38 – அர்ஜுன நந்தன்
அர்ஜுன் வேகமாகச் சென்று செந்திலைப் பிடித்து யாத்ராவைப் பற்றி விசாரித்தான். செந்தில் சிரித்துவிட்டு யாத்ராவைப் பற்றிக் கூறத் தொடங்கினான்.
“யாத்ராவோட அப்பா அம்மா இங்க தமிழ்நாட்ல தான் இருந்தாங்க. அவ பொறந்த கொஞ்ச நாள்ல வேலைல ப்ரமோசன் கிடைச்சி டெல்லி போய்டாங்க. அங்க தான் அவ வளந்தா. அவ யாருக்கும் அடங்காம இருக்க காரணம் அவளோட அப்பாவும் அம்மாவும் தான். சின்ன வயசுல இருந்தே கராத்தே, குங்ஃபூ, வாள் பயிற்சி ல இருந்து நிறைய தற்காப்பு கலைகள் கத்துகிட்டா. கூடவே டெக்னாலஜி பத்தியும் நிறைய தெரிஞ்சி வச்சிப்பா.
யாத்ரா ஓட அப்பா ஸ்பெஷல் இன்டெலிஜென்ஸ்ல ஹெட் ஆ இருந்தாரு. இப்ப அவளும் அதே டிபார்ட்மெண்டல தான் வேலை பாக்கறா. சும்மா சிபாரிசுல ஜாயின் பண்ணல முறையா எல்லா பரிட்சைலயும் தேறி தன் சொந்த முயற்சில தானா வேலை வாங்கினா.
அவ அப்பா அவள அப்பப்ப டிரைனிங் ஏரியா கூட்டிட்டு போனதால பரிதிய நல்லா தெரியும்.
சிவியும் நெடுமாறனும் டெல்லில தான் படிச்சாங்க. அப்ப ஒரு நிகழ்ச்சில தமிழ் பசங்கன்னு தெரிஞ்சி அவங்க கூடயும் பிரண்ட் ஆகிட்டா. சிவியும் நெடுமாறனும் மார்சியல் ஆர்ட்ஸ் படிச்சப்ப இவளுக்கும் சில வித்தைகளைச் சொல்லிக் குடுத்தாங்க.
கோவம் வந்தா அவள தனியா விட்றனும் பிடிச்சி வச்சா நமக்கு தான் டேமேஜ் ஆகும். அதான் அவள விட்றுங்கன்னு சொன்னேன். அவளுக்கு தேவை சுதந்திரமும் நல்ல சாப்பாடும் தான். டிபார்ட்மெண்ட ரூல்ஸ்னு அவ இதுவரை பாத்ததும் இல்ல ஒபே பண்ணதும் இல்ல. மனசுக்கு சரின்னு பட்டா எவ்வளவு ரிஸ்க் எடுத்தாலும் செய்வா. இப்படிதான் நாங்க அரெஸ்ட் பண்ண ஒருத்தன தப்பிக்கவிட்டு வேலைல இருந்து தூக்க இருந்தாங்க லாஸ்டா மத்த எல்லாரும் பேசி சஸ்பெண்ட் மட்டும் குடுத்தாங்க . அவ நேரா என்வீட்ல வந்து உக்காந்துட்டா. அவ நினைச்சா மாதிரி அவ தப்பிக்கவிட்டவன் குற்றவாளி இல்லைனு அதுக்கப்பறம் தான் எங்களுக்கும் தெரிஞ்சது. சஸ்பென்ட் கேன்சல் பண்றோம் வான்னு கூப்டா எனக்கு ரெஸ்ட் தேவை சஸ்பெண்ட் பண்ணதாவே இருக்கட்டும்னு ஊரு சுத்த கிளம்பிட்டா. இவள சமாளிக்கறது ரொம்பவே கஷ்டம் தான் அர்ஜுன் ஆனா அவள மாதிரி யாரும் இருக்கமுடியாது” என செந்தில் கண்களில் கணிவுடன் கூறிக்கொண்டிருந்தான்.
“ஆமா எங்கள பலி குடுக்க அவளமாதிரி யாரும் பிளான் பண்ணி அனுப்ப முடியாது”, என நரேன் வந்து அமர்ந்தான்.
“ஏன் நரேன்? எதுக்கு இவ்வளவு கோபம்?”, செந்தில் .
“அவங்க பிளான் கேட்டீங்க தானே செந்தில்?”, நரேன்.
“இல்ல நான் யாத்ரா கூப்டான்னு மேல வந்துட்டேன். என்ன பிளான்?”, செந்தில்.
“சொல்லு டா”, என நரேன் அர்ஜூனைப் பாத்துக் கூறினான்.
“அது ஒன்னும் இல்ல செந்தில் இவரும் நந்துவும் அந்த அசிஸ்டண்ட்அ யோகி கிட்ட விட்டுட்டு வர சொன்னேன்”, அர்ஜுன்.
“ஏன் யோகிகிட்ட அவன அனுப்பனும்?”, செந்தில்.
“யோகிக்கு இவன் தேவை. சுரங்கத்த ஓபன் பண்ண இவனுக்கு மட்டும் தான் தெரியும். அவனோட இவங்களும் கூடவே போனா அவங்க கடத்தி வச்சி இருக்கற பொண்ணுங்கள மீட்க வசதியா இருக்கும்னு யாத்ரா சொன்னா அதான்….”, அர்ஜுன்.
“ஏன் அவ போகலாம்ல?”, நரேன்.
“அவள அனுப்ப நான் தயாரா இல்ல. நீங்க போங்க உங்க பின்னாடி நந்து வருவான். உங்க உடம்புலயும் ஜி.பி.எஸ் டிராக்கர் போட போறோம். முகில வெளியே கொண்டு வரணும் அவனுக்கு ஏதோ தெரிஞ்சி இருக்கு அது நமக்கு தெரியணும் “, அர்ஜுன்.
“நாளைக்கு யாத்ரா வெண்பா கம்பெனிக்கு போகணும்னு சொல்லி இருக்கா அர்ஜுன்”, செந்தில்.
“எதுக்கு?”, நரேன்.
“அங்க இல்லீகலா ஏதோ நடக்குதுன்னு தகவல் இருக்கு. அது என்னனு தெரியணும்னு ஆல்ரெடி ஆள் அனுப்பிட்டோம். அங்க இருந்து தான் தகவல் வந்து இருக்கு”, செந்தில்.
“யார் இருக்கா அங்க ?”, நரேன்.
“வெண்பா பிரண்ட் நன்முகை இதழி”, செந்தில்.
“ஙே…… என்ன பேர் சொன்னீங்க?”, நந்து.
“நன்முகை இதழி. நல்ல தைரியமான பொண்ணு .விஷயம் சொன்னதும் அங்க போய் ஜாயின் பண்ணிடிச்சி. அவசரமா நாளைக்கு அந்த பொண்ணு தான் வர சொல்லி கால் பண்ணிச்சி “, செந்தில்.
நரேனும் நந்துவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு அர்ஜூனைப் பார்த்தனர்.
அவன் முகத்தில் புன்னகை பூத்ததும் , நந்து, ” டேய் தங்கச்சி எப்படா இங்க வந்தா? உனக்கு தெரியுமா?”.
“அவ வந்தது தெரியும் ஆனா அங்க ஜாயின் பண்ணது தெரியாது டா”, என அர்ஜுன் சிரிப்புடன் சொன்னான்.
“டேய் என்னடா சிரிச்சிட்டு இருக்க. அவனுங்க எவ்வளவு மோசமான ஆளுங்கன்னு தெரியும்ல. நம்ம தங்கச்சினு தெரிஞ்சா அவள தூக்கிருவாங்கடா. உடனே அவள அங்கிருந்து கிளம்ப சொல்லு”, என நந்து பதறினான்.
“என்ன சொல்றீங்க நந்து? இதழி அர்ஜுன் தங்கச்சியா?”, செந்தில்.
“ஆமா செந்தில்”, நந்து.
“விடு அவளும் ஏதோ நல்லது பண்ணணும்னு வந்துட்டா. பண்ணட்டும்”, அர்ஜுன்.
“டேய் அப்பா அம்மாவுக்கு தெரிஞ்சா என்ன நடக்கும்னு தெரியும்ல?”, நந்து.
“நந்து, நீயும் சாதாரண அண்ணனா பேசாத. அவ எடுத்த வேலைய முடிக்கட்டும். அவளுக்கு ஒன்னும் ஆகாது விடு. நானும் யாத்ரா கூட போறேன். செந்தில் நீங்க நெடுமாறன கான்டாக்ட் பண்ணிகோங்க எங்க வரணும்னு”, எனக் கூறி படுக்கச் சென்றான் அர்ஜுன்.
விடிகாலை 5 மணிக்கு யோகி ஆட்கள் மற்றும் சேரலாதன் ஆட்களின் கண்களில் படும்படி நரேனும் சலீமும் நடமாடினர். இருவரின் உடலிலும் டிராக்கிங் சிப் செலுத்தியபின்பே வெளியே வந்தனர். நரேனிடம் சாதாரண மொபைல் ஒன்றும் ஆன்ட்ராய்டு மொபைல் ஒன்றும் கொடுக்கப்பட்டது.
அவர்கள் நினைத்தது போலவே நரேனையும் சலீமையும் கடத்திச் சென்றனர். அவர்களின் பின்னே நந்து சென்றான்.
யாத்ராவும் அர்ஜூனும் வெண்பாவின் கம்பெனி நோக்கிச் சென்றனர். அவர்களுக்கு முன் சிவியும் வெண்பாவும் அங்கே செல்லும்படி கூறியதால் சிவி வெண்பாவை அழைத்துக் கொண்டு கம்பெனிக்குச் சென்றான்.
சிவி வெண்பாவுடன் கம்பெனிக்கு செல்லும் விஷயம் அறிந்து சேரலாதனுக்கு இரத்த அழுத்தம் எகிறியது.
அவர்கள் இருவரையும் கண்ட இதழி நேராக சிவியைக் கைபிடித்து இழுத்துக் கொண்டு பின்பக்கம் இருந்த பழைய குடோனிற்கு அழைத்துச் சென்றாள்.
அங்கே இருந்த பழைய பெட்டிகளை கண்ட சிவி அவளிடம் என்னவென்று வினவ அவள் ஒரு பெட்டியை திறந்து காமித்தாள்.
சிவி சற்று நேரம் அதிர்ச்சியில் உறைந்து நின்று விட்டான். அந்த நேரம் வெண்பா அர்ஜூனையும் யாத்ராவையும் அங்கே அழைத்து வந்தாள்.
யாத்ரா,” டேய் சிவி என்னாச்சி”.
“இங்க பாரு யாத்ரா”, என அந்த பெட்டியைத் திறந்துக் காட்டினான்.
உள்ளே பழைய கால செப்பு சிலைகளும் தெய்வ ஆபரணங்களும் அங்கிருந்த பெட்டிகளில் நிரம்பி இருந்தன.
“என்னடா இது? ஆயுதம், கொகைன் தான் கடத்தரான்னு பாத்தா சாமி சிலையையும் விட்டு வைக்கல?”, யாத்ரா.
“அவன…..”, எனத் திரும்பிய சிவியை இதழி கைபிடித்து நிறுத்தினாள்.
“என்ன பண்ண போறீங்க?”, இதழி.
“அடிச்சே கொல்லப்போறேன்”, சிவி கண்கள் சிவக்க கூறினான்.
“கொன்னுட்டா பிரச்சினை முடிஞ்சிருமா?”, இதழி ஒரு புருவம் உயரத்தி வினவினாள்.
அவர்களின் சம்பாஷனையை மற்ற மூவரும் சிரத்தையாகக் கவனித்துக் கொண்டிருந்தனர்.
“இப்ப என்னை என்ன பண்ண சொல்ற?”, சிவி அவளின் கையை எடுத்து விட்டுக் கொண்டு கேட்டான்.
“இதோ என் அண்ணியார் சொல்வாங்க “, என யாத்ராவைக் கைகாட்டினாள் இதழி.
“என்ன நாத்தனாரே… நீங்களே அதையும் சொல்லிடுங்க நாங்க கேட்டுக்கறோம்”, என அர்ஜூனை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு பதில் கூறினாள்.
“ஹேய் வாட்ஸ் ஹேப்பனிங் ஹியர்?”, வெண்பா.
“இவ என் தங்கச்சி நன்முகை இதழி. இவ என் பொண்டாட்டி மிஸஸ். யாத்ரா நாகார்ஜூன இளஞ்செழியன்”, என இருவரையும் இருபக்க தோள்களில் அணைத்துக் கூறினான் அர்ஜுன்.
“ஹேய்…. உன்னோட இரண்டாவது அண்ணன் இவர் தானா?”, என வெண்பா அவளைக் கேட்டாள்.
“ஆம் “, என இதழி தலையசைத்தாள்.
“சரி என் அத்தான எப்ப பார்த்த எப்ப கரெக்ட் பண்ண?”, வெண்பா.
“நேத்து இங்க வந்தாரு அப்ப பாத்தேன். பிடிச்சது இனிமே தான் உன் அத்தான்கிட்ட பேசணும் “, எனத் திரும்பி சிவியைப் பார்த்தாள் இதழி.
“என்ன நாத்தனாரே சிவிய லவ் பண்றீங்களா?”, யாத்ரா.
“மிஸ்டர் சிரஞ்ஜீவ் நெடுமாறன் உங்கள எனக்கு பிடிச்சி இருக்கு கல்யாணம் பண்ணிட்டு லவ் பண்ணலாமா?”, என நேரடியாக கேட்டாள் இதழி.
“அண்ணன பக்கத்துல வச்சிட்டு இப்படியா கேப்ப?”, அர்ஜுன்.
“அண்ணன வச்சிட்டு இப்படி தான் கேக்க முடியும். நீ தான் சாட்சி .வீட்லயும் நீ தான் பேசணும் “, என அர்ஜூனிற்கு திரும்பாமலே பதிலளித்தாள்.
“செழியன் உங்கள விட உங்க தங்கச்சி கெத்தா இருக்கா”, என அர்ஜூனின் காதில் கிசுகிசுத்தாள் யாத்ரா.
“அதுக்கு என்ன பண்ணலாம் டார்லிங்?”, என காது மடலில் உரசியபடிக் கேட்டான் அர்ஜுன்.
“கம்முன்னு நில்லுடா. சிவி என்ன பதில் சொல்றான்னு பாப்போம்”, என யாத்ரா அவர்களைக் கவனித்தாள்.
அந்த சமயம் சரியாக நந்துவிடம் இருந்து அர்ஜூனுக்கு கால் வந்தது.
“சொல்லு நந்து”, அர்ஜுன்.
“டேய் அவங்கள கடத்திட்டு கோவிலுக்கு போயிட்டு இருக்காங்க டா”, நந்து.
“அப்படியா. நெடுமாறனும் செந்திலும் எங்க இருக்காங்க?”, அர்ஜுன்.
“அவங்க சந்தனபாண்டியன் குடோனுக்கு போய் இருக்காங்க”, நந்து.
“சரி அவங்கள வெண்பா கம்பெனிக்கு உடனே வரசொல்லு”, அர்ஜுன்.
“ஏன்டா?”, நந்து.
அர்ஜுன் சுருக்கமாக கூறி சற்று நேரத்தில் தாங்களும் கோவிலுக்கு வந்து விடுவதாகக் கூறி வைத்தான்..
“என்னாச்சி செழியன்?” , யாத்ரா.
“கோவிலுக்கு கூட்டிட்டு போய்டாங்களாம்”, அர்ஜுன்.
“சரி இத என்ன பண்ணலாம்?”, என யாத்ரா கேட்டாள்.
“இங்க இருந்தா மாதிரி வெளியே தெரிஞ்சா கம்பெனிய இழுத்து மூடிருவாங்க. நிறைய குடும்பங்கள் பாதிக்கப்படும். வேற எங்கயாவது இருந்து எடுத்தாமாதிரி காட்டிக்கோங்க”, என இதழி கூறினாள்.
அவள் கூறுவதில் இருந்த உண்மையை உணர்ந்தவர்கள் பாதியை சந்தனபாண்டியன் இடத்திலும் நகைகளை சந்திரகேசவன் இடத்திலும் வைக்க திட்டமிட்டனர்.
“இவ்வளவு இருக்கு எப்படி கொண்டு போறது? நாம கோவிலுக்கு வேற போகணும்”, யாத்ரா.
“நான் கன்டைனர் கொண்டு வரேன். பாதி பாதியா ஏத்திக்கலாம். நீங்க கிளம்புங்க “, என சிவி கூறினான்.
“சரி இடம் சேத்திட்டு கால் பண்ணுங்க”, என அர்ஜுன் கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
அங்கிருந்து கிளம்பியவர்கள் பரிதியை அழைத்து விஷயத்தை கூறிவிட்டு கும்பகோணம் சென்றனர்.
அங்கே அவர்களுக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது.