25 – அர்ஜுன நந்தன்
அறைக்குள் குதித்த உருவம் மெல்ல செந்தில் அருகில் சென்று அவனை எழுப்பியது.
அவன் எழுந்ததும் அர்ஜுனையும் எழுப்பச் சொல்லி தன் பின்னால் வரும்படி செய்கைச் செய்தது.
அர்ஜுனும் எழுந்து செந்திலுடன் செல்ல, அந்த உருவம் பால்கனி அருகில் வந்து அவர்கள் இருவரையும் மேலே ஏறச் செய்கை செய்தது.
அர்ஜுன் மேலே ஏறாமல் ஏதோ கேட்க வாயை திறக்கும் முன் பேசாதே எனச் செய்கை செய்து அவனை ஏறச் சொன்னது.
செந்திலும் அர்ஜுனும் அங்கே தொங்கிக் கொண்டிருந்தக் கயிற்றைப் பிடித்து மேலே ஏறினர். அவர்கள் 15வது தளத்தில் இறங்கி நின்றனர்.
அங்கு இறங்கியதும் அந்த உருவம் தன் முகத்தைச் சுற்றி இருந்தத் துணியை அவிழ்த்ததும் ஜானின் முகம் தெரிந்தது.
“எங்கள இங்க எதுக்கு கூட்டிட்டு வந்த ?”, செந்தில்.
“உன் பாஸ் எங்க?”, அர்ஜுன்.
“கொஞ்ச நேரம் இருங்க இப்ப வந்துருவாங்க”, ஜான்.
“என்ன ஜான் ரெண்டு பக்கிங்களும் வந்துரிச்சா?”, யாத்ரா கேட்டுக் கொண்டே வந்தாள்.
ஜான் அவளுக்கு செய்கை காட்ட அவள் கவனித்தால் தானே, “இன்னும் வரலியா? நான் தான் 1 மணிக்கு வரச் சொல்லி எழுதி குடுத்தேன்ல. தூங்கிரிச்சிங்களா இரண்டும்?!”.
“நாங்க தூங்கல மேடம் நீங்க தூக்கத்துல மாடில இருந்து கீழ விழுந்திராதீங்க”, அர்ஜுன் நக்கலாகக் கூறினான்.
“யாருடா அது நம்மல நக்கல் பண்றது?”,என மனதில் நிறைத்தவள் கண்களை நன்றாக அப்பொழுது தான் திறந்துப் பார்த்தாள்.
“டைம் சொன்னா கீப்அப் பண்ணணும்னு உனக்கு தெரியாதா? 10 நிமிஷம் லேட் ரெண்டு பேரும்”, யாத்ரா கடுப்பாகப் பேசினாள்.
“நாங்க 1 மணிக்கு முழிச்சிட்டோம் உங்க ஆளு தான் எங்கள கூட்டிட்டு வர லேட் பண்ணாரு”, என ஜானை கை காமித்தான் அர்ஜுன்.
“என்ன சீனியர் யார் இந்த பையன் கூட கூட பேசிட்டு இருக்கான். நைட் 7 மணிக்கு வந்தீங்க என்னைய தேடிவர 10 மணிக்கு தான் முடிஞ்சதா? சப்பாத்தி சிக்கன் பிரை கிரேவின்னு புல் கட்டு கட்டிட்டு தொப்பைய குறைக்க நடக்கறப்ப என்னைய தேடி இருக்கீங்க “, யாத்ரா செந்திலிடம் பொறிந்தாள்.
செந்தில் அவள் அருகில் வந்து யாரும் எதிர்பாராத சமயம் ஓங்கி ஒரு அறை கன்னத்தில் விட்டான்.
“இனிமே எங்கயாவது போய் வேணும்னே மாட்டுன அங்கயே இருன்னு விட்றுவேன் பாத்துக்க”, செந்தில்.
கன்னத்தில் கை வைத்தபடியே,” யோவ் சீனியர் உனக்கு நட்டு கழன்டுரிச்சா? இங்க வராம எப்படி கண்டுபிடிப்ப கிரிமினல?” யாத்ரா.
“அதுக்குன்னு வாலன்டியரா தப்பு பண்ணி மாட்டுவியா நீ? அறிவு இல்ல. எவ்வளவு அவஸ்தை பட்டோம் தெரியுமா நீ எங்க இருக்கன்னு தெரியாம”, செந்தில் உண்மையான மனத்தாங்கலுடன் பேசினான்.
“அதான் மெஸேஜ் அனுப்பிட்டேன்ல. அப்புறமும் ஏன் அடிக்கற? இரு உன் பொண்டாட்டி கிட்ட சொல்லி டைவோர்ஸ் பண்ண வைக்கறேன்”,யாத்ரா.
“3 நாள் கழிச்சி தான் அனுப்பி இருக்க. வந்த மொத நாளே அனுப்பினா என்ன?”, செந்தில்.
“இப்ப ஏன் சீனியர் இவ்வளவு எமோசன்? கூல் டவுன். அங்க பாருங்க அவங்க ரெண்டு பேரும் நம்ம படம் ஓட்றமாதிரி பாத்துட்டு இருக்கானுங்க” , யாத்ரா.
அதன்பின் தான் செந்தில் மற்ற இருவரையும் பார்த்தான். அர்ஜுனும் ஜானும் இவர்கள் சண்டைப் போடுவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தனர்.
நம்ம அர்ஜுன் வழக்கம் போல யாத்ராவை இரசித்துக் கொண்டு இருக்க ஜான் ஏதும் புரியாமல் திரு திருவென்று முழித்துக் கொண்டு இருந்தான்.
“ஜான் இப்ப இங்க எவனும் வரமாட்டானுங்க தானே?”, யாத்ரா.
இல்லை என ஜான் தலையசைத்தான்.
“பூவழகி இவங்க உன்ன தேடி தான் வந்து இருக்காங்களா?”, ஜான்.
“ஆமா ஜான். இவர் என் சீனியர். இது யாருன்னு சீனியர் நமக்கு இன்ட்ரோ குடுப்பாரு”, அர்ஜுனைக் காட்டி செந்திலிடம் கேட்டாள்.
“ஐ ம் நாகார்ஜுன இளஞ்செழியன்”, எனக் கைநீட்டினான் அர்ஜுன்.
“ப்பாபா…. நல்ல வெரைட்டியான பேரு தான். நான் யாத்ரா”, என பதிலுக்கு கை நீட்டி குலுக்கினாள் .
“உன் பேரு பூவழகி இல்லியா?”, ஜான்.
“நோ ஜான். இங்க வரணும்னு தான் நானே எனக்கு பேர் வச்சிகிட்டேன்”, எனச் சிரித்து கொண்டேக் கூறினாள் யாத்ரா.
“அப்ப நீங்க எல்லாம் போலீஸ் ஆ?”, ஜான்.
“இல்ல ஆனா போலீஸ் மாதிரி”, யாத்ரா.
“சரி இங்க வந்த வேல முடிஞ்சதா?”, செந்தில்.
“இல்ல சீனியர். ஆர்யன் ஓட அப்பன் தான் ஹெட். இன்னும் அவன பாக்கல. நாளன்னைக்கு தான் இங்க வரான் என்னை பாக்க”, யாத்ரா.
“அப்ப மூனு நாளா என்ன தான் பண்ணிட்டு இருந்த?”, செந்தில்.
“எனக்கு சூப்பரா ஒரு ரூம், நான் சொல்றது எல்லாம் சமைச்சி குடுக்க ஒரு குக், அப்பறம் நான் கேக்கறது எல்லாம் வாங்கி குடுக்க இந்த ஜான். இப்படி எல்லாம் குடுத்து என்னை ரெஸ்ட்ல வச்சிட்டு இருந்தாங்க சீனியர்”, யாத்ரா சிரித்துக் கொண்டே ஜானின் தோல் மேல் கைப் போட்டுக் கொண்டுக் கூறினாள்.
“உன்ன கடத்திட்டு தானு வந்தாங்க?”, செந்தில்.
“கடத்திட்டு வந்து இவனுங்க எல்லாரும் சேந்து மொத்தினாங்க தான் பர்ஸ்ட். அப்பறம் அந்த ஆர்யன் வந்து பாத்துட்டு இவனுங்கள திட்டி எனக்கு ராஜ உபச்சாரம் பண்ணான்”, யாத்ரா.
“கடத்திட்டு வரவங்களுக்கு எல்லாம் இப்படி தான் உபச்சாரம் நடக்குமா ஜான்?”, அர்ஜுன்.
“இல்ல சார். இவங்கள இப்படி தான் கவனிச்சிக்கனும்னு எங்களுக்கு ஸ்ரிட்க்டு ஆர்டர்”, ஜான்.
“எதுவுமே கேக்கலியா உன்ன?”, செந்தில்.
“பர்ஸ்ட் டே கேட்டாங்க, நான் வழக்கம் போல பதில் சொன்னேன். பெரிய தல வரட்டும்னு என்ன ரெஸ்ட் எடுக்க சொல்லிட்டானுங்க சீனியர்”, அங்கிருந்த சேரில் உட்கார்ந்தாள் யாத்ரா.
“சரி இப்ப என்ன பிளான்?”, செந்தில்.
“நாளைக்கு இங்க நடக்கற டின்னர்ல நீங்க கலந்துக்கோங்க”, யாத்ரா.
“யாருக்கும் பர்மிஷன் இல்லன்னு சொன்னாங்க?!”, அர்ஜுன்.
“இங்க பாரு செழியன். அது உங்க டாஸ்க் நான் ஜாப் சொன்னா நீங்க பண்ணணும்”, யாத்ரா.
“செந்தில் எனக்கு இரண்டு லேப்டாப் ஒரு மொபைல் அப்பறம் சில கேபில்ஸ் வேணும்”,யாத்ரா.
“எப்ப வேணும்?”,செந்தில்.
“நீங்க ரூம்க்கு போயிட்டு ஜான்கிட்ட குடுத்துவிடுங்க”, யாத்ரா.
“ஜான் காட்டுக்குள்ள நான் சொன்னது எப்ப ரெடி ஆகும்?”, யாத்ரா.
“நாளைக்கு நைட் பூவழகி”, ஜான்.
“சரி இவங்க ரெண்டு பேரையும் நாளைக்கு சாயந்திரம் செக் அவுட் பண்ணிட்டு அங்க கூட்டிட்டு போயிடு நீயும் லீவ் சொல்லிட்டு அவங்க கூடவே இருந்துடு”, யாத்ரா.
“இல்ல நான் நீ போனதுக்கப்பறம் இங்க இருந்து வந்துட்டறேன்”, ஜான்.
“சொன்னா நீ கேக்கமாட்ட. சரி என் கூடவே வந்துடு. செழியன் இந்தா இத பரத்-க்கு அனுப்பிட்டு என் ரூம்ல கண்ணாடிக்கு பின்னாடி பாக்க சொல்லு. அங்க ஒரு கவர் இருக்கும் அதுல இருக்கற டிவைஸ் அ இப்ப யூஸ் பண்ற சிஸ்டம் மேல வால்ல ஒரு போர்ட் இருக்கும் அதுல போட சொல்லு. அதோட பாஸ்வேர்ட் இதுதான்”, யாத்ரா.
“எப்ப இங்க இருந்து கிளம்பற ?”, அர்ஜுன் அவள் குடுத்ததை வாங்கிக் கொண்டு கேட்டான்.
“எனக்கு குடுக்கற மொபைல் இல்லாம இன்னும் இரண்டு மொபைல் ஜான் கிட்ட குடுத்துடுங்க. நான் சொல்றப்ப நீங்க பர்ஸ்ட் கிளம்புங்க. நான் தனியா வந்துடறேன்”, யாத்ரா.
“இப்ப வந்தது உன்ன கூட்டிட்டு போக. விட்டுட்டு போக இல்ல”, செந்தில்.
“சீனியர் நான் வரேன்னு சொல்லிட்டேன், வந்துடுவேன். அங்க ஆகற வேலைய பர்ஸ்ட் பாருங்க. அந்த குப்பத்துல இருக்கறவங்க காலி பண்ணவே கூடாது. அது ரொம்ப முக்கியம்”, யாத்ரா.
“சரி செந்தில் போகட்டும் நான் உனக்காக வைட் பண்றேன்”, அர்ஜுன்.
“நான் எப்ப கிளம்புவேன்னு எனக்கே தெரியாது இங்க இருந்து டைம் வேஸ்ட் பண்ணாதீங்க செழியன்”, யாத்ரா.
“பரவால்ல. என் டீம் மொத்தமும் அங்க இருக்கு, நந்து பாத்துப்பான். நான் இங்க இருந்து நீ இல்லாம கிளம்ப மாட்டேன்”, அர்ஜுன் பிடிவாதமாகக் கூறினான்.
அவனை யாத்ரா கண்களில் ஊடுருவும் பார்வைப் பார்த்தாள். அவன் கண்களின் கூர்மை அவனின் கம்பீரம் யாத்ராவைக் கவர்ந்தது என்றே கூறவேண்டும்.
அந்த மங்கலான வெளிச்சத்திலும் அவன் நின்ற தோரணை , அவன் முகம் உடலமைப்பு அனைத்தும் திமிருடன் கலந்த கம்பீரம் என அவனை மனதில் பதிய வைத்தது.
“உன் இஷ்டம். ஜான்கிட்ட கான்டாக்ட் பண்ணிக்க. இப்ப தூக்கம் வருது நான் போறேன்”, யாத்ரா கூறிவிட்டு சுவர் பக்கம் சென்றவள் மீண்டும் செந்தில் அருகில் வந்து அவன் தோள்களில் சாய்ந்துக் கொண்டாள்.
செந்திலும் அவள் தலை முதல் முதுகு வரை வருடிக் கொடுத்தான். எத்தனை பிரச்சினைகள் அவள் செந்திலுக்கு கொடுத்தாலும், அவள் மீதிருந்த அன்பு மட்டும் செந்திலுக்கு சிறிதும் குறையவில்லை. அவளை தன் குழந்தைப் போல பாவிப்பவன், அவனின் மனைவியும் தான். ஆதலால் அவளைக் கடத்தியதும் அதிகம் பதறிக் கவலைக் கொண்டது செந்தில் தான்.
“உங்க திட்டயும் உங்க செட்டிநாடு சிக்கன் பெப்பர் பிரையும் மீன் ரோஸ்டையும் ரொம்ப மிஸ் பண்றேன் சீனியர். இங்க இருந்து போனதும் அங்க நீங்க செஞ்சி குடுக்கணும். டீல்?”, யாத்ரா.
“எரும எரும. எங்க போனாலும் திங்கறத பத்தியே யோசனை. ஒழுங்கா சீக்கிரம் வந்து சேரு”, எனக் கூறி செந்தில் அவள் தலையில் தட்டினான்.
“உயிரே போனாலும் சோறு முக்கியம் பூவழிகிக்கு”, ஜான் கிண்டலடித்தான்.
“உயிர் போறதுக்கு முன்ன தான் சோறு முக்கியம் ஜான்”, யாத்ரா.
“சரி நாங்க ரூம்க்கு போறோம்”, செந்தில்.
“நான் பர்ஸ்ட் போறேன் அப்பறம் நீங்க போங்க. பாய்”, கைக்காட்டி சென்று சுவர் பக்கம் இருக்கும் கயிற்றைப் பிடித்து கீழே இறங்கினாள்.
அவள் இறங்கியதும் ஜானும் மற்ற இருவரும் கீழே இறங்கினர்.
செந்தில் ஜானிடம் ஒரு பையை கொடுத்தான், அதை ஜான் தான் இறங்கி வந்த கயிற்றில் கட்டிக் கீழே இறக்கினான்.
யாத்ரா அறைக்கு நேர் மேலே தான் அவர்கள் இருந்த அறை, அதனால் ஜான் அப்படியே கட்டி கீழே இறக்க ஜன்னல் அருகில் வந்ததும் யாத்ரா உள்ளே இழுத்துக் கொண்டாள்.
ஜானும் வந்த வழியே மேலே ஏறி மாடியில் இருந்து லிப்டில் கீழே வந்தான் யாத்ரா அறைக்கு.
“என்ன நடக்குது ஒன்னும் தெரியல. என்ன நடக்குன்னும் புரியல. எப்படியோ நல்லது நடந்தா சரி”, என மனதில் நினைத்துக் கொண்டே ஜான் அறை வாசலுக்கு வந்தான்.
அவன் வந்த சமயம் அறையில் பேச்சுக் குரல் கேட்க பகீரென்று மனதில் உரைக்க அவசரமாக உள்ளே வந்து பார்த்தான்.
அங்கே ஆர்யன் சோபாவில் அமர்ந்து யாத்ராவிடம் கேள்விக் கேட்டுக் கொண்டிருந்தான்…