25 – ருத்ராதித்யன்
“அங்கிள்… நீங்க எங்க இங்க?”, என யாத்ரா ஆச்சரியத்துடன் கேட்டாள்.
“லாவண்யாவ கடத்திட்டாங்க மா… எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல… டிபார்ட்மெண்ட்ல இருந்து எதுவும் பண்ண முடியாத நிலைமை.. என் பையனையும் கான்டாக்ட் பண்ணமுடியல…”, என ரிடையர்ட் டிஐஜி சர்வேஸ்வரன் கண்களில் கலக்கத்துடன் கூறினார்.
“நீங்க பரிதிகிட்ட பேசலியா அங்கிள்?”, என அவரை அங்கிருந்த ஆசனத்தில் அமரவைத்து தண்ணீர் எடுத்துக் கொடுத்தாள்.
“இல்லம்மா… என் பொண்ணை கடத்தினவன் என்னை டெல்லி வரசொன்னான்…. அவன் சொன்ன இடத்துல இருந்து இதை எடுத்துட்டு வந்தேன்”, என ஒரு பெட்டியை அவளுக்குக் காட்டினார்.
யாத்ரா யோசனையுடன் அதை திறந்துப் பார்த்தவள் அனைத்தும் மரபணுவியல் சம்பந்தமான விஷயங்களாக இருப்பதுக் கண்டு, அனைத்தையும் தன் கையடக்க ஸ்கேனரில் காப்பி எடுத்துக் கொண்டு அதை அவரிடமே திருப்பிக் கொடுத்தாள்.
“அங்கிள்.. செழியன் எதிர் ரூம்ல இருக்காரு… அவர இங்க வரசொல்றேன்”, என எழுந்தவளை கைப்பிடித்து தடுத்தார்.
“வேணாம் யாத்ரா…. நான் இங்க இறங்கினதுல இருந்து என்னை யாரோ பின்தொடர்ந்துட்டு இருக்காங்க.. உன்னை நான் மதுரைலையே பாத்தேன். ஆனா என்னால உன்கிட்ட பேச முடியல… என்னை பாலோ பண்றத உணர முடிஞ்சது. டெல்லில இறங்கினதும் அவசரமா உன்னை பாலோ பண்ணிட்டு இங்க வந்தேன். இனிமே தான் நான் எங்க வரணும்னு போன் வரும்”, என்றபடி மனம் தளர்ந்து அமர்ந்தார்.
எத்தனை கம்பீரமும், சிரித்த முகத்துடன் பல இன்னல் மிக்க வழக்குகளை கையாண்டவர், பிள்ளைகள் விஷயத்தில் மனம் தளர்வது கண்டு வாழ்வின் நிதர்சனத்தை உணரத் தொடங்கினாள்.
“அங்கிள் இப்ப வரை என்ன என்ன நடந்தது-னு மட்டும் சொல்லுங்க”, எனக் கூறியபடி அர்ஜுனுக்கு வீடியோ கால் செய்தாள்.
“ஹேய் ரது டார்லிங் அதிசயமா வீடியோ கால் எல்லாம் பண்ற.. எங்க இருக்க? வந்துட்டியா?”, என ஆர்வமாக கேட்டான்.
“வந்துட்டேன் செழியன். உங்க ரூம்க்கு எதிர் ரூம்ல இருக்கேன். நம்ம அங்கிள் சாரோட”, என சர்வேஸ்வரனைக் காட்டினாள்.
அர்ஜுன் அவரைக் கண்டதும் நந்துவை அருகில் அழைத்து அமரவைத்துக்கொண்டான்.
“ஹலோ சார்… என்னாச்சி? ஏன் உங்க முகத்துல இவ்ளோ டென்ஷன் தெரியுது?”, அர்ஜுன் அவரின் முகத்தை ஆராய்ந்தபடிக் கேட்டான்.
“அங்கிளோட பொண்ணும் பையனும் மிஸ்ஸிங் செழியன்…. கடத்தினவன் டெல்லி வரசொல்லி, வந்திருக்காரு”, எனக் கூறி ஒரு நொடி நிறுத்தினாள்.
“வாட்…. என்ன சொல்ற யாத்ரா?”, நந்து அதிர்வுடன் கேட்டான்.
“உங்களுக்கு மெயில் பண்ணி இருக்கேன் அது பாருங்க… நான் அங்கிள் கூட கொஞ்ச நேரம் இருந்துட்டு வரேன். நந்தன் நீங்க பரிதிய மீட் பண்ண அப்பாயிண்மெண்ட் சீனியர்கிட்ட கேளுங்க… இதை டார்லிங் பாக்கணும்”, என நிறுத்தி அர்ஜுனிடம் கண்காட்டினாள்.
“சரி யாத்ரா… “, நந்து எழவும், “நந்தன் நீங்க யாரும் இங்க இல்லை.. அதுவும் பாத்துக்கோங்க”,என எச்சரித்தாள்.
“இது ஆறாவது மாடி ரது… இங்கிருந்து அவன் குதிக்கறது கஷ்டம்….”, அர்ஜுன் இப்படி கூறவும் நந்து அதிர்ந்துப் பார்த்தான்.
“ட்ரைனிங்ல எல்லாமே தானே இருக்கும் செழியன்…. இந்த ப்ளோர்ல ஆள் வந்திருப்பாங்க… உங்கள்ல யாரு எவன் கண்ல பட்டாலும் ரிஸ்க் செழியன்”, அழுத்தமாகவே கூறினாள்.
“ரூம் வேற பேர்ல தான் புக் பண்ணி இருக்கு… சரி நந்து அந்த ஜன்னல்ல இருந்து கீழ குதிக்க முடியுமா பாரு”, என அசால்ட்டாக கேட்டான்.
“டேய் என்னடா நினைச்சிட்டு இருக்கீங்க இரண்டு பேரும்? என்னை பாத்தா எப்படி இருக்கு? நான் என்ன சூப்பர் மேனாடா? இங்கிருந்து குதிக்கறதுக்கு?”, எனக் கத்தினான்.
அப்படி நந்து கேட்டதும் சர்வேஸ்வரன் தன்னிலை மறந்து சிரித்தார்.
“டேய் சத்தம் போடாத டா … இரு வேற வழி பாக்கறேன்… கதிர கூப்பிடறேன்”, எனக் கூறியபடி அழைத்தான்.
“கதிர் இந்த ஹோட்டல்ல எத்தனை பேர் கண்ணு வச்சிருக்காங்கன்னு பாருடா… ஜன்னல் வழியா இறங்கறதுக்கு எதாவது ஏற்பாடு பண்ணு”, எனக் கூறி வைத்து விட்டு, “சரி ரது.. அடுத்து நீ என்ன பண்ணப்போற?”, எனக் கேட்டான்.
“இப்பவரைக்கும் நோ ஐடியா செழியன்?”, எனக் கூறியபடி கையில் இருந்த கட்டை அவிழ்த்தாள்.
“இன்னும் வலி இருக்கா ரது?”, என அவன் கேட்டதும் சர்வேஸ்வரனும் நந்துவும் அங்கிருந்து நகர்ந்தனர்.
“லைட்டா…. செழியன்…. கோபமா என்மேல?”, என அவன் முகத்தை ஆராய்ந்தாள்.
“எதுக்கு ரது டார்லிங்?”
“நான் உன் பக்கத்துல வந்தும் நேர்ல பாக்க முடியல…. “, அவள் குரலில் ஏக்கம் இருந்ததோ என யோசிக்க வைத்தது.
“இன்னும் நீ இங்கிருந்து போலியே டார்லிங்… உன்னை பாக்கணும்னு நினைச்சா நான் இப்ப அங்க இருப்பேன்”, என கண்ணடித்துக் கூறினான்.
“அப்டியா…. சரி வா… எனக்கு பேன்டேஜ் மாத்தி விடு”, என கால் கட் செய்துவிட்டாள்.
“மேடம்க்கு என் நினைப்பு அதிகமா இருக்கு போலவே…. “, என மனதில் நினைத்தபடி மென்னகைக் கொண்டான்.
“நந்து…. நான் ரதுவ பாக்க போறேன்… நீ பரிதிய பாத்துட்டு அந்த கேஸ் பாக்க போ… “, என அனுப்பிவிட்டு தலையைச் சுற்றித் துணியணிந்து அங்கிருந்து வெளியேறினான்.
“இவன் இஷ்டத்துக்கு வாங்கறான் போங்கறான்….. அப்டியே போயிடு வந்துடாத… அந்த ராட்சசியையும் இழுத்துட்டு போயிடு நாங்களாவது நிம்மதியா இருப்போம்”, என கத்தினான்.
“ஏன் சார் இவ்ளோ டென்ஷன் ஆகறீங்க?”, எனக் கேட்டபடி கதிர் ஜன்னல் வழியாக உள்ளே வந்தான்.
“ஐய்யோ….. அவன் சொன்னான்னு இவனும் இப்படி வரானே”, என நந்து நொந்தபடி, ” ஏன்டா அவன் சொன்னா மூளைய கழட்டி வச்சிட்டு வருவியா?”, எனத் திட்டினான்.
“அது முடியாது சார்… அப்பறம் அதுக்கு நான் மிதி வாங்கற மாதிரி ஆகிடும்… நீங்க அந்த ஜன்னல்ல இருந்து கீழே போலாம்… வின்டோ க்ளீனிங் ஆளுங்கள இழுத்துட்டு வந்தேன்… அப்பறம் இந்த ஹோட்டல்ல நாலு பேர் சம்பந்தம் இல்லாம சுத்திட்டு இருக்காங்க.. இந்த ப்ளோர்ல இரண்டு பேர் இருக்காங்க…. அர்ஜுன் சார் எங்க சார்?”
“அவன் அப்படிக்கா போனான்.. அவன தேடி சொல்லு போ… கார் சாவி குடு… இந்த சாவி அவன்கிட்ட குடுத்துடு… “, என கதிர் வந்த வழியில் இவன் கீழே சென்றான்.
அர்ஜுன் அந்த ஹோட்டல் வர்க்கர் போல உடையணிந்து, யாத்ரா இருந்த ரூமிற்குள் வந்தான்.
“அங்கிள் எதாவது ஆர்டர் பண்ணீங்களா?”, என யாத்ரா கேட்டபடி அவனை பார்த்தாள்.
“நீங்க தானே மேடம் வரசொன்னீங்க…”, என அர்ஜுன் கண்ணடித்தபடி யாத்ராவை அணைத்தான்.
“டேய்… அங்கிள் இருக்காரு… விடு”, என அவள் அவனைத் தள்ளிவிட்டாள்.
“அவர் இப்ப இங்க வரமாட்டாரு… நீ காயத்த காமி… எத்தன புல்லட் உள்ள போச்சி?”, என அவளது சர்ட்டை கழட்டி அடிபட்டிருக்கும் தோளைப் பார்த்தான்.
“இரண்டு தான்… ஒன்னும் சீரியஸ் இல்ல… “, என அவனைப் பார்த்தபடி கூறினாள்.
“என்னாச்சி என் ரதுவுக்கு? கண்ல அவ்வளவு ஏக்கம் தெரியுது? என் நினைப்பு ஒரு வழியா வந்துடிச்சா உனக்கு?”, என காயத்தை சுத்தம் செய்தபடிக் கேட்டான்.
“நினைப்பு இல்லாம தான் அத்தான்கிட்ட திட்டு வாங்கிட்டு டெல்லி வந்தேனா?”, அவளும் வாயிற்குள் முனகினாள்.
“ஒரு புல்லட் ஆழமா போய் இருக்கு… சரியா க்ளீன் பண்ணிட்டாங்க தானே ரது?”, என அவளின் காயத்தில் கவனம் வைத்தபடி கேட்டான்.
“ம்ம் ம்ம்… செக் பண்ண தான் உன்கிட்ட வந்தேன்… நீயே பாரு”, அவள் குரலில் வழக்கத்திற்கு மாறாக ஏதோ ஒன்று குரலில் தென்பட்டது.
“என் ரது டார்லிங் செம பார்ம்ல இருக்காங்க போலவே”, என மருந்திட்டு ப்ளாஸ்டர் போட்டான்.
“அவுட் ஆப் பார்ம் போயிடக்கூடாதே… அதான்…. “
“நீ… அவுட் ஆப் பார்ம்…. போயிட்டாலும்”
“சரி அதுல்லாம் விடுங்க செழியன்… அத்தானுக்காக ஒன்னு செய்யப்போறேன்… அதுபத்தி உங்க கிட்ட பேசணும்”, என அவன் மடியில் அமர்ந்தாள்.
அவள் அவன் மடியில் அமர்ந்தாலே, அவளின் அவனுக்கான தேடலை உணர்ந்து கொள்வான்.
“என்னாச்சி என் ரது டார்லிங்க்கு? ஆதிக்கு என்ன ?”, என அவள் இடைச்சுற்றி கைப்போட்டு தன்பக்கம் இழுத்து நெஞ்சினில் சாய்த்துக்கொண்டான்.
” நம்ம எடுத்து இருக்க இந்த கேஸ்ல நம்ம தீரணும் சம்பந்தப்பட்டு இருக்கான். உங்ககிட்ட அத்தான் சொன்னாரு தானே ?” , என அவன் மார்பினில் ஒன்றியபடி கேட்டாள்.
“ம்.. ஆதி சொன்னான். தாஸும் சொன்னான். தீரனுக்கும் ஆதிக்கும் இப்போ என்ன ?” , அவனும் அவள் தோள்களில் கைப்போட்டு, முன் பக்கமும் கைக்கொடுத்து அவளை வளைத்து தன்மேல் முழுதாக சாய்த்துக் கொண்டான்.
“நம்ம அன்னிக்கி பாத்தோமே ஆருத்ரா .. அவங்கள நம்ம ஆதி அத்தானுக்கு பக்கலாமா?”
“ஆதி இதுக்கு என்ன சொன்னான் ?”, அர்ஜுன் சிரித்தபடிக் கேட்டான்.
“அண்ணனும் தம்பியும் கேடிங்க டா. கேக்கறத்துக்கு மட்டும் பதில் சொல்லாதீங்க “ எனக் கோபமாக முகத்தை திருப்பிக் கொண்டாள் .
“நீ என்கிட்ட கேக்கறதுக்கு முன்ன அவங்கிட கேட்டு இருப்பன்னு எனக்கு தெரியாதா ரது டார்லிங் ? சொல்லு அவன் என்ன சொன்னான் ?” , என அவள் முகத்தை தன் பக்கம் திருப்பி அருகில் கொண்டு வந்தான்.
“உனக்கு தெரியுமே என்ன சொல்லி இருப்பாருன்னு .. “ , அவன் தோளில் தலை சாய்த்துக் கொண்டு கூறினாள்.
“ஸ்டேட்டஸ், சமுதாயம்னு பேசி இருப்பான் .. நம்ம அவங்களுக்கு ஈக்வல் இல்லனு ஒரு லெக்சர் எடுத்து இருப்பான் .. “ , அர்ஜுன் சிரித்தபடி அவள் கன்னங்களில் விரலால் அளந்தபடி கூறினான் .
“செழியன் நீங்க எனக்குள்ள பக் (bug) வச்சி இருக்கீங்களா ?“, என தன்னை ஆராய்ந்தபடி கேட்டாள்.
“என் அறிவு களஞ்சியமே .. நானே உனக்குள்ள இருக்கேன். தனியா பக் வேணுமா என்ன ?”, என அவள் முகத்தை அருகில் கொண்டு வந்தான்.
அவனின் பார்வை மாற்றமும், அவன் நோக்கமும் உணர்ந்த நொடி யாத்ரா எழ முயன்றாள்.
அவள் நாயகன் தன்னவளை முழுதாக தன் கைகளில் சிறை செய்து இருந்தான். அவன் கண்களைக் கண்டவள், அவன் விழியசைவுக்கு பணிய தயாரானாள்.
அவள் தாடையை பற்றி இழுத்து, முன் நெற்றியில் தன் முதல் இதழ் ஒற்றலை நிகழ்வித்தான். அந்த ஒற்றலில் யாத்ரா அனைத்தும் மறந்து அவன் மேல் கொண்ட நேசமும் அன்பும் மட்டுமே உணர்ந்தாள்.
காதலனவன் தாயும் தந்தையுமாக மட்டும் அல்லாமல் அனைத்துமாக மாறி தன்னிடம் இருப்பதை அவளுக்கு பன்மடங்காக கொடுக்க ஆரம்பித்து விட்டால், எந்த பெண்ணும் அவன் அன்பில் தன்னை அர்ப்பித்துவிடுவாள்.
அர்ஜுன் தன் தாய், தந்தை, சோதரன், தங்கை என அனைவரிடமும் அவளுக்கு முதலிடம் கொடுத்து ஒதுங்கி நிற்கிறான்.
அவளும் தன்னிடம் உள்ளது மட்டுமின்றி அவன் மனதில் சிறிதாக கொள்ளும் சின்ன சின்ன ஆசைகளையும் நிறைவேற்ற அத்தனையும் செய்கிறாள்.
இருவரும் ஒருவருக்காக ஒருவர் கொடுப்பதாக நினைத்து அன்பை அல்ல அல்ல குறையாத ஊற்றாக மாற்றி வருகின்றனர்.
“சொல்லு ரது .. உன் மனசுல என்ன இருக்கு ?” என அத்தனை மெதுவாக கேட்டும், அவள், “ஆதி அத்தான் ஆருத்ரவ லவ் பண்றாரு செழியன் “, என சத்தமாக சொன்னாள்.
“என்ன ? “ அர்ஜுன் வியப்பும் சந்தோஷமும் ஒருங்கே வரக்கேட்டான்.
“ ஆமா .. ரணதேவ் சாரே மாமா அத்தை கிட்டயும் பேசி இருக்காரு. ஆனா அத்தான் வேணாம்னு சொல்லிட்டாரு “, என தான் கிளம்பும் முன்பு அத்தை மாமா ஆதியிடம் பேசியதை அர்ஜுனிடம் விரிவாகக் கூறினாள் .
“இவ்ளோ நடந்து இருக்கா ? ஆதி அவங்கள லவ் பண்றான்னு எப்டி சொல்ற ?”
“நீ என்னை மொதல்ல பாத்தப்ப எப்படி நின்னியோ அப்டி தான் ஆதி அத்தானும் ஆருத்ரா என்கிட்ட பேசினப்போ பாத்துக்கிட்டே இருந்தாரு. அதுக்கப்பறம் அடுத்த நாள் நான் சக்திய தொரத்திடடு போனேன்ல .. அப்ப அத்தான் அங்க தான் இருந்தாரு. இடம் லீஸ் சம்பந்தமா பேசிட்டு இருந்தாரு. அப்பவும் அவர் பார்வைல வித்தியாசம் நல்லாவே தெரிஞ்சது செழியன் ..“
“சரி விடு .. இப்ப எனக்கு கொஞ்சம் ஒத்தடம் தரலாம்” என கன்னத்தைக் காட்டினான்.
“நான் என்ன சொல்லிட்டு இருக்கேன் நீங்க என்ன பண்றீங்க ?”, எனக் கோபமாக அவனை கேட்டாள் .
“அவன் லவ் பத்தி அப்பறம் யோசிக்கலாம் இப்ப நம்ம லவ்க்கு கொஞ்சம் தண்ணி ஊத்தலாம் ரது பேபி “, என அவள் கன்னத்தை கடித்தான்.
“ஆஆஆ .. ஏன்டா கடிக்கற ? வலிக்குது டா “, என அவனைத் தள்ளி விட்டுவிட்டு எழுத்தாள்.
“எங்க போவ? உன்ன விட்டா தானே ரது டார்லிங் .. “ என அவளை இறுக்கி கட்டிக் கொண்டான் .
“டேய் அங்கிள் இருக்காரு டா .. “
“அவரு எப்பவோ வெளிய போய்ட்டாரு “ என கூறியபடி அவளை இழுத்து கொண்டு கீழே படுத்தான்.
அப்போது தான் ….