28 – அகரநதி
அகரனின் அறையில் அவனுக்கு முன் காத்திருந்த நதியாள், அவன் உள்ளே நுழையும் சமயம் சரியாக அவளின் போனில் அவனது புகைப்படத்துடன் பேசிக்கொண்டு இருந்தாள்.
“ஏய் அகன்…. நான் கேள்வி கேட்டா நீ பதில் சொல்ல மாட்டியா? என்னைய திருப்பி கேக்கற? உனக்கு அவ்வளவு தைரியம் வந்துரிச்சா ? இந்த நதி மேல பயம் இல்லாம போச்சி உனக்கு. இருடா உன்ன கல்யாணம் பண்ணி ஒரு வழி பண்றேன். அய்யோ அப்பா சாமின்னு நீ அலறிட்டு வந்து என்கிட்ட நான் கேள்வி கேட்டதும் பதில் சொல்லனும்……இல்லல்ல இன்னும் நான் கேள்வி கேக்கறதுக்கு முன்னயே பதில் சொல்லனும். அப்படி நான் பண்ணல என் பேரு நதியாள் இல்ல “, என கதவின் அருகில் அகரன் நிற்பதை அறியாமல் தன் போக்கில் பேசிக்கொண்டு இருந்தாள்.
அகரனும் முகத்தில் மந்தகாச சிரிப்புடன் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தான். அவள் இன்னும் என்ன என்ன பேசுவாள் என்பதை ஆவலுடன் கேட்க காத்திருந்தான்.
“அகரன்…. அழகான பேரு. ஆளும் ஏதோ சுமாரா தான்டா இருக்க. ஆனாலும் உன்ன எனக்கு அவ்வளவு பிடிக்குது. அது ஏன்? உன்ன அகன் அகன்னு கூப்டதால ஈஸியா என் மனசுல நுழைஞ்சிட்டியா? என் மனசுல இருக்கற உனக்கு , என் மனசுல உனக்கான இடம் என்னனு உனக்கு புரியலியா டா ? இடியட்…. உன் கேள்விக்கான பதில் நான் புரிஞ்சிகிட்டேன். ஆனா இப்ப உன்கிட்ட சொல்லமாட்டேன். உன்ன நிறைய சைட் அடிக்கணும், சுத்தல்ல விடனும், நீ செய்யற எல்லாத்தையும் அப்படியே எனக்குள்ள பத்திரமா பதுக்கி வச்சிக்கப்போறேன் தெரியுமா? எனக்கு தெரியும் நான் உனக்கு பதில் சொல்ல லேட் ஆனா நான் கேட்டதுக்கும் பதில் லேட்டா தான் கிடைக்கும். பரவால்ல… இந்த பீலும் நல்லா தான் இருக்கு. ஆனா மவனே… நீ மட்டும் எவளையாவது சைட் அடிச்சன்னு தெரிஞ்சது நீ காலி டா. உன்ன எவ பாத்தாலும் அவளும் காலி. சோ சமத்து பையனா என் அகனா மட்டும் தான் இருக்கணும். புரியுதா டா ஸ்டூப்பிட்?”, நதியாள்.
“அய்யோ….. அவன புலம்ப விடலாம்னு நினைச்சா நானே புலம்பிட்டு இருக்கேனே…. கன்ட்ரோல் நதி. அவன் வந்துடுவான். என்ன பண்றான் வராம ,இன்னும் காணோம்? சரி நாம அந்த டிசைன்ன கம்ப்ளீட் பண்ணலாம். கொஞ்சம் கொஞ்சம் டச்அப் குடுத்து மத்த டிசைன்னையும் புல்பில் பண்ணிடணும். முதல்ல வேலைல நல்ல பேரு எடுக்கணும்”, நதியாள் தனக்கு தானே பேசிக்கொண்டு மொபைலை வைத்துவிட்டு தனது லேப்டாப்பில் வேலை செய்ய ஆரம்பித்தாள்.
இதையனைத்தையும் கண்ட அகரனுக்கு மனம் வானத்தையும் தாண்டி பறந்துக் கொண்டு இருந்தது. நதி அவளின் மனதைப் புரிந்துக் கொண்டாள். இந்த எண்ணம் மட்டுமே அவனை சந்தோஷத்தில் திளைக்கச் செய்தது. பின் தன்னை நிதானித்துக் கொண்டு, இரண்டு நிமிடம் கழித்து உள்ளே வந்தான் எதையும் அறியாதவன் போல.
“நதிமா….. அந்த ரெஸ்டாரெண்ட்ல என்ன என்ன சேஞ்ச் பண்ணலாம்னு உன் பிரண்ட்ஸ் கிட்ட டிஸ்கஸ் பண்ணிட்டு இன்னிக்கு மதியம் எனக்கு சொல்லிடு. அப்பறம் அந்த 3 ஸ்டார் ஹோட்டலுக்கு இன்டீரியர் நீ ரெடி பண்ண ஸ்டார்ட் பண்ணிட்டியா?”, அகரன்.
“பண்ணிட்டு இருக்கேன் சார். பாக்கறீங்களா சார்? “, நதியாள்.
“தட்ஸ் குட். பாக்கலாம் குடு “, என அகரன் அவளது லேப்டாப்பை வாங்கிப் பார்த்தான்.
நதியாள் அருகில் நின்று அவன் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்துக்கொண்டு இருந்தாள்.
“சரண கூப்பிட்டு வா. ஸ்வப்னாவையும்”, அகரன் கூறி அனுப்பினான்.
“ஓகே சார்”, எனக் கூறி நதியாள் வெளியே சென்றாள்.
“அகரா.. சிசிடிவில இந்த மொமன்ட்ஸ் மட்டும் தனியா சேவ் பண்ணிக்கணும். சே… மைக் இல்லாம போச்சி இங்க…. எவ்வளவு பீல் பண்ணி என் நதி செல்லம் பேசிட்டு இருந்தா… இனிமே இங்க ஒரு கேமராவ பிக்ஸ் பண்ண சொல்லனும். அப்ப தான் நதி பண்ற எல்லாத்தையும் பாக்க முடியும்”, எனத் தனக்குத்தானே பேசிக்கொண்டு, நதியாள் பேசிக்கொண்டு இருந்த நிமிடங்களை தனியாக சேமித்து வைத்தான்.
“சரண்… அகன் கூப்பிடறான்”, நதியாள்.
சரண் முறைக்கவும்,” சார் உங்கள அகரன் சார் கூப்பிட்டாரு”, என மாற்றிக் கூறினாள்.
“வரேன்னு சொல்லு”, சரண்.
“ஸ்வப்னா எங்க இருக்காங்க? அவங்க கேபின்ல இல்ல”, நதியாள்.
“அவங்க ஷீலா கேபின்ல இருப்பாங்க. இப்பதான் அனுப்பினேன்”, சரண்.
“தாத்தா?”, நதியாள்.
“அவர் உங்க பிரண்ட்ஸ் கூட இருக்காரு”, சரண்.
“ஓகே சார்”, நதியாள்.
நதியாள் சென்றதும் சரணுக்கு சிரிப்பு தாங்கவில்லை. சிறிது சிரித்துவிட்டு அகரனின் அறைக்கு வந்தான்.
“ஸ்வப்னா அகரன் சார் கூப்பிடறாங்க”, என ஷீலாவின் கேபினில் வந்து அழைத்தாள் நதி.
“ஹாய் நதியாள்…. யூ லுக் சோ கார்ஜியஸ் டுடே. எனிதிங் ஸ்பெஷல்…? “, ஸ்வப்னா.
“நத்திங் ஸ்வப்னா”, சிரித்தபடிக் கூறினாள் நதி.
“ஓகே. திஸ் இஸ் ஷீலா. ஷீலா திஸ் இஸ் நதியாள். சரண் சாரோட சிஸ்டர்”, என ஷீலாவிற்கு நதியாளை அறிமுகப்படுத்தினாள்.
“ஓஓஓ… நைஸ் டூ மீட் யூ மேம்”, என கைநீட்டினாள் ஷீலா.
“கால் மீ நதியாள். நான் இங்க பிராஜெக்ட்காக ஜாயின் பண்ணி இருக்கேன்”, நதியாள்.
“யா… ஐ நோ…. உங்க பிரண்ட்ஸ்… ஸ்டெல்லா அண்ட் திலீப்… செம கலாட்டா பண்றாங்க. இரண்டு பேருக்கும் நான் ஒரு வேலை குடுத்து செய்ய வைக்கறதுக்குள்ள சண்டை வந்துடுது. திலீப் இஸ் வெரி நாட்டி”, ஷீலா.
“அவங்க எப்பவும் அப்படித்தான் ஷீலா மேம். கொஞ்சம் மெரட்டுங்க அப்பதான் திலீப்ப சமாளிக்க முடியும். இல்லைன்னா அவனோட பிராஜெக்ட் நீங்க தான் பண்ணுவீங்க “, நதியாள் சிரித்தபடிக் கூறினாள்.
“நோ மேம், கால் மீ ஷீலா . தட்ஸ் இனஃப். அவ்வளவு சேட்டை பண்ணுவாங்களா?”, ஷீலா.
“ஆமாம். ஓகே. சார் வையிட் பண்ணிட்டு இருப்பாங்க. அப்பறம் மீட் பண்ணலாம். பாய்”, என ஸ்வப்னாவை அழைத்துக்கொண்டு அகரனின் அறைக்கு வந்து சேர்ந்தாள் நதி.
“மே ஐ கம் இன்”, நதியாள்.
“எஸ். கம் இன்”, சரண்.
“வாங்க ஸ்வப்னா… இந்த டிசைன்ஸ் பாருங்க. நாம ஸ்டார் ஹோட்டலுக்கு இந்த ஐடியா ட்ரை பண்ணலாம் தானே?”, என அகரன் நதியாளின் டிசைனைக் காமித்தான்.
“ம்ம்… நல்லா இருக்கு அகர். பட் கொஞ்சம் கொஞ்சம் மாடிபை பண்ணி, இன்னும் லூக் ரிச் பண்ணலாம். யாரு டிசைன் பண்ணா?”, ஸ்வப்னா.
“நதியாள் தான்”, அகரன்.
“ஓஓ… தட்ஸ் ஆவ்சம்…. அப்படின்னா இன்னும் கொஞ்சம் நம்ம இன்டீரியர் டிசைனிங் ஆளுங்களோட நதியாள்அ டிஸ்கஸ் பண்ண விட்டு பெட்டரா கொண்டு வரலாம். அவங்க காஸ்ட் அனலைஸிங்ல இருந்து எல்லாத்தையும் தெரிஞ்சிக்க ஈஸியா இருக்கும். சைட் விசிட்டும் பண்ணா இன்னும் பெட்டர் ஐடியா வரும்”, ஸ்வப்னா.
“சரி. அந்த ரெஸ்டாரெண்ட்க்கு, பிராஜெக்ட்காக வந்து இருக்கற எல்லாரையும் கூட்டிட்டு போங்க. இவங்க ஐடியாஸ் இன்னிக்கு ஈவினிங் சொல்லிட்டு டூ டேஸ்ல டிசைன் பண்ணி காட்டணும் சிஸ்டம்ல. நீங்களும் ஷீலாவும் அவங்கள பாத்துக்கோங்க. அப்பப்ப மத்த வேலையும் சொல்லிக்கலாம். ஓகே ?”, சரண்.
“ஓகே சார். இவங்க, மீரா, ரிஸ், சஞ்சய் பிராப்ளம் இல்ல. ஸ்டெல்லாவும் , திலீப்பும் தான் நேத்தே ஷீலாவ படுத்திட்டாங்களாம். சோ அவங்கள செபரேட் பண்ணி வேலை வாங்கிக்கலாமா ?”, ஸ்வப்னா.
“நோ நோ… அவங்க இரண்டு பேரும் ஒன்னா தான் செய்யணும். பிகாஸ் திலீப் ஈஸியா பேசியே மத்தவங்க கிட்ட வேலை வாங்கி ஓப்பி அடிச்சிடுவான். ஸ்டெல்லா அவன்கிட்ட வேலை வாங்கிடுவா”, நதியாள்.
“ஆர் யூ ஸ்யூர்?”, ஸ்வப்னா.
“எஸ் “, நதியாள்.
“ஓகே. சரியா அவன் வேலை செய்யலன்னா நோ செர்டிபிகேட். அத சொல்லிடு”, அகரன்.
“சொல்லிடறேன் சார்”, நதியாள்.
“ஓகே. ஸ்வப்னா நதிக்கு இன்ஸ்ட்ரக்சன்ஸ் குடுத்துட்டு ஆளுங்கள காட்டிடுங்க. சஞ்சய் இன்னிக்கு வரல, சோ நான் மதியம் நதியாள கூட்டிட்டு மீட்டிங் போறேன். மைரா டின்னர் அரேஞ்ச் பண்ணிட்டாங்களாம். நீங்க வரீங்களா இல்ல சரண கூப்பிட்டுக்கவா?”, அகரன்.
“நான் நைட் வர முடியாது அகர். சரண் இப்ப கட்டிட்டு இருக்கற சைட் பாக்க போகணும் ஈவினிங். உங்களுக்கு ஹெல்ப்புக்குன்னா நதியாள் குரூப்ல யாராயாவது கூப்டுக்கலாம்”, அகரன்.
“சரண் நீ வரமுடியுமா?”, அகரன்.
“வர்க் பொறுத்து தான் சொல்லமுடியும் அகர். நீ எதுக்கும் அவங்கள்ள யாரையாவது கூப்டுக்கோ. நான் பின்னாடி வந்து ஜாயின் பண்ணிக்கறேன். டிசைன்ஸ் டாகுமென்ட்ஸ் எல்லாம் நதியாள் கிட்ட குடுத்துடுங்க ஸ்வப்னா”, சரண்.
“நான் மதியம் தாத்தா கூட வெளியே வரதா சொல்லி இருக்கேன்”, நதியாள் தயங்கித் தயங்கிக் கூறினாள்.
“நாளைக்கு லீவ் எடுத்துக்க. இன்னிக்கு மீட்டிங் வந்தே ஆகணும்”, அகரன்.
“ஓகே சார்”, நதியாள் .
“ஓகே. ஸ்வப்னா நான் சைட் போயிட்டு வரேன். அதுக்குள்ள மீட்டிங்குக்கு தேவையானதை ரெடி பண்ணிடுங்க”, என அகரன் அங்கிருந்து கிளம்பினான்.
சரணும் கிளம்ப, ஸ்வப்னா நதியாளை அழைத்து வந்து இன்டீரியர் செக்சனில் அனைவருக்கும் அறிமுகப்படுத்திவிட்டுச் சென்றாள்.
நதியாளும் தான் செய்த டிசைனில் எப்படி மாற்றங்கள் செய்யலாம்? எவ்வாறு தரத்தை உயர்த்தலாம் ? என பல சந்தேகங்கள் கேட்டு அவர்களின் வழிகாட்டுதல் படி மாற்றங்கள் ஏற்படுத்திவிட்டு, தன் படையைக் காணச் சென்றாள்.
அவள் உள்ளே நுழையும் பொழுதே திலீப்பும், ஸ்டெல்லாவும் தாத்தாவிடம் வாயடித்துக் கொண்டு இருப்பதைக் கவனித்தபடிச் சென்றாள்.
“தாத்தா…. மேல பத்தாவது ப்ளோர்ல சூப்பர் சூப்பர் பிகர் இருக்காம்”, திலீப்.
“அப்பறம் ஏன்டா என்னை அங்க கூட்டிட்டு போல நீ? வா ஸ்டெல்லா தங்கம் நாம போய் பாத்துட்டு வரலாம்”, சுந்தரம் தாத்தா.
“தரன்… பத்தாவது ப்ளோர்ல எல்லாம் வேஸ்ட் பதிநாலாவது ப்ளோர்ல தான் பிரஸ்ஸர்ஸ் வந்து இருக்காங்களாம்”, ஸ்டெல்லா.
“அப்படியா? “, திலீப்.
“சி பே… வாங்க தரன்… நாம லன்ச்ல கேன்டீன் போனா எல்லா ப்ளோர் பிகரையும் பாக்கலாம்”, ஸ்டெல்லா.
“அப்படியே மீனுக்கு வீடியோ கால்ல அத காட்டவும் செய்யலாம்”, எனக் கூறியபடி நதியாள் அங்கு வந்து நின்றாள்.
“நதிக்குட்டி…. நீ எப்ப வந்த?”, சுந்தரம் தாத்தா.
“இப்பதான்…. உங்கள சும்மா அவங்கள வேலை வாங்கிட்டே பேசிட்டு இருங்கன்னு சொன்னா அவங்க கூட உட்கார்ந்து அந்த பிகர பாக்கலாம் இந்த ப்ளோருக்கு போகலாம்னு வேலை செய்யாம அரட்டை அடிச்சிட்டு இருக்கீங்க…… திலீப் நீ வேலை செய்யலன்னா உனக்கு செர்டிபிகேட் குடுக்கமாட்டேன்னு அகரன் சார் சொல்லிட்டாரு. ஷீலா குடுத்த வர்க் முடிச்சிட்டீங்களா?”, நதியாள் சுந்தரம் தாத்தாவிடம் ஆரம்பித்து திலீப்பிடம் முடித்தாள்.
“இல்லடா தங்கம். சும்மா விளையாட்டுக்கு தான் அப்படி பேசிட்டு இருந்தோம். இதோ ஸ்டெல்லா டார்லிங் வேலைய முடிச்சிட்டா இந்த திருட்டு பையன் திலீப் தான் இன்னும் முடிக்கல”, சுந்தரம் தாத்தா நதியாளின் தாடையைப் பிடித்து கொஞ்சியபடிக் கூறினார்.
“என்ன தாத்தா… பேத்திய பயங்கரமா கொஞ்சிட்டு இருக்கீங்க போல? என்ன விஷயம்?”, எனக் கேட்டபடி மீரா உள்ளே வந்தாள், உடன் ரிஸ்வானாவும்.
“வாடா கண்ணு… சும்மா தான் பேசிட்டு இருக்கோம். எல்லாரும் இங்க வந்துட்டிங்க. எதாவது முக்கியமான வேலை இருக்கா?”, சுந்தரம் தாத்தா.
“ஆமா தாத்தா… ஒரு ரெஸ்டாரெண்ட்ஆ ரினோவேட் பண்ணணும். அதுக்கு எங்கள டிசைன்ஸ் ட்ரை பண்ண சொல்லி இருக்காங்க. இரண்டு நாள்ல டிசைன்ஸ் காட்டணும்”, நதியாள்.
“இரண்டு நாள்லயா?”, திலீப் அதிர்ச்சியில் கேட்டான்.
“ஆமாம்….”, நதியாள் தலையாட்டினாள்.
“எந்த ரெஸ்டாரெண்ட்?”, ஸ்டெல்லா.
“நாம போனோமே மைக் பர்த்டே அப்ப. அந்த ரெஸ்டாரெண்ட் தான்”, மீரா.
“ஓஓ…அதுவா…. ஒரு டைம் பாத்துட்டு வந்து பிளான் பண்ணலாம்ல?”, ஸ்டெல்லா.
“இப்ப போலாமா? “, ரிஸ்.
“நான் ஸ்வப்னாகிட்ட கேட்டுட்டு வரேன் மீரா. ஏதோ மீட்டிங்கு மதியம் மேல போகணும்னு சொல்லிட்டு இருந்தாங்க. அகரன் சார் கூட நானும் போகணுமாம்”, நதியாள்.
“என்ன கண்ணு அகரன சார்னு கூப்பிடற?”, சுந்தரம் தாத்தா.
“இங்க அப்படிதான் கூப்பிடணும் தாத்தா”, மீரா.
“ஓஓ…..”, சுந்தரம் தாத்தா.
“சரி நீ கேட்டுட்டு வந்தா உடனே போயிட்டு வரலாம்”, ஸ்டெல்லா.
“சரி ஸ்வப்னாவை கேட்டுட்டு வரேன். அங்க நாம ஆல்ரெடி போய் இருக்கோம்ல என்ன என்ன மாத்தாலாம்னு யோசிச்சிட்டு நோட் பண்ணி வைங்க”, நதியாள் கூறிவிட்டு ஸ்வப்னாவைத் தேடிச் சென்றாள்.
“ஸ்வப்னா…”, நதியாள்.
“வாங்க நதியாள்”, ஸ்வப்னா உள்ளே அழைத்தாள்.
“எப்ப அகரன் சார் மீட்டிங் போகணும்?”, நதியாள்.
“மதியம் ஒன்னு இருக்கு , நைட் டின்னர் டைம். அல்மோஸ்ட் 5.30க்கு இங்க இருந்து கிளம்பணும். டிராபிக் தாண்டி அங்க போறதுக்குள்ள எப்பயும் 6.30 ஆர் 7 ஆகிடும். பட் லேட் ஆகும் மீட்டிங் முடியறதுக்கு”, ஸ்வப்னா.
“ஓஓ…. நான் இப்ப அந்த ரெஸ்டாரெண்ட் போயிட்டு வரலாம்ல?”, நதியாள்.
“ம்ம்…. யூ ஹேவ் மச் டைம். இப்ப 11 தானே ஆகுது. 1 மணிக்குள்ள வந்துடுங்க. கொஞ்சம் பிரஸ்அப் ஆகிட்டு மதியம் மீட்டிங் கிளம்பலாம். இன்பேக்ட் நீ டின்னர் போனா போதும். பட் அது அகர் தான் டிசைட் பண்ணணும்”, ஸ்வப்னா.
“நைட் ரொம்ப லேட் ஆகுமா ஸ்வப்னா?”, நதியாள்.
“ஆமாம். மிட் நைட் கூட ஆகலாம். உங்களுக்கு பிரச்சினை இல்ல தானே?”, ஸ்வப்னா.
“அகன் கூட தானே இருக்காரு. அவர் கூட வீட்டுக்கு போயிடலாம். பிரச்சினைலாம் இல்ல. சரி நாங்க நாலு பேரும் போயிட்டு வரோம். தாத்தாவையும் கூட்டிட்டு போறோம். சரண் கிட்ட சொல்லிடுங்க”, எனக் கூறிவிட்டுக் கிளம்பினாள்.
“இந்தா கார் கீ. ஜாக்கிரதையா போயிட்டு வாங்க”, எனச் சரண் தன் கார் சாவியைக் கொடுத்தான்.
“தேங்க்யூ சார். வரேன்”, நதியாள்.
“உனக்கு கார் ஓட்டத் தெரியுமா?”, சரண்.
“இல்ல. திலீப் ஓட்டுவான்”, நதியாள்.
“சரி. ஜாக்கிரதை. லன்ச் அங்கயே முடிச்சிட்டு வந்துடுங்க “, சரண்.
“சரி”, எனக் கூறிக் கிளம்பினாள்.
பின் அனைவரையும் அழைத்துக் கொண்டு அந்த ரெஸ்டாரெண்ட் சென்று சேர்ந்தாள்.
“இதுல தான் மாத்தணுமா நதிகுட்டி?”, சுந்தரம் தாத்தா.
“ஆமா தரன் டார்லிங்… உங்களுக்கு தோனரதையும் சொல்லுங்க”, ஸ்டெல்லா.
“சரி வாங்க சுத்திப் பாக்கலாம்”, என மீரா முன்னே சென்றாள்.
நதியாள் அந்த ரெஸ்டாரெண்ட் மேனேஜரை சந்தித்து அங்கே சுற்றிப் பார்க்கப் போவதாகக் கூறி அனுமதிப் பெற்றாள்.
“ரொம்ப சந்தோஷம் மா. அகரன் சார் கம்பெனில ஜாயின் பண்ணிட்டிங்க… இங்கயே பீல்ட் வர்க் பண்ணவும் வந்துட்டீங்க”, மேனேஜர்.
“ஆமா சார். கூட யாராவது அனுப்பினா கொஞ்சம் ஹெல்ப் புல்லா இருக்கும்”, நதியாள்.
“அனுப்பறேன் மா. எல்லாத்தையும் பாருங்க. வேற உதவி தேவை பட்டாலும் சொல்லுங்க”, மேனேஜர்.
“ஓகே சார்”, எனக் கூறிவிட்டு சுற்றிப் பார்க்க ஆரம்பித்தனர்.
நால்வரும் எங்கெல்லாம் மாற்றலாம் ? எப்படி செய்யலாம் என நிறைய விவாதித்தபடி தங்களது நோட்டில் குறித்துக்கொண்டு போட்டோவும் எடுத்துக்கொண்டனர். சுந்தரம் தாத்தாவும் தனக்கு தோன்றியதைக் கூற, அதையும் ஸ்டெல்லாவும் நதியாளும் குறித்துக்கொண்டனர். பின் அங்கே மதிய உணவை முடித்துக்கொண்டு அங்கிருந்துக் கிளம்பினர்.
நேராக அலுவலகம் வந்தவர்கள் தங்களது இடங்களுக்குச் சென்றனர்.
“தாத்தா… இன்னிக்கு நீங்க இவங்களோடவே இருங்க. நாளைக்கு நாம வெளிய போலாம். நான் அகன் கூட முக்கியமான மீட்டிங் போகணுமாம். சோ கோச்சிக்காதீங்க”, நதியாள்.
“ஒன்னும் பிரச்சினை இல்ல கண்ணு. நானும் இவங்க கூட எதாவது பண்ணிட்டு இருக்கேன். நீ வேலைய பாரு. சரண மட்டும் இங்க கொஞ்சம் வர சொல்லுடா”, சுந்தரம் தாத்தா.
“சமத்து தாத்தா … அவன வர சொல்றேன் தாத்தா”, என நதியாள் சரண் இருக்கும் இடம் நோக்கிச் சென்றாள்.
“சார்..உங்கள தாத்தா கூப்பிட்டாரு”, நதியாள்.
“சரி. இன்னிக்கு நைட் டின்னருக்கு பிரஸ்ஸா போகணும். வேற டிரஸ் இருக்கா?”, சரண்.
“இல்ல சார்.ஐ கேன் மேனேஜ்”, நதியாள்.
“சரி. நீட்டா இருக்கணும். மீட்டிங் போறப்ப அதுவும் டின்னர் போறப்ப ரொம்பவே பிரஸ்ஸா இருக்கணும். தேவைபட்டா வீட்டுக்கு போய் பிரஸ் ஆகி ரெடி ஆகிக்கலாம்”, சரண்.
“அகரன் சார் பர்மிஷன் குடுத்தா போயிட்டு வரேன்”, நதியாள்.
“அகரன் கேபின்ல தான் இருக்கான். போய் பாரு”, சரண் கூறிவிட்டு தன் வேலைகளைக் கவனித்தான்.
“ரொம்ப தான் சின்சியரா இருக்கான். இது நம்ம சரண் தானா? “, என மனதிற்குள் நினைத்தாள் நதி.
(நமக்கும் அதே தான் தோணுது)
“மே ஐ கம் இன் சார்”, நதியாள்.
“கம் இன்…”, அகரன்.
“சார்… நைட் டின்னர் மீட்டிங்க்கு வீட்டுக்கு போய் பிரஸ் ஆகி வரலாமான்னு சரண் சார் உங்கள கேட்டுக்க சொன்னார்”, நதியாள்.
“நானே சொல்லணும்னு நினைச்சேன் நதிமா. இப்ப கிளம்பி சைட் பாத்துட்டு , அப்படியே உன் வீட்ல டிரஸ் எடுத்துட்டு, என் வீட்டுக்கு போய் பிரஸ் ஆகிக்கலாம். லன்ச் முடிஞ்சது தானே?”, அகரன்.
“ஓகே சார்… என் திங்க்ஸ் எடுத்துக்கவா?”, நதியாள்.
“காலைல காட்டின இன்டீரியர்ல எதாவது சேன்ஞ் பண்ணி இருக்கியா?”, அகரன்.
“ஆமா.சிலத சேன்ஞ் பண்ணி இருக்கேன் சார்”,நதியாள்.
“காட்டு”, அகரன்.
“சார்…”, என தன் லேப்டாப்பைக் காட்டினாள்.
அதைக் கண்டு அகரன் மகிழ்ந்து,” நல்ல ட்ரை நதிமா. இதை இன்னிக்கு மீட்டிங்ல நான் காட்டப் போறேன். இதை எனக்கு மெயில் பண்ணிடு. கிளம்பலாமா?”, அகரன்.
“இப்பவேவா?”, நதியாள் கண்கள் விரித்துக் கேட்டாள்.
“ஏன் வேற எதாவது வேலை இருக்கா உனக்கு இங்க?”, அகரன்.
“இல்ல…. நான் தாத்தாகிட்ட சொல்லிட்டு வரேன்”, நதியாள்.
“வா… நானும் அவர பாக்கணும்”, அகரன் அவளையும் அழைத்தான்.
“நீங்க முன்ன போங்க சார். நான் மெயில் பண்ணிட்டு வரேன்”, நதியாள்.
“சரி. உன் திங்க்ஸ் எடுத்துக்க… மீட்டிங்கு என் லேப்டாப் பேக்ல எல்லாமே எடுத்து வச்சிக்கலாம். ஸ்வப்னாகிட்ட பைல் வாங்கிட்டு வந்துடு”, அகரன்.
“சரிங்க சார்”, நதியாள்.
அகரன் ஒரு நொடி நின்று அவளைப் பார்த்துவிட்டுச் சென்றான்.
“ஏன் இப்படி பாத்துட்டு போறான்? நாம அப்படி என்ன சொன்னோம்?”, என நதியாள் தனக்குதானே பேசிக்கொண்டு வேலையை முடித்துவிட்டு, ஸ்வப்னாவிடம் சென்று பைல் வாங்கிக்கொண்டு சுந்தரம் தாத்தாவை பார்க்கச் சென்றாள்.
“தாத்தா….”, என நதியாள் அவரின் அருகில் வந்து அமர்ந்துக் கொண்டாள்.
இன்னொரு பக்கம் அகரன் அமர்ந்து இருந்தான். அவள் தாத்தாவிடம் கொஞ்சி மிஞ்சி பேசுவதை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான். அவனின் பார்வை நதியாளைத் தவிர அங்கிருந்த சரண், ஸ்டெல்லா, மீரா, திலீப், ரிஸ்வானா என நம் சுந்தரம் தாத்தா கூடக் கவனித்தார். இந்த நதியாள் மட்டும் அவனைக் கவனிக்காமல் ஓயாமல் வாயடித்துக்கொண்டு இருந்தாள்.
“மச்சான்…. “, சரண் அகரனின் காதருகில் வந்து அழைத்தான்.
“ம்ம்….”, அகரன் நதியாளைப் பார்த்தபடியே உம் கொட்டினான்.
“கீழ தரையெல்லாம் நனையுது கொஞ்சம் டேப் க்ளோஸ் பண்ணா பரவால்ல”, சரண் சிரிக்காமல் கூறினான்.
“ம்ம்…”, அதற்கும் அகரன் உம் கொட்டினான்.
“சார்… அவர் இந்த உலகத்துலயே இல்ல …. நீங்க ஸ்பீக்கர்ல கத்தினாலும் அவருக்கு கேக்காது, இதுல இவ்வளவு மெதுவா சொன்னா கேக்குமா?”, திலீப்.
“அதுவும் சரிதான்…. “, எனக் கூறிவிட்டு அகரனை தோளில் தட்டினான்.
“என்னடா?”, அகரன் எரிச்சலுடன் கேட்டான்.
“வாய மூடு. கீழ ஊத்துது”, சரண்.
“என் பொண்டாட்டி நான் பாக்கறேன் உனக்கென்ன டா?”,அகரன்.
“இன்னும் லவ்வே சொல்லல அதுக்குள்ள பொண்டாட்டி….”, சரண்.
“அதான் நேத்து கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டுட்டால்ல அவ”, அகரன்.
“அப்ப கல்யாணம் ஏற்பாடு பண்ணிடவா?”, சரண்.
“பண்ணுடா… நல்லவனா ரொம்ப என்னால நடிக்க முடியாது. அப்பறம்……”, அகரன் நதியாளை இரசித்தபடிக் கூறினான்.
“அப்பறம்…..?”, சரண் புருவம் உயர்த்திக் கேட்டான்.
“இல்ல வேணாம் நல்லா இருக்காது… “, அகரன் சற்றே வெட்கத்துடன் கூறினானோ??
“சரி கிளம்பு. மீதி ஜொல்லு நைட் வரைக்கும் ஊத்திக்க…”, சரண் கடுப்புடன் கூறினான்.
“தங்கச்சி புருஷனுக்கு மரியாதை குடுக்ணும்னு உனக்கு தோணுதா பாரு”, எனக் கூறியபடி அகரன் எழுந்து ,” நதி நாம கிளம்பலாம்”, எனக் கூறினான்.
“வரேன் அகன்… சாரி சார்”, நதியாள் நாக்கை கடித்துவிட்டுக் கூறினாள்.
அவளின் செயலில் உள்ளம் தடுமாறி தடம் மாறியதோ என எண்ணத்தோன்றியது அகரனுக்கு. பின் ஆழ்ந்த மூச்சை இழுத்துவிட்டுத் தலையைக் கோதியபடி அங்கிருந்து விடைபெற்றுக் கிளம்பினான்.
“வரேன் காய்ஸ்… வரேன் தாத்தா… மீரா ஸ்டெல் அப்பா தாத்தா மாமாவ பாத்துக்கோங்க. நான் வர லேட் ஆகலாம். டேக் கேர். பாய்”, என அவளும் விடைபெற்றுச் சென்றாள்.
“தாத்தா… அகரன் பார்வை பேச்சு எதுவுமே சரியில்லை இன்னிக்கு…”, சரண்.
“இன்னிக்கு இல்லடா… திருவிழால நம்ம விட்ல ஒருத்தர் மேல ஒருத்தர் விழுந்தாங்களே அப்பவே சரியில்லை”, சுந்தரம்.
“இது எப்ப நடந்துச்சி?”, சரண்.
“நீ நதியாள யாருன்னு கேட்டு உன் அப்பன்கிட்ட வசவு வாங்கினியே…. அப்ப தான் நீ வரதுக்கு முன்ன. ஆனா என் பேரனுக்கு அதுக்கப்பறம் தான் புரிஞ்சி இருக்கு… என் பேத்திக்கு இன்னிக்கு புரிஞ்சிரிச்சி”, சுந்தரம் தாத்தா கண்ணடித்துக் கூறினார்.
“ம்ம்… இரண்டும் இப்படியே கண்ணாமூச்சி எத்தனை நாள் ஆடுவாங்கன்னு பாக்கலாம்”, சரண்.
“பாக்கலாம் பாக்கலாம்…. இன்னிக்கு எனக்கு வெளிநாட்டு சரக்கு வாங்கி குடு டா”, சுந்தரம்.
“அத உங்க ஆசை பேரன்கிட்டயும் , பேத்திகிட்டயும் கேளுங்க”, சரண் முறைத்தபடிக் கூறினான்.
“நீயும் என் செல்லம் தான்டா… என் ராசா… ஒரு தடவை டா”, சுந்தரம்.
“அப்ப சீக்கிரம் எனக்கு ஒரு நல்ல அழகான பொண்ணா பாத்து கட்டி வைங்க”, சரண்.
“நீயே தேடிக்க நான் கட்டிவைக்கறேன். தேட்ற வேலைய எனக்கு குடுக்காத”, சுந்தரம்.
“அப்படின்னா… இப்படி இத கேக்கற வேலையும் என்கிட்ட வேண்டாம்”, எனக் கூறிவிட்டு சரண் சென்றுவிட்டான்.
அகரனைத் தொடர்ந்து சென்று நதியாள் காரில் பின்பக்கம் ஏறினாள்.
“மேடம் … முன்ன வாங்க”, அகரன்.
லேப்டாப் மற்றும் பைல்களை பின்னால் வைத்துவிட்டு நதியாள் முன்னால் அமர்ந்தாள்.
இருவருக்கும் இது முதல் பயணம்…..
இல்லை இரண்டாவது பயணம்…
ஆனாலும் கோபம் இன்றி இருவரும் காதலை உணர்ந்தபின் செல்லும் முதல் பயணம். மனம் தித்திக்கவே செய்தது. இருவரும் முகத்திலும் அத்தனை குஷி, அத்தனை பொலிவு.
அகரன் காரை ஸ்டார்ட் செய்து தன் சீட்பெல்ட் அணிந்து கொண்டு நதியாளுக்கும் அணிவித்தான்.
அந்த நொடிகள் நதியாளுக்கு மூச்சே நின்றுவிட்டது. அத்தனை அருகில் அகரனின் முகத்தை கண்டதும், அவனின் மூச்சுக்காற்று அவளின் முகத்தில் பட்டதும் உடலும் மனமும் தடதடக்கத் தொடங்கியது.
“எப்பவும் சீட் பெல்ட் போட்டுக்கணும் நதிமா…”, அகரன் கூறியபடி அவளைப் பார்த்தான்.
அவளோ தன்னை சமன்செய்ய பிரயத்தனப்பட்டுக் கொண்டு இருந்தாள்.
“ம்ம் …”, நதியாள்.
“ஏன் ஒருமாதிரி இருக்க நதிமா? ஆர் யூ ஓகே?”, அகரன்.
“ஒன்னும் இல்ல சார். போலாம்”, நதியாள்
அகரன் அவளைக் கூர்ந்துக் கவனித்துப் பார்வையை நிலைநிறுத்தினான்.
அவனின் பார்வை இவளின் ஆழ்மனம் வரை பாய்ந்து செல்வதைப் போல தோன்ற, அவனை பார்க்கமுடியாமல் முதல் முறை வேறுபக்கம் தலையைத் திருப்பினாள்.
“என் மேல கோவமா நதி?”, அகரன்.
“அதுல்லாம் இல்ல சார். ஏன் கேக்கறீங்க?”, நதியாள்.
“இன்னும் சார்னு கூப்பிடற…. நாம ஆபீஸ் விட்டு வெளியே வந்துட்டோம். இனிமே யாராவது இருந்தா மட்டும் சார்னு கூப்பிடு மத்தபடி எப்பவும் போல கூப்பிடு”, அகரன்.
“இல்ல… ஆபீஸ்ல இது தான் சரி. வெளியே வந்தா எப்பவுமா போல கூப்பிடறேன் சார்”, நதியாளுக்குக் கூறி முடிப்பதற்குள் மூச்சிறைத்தது.
“ஏன் இப்படி மூச்சு வாங்குது நதிமா ? உடம்பு சரியில்லையா ?”, அகரன் பதற்றத்துடன் அவளின் நெத்தி கன்னம் கழுத்து என கை வைத்துப் பார்த்தான்.
“ஒன்னுமில்ல அகன். போலாம் டைம் ஆச்சி”, நதியாள் அவனின் கையை எடுத்துவிட்டபடிக் கூறினாள்.
“தட்ஸ் குட் கேர்ள்… பர்ஸ்ட் நான் சாப்பிடணும் நதிமா. செம பசில இருக்கேன். போற வழில நல்ல ரெஸ்டாரெண்ட் உனக்கு தெரிஞ்சா சொல்லு”, எனக் கூறிக் காரை எடுத்தான்.
“ஸ்ஸ்சப்பாஆஆஆஆ…. என்ன இப்படி தடதடக்குது மனசு? அவன் நம்மல தொட்டு பேசறது ஒன்னும் புதுசு இல்லையே… இன்னிக்கு ஏன் இப்படி பீல் ஆகுது? நேத்து கூட இந்தளவுக்கு இல்லை, ஹார்ட் வெளியே வந்துடும் போல.. இனிமே முடிஞ்சவரைக்கும் டிஸ்டன்ஸ் மெயின்டெயின் பண்ணணும்டா சாமி… “, என மனதிற்குள் நினைத்துக் கொண்டு வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தாள் நதி.
“நதிமா சாங் போடவா?”, அகரன்.
“போடு அகன்”, நதியாள்.
“என் மொபைல்… இல்ல.. உன் மொபைல்ல இருந்து கனெக்ட் பண்ணு ப்ளூடூத்ல..”, அகரன்.
“சரி… பென்டிரைவ் எதுவும் இல்லையா கார்ல?”, நதியாள்.
“இருந்தது. சரண் கிட்ட இருக்கும்”, அகரன்.
வேறென்ன வேறென்ன வேண்டும் பாட்டு மின்னலே படத்துல இருந்து ஓடிட்டு இருந்தது.
“நம்ம சிட்டுவேஷனுக்கு தகுந்தா மாதிரியே ஓடுது இல்லயா நதிமா?”, அகரன் நதியாளைப் பார்த்தபடிக் கேட்டான்.
நதியாள் அமைதியாக வந்தாள்.
ஓ மௌனம் மௌனம் மௌனம் மௌனமே மௌனமே வேறென்ன வேண்டும் வேண்டும் செய்கிறேன் செய்கிறேன்…. இந்த வரிகளை அகரன் மிகவும் ஏக்கத்துடன் பாட , நதியாள் திருதிருவென்று முழித்தாள்.
அவளின் முகபாவனைக் கண்டு அகரனுக்கு சிரிப்பு வர சத்தமாக சிரித்துவிட்டான்.
“எதுக்கு சிரிக்கற அகன்?”, நதியாள் அகரனை நோக்கித் திரும்பி அமர்ந்துக் கேட்டாள்.
“வந்தது….” , அகரன் இன்னும் சிரித்தபடிக் கூறினான்.
“சிரிக்கறத நிறுத்து…”, நதியாள்.
“ஹாஹா ஹாஹா”, அகரன்.
“நிறுத்து அகன்…”, நதியாள்.
“ஹாஹா ஹாஹாஹா”, அகரன்.
சட்டென்று நதியாள் கைநீட்டி அகரனின் வாயை மூடினாள். அகரன் அவளின் கை ஸ்பரிசத்தில் மனம் மயங்கி கைகளுக்கு முத்தம் கொடுத்தான். நதியாள் சட்டென்று தன் கையை இழுக்க, அது அகரனின் பிடியில் இருந்தது.
“விடு அகன்…”
“ம்ஹூம்”
“ப்ளீஸ் விடு அகன்….”
“ஹ்ம்ம்…”, மனமே இல்லாமல் பிடியைத் தளர்த்தினான் அகரன்.
“இனிமே இப்படி பண்ணாத அகன்…”, நதியாள்.
“எப்படி?”, அகரன்.
“இப்படி சடனா கைய பிடிக்காத”, நதியாள்.
“நானேவா இழுத்தேன்? நீ தான் என் வாயை மூடின, நான் பிடிச்சேன்”, அகரன்.
“……..”, நதியாள் மீண்டும் திருதிருவென்று விழிக்க , அதைக் கண்ட அகரனுக்கு தன்னைக் கட்டுப்படுத்துவது சற்றே சிரமமாகி விட்டது.
“நல்ல வேலை ரெஸ்டாரெண்ட் வந்துரிச்சி…. “, என இருவரும் மனதிற்குள் கூறிக் கொண்டனர் ஒரே போல ஒரே நேரத்தில்……
“சாப்பிடறியா நதிமா?”, அகரன்.
“வேணாம் அகன். நான் சாப்டேன்”, நதியாள்.
“சரி கம்பெனி குடு. ஜூஸ் ஆர் ஐஸ்கிரீம்?”, அகரன்.
“லெமன் ஐஸ் சோடா”, நதியாள்.
“ஓகே… “, அகரன் தனக்கும் அவளுக்கும் ஆர்டர் கொடுத்து விட்டு அலுவலக விஷயமாகப் பேசிக்கொண்டு இருந்தான்.
நதியாளிடம் சில கேள்விகள் கேட்டு அவளுக்குத் தெரியாததை விளக்கம் கொடுத்தபடி சாப்பிட்டு முடித்துவிட்டு சைட்டிற்குச் சென்றனர்.
பின் அங்கும் வேலை முடிந்ததும் நதியாள் தங்கியிருக்கும் இல்லம் சென்றனர்.
முழு கேஸூவலாக இல்லாமல், பாதி கேஸுவல் பாதி ப்ரொபசனலான உடையை எடுத்துக் கொண்டு அங்கிருந்து அகரனின் இல்லம் நோக்கிப் புறப்பட்டனர்.
அகரனும் சரணும் ஒரு அபார்ட்மெண்டில் தான் குடியிருந்தனர். நிச்சயம் கோடியில் தான் அங்கு வீடுகள் விற்கப்படும். அத்தனை நேர்த்தி, சுத்தம், பாதுகாப்பு வசதிகள் முதல் வீடுகளின் முன் கதவமைப்பு வரை அங்கிருப்பவர்களின் வருமான அளவைக் காட்டியது.
“வெல்கம் டூ ஹவர் ஹோம் பேபி”, அகரன் அவளின் கைபிடித்து உள்ளே அழைத்து வந்தான்.
அங்கே அவள் முதலில் கண்டது………