25 – மீள்நுழை நெஞ்சே
“குட் ஈவினிங் சார்லஸ்… “, எனப் புன்னகையுடன் அவரெதிரில் இருந்த இருக்கை நோக்கிக் கைக்காட்டியதும் அமர்ந்தாள்.
“குட் ஈவினிங் துவா… சோ… கிஸித்துமஸ் லீவ் என்ன ப்ளான் செஞ்சிருக்கீங்க?”, என உற்சாகத்துடன் கேட்டார்.
“நத்திங் யெட்….”, தோளைக் குலுக்கியபடிக் கூறினாள்.
“என் ஃபேமிலி கூட டின்னர் ஒரு நாள் ஜாயின் பண்ண முடியுமா?”
“கண்டிப்பா… வித் ப்ளஷர்… “
“ஓக்கே… 25ம் தேதி என் வீட்ல தான் டின்னர் உங்களுக்கு…. இன்னும் சில பேர கூட ஆபீஸ்ல இன்வைட் செஞ்சி இருக்கேன். வில்சன கூப்பிட்டேன். அவன் சிஸ்டர் வரதால வரலன்னு சொல்லிட்டான்… உங்க டீம்ல நீங்க மட்டும் தான் இப்ப பார்ட்டிக்கு வருவீங்க,… உங்களுக்கு ஓக்கே தானே?”, இருக்கும் விஷயங்களைக் கூறிவிட்டுக் கேட்டார்.
“எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லை சார்லஸ்…. நாடு விட்டு நாடு வந்திருக்கேன். உங்க வீட்ல கிறிஸ்துமஸ் பார்ட்டிக்கு வரமாட்டேனா என்ன? நான் வந்துடறேன்… உங்களுக்கு எத்தனை குழந்தைங்க?”, என எழுந்தபடிக் கேட்டாள்.
“ஐஞ்சு”, என விரல்கள் காட்டினார்.
“சோ கூல்…. வில் சீ யூவர் ஃபேமிலி சூன் (will see your family soon)”, எனக் கூறி விடைபெற்றுக் கொண்டுச் சென்றாள்.
அடுத்த இரண்டு நாட்களில் வில்சனின் தங்கையும் வந்து சேர்ந்திருந்தாள்.
அவனின் மாற்றாந்தாய் வழி மகள் தான். ஆனாலும் அவனுக்கு அவள் மேல் அலாதி பிரியம் இருப்பதை வில்சன் அவனின் ஒவ்வொரு செயலிலும் காட்டினான்.
அந்த பெண்ணும் அவனுடனே சுற்றியது அவனின் மகிழ்ச்சியை பல்மடங்கு பெருக்கியது.
லில்லி அவளின் பெயரைப் போலவே அல்லி நிறம் தான். குளிரில் அந்த பருவ மங்கையின் கன்னங்கள் இயற்கையான சிவப்புப் பூச்சைப் பூசிக்கொண்டது.
பள்ளி இறுதி வருடம் பயில்கிறாள். துவாரகாவுடன் வில்சனைப் போல நன்றாகவே ஒட்டிக் கொண்டாள்.
“ராக்ஸ்…. ராக்ஸ்… கம் டீச் மீ திஸ் (raks… come teach me this)”, என்று அவளும் இப்போது கம்புச் சுழற்றப் பழக ஆரம்பித்திருந்தாள்.
மூவரும் ஒன்றாக சினிமா ஷாப்பிங் என்று ஒரு வாரம் நன்றாகச் சுற்றினர். இடையில் அருகில் இருந்த ட்ரெக்கிங் ரெஸார்ட்டும் சென்று வந்தனர்.
“லில்லி…. சார்லஸ் பசங்களுக்கு கிஃப்ட் வாங்கணும். இங்க இருக்க பசங்க டேஸ்ட் எனக்கு தெரியாது… ஹெல்ப் பண்றியா?”, எனக் கேட்டாள்.
“கண்டிப்பா…. வில்சன கழட்டி விட்டுட்டு நாம மட்டும் போலாமா?”, என இரகசியமாகக் கேட்டாள்.
“அதுக்கு வாய்ப்பே இல்ல.. உங்கண்ணன் என்னை கடிச்சி சாப்ட்றுவான்”
“அவனுக்கு உங்கள ரொம்ப பிடிக்கும் அதனால ஒன்னும் சொல்லமாட்டான் ராக்ஸ்”
“அவன் வந்தா நமக்கு வசதி தானே.. அவனே லக்கேஜ் தூக்கிப்பான்… சோ அவன் கூடவே போயிட்டு வரலாம் வா”, என்று மேலும் அவளை எதுவும் பேச விடாமல் அவளை அழைத்துச் சென்றாள்.
அங்கே அவர்களின் டீம் மேட் ஜெனி அண்ட் ராபர்ட் இருவரும் ஒன்றாக ஷாப்பிங் வந்திருந்தனர். இருவரின் இடையே நெருக்கம் மிகவும் அதிகமாக இருந்தது. ஜெனி அளவிற்கு அதிகமாகக் குடித்துவிட்டுத் தள்ளாடியபடி நடப்பது போல துவாரகாவிற்கு தெரிந்தது.
ராபர்ட்டும் தெளிவில்லாமல் இருப்பது போல வில்சனுக்கு தோன்ற இருவரும் அவர்கள் இருக்கும் பக்கம் சென்றனர்.
“ஹேய் காய்ஸ்… என்னாச்சி… ஆல் ரைட்?”, எனக் கேட்டபடி இருவரும் அவர்களது அருகில் வந்தனர்.
“ஹாய்… ராக்ஸ்… கொஞ்சம் அதிகமா குடிச்சிட்டேன்…. அவ்வளவு தான்”, என ஜெனி குழறியபடிப் பேசினாள்.
“ராபர்ட்…. ராபர்ட்”, வில்சன் தலைத்தொங்கி அமர்ந்திருந்தவனின் கன்னத்தைத் தட்டினான்.
“அவன் எந்திரிக்க மாட்டான்…. அவனால முடியாது …. “, எனக் கூறி ஜெனி சிரித்தாள்.
“ஏன்?”, முகத்தைச் சுருக்கியபடி வில்சன் கேட்டான்.
“பவுடர் கொஞ்சமா சரக்குல கலந்து குடிச்சான்… இப்ப கவுந்துட்டான்…. ஹாஹா..ஹேஹே….”, எனக் கூறியபடி ஜெனியும் கொஞ்சம் கொஞ்சமாக நினைவை இழக்க ஆரம்பித்தாள்.
அவர்கள் இருவரும் முழுதாக மயங்கிவிட இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தனர்.
“என்ன பண்ணலாம்?”, துவாரகா.
“அவன் ரூம் தெரியும். கொண்டு போய் விட்றலாம்”, வில்சன்.
“நீ மட்டும் போயிட்டு வரியா?”
“இல்ல நீயும் வா.. அவ ட்ரெஸ் சேஞ்ச் பண்ணணும்…”
“சரி வாங்க எல்லோரும் போலாம்…”
“அவளோட கார் சாவி இருக்கா பாரு”
“இருக்கு…. “
“அவ கார்ல இவங்கள தூக்கி போட்டுக்கலாம்… நீ என் கார் எடுத்துட்டு வா”, எனக் கூறிவிட்டு வில்சன் அவன் கைகளை தூக்கி தோளில் போட்டுக் கொண்டு நடந்தான்.
துவாரகாவும் அவ்வாறே போட்டுக்கொண்டு நடக்க, லில்லி துவாரகாவின் கைப்பையை எடுத்துக்கொண்டு முன்னே கார் இருக்கும் இடம் நோக்கி நடந்தாள்.
வில்சன் யாரோ தங்களைப் பின்தொடர்வது போல உணரவும் பின்னால் அவ்வப்போது பார்த்தபடி முன்னே நடந்தான்.
ஜெனி நடக்கமுடியாமல் முழுதாக சாய ஆரம்பிக்கவும், துவாரகாவிற்கு அவளைப் பிடித்து நடக்க வைப்பதே பெரும்பாடாக இருந்தது.
காரில் இருவரையும் அமரவைத்து வில்சன் காரை எடுத்தான். அவன் பின்னோடு துவாரகாவும் எடுத்துக்கொண்டு தொடர்ந்தாள்.
சிறிது தூரம் சென்றதும், ஆளில்லாத நேரத்தில் இரண்டு கார்கள் இவர்களது வண்டியை வழிமறித்து நின்றது.
வில்சன் ஏற்கனவே எதிர்பார்த்து இருந்தது போல அவனின் பர்ஸை கார் சீட்டின் அடியில் போட்டுவிட்டிருந்தான்.
லில்லியும் அதே போல பணத்தை மட்டும் எடுத்து சீட்டின் சந்தில் சொருகிவிட்டுவிட்டு பையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அமர்ந்தாள்.
துவாரகாவிற்கு இந்த அனுபவம் முதல் முறை என்பதால் சற்று சஞ்சலத்தோடு நடப்பதை கவனித்தாள்.
அந்த காரில் வந்தவர்கள், “வெளியே வா.. அவங்கள எங்ககிட்ட விட்டுட்டு போங்க…. “, என மிரட்டியபடி வில்சன் ஓட்டி வந்த காரின் அருகில் சென்றனர்.
“அவங்க என் ஃப்ரெண்ட்ஸ்… நான் விட்டுட்டு போக முடியாது.. உனக்கு தேவை பணம் தானே இந்தா எடுத்துக்க” , என சில பத்து டாலர் நோட்டுகளைக் கொடுத்தான்.
“உன்கிட்ட பிச்சை கேக்கல… நீ நகரு… எங்களுக்கு தேவையானத நாங்களே எடுத்துப்போம்…. “, என ஜெனி மற்றும் ராபர்ட் அருகே சென்றனர்.
“ஹேய் காய்ஸ்…. இந்தா பணம்… அவங்கள விட்றுங்க”, என துவாரகா லில்லியை உள்ளேயே அமர வைத்துவிட்டு தான் மட்டும் வெளியே இறங்கினாள்.
“ஷட் அப்…. கெட் லாஸ்ட்”, என ஒருவன் அவளிடம் கத்திவிட்டு ராபர்ட் பேண்ட் பாக்கெட்டில் இருந்து சில பொட்டலங்களை வெளியே எடுத்தான்.
மற்றொருவன் ஜெனியின் உடலை மொத்தமாக தடவியபடி அவளைத் தூக்க முனைந்தான்.
“அவள விட்று…. உங்களுக்கு தேவையானத தான் எடுத்துகிட்டீங்களே”, என வில்சன் அவனைத் தடுத்தான்.
“அவள தூக்க தான் நாங்க பவுடர் குடுத்ததே….
நீ விலகு…. “, எனத் துப்பாக்கியை வில்சன் முன்னே காட்டவும், துவாரகா மெல்ல மெல்ல நடந்து காரின் டிக்கியில் இருந்து ஒரு பொருளை எடுத்தாள்.
வில்சன் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்த சமயம் யாரும் அவளைக் கவனிக்கவில்லை.
சட்டென இருவரின் பின் மண்டையில் கம்பால் அடித்தாள், வில்சனிடம் ஒன்றை தூக்கிப் போட்டாள்.
வில்சனும் அதைத் தாவிப் பிடித்து ஜெனியை தூக்கியவனின் முன் நின்றான்.
இரண்டு கார்களிலும் மொத்தமாக ஏழு பேர் இருந்தனர். இவர்கள் இருவரும் கம்பை வைத்து தற்காத்துக் கொண்டபடி அவர்களை விரட்ட முனைந்தனர்.
துப்பாக்கி வைத்திருந்தவன் துவாரகாவை குறிவைக்கவும் வில்சன் அவனது துப்பாக்கியை தட்டிவிட்டு விட்டு ஜெனியை மறைத்தபடி நின்றுக் கொண்டான்.
துவாரகாவை பின்னால் இருந்து இருவர் அவளின் கைப்பிடித்து கொள்ளவும் தடுமாறி கீழே விழுந்தாள்.
காலில் உதைத்தே மூவரை காயப்படுத்திவிட்டு கம்பை எடுத்துக்கொண்டு மீண்டும் நின்றாள்.
துப்பாக்கியில் வில்சனை சுட முனைந்த போது துவாரகா அவனை இழுக்கவும் காரின் கண்ணாடி உடைந்தது.
அவர்கள் துப்பாக்கியைப் பயன்படுத்த ஆரம்பித்ததும், ஜெனியை மறைவாக இழுத்துக்கொண்டு நகர்ந்த போது துவாரகாவின் தோளில் குண்டடிப்பட்டது.
அவளுக்கு காயப்பட்டதும் வில்சன் பதறி ஜெனியை இழுத்துவிட்டு துவாரகாவை மறைத்து நின்றான்.
லில்லி முதலிலேயே போலீஸுக்கு போன் செய்துவிட்டதால் இருவரும் தடுமாறும் சமயம் போலீஸ் அங்கே வந்து அவர்களைப் பிடித்துக் கொண்டது.
துவாரகாவிற்கு இரத்தப்போக்கு நிற்க முதலுதவி செய்து ஆம்புலன்ஸில் ஏற்றிவிட்டு, லில்லியையும் உடன் அனுப்பிவைத்தான் வில்சன்.
போதை பொருள் ராபர்ட்-யின் பாக்கெட்டில் இருந்து எடுத்துவிட்ட படியால், கொள்ளையடிக்க வந்தவர்கள் மேல் தான் முழு தவறும் இருக்கிறது என்று ஊர்ஜிதம் செய்து எழுவரையும் சிறைப்பிடித்தனர்.
ராபர்ட் மற்றும் ஜெனிக்கும் மருத்துவர்கள் அவசரபிரிவில் வைத்து மருத்துவம் பார்த்துக்கொண்டு இருந்தனர்.
சாராயத்தில் போதை பொருள் கலந்ததால் சுயநினைவு பெற ஒரு நாள் ஆகும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
திட்டமிடப்பட்ட கொள்ளை முயற்சி என்று அடுத்த நாள் ராபர்ட்டிடமும் போலீஸ் விசாரணை செய்து உறுதி செய்துக் கொண்டனர்.
துவாரகாவிற்கு அன்றே அறுவைசிகிச்சை செய்து தோட்டாவை வெளியில் எடுத்துவிட்டு, பதினைந்து நாட்கள் முழுதாக ஓய்வெடுக்க வேண்டும் என்றுக் கூறி அடுத்த நாள் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையில் துவாரகாவின் வீட்டில் இருந்து வந்த அழைப்புகளை சமாளிக்க முடியாமல் வில்சன் தான் மிகவும் திணறிவிட்டான்.
துவாரகா ஏற்கனவே உண்மையை கூறாதே என்று கூறியதால் ஏதேதோ சொல்லி சமாளித்தான். ஆனால் ..…..