டிற்கு சென்றனர்.
“அங்கிள்”, பரிதி.
“வா பரிதி. போன வேலை என்னாச்சி?”, டிஐஜி.
“இதோ கூடவே கூட்டிட்டு வந்துட்டேன். அடுத்து நீங்க இவன் கேக்கறத குடுக்கணும்”, பரிதி சிரித்துக் கொண்டே கூறினாள்.
“ஹலோ சார். ஐ ம் முகேஷ் நந்தன்”, நந்து.
“ஹலோ ஹேண்ட்சம்.. ஹொ ஆர் யூ?”, டிஐஜி.
“பைன் சார்”, நந்து.
“நோ சார். கால் மீ அங்கிள்”, டிஐஜி.
“என்ன அங்கிள் பையன வளச்சி போட போரீங்களா?”, பரிதி சிரித்துக் கொண்டே கேட்டாள்.
“வை நாட் . ஜோக்ஸ் அபார்ட். என்ன நிலைமை இப்ப? அந்த பொண்ண பத்தி தெரிஞ்சதா?”, டிஐஜி.
“யாத்ரா மேடம் விஜயவாடால இருக்காங்க அங்கிள்”, நந்து பதிலுரைத்தான்.
“யார் கடத்தி இருக்காங்க? எப்படி தெரிஞ்சது?”, டிஐஜி.
பரிதி தான் மதுரை வந்தது முதல் இங்கு கிளம்பி வரும்வரை அனைத்தும் கூறினாள்.
“ஷி ஸ் வெரி போல்ட்”, டிஐஜி.
“அந்த திமிர்ல தான் வேணும்னு போய் மாட்டி இருக்கா”, பரிதி சிறு கோபத்தோடு கூறினாள்.
“ரிஸ்க் அ ஹேன்டில் பண்ற கேபாசிட்டி அந்த பொண்ணுக்கு இருக்கு பரிதி. பயபடாத நல்ல படியா இந்த கேஸ முடிச்சிட்டு வருவா”, டிஐஜி.
“அந்த தைரியம் தான் எனக்கும் ஆனா வழிய போய் மாட்டிகிட்டான்னு தான் கோபமா வருது. சரி இவரோட டீம் இங்க வந்துட்டாங்க .தேவை பட்ற சமயத்துல இன்னும் கொஞ்சம் பேர் வருவாங்க. இவங்க கேக்கறத நீங்க டிபார்ட்மெண்ட்க்கு தெரியாம செஞ்சி குடுக்கணும்”, பரிதி.
“சரி மா. செந்தில் எங்க மா? அவர் கேட்ட விவரம் இப்பதான் வந்தது”, டிஐஜி.
“அவர் அர்ஜுன் கூட விஜயவாடா கிளம்பிட்டாரு அங்கிள். அந்த டீடைல்ஸ் இவர்கிட்ட குடுத்துடுங்க”, பரிதி நந்துவை கைக் காட்டினாள்.
“அர்ஜுன்?”, டிஐஜி.
“எங்க டீம் ஹெட் அங்கிள் “, நந்து பதிலுரைத்தான்.
“சரி நந்தன். இந்தாங்க . அவன் தலைமறைவா இருக்கான். யாரோட ஐடியான்னு தெரியல பட் அவனுக்கு தகவல் வரவரைக்கும் வெளியே வர வாய்ப்பு இல்லன்னு சொல்லி இருக்காங்க”, டிஐஜி.
“ஓகே அங்கிள்”, எனக் கூறி நந்து அந்த பைலை பெற்றுக் கொண்டான்.
அங்கிருந்து கிளம்பிய பரிதி அவனை அந்த வீட்டில் இறக்கி விட்டுவிட்டு தன் வீடு நோக்கி புறப்பட்டாள்.
அங்கே நந்து முகில் உபயோகிக்க பைக் இறக்கப்பட்டு இருந்தது.
நந்து பாலாஜி இருந்த அறைக்கு சென்றான். அங்கே பாலாஜி ஏதோ தீவிரமாக செய்து கொண்டு இருந்தான்.
“என்னடா கம்ப்யூட்டர உடச்சிட்டு இருக்க?”, நந்து.
“இந்த சிக்னல்ல ஏதோ மெஸேஜ் பாக்ஸ் மாதிரி இருக்கு சார். ஆனா ஓபன் பண்ண பாஸ்வேர்ட் கேக்குது”, பாலாஜி.
“நீ ஏதேதோ சொல்ற. பாஸ்வேர்ட் போட்டு பாரு அவங்க பேரு இல்ல செந்தில் பரிதி ன்னு எதையாவது போடுடா”, நந்து.
“அது எல்லாம் போட்டு பாத்துட்டேன் சார். ஓபன் ஆகல. ஏதோ ஒரு பக்கம் அந்த மெஸேஜ்ல இருந்து டௌன்லோட் ஆகிட்டும் இருக்கு. அதயும் ஓபன் பண்ண முடியல”, பாலாஜி.
“அதுக்கும் பாஸ்வேர்ட் இருக்கா?”,நந்து.
“ஸ்கேனர் இருக்கு சார். ரெடீனா ஸ்கேன் பண்ணா தான் ஓபன் ஆகும்”, பாலாஜி.
“இவ்வளவு செட்டப் இருக்கா டா இந்த பொட்டில? “,நந்து.
“ஆமா சார். இங்க செவத்துல இருக்கற போல்டபுள் மானிடர்ஸ்ம் சிஸ்டம்ஸ் தான் சார். ரொம்ப ஹைடெக் ஆ டிஸைன் பண்ணி இங்க இன்ஸ்டால் பண்ணி இருக்காங்க. அவங்க வந்து சொன்னா தான் எது எதுக்குன்னு தெரியும். ஆனா அவங்க எங்க இருந்து சிக்னல் அனுப்பினாலும் இந்த சிஸ்டம் மட்டும் ரீட் பண்ணிடும். ஆல்ரெடி இன்ஸ்டால் பண்ண ஆர்டர் படி மத்த டாஸ்க்அ பண்ணிடும் இந்த ரூம்ல இருக்கற டிவைசஸ் எல்லாம்”, பாலாஜி.
“என்னடா விட்டலாசார்யா படத்துல வரமாதிரி சொல்றா”, நந்து வியந்துக் கூறினான்.
“அல்மோஸ்ட் அப்படி தான் இருக்கு சார். எனக்கும் நிறைய புரியல. பட் நம்ம ஆபிஸ் சிஸ்டம் அ விட இது ஹைடெக் எல்லா வகைலயும்”, பாலாஜி.
“என்ன ரெண்டு பேரும் சீரியஸா பேசிட்டு இருக்கீங்க?”, கேட்டுக் கொண்டே வந்தான் அர்ஜுன்.
“இவன் சொல்ற கதை விட்டலாசார்யா படம் மாதிரியே இருக்கு டா. நீயும் கேளேன்”, நந்து.
“பாலா ஒன்ஸ் மோர் போடு”, நந்து.
“அது என்ன எப்படி வர்க் பண்ணணும், எது எதுக்கு வச்சி இருக்குன்னு யாத்ராக்கு தான் தெரியும். நாம என்ன மண்டைய பிச்சிகிட்டாலும் நமக்கு தான் லாஸ்”, செந்தில் சொல்லிக் கொண்டே வந்தான் அங்கு.
“என்ன லாஸ்?”, நந்து.
“ஹேர் லாஸ்”, செந்தில்.
“செந்தில் நீங்க நல்லா பேசறீங்க”, நந்து.
“அத வச்சி தா பொழப்பு போகுது நந்தன். நாங்க கிளம்பறோம்”, செந்தில்.
ஒரு நிமிடம் நின்றவன் அங்கு அலமாரியில் இருந்த இரண்டு லேப்டாப் மற்றும் இதர உபகரணங்களை எடுத்து வைத்து கொண்டான் செந்தில்.
“எதுக்கு இதெல்லாம்?”, அர்ஜுன்.
“யாத்ரா கேட்பா அர்ஜுன். கண்டிப்பா நாம வருவோம்ன்னு அவளுக்கு தெரியும்”, செந்தில்.
“என்னடா எல்லாரும் அந்த பொண்ண பூதம் ரேஞ்சுக்கு பில்டப் குடுக்கறீங்க?”, நந்து.
“ஹாஹா… நந்தன் இத மட்டும் அவ கேட்டா ரத்த காட்டேரியா மாறி உங்க ரத்தத்த உறிஞ்சிடுவா”, செந்தில்.
“சரி சொல்லுங்க அந்த பொண்ணா இத்தனை செட்டப் பண்ணது?”, நந்து.
“ஆமா. ஆனா யார வச்சி பண்ணா என்ன ஏதுன்னு எங்களுங்கு தெரியாது. அவளுக்கு வேணும்ன்னு முடிவு பண்ணிட்டா எந்த ரிஸ்க் எடுத்து செய்யவும் தயங்கமாட்டா. இப்ப போய் மாட்டி இருக்கற மாதிரி”, செந்தில் ஒரு பெருமூச்சுடன் கூறினான். அதில் அவள் மீதான அன்பை உணர்ந்தனர் நண்பர்கள் இருவரும்.
“சரி சீக்கிரம் கூட்டிட்டு வாங்க. நானும் பாக்கறேன் அந்த பூதத்த”, நந்து.
(நந்து உனக்கு கட்டம் சரியில்ல போல. ஜாக்கிரதையா இருந்துக்க. பாத்து பேசு )
“ இன்னும் ஒன் ஹவர்ல எனக்கு ரிப்போர்ட் பண்ணணும் . சீக்கிரம் வேலைய பாரு “, அர்ஜுன் கூறிக் கொண்டே சென்றான்.
“டேய் இப்பதானேடா வந்தேன். இப்படி எல்லாம் அநியாயம் பண்ணாத. ஒன் ஹவர்ல யார பத்தி ரிப்போர்ட் குடுக்க?”, நந்து.
“நெடுமாறன் பத்தி வரணும். அவனபத்தி நாளைக்கு எனக்கு புல் டீடைல்ஸ் வேணும்”, அர்ஜுன்.
அங்கிருந்த கிளம்பியவர்கள் மதுரை விமான நிலையம் வந்து விஜயவாடா நோக்கி பயணித்தனர்.
விஜயவாடாவில் இறங்கி யாத்ரா வைக்கப்பட்டு இருந்த ஹோட்டலில் ரூம் எடுத்தனர். 12வது மாடியில் இவர்கள் அறை இருந்தது. 10வது தளத்தில் நம்ம யாத்ரா.
யாரு எப்ப மீட் பண்ணுவாங்க? எப்படி மீட் பண்ணுவாங்கன்னு பாப்போம்…..