30 – அகரநதி
ஹோட்டல் வந்து சேர்ந்தவர்கள் மைரா இருக்கும் இடம் அறிந்து அங்கே சென்றனர். நதியாள் அகரனையும் சரணையும் கடந்து கோபத்தில் முன்னால் சென்றாள்.
அவள் வருவதை தன்னெதிரில் இருக்கும் கண்ணாடி வழியாக பார்த்துக்கொண்டு இருந்தான் மைராவுடன் அமர்ந்திருந்தவன்.
அவள் நடையின் வேகம், அவளின் வனப்பு என்று அனைத்தையும் தன் முன்னால் இருக்கும் கறி இரசத்தைக் குடித்தபடிக் கண்ணாடியில் இரசித்துக்கொண்டு இருந்தான்.
மைரா பேசுவதை காதில் வாங்காமல் நதியாளைக் கண்களால் களவாடியபடி இருந்தான் அவன்.
மைராவின் டேபில் அருகில் வந்தவள் சட்டென்று நின்று அகரனையும் சரணையும் முன்விட்டு பின்னே வந்தாள். அவர்களை முன்விட்டு வந்ததால் அவளும் இங்கே தான் வருகிறாள் என அறிந்து தன்னை ஒருமுறை சரிபார்த்துக்கொண்டு அவளிடம் உரையாடக் காத்திருந்தான்.
“ஹாய் மைரா…. “, அகரன்.
“ஹேய் அகர்…. வா… வா சரண்….. ஹௌ ஆர் யூ போத்?”, என மைரா சரணையும் அகரனையும் வரவேற்றாள்.
“ஹாய்…. மைரா. வீ ஆர் பைன். ஹௌ அபோட் யூ?”, என சரண் கேட்டான்.
“பைன்….. “, மைரா சிரித்தபடி பதிலளித்துவிட்டு நதியாளைக் கண்டு சிறிதாக புன்னகைத்துவிட்டு அவர்கள் அமர இருக்கையைக் காட்டினாள்.
“இவர்…….”, அகரன் அருகில் இருந்தவனை காட்டிக் கேட்டான்.
“ஐ அம் மதுரன்……. மதன் இன்டஸ்ட்ரீஸ் எம்.டி. “, என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.
“ஹலோ மிஸ்டர் மதுரன்……..உங்கள பத்தி கேள்வி பட்டு இருக்கேன். இப்ப தான் உங்கள பாக்க வாய்ப்பு கெடச்சி இருக்கு”, அகரன் கைக்குழுக்கினான்.
சரணும் பரஸ்பர அறிமுகம் மேற்கொண்டு கைகுழுக்கினான்.
“ஹாய் கார்ஜியஸ் …. ஐ ம் மதுரன்…”, என நதியாளிடம் கைநீட்டினான்.
“ஹாய்…. ஐ ம் நதியாள்…”, நதியாளும் மரியாதை நிமித்தமாக கைக்குழுக்கினாள்.
“யூ லுக் வெரி ப்யூட்டிபுல். ஐ லைக் டு டேக் ஒன் செல்பீ வித் யூ. மே ஐ?”, என மதுரன் தன் மொபைலை எடுத்துக்கொண்டே அருகில் வந்தான்.
“சாரி மிஸ்டர் மதுரன். ஐ ம் நாட் இன்ட்ரெஸ்டட். நவ் வீ கேன் ப்ரொசீட் த மீட்டிங் இஃ யூ டோன்ட் மைன்ட்”, என நதியாள் அகரனின் அருகில் தன் சேரை எடுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தாள்.
அகரனும் சரணும் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு மைராவை பார்த்தனர்.
“இவர் தான் இந்த ஹோட்டல்ல என் பார்ட்னர். நான் முன்னமே சொல்லி இருந்தேன்ல. மதன் இன்டஸ்ட்ரீஸ் மதனோட ஒன்லி சன்”, மைரா அவனைப் பற்றிக் கூறினாள்.
“ஓஓ….. தட்ஸ் பைன். இப்ப டிசைன்ஸ் பாக்கலாமா?”, சரண் அடுத்த பேச்சை ஆரம்பித்தான்.
“சாப்பிட்டுட்டு பாக்கலாமே … நான் ஆர்டர் பண்ணவா?”, மதுரன்.
“அவங்க அவங்க விருப்பப்படறத ஆர்டர் பண்ணிக்கட்டும் மது. நம்ம புட் வந்துரிச்சி”, என மைரா அவனை தன்பக்கம் திருப்ப முயன்றாள்.
“எல்லாரும் ஒன்னா உக்காந்து ஷேர் பண்ணிக்கலாம். வீ ஆர் யங்ஸ்டர்ஸ் மைரா. வீ கேன் மூவ் பிரண்ட்லி ஐ திங். வாட் யூ சே மிஸ்டர் அகரன்?”,என மதுரன் மைராவிடம் ஆரம்பித்து அகரனிடம் முடித்தவன் பார்வை மட்டும் நதியாளை வட்டமிட்டுக்கொண்டு இருந்தது.
“ஓக்கே…. நோ ப்ராப்ளம்”, என அகரன் சரண் இருவரும் நதியாளுக்கு பிடித்த வகைகளை ஆர்டர் செய்தனர்.
நதியாள் அமைதியாக உட்கார்ந்திருப்பதைக் கண்ட மதுரன்,” ஹேய் தியா…. நீ ஏன் அமைதியா இருக்க? உனக்கு பிடிச்சதை ஆர்டர் பண்ணு”, எனக் கூறினான்.
“எனக்கு வேணும்கிறதை இவங்க ஆர்டர் பண்ணிட்டாங்க மிஸ்டர்.மதுரன். தேங்க்ஸ் பார் யுவர் கன்சர்ன்”, எனக் கூறி வேறுபக்கம் வேடிக்கை பார்ப்பதைப் போல திரும்பிக் கொண்டாள் நதி.
“ஓகே. கால் மீ பை நேம் தியா. நோ பார்மாலிட்டீஸ் பிட்வீன் அஸ்”, என மதுரன் அவளிடம் பேச்சை வளர்த்தான்.
“ஐ ம் ஜஸ்ட் அசிஸ்டண்ட் ஆப் அகரன். நீங்க என்கிட்ட இந்தளவுக்கு பேசணும்னு எதுவும் இல்ல மிஸ்டர் மதுரன். வீ ஆர் ஜஸ்ட் அக்குயுன்டன்ஸ் பை திஸ் பிஸ்னஸ் மீட். நத்திங் அதர் தென் தட். அண்ட் கால் மீ நதியாள்”, எனக் கூறினாள்.
“உன் எல்லை இதுதான் அதிலேயே நீ நின்று கொள்”, என நேரடியாக கூறிவிட்டு அமைதியாக சரணிடம் பேச்சுக்கொடுத்துக் கொண்டு இருந்தாள் நதி.
மைராவிற்கு மதுரனை சமாளிப்பது சிரமமாகத்தான் போய்விட்டது. அவன் யாருக்கும் அடங்கமாட்டான். அவனை எதிர்த்து பேசினாலே அவர்களை ஒருவழி செய்துவிடுவான். அவனாக அனைத்தும் செய்தால் தான், அவனை கட்டாயப்படுத்தவோ, ஒரு கட்டத்திற்குள் நிற்க வைக்கவோ யாராலும் முடியாது. இந்த முப்பது வயதிற்குள் அவனின் அப்பாவின் தொழிலை கையில் எடுத்து பலமடங்கு உயர்த்தி இருக்கிறான்.
பெண் பித்தன் இல்லை தான் அவன். ஆனால் ஒன்றின் மேல் கண் வைத்துவிட்டால் அதை அவனிடம் இருந்து காப்பதும், அவனை தள்ளி நிற்க வைப்பதும் மிகவும் கஷ்டம்.
அவன் வைத்தது தான் சட்டம் அவனின் காலடிகள் பதியும் இடமெங்கும். இளவயதிலேயே இத்தனை அறிய காரியங்களைச் செய்தவனை எவரால் கட்டுப்படுத்த இயலும் ???
இப்படிப்பட்டவனை நதியாள் நேரடியாக உன் எல்லையில் நின்று கொள் எனக் கூறியது மைராவிற்கு சற்றுப் பதற்றத்தைக் கூட்டியது. மைரா இவனிடம் பழகிய இத்தனை ஆண்டுகளில் பொதுவான கலந்துரையாடுததில் கூட அவனை எதிர்க்க முடியாமல் படிந்து போனது தான் அதிகம்.
அவன் பக்கம் அத்தனை ஆணித்தரமான காரணம் இருக்கும் அவனின் ஒவ்வொரு கூற்றிலும். யாராலும் மறுத்து பேசவே முடியாதபடி தன் வாதங்களையும், செயல்களையும் முன் வைப்பான் எப்பொழுதும்.
அடுத்து என்ன நடக்குமோ என்று பயம் கூட வந்துவிட்டது மைராவிற்கு. அகரனிற்கு இது முதல் ஸ்டார் ஹோட்டல் பிராஜெக்ட். அவனின் திறமையை எடுத்துக்கூறி அகரனிடம் தான் இதை கொடுக்க வேண்டும் என்று இருதரப்பிலும் பேசி முடிவெடுக்க வைத்தாள்.
அகரனின் டிசைன்களும், கோட் – ம் அவர்களுக்கு திருப்தியளித்ததால் மறுப்பின்றி அவனிற்கு இந்த பிராஜெக்டை கொடுக்க மைராவின் தந்தையும் ஒப்புக்கொண்டார்.
இப்பொழுது நதியாளினாள் இந்த பிராஜெக்டை மதுரன் நிராகரித்துவிட்டால் அகரனின் தொழிலிற்கு இது ஆபத்தான பாதிப்பாக அமையும்.
நதியாளின் பதிலைக் கேட்டவன் மௌனமாக புன்னகைத்துவிட்டு ,” ஓக்கே மிஸ் நதியாள். நைஸ் டூ மீட் யூ”, எனக் கூறிவிட்டுச் சாப்பிட ஆரம்பித்தான்.
பின் அனைவரும் சாப்பிட ஆரம்பிக்க, அகரனும் சரணும் நதியாளுக்கு அனைத்தும் பார்த்துப் பார்த்து செய்வதைக் கவனித்தான்.
“நதிமா…. இந்தா இத சாப்பிடு”, என அகரன் தன் தட்டில் இருந்து அவளுக்கு எடுத்து வைக்க, சரண் ஒருபக்கம் அவளிற்கு பரிமாறிவிட்டு தான் உண்டான்.
“இத டேஸ்ட் பண்ணு, அத டேஸ்ட் பண்ணு”, என சரண் அகரன் நதியாள் மூவரும் தனி உலகத்தில் அமர்ந்து இருந்தனர்.
அவர்கள் மூவரையும் கவனித்தவன் மைராவை பார்த்தான். அவள் சாப்பிடாமல் அமர்ந்து இருக்கவும்,” சாப்பிடு மைரா. நத்திங் டு வொர்ரி”, என அவளின் கலக்கத்தைக் குறைத்துச் சாப்பிடக் கூறினான்.
“இல்ல மது. அவ பேசினத……”, மைரா.
“அது ஒன்னும் இல்ல. என் பார்டர சொன்னாங்க அவ்வளவு தானே. நான் ஒன்னும் தப்பா எடுத்துக்கல. சீக்கிரம் சாப்பிடு டிசைன்ஸ் பாக்கனும்”, எனக் கை கழுவி ரெஸ்ட் ரூம் சென்றான்.
இருபது நிமிடத்தில் அனைவரும் சாப்பிட்டு முடித்து தங்கள் வேலையை ஆரம்பித்தனர்.
“மதுரன் இது எல்லாம் இன்டீரியர்ல நாங்க செய்யலாம்னு இருக்கோம். நீங்க இரண்டு பேரும் பாத்துட்டு ஓகே சொன்னா இதையே பிக்ஸ் பண்ணிக்கலாம்”, அகரன் தன் லேப்டாப்பை அவர்களின் முன் வைத்துக் கூறினான்.
மதுரனும் மைராவும் அனைத்து டிசைன்களையும் பார்த்தனர். ஒருசில டிசைன்களில் சந்தேகம் கேட்க, நதியாள் அதை நிவர்த்தி செய்தாள். அகரனும் சரணும் முகத்தில் புன்னகையுடன் அவளைப் பேச அனுமதித்தனர்.
“இது டிசைன் பண்ணது யாரு?”, என மதுரன் ஒரு டெரஸ் கார்டன் டிசைனைக் காட்டினான்.
“இது பண்ணது திலீப் அண்ட் ஸ்டெல்லா”, நதியாள்.
“நல்ல ட்ரை. அவங்கள என்னை கான்டாக்ட் பண்ணச் சொல்லுங்க. அப்பறம் இந்த சூட் ரூம் டிசைன்ஸ் யாரு பண்ணா?”, மதுரன்.
“நான் தான் சார்”, நதியாள்.
“ஓ.. ரியலி. இட்ஸ் அமேஸிங். இந்த கான்செப்ட் ரொம்பவே நல்லா இருக்கு. சோ நம்ம ஸ்டார் ஹோட்டல்ல இரண்டு கான்செப்ட்ல சூட் ரூம் குடுக்கலாம் உங்க டிசைன் படி. ரைட்?”,மதுரன்.
“நாட் ஒன்லி சூட் ரூம்ல். மத்த ரூம்லயும் ப்ளோர் வைஸ் கான்செப்ட் ரெடி பண்ணலாம். அதுக்கு கொஞ்சம் காஸ்ட் அதிகம் ஆகும். இப்ப இருக்கறதை விட இருபது இல்லைன்னா முப்பது பர்சண்ட் ஆகலாம் மே பீ”, நதியாள்.
“நோ நதியாள். அது நம்ம கம்பெனி மேல தப்பான அபிப்ராயம் வர வைக்கும். நம்ம கோட்ல எதுலாம் முடியுமோ அதை செய்யலாம். இப்ப காஸ்ட் அதிகம் பண்றது நம்ம நேம்அ பாதிக்கும்”, சரண் நதியாளைக் கண்டித்து மறுத்துப் பேசினான்.
“எஸ் சார். அதனால் தான் நான் இப்பவே சொல்றேன். வழக்கமான ஸ்டார் ஹோட்டலா இல்லாம இது தனிதன்மையோட தெரிய இதுலாம் பண்ணலாம்னு ஐடியா தான். டெசிஷன் இவங்களோடது”, என நதியாள் தன்மையாக தன் எண்ணத்தை முன்வைத்தாள்.
“நோ சரண். அவங்க சொல்றது சரிதான். வழக்கமான ஸ்டார் ஹோட்டலா இருக்கறத விட யுனிக்கா இருந்தா அந்த ரீச் லெவல் வேற. காஸ்ட் பத்தி பிராப்ளமே இல்ல. எனக்கு பிடிக்கற மாதிரி டிசைன்ஸ் அண்ட் கான்செப்ட் காமிங்க தாராளமா காஸ்ட் டபுள் கூட பண்ணிக்கலாம். பட் ஐ வான்ட் பெஸ்ட்”, மதுரன்.
அகரனும் சரணும் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு,” சரி மதுரன். நாங்க டிசைன்ஸ் குடுக்கறோம் .உங்களுக்கு பிடிச்சா அப்படியே பண்ணிக்கலாம்”, என அகரன் கூறினான்.
“தட்ஸ் கூல் காய்ஸ்…. பை த வே, ஐ லைக் ஆல் யுவர் டிசைன்ஸ். சின்ன சின்ன சேன்ஞ்ஜஸ் தான் எனக்கு பண்ணணும். யார் டிசைன் பண்ணாங்களோ அவங்களே என்னை காண்டாக்ட் பண்ணா நான் என் டிமேன்ட்ஸ் சொல்லி சேஞ்ச் பண்ணிக்குவேன். திஸ் இஸ் மை கார்ட். இது பர்சனல் நம்பர். எனி டைம் யூ கேன் கால் “, என மூவருக்கும் கார்ட் கொடுத்து நதியாளைப் பார்த்தபடிக் கூறினான்.
“தேங்க்யூ மது. உனக்கு பிடிக்குமோ பிடிக்காதோன்னு டென்சனா இருந்தேன். உனக்கு பிடிச்சிரிச்சி இனி அகரனும் சரணும் பாத்துக்குவாங்க. எனக்கு இனிமே டென்சன் இல்ல”, எனக் கூறி மைரா தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டாள்.
“ஹாஹாஹா…. சோ யூ திங். ஐ வோன்ட் டிஸ்டர்ப் யூ எனி மோர்?”, மதுரன் அழகாக சிரித்தபடிக் கேட்டான்.
அடடா….. என்ன அழகான சிரிப்பு? மதுரன்…. பெயருக்கேற்றார் போல தனித்தன்மையானவன் தான். ஆறடிக்கும் சற்றே குறைந்த உயரம், மாநிறம், அலையென பறந்து அவனை மேலும் அழகனாய் காட்டும் தலைமுடி, அடர்த்தியான மீசை, திடமான உடற்கட்டு என பார்ப்பவரை மயக்கும் ஆணழகன் தான். பல் தெரிய சிரிக்கும்பொழுது தாடையில் விழும் குழி அவனை மேலும் கவர்ச்சியாகக் காட்டியது.
“நான் அப்படி சொல்லல மது…..”, என மைரா தடுமாறினாள்.
“கூல் மைரா ….. நான் சும்மா ஃபன் பண்ணேன். ஏன் இவ்வளவு டென்சன் ஆகற?”, மதுரன்.
“இல்ல. ஒன்னுமில்ல. நீ எப்படி சொல்றியோ அப்படியே இவங்க டிசைன்ஸ் குடுப்பாங்க. அவ்வளவு தான் சொல்ல வந்தேன்”, மைரா தடுமாற்றத்தைக் குறைக்க முயன்று பதிலளித்தாள்.
“ஓகே…. பை த வே…. ஐ லைக் யூ ஆல் காய்ஸ்… சோ ஒரு நாள் என்கூட லன்ச் ஆர் டின்னர் அதர் தென் பிஸ்னஸ் மீட் வரணும். அண்ட் மிஸ். நதியாள் நீங்களும். அகரனுக்கு அசிஸ்டண்ட்னு சொல்லிட்டு வராமா இருக்கக் கூடாது. சரணோட சிஸ்டர் இன்பேக்ட் அனதர் ஓனர் ஆப் கம்பெனி. சோ ஒரு பார்ட்னரா நீங்களும் வரணும். நவ் ஐ ஹேவ் டூ லிவ். பாய்”, என அனைவருக்கும் பொதுவாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றான் மதுரன்.
என்ன அவன் பாட்டுக்கு சொல்லிட்டு போயிட்டே இருக்கான். அகரன் சரணோட குட்டையும் உடச்சிட்டுல்ல போய்ட்டான் பாவிப்பய….. நம்ம நதி செல்லம் என்ன ரியாக்ட் பண்றான்னு பாக்கலாம் வாங்க….
“ஹேய் அகர்…. அவளும் உங்க பார்ட்னரா? ஏன் என்கிட்ட சொல்லவே இல்ல?”, மைரா அகரனைக் கேட்டாள்.
“ஆமா மைரா. இதபத்தி அப்பறம் பேசலாம். ஊர்ல இருந்து எங்க அப்பாங்க வந்து இருக்காங்களாம் உடனே நாங்க கிளம்பனும். பாய். சீ யூ “, என சரண் இடைபுகுந்து அவளுக்கு பதிலளித்துவிட்டு அகரனையும் நதியாளையும் அழைத்துக் கொண்டு கிளம்பினான்.
மைரா அவர்கள் செல்வதைப் பார்த்துவிட்டு தானும் கிளம்பினாள் தன் இல்லம் நோக்கி.
“ஏன் இப்படி இழுத்துட்டு வர சரண்? நான் அவங்க முன்னாடி உங்கள எதுவும் கேட்கமாட்டேன். கவலை வேணாம்”, நதியாள் தன் கையை அவனிடம் இருந்து உருவிக்கொண்டு சொன்னாள்.
“அது வந்து நதிமா…..”, அகரன் இழுக்க,” முதல்ல வண்டிய எடு. வீட்டுக்கு போய் பேசிக்கலாம்”, சரண் பேச்சை முடித்தான்.
“உங்க வீட்டுக்கு போங்க”, நதியாள்.
“நம்ம வீடு”, அகரன் அழுத்தமாக கூறிவிட்டு வீட்டை நோக்கி காரைச் செலுத்தினான்.
“ம்க்கும்…. இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல…. எதையும் சொல்றது கிடையாது. கேட்டாலும் பதில் வராது. உங்க வீடுன்னு சொன்னதும் சாருக்கு பொத்துகிட்டு வந்துரிச்சி. பெரிய இவன்னு நினைப்பு”, நதியாள் முணுமுணுத்தாள்.
“திட்றத சத்தமாவே திட்டலாம் நதிமா. நான் ஒன்னும் உன்னமாதிரி கோச்சிக்க மாட்டேன்”, அகரன் சிரித்தபடிக் கூறினான்.
“சரணா…அவன வாய மூட சொல்லு. எதாவது பேசினா நா மனுசியாவே இருக்க மாட்டேன் பாத்துக்க”, என சரணின் தோளில் அடித்தாள்.
“யப்பா….. நீங்க சண்டை போட்டா நீங்க அடிச்சிங்கோங்கடா. என்னை ஏன்டி அடிக்கற பிசாசே? அவன அடி…. அது முடியாது. அவன அடிச்சா உன் முகம் திரும்பிடும், அந்த பயம் அப்படித்தானே ?”, சரண் தன் தோளைத் தடவியபடிக் கூறினான்.
“உன்னை அடிக்கறத விட நூறு மடங்கு அவன அடிப்பேன். இப்ப அவன் கார் ட்ரைவ் பண்ணிட்டு இருக்கான்”, நதியாள்.
“அடேங்கப்பா….. சாமி…. என்னா கரிசனம்?”, சரண்.
மீண்டும் நதியாள் அவனின் தலையில் குட்ட அவன் அவளிடம் சண்டைக்குச் செல்லவென, காரில் கிளம்பும் சமயம் இருந்த அமைதிக்கு இடமில்லாமல் வீடு வந்து சேர்ந்தனர்.
அகரன் சிரித்தபடி வீட்டைத் திறக்க,” சரண் அவன இருக்கச் சொல்லு”,என நதியாள் கூறிவிட்டு ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்தாள்.
“ட்ரஸ் சேன்ஞ் பண்ணிட்டு வரேன் சரண். நீயும் போய் சேஞ்ச் பண்ணிட்டு வா”, என அகரன் நதியாளை கைகளில் ஏந்தியபடி அவனின் அறைக்குச் சென்றான்.
“டேய் அவள ஏன்டா தூக்கிட்டு போற? விடறா அவள”, சரண் கத்திக்கொண்டு இருந்தான்.
அவன் அதை கேட்க ஹாலில் இருந்தால் தானே…. அவன் போய்ட்டான்…. நீ போய் ட்ரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வாடா சரண். அவங்க என்னமோ பேசிக்கட்டும்…..
“விடு அகன்… என்ன கீழ இறக்கி விடு…. விடுடா”, நதியாள் அவனை அடித்தபடிக் கத்தினாள்.
“டேய் சரணா….. நீயெல்லாம் ஒரு அண்ணணா டா? உன் முன்னாடி உன் தங்கச்சிய தூக்கிட்டு போறான் நீ கம்முன்னு நிக்கற”, என நதியாள் சரணைத் திட்டினாள்.
“இதுங்க கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் என் உயிரைத் தான் எடுக்குங்க போல…. இப்பவே அடங்கறது இல்லை இரண்டும். இன்னும் கல்யாணம் நடந்தா என்ன என்ன நடக்குமோ தெர்ல”, சரண் புலம்பியபடி தன்னறைக்குச் சென்றான்.
“ஹேய் ராட்சசி….. கொஞ்சம் அமைதியா தான் இரேன். ஏன் இப்படி கத்தற? நீயா இஷ்டப்பட்டு தானே இப்ப என் கைக்குள்ள இருக்க? அப்பறம் என்ன?”, அகரன் அவளைக் கட்டிலில் கிடத்திவிட்டு அருகில் அமர்ந்தான்.
நதியாள் தன் குட்டு வெளிப்பட்டுவிட்டதைக் கண்டு தன் உதட்டை கடித்துக்கொண்டாள். அவளின் இதழ் சிவப்பில் அகரன் மனம் தடுமாற, அவளின் முகத்தை கையில் ஏந்தினான்.
“இப்படி உதட்ட கடிக்காத செல்லம். பாரு எப்படி செவந்து போச்சி….. அப்பறம் மாமா எதாவது பண்ணிட்டா நீ என்னை தப்பு சொல்ல முடியாது”, அகரன் அவள் காது மடல்களை உரசியபடி இரகசியமாகக் கூறினான்.
“யாருடா மாமா? அதான் கல்யாணம் பத்தி கேட்டா பதில் சொல்லாம ஓட்றல்ல”, நதியாள் அவனைத் தள்ளிவிட்டாள்.
“ஹாஹாஹா…நதியாளுக்கு என்மேல கோபம் வருது…. இது எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா? இத்தனை வருஷத்துல நீ என்மேல கோவப்பட்டு இன்னிக்கு தான் பாக்கறேன். எவ்வளவு நல்ல பீல் தெரியுமா இது?”, அகரன் கூறியபடி மீண்டும் அவளை நெருங்கினான்.
“என்ன பீல்? முதல்ல தள்ளி உட்காரு அகன். இட்ஸ் நாட் ஃபேர்”, நதியாள் எழுந்து நின்றாள்.
“அதே நானும் சொல்லலாம்ல நதிமா….. . இட்ஸ் நாட் ஃபேர் மேரியிங் வித்அவுட் லவ்விங் ஈச் அதர் , யூ நோ”, அகரன் சோபாவில் அமர்ந்தபடிக் கேட்டான்.
“கல்யாணம் பண்ணிட்டு லவ் எவ்வளவு வேணா பண்ணலாம் அகன்”, நதியாளும் அவனை பார்வையால் துளைத்தபடிக் கூறினாள்.
“ஹாஹாஹா…உன்கிட்ட பேசி ஜெயிக்கறது கஷ்டம் தான். பட்….. “, என அவளை அருகில் இழுத்து தன் மேல் போட்டுக்கொண்டான் அகரன்.
அவளின் இடையில் அவன் கைகள் அழுத்தம் கூட்ட இன்னும் அருகில் அவனின் முகத்தைக் கண்டாள்.
“விடு அகன்…. லிவ் மீ பர்ஸ்ட்”, நதியாள் கோபத்தில் அவனை விட்டு எழ முயன்றாள்.
“என்னை பாரு நதி”, அகரன் அவளை தன்னருகில் அமர்த்தி தலை நிமிர்த்தி அவள் கண்களைப் பார்த்தான்.
நதியாள் அவன் கண்களைக் கண்டு தன்னிலை மறக்க அவனையே பார்த்தபடி அமைதியானாள்.
“டூ யூ லவ் மீ? நீ என்னை காதலிக்கறியா நதி?”, அகரன்.
“உன்கிட்ட ஏன் சொல்லனும்? “, நதியாள் முகம் சிவக்க கேட்டாள்.
“என்னை லவ் பண்ணா என்கிட்ட தான் சொல்லணும் பேபி”, அகரன் மயக்கும் புன்னகையுடன் கேட்டான்.
“உன்னை ஒன்னும் லவ் பண்ணல. இன்னிக்கு ஹோட்டல்ல பாத்தோமே அவன தான் லவ் பண்ணப்போறேன்”, நதியாள் சிரிப்பை அடக்கியபடிக் கூறினாள்.
“அவனா? அவன லவ் பண்ணுவ சரி, கல்யாணம் ?”, அகரன் சற்றே உள்ளுக்குள் பொறாமை எழக் கேட்டான்.
“அது உன்னை பண்ணிக்கறேன்”, நதியாள் அவன் பொறாமைப் படுவதைக் கண்டு உள்ளுக்குள் சந்தோஷித்தாள்.
அகரன் உம்மென்று முகத்தை வைத்துக்கொண்டு தள்ளி அமர்ந்தான்.
“என்னாச்சி அகன்? உம்முன்னு உக்காந்துட்ட”, நதியாள் அவனை சீண்டி விளையாட எண்ணி நெருங்கி அமர்ந்தாள்.
“தள்ளி உக்காரு”, அகரன் அவளைத் தள்ளிவிட்டான்.
“ஏன்? நான் கல்யாணம் பண்ணிக்க போறவன் தானே நீ…. நான் இப்படித்தான் உட்காருவேன். ஏன்……உன் மடில கூட உட்காருவேன்”, நதியாள் அவன் மடியில் அமர்ந்தாள்.
“என்னை லவ்வே பண்ணல , அப்பறம் எதுக்கு கல்யாணம் பண்ணணும்? என்னை லவ் பண்ணா மட்டும் தான் கல்யாணம்”, அகரன் கோபமாக இருப்பதைப் போல முகத்தை வைத்துக்கொண்டு அவளைச் சுற்றிக் கைகளைக் கட்டிக்கொண்டான்.
“சரி ஜோக்ஸ் அபார்ட். கொஞ்சம் சீரியஸா பேசணும். நான் ஹால் போறேன் சீக்கிரம் வா”, என வெளியே செல்ல எழுந்தாள் நதி.
“இரு. என் மடில இவ்வளவு நேரம் உட்கார்ந்து இருந்ததுக்கு பீஸ் குடு”, அகரன் அவளை எழவிடாமல் பிடித்துக்கொண்டான்.
“உனக்கு பீஸ்ஸா பர்கர் வேணா வாங்கித்தரேன். அது தான் பீஸ்.. விடு”, என அவனின் பிடியில் இருந்து தப்பி வெளியே வந்தாள்.
அகரன் சிரித்தபடி உடைமாற்றிக்கொண்டு வெளியே வந்தான்.
சரணும் வெளிரே வர நதியாள் பேச்சை ஆரம்பித்தாள்,” எதுக்கு என்னை கம்பெனி பார்ட்னரா சேர்த்தீங்க?”.
“நீயும் இருந்தா நல்லா இருக்கும்னு தான்”, சரண்.
“அது முழுக்க முழுக்க உங்க இரண்டு பேரோட உழைப்பு. அதை இப்ப வந்த நான் எப்படி உரிமை கொண்டாடறது?”, நதியாள்.
“எங்க மேல உனக்கு உரிமை இருக்கா இல்லையா?”, அகரன்.
“சரண் மேல அண்ணன்ங்கிற உரிமை இருக்கு. உன்மேல என் வெல்விஷர் என் பெஸ்ட் பிரண்ட்ங்கிற உரிமை இருக்கு”, நதியாள்.
“அந்த உரிமைல தான் நாங்களும் உன்னை எங்க பார்ட்னர் ஆக்கினோம். இதுல எங்க சுயநலமும் இருக்கு தான். ஆனாலும் நீ எங்க கூடவே எப்பவும் இருக்கணும். அதான் இப்படி முடிவு எடுத்தோம்”, சரண்.
“இது வீட்ல எல்லாருக்கும் தெரியுமா?”, நதியாள்.
“இந்த ஐடியா குடுத்ததே அவங்க தான் ஆக்சுவலா. நீ சண்டை போட்றதா இருந்தா அங்க போட்டுக்க. இப்ப கிளம்பு வீட்டுக்கு போலாம். நமக்காக காத்துட்டு இருக்காங்க”, என சரண் அவளை கிளம்பச்சொன்னான்.
நதியாள் அமைதியாக அமர்ந்து இருக்க அகரன் அவளின் அருகில் அமர்ந்தான். சரணும் வந்து இன்னொரு பக்கம் அமர்ந்து அவளின் தலையை வருடினான்.
“என்னாச்சி நதிமா? எங்க முடிவு பிடிக்கலியா?”, அகரன்.
“சொல்லு யாள். எங்ககூடவே நீ இருக்கணும்னு தான் இப்படி பண்ணோம். உனக்கு எங்ககூட இருக்க பிடிக்கலியா?”,சரண்.
“வாய்லயே அடிப்பேன். உங்கள பாக்காம பேசாம இத்தனை வருஷம் எவ்வளவு அவஸ்தை பட்டேன்னு எனக்கு தான் தெரியும். உங்கள மறுபடியும் பாத்ததும் எவ்வளவு சந்தோஷப்பட்டேன் தெரியுமா? என்கிட்ட ஒரு வார்த்தை கேட்டு இருக்கலாம். அட்லீட்ஸ்ட் என்கிட்ட சைன் வாங்கும்போதாவது சொல்லி இருக்கலாம்ல? “, நதியாள்.
“உனக்கு சர்ப்ரைஸ் குடுக்கலாம்னு நினைச்சோம்டா நீ படிப்ப முடிச்சதும்”, சரண்.
“ஹ்ம்ம்…. எப்படியோ நீங்க நினைக்கறத செஞ்சிக்கிட்டீங்க. நான் தனியா கம்பெனி ஆரம்பிச்சி போட்டியா வந்துடுவேன்னு பயத்துல தானே இப்படி பண்ணிங்க. சரி பொழச்சி போங்க. கம்பெனி கணக்குலாம் சரியா இருக்கணும். நான் கேட்பேன். என் அக்கவுண்ட்ல எப்ப பணம் போடுவீங்க?”, நதியாள் சிரித்தபடிக் கேட்டாள்.
“முதல்ல வேலைய பாத்து டிகிரிய முடி. கணக்கு கேப்பாங்களாமே கணக்கு…. இந்த கம்பெனிக்கு ஆபீசியலா உன்ன எல்லாரும் இன்ட்ரோ குடுத்தப்பறம் தான் நீ கணக்கு வழக்குல கை வைக்கணும். புரிஞ்சதா?”, சரண்.
“பாரு அகன் இவன…. “, நதியாள் சிணுங்க அகரன் அவளை தன் கைவளைவில் நிறுத்திக்கொண்டு சரணை மிரட்டவென அந்த இடம் கலகலப்பாக மாறியது.
அந்த சமயம் சரணுக்கு போன் வர,” என்னாச்சி? எப்ப? எங்க? எந்த ஹாஸ்பிட்டல்? சரி உடனே நாங்க வரோம்”, என சரண் பதற்றமாகக் கூறவும் , உடனே மூவரும் அவசரமாகக் கிளம்பினர்.