34 – அர்ஜுன நந்தன்
தஞ்சை வந்து இறங்கியவர்களுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது.
“என்னாச்சி நந்து? ஏன் அவசரமா வர சொன்னீங்க?”, செந்தில்.
நந்து பாலாஜியைப் பார்த்துக் கொண்டே அமைதியாக இருந்தான்.
“டேய் நந்து என்னடா?”, நரேன்.
“முகில தூக்கிட்டாங்க அண்ணா”, நந்து.
“என்னடா சொல்ற?”, நரேன்.
“ஆமா அண்ணா. நேத்து அந்த சந்தனபாண்டியன பாலோ பண்ண போனான். இன்னும் காணோம். அவன ரீச் பண்ண முடியல”, நந்து.
“பரிதிக்கு தெரியுமா?”, செந்தில்.
“அவன தூக்கிட்டாங்கன்னு சொன்னது பரிதி தான்”, நந்து.
“வேற எதாவது இன்பர்மேசன் இருக்கா?”, நரேன்.
“இல்ல. எங்க இருக்கான்னு தெரியல. நெடுமாறனோட ஆள விட்டு பாக்கறதா சொன்னாங்க”, நந்து.
“அப்ப நானே நேர்ல போறேன் சீனியர். என் அப்பனுக்கு தெரியாமா இருக்காது. நான் வந்ததே இன்னும் தெரியாது அவருக்கு. நான் வீட்டுக்கு போனா தெரிஞ்சிரும். சிடுவேஷன் என்னன்னு சொல்றேன் பாத்துட்டு “, சிவி.
“பரிதிகிட்ட சொல்லிட்டு போடா”, செந்தில்.
“அவன் போகட்டும் செந்தில். அந்த குப்பத்து ஆள பாக்க யார அனுப்ப போறீங்க?”, எனக் கேட்டபடி பரிதி உள்ளே வந்தாள்.
“வாங்க பரிதி மேடம்”, நரேன் எழுந்து நின்று வரவேற்றான்.
“வாங்க நரேன் சார்”,பரிதி பதில் மரியாதைச் செய்தாள்.
“கதிர தான் யாத்ரா அனுப்ப சொன்னா”, நந்து.
“சரி நீங்க விடிகாலைல அங்க இருக்கணும் அதுக்கு தகுந்தாமாதிரி கிளம்புங்க”, எனக் கதிரைப் பார்த்துக் கூறினாள் பரிதி.
கதிரும் சரியென கூறினான்.
“என்ன பிளான் பரிதி?”, செந்தில்.
“யோகி இங்க வந்துட்டான் “, பரிதி.
“வாட்?”, நரேனும் செந்திலும் ஒரே குரலில் கேட்டனர்.
“ஆமா. அவன் வந்தப்பறம் தான் முகில தூக்கிட்டாங்க”, பரிதி.
“அவன் நேராவே அதுக்குள்ள வந்துட்டானா?”, சிவி.
“அவன வரவைக்க தான் ஆர்யன தூக்கினது, பட் அவனுக்கு ஆர்யன் இருக்கற இடம் தெரியாது இங்க தான் அவன கொண்டு வருவோம்ன்னு நினைச்சி வந்துட்டான்”, பரிதி.
“பட் யோகி நேரடியா இறங்கினது கொஞ்சம் ஷாக் தான்”, செந்தில்.
“ஆமா செந்தில் நானும் எதிர்பாக்கல ,புள்ள பாசம் அதிகம் போல”, பரிதி.
“சரி நம்ம அடுத்த மூவ்?”, நரேன்.
“சந்திரகேசவன் சேரலாதன் சந்தனபாண்டியன் இவங்க மூனு பேர பாலோ பண்ணினா தான் தெரியும். அதுக்குள்ள அர்ஜூனும் யாத்ராவும் அங்க இருக்கற வேலைய முடிச்சிட்டு வந்துருவாங்க”, என யோசனையுடன் கூறினாள் பரிதி.
“என்ன பரிதி இன்னும் ஏதோ யோசனைல இருக்க?”, செந்தில்.
“இல்ல. முகில் பாலோ பண்றது இத்தனை நாள் அவங்களுக்கு தெரிஞ்சும் ஒன்னும் பண்ணல. இப்ப ஏன் தூக்கணும் அவன? வேற ஏதோ பிளானும் இருக்கும்னு தோணுது. வெறும் புள்ள பாசம்ன்னு என்னால நினைக்க முடியல”, பரிதி.
நந்துவிற்கு சட்டென்று ஏதோ தோன்ற அவன் அந்த ஆராய்ச்சிகாரனின் அசிஸ்டண்ட் குடுத்த வாக்குமூல பேப்பரை எடுத்து பார்த்தான்.
“பரிதி மேடம். அவன் பையன தேடி வரல. இன்னொரு சுரங்கபாதை எப்படி தொறக்கறதுன்னு தெரிஞ்சிரிச்சி. அது வழியா ஏதோ பெருசா செய்ய பிளான் பண்ணிட்டு தான் வந்து இருக்கணும்”, என நந்து கூறினான்.
“அப்ப அவங்க பிளான் செயல்படுத்த ஆரம்பிச்சிட்டாங்களா?”, நரேன்.
“இருக்கலாம். அந்த குப்பம் அவங்க கைக்கு போய் இருக்கணும் இல்லன்னா வேற இடத்த அவங்க தேர்ந்து எடுத்து இருக்கணும்”, நந்து.
“இன்னொரு பாதை எங்க போய் முடியுது ?”, பரிதி.
“அது தெரியல மேடம் பட் அதுவும் கண்டிப்பா தண்ணி இருக்கற இடமாதான் இருக்கும்ன்னு அந்த அசிஸ்டண்ட் சொன்னான்”, நந்து.
“அவன் எங்க?”, பரிதி.
“இங்க தான் கீழே அடச்சி வச்சி இருக்கேன்”, நந்து.
“வேற என்ன என்ன சொன்னான்?”, செந்தில்.
“அங்க மொத்தம் 5 சுரங்க வழி இருக்கு. அதுல அரண்மனைக்கு போறது இப்ப இல்ல. ஒன்னு கருவறைக்கு போறது அங்க தான் பொக்கிஷம் இருக்காம். இன்னும் ரெண்டு வெளியே வேற இடத்துக்கு போற பாதை. ஒரு பாதை தான் இவங்க சரி பண்ணி இருக்காங்க. இன்னொரு பாதை இவனுக்கு மட்டும் தெரிஞ்சி இருக்கு அத தொறக்கவும் முடிஞ்சதாம் ஆனா பாதை சரியில்லை அத சரிபண்ணா தான் உபயோகிக்க முடியும்ன்னு சொன்னான்”, நந்து.
“அவ்வளவு தான் சொன்னானா?”, பரிதி.
“ஆமா”,நந்து.
“சரி யாத்ரா வந்து ஏதோ விசாரிக்கணும்ன்னு சொல்லி இருக்கா. வெயிட் பண்ணுவோம். நான் என் பக்கம் கொஞ்சம் விசாரிச்சி பாக்கறேன்”, பரிதி.
“சரி நான் கிளம்பறேன். இப்ப வீட்டுக்கு போனா தான் எதாவது உடனே கண்டுபிடிக்க முடியும்”, என சிவி தன் பையை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
“சரி அப்பப்ப தகவல் குடு”, என பரிதி அவனை அனுப்பி வைத்தாள்.
“கதிர் நீங்களும் உடனே வேளாங்கண்ணி கிளம்புங்க”, என அவனையும் அனுப்பினாள்.
நரேனும் நந்துவும் அவனிடம் ஜாக்கிரதையாக இருக்கும்படி கூறி அனுப்பினர். ஏதேனும் ஆபத்தென்றால் அவன் இருக்கும் இடம் தெரிய அவன் உடலில் ஜிபிஎஸ் டிராக்கர் செலுத்தினர்.
அவனும் கிளம்பியபின் செந்தில் நந்து மற்றும் நரேன் பரிதியின் முன் வந்தனர்.
“என்னாச்சி பரிதி?”,செந்தில்.
“இல்ல செந்தில் ஏதோ நெடுடலா இருக்கு. நம்ம பக்கம் இழப்பு இல்லாம இந்த கேஸ முடிக்கணும்”, பரிதி யோசனையுடன் கூறினாள்.
“எது வந்தாலும் இந்த கேஸ சக்சஸ் பண்ணிடலாம் மேடம் ஏன் கவலை படறீங்க?”, நரேன்.
“இல்ல நரேன் சார். இவங்க நாம நினைக்கறத விட மோசமானவங்க. நாட்டுக்கே கேன்சர் மாதிரி. நம்ம வளங்கள்ல இருந்து எல்லாமே திருடி வித்துட்டு நம்ம நாட்ட பாலைவனம் ஆக்கிருவாங்க. அதுக்கு நாம விடக்கூடாது. அதே சமயம் நம்ம ஆட்களை நாம இழக்கவும் கூடாது”, பரிதி.
“நாம தான் இத்தனை முன் எச்சரிக்கையோட இருக்கோமே. கண்டிப்பா தப்பு நடக்காம பாத்துக்கலாம்”, செந்தில்.
“கண்டிபா தப்பு நடக்க விடக்கூடாது. அப்படி க்ரிட்டிகல் சிடுவேஷன் வந்தா அவனுங்க யாருமே உயிரோட இருக்க மாட்டாங்க அது மட்டும் கண்டிப்பா நடக்கும்”, எனத் தீவிர முகபாவத்துடன் கூறினாள் பரிதி.
அவள் முகத்தில் தெரிந்த ரௌத்திரத்தைக் கண்டு சற்று அச்சமே ஏற்பட்டது மூவருக்கும்.
“சரி. நீங்க கொஞ்சம் தூங்குங்க. நான் அப்பறம் கால் பண்றேன். செந்தில் அந்த சந்திரகேசவன நீங்க பாலோ பண்ணுங்க. நரேன் சார் நீங்க முடிஞ்சவரை வெளிய வராம இருக்கறது நல்லது”, பரிதி.
“ஏன் மேடம்?”, நரேன்.
“இல்ல யோகிக்கு உங்கள நல்லா தெரியும். உங்கள பாத்தா பிரச்சினை வேறமாதிரி போக வாய்ப்பு இருக்கு”, பரிதி.
“அப்ப நான் ஊருக்கு கிளம்புறேன். எதாவது தேவைபட்டா சொல்லுங்க நான் அப்ப வரேன்”, நரேன்.
“இல்ல நீங்க டெல்லி போனாலும் பிரச்சினை தான்”, பரிதி.
“அப்ப நான் என்ன பண்றது?”, நரேன்.
“நீங்க இங்கயே இருங்க. வெளியே வரவேணாம்”, பரிதி.
“அடப்பாவிகளா லாஸ்டா என்னைய ஹவுஸ் அரெஸ்ட் வச்சிட்டீங்களே”, என நரேன் கூற மற்றவர் முகத்தில் மென்னகைப் புரிந்தனர்.
“வேற வழி இல்ல நரேன் சார். பாலாஜி கூட இங்கயே இருங்க”, பரிதி.
“சரி மேடம். அர்ஜுன் யாத்ரா வர்ற வரைக்கும் இருக்கேன்”, நரேன்.
இவர்கள் இங்கே இப்படி பேசிக் கொண்டு இருக்கும் சமயம் சென்னையில் அவர்கள் ஆர்யனை வேறு இடத்திற்கு மாற்றி இருந்தனர்.
“தாஸை என்ன பண்றது?”, அர்ஜுன்.
“அவன்கிட்ட தான் கொஞ்சம் வேலை இருக்கு நீங்க கொஞ்சம் இங்க அமைதியா உக்காருங்க”, என அர்ஜூனை அந்த அறையில் இருந்த நாற்காலியில் அமரவைத்தாள்.
“தாஸ்…. தாஸ்…..”, என அவனைத் தட்டி எழுப்பினாள்.
மயக்கத்தில் இருந்து சிரமப்பட்டு எழுந்தவன் கண்களை கசக்கிவிட்டுக் கொண்டு பார்த்தான்.
“என்ன தாஸ் நல்ல தூக்கம் போல”, என யாத்ரா கேட்டாள்.
“அப்படி இல்ல மேடம்”, தாஸ் சற்று மிரட்சியான பார்வையுடன் பார்த்துக் கூறினான்.
“சரி பசில இருப்ப, இந்தா சாப்பிடு”, என உணவைக் கொடுத்தாள்.
உண்மையிலேயே பசியில் இருந்தவன் அவள் குடுத்த சாப்பாட்டை எதுவும் யோசிக்காது சாப்பிட்டு முடித்தான்.
“என்ன தாஸ் இவ்வளவு பசியா? இன்னும் கொஞ்சம் சாப்பாடு போட்டு தரவா?”, யாத்ரா.
“ம்ம்”, என தலையசைத்தான் தாஸ்.
“ஜான்… இன்னும் கொஞ்சம் சாப்பாடு கொண்டு வா”, என யாத்ரா குரல் கொடுத்தாள்.
ஜானும் இன்னொரு தட்டில் உணவு கொண்டு வந்தான். அதையும் தாஸ் தலை நிமிராது சாப்பிட்டு முடித்தான்.
(நம்ம ஜான் யாத்ரா கூடவே இருப்பேன்னு அடம்பிடிச்சதால இங்கயே விட்டுட்டு போய்டாங்க அவங்க எல்லாம். அதான் இன்னும் சென்னைல இருக்கான் இவன்)
“என்ன தாஸ் தெம்பா இருக்கியா?”, யாத்ரா.
“என்ன மேடம் உங்களுக்கு சொல்லணும்?”, தாஸ்.
“பாத்திங்களா செழியன் நம்ம தாஸ் ரொம்ப சார்ப்”, என யாத்ரா அர்ஜூனைப் பார்த்துக் கூறினாள்.
மீண்டும் தாஸிடம் திரும்பி கேள்விக் கேட்ட ஆரம்பித்தாள்.
“ஜாக்சன் கிட்ட எத்தனை வருசமா வேலை பாக்குற?”, யாத்ரா.
“இப்ப 5 மாசமா தான் வேலை பாக்குறேன் மேடம் இதுக்கு முன்ன ஆன்டனின்னு ஒருத்தன் கிட்ட தான் வேலை பாத்துட்டு இருந்தேன். அவனுக்கும் ஜாக்சனுக்கும் ஏதோ பிரச்சினை வந்தப்பறம் என்கிட்ட ஜாக்சன் வந்து பொருள் கைமாத்துனா நிறைய பணம் தரேன்னு சொன்னான் அப்ப இருந்து நான் பாக்கறேன்”, தாஸ்.
“அந்த ஆன்டனி எங்க இருக்கான்?”, அர்ஜுன்.
“அது …… “, தாஸ்.
“சொல்லு தாஸ்”,யாத்ரா.
“ஜாக்சன் கொன்னுட்டதா சொன்னாங்க”, தாஸ்.
“ஏன்?”, அர்ஜுன்.
“அதான் சொன்னேனே சார் பிரச்சனைன்னு”, தாஸ்.
“என்ன பிரச்சனை?”,யாத்ரா.
“அது முழுசா எனக்கு தெரியல மேடம். ஏதோ பெரிய டீல் வந்து இருக்கு. அதுல எல்லாத்தையும் கடல் வழியா வெளியே அனுப்பனும் வாங்கனும். ஆனா ஏதோ கோவில்குள்ள இருக்கற சுரங்கபாதை வழியா தான் நடக்கனும்னு சொன்னாங்க போல. அது ஆன்டனி முடியாதுன்னு சொன்னதால பிரச்சனைன்னு ஜாக்சன் கூட இருக்கறவன் ஒரு நாள் தண்ணி அடிக்கறப்ப சொன்னான்”, தாஸ்.
“பாரு செழியன் நாம எத்தனை கிரேடு விசாரணை பண்றோம் ஒரு உண்மைய தெரிஞ்சிக்க, ஆனா இவங்க ஈஸியா சரக்கடிச்சிட்டு எல்லாத்தையும் சேர் பண்ணிக்கறாங்க”, யாத்ரா அர்ஜூனைப் பார்த்துக் கூறினாள்.
“ஆமா. நாமலும் அவங்க கூட சரக்கடிச்சா போதும்ன்னு இப்ப சொல்றியா?”, அர்ஜுன்.
“ஏன் பண்ணக்கூடாது?”,யாத்ரா.
“சரி உண்மைய சொல்றவன நாம எங்க தேடி போய் சரக்கடிக்க கூப்பிடறது?”, அர்ஜுன்.
“ஏன் நம்ம தாஸ் தான் இருக்கான்ல அவன் ஆள கூட்டிட்டு வருவான். என்ன தாஸ் நீ கூட்டிட்டு வரமாட்ட?”, என தாஸைப் பார்த்து வினவினாள்.
“அய்யோ மேடம். இன்னேரம் என்னைய எங்க பாத்தாலும் போட்டு தள்ள ஜாக்சன் சொல்லி இருப்பான். நான் எப்படி ஆள கூட்டிட்டு வரமுடியும்?”, தாஸ்.
“உன்னால முடியும் தாஸ். இல்லன்னா உன் உயிருக்கு நானும் கியாரண்டி சொல்லமுடியாது அப்பறம்”, என முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டுக் கூறினாள்.
“மேடம் வேணா மேடம். அவங்க எல்லாம் ரொம்ப மோசமானவங்க. நீங்க போலீஸ்ன்னு தெரிஞ்சா கொஞ்சம் கூட யோசிக்க மாட்டாங்க”, என தாஸ் கூறினான்.
“எனக்கு தேவை உண்மை. எப்படி கிடைக்கும்ன்னு நீ சொல்லு. அப்பதான் நீயும் உயிரோட இங்கிருந்து போக முடியும்”, யாத்ரா.
“இல்ல மேடம். வேணா அப்பறம் நீங்க மாட்டிப்பீங்க”, தாஸ்.
“தாஸ் அவ போனா தானே கஷ்டம். நான் போறேன் நீ ஆள கூட்டிட்டு வா”, அர்ஜுன்.
“சார். ஆம்பளன்னா ரொம்ப கஷ்டம் சார். விவரம் தெரியாதவங்கள அந்த ஏரியாக்குள்ளயே விடமாட்டாங்க”, தாஸ்.
“இங்க பாரு தாஸ். நான் அமைதியா கேக்கறப்பவே நீ ஒத்துழைச்சா நல்லது”, யாத்ரா.
“என்ன மேடம் அதான் இவ்வளவு விவரம் சொல்லிட்டேனே இன்னும் என்ன வேணும் உங்களுக்கு?”, தாஸ்.
“யார் யாரெல்லாம் இதுல சம்பந்தப்பட்டு இருக்காங்கன்னு தெரியனும். ஜாக்சனோட மொத்த டீலிங், யாரெல்லாம் அவன் பின்னாடி இருக்காங்க எல்லாமே எங்களுக்கு தெரியணும்”, அர்ஜுன்.
“சார். அது ரொம்ப கஷ்டம் சார். அதுல்லாம் தெரிஞ்சவங்க யாருன்னு எனக்கும் தெரியாது சார்”,தாஸ்.
“சரி யார பிடிச்சா தெரியும்?”, அர்ஜுன்.
“அந்த கேங்ல ரொம்ப நாளா இருக்கறவங்களுக்கு தான் தெரியும் சார்”, தாஸ்.
“அப்ப உன்கூட உக்காந்து தண்ணி அடிச்சவன் தான் அங்க ரொம்ப நாளா இருக்கான். யாரு அவன்?”, யாத்ரா.
“மேடம் அதுல்லாம் எனக்கு தெரியாது மேடம்”, என பதைப்பதைத்தபடிக் கூறினான் தாஸ்.
“இங்க பாரு தாஸ். உன்ன அடிக்க கூடாதுன்னு இவ்வளவு பொறுமையா பேசிட்டு இருக்கேன். என்ன சோதிக்காத அப்பறம் நல்லதுக்கில்ல”, யாத்ரா.
“மேடம் வேணா மேடம்”, தாஸ்.
“நீயா சொல்லிட்டா அவகிட்ட இருந்து தப்பிக்கலாம். நீயும் புள்ளகுட்டிகாரன் தானே தாஸ். உன் பசங்க எந்த ஸ்கூல்ல படிக்குது?”, அர்ஜுன்.
“சார். என்ன சார் நீங்க மிரட்டிபாக்கறீங்களா?”, தாஸ்.
“உனக்கு உன் பொண்ண ரொம்ப பிடிக்குமாமே தாஸ் அப்படியா?”,யாத்ரா.
“மேடம் வேணா மேடம் என் பொண்ண விட்றுங்க”, தாஸ்.
“எனக்கு வேண்டியது நீ சொன்னா நான் ஏன் உன்ன தொந்தரவு பண்ண போறேன்?”, யாத்ரா ஒரு புருவத்தைத் தூக்கியபடிக் கூறினாள்.
“இல்ல மேடம். அவன உங்ககிட்ட காட்டி குடுத்தா என் குப்பத்துல இருக்கறவங்கள கொன்னுடுவாங்க மேடம்”, தாஸ் கெஞ்சினான்.
“அடடா.. தாஸ் நீ ஏன் இவ்வளவு கெஞ்சற? அழுகைய நிறுத்து. கண்ண தொட முதல்ல”, யாத்ரா.
“இந்தளவு பயப்படறவன் ஏன் ஜாக்சன் கிட்ட போய் வேலைக்கு சேர்ந்த?”, அர்ஜுன்.
“அது எங்க நிலைமை சார். கஷ்டம். நல்ல வழில சம்பாதிச்சி ஒரு வேல சாப்பாடு கூட முழுசா போடமுடியல. அதான் அடிதடின்னு சின்னதா சேட்டுங்க கிட்ட சேந்தோம். அது அப்படியே இங்க கொண்டு வந்துரிச்சி”, தாஸ்.
“எந்த சேட் கிட்ட வேலை பாத்த தாஸ்?”, யாத்ரா.
“பெசன்ட் நகர் ஏரியால இருக்கற சேட்டுங்க எல்லார் கிட்டயும் தான். வட்டி வசூல் பண்ற வேலை இருக்கறத பொறுத்து எங்க குப்பத்து ஆளுங்கள பிரிச்சிகிட்டு போவோம்”, தாஸ்.
அர்ஜுன் ஜானிற்கு கண் காட்ட, அவன் அதைப் புரிந்துக் கொண்டு கிரிக்கு கால் செய்தான்.
“ஜாக்சன் பத்தி தெரிஞ்சவன் யாருன்னு சொல்லு உன்ன மட்டும் இல்ல குப்பத்து ஆளுங்களுக்கு கூட எதுவும் ஆகாம நான் பாத்துக்கறேன். எல்லாருக்கும் வீடு வரைக்கும் ஏற்பாடு செஞ்சி தரேன்”, யாத்ரா.
“மேடம்… நிஜமாவா சொல்றீங்க?”, தாஸ்.
“ஆமா தாஸ். நான் ஏற்பாடு செஞ்சி தரேன். ஆனா ஒரு கன்டீசன்?”,யாத்ரா.
“என்ன மேடம்?”, தாஸ்.
“உங்க குப்பத்து ஆளுங்க அடிதடி வேலைக்கு போகவே கூடாது எப்பவும்”, யாத்ரா.
“எங்களுக்கு தேவை நிரந்தரமா தங்க ஒரு இடம், நியாயமான வருமானம் தான். அது கிடைச்சா நாங்க ஏன் அடிதடிக்கு போறோம் மேடம்?”, தாஸ்.
“எல்லாத்துக்கும் நான் ஏற்பாடு பண்றேன். நீ அவன மட்டும் காட்டு. உன்ன இதுல இழுக்கவே மாட்டேன்”, யாத்ரா.
“அவன் வழக்கமா ராத்திரி 12 மணிக்கு தனியா பாருக்கு வருவான். அங்க போனா அவன்கிட்ட பேச்சு குடுத்து தெரிஞ்சிக்கலாம்”, தாஸ்.
“எந்த பாருக்கு?”, அர்ஜுன்.
“பெசண்ட் நகர்ல ****** பாருக்கு சார்”, தாஸ்.
“சரி. ரெடியா இரு நாம போலாம். அதுவரை ரெஸ்ட் எடு”, எனக் கூறி அறையைத் தாளிட்டு வெளியே வந்தனர் அர்ஜூனும் யாத்ராவும்.
“என்ன யாத்ரா தீவிர யோசனைல இருக்க?”, அர்ஜுன்.
“நியாயமான வருமானம் கிடைக்கலன்னு இப்படி நிறைய பேர் குற்றவாளிகள் ஆகறாங்க. இதுக்கு நம்ம அரசாங்கம் தான் காரணம் செழியன். விலைவாசியை இஷ்டத்துக்கு உயர்த்திட்டு நாட்ல குற்றங்கள் அதிகமா இருக்குன்னு சொன்னா மட்டும் போதுமா. இந்த மாதிரி கஷ்டபடறவங்களுக்கு ஆதரவா எதாவது செஞ்சாலே பாதி குற்றங்கள் குறையும்”, யாத்ரா ஆற்றாமையுடன் கூறினாள்.
“ஆமா யாத்ரா. உண்மைதான். நம்பலால முடிஞ்சவரைக்கும் உதவி பண்ணலாம்”, அர்ஜுன் அவளைத் தோளோடு அணைத்தபடி சமாதானம் செய்தான்.
“ம்ம்..”, யாத்ரா.
“ஆமா. வீடு வருமானத்துக்கு எல்லாம் நீ ஏற்பாடு பண்றதா தாஸ்கிட்ட சொன்ன. எப்படி பண்ண போற?”, அர்ஜுன்.
“அந்த சேரலாதன்கிட்டயும் சந்தனபாண்டியன் கிட்டயும் இருக்கற பணத்த வச்சி 10 குப்பத்த காப்பாத்தலாம். அதுக்கு தனி பிளான் வச்சி இருக்கேன்”, எனக் கூறி கண்ணடித்தாள்.
“இப்படிலாம் கண்ணடிக்காதடா. அப்பறம் விளைவுகளுக்கு நான் பொறுப்பு இல்ல”, அவளின் இடையில் கைகளைப் படறவிட்டவாறு கூறினான் அர்ஜுன்.
“சாருக்கு இந்த நினைப்பு வேற இருக்கோ? மொதல்ல வந்த வேலைய பாருங்க மிஸ்டர் நாகார்ஜூன இளஞ்செழியன்”, என அவன் கைகளை விலக்க முற்பட்டாள்.
“நான் வந்ததே உன்ன பாக்க தானே மிஸ். யாத்ரா “, அர்ஜுன் அவளை அருகில் இழுத்துக் கொண்டே கூறினான்.
“அப்ப கேஸ் விஷயமா வரல?”,யாத்ரா.
“அப்படின்னு நான் சொன்னேனா?”, அர்ஜுன்.
“அப்படி தான் நினைச்சேன்”, யாத்ரா.
“நீயா தப்பா புரிஞ்சிகிட்டா நான் என்ன பண்ணட்டும் டியர்”, என அவளை இன்னும் நெருங்கினான் அர்ஜுன்.
“போதும் போய் அந்த கரிதரன் கிட்ட பேசுங்க”, என அவனை தள்ளிவிட்டு அங்கிருந்து ஓடினாள் யாத்ரா.
“எத்தனை நாளைக்கு ஓடுவன்னு நானும் பாக்கறேன்”, எனக் கூறித் தலையை அழுந்தக் கோதியபடி அங்கிருந்து சிரித்துக் கொண்டே நகர்ந்தான் அர்ஜுன்.
“பாருங்க பாருங்க. மொதல்ல வேலைய பாருங்க”, எனக் கூறி தயாராகச் சென்றாள் யாத்ரா.