• About us
  • Contact us
Monday, April 20, 2026
Facebook social icon Twitter X social icon Instagram social icon Pinterest social icon
Aalonmagari
  • Login
  • Register
  • Home
  • கதை
    • நாவல்
    • தொடர்கதை
    • சிறுகதை
  • கிறுக்கல்கள்
  • புத்தகம் வாங்க
  • நேர்காணல்
    • எழுத்தாளர் நேர்காணல்
    • வாசகர் நேர்காணல்
  • மகரியின் பார்வையில்
  • நாமளும் சமைக்கலாம் தப்பில்ல
  • English
    • Short story
No Result
View All Result
  • Home
  • கதை
    • நாவல்
    • தொடர்கதை
    • சிறுகதை
  • கிறுக்கல்கள்
  • புத்தகம் வாங்க
  • நேர்காணல்
    • எழுத்தாளர் நேர்காணல்
    • வாசகர் நேர்காணல்
  • மகரியின் பார்வையில்
  • நாமளும் சமைக்கலாம் தப்பில்ல
  • English
    • Short story
No Result
View All Result
Aalonmagari
No Result
View All Result

36 – அகரநதி

March 16, 2024
Reading Time: 1 min read
0
3 – அகரநதி

36 – அகரநதி

 

அகரனின் அறைக்குள் வந்த நதியாள் சகஜமாக உரையாட முயன்று அகரனின் கேள்வியில் கோபத்தை கட்டுப்படுத்தமுடியாமல் அவன் கன்னத்தில் அறைந்தாள். 

கன்னத்தை தாங்கியபடி அகரன் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு அவளைப் பார்த்தான். 

“என்ன கேட்ட? மறுபடியும் கேளு”, நதியாள் அவனை கண்ணோடு கண்வைத்து மெதுவாக அதே சமயம் அழுத்தம் கொடுத்துக் கேட்டாள். 

அவன் அமைதியாக அவளையே பார்த்தபடி நின்றான். 

“கோவமா இருக்கியான்னு தானே கேட்ட?”, நதியாள். 

ஆம் என தலையசைத்தான் அகரன். 

“நீ பண்ண வேலைக்கு உன்ன கொலை தான் பண்ணணும் …… உன்ன இதுவரைக்கும் உயிரோட விட்டு வச்சி இருக்கேன்ல …. இன்னும் என்ன என்ன கேக்கணும் கேளு. மொத்தமா பதில் சொல்றேன்”, நதியாள் சிறிதும் அழுத்தம் குறையாமல் கேட்டாள். 

“சாரி தியா…..”, அகரன் அவளை நெருங்கி அவள் கண்களைப் பார்த்துக் கூறினான். 

“……………………”

“சாரி சாரி சாரி……… என்கிட்ட பேசு தியா”, அகரன். 

“பேச என்ன இருக்கு அகன்? அதான் நீயா எல்லாத்தையும் செஞ்சி முடிச்சிட்டியே….. நான் பேசறதால என்ன ஆகப் போகுது?”, நதியாளின் வார்த்தைகளில் வலியை உணர்ந்தவன் அவளை தன்னோடு இறுக்கி கட்டிக்கொண்டான். 

“சாரி தியா…. உன்னை ஹர்ட் பண்ணணும்னு நான் இப்படி பண்ணல டா”,  அகரன் தன்னை அவளுக்கு உணர்த்திவிட துடித்தான். 

“உன்ன ஏன் இப்படி பண்ணனு கேக்க கூட பிடிக்கல அகன். கேட்டா நீ சங்கடப்படுவ… கஷ்டப்படுவன்னு தான் அமைதியா இருக்கேன். ஆனா நீ என்னை இப்படி வலியோட உறைய வைப்பன்னு நான் நினைக்கல”, நதியாள் குரலில் அப்பட்டமாக அவளின் வலி பிரதிபலித்தது. 

“இல்ல தியா…. நீ என் கையவிட்டு போயிடுவியோன்னு அந்த ஒரு செகண்ட்ல நான் பட்ட வலியும், பயமும் தான் உன்னையும் கேக்காம உனக்கு தாலி கட்ட வச்சது. நான் கண் திறக்க ஒரு செகண்ட் லேட்டாகி இருந்தாலும் …… அத நினைக்க கூட என்னால முடியல தியா….. நீ எப்பவும் என்கூடவே இருக்கணும். நாம சந்தோஷமா வாழணும் ….. அதுக்காக தான் படார்னு ஐயர் தாலியோட வெளியே வரவும் அதை எடுத்து உனக்கு கட்டிட்டேன்…. என்னை மன்னிச்சிடு டா தியா”, அகரனும் மனவலியோடு மன்னிப்பு கேட்டான். 

“ஏன் அகன்? அவன தடுத்திருந்தா போதுமே….. நம்ம கல்யாணம் பத்தி எவ்வளவு கனவு இருந்தது தெரியுமா? அது எல்லாமே ஒரு செகண்ட் ல இல்லன்னு ஆகிரிச்சே….. என் கனவு விட நம்ம கல்யாணம் எப்படி நடக்கணும் னு நம்ம வீட்ல ஆசைபட்டாங்க தெரியுமா?”, நதியாள். 

“……………..”, அகரன் எதுவும் பேசாமல் அவளையே பார்த்திருந்தான். 

“மீனு ஒரு மாசம் ஊருக்கே விருந்து போடணும்னு சொல்லிட்டு இருந்தாங்க. நம்ம சுந்தா பெருசா பந்தல் போட்டு ஒரு வாரம் நம்ம கல்யாணம் நடக்க ஒன்னுகூட விடாம எல்லா சாங்கியம் சடங்குலாம் செஞ்சி எல்லாரையும் கூப்பிட்டு பண்ணணும்னு இருந்தாரு. நம்ம அப்பா அம்மாலாம் சொல்லவே வேணாம் இப்ப நிச்சயத்துக்கே கோவில்ல எவ்வளவு தோரணம் அலங்காரம்னு பாத்தல்ல…. கடைசியா அவங்க கண்ல கூட பாக்கமுடியாம என் கழுத்துல தாலி கட்டிட்டல்ல நீ……”, எனக் கூறக்கூற அவள் கண்களில் நீர் வழிந்தது. 

இன்னும் அவன் அவளை விடாமல் தன்னோடே இறுக்கி கட்டியபடி அவள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தான். அவனுக்கும் தான் கனவுகள் இருந்தது அவளுக்கு பல ஆச்சரியங்கள் எதிர்பாரா சந்தோஷங்கள் என அனைத்தும் அவளுக்கு கொடுத்து அவளை தன்னவள் ஆக்கிக் கொள்ள நினைத்திருந்தான். 

அதுவும் இன்று அவள் அவனுக்கு கொடுத்த இன்பதிர்ச்சியை பார்த்து கல்யாணத்தில் மட்டுமல்லாது தங்களின் வாழ்வில் என்றுமே அவளுக்கு பல இன்பங்களை ஏற்படுத்த வேண்டும் என்று  அந்த நொடியே முடிவெடுத்திருந்தான். 

யார் என்ன நினைத்தாலும் கடவுளும் விதியும் இருக்கும்வரை நாம் நினைப்பதெல்லாமே நடந்துவிடாதல்லவா……… 

அக்கனவுகள் நொறுங்கியதில் அவள் மனமும், அவளறியாமல் தன்னவன் தனக்கு மாங்கல்யம் அணிவித்துவிட்டானே என்கிற வலியும் தான் அவளை தற்சமயம் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. 

தன்னவளின் இதய தாளத்தையும் சரியாய் உணர்ந்திருப்பவன் அவளின் வேதனை அறியாமல் இருப்பானா? தன் கைவளைவில் வைத்திருந்து அவளுக்கு ஆறுதல் கூற முயன்று கொண்டிருக்கிறான் அவளின் நாயகன். 

“தியாமா…… நீ சொல்றது எல்லாமே சரிதான். நான் பண்ணது தப்பு தான். ஆனா உன்ன எப்பவும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்க நான் தயாரா இல்ல. என்னைத் தவிர யார் கூடவும் நீ சந்தோஷமா இருக்க மாட்ட. அவன் தாலி கட்டிட்டான்ங்கிறதுக்காக நீ அவனோட வாழவும் மாட்டன்னு எனக்கு தெரியும் டா. நான் தாலி கட்டினதுக்கே இவ்வளவு வேதனை படற  அவன் கட்டியிருந்தா என்ன ஆகி இருக்கும்?”, அகரன். 

“அந்த செகண்ட் அவன கொன்னு இருப்பேன் அகன்”, நதியாள் வார்த்தை சிறிதும் பிசிறில்லாது வந்தது. 

“அது அவ்வளவு ஈஸியா ? அவன கொன்னுட்டு நீ என்னை தனியா விட்டுட்டு போயிடுவ…. அப்பறம் என் நிலமை?”, அகரன் சிறுகுழந்தை போல அவளைப் பார்த்துக் கேட்டான். 

ஆறடி குழந்தை தன் முன் தவிப்போடும், வலியோடும் தன்னை பார்ப்பதைக் கண்டு நதியாள் நெஞ்சுருகி நின்றிருந்தாள். 

எத்தனை கம்பீரமும் ஆளுமையும் கொண்ட தன்னவன் தன் முன் இப்படி கண்கலங்க வேதனையோடு நிற்பதைக் காண முடியாது, அவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள். அவன் செயல் இப்பொழுது அவள் செயலானது. 

“சரி விடு…. இனி இதபத்தி பேச வேணாம்….. நீ குளிச்சிட்டு வா எல்லாரோடவும் கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாம்”, என நதியாள் அவனின் நெற்றியில் முத்தமிட்டு அங்கிருந்து நகர்ந்தாள். 

தன்னவளின் முதல் இதழ் ஸ்பரிசம். எவ்வித தயக்கமும் இன்றி அவளாக அவனுக்கு , அவனின் வலிக்கு மருந்தாக கொடுத்த பரிசு. அதனால் சற்று தைரியம் வரப்பெற்று அவளை தன்னோடு இன்னும் சிறிதுநேரம் இருக்கவைக்க நினைத்தான் அவளின் கணவனாக.

“தியா…….”, அகரன் ஏக்கமாக அவளைப் பார்த்தான். 

“சொல்லு அகன்”, அவனைப் பார்த்துக் கேட்டாள். 

“என்மேல கோபம் இல்ல தானே?”, மீண்டும் அவன் அதே கேள்வியை கேட்க அவள் கொலைவெறியானாள். 

“உன்ன……”, என அவனை நெருங்கி சரமாரியாக அடிக்கத்தொடங்கினாள்.

அவன் அவளின் அடிகளை இன்பமாக வாங்கியபடி அவளை தன் மேல் போட்டுக்கொண்டு அவளை இரசனையாக கண்களால் வருடினான். 

அவனின் பார்வையில் இருக்கும் ஏதோ ஒன்று அவளை அமைதிபடுத்த, அவன் மார்பின் மேல் படுத்திருப்பதையும் உணராது அவனையே பார்த்துக்கொண்டு இருந்தாள். 

“என்ன அகன் அப்படி பாக்கற?”, நதியாள் மென்மையாக கேட்டாள். 

“இன்னிக்கு நீ எவ்வளவு அழகா இருந்த தெரியுமா தியா?”, அகரனும் மலரின் மென்மையான குரலில் பேசினான். 

“எவ்ளோ?”, அவன் நெஞ்சுக்கூட்டின் மேல் தன் ஒற்றைக்கையை வைத்து, அவனைப் பார்த்தபடித் தலையை அதில் வைத்துக்கொண்டுக் கேட்டாள். 

“அப்பவே தூக்கிட்டு போய் தாலி கட்டிடலாமான்னு இருந்தது. அதுவும் மாம்பழ கலர் சேலைல அப்பவே அப்படியே தாலி கட்ட நினைச்சேன். கடைசியா அப்படியே நடந்துடிச்சி”, எனக் கூறி அழகாகப் புன்னகைத்தான். 

“பிராடு…. நீ அப்ப வேணும்னே தான் இப்படி பண்ணியா?”, என அவள் அவன்மேல இருந்து எழ எத்தனிக்க, அவளை அப்படியே ஒரு கையால் அவளின் இடையை இழுத்து மற்றோர் கையால் அவள் தோள்களை பற்றி தன்மேல் மீண்டும் படுக்கவைத்துக்கொண்டு ,” நிஜமா நான் செய்யணும்னு நினைக்கல ஆனா அது தானா நடந்துரிச்சி…. உன்ன எத்தனை பேர் கிட்ட இருந்து தான் நான் காப்பாத்தறது? இப்ப எனக்கே எனக்குன்னு என்னவளா ஆகிட்ட. இனிமே எனக்கும் கவலை இல்ல பாரு”, அகரன். 

“அப்படி எத்தனை பேர் கிட்ட இருந்து காப்பாத்திட்ட?  இவ்வளவு அலுத்துக்கற”,எனக் கேட்டுவிட்டு தன் உதட்டை சுழித்து பொய் கோபம் காட்டி வேறுபக்கம் திரும்பிக் கொண்டாள். 

அகரன் அவளின் உதட்டை பிடித்து தன் பக்கம் திருப்பி,” இப்படியெல்லாம் உதட்ட சுழிச்சி காமிக்காத தியா அப்பறம் உன் அகன் இன்னும் பேட் பாய் ஆகிடுவான். இவங்க வேற ஆறு மாசம் தனியா இருக்கணும்னு சொல்லிட்டாங்க. அதுலயே நான் செம காண்டுல இருக்கேன். நான் சொல்றத சமத்து பொண்ணா எந்த சேட்டையும் பண்ணாம கேக்கணும் இல்ல எது நடந்தாலும் நான் பொறுப்பில்ல”, என கண்ணடித்து கூறினான் அகரன். 

“ச்சீசீ….. போடா”, என அவள் அவனை விட்டு எழுந்து தள்ளி உட்கார்ந்தாள். 

“இங்க வா”, அகரன் அவளை தன்னருகில் அழைக்க ,” பரவால்ல நான் சோபாலயே உட்கார்ந்துக்கறேன். நீ அங்க இருந்தே சொல்லு”, என சோபாவில் உட்கார்ந்தாள். 

அகரன் அவளை முறைத்துவிட்டு, “இந்த வினய் பையன் திருவிழாலயே உன்னை பார்த்த பார்வை சரியில்லை. அப்பவும் உனக்கு பாடிகார்ட் வேலை நானும் சரணும் ஏன் தேவ் கூட கடைசியா பாக்க ஆரம்பிச்சிட்டான். நல்ல வேலை தேவ் உன்னை லவ் பண்றேன்னு சொல்லாம போய்ட்டான். இந்த மதுரன் டைரக்டா சரண் கிட்ட மேரேஜ் ப்ரோபோஸல் பண்ணி இருக்கான் உன்ன கல்யாணம் பண்ணிக்கணும்னு. அவன்கூட சண்டை போட்டு அவனுக்கு புரிய வைக்கிறதுக்குள்ள சரண் பட்ட பாடு இருக்கே…. பாவம் அவன்…. அப்பறம் ஆபீஸ்ல எத்தனை பேர் உன்னை சைட் அடிக்கறாங்க தெரியுமா? “, எனக் கூறி பெருமூச்சொன்றை விட்டான். 

“அட…இவ்வளவு பேர் இருக்காங்களா? சே…. முன்னயே எனக்கு தெரியாம போச்சே….. முதல்லயே தெரிஞ்சிருந்தா எதாவது நல்ல பையனா செலக்ட் பண்ணி இருக்கலாம். ஏன் நம்ம மதுரன கூட ஓக்கே பண்ணி இருக்கலாம். ஹ்ம்ம்… இப்ப ஒன்னும் பண்ணமுடியாதுல்ல அகன்…… “, எனப் பொய்யாக அலுத்துக்கொண்டு அகரனை வெறுப்பேற்றினாள். 

“உனக்கு நான் லவ் பண்றதே தெரியல அப்பறம் எப்படி மத்தவங்க பாக்கறது தெரியப்போகுது?”, அகரனும் அலுத்துக்கொண்டே அவளருகில் வந்து அமர்ந்தான். 

“தள்ளி உட்காரு”, நதியாள் நகரவும் மீண்டும் அவளருகில் நெருங்கி அமர்ந்தான். 

“இங்க பாரு தியா… நான் கம்முனு உன் கைய மட்டும் பிடிச்சிட்டு உட்கார்ந்துக்கறேன். எதுவும் பண்ணமாட்டேன்”, அகரன் அழுத்தமாக கூற அவள் அமைதியாக தன் கையைக் கொடுத்தாள். 

“அகன்…என்ன புதுசா தியான்னு கூப்பிடற?”, நதியாள். 

“இப்ப தான் இத கவனிக்கறியா நீ?”, அகரன். 

“கவனிச்சேன் இப்ப தான் கேக்கறேன் சொல்லு”, நதியாள். 

“அது ஸ்பெஷலா செல்லபேர் வச்சி கூப்பிட ஆசை அதான் உன் பேர்ல தியா வரவும் சரின்னு அத ஓக்கே பண்ணிட்டேன்”, அகரன். 

“நீ நதின்னு கூப்பிடறது தான் எனக்கு பிடிக்கும். உன்ன தவிர யாரும் என்னை நதின்னு கூப்பிட இதுவரை நான் விட்டது இல்ல. அப்படியே கூப்பிடுவியா அகன்?”, நதியாள் கண்களில் காதல் மின்னக் கேட்டாள். 

அகரன் அவளின் கண்களில் தனக்கான காதலைக் கண்டு மகிழ்ச்சியில் அவளின் கன்னத்தில் அழுத்தமாக இதழ் பதிக்க நதியாள் உறைந்து நின்றாள். 

“எப்ப பாரு இப்படி ஃப்ரீஸ் ஆனா எப்படி?  இவள….. நதி…  நதி…. இங்க பாரு”, என அவளின் கன்னத்தைத் தட்டி தன்னிலை வரவைத்தான். 

“யூ பிளடி நான்சென்ஸ்….. ஏன்டா கிஸ் பண்ண? தள்ளி போடா….”, என அவனின் தோள்களில் அடித்தாள். 

“அழகா இருந்தா கிஸ் பண்ண தான் தோணும். அதுவும் நான் எவ்வளவு கன்ட்ரோல்ல இருக்கேன்னு எனக்கு தான் தெரியும்…. மனுசன புரிஞ்சிகிட்டா தானே”, என தனக்குள் முணுமுணுத்தபடி, ” சரி ரிலாக்ஸ் நதி”, என அவளை அமைதிபடுத்தினான். 

“சரி ரொம்ப நேரம் ஆச்சி கீழ போலாம் வா”, நதியாள் அவனை அழைத்தாள். 

“நதி…. “, அகரன். 

“என்ன?”, நதியாள். 

“நதிமா…….”, அகரன். 

“என்னடா?”, நதியாள். 

“ஒரே ஒரு தடவை…….”, அகரன் இழுத்தான். 

“என்ன ஒரு தடவை?”, நதியாள் அவனை கண்களைச் சுருக்கிப் பார்த்தாள். 

“ஒரே ஒரு தடவை எனக்கு……”, அகரன். 

“உனக்கு?”, நதியாள் ஒற்றை புருவம் உயர்த்திக் கேட்டாள். 

“ஐ லவ் யூ சொல்லேன்”, அகரன். 

“அதுல்லாம் நானா சொல்லணும்… நீயா கேட்க கூடாது. முதல்ல பிரஸ் ஆகி கீழ வா”, என நிற்காமல் அங்கிருந்து கீழே சென்றாள் நதி. 

அகரன் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு கன்னத்தில் கைகொடுத்தபடி அமர்ந்திருந்தான். நதியாள் வெளியே சென்றதும் மதுரனும் சரணும் உள்ளே வந்தனர். 

“என்ன மச்சான் பலமான கவனிப்பு போல?”, எனக் கண்ணடித்துக் கேட்டான் சரண். 

“இருக்காதா பின்ன முக்கால் மணிநேரமா இல்ல நதியாள் இங்க இருந்திருக்கா”, மதுரன். 

“இங்க வாங்களேன்”, என அகரன் இருவரையும் அருகில் அழைக்க அவர்கள் அருகில் வருவது போல வந்து குதித்து வேறுபக்கம் ஓடினர். 

அகரன் துரத்த அவர்கள் ஓட என அந்த அறைக்குள் விளையாடிக்கொண்டு இருக்கும் சமயம், திலீப்பும் சஞ்சயும் உள்ளே வந்தனர். 

“திலீப் சஞ்சய் அவனுங்கள பிடிங்க டா”, அகரன் கட்டளையிட்டான். 

“எதுக்கு சார்?”, திலீப் தட்டில் இருக்கும் ஸ்நாக்ஸை சாப்பிட்டுக்கொண்டே கேட்டான். 

“சொன்னா பிடி டா. அப்பறம் திண்பியாம்… இல்லைன்னா உங்களுக்கு பிராஜெக்ட் கம்ப்ளீசன் செர்டிபிகேட் குடுக்கமாட்டேன்”, என அகரன் மிரட்ட அவர்களும் ஓடி துரத்தி இருவரையும் மடக்கிப் பிடித்தனர். 

“ஏன்டா….. என்னடா சொன்ன? முக்கால்மணி நேரமா?  அவ எவ்வளவு அடிச்சா தெரியுமா? அந்த கவனிப்பு இப்ப உனக்கு நான் தரேன்”, என அகரன் மதுரனை குனியவைத்து முதுகில் அடித்தான். 

“அச்சோ…அம்மா….. யாராவது காப்பாத்துங்க….. இவனும் இவன் பொண்டாட்டியும் என்னை  அடிச்சே கொன்னுடுவாங்க போலவே…. தெரியாம இந்த கூட்டத்துல மாட்டிகிட்டேனே”, எனக் கத்தியபடி அகரனின் அடிகளை வாங்கினான் மதுரன். 

“இங்க வா மச்சான்…. இங்க வாடா….. “, என சரணை அருகில் இழுத்து அவனையும் குனியவைத்து பல அடிகளை கொடுத்துவிட்டு,” ஒரு ஐ லவ் யூ கேட்டா சொல்றாளாடா அவ…. அது கூட சொல்லிகுடுக்கமாட்டியா டா நீ? அவ எப்ப லவ் சொல்லி நான் எப்படா குடும்பம் நடத்த ஆரம்பிக்கறது. இதுல ஆறு மாசம் கிட்டயே போகக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க வீட்ல. என்னை பார்த்தா பாவமா இல்லையா உங்களுக்கு?”, என அகரன் அடித்தபடி புலம்பினான். 

சஞ்சயும் திலீப்பும் சிரிக்க ஆரம்பிக்க, மதுரனும் சரணும் விழுந்து சிரிக்கும் அளவுக்கு வயிற்றைப் பிடித்துக்கொண்டுச் சிரித்தனர். 

“நிறுத்துங்க டா….. என் நிலைமைய பாத்தா உங்களுக்கு சிரிப்பா இருக்கா? நிறுத்தறீங்களா இல்லையா?”, அகரன் கத்தினான். 

“ஏன் அகன் கத்திட்டு இருக்க? இவனுங்க ஏன் இப்படி சிரிச்சிட்டு இருக்கானுங்க?”, எனக் கேட்டபடி தேவ் உள்ளே வந்தான். 

“சார்…… இத நீங்க நதியாள லவ் பண்றதுக்கு முன்னாடி யோசிச்சி இருக்கணும்… இப்ப யோசிச்சி என்ன புண்ணியம்?”, என திலீப் சொல்ல அவனுக்கும் நன்றாக மொத்துக்கள் அவனது முதுகில் கிடைத்தது. 

“என்னடா நடக்குது? என்ன யோசிக்கணும்?”, தேவ் புரியாமல் கேட்டான். 

பின் மதுரனும் சஞ்சயும் நடந்த சம்பாஷணையை விளக்க தேவ்வும் சிரிக்க ஆரம்பிக்க, அகரன் முறைக்கவும் கப்பென்று வாயை மூடிக்கொண்டான். 

“தேவ்… எல்லாரும் தானே வந்திருக்கீங்க?”, சரண். 

“நான் அப்பா அம்மா வந்து இருக்கோம். பாட்டி அவங்கள ஊருக்கு அனுப்பிட்டு இருக்காங்க. சாரி அகர்…. “, தேவ் சரணிடம் பதிலளித்துவிட்டு அகரனிடம் மன்னிப்புக் கேட்டான். 

“அடி வாங்கப்போற நீ….. விடு டா. எல்லாம் நல்லதுக்கு தான்”, அகரன் அவனைச் சமாதானப்படுத்தினான். 

“யார் நல்லதுக்கு மச்சி?”, மதுரன் சிரித்தபடிக் கேட்க மீண்டும் அங்கே ஒரு கலாட்டா நடந்தேறியது. 

“இருங்க டா. குளிச்சிட்டு வந்து பேசிக்கறேன் உங்கள”, எனக் குளியலறைக்குச் சென்றான் அகரன். 

பின் ஆண்கள் அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, மீரா வந்து அவர்களை கீழே அழைப்பதாக கூறிவிட்டுச் சென்றாள். 

“அகர்….. நாங்க கீழ போறோம். நீ ரெடி ஆகி வாடா”, என சரண் அகரனிடம் கூறிவிட்டு கீழே சென்றனர் அனைவரும். 

கீழே பெரியவர்கள் அனைவரும் ஊரை அழைத்து விருந்து கொடுப்பதைப் பற்றி பேசிக்கொண்டு இருக்க அவர்களும் அதில் கலந்துக் கொண்டனர்.

“கண்ணா….. எத்தனை பத்திரிக்கை உனக்கு வேணும்? முக்கால்வாசி நமக்கு ஒரே வீடு தான் சொந்தமா வரும். வீட்டுக்கு ஒரு பத்திரிக்கை குடுத்தா போதுமா இல்ல என்ன பண்ண?”, சுந்தரம் தாத்தா. 

“மாப்பிள்ளை, இரண்டு வீட்டு பத்திரிக்கையும் போடணும்யா. ஒன்னாவா நீங்க அழைக்கப் போறீங்க? அடுத்த சனி விஷேசம் வச்சிக்கலாம். கையோட ஞாயித்துகிழம கெடா விருந்து குடுத்துடலாம். கருப்பசாமிக்கு கெடா வெட்டணும்ல கல்யாணம் நடந்ததும்”, மாந்தோப்பு தாத்தா. 

“அது புள்ளைங்க சடங்கு நடந்தப்பறம் தான் வெட்டணும்”, சரோஜாதேவி பாட்டி.

“அது அப்ப நம்ம வரைக்கும் செஞ்சிக்கலாம். இல்லைன்னா ஊரு திருவிழால வெட்டிக்கலாம். இப்ப கல்யாணம் நடந்திருக்கு இதுக்கு கெடா விருந்து குடுக்கணும்ல….. அப்பறம் நாளைக்கு கோவில் திருக்கல்யாணத்துக்கு அப்பறம் ஹோமத்துல புள்ளைங்க தான் உட்காரணும்னு சொல்லிருக்காங்க. பரமசிவம் தாலி வாங்கி குடுத்துட்டியா ?”, சுந்தரம் தாத்தா. 

“குடுத்துட்டேன் மாமா…. பத்து மணிக்கு ஆரம்பிக்கறாங்க. அப்ப அங்க இருக்கணும். அப்பறம் எங்க விருந்து வைக்கலாம்?”, பரமசிவம். 

“நம்ம வேலுச்சாமி மண்டபம் பேசிக்கலாம்ல மாமா….. இரண்டு நாளுக்கு பேசிட்டா அலச்சல் இருக்காது. ஆத்தோரமா இருக்கு தண்ணிக்கும் மத்ததுக்கும் பிரச்சினை இல்ல”, கண்ணன். 

“ம்ம்….. ஆமாம்பா… புது மண்டபம் நல்லா கட்டி இருக்காங்க வேலுசாமி. நானும் பாத்தேன். டெக்கரேஷன் பசங்க கிட்ட விட்டுறலாம். சரண் நீ பாத்துக்க”, சிதம்பரம். 

“சரிங்க மாமா. அது நான் சென்னைல இருந்து வர சொல்லிட்டேன். புதன்கிழமைல இருந்து அலங்கரிக்க ஆரம்பிச்சறலாம்”, சரண். 

“நல்லது. ஊரு முழுக்க அந்த இரண்டு நாளும் லைட் எரியணும். திருவிழா கணக்கா இருக்கணும் ஏற்பாடு எல்லாம். அப்பறம் சேலை நகை எடுக்க எப்ப போறது?”, மீனாட்சி. 

“இன்னிக்கு திங்கள்கிழமை….. புதன்கிழமை போயிக்கலாம்”, சுந்தரம் தாத்தா. 

“மாமா சீர் செய்யறது எப்ப வச்சிக்கலாம்?”, கண்ணன். 

“அது எதுக்கு மச்சான்? எங்க மகாராணி அவ. நாங்களே எல்லாம் பண்றோமே”, சிதம்பரம். 

“அதெப்படி அப்படி நாங்க விட முடியும் மாப்பிள்ளை. எங்களுக்கும் ஒரே பொண்ணு நாங்க செய்யணும்னு ஆசை இருக்காதா? நாங்க செய்யறத நீங்க மறுக்க கூடாது “, பரமசிவம் மறுத்துப் பேசினார். 

“ஏன்னே… எங்க புள்ளைக்கு நாங்க செய்யமாட்டோமா?”, திலகவதி.

“அப்படி இல்லம்மா…எங்களுக்கும் ஆசை இருக்கே. கல்யாணம் தான் செய்ய முடியல இதாவது சிறப்பா செய்யணும்னு நாங்க ஆசைப்படறோம்”, கண்ணன். 

“அவங்க அவங்க இஷ்டப்படறத செய்யுங்கப்பா. புள்ளைங்க விருப்பப்படறத பண்ணுங்க அவ்வளவு தான்”, என மாந்தோப்பு தாத்தா அதற்கு ஒரு முடிவைக் கூறினார். 

“நானும் நதிக்கும் அகரனுக்கும் சீர் செய்வேன். அதையும் யாரும் மறுக்க கூடாது”, என சந்திரகாந்த் கூறினார். 

அவரின் முகத்தைப் பார்த்த சுந்தரம் தாத்தாவும் மாந்தோப்பு தாத்தாவும்,” மாமன் சீர் இல்லாம எப்படி புள்ளைங்களுக்கு…. கொண்டு வாயா…. “, எனக் கூற அவரும் மதியும் உள்ளம் மகிழ்ந்தனர். 

“ஹேய்…. எவ்வளவு லவ்விங்கான பேமிலி…. நிஜமா அகரும் நதியாளும் லக்கி டா…. இந்த மாதிரி சொந்தம்லாம் எனக்கு இல்ல…. இப்ப எனக்கும் ஏக்கமா இருக்கு…. தேங்க்ஸ் சரண் எனக்கு புரியவச்சி பிரண்ட் ஆ அக்சப்ட் பண்ணதுக்கு”, மதுரன் உணர்வுபூர்வமாக சரணிடம் கூறினான். 

சரண் அவனை தோளோடு அணைத்தபடி மென்னகைப் புரிந்தான். 

அவன் இருந்த அதே மனநிலையில் தான் சஞ்சய், திலீப், ஸ்டெல்லாவும் இருந்தனர். 

தேவ்வும் மீராவும் ஒருவரை ஒருவர் பார்வையால் தழுவியபடியே அமர்ந்திருந்தனர். அவர்களின் பார்வையை அறையில் இருந்து வெளியே வந்த நதியாள் கவனித்தபடி வந்து ஸ்டெல்லாவின் அருகில் அமர்ந்தாள். 

அகரனும் குளித்துவிட்டு டீசர்ட் பேண்ட் அணிந்து கீழே வந்து நதியாளின் அருகில் அமர்ந்து பேச்சில் கலந்துக்கொண்டான். 

இதற்கிடையில் தேவ் மீராவின் பார்வையும், மதுரன் ஸ்டெல்லாவின் பார்வையும் நதியாள் கவனித்தபடி இருக்க, அதை அகரனுக்கும் கண்களால் காட்ட அவனும் பார்த்துவிட்டுத் தலையசைத்தான். 

சிறிது நேரம் அனைவரும் பேசிக்கொண்டிருந்துவிட்டு இரவு உணவு உண்ட பின் சரண் ,மதுரன், திலீப், சஞ்சய் அகரன் ஐவரும் மேலே விருந்தினர் அறையில் படுத்துக்கொண்டனர். நதியாள், மீரா, ஸ்டெல்லா மூவரும் அகரனின் அறையில் படுத்துக்கொண்டனர். 

கண்ணன், ராதா மற்றும் பரமசிவம் செல்லம்மாள் ஜோடிகள் அடுத்த நாள் காலையில் சீக்கிரமாக வருவதாகக் கூறிச் சென்றனர். 

அடுத்த நாள் காலை அனைவரும் பரபரப்பாக தயாராகிக் கொண்டிருக்க அகரனும் நதியாளும் மட்டும் தூங்கிக் கொண்டிருந்தனர். 

ராதா வந்து மகளை எழுப்பி குளித்ததும் கீழே அழைத்துச் சென்றுவிட்டார். அகரனை எழுப்பி குளித்து தயாராகி வரச் சொல்ல, அவனும் தன்னறைக்குச் சென்றான். 

எழுந்ததில் இருந்து தன் மனைவியைக் காணாது தவித்துக்கொண்டிருந்தவன் கண்களில் விழுந்தாள்.  காட்டன் புடவையில் தலை உலர்த்தியபடி சாப்பிட வந்து அமர்ந்தாள் நதி. அவளைப் பார்த்தபடி படிகளில் இறங்கியவன் மற்றவர்களைக் கருத்தில் கொள்ளாது அவளின் அருகில் அமர்ந்து அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். 

சில நொடிகளில் அகரனின் அலறல் கேட்க அனைவரும் பதற்றத்தோடு ஓடிவந்தனர் ……….

 

முந்தின அத்தியாயம் படிக்க .. 

அடுத்த அத்தியாயம் படிக்க .. 

 

முதல் அத்தியாயம் படிக்க ..

Click to rate this post!
[Total: 0 Average: 0]
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Facebook Twitter Email
Post Views: 5,665

aalonmagarii

Subscribe
Login
Notify of

0 Comments
Newest
Oldest
Inline Feedbacks
View all comments

About Me

Aalonmagari

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Categories

  • English (5)
  • Food Recipes (3)
  • Short story (2)
  • இன்னும் பல .. (5)
  • எழுத்தாளர் நேர்காணல் (31)
  • கதை (381)
  • கிறுக்கல்கள் (107)
  • சிறுகதை (10)
  • தொடர்கதை (161)
  • நாமளும் சமைக்கலாம் தப்பில்ல (7)
  • நாவல் (212)
  • நேர்காணல் (56)
  • புத்தகம் வாங்க (9)
  • மகரியின் பார்வையில் (5)
  • வாசகர் நேர்காணல் (25)

Popular

  • இயல்புகள்

    தேன் நிலா

    552 shares
    Share 221 Tweet 138
  • 1 – அகரநதி

    501 shares
    Share 200 Tweet 125
  • 1 – அர்ஜுன நந்தன்

    471 shares
    Share 188 Tweet 118
  • 1 – வலுசாறு இடையினில் 

    429 shares
    Share 171 Tweet 107
  • 1 – காற்றின் நுண்ணுறவு

    397 shares
    Share 158 Tweet 99
  • Terms & Conditions
  • Privacy Policy
Email us : aalonmagari@gmail.com

Copyright © 2026. Aalonmagari. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • கதை
    • நாவல்
    • தொடர்கதை
    • சிறுகதை
  • கிறுக்கல்கள்
  • புத்தகம் வாங்க
  • நேர்காணல்
    • எழுத்தாளர் நேர்காணல்
    • வாசகர் நேர்காணல்
  • மகரியின் பார்வையில்
  • நாமளும் சமைக்கலாம் தப்பில்ல
  • English
    • Short story
  • Login
  • Sign Up
Facebook social icon Twitter X social icon Instagram social icon Pinterest social icon

Copyright © 2026. Aalonmagari. All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Please wait...

Subscribe to our newsletter

Want to be notified when our article is published? Enter your email address and name below to be the first to know.
SIGN UP FOR NEWSLETTER NOW
error: Content is protected !!
wpDiscuz
0
0
Would love your thoughts, please comment.x
()
x
| Reply