32 – அர்ஜுன நந்தன்
வீட்டிற்கு வந்ததும் யாத்ரா அனைவரையும் அழைத்து, அங்கிருந்துக் கொண்டு வந்த ஆயுதங்களைக் காட்டினாள்.
“என்ன இத்தன ஆயுதங்கள்?”, சக்தி.
“இப்ப தான் ஒரு கடத்தில் கும்பல்கிட்ட இருந்து கடத்திட்டு வந்தேன்”, யாத்ரா.
“யார் அவங்க? போலீஸ்ல இன்பார்ம் பண்ணியா?”, செந்தில்.
“அதுல பண்ணல அவனுங்கள தட்டிட்டி நான் பொருள தூக்கிட்டு வந்துட்டேன்”, யாத்ரா கால் மேல் கால் போட்டு அமர்ந்தபடிக் கூறினாள்.
“கொன்னுட்டியா?”, செந்தில்.
“இல்ல சிவி தான் ஒரு ஓரமா தூக்கிபோட்டான் அவன கேளுங்க சீனியர். சரி எனக்கு பசிக்கிது சாப்பிட என்ன இருக்கு?”, யாத்ரா சக்தியைப் பார்த்துக் கேட்டாள்.
“இப்ப தானே சாப்ட?”, எனக் கேட்டபடி நரேன் வந்தான்.
“பைட் பண்ணி இருக்கேன் பசிக்காதா?”, யாத்ரா.
“உனக்கு சோறு போடவே உன்ன கட்றவன் கொள்ளை அடிக்கணும்”, நரேன்.
“கவலை படாத நரேன் அதுக்கும் அபீசியல் பேப்பர் ஹெட் நீ தான்”, எனக் கூறி மேலே சென்றாள்.
ஆர்யன் இருக்கும் அறைக்குச் சென்றவள் அங்கே அர்ஜுன் இருப்பதைக் கண்டு மென்னகைப் புரிந்தாள்.
“ஹாய் ஆர்யன்…. எப்படி இருக்க? ரூம் வசதியா இருக்கா? எங்கனால இந்த வசதி தான் குடுக்க முடியும். உன்னமாதிரி 5 ஸ்டார் ஹோட்டல்லா முடியாது. சாப்டியா?”, யாத்ரா.
ஆர்யன் அவளைப் பார்த்து ஒரு திமிரானப் புன்னகை உதிர்த்து, “வசதிக்கு என்ன குறச்சல்? நீ இருக்கற இடத்துல நான் இருந்தாலே போதும்”.
“பார்ரா…. நல்ல பேசற ஆர்யன். ஆனா பேசற விதம் தான் சரியில்லை. இன்னொரு தடவ என்ன பிளிர்ட் பண்றமாதிரி பேசினா வாய ஒடச்சிருவேன்”, யாத்ரா.
“ம்ம்… அது எனக்கும் கஷ்டம் தான்”, ஆர்யன்.
“சரி விஷயத்துக்கு வா. அந்த கோவிலுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்?”, யாத்ரா.
“இதுக்கு நான் பதில அர்ஜுன் கிட்ட சொல்லிட்டேன்”, ஆர்யன்.
“என்ன சொன்னான் செழியன்?”, யாத்ரா.
“எந்த கோவில்னு கேக்கறான்”, அர்ஜுன்.
“ஹோ….. வழக்கமான பதில்”, யாத்ரா.
“சரி நீ ரெஸ்ட் எடு ஆர்யன். வா யாத்ரா கொஞ்சம் வெளியே சுத்திட்டு வரலாம்”, என யாத்ராவின் கைப்பற்றி அழைத்துச் சென்றான் அர்ஜுன்.
யாத்ராவும் ஆர்யனை அமர்த்தலாக ஒரு பார்வைப் பார்த்து விட்டு அர்ஜூனின் கைப்பற்றிச் சென்றாள்.
அதைக் கண்ட ஆர்யனின் முகத்தில் கோபம் எரிமலையாகக் குமுறியது தெரிந்தது.
“என்ன பண்ணிட்டு வந்து இருக்க இப்ப?”, அர்ஜுன் யாத்ராவிடம் வினவினான்.
“நமக்கு வெபன்ஸ் வேணும்ல அதான் தூக்கிட்டு வந்தேன்”, எனக் கூறி தன் சட்டைகையைக் கீழே விரித்து விட்டு மீண்டும் மடக்கிவிட்டாள்.
அர்ஜுன் அவள் செய்வதை ரசனையுடன் பார்த்துக் கொண்டே,” யார்கிட்ட இருந்து எடுத்துட்டு வந்த?”.
“நான் பைக்ல ரைட் போனேன்ல அப்ப தான். கடல்வழியா வந்த சரக்கு போல மொத்தமா இருபது பேர் தான் இருந்தானுங்க. அதான் ஈஸியா தட்டிட்டு சரக்க தூக்கிட்டு வந்துட்டேன்”, யாத்ரா.
“இந்த நேரத்துல சரக்கு வருதா? எப்பவும் விடிகாலைல தானு மாத்துவானுங்க? எந்த ஏரியா அது?”, அர்ஜுன்.
யாத்ரா இடத்தின் பெயர் மற்றும் அடையாளத்தைக் கூறினாள். அர்ஜுன் யாருக்கோ அழைத்து அவள் கூறிய விவரங்களைக் கூறித் தேடச் சொன்னான்.
“யாருக்கு கால் பண்ண செழியன்?”, யாத்ரா.
“என் பிரண்ட். இங்க தான் டெபுடி கமிஷனர்ஆ இருக்கான்”, அர்ஜுன்.
“ம்ம்… பாக்க சொல்லு. ஒரு வண்டி சரக்கு இன்னிக்கு கைமாத்திட்டு இருந்தானுங்க. இவ்வளவு வாரத்துல ஒரு நாள் வந்தா கூட எல்லார் கைலயும் துப்பாக்கி இருக்கும்”, யாத்ரா.
” சரி வா. நீ கடத்தினத காட்டு”, அர்ஜுன்.
“வேன்ல வெளியே ஒரு பார்ட் மீதி ரெண்டும் ஹைட் பண்ணிருக்கேன்”, யாத்ரா.
“நல்லாவே இந்த வேலை பாக்குற நீ. எங்க கத்துகிட்ட இத?”, அர்ஜுன் சிரித்துக்கொண்டே கேட்டான்.
“எப்பவும் பேக்அப் இருக்கனும் செழியன். அப்பதான் நாம பீஸ்புல்லா வேலை பாக்கமுடியும்”, யாத்ராவும் சிரித்துக்கொண்டேக் கூறினாள்.
“ஹாஹா…சரிதான். சரி வா வெளியே போயிட்டு வரலாம்”, அர்ஜுன்.
“நீ உடனே கிளம்புன்னு சொன்ன?”, யாத்ரா ஒரு புருவத்தை உயர்த்திக் கேட்டாள்.
“போய்க்கலாம் . இப்ப நாம போலாம் வா”, என அவள் கைப் பற்றி இழுத்துச் சென்றான்.
“இருடா. நானே வரேன். இழுக்காத. கை வலிக்குது டா”, யாத்ரா அவன் கையை எடுத்துவிட முயற்சித்துக் கொண்டே பின்னே வந்தாள்.
முயற்சி செய்யற மாதிரி நடிச்சிகிட்டே வந்தாள்ன்னு தான் சொல்லணும் .
ரெண்டும் ஜோடி சேந்துரிச்சிங்க இனி என்ன என்ன நடக்குமோ தெரியல?
அவர்கள் வருவதைக் கண்ட ஜான் சிரித்துக் கொண்டே செந்திலை அழைத்து காட்டினான்.
“எங்க ரெண்டு பேரும் கிளம்பிட்டீங்க?”, நரேன் கேட்டுக் கொண்டே வந்தான்.
“யோவ் அறிவு இருக்கா உனக்கு? வெளியே போறப்ப எங்க போறன்னு கேக்கற? உனக்குலா வீட்ல நல்லது சொல்லி வளக்கலியா?”, யாத்ரா பொறுமினாள்.
“ஊருக்கு போகணும்ன்னு சொல்லிட்டு ரெண்டு பேரும் கைய பிடிச்சிட்டு ஜோடியா கிளம்பினா அப்படி தான் கேக்க முடியும்”, நரேன்.
“அதான் ஜோடியா போறோம்ன்னு தெரியுதுல்ல. வாய மூடு. இனிமே நாங்க வெளில போறப்ப எதாவது பேசினா வாய் இருக்காது உனக்கு”, என யாத்ரா மிரட்டினாள்.
இவர்கள் சம்பாஷனையைக் கேட்ட அனைவரும் வாய்மூடியபடி சிரித்துக் கொண்டு இருக்க நரேன் அர்ஜூனைப் பார்த்து முறைத்தான்.
“ஏன்டா உனக்குலாம் வேற பொண்ணே கிடைக்கலியா? இவள லவ் பண்ணி இருக்க. கொஞ்சமாது மரியாதை தெரியுதான்னு பாரு”, நரேன்.
“ஏன் எங்க பூவழகிக்கு என்ன குறைச்சல்? இவள விட நல்ல பொண்ணு உங்களுக்கு கிடைச்சிருமா?”, என ஜான் கேட்க.
“என் யாத்ரா கிடைக்க குடுத்து வச்சி இருக்கணும் நரேன் சார்”, என சிவி ஒரு பக்கம் பேசினான்.
“எங்க குடுத்து வைக்கணும்?”,நரேன்.
“அண்ணா…. கொஞ்சம் கம்முன்னு இருங்க. நாங்க வெளியே போயிட்டு வரோம். சாயங்காலம் ஊருக்கு கிளம்பினா போதும். எல்லாரும் ரெஸ்ட் எடுங்க”, எனக் கூறி வெளியே யாத்ராவையும் இழுத்துக் கொண்டு வந்தான்.
“என்ன நீ இப்படி இருக்க? என்னை எவ்வளவு பேசறான் அவன். நீ கம்முன்னு வர”,என யாத்ரா அர்ஜூனிடம் கோபத்தைக் காட்டினாள்.
“அவர் சும்மா விளையாட்டுக்கு தான் அப்படி சொன்னாரு. அதுல்லாம் பெருசா எடுத்துக்காத டார்லிங்”, என யாத்ராவின் தாடையில் கை வைத்துக் கொஞ்சினான்.
அவன் கையை தட்டிவிட்டு,” இந்த வேலையெல்லாம் இங்க வேணாம். ஒழுங்கா அவன என்கிட்ட சாரி கேக்க சொல்லு. அப்பறம் நான் குடுக்கற பனிஸ்மெண்ட்ம் செய்ய சொல்லு”, யாத்ரா.
“ஏய்.. அவர் என் சீனியர் ஆபீஸர் டி”, அர்ஜுன்.
“இருக்கட்டும். என்கிட்ட இப்படி பேசினா நான் சும்மா விடமாட்டேன்”, யாத்ரா.
“அப்படியா… அப்போ நானும் வேறமாதிரி பேசினா பனிஸ்மெண்ட் இருக்குமா?”, என தன் பார்வையை மாற்றியபடி அவளிடம் கேட்டான் அர்ஜுன்.
“ஆமா”, என அவனின் பார்வையைக் கவனிக்காது அவள் கூறினாள்.
“எப்படி கிடைக்கும்?”, அவளை கண்களால் அளந்துக் கொண்டே கேட்டான்.
“பேசறதுக்கு பலமடங்கு கிடைக்கும்”, என அவள் கோபத்தில் கூறினாள்.
“அப்போ தப்பா எதாவது செஞ்சா?”, என கேட்டுவிட்டு கமுக்கமாக சிரித்தான் அர்ஜுன்.
“பத்து மடங்கு திருப்பி குடுப்பேன்”, என பைக்கை கைகளால் குத்தியபடிக் கூறினாள்.
“ஓஹோ…. இங்க வா”, என அவளை அருகில் அழைத்தான்.
“என்ன?”, எனத் திமிரான பார்வையுடன் கேட்டாள்.
“இந்த திமிரு தாண்டி உன்கிட்ட என்னைய கட்டி இழுக்குது”, என பார்வையால் அவளின் முகத்தை அளந்தவனின் விழிகள் அவள் இதழில் நின்றது.
கண்ணிமைக்கும் நொடியில் ஒரு கையால் அவளின் கழுத்தை அருகில் இழுத்து மற்றொரு கையால் இடையை பற்றி அவளின் இதழ் நோக்கி குனிந்தான். யாத்ரா திகைப்பில் ஏதும் புரியாமல் முழிக்க அவளின் நாசியில் இதழ் பதித்து தன் நாசியை அவள் நாசியுடன் மோத விட்டு விளையாடினான்.
ஓரிரு நொடிகளில் நடந்த நிகழ்வால் யாத்ரா ஏதும் புரியாமல் அவனைக் கண் இமைக்காமல் பார்த்தாள்.
“யாத்ரா இப்படி பாத்து வைக்காத அப்பறம் நடக்கற எதுக்கும் நான் பொறுப்பு இல்ல”, எனக் கண்ணடித்து கூறினான்.
தன்னிலை பெற்றவள் அவனைப் போட்டுக் குமுறி எடுத்தாள், “ஏன்டா உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா இந்த யாத்ரா கிட்டயே இப்படி நடப்ப? இன்னிக்கு உன்ன அடிச்சி துவைக்காம விடமாட்டேன் நில்லுடா”, எனக் கூறியபடி அவனை அடிக்கத் துறத்தினாள்.
அவனும் சில நொடி நின்று அடிவாங்கி பின் அவள் கைகளில் சிக்காமல் ஓடி அவள் இறுதியில் அவனை காலில் இடித்து கீழே சாய்த்தாள்.
அந்த சமயம் ஒரு ரௌடி கும்பல் உள்ளே வந்தது. மொத்தமாக முப்பது பேர் இருப்பார்கள்.
அவர்களை கண்ட அர்ஜுன் ,” யார் நீங்க ?”.
“இங்க எங்க பொருள் இருக்கறதா கேள்விபட்டோம், அத மட்டும் எடுத்துட்டு போயிடறோம் அண்ணாத்த. அப்பாலிக்கா நீ அண்ணி கூட விளையாடு”, எனக் கூட்டத்தில் தலைவன் போல் இருந்தவன் கூறினான்.
“தாஸ் அண்ணா… என்னா நீ அவங்க கிட்ட கேட்டுகிட்டு. வாண்ணா உள்ளார பூந்து எடுத்துக்கலாம்”, என மற்றொருவன் கூறினான்.
“அதெப்படி அவ்வளவு ஈஸியா சொல்ற எடுத்துட்டு போவேன்னு?”, எனக் கேட்டபடி யாத்ரா வந்து முன்னே நின்றாள்.
“குட்டி சோக்காகீது ண்ணா… இதயும் தூக்கிட்டு போயிறலாம்”, என மற்றவன் கூறினான்.
வெளியே கூட்டத்தை பார்த்த நரேனும் செந்திலும் வந்தனர்.
“முடிஞ்சா தூக்கிட்டு போடா அவள. நானே கூட உனக்கு காசு தரேன் அவளுக்கு சாப்பாடு போட”, என நரேன் கூறியபடி அருகில் வந்தான்.
“அவ்வளவு பெரிய அப்பாடக்கரா இது?”, என தாஸ் கேட்டான்.
“அஹ்ஹான்”, என யாத்ரா கேலியாகச் சிரித்தாள்.
“என்ன பொருள் இங்க இருக்குன்னு வந்துருக்க?”, அர்ஜுன் கேட்டான் .
“அதான் காலைல கடற்கரையாண்ட கைமாத்துன பொருள் இங்க இருக்குன்னு இது காட்டுதே”, என ஒரு டேப்பை காட்டினான் தாஸ்.
“ஜிபிஎஸ் டிராக்கர்”, என செந்தில் கூறினான்.
“என்னப்பா டெக்னாலஜிய நல்லாவே யூஸ் பண்றீங்க போல?”, நரேன்.
“ஆமா. நம்ப தொழிலுக்கு ரெம்ப முக்கியம்ல”, என மற்றவன் கூறினான்.
“இங்கல்லாம் ஒன்னும் இல்ல கிளம்புங்க”, என செந்தில் கூறினான்.
“அப்படி எல்லாம் போகமுடியாது”, என ஒருவன் கேட்டை தாண்டி உள்ளே வந்தான்.
“இரு ராஜா…என்ன பொருள்? எங்க இருந்து வந்தது? யாரு உங்க தலீவரு ? எல்லாத்தையும் சொல்லிட்டு நீ தேட ஆரம்பி”, என யாத்ரா அவனைத் தடுத்தாள்.
“உன்கிட்ட எதுக்கு அத்த சொல்லணும்? நவுரு”, என அவளைத் தள்ளிவிட்டான் அவன்.
“நீ சொல்லாம யாரும் உள்ளயும் போகமுடியாது வெளியவும் போகமுடியாது “, என அர்ஜுன் அந்த கேட்டைப் பூட்டினான்.
“ஏய்… என்ன எங்களாண்டயேவா? ஒழுங்கா பொருள குடுத்துட்டு ஓடிருங்க”, என தாஸ் கத்தினான்.
“டேய் லூசு. அப்பவே வந்தல்ல. நின்னு கத பேசிட்டு இருந்தா அவங்க ரெண்டு பேரும் உனக்கு ஸ்கெட்ச் போட்டுடாங்க பாரு. நீங்கல்லாம் எத்தனை வருஷம் ஆனாலும் திருந்தவே மாட்டிங்களா?”, என நரேன் கேலியாகப் பேசினான்.
“ஏய்.. நீங்க போலீசா? எங்கண்ணணுக்கு மினிஸ்டர் வரைக்கும் பவர் இருக்கு தெரியுமா?”, தாஸ் கூறினான்.
“டேய் நீ தொழிலுக்கு புதுசா?”, என செந்தில் கேட்டான்.
“இல்லயே….ஒழுங்கா பொருள குடுத்துட்டு ஓடிருங்க”, என தாஸ் கூறினான்.
“சும்மா சொன்னதயே சொல்லிட்டு”, என யாத்ரா அவனை நோக்கி கையை மடக்கி கொண்டு போனாள்.
“இரு யாத்ரா”, அர்ஜுன்.
“யார் உங்க ஹெட்ன்னு சொல்லிடு உன் உயிருக்கு நான் கியாரண்டி இல்லன்னா அவ உன்ன அடிச்சே கொன்னுறுவா”, என யாத்ராவைக் கைகாட்டினான் அர்ஜுன்.
“இன்னாடா…. ஓவரா சீன் போட்டுகிட்டு இருக்க. அடிங்கடா அவன”, என தாஸ் கத்தினான்.
யாத்ரா தாஸை ஓங்கி அவனின் மூக்கில் குத்த இரத்தம் பொல பொல வெனக் கொட்டி அவன் மயங்கி விழுந்தான்.
“பாத்தியா… பர்ஸ்ட் சாட் நான் தான்”, என யாத்ரா அர்ஜூனைப் பார்த்துக் கூறினாள்.
“இப்ப பார் பேபி”, என அர்ஜுன் இருவரை ஒரே அடியில் கீழே வீழ்த்தினான்.
ஜானும் சிவியும் அவசரமாக வெளியே வந்து அடிக்க பாயும் போது செந்திலும் நரேனும் அவர்களை அமுக்கிப் பிடித்தனர்.
“எங்க போறீங்க ரெண்டு பேரும்?”, எனக் கேட்டான் செந்தில்.
“அடிக்க”, கோரசாய் கூறினர் ஜானும் சிவியும்.
“அங்க பாருங்க”, என அர்ஜூனையும் யாத்ராவையும் கைக்காட்டினர்.
அங்கே இருவரும் பார்வையால் காதல் செய்தபடியே ஆட்களை அடித்துத் துவைத்துக் கொண்டிருந்தனர்.
அர்ஜுன் இருவரை வீழ்த்தினால், யாத்ரா இருவரை கால்களால் தாக்கி காயப்படுத்தினாள்.
இருவரும் ஆட்களை வீழ்த்தியபடி அருகில் வந்தும் தூரமாக சென்றும் காதலில் லயித்துக் கொண்டிருந்தனர்.
“பாத்தியா சிவி …. அவனுங்க இரத்தம் கக்கிட்டு இருக்கானுங்க ஒவ்வொரு அடிக்கும், இதுங்க ரெண்டும் ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்குதுங்க”, என செந்தில் கூறினான்.
“ஆமா சீனியர். இப்படி ஒரு சீன் நான் பாத்ததே இல்ல”, என சிவி விழி இமைக்காமல் அவர்களின் சண்டையைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
“நம்ம பய்யனுக்குள்ள இம்புட்டு ரொமான்ஸ் இருக்கா ? இப்படி அசத்துரானே கதிர்”, என அருகில் நின்ற கதிரைப் பார்த்துக் கேட்டான்.
“அதான் சார் நானும் யோசிச்சிட்டு இருக்கேன். இப்படி ஒரு பக்கம் நம்ம அர்ஜுன் சாருக்கு இருக்கும்னு நான் நினைக்கவே இல்ல”, கதிர்.
பதினைந்து நிமிடத்தில் முப்பது பேரும் அவர்களால் கீழே சரிந்து இருந்தனர்.
அவர்களில் தாஸை மட்டும் தனியறையில் அடைத்துவிட்டு மற்றவர்களை கீழேயே ஒரு அறையில் அடைத்துவைத்தனர்.