36 – அர்ஜுன நந்தன்
பரிதியிடம் விடைபெற்ற சிரஞ்ஜீவ் நேராக தன் தந்தையின் வீட்டிற்கு வந்தான்.
அதிகாலை நேரத்தில் வந்தவனை அங்கிருந்தவர்கள் ஆச்சரியமாகப் பார்த்தனர்.
பாண்டி யாரோ வருவது போல இருப்பதைக் கண்டு அங்கு வந்தான். சிரஞ்ஜீவை பார்த்தவன் சிரிப்புடனும் பக்தியுடனும் அவனை அருகில் சென்று வரவேற்றான்.
“வாங்க தம்பி. நீங்க வீட்டுக்கு வந்து எத்தனை வருஷம் ஆச்சி? எப்படி இருக்கீங்க?”, பாண்டி.
“நான் நல்லா இருக்கேன் பாண்டி நீ எப்படி இருக்க? உங்க ஐயா எப்படி இருக்காரு?”, சிரஞ்ஜீவ் அவன் தோள் மீது கை போட்டு நடந்தபடி கேட்டான்.
“நல்லா இருக்காக ஐயா. நீங்க இனிமே இங்க தானே இருக்கபோறீங்க தம்பி?”, ஆவலுடன் சிரஞ்ஜீவ் முகத்தைப் பார்த்துக் கேட்டான் பாண்டி.
அவன் கண்களில் தன் மீதான அன்பைக் கண்ட சிரஞ்ஜீவ்,” நீ இன்னும் மாறவே இல்ல பாண்டி. கஜா இங்க தானே இருக்கான்? நான் கொஞ்சம் தூங்கி எந்திரிக்கறேன். கஜா கிட்ட சொல்லிடு”, என தன் அறை நோக்கிச் சென்றான்.
“மாறன் தம்பி இங்க இல்லன்னு தெரிஞ்சா இந்த தம்பியும் வீட்ட விட்டு போயிட்டா என்ன பண்றது? சிங்கமாட்டம் ரெண்டு புள்ளைங்க இருந்தும் நம்ம ஐயா தனியா தான் இருக்காரு. ஐயாவும் சொன்னா கேக்கறது இல்ல. ஹம்ம்…. காலைல பாக்கலாம் என்ன நடக்குதுன்னு”, என மனதில் புலம்பியபடிச் சென்றான் பாண்டி.
காலை 7 மணிக்கு சேரலாதன் தன்னறையில் இருந்து வெளியே வந்ததும் பாண்டி ஓடிப் போய் சேரலாதனிடம் நின்றான்.
அவனின் முகத்தில் வழக்கத்திற்கு மாறாக சந்தோஷம் அதிகமாக இருப்பதைக் கண்ட சேரலாதன் ,”என்ன பாண்டி ரொம்ப சந்தோஷமா இருக்க போல?”.
“நான் சொல்றத கேட்டா நீங்களும் சந்தோஷம் படுவீங்க ஐயா”, எனச் சிரித்தபடிக் கூறினான் பாண்டி.
“அப்படி என்ன சந்தோஷமான விஷயம் பாண்டி?”, சேரலாதன் பேப்பர் படித்துக் கொண்டே கேட்டான்.
“நம்ம தம்பி வந்து இருக்காங்க ஐயா”, பாண்டி.
“மாறனா? அவனே தான சண்டை போட்டுட்டு போனான். அவ்ளோ சீக்கிரம் வரமாட்டானே துரைக்கு ரோஷம் அதிகமாச்சே பாண்டி”, சேரலாதன்.
“பெரிய தம்பி இல்லீங்க ஐயா. சின்ன தம்பி வந்து இருக்காங்க. விடிகாலைல வந்தாங்க. ரூம்ல படுத்துட்டு இருக்காங்க”, பாண்டி.
“என்ன?”, எனக் கேட்டு கரண்ட் சாக் அடித்த மாதிரி அமர்ந்து இருந்தான் சேரலாதன்.
“ஆமா ஐயா. உள்ள வரப்போவே மாறன் தம்பி இங்க தானே இருக்காருன்னு கேட்டுச்சி. நான் எதுவும் சொல்லல. நாலு வருஷம் கழிச்சி வந்து இருக்காங்க. தம்பிய இங்கயே இருக்க வச்சிருங்க ஐயா”, பாண்டி.
சேரலாதனின் நிலை இருதலைக்கொள்ளி எறும்பாக இருந்தது. கஜேந்திர நெடுமாறனிடம் கூட எதையாவது பேசி தன் வேலையை சாதித்துக் கொள்ளலாம். சிரஞ்ஜீவ் நெடுமாறனிடம் தப்பு செய்கிறோம் என்று தெரிந்தாலே தப்ப முடியாது. அவன் வீட்டை விட்டு சென்றதே தான் செய்த பல தப்பான தொழில்களால் தான். நான்கு ஆண்டுகள் கழித்து வீட்டிற்கு வந்திருக்கிறான்.
பெரியவன் முன்கோபம் கொண்டவன் தந்தையை தனியே விடக்கூடாது என அவரிடம் தனக்கு இஷ்டமில்லை என்றாலும் அருகில் இருந்தான். அவனே இப்பொழுது அந்தப் பெண் விஷயத்தினால் வீட்டை விட்டு வெளியேறி விட்டான். இவன் கோபப்படாமல் அமைதியாக சிரித்தபடி இருந்தே தன் காரியங்களை சாதித்துக் கொள்வான். யோகி இங்கிருக்கும் சமயத்தில் இவன் இருந்தால் மிகவும் கஷ்டம். இவன் ஒருவனே போதும் கூண்டோடு எங்களை சிறையில் தள்ள. எப்படி இவனை இங்கிருந்து அனுப்புவது என யோசிக்கத் தொடங்கினான் சேரலாதன்.
“ஐயா…. ஐயா…..”, என பாண்டி சேரலாதனை உளுக்கினான்.
“ஹாங்….. என்ன பாண்டி?”, சேரலாதன்.
“தம்பி வராங்க”, என படியைக் காட்டினான் பாண்டி.
“என்ன பாண்டி உங்க ஐயா நான் வந்து இருக்கேன்ன்னு தெரிஞ்சி சந்தோஷத்துல திகைச்சி போய் இருக்காரு போல”, என சேரலாதனை கண் கணைக் கொண்டு துளைத்தபடி அருகில் வந்தான் சிரஞ்சீவ்.
“ஆமாங்க தம்பி. இத்தனை வருஷம் கழிச்சி வந்து இருக்கீங்கல்ல அதான். தம்பி பாப்பா வரலியா?”, பாண்டி.
“இல்ல பாண்டி அவளுக்கு வேலை இருக்கு”, சிரஞ்சீவ்.
“சரி தம்பி. உங்களுக்கு காப்பி கொண்டு வரவா?”, பாண்டி.
“ம்ம்… ஆமா எங்க கஜாவ காணோம். ரூம்லயும் இல்ல”, சிரஞ்சீவ்.
“தம்பி ….அது…. வந்து…..”, பாண்டி.
“என்ன பாண்டி”, சிரஞ்சீவ்.
“அவன் இன்னொரு வீட்ல தங்கி இருக்கான் .கொஞ்சம் வேலை இருக்குன்னு அங்கிருந்து பாத்துக்கறான்”, சேரலாதன்.
“அப்படி என்ன வேலை பாண்டி?”, என சிரஞ்சீவ் அவனைப் பார்த்து கேட்டான் சேரலாதனிடம் நேரடியாக பசாமல்.
“அது…..”, பாண்டி திருதிருவென முழிக்க, சேரலாதன், “ஏன் துரை என்கிட்ட நேரா பேசமாட்டீங்களோ?”, என மகனைப் பார்த்துக் கேட்டார்.
“நான் கேக்கற எல்லாத்துக்கும் பதில் இருக்கான்னு கேளு பாண்டி”, சிரஞ்சீவ் கண்களில் கோபத்தைக் காட்டிக் கேட்டான்.
“என்ன கேக்க போற?”, சேரலாதன்.
“அத்தைக்கு இத்தனை வருஷம் ஆகியும் ஏன் ஒழுங்கான ட்ரீட்மென்ட் குடுக்கல? வெண்பாவ ஏன் ஆபீஸ் அனுப்பறது இல்ல?”, சிரஞ்சீவ்.
“அவ வீட்ல இருந்தே பாத்துக்கறா. அத்தைக்கும் பாத்துட்டு தான் இருக்கோம்”, சேரலாதன்.
“அவ்ளோ பெரிய கம்பனிய வீட்ல உக்காந்துட்டு எப்படி பாக்க முடியும். முதலாளிய பாத்தா தான் வேலை ஒழுங்கா நடக்கும்”, சிரஞ்சீவ்.
“நீ அவள கட்டிக்க. நீயும் அவளும் சேந்து போய் பாத்துக்கோங்க”, சேரலாதன்.
அருகில் இருந்த கண்ணாடி டீபாயை ஓங்கி மிதித்தான் சிரஞ்சீவ். அவனின் கால் பட்டு பல ஆயிரம் பெறும் கண்ணாடி டேபில் சுக்கு நூறாகச் சிதறியது.
அவனின் செயலில் அத்தனை வேலையாட்களும் அங்கு கூடினர். பாண்டி அவர்களை எல்லாம் விலகிச் செல்லும்படி சைகை செய்தான்.
“நானும் சரி காஜாவும் சரி உங்க பேராசைக்கு இணங்கமாட்டோம். அவள சின்ன வயசுல இருந்து தோள்ல தூக்கி வச்சி வளத்தோம், எங்க தங்கச்சி போல தான் அவளும். எந்த காலத்துலயும் வெண்பாவ நாங்க கல்யாணம் செஞ்சிக்க மாட்டோம்”, சிரஞ்ஜீவ்.
“அந்த பேச்சயே எத்தனை நாளைக்கு பேசுவீங்க? ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் அவள கட்டிதான் ஆகணும்”, சேரலாதன்.
“வெளியே மாப்பிள்ளை தேட வேண்டியது தானே”, சிரஞ்சீவ்.
“அப்படி எல்லாம் வெளியே பாக்க முடியாது”, சேரலாதன்.
“ஏன் முடியாது?”,சிரஞ்சீவ்.
“நம்ம வீட்டு பொண்ண மத்தவங்களுக்கு குடுக்க உன் அத்தைக்கு இஷ்டம் இல்ல”, சேரலாதன்.
“அத்தைக்கு இஷ்டம் இல்லையா உங்களுக்கு இல்லையா?”, சிரஞ்சீவ் .
“ஆமா எனக்கும் இஷ்டம் இல்ல”, சேரலாதன்.
“ஏன் இல்ல?”, சிரஞ்ஜீவ்.
“இத்தனை சொத்தையும் இன்னொருத்தனுக்கு தூக்கி கொடுக்க முடியாது”, சேரலாதன்.
“உண்மை இப்பதான் வெளியே வருது. இப்படி பேச உங்களுக்கு வெக்கமா இல்ல? உங்கள நம்பி தானே அத்தை எல்லா பொறுப்பையும் குடுத்தாங்க. அவங்களுக்கே துரோகம் பண்றீங்க”, சிரஞ்ஜீவ்.
“ஆமா டா. என்னை நம்பி குடுத்தா. நானும் பாத்துகிட்டேன். அவ குடுத்தத இப்ப பல மடங்கா மாத்தி இருக்கேன். எல்லாமே என் புள்ளைங்களுக்கு தானே வரப்போகுதுன்னு எல்லாம் செஞ்சேன். ஆனா அவ வேற ஒருத்தன காதலிக்கறா அதான் அவள வெளியே விடாம வச்சி இருக்கேன்”, சேரலாதன் கோபத்தில் காதல் விஷயத்தை உளறிவிட்டான்.
“என்ன காதலா?”,சிரஞ்சீவ்.
“அதுல்லாம் இல்ல”, என மலுப்பினான் சேரலாதன்.
“மறைக்காம சொல்லுங்க. அவ யார காதலிக்கறா?”, சிரஞ்ஜீவ் உறுமினான்.
“யாரோ ஒருத்தன். வெளிநாட்ல இருக்கான்”, தயங்கியபடி கூறினான் சேரலாதன்.
“இனிமே நீங்க வெண்பா விஷயத்துல தலையிட கூடாது. நான் அத்தை வீட்டுக்கு போறேன், வெண்பாகிட்ட பேசறேன். நான் எடுக்கறது தான் முடிவு. கஜா தடுத்தாலும் நிக்காது. இனிமேலும் அந்த குடும்பத்த ஏமாத்தவோ கஷ்டப்படுத்தவோ நினைச்சீங்க அவ்வளவு தான்”, என மிரட்டினான் சிரஞ்சீவ்.
பாண்டியை பார்த்து சேரலாதனையும் பார்த்து விட்டு விடுவிடுவென்று தன்னறை நோக்கி நடந்தான் சிரஞ்ஜீவ்.
“என்ன ஐயா இப்படி பண்ணிட்டீங்க?”, பாண்டி.
“இப்போதைக்கு அவன் இங்க இருந்தா நம்ம வேலை நடக்காது பாண்டி. அவன எதுவும் தடுக்காத கேக்காத. எப்படியோ அவன் என்னை பாக்காத வரைக்கும் நல்லது. நான் வெளியே போகணும் டிபன் எடுத்து வைக்க சொல்லு”, என சேரலாதன் தன்னறைக்கு நடந்தான்.
“என்னமோ ? அந்த கடவுளுக்கு தான் வெளிச்சம்”, என முனகியபடி சமையைல் அறைப் பக்கம் சென்றான்.
மேலே தன்னறைக்கு வந்த சிரஞ்ஜீவ் நெடுமாறனுக்கு போன் செய்தான்.
“கஜா… நான் சிவி”, சிரஞ்ஜீவ்.
“சொல்லு சிவி. எங்க இருக்க? யாத்ரா வந்துட்டாளா?”, நெடுமாறன்.
“அதுல்லாம் அங்கிருந்து தப்பிச்சிட்டா. நான் நம்ம வீட்ல தான் இருக்கேன்”, சிவி.
“என்னடா திடீர்ன்னு வீட்டுக்கு போய் இருக்க?”, நெடுமாறன்.
யாத்ராவை தப்புவித்ததில் இருந்து சென்னையில் நடந்நது தஞ்சை வந்து சேர்ந்தது வரை கூறினான் சிவி.
“இவ்வளவு நடந்து இருக்கா? சரி இப்ப என்ன பண்ணணும்?”, நெடுமாறன்.
“அந்த யோகி இங்க வந்து இருக்கான். எங்க இருக்கான்னு உனக்கு தெரியுமா?”, சிவி.
“இல்ல டா. யாத்ராவ கடத்தின விஷயத்துல நான் வீட்ட விட்டு வெளியே வந்துட்டேன். அதுக்கப்பறம் எந்த விஷயமும் எனக்கு தெரியாது. இங்க பழைய வீட்ல இருக்கேன்”, நெடுமாறன்.
“உனக்கு ஏன்டா புத்தியே இருக்கமாட்டேங்குது? யாத்ரா திட்றதுக்கு தகுந்தாமாதிரி தான் நீயும் நடந்துக்கற. நீ இல்லைன்னாலும் விஷயத்த கூடவா கேட்டு வச்சிக்க மாட்ட?”, சிவி திட்டினான்.
“நான் என்னடா பண்ணட்டும்? யாத்ராவ கடத்திட்டு போனா கோவம் வராதா. அதான் இனிமே எதையும் பாத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டு வந்துட்டேன். அப்பவும் பாண்டி கூப்பிடுவான் நான் எதுவும் பேசாதன்னு திருப்பி அனுப்பிட்டேன்”, நெடுமாறன்.
“உன்னல்லாம் வச்சிட்டு….. நான் சொல்றத முதல்ல பண்ணு”, சிவி.
“என்ன?”, நெடுமாறன்.
“அந்த சந்தனபாண்டியன் சந்திரகேசவன் இரண்டு பேரையும் கண்காணிக்க ஆள் அனுப்பு. அப்பறம் நம்ம அப்பனையும் கண்காணிக்கனும். என்ன பண்றான் ஏது பண்றான்னு நமக்கு தெரியனும். யோகி எங்க இருக்கான்னும் தெரியனும்”, சிவி.
“சரி. இன்னிக்கு மதியத்துக்குள்ள அந்த யோகி எங்க இருக்கான்னு தெரிஞ்சிரும். நீ என்ன பண்றப்போற?”,நெடுமாறன்.
“சொல்லமாட்டேன் செய்றேன். இந்த தடவை அவசரப்பட்டு எதாவது சொதப்பின யாத்ரா இல்ல நானே உன்ன கொன்னுடுவேன். ஏதோ பெருசா திட்டம் போட்டு இருக்கான் நம்ம அப்பன் இந்த தடவ அத தடுத்தே ஆகணும் நியாபகம் வச்சிக்க. உன் கோவத்த மூட்டி கட்டி வச்சிட்டு இரு”, சிவி.
“யாத்ரா சேப்ல அது போதும். நான் நீ சொன்னத பண்ணிடறேன்”, நெடுமாறன்.
“சரி நான் அத்தை வீட்டுக்கு போறேன் அங்க வந்துடு. கொஞ்சம் நேர்ல பேசணும்”, சிவி.
“சரி வரேன். அப்பறம் யாத்ரா தங்க வச்ச குடும்பத்த நான் வேற இடத்துல பத்திரமா தங்க வச்சிட்டேன். அவகிட்ட சொல்லிடு”, நெடுமாறன்.
“சரி சரி. வந்துடு சீக்கிரம்”, சிவி.
குளித்து முடித்து வெளியே வந்தவன் பாண்டியை அழைத்தான்.
“என்ன தம்பி. டிபன் வைக்க சொல்லட்டுமா?”, பாண்டி.
“இல்ல நான் அத்தை வீட்ல சாப்பிட்டுக்கறேன் .எனக்கு பைக் சாவி வேணும்”,சிவி.
“இந்தாங்க தம்பி”, என அவனின் பைக் சாவியை கொடுத்தான் பாண்டி.
“அவர் எங்க?”, என சேரலாதனைப் பற்றிக் கேட்டான்.
“எதோ முக்கியமான வேலைன்னு போய் இருக்காக தம்பி”, பாண்டி.
“யார் குடிய கெடுக்கற வேலை அப்படி? எத்தனை நாளைக்கு ஆட்டம் போடுவாங்கன்னு நானும் பாக்கறேன்”, சிவி.
“ஏன் தம்பி அப்பாவ இப்படி சொல்றீங்க?”, பாண்டி.
“பண்றது எல்லாமே தப்பு வேற எப்படி சொல்றது? இவர் பண்ற பாவத்தை எல்லாம் எங்க போய் தொலைக்கிறது? சரி வரேன் பாண்டி. மத்தியமும் வரமாட்டேன்”, சிவி.
நேராக வெண்பா வீட்டிற்குள் சென்றான் சிரஞ்ஜீவ்.
“வாங்க அத்தான்”, என வெண்பா வரவேற்றாள்.
“ஹேய் வெண்பா. எப்படி இருக்க? நல்லா வளந்துட்ட”, என அவள் தலையில் கைவைத்து ஆட்டியபடிக் கூறினான் சிவி.
“ஆமாம். உங்களுக்கு இப்பதான் எங்க நியாபகம் வந்துச்சா அத்தான். பெரிய அத்தானும் வர்றது இல்ல இப்பல்லாம்”, வெண்பா.
“அவனும் வருவான் இப்ப. அத்தை எப்படி இருக்காங்க?”, சிவி.
“ம்ம். பரவால்ல. வாங்க”, என உள்ளே அழைத்துச் சென்றாள் வெண்பா.
அப்பொழுது நெடுமாறனும் வந்திறங்கினான். சிவி அவனைக் கட்டிக்கொண்டான்.
“யப்பா… பாசமழை இன்னும் பொழிஞ்சி முடியலையா?”, என வெண்பா கிண்டலடித்தாள்.
“ஹேய் வாலு… உனக்கு வாய் கொழுப்பு அதிகமாகிடிச்சி”, நெடுமாறன்.
“ஆமா ஆமா. இப்படி இரண்டு அத்தானுங்க இருக்கறப்ப எனக்கு எதுக்கு கொழுப்பு குறையணும். எத்தனை வம்பு இழுத்துட்டு வந்தாலும் நீங்க சமாளிப்பீங்க”, வெண்பா.
“கடைசில எங்கள உன் அடியாளாக்கிட்ட”,என சிவி அவளின் காதைத் திருகினான்.
“ஆஆஆஆஆ….. அம்மா…. “, என அவனிடம் இருந்து விலகி காதை தேய்த்துக் கொண்டே தன் தாயை நோக்கி ஓடினாள் வெண்பா.
எதிரே வந்த அவளின் தாய் இருவரையும் கண் நிறையக் கண்டு கண்கலங்கினார்.
“எப்படி அத்த இருக்கீங்க?”, என அண்ணன் தம்பி இருவரும் அவரின் காலில் விழுந்து வணங்கினர்.
“மகராசனா இருங்கய்யா. உங்க அம்மா இப்படி உங்கள பாத்தா எவ்வளவு சந்தோஷம் படுவாங்க தெரியுமா? ஏன் தான் அவ்வளவு அவசரமோ தெரியல”, என கண்களில் நீறுடன் கூறினார்.
“அதான் நீங்க இருக்கீங்கல்ல அத்த அப்பறம் என்ன? வாங்க சாப்பிடலாம்”, என சிவி அவரை அழைத்துச் சென்று டைனிங் டேபிளில் அமர்த்தினான்.
“வாங்க ராசா. என் கையால சாப்டு எத்தனை வருஷம் ஆச்சு “, என எழுந்தார்.
“உக்காருங்க எல்லாரும் ஒன்னா உக்காந்து சாப்பிடலாம்”, என நெடுமாறன் அனைவருக்கும் பரிமாறினான்.
“வெண்பா… எங்க ரெண்டு பேர்ல யார கட்டிக்க போற?”, சிவி சாப்பிட்டுக் கொண்டே கேட்டான்.
விக்கித்து தலை நிமிர்ந்து பார்த்த வெண்பா என்ன சொல்வதென முழித்தாள்.
“என்ன முழிக்கற சொல்லு”, சிவி.
“இப்ப ஏன் இந்த பேச்சு அத்தான்?”, வெண்பா குரலே வெளியே வராமல் கேட்டாள்.
“எங்களுக்கும் வயசாகுது. காலாகாலத்துல கல்யாணம் பண்ணணும்ல. சொல்லு. நீ யார சொன்னாலும் எங்களுக்கு ஓகே. என்ன கஜா?”, என நெடுமாறனை கேட்டான் சிவி.
ஏதோ திட்டத்தோடு தான் தன் தம்பி கேட்கிறான் என்பதைப் புரிந்துக் கொண்ட நெடுமாறன், “ஆமாம் வெண்பா. உன் இஷ்டம் தான்”, என்றான்.
“அது வந்து அத்தான்…..”, வெண்பா மென்று விழுங்கினாள் வார்த்தையை.
“சொல்லு கேக்கறாங்கல்ல”, என அவளின் தாய் ஒருபக்கம் கேட்டார்.
“உங்க ரெண்டு பேரயுமே என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது அத்தான். மன்னிச்சிடுங்க”, எனக் கூறினாள் வெண்பா.
“ஏன்?”, சிவி.
“நான் ஒருத்தர காதலிக்கறேன்”, எனக் கூறினாள்.
“ஏய் வெண்பா என்ன பேச்சு பேசற? என்ன தைரியம் உனக்கு ?”, என அவளை அடிக்க கை ஓங்கினார் அவள் தாய்.
“அத்த… “, சிவி நெடுமாறன் இருவரும் அவரை தடுத்தனர்.
“யார் அது?”, சிவி.
“ஏற்கனவே பெரிய அத்தானுக்கு தெரியும்”, என வெண்பா கூறினாள்.
“வெளிநாட்ல இருக்கான்னு மட்டும் தான் தெரியும். யாருன்னு தெரியாது”, நெடுமாறன்.
“இல்ல அவர் இங்க வந்துட்டாரு”, வெண்பா.
“சரி வரசொல்லு நாங்க பாத்து பேசணும்”, சிவி.
“இங்கயா?”, வெண்பா.
“ஆமா. ஏன்?”, சிவி.
“மாமாவுக்கு தெரிஞ்சா அவருக்கு தான் பிரச்சினை. வெளியே வச்சி பாக்கலாமே”, வெண்பா.
“பாத்தியா கஜா. அவ ஆளுக்கு எந்த பிரச்சினையும் வரக்கூடாதாம். இத்தனை நாள்ல நம்மல எத்தனை பிரச்சினைல மாட்டி விட்டு இருப்பா”, சிவி.
“எல்லாரும் அப்படி தான் இருக்காங்க சிவி. சரி எங்க வர சொல்ற?”, நெடுமாறன்.
“பெரிய கோவிலுக்கு பின்னாடி இருக்கற இடத்துக்கு வரசொல்லவா?”, வெண்பா.
“வழக்கமான மீட்டிங் ஸ்பாட் ஆ? சரி வரசொல்லு. மதியம். இப்ப எங்களுக்கு கொஞ்சம் வேலை இருக்கு. மதியம் உன்ன வந்து கூட்டிட்டு போறேன்”, என சிவி கூறினான்.
நெடுமாறனுக்கு ஒரு அழைப்பு வர எடுத்தான்.
“அப்படியா? சரி அங்க என்ன நடந்தாலும் உடனே சொல்லணும்”,நெடுமாறன்.
“யாரயோ கோர்ட்ல வச்சி கடத்த போறதா பேசிட்டு இருக்காங்க”,அந்த பக்கம் போனில்.
“சரி . வேற எதுவா இருந்தாலும் உடனே எனக்கு தகவல் அனுப்பு”, எனக் கூறினான் நெடுமாறன்.
“என்னாச்சி கஜா?”, சிவி.
“வா சொல்றேன். சரி அத்த அப்பறம் வரோம். வெண்பா காதலிக்கறது எனக்கு ஏற்கனவே தெரியும். அவள எதுவும் சொல்லாதீங்க. வந்து பேசிக்கலாம”, என அங்கிருந்து கிளம்பினர் இருவரும்.
“என்னடா?”,சிவி.
“யாத்ராக்கு போன் போடு. யாரயோ கோர்ட்ல இருந்து கடத்தப் போறானாம் அந்த யோகி. அவன் அந்த சந்திரகேசவனோட புது வீட்ல தான் இருக்கான். எல்லாரும் சேந்து என்ன சதி பண்றாங்கன்னு தான் தெரியல”, நெடுமாறன்.
“சரி யாத்ராகிட்ட சொல்லிடறேன். நீ அடுத்து என்ன பண்ற?”, சிவி.
“அந்த சந்தனபாண்டியன் இன்னிக்கு சுத்தி இருக்கற ஊர்ல இருக்கற பெரிய தலைக்கு எல்லாம் பணப்பட்டுவாடா பண்றதா கேள்விபட்டேன். அது என்னனு பாக்கணும்”, நெடுமாறன்.
“பர்ஸ்ட் முகில் எங்க இருக்கான்னு கண்டுபிடி டா . இந்த விஷயத்த செந்தில் கிட்ட சொல்லிடலாம். நான் நம்ப அப்பன வாட்ச் பண்றேன். மதியம் வந்துடு வெண்பாவ கூட்டிட்டு போலாம்”,சிவி.
“அதுவும் சரி தான். நான் கிளம்பறேன்”,நெடுமாறன்.
மதியம் சிவி வெண்பா மற்றும் நெடுமாறன் கோவிலுக்கு பின்னால் காத்திருந்தனர்.
அப்பொழுது அங்கே செந்திலும் பரத்தும் வந்திறங்கினர்.
அவர்களில் பரத்தை காட்டி வெண்பா ,” அவர் தான்”,என்றாள்.
“அட்ராசக்க…. நல்ல சாய்ஸ் தான்”,என அவளைத் தோளோடு அணைத்து கூறினான் சிவி.
“டேய் பரத் உன் ஆளு என்னடா இங்க வந்திருக்கா?”, செந்தில்.
“வரசொன்னா சார் அதான் இங்க வந்தோம்”, பரத்.
“அடேய்…. அப்ப நீ இந்த வேலை பாக்க தான் என்னை இழுத்துட்டு வந்தியாடா?”, செந்தில்.
“வேலையோட வேலையா இதையும் பாக்கணும்ல சார்”, பரத் பல்லைக் காட்டியபடி கூறினான்.
“உசாராதான்டா இருக்க ,நீ நடத்து. அந்த ராட்சசி இன்னும் பத்து நிமிஷத்துல கூப்பிடுவா உனக்கு இருக்கு அப்ப”, செந்தில்.
“வாங்க சார் பாத்துக்கலாம்” ,என செந்திலின் கையை இழுத்துக் கொண்டு வந்தான் பரத்.
“ஹோ… இதுக்கு பேரு தான் காதலியின் கடைக்கண் பார்வை பட்டால் இமயத்தையும் தூக்கறதா?”, செந்தில் பரத்தை கிண்டலடித்தான்.
“வாங்க மாப்பிள்ளை தம்பி”, என சிவி பரத்தை அழைக்க நெடுமாறன் இன்னொரு பக்கம் பரத்தை நெருங்கினான்.
“அய்யய்யோ சார்…. ரெண்டு பேரோட பார்வையும் சரியில்ல. பரிதி மேடத்த கூட்டிட்டு வந்து இருக்கணுமோ?”,என செந்தில் காதில் முனகினான் பரத்.
“இப்ப கேட்டு. வந்தாச்சி அடி வாங்கு அப்பதான் உனக்கு பொண்ணு தருவாங்க போல”, செந்தில்.
“அடி தாங்க மாட்டேன் சார் நானு”, பரத்.
“அங்க என்ன இரகசியம் பேசிட்டு இருக்கீங்க?”, சிவி.
“சும்மா”, பரத்.
“வெண்பாவ எப்படி தெரியும்?”, நெடுமாறன்.
அவனும் அனைத்தையும் கூறி தன் குடும்ப விவரங்களையும் கூறினான்.
“ஹோ…. போலீஸ் பேமிலி”, சிவி.
“ஆமாம்”, என தலையசைத்தான் பரத்.
“சரி. இந்த பிரச்சினை முடியட்டும் நாங்களே உங்களுக்கு கல்யாணம் செஞ்சி வைக்கறோம்”, என சிவியும் நெடுமாறனும் ஒரு மனதாகக் கூறினர்.
அந்த சமயம் சிவிக்கு கால் வர எடுத்து பேசினான்.
“இந்தா கஜா”, சிவி.
“யாரு”,நெடுமாறன்.
“பேசு”, சிவி சிரித்துக் கொண்டே கூறினான்.
“டேய் வளந்து கெட்டவனே. ஒரு வீடு பாத்து வை. உங்க அப்பன் இடமா இருக்கணும். இல்லயா அந்த சந்திரகேசவன் சந்தனபாண்டியன் இடமா இருக்கணும்”,யாத்ரா.
“ஹேய் யாத்ரா.. எப்படி இருக்க?”, நெடுமாறன்.
“உன் கொஞ்சல் எல்லா அப்பறம் வச்சிக்க. இப்ப நான் சொன்னத செய். இன்னும் 3 மணி நேரத்துல அங்க இருப்பேன்”, என கூறிக் கால் கட் செய்து விட்டாள் யாத்ரா.
“அவ மட்டுமே தான் பேசுவா. ராங்கி”, என நெடுமாறன் கோபத்தில் முனகினான்.
“அது புதுசா என்ன? யார் யார தூக்கிட்டு வராங்களோ தெர்ல ரெண்டு பேரும். சேந்தாங்க பாருங்க ஜோடி. ஒருத்தனையும் நிம்மதியா இருக்க விடமாட்டாங்க”, செந்தில்.
“ஹாஹா…. கரெக்ட் செந்தில்”, என சிவி கூறினான்.
சொன்னதுபோல 3 மணிநேரத்தில் யாத்ராவும் அர்ஜூனும் தஞ்சை வந்தடைந்தனர்.
அவள் கூறியது போலவே நெடுமாறன் சேரலாதன் புதிதாக கட்டிய பண்ணை வீட்டை ஏற்பாடு செய்து இருந்தான். ஊருக்கு ஒதுக்கு புறமாக இருந்தது. பலத்த பாதுகாப்புடனும் இருந்ததைக் கண்டு யாத்ரா திருப்தியுற்றாள்.
“குட் கஜா. இங்க ஆளுங்க எல்லாம்?”, யாத்ரா.
“நம்ம ஆளுங்க தான். அப்பா காதுக்கு விஷயம் போகாது”, நெடுமாறன்.
“சரி. நானும் செழியனும் அந்த வீட்டுக்கு போயிட்டு வரோம். இங்க ஜான் இருக்கட்டும். முகில் எங்க இருக்கான்?”, யாத்ரா.
“அவன் யோகி இருக்கற இடத்துல தான் இருக்கான்”, நெடுமாறன்.
“சரி. ஒரு கண்ணு அங்க இருக்கட்டும். முகிலுக்கு எதுவும் ஆகக்கூடாது. நான் அப்புறம் வரேன்”, என பைக்கில் அமர்ந்தாள்.
அர்ஜுன் அவள் செய்வதையும் பேசுவதையும் அமைதியாக இதழில் மென்னகை குறையாமல் பார்த்துக் கொண்டு இருந்தான்.
நெடுமாறன் வந்ததில் இருந்து அர்ஜூனை கவனித்துக் கொண்டு இருந்தான் சிவி அவர்களை பற்றி கூறிய பிறகு.
“செழியன் செட்அப் ஓகே தானே?”, யாத்ரா.
“எல்லாம் ஓகே தான் எனக்கும் ஓகே சொன்னா இன்னும் பக்கா”, அர்ஜுன்.
“ஹீரோங்கிற பேர்ல இன்னும் நீ உருப்படியா ஒன்னும் பண்ணல. எதாவது பண்ணு அப்பறம் உன்ன கன்சிடர் பண்றேன்”, யாத்ரா.
“நான் எதுக்கு கஷ்டப்படணும் டார்லிங். நீயே எல்லாத்தையும் பக்காவா பண்ற. சோ நான் வேடிக்கை பாத்துட்டு உன்னை சைட் அடிச்சிட்டு இருக்கேன்”, எனக் கூறிக் கண்ணடித்தான் அர்ஜுன்.
“அதுக்குன்னு சைலண்ட் மோட்லயே இருப்பியா டா?”, யாத்ரா.
“சைலண்டா நிறைய பண்ணலாம்”, அர்ஜுன்.
“என்னமோ பண்ணு இன்னும் நாலு நாள்ல இந்த கேஸ முடிச்சிட்டு ஊருக்கு போகணும்”, யாத்ரா.
“வா உன் மாமனார் மாமியார பாக்க போலாம்”, அர்ஜுன்.
“அடிங்க…. ஹேய் உனக்கு ஒரு அண்ணன் இருக்கான்ல அவனுக்கு கல்யாணம் ஆகிரிச்சா?”, யாத்ரா.
“இல்ல ஏன் கேக்கற?”, அர்ஜுன்.
“அவன கல்யாணம் பண்ணிக்கலாம்னு தான்”, என அவள் கண்ணடித்துக் கூறினாள்.
“நான் விட்டா தானே அவன நீ பாக்கவே முடியும். இப்ப பாரு”, எனக் கூறி அவளை பின்னிருந்து முன்னே இழுத்து அமர்த்திக் கொண்டு வண்டியை ஸ்டார்ட் செய்தான்.
“டேய் டேய்… விடுடா…. அப்பறம் வண்டிய சாச்சி விட்றுவேன்”, யாத்ரா அவனின் தோளில் அடித்தபடிக் கூறினாள்.
“முடிஞ்சா பண்ணுடி என் அழகான ராட்சசி”, என அவளின் கன்னத்தை மெதுவாக கடித்து முத்தமிட்டான் அர்ஜுன்.
அவனின் செய்கையில் கணநேரம் திகைத்து பின் அவனை அடிக்கத் தொடங்கினாள் யாத்ரா.
இவர்களின் உரையாடல்களையும் செய்கைகளையும் பார்த்துக் கொண்டிருந்த நெடுமாறனும் முனுமுனுத்தான் ,” நல்ல ஜோடி தான்”,எனப் புன்னகைத்தபடி.
ஒரு வழியா எல்லாரையும் ஒரே இடத்துல கொண்டு வந்து சேத்தாச்சி….
ஸ்ஸ்ஸ்ப்பாபாபா… எவ்வளவு படுத்தறாங்க… எல்லா வானரமும் ஒரே இடத்துல… இனிமே என்ன ஆகப் போகுதோ?