33 – காற்றின் நுண்ணுறவு
பிறைசூடனுடன் வல்லகி மற்றும் பாலாவைக் கடத்திச் சென்றவர்கள் அங்கே ஒரு கட்டிடத்தில் அவர்களை அடைத்துவிட்டனர்.
“வகி…. எதுக்கு நம்மல இங்க கூட்டிட்டு வந்திருக்காங்க…. இது என்ன இடம்?”, பாலா.
“இது அராப் கண்ட்ரி…. தோஹான்னு நினைக்கறேன்”, பிறைசூடன் சுற்றிலும் பார்வையைச் சுழற்றியபடிக் கூறினார்.
“கத்தார் தானே”, பாலா.
“ஆமாம்மா…. என்னை இரண்டு பேரும் மன்னிச்சிடுங்க”, என கைக்கூப்பி வணங்கினார்.
“உங்களுக்கும் எதாவது ப்ளாக்மெயில் ப்ளாஸ்பேக் இருக்கா பெரியப்பா?”, பாலா அசட்டையாகக் கேட்டாள்.
“ரொம்பவே தேறிட்ட பாலா… அழவே இல்ல நீ… அவர அசால்ட்டா ப்ளாஸ்பேக் கேக்கற…. க்ரேட்”, என வல்லகி அவளைப் பாராட்டினாள்.
“கூத்தாடிய கட்டினா நானும் கூத்துகட்டி தானே ஆகணும்… உன்கூட சேர்ந்து இப்படி ஆகலன்னா தான் அதிசயம். சென்னைல நாம கால் வச்ச நேரம் அப்படி போல…. அப்ப இருந்து பைட்டிங், ரன்னிங் , சேஸிங் கிட்நாப்பிங்ன்னு போகுது. எவ்வளவு தான் நானும் அழறது. கண்ல தண்ணி வத்திபோச்சி…. “, என பாலா படபடவென பொறிந்துத் தள்ளினாள்.
“யார் இந்த வேஸ்ட் ரேடியோ?”, எனக் கேட்டபடி அதித் அவ்விடம் வந்தான்.
“நீ யாருடா ஸ்மைலிங் சைக்கோ?”, திருப்பிக் கேட்டாள்.
கோபத்துடன் டைஸி பாலாவை நெருங்கும் முன் வல்லகி அவளுக்கு முன் பாலாவை மறைத்து நின்றாள்.
“அவ என் பிரண்ட். அவள யாரும் எதுவும் பண்ணக்கூடாது… “, கனீரென வந்தது குரல்.
“குட் பெர்சனாலிட்டி…. குட் சப்லைம் (sublime)…. உனக்கு பயம் இல்லையா?”, அதித் அவளைப் பாராட்டும் விதமானப் பார்வைப் பார்த்தபடிக் கேட்டான்.
“பயந்து என்ன ஆக போகுது? எதுக்கு எங்களை கடத்திட்டு வந்த?”, நேராகவே கேட்டாள்.
“இன்ட்ரெஸ்டிங்… நீயும் உன் சிஸ்டரும் ரொம்பவே போல்ட்ஆ இருக்கீங்க…. இரண்டு பேரும் பயத்துல உளறல அழல…. குட்…. எனக்கு வேலை சுலபம்… சொல்ற வேலைய செஞ்சிட்டா போதும்”, அதித் அங்கிருந்த சேரில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தபடி அவளைக் கண்களால் அளந்தான்.
“நைஸ் பிஸிக்…. லூக்கிங் க்ரேட். ஸ்ட்ராங் அண்ட் இன்டெலிஜெண்ட். சோ நான் உன்னை நம்பமாட்டேன்”, எனப் பேசிக்கொண்டு வந்தவன் காதில் ஒருவன் எதையோ சொல்லவும், “உன் சிஸ்டர் நாச்சியாவ பாரு”, என வீடியோ கால் செய்தான்.
எதிரே நாச்சியா ம்ரிதுள்ளை சாய்க்க முயற்சித்துக்கொண்டிருந்தது தெரிந்தது.
“நாச்சியா”, என உணர்ச்சிவசப்பட்டு வல்லகி அழைத்தபோது தான் அவள் ம்ரிதுள்ளின் பிடிக்குள் சிக்கிக்கொண்டாள்.
சிறிது நேரம் அவர்களைப் பேசவிட்டு வேடிக்கைப் பார்த்தபடி டைஸியிடம் பேசிக்கொண்டிருந்தான்.
“க்ரேட் டால்க்ஸ்…. மிஸ்டர் பிறைசூடன் எனக்கு எப்ப ரெடி பண்ணி தருவீங்க?”, எனக் கேட்டான்.
“ஷி இஸ் நாட் எ ரோபோ அதித்…. “, அடக்கப்பட்ட கோபத்துடன் கூறினார் பிறைசூடன்.
“சோ ஏஞ்சல் அண்ட் கேட் மட்டும் மனுஷங்க இல்லையா?”, எதிர்கேள்வி கேட்டான்.
“அவங்க வேற இவ வேற…. அவங்கள நான் உருவாக்கி வளத்தேன். இவ இயற்கையா உருவாகி வந்திருக்கா…. இரண்டுக்கும் வித்தியாசம் நிறைய இருக்கு…. தவிர இவள இன்னும் நான் முழுசா ஸ்டடி பண்ணல”, என பிறைசூடன் வல்லகியை அவர்களிடம் இருந்துக் காப்பாற்றும் நோக்கத்தோடுப் பேசினார்.
“சோ இந்த ஸ்டேட்ஸ் எல்லாம் நீ ரெடி பண்ணல”, என ஒரு பைலை வீசி எறிந்தான் அதித்.
“இது அப்ஷர்வேஷன் பண்ணத மார்க் பண்ணி இருக்கேன் அவ்வளவு தான்”
“மத்தவங்களோட அவளோட பர்மாமென்ஸ் நாலு மடங்கு எல்லா விதத்துலையும் அதிகமா இருக்குன்னு நீ இன்னிக்கு காலைல ரெடி பண்ண ரிசல்ட்”
“உன் வேலைக்கு இவ செட ஆகமாட்டா…. புரிஞ்சிக்க அதித். ப்ளீஸ் அவங்கள விட்று”, எனக் கண்களில் நீர் நிற்கக் கெஞ்சினார்.
“ஓ ஓ ஓ….. செண்டிமெண்ட்… ப்ளடி நாஸ்டி செண்டிமெண்ட்… இதுக்கு எல்லாம் நீ மயங்க மாட்டியே பிறைசூடன்…. புதுசா என்ன பழக்கம் இது?”, என நக்கலாகச் சிரித்தபடிக் கேட்டான் அதித்.
“செண்டிமெண்ட் இல்ல… உண்மைய தான் சொல்றேன். ஷி இஸ் நாட் மேட் பார் யூ….. “, திடமாகக் கூறினார்.
“யூ சீ…. நாச்சியார் ம்ரிதுள் கைல இருக்கா… அவளோட மொத்த டீமும் அங்க தான் இருக்கு. இங்க நீங்க ஒழுங்கா நடந்துக்கலன்னா அங்க யாரும் வாழ்ந்த தடயம் கூட யாருக்கும் கிடைக்காது…. ஒன் வீக்…. இவள ரெடி பண்ணு…. “, என உத்திரவிட்டு விட்டு அங்கிருந்து அவர்களைத் தன்னுடையத் தனித் தீவுக்குக் கொண்டுச் செல்ல உத்திரவிட்டான்.
“ஹேய் யூ”, என டைஸி வல்லகியை அழைத்தாள்.
“உன் பிரண்ட் வாய் மூடிட்டு இருக்க சொல்லு. அடுத்த தடவை இப்படி பேசினா அவ உயிரோட இருக்கமாட்டா…. ஒழுங்கா ரெடி ஆகு…. உன் சிஸ்டர உயிரோட பாக்கணும்ல”, எனக் கூறிவிட்டு ஏஞ்சலை அழைத்து அவர்களை இடம் மாற்றி, அருகிலிருந்து கவனிக்க உத்திரவிட்டு அதித்- தின் பின்னே அவளும் சென்றாள்.
“லூசுங்க…. அவகிட்ட இருந்து அவனுங்கள காப்பாத்த ட்ரை பண்ணட்டும் முதல்ல…. பெரியப்பா…. என்ன பண்ணணும்? சொல்லுங்க அதையும் ஒரு கை பாக்கலாம்”, என உற்சாகமாகவே பிறைசூடன் அருகில் வந்தாள் வல்லகி.
“வேணாம் டா… இங்கிருந்து தப்பிச்சி போயிடு”, பிறைசூடன் உடைந்தக் குரலில் பேசினார்.
“நான் தப்பிச்சி போயிட்டா நாச்சியா டீம் கஷ்டப்படும் பெரியப்பா”
“இங்க என்ன நடக்குது பெரியப்பா…. எனக்கு ஒன்னும் புரியல…. கொஞ்சம் தெளிவா சொல்லுங்க”, பாலா.
“இவன் ஏதோ ஒரு இடத்த தேடிட்டு இருக்கான். அங்க உள்ள போக சாதாரண மனுஷங்களால முடியாது … ரோபோவாலையும் முடியாது .. அதான் மனுஷன ரோபோவா மாத்தி அனுப்பணும்னு அவன் சொல்றான். நீ ஜிதேஷ அடிச்சல்ல அப்ப இருந்து உன் மேல இவங்க கண் இருக்கு. அதுக்கப்பறம் ஹாஸ்பிடல்ல நடந்தது … நீ நிரல்யன் கிட்ட டெஸ்ட் எடுக்க போனது அந்த டெஸ்ட் ரிசல்ட்ன்னு எல்லாமே என்கிட்ட குடுத்தாங்க. நீ நார்மல விட பெட்டர்ன்னு புரிஞ்சதால உன்ன ட்ரைன் பண்ண என்னை அனுப்பினாங்க. நீ யாருன்னு விசாரிச்சப்ப தான் ஓவியன் பொண்ணுண்ணு தெரிஞ்சது. ரொம்ப நொந்துட்டேன் அப்பவே…. உன் உடம்புல ஏற்பட்டு இருக்கற மாற்றம் அவங்களுக்கு இப்ப ரொம்பவே உதவும்னு அவங்க நினைக்கறாங்க… “, கூறிவிட்டுச் சிறிது நீர் அருந்தினார்.
“எங்க போகணும்? அதுக்கு ஏன் இத்தனை பேர இவங்க கடத்தணும்?”, பாலா.
“தெர்லம்மா…. ஏஞ்சலும் கேட்-உம் மால்டெவிஸ் போய் இருக்காங்க. அங்க ஒரு பாறை கூட்டத்துல கேட் காணாம போயிட்டா…. இன்னொரு பக்கம் சார்லஸ்னு ஒருத்தன் கல்ப்ஃ-ல காணாம போயிருக்கான்”.
“இரண்டும் இரண்டு திசைல இருக்கே….. சரி நாச்சியாவ எங்க வச்சிருக்கான்?”, வல்லகி.
“அது தெர்லம்மா…. “, பிறைசூடன்.
“சரி… பெரியப்பா… வாங்க போலாம். நீங்க எனக்கு முன்ன சொன்ன ட்ரைனிங் இப்ப குடுங்க…. இவன் ஏதோ பெருசா தப்பு பண்றான். அது என்னனு நமக்கு தெரியல… ஆனா அது நமக்கு தெரிய வரப்ப நாம அதை தடுக்க ரெடியா இருக்கணும்… “, என அவரைக் கைத்தாங்கலாக எழுப்பினாள்.
கைத்தட்டும் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்க்க ஏஞ்சல் நின்றிருந்தாள்.
“சூப்பர் வல்லகி… உன் கட்ஸ் இங்க யாருக்கும் இல்ல…. “, எனக் கூறியபடி ஏஞ்சல் பிறைசூடன் காலடியில் வந்து அமர்ந்தாள்.
சிறிது நேரம் அவரைப் பார்த்துக்கொண்டிருந்தவள், “அப்பா…. கேட்-அ கண்டுபிடிக்கணும்…. உங்களால முடியும்…. ப்ளீஸ்ப்பா…..”, என கண்களில் நீர்வழியக் கேட்டாள்.
“அப்படி என்னை கூப்பிடாத ஏஞ்சல். அந்த வார்த்தைக்கு நான் தகுதி இல்லாதவன்….”, என அவரும் கண்கலங்கினார்.
“நாங்க இரண்டு பேரும் அனாதையா நின்னப்ப நீங்க தான் எங்கள காப்பாத்தி எல்லாம் செஞ்சீங்க…. உங்க ஆராய்ச்சிய எங்க மேல செலுத்தினா கூட, எங்கள காயப்பட விடல…. உங்க கூட நாங்க ரொம்பவே சந்தோஷமா இருந்தோம். சூழ்நிலை நீங்க எங்கள இவங்க கிட்ட அனுப்பற மாதிரி ஆகிடிச்சி… “, ஏஞ்சல்.
“இந்த பொண்ணு என்ன விசு படத்துல வர்ற கேரக்டர் மாதிரி பேசுது…..”, பாலா வல்லகியின் காதைக் கடித்தாள்.
“எப்பவும் நீ பேசுவ இப்ப அவ பேசறா அவ்வளவு தான் வித்தியாசம் பாலா”
“அதெப்படி என் டையலாக்க அவ பேசலாம்”, பாலா முறைத்தாள்.
“ஒருத்தரே பேசினா படிக்கறவங்களுக்கு போர் அடிக்கும்ல அதான் …. விடு நீ எப்ப இருந்து இவ்வளவு தைரியசாலி ஆன?”, குறுகுறுவெனப் பார்த்தபடிக் கேட்டாள்.
“நான் எங்க ஆனேன்… அப்படி ஆக்கிடிச்சி எல்லாம் சேர்ந்து… சிரிச்சே அவன் எல்லாத்தையும் பண்றான். நாச்சியா அக்கா வேற அங்க மாட்டிகிட்டு இருக்கு… அப்பா அம்மா ஒரு பக்கம். நாச்சியாக்கா டீம் ஒரு பக்கம்… எத நோக்கி நம்ம வாழ்க்கை போகுதுன்னு தெரியல… ஆனா நாம எல்லாம் சரித்திரத்துல இடம் பிடிக்க போறோம்னு மட்டும் எனக்கு தோணுது வகி”, தீவிரமாகச் சிந்தித்தபடி பாலா கூறவும் வல்லகி வாய்விட்டுச் சிரித்தாள்.
“நாம…. சரித்திரத்துல …..ஹாஹாஹாஹாஹாஹா…. பாலா….. நீ வேற லெவல்ல கற்பனை பண்ற… ஹாஹாஹஹாஹாஹஹாஆஹா”, என விழுந்து விழுந்துச் சிரித்தாள் வல்லகி.
“சிரிக்காத டி…. வாய மூடு…. இல்ல உன்ன கடிச்சி விட்றுவேன்…. வேணாம் வகி”, பாலா வேக வேகமாக பெருமூச்சு எடுத்தபடி அவளை அடிக்கத் துரத்தினாள்.
வல்லகி அப்போதும் சிரித்தபடி ஓடினாள்.
“ஹாஹாஹாஹாஹாஹாஹா”
“வாய மூடுடி”
“முடியல பாலா”
“அடிச்சு பல்ல உடைச்சிடுவேன்டி”, என பாலா கைக்குக் கிடைத்ததை எல்லாம் எடுத்து அவள் மீது வீசினாள்.
வல்லகி லாவகமாகத் தப்பித்தபடி அதை கேட்ச் பிடித்து மீண்டும் பாலாவிடம் தூக்கி போட அவள் மீண்டும் இவளிடம் தூக்கி எறிய என அந்த இடம் அல்லோலகல்லோலப்பட்டது.
பிறைசூடனும் ஏஞ்சலும் அவர்களின் அட்டகாசத்தில் வாய்விட்டுச் சிரித்தனர்.
“அவங்க சிரிச்சிட்டாங்க போதும் டி”, என பாலா அங்கிருந்த ஒருவனின் போன் கீழே விழுந்திருந்ததுப் பார்த்துத் தூக்கி வீசினாள்.
அதை வல்லகி எடுத்து உடைக்குள் மறைத்துக்கொண்டாள்.
“போதும் தங்கங்களா….. இனி அழமாட்டேன்…. வாங்க போலாம்… நீ சொன்னமாதிரி தலைக்கு மேல வெள்ளம் போகுது… சுழல்ல மாட்டாம நீச்சல் அடிக்க கத்துக்கலாம்… சுழல்ல மாட்டினாலும் வெளியே வர்ற வழிய கண்டுப்பிடிக்கலாம்”, எனக் கூறியபடி எழுந்து நடந்தார் பிறைசூடன்.
“நீங்க எத்தனை மாசமா இங்க இருக்கீங்க?”, பாலா மெல்ல ஏஞ்சலைக் கேட்டாள்.
“நான் இங்க போன வாரம் தான் வந்தேன்”
“அந்த வெள்ள ஓநாய் கூடவா நீங்க இருக்கீங்க?”, வல்லகி டைஸியை விவரம் கூறிக் கேட்டாள்..
“ஆமா…. ஆறு மாசமா அவகூட தான் இருக்கோம். கேட் இப்ப இல்ல”, என மீண்டும் தலைக்குனிந்தாள்.
“அது யாரு கேட்?”, பாலா.
“நாங்க ஒன்னா தான் வளர்ந்தோம் அப்பாகிட்ட…. அவளும் வல்லகி மாதிரி அட்வென்சர்ல இன்ட்ரஸ்டட் பெல்லோ…எதுக்கும் பயப்படமாட்டா… “, என கேட்-யின் நினைவில் கூறினாள்.
“அவங்க போட்டோ இருக்கா?”, பாலா.
“இதோ “, என தன் மொபைலில் இருவரும் எடுத்துக்கொண்டப் புகைபடத்தைக் காட்டினாள்.
அனைவரும் தனி தீவுக்கு வந்தபிறகு வேலையை ஆரம்பித்தனர்.
அங்கே தான் ஜேக்-ம் இருந்தான். நினைவு திரும்பிய பின் இங்கே அனுப்பிவைக்கப்பட்டான். அந்த சுழல் அலைகளை இன்னும் பார்த்துக்கொண்டே இருக்கிறான்.
அதில் தொலைந்து போன சார்லஸை நினைத்து நினைத்து அந்த மயக்கமூட்டும் திரளான மீன் கூட்டத்தை மீண்டும் மீண்டும் பார்த்தான்.
அப்போது அவ்வழியே வந்த வல்லகி, “பாஸ் இட்”, எனக் கூறி மீன் திரளைத் தாண்டி தெரிந்த ஒரு விஷயத்தை ஜூம் செய்தாள்.
அதைக் கண்ட ஜேக் வல்லகியைக் கட்டிப்பிடித்து தூக்கிச் சுற்றினான்.
“தேங்க்யூ… தேங்க்யூ சோ மச் லேடி”